பெண்ணுடலும் – மனித வாழ்வும்

Posted on

மேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள்ங்கற இந்த தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா ஐட்டம்னு வந்திருந்தா சாரி. விலகிருங்க.

வாழ்க்கையும் பெண்ணின் உடல் போன்றதுதான். இதுலயும் மேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சகஜம்.

சைன்ஸுல பௌதீக மாற்றம் , இரசாயன மாற்றம்னு படிச்சிருப்பிக. பௌ.மா. நிலையானதல்ல. ரிவர்ட் ஆகும். இ.மாற்றம் நிலையானது. ரிவர்ட் ஆகாது.

ஒரு மேட்டர்ல வளர்ச்சி ஏற்படுதுன்னா அதனோட அடுத்த ஸ்டெப் தளர்ச்சிதான். நீங்க இப்பம் சந்தோசமா இருக்கிங்கன்னா இதனோட அடுத்த ஸ்டெப் துக்கம் தேன். உங்களுக்கு தளர்ச்சி ஏற்படக்கூடாதுன்னா வளர்ச்சிக்கும் இடம் தரக் கூடாது. (ஐ மீன் உங்க மைண்ட்ல)

மாற்றத்துக்குள்ளாகும் தன்மை உள்ள பொருளுக்கு ஏற்படும் எந்த மாற்றமும் நிலையானது கிடையாது.
இந்த விதிப்படி உங்களுக்கு ஏற்படும் சுக , துக்கங்களும் நிலையானது கிடையாது.

சுகமோ துக்கமோ வெறுமனே வந்து போயிட்டிருந்தா பிரச்சினை இல்லை. அட வருது – போகுது விடுப்பான்னுட்டு நாம இருந்தாலும் பிரச்சினையில்லை.

ஒரு ஃப்ளாஸ்க்ல இந்த செகண்டு ஐஸ் வாட்டர் ஊத்தி அடுத்த செகண்டு ஹாட் வாட்டர் ஊத்தினா ஃப்ளாஸ்க் ஃபணாலாயிரும்.

மனித மனமும் இப்படியா கொத்ததுதான். எக்ஸ்பீரியன்ஸ் உள்ள டீ மாஸ்டருங்க கிட்டே “மாஸ்டர்! ஃப்ளாஸ்க்ல ரெண்டு கப் டீ” ன்னுட்டு ஃப்ளாஸ்கை நீட்டினா அதுல கொஞ்சம் போல ஹாட் வாட்டரை பிடிச்சு கீழே ஊத்திட்டு அப்பாறம் தான் டீ போடுவாரு. ஃப்ளாஸ்கை டீயோட சூட்டுக்கு ப்ரிப்பேர் ப்ண்றாரு.

அந்த மாதிரி நம்ம மைண்டையும் ப்ரிப்பேர் பண்ணிக்கனும். இல்லாட்டி பல்பு தேன்.

நம்முது கடக லக்னம் (னு எத்தீனி தபா தான் சொல்வேப்பா – காங்கிரசுக்காரவுக வறுமையை ஒழிப்போங்கற மாதிரி) . வளர்ச்சி தளர்ச்சியெல்லாம் ரெம்ப சகஜமப்பா.

பிரபலங்களுக்கு சோசியருங்க போடற லெட்டர்/மெயிலை எல்லாம் ரெண்டா பிரிச்சு தனித்தனியே போட்டு வைப்பாய்ங்களாம்.

நல்லது நடந்தா நல்லது நடக்கும்னு சொன்னவனை கூப்பிடறது – கெட்டது நடந்தா கெட்டது நடக்கும்னு சொன்னவனை கூப்பிடறது.

அந்த மாதிரி எது ஒன்னுலயுமே நம்ம லைஃப்ல நடந்த நல்லதை எல்லாம் தனி சிப்ல போட்டுக்கறது. நடந்த கெட்டதையெல்லாம் வேற ஒரு தனி சிப்ல போட்டுக்கறது.

இப்பம் நல்லது நடக்குதுன்னு வைங்களேன். கெட்ட சிப்பை ஓப்பன் பண்ணி வச்சுக்கறது. தாளி இந்தளவுக்கு நாறியாச்சு. இப்பம் இந்த ஜுஜுபி நல்லதுனால டெவலப் ஆயிரப்போறோமான்னு அடக்கி வாசிக்கிறது.

கெட்டது நடக்குதுன்னு வைங்களேன் கெட்ட சிப்பை ஓப்பன் பண்ணி வச்சுக்கறது.. தாளி ஏற்கெனவே நடந்த கெட்டதுகளோட ஒப்பிட்டா இது சுண்டைக்காய் ஃப்ரீயா உடுமாமேனு உட்டுர்ரது.

நம்முது கழுகு மூக்கு தாளி சின்னதா மாற்றம் தெரிஞ்சா போதும் மூக்குல வேர்த்துரும். நல்லதா நடந்தா ” இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே”ன்னு மனசு நடனமாட ஆரம்பிச்சுரும். இந்த நடனத்தாலயே “பொன்னான வேலையெல்லாம்” தூங்க ஆரம்பிச்சுரும்.

கெட்டது நடந்தா ” தாளி ஆரம்பிச்சுருச்சுப்பா காடாறு மாசம்னு ஃப்ளாஷ் பேக்கையெல்லாம் ரீ ப்ளே பண்ணிக்கினு டீலாயிர்ரது.

இந்த பஞ்சாயத்தை விட நான் சொன்ன மெத்தட் பெட்டர் தானே. வாழ்க்கையே கவுத்து மேல நடக்கறாப்ல தேன். எந்தப்பக்கம் சரிஞ்சுருவம்னு பயம் வருதோ அதுக்கு எதிர்பக்கம் சாஞ்சு பேலன்ஸ் பண்ணிக்கிடனும். சத்தியம் மத்தியில தானே இருக்கு ( கெட்ட வார்த்தை இல்லிங்கண்ணா)

சந்திர கிரகணம்னா அது இத்தனை மணி இத்தனை நிமிசத்துக்கு ஆரம்பிச்சு இத்தனை மணி இத்தனை நிமிசத்துக்கு முடியுதுன்னு சொல்லிர்ராய்ங்க.

ஆனால் எனக்கென்னமோ இந்த எஃபெக்ட் குறைஞ்ச பட்சம் 3 மாசத்துக்கு முந்தியே ஆரம்பிச்சுருதோன்னு ஒரு சம்சயம்.

சரி நடந்தது நடந்து போச்சு . ஆனைக்கு நோவு வந்தா எலி எல்லாம் ஏறி அடிக்குமாம். ( நான் கும்மிய சொன்னேன் பாஸ்) அந்த மாதிரி ஆயிருச்சு நம்ம நிலை.

நாம ஒன்னும் சாம்சன் இல்லைதான். ஆனால் குணம் எனும் குன்றேறி நின்றார் மாதிரி நம்ம ஆன்மீக சாத்னைகளின் உச்சத்தில் நிற்கும்போது நடந்த சம்பவத்தை சொன்னா நைனா ஊத்தறாருப்பான்னு நம்ம டவுசர் பாண்டியே சொல்லிருவாரு.

ரெண்டு மூணு மாசத்துக்கொருதரம். இடையில் கொஞ்சம் உதறும் இல்லேங்கலை. ஆனால் அந்த இடைவெளி மிஞ்சி போனா ஒரு வாரம் போல இருக்கும் .அவ்ளதான். இந்த தாட்டி சாஸ்தியாயிருச்சுங்ணா.

ஏதோ நம்ம ஊர் ராமர் கோவில் பிரம்மோற்சவத்தை சாக்கா வச்சு ஒரு ஸ்பெஷல் போட்டோமோ பிழைச்சோமோ.. இல்லின்னா சங்குதான் போல.

ஐ மீன் ஸ்தூலமா செத்துப்போறதில்லை. லிட்டருக்கு 120 கி.மீ கொடுக்கிற வண்டி 12 கிமீ கொடுக்கிற ஸ்டேஜுக்கு வந்த பிறகு அது ரோடு மேல வர்ரதை விட காயலான் கடைக்கு போறதே பெட்டர் இல்லியா. அந்த மாதிரி பிழைக்க நாம தயாரா இல்லிங்ணா.

சரி நெகட்டிவ் போகட்டும். பாசிட்டிவுக்கு வந்துர்ரன். இந்த இடைவெளி கரீட்டா மே 13 க்கு அப்பாறம் ஆரம்பமாச்சு. இதுக்கு ஆரு காரணம் என்ன காரணம்லாம் ஒரு குன்ஸா தெரியும். அந்த பார்ட்டிக்கு சம் திங் சம் திங் நடக்கறச்சே கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு சொல்றேன்.

கடந்த ஞா கிழமை பிரம்மோற்சவ ஸ்பெஷல் பேப்பர் கட்டை டி வி எஸ் ஸ்கூட்டில வச்சுட்டு ஸ்டாண்ட் தள்றேன். கணுக்கால் நங்குனு ஒரு அடி.

ங்கொய்யால உசுரே போனாலும் சரி ராம காரியத்துலயே போவட்டும்னு பையனை ஏத்திக்கிட்டு கிளம்பிட்டேன்.

எம்.எல்.ஏ ஹெட் குவார்ட்டர்ஸுல ஒரு பத்து காப்பி சேர்த்துட்டு வெளிய வர்ரோம். ஒரு அணில் குறுக்கால போவுது. கொஞ்சம் போல கிராஃப் ஏறுச்சு.

அடுத்து சந்தைப்பேட்டைக்கு போனோம். அங்கன ஒரு பாட்டிக்கு ஆக்சிடென்ட் .நல்ல காலம் ரத்தக்களறியெல்லாம் இல்லை. பாதத்துக்கு மேல ஃப்ராக்சர். பாதம் மட்டும் தனிய ஆடுது. பணவீக்கம் கணக்கா பொத பொதனு வீங்கிருச்ச்சு.

பாட்டியோட பை ,செருப்பை எல்லாம் பொறுக்கி வச்சுக்கிட்டு ஆள் சேர்த்து ஓரங்கட்டி 108 க்கு ஃபோன் அடிச்சேன். அதுக்குள்ளாற அங்கன உள்ள கடைக்காரர் ஒருத்தர் பாட்டியோட சொந்தக்காரனுக்கு ஃபோன் போட்டாரு. பார்ட்டி வந்தாரு. பேரு ரகு. எந்த அக்கிரகாரம் பத்திக்கிட்டு போச்சோ அடுத்த நிமிசமே 108 வந்துருச்சு.

அந்தாளுக்கு என்ன அட்வைஸ் பண்ணனுமே பண்ணிட்டு பத்திரிக்கை டிஸ்ட்ரிப்யூஷனை கன்டின்யூ பண்ணிட்டன்.

நேத்து என்னங்கடா இது நாம கூட ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு வந்துட்டாப்ல இருக்கு எதுனா எம்.ஜி.ஆர் வேலை செய்தே ஆகனும்னு வீட்டை விட்டு வெளிய வந்தேன். ஒரு முஸ்லீம் ஓல்ட் லேடி. வாய் எல்லாம் புண். கண் எல்லாம் மஞ்சளா இருக்கு. (ஏற்கெனவே அறிமுகம் தேன்)

உடனே நம்ம ஆஸ்தான டாக்டரை வரவழைச்சு மருந்து ,மாயம் வாங்கி கொடுத்து ,ஊசில்லாம் போட்டு ,கையில கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி வச்சேன். கிராஃப் ஒரே தூக்கா தூக்கிருச்சு.

இனி பெண்டிங் ப்ராஜெக்ட் எல்லாம் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் ஆயிரும். டோன்ட் ஒர்ரி…

என் வாழ்க்கையே ஒரு நாடக் மேடை மாதிரி. இதுல என்னென்னமோ காட்சில்லாம் அரங்கேறும் . லைட்ஸ் ஆஃப்க்கு பிறகு நான்.. நான்.. நான் மட்டுமே இருப்பேன். தெரிஞ்ச கதைதேன்.

என்னடான்னா பர பர சுறு சுறு காட்சிகளை தொடர்ந்து பார்த்துக்கிட்டிருக்கிறச்ச லேசா அம்னீஷியா வந்துருது.

Advertisements

17 thoughts on “பெண்ணுடலும் – மனித வாழ்வும்

  மேடு பள்ளம் அதிகமா இருந்தா தான் கிக் அதிகமா இருக்கும்…
  அதனால் தான் நமிதாவுக்கு நெரிய fans தல 🙂

  vinoth said:
  June 16, 2011 at 9:23 am

  தல நேத்து நான் கொடுத்த லிங்கை பார்த்தீங்களா ?
  சுகில் எழுதியிருந்தாரே..

   S Murugesan said:
   June 16, 2011 at 11:03 am

   வினோத்ஜீ,
   தமிழே தகராறுஇதுல இங்கிலீஷுல்லாம் எங்க படிக்கிறாப்ல இருக்கு.

   அதன் சுருக்கத்தை சொல்லிப்போடுங்களேன். புண்ணியமா போவட்டும்

   வினோத்ஜீ…ஜோதிட புதிர் தொடர் என்னாச்சு..??

  ஏம்ப்பா வலையுலகத்திலே கில்மா னா ? அது
  அனுபவ ஜோதிடம் தான் ங்கிற அளவுக்கு போயிடுச்சி அது தெரியுமா ?

  இப்படியே போய்க்கினு இருந்தா கடைசியிலே கில்மா ஜோதிடம் னு சொல்லிடுவாங்கப்பா..

  உண்மையிலேயே நேத்து ஒரு அன்பர் என் வலைக்கு வந்து உங்க வலைக்கு ஒரு கில்மா மேட்டர் தரட்டுமா ? னு கேட்டார் …
  நான் எங்கப்பா அந்தமாதிரி எழுதறேன்னு கேட்டா ?

  நீங்கதான் உங்க வலைப்பக்கத்திலே லிங்க் கொடுத்திருக்கிறீங்களே ? ன்னார்..
  ஆகா இது என்னடா மேட்டர் னு பார்த்தா ..

  நான் எனக்கு பிடித்த தளங்களின் வரிசையில் அனுபவ ஜோதிடத்தையும் சேர்த்திருக்கிறது தான் மேட்டர் னு தெரிஞ்சிப் போச்சி..

  அப்புறம் அவருக்கு உண்மையை விளக்கினேன்..
  நம்ப தலை ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. சிறந்த எழுத்தாளர்னு சொன்னேம்ப்பா..

  பாரு.. தலை இதெல்லாம் நமக்கு தேவையா ?

  ரோசிப்பா… ரோசி..
  எப்படியும் பதில் தரப்போறதில்லே.. ம்ம்ம்…

   S Murugesan said:
   June 16, 2011 at 12:05 pm

   ஜா.ரா!
   கில்மா ஜோதிடம்ங்கற தலைப்புல ஏற்கெனவே ஒரு மினி தொடர் போட்டாச்சுங்கோ

   @ ஜானகிராமன்

   //பாரு.. தலை இதெல்லாம் நமக்கு தேவையா ?//

   ஜீ…
   தலயோட ஸ்பெஷல் அது…..
   லைப் -லு கில்மா இல்லைனா ….நாம இல்ல …பிறவி இல்லை…
   மரணம் ,கில்மா இதுதான் ஆன்மிகத்தின் ஆணிவேரே…….ஆணிவேரே வேண்டாமுன்னு சொல்லி புட்டிங்களே ஜீ 🙂
   சிவ னடியாருக்கு தெரியாதாத என்ன ?? 🙂

  வணக்கம் தலை,

  தோழர் மணி அனுப்பின COMMENTS VIA EMAIL SUBSCRIPTION செட்டிங்க்ஸ் ஐ இன்னுமா படிக்கலை ?

  படி தலை .. படி தலை..
  எங்க நேரத்தை கொஞ்சம் மிச்சம் பண்ணுங்கோ தலை..

  நான் கேட்டு கேட்டு சலிச்சுப் போயிருக்க செட்டிங்சையே அனுப்பி வெச்ச மணிக்கு ஒரு ஓ ! போடுங்கள் தோழர்களே..

   S Murugesan said:
   June 16, 2011 at 12:04 pm

   ஜா.ரா !
   மன்னிக்கனும். மணி சார் அனுப்பின கைட் லைன்ஸ் எல்லாம் பக்கா தான். ஆனால் நம்ம சைட்ல அந்த ஆப்ஷனை காணோம்.

   திரு.சரணுக்கு சொல்லியிருக்கேன். அதிவிரைவில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுரும்

    தல அப்படியே ஹிட்ஸ் கவுன்ட்டர் வைச்சு புடுங்க…
    ஆமா..திரட்டில ஏதுனும் இணைச்சு இருக்கீங்களா….ஒண்ணுமே விசிபலா இல்லையே ……
    அனுபவ ஜோதிடம் மொட்டை தாசன் கணக்கா இருக்கர மாதிரி எனக்கு ஒரு பீலிங்…யாரு படிக்கறா…ஒன்னுமே பிரியல…

    S Murugesan said:
    June 16, 2011 at 3:57 pm

    ராசா !
    சரண் சாரோட ஸ்டைல் டிஃப்ரண்ட் . அவரோட வழிகாட்டுதலின் படி தான் விசபிள் ஹிட் கவுண்டர் வைக்கலை.

    திரட்டிகளை பொருத்தவரை இண்ட்லி, தமிழ் வெளி,தமிழ்மணத்துல இணைச்சிருக்கம்.

    சில சமயம் தமிழ்10 ல வெகு சில சமயம் டமில் பாய்ண்ட்ல உள்ள அனைத்து திரட்டிகளிலும் இணைக்கிறோம்.

    அ.ஜோ வலைதளம் குறித்த தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

  டவுசர் பாண்டி said:
  June 17, 2011 at 1:31 am

  ஸ்டோரி சூப்பர் நைனா. பெண்டிங் ப்ராஜெக்ட் நா இன்னா? ஏதும் சோசியத்த பத்தி ஏதும் பொஸ்தவம் வெளியிட போறீயா? நமக்கும் கொஞ்சகாண்டு சொல்லுப்பா.

   S Murugesan said:
   June 17, 2011 at 2:39 am

   டவுசரு!
   ப்ராஜக்டுன்னா அது கொஞ்சம் பெருசுதேன். என்.டி.ஆர் கணக்கா ஒரு மாருதி வேன் வாங்கிக்கினு குறைஞ்சது 100 தலைப்புல குறைஞ்சது 32 பக்கம் வராப்ல புஸ்தவம் போட்டு தமிழ் நாடு பூரா டூர் அடிக்கனும்.

   சவுக் சவுக்க நின்னு ஜோதிடம் குறித்த உண்மைகளை போட்டு உடைக்கனும் (ஃப்ரீ சர்வீஸ் தேன்)
   ஆருனா இண்டோர்ல ப்ரோக்ராம் பண்ண கூப்டாலும் ஓகே. ( நாமினல் ஃபீ)

   இதுக்கு மொதல்ல ஒரு லாப் -டாப் வாங்கனும்.
   ஆனால் ப்ராஜெக்டுனு எழுதினப்ப நம்ம மைண்ட்ல இருந்தது பாதியில விட்ட தொடர்களை தொடர்ரதுதேன்

  டவுசர் பாண்டி said:
  June 17, 2011 at 2:24 am

  பாடுன காலும் ஆடுன வாயும் சும்மாருக்குமா?

  இன்னிக்கி ஆனா ஊனான்னா பரிகாரம் அது இதுன்னு மீட்டர போட்டுக்கினுகீராங்களே மெய்யாலுமே நாம செஞ்ச காரமான மேட்டரெல்லாம் பரிகாரத்துல கரீட் பண்ணிரலாமா? அதுக்காண்டி பீடி அடிச்சிட்டு பப்புல்காம துன்னா வாய் மனக்குமான்னு கேக்கப்டாது. மனக்குறது நெசந்தேன். பட் உள்வேல உள்ளடிதேன்.

  செயில்ல கம்பி என்னிக்கினுகிற போர் ட்வென்டி தன்னோட நல்ல அக்டிவிடீசால மன்னிக்கப்பட்டு தண்டனைக்காலம் கொறக்கப்படுறது நமக்கு தெரிஞ்ச மேட்டருதேன். அதே மாறி உள்ளேயும் அட்டூழியம் பண்ணா தண்டனகாலம் அதிகமாய் வெளிய வர முடியாததும் நமக்கு தெரியும்.

  இப்ப ஒரு சாதகத்துல நம்மோட ப்ராப்த பலன் ரொம்ப கொடூரமாருந்தாலும் நாம நல்ல கொணங்களா வழக்குரதாலும், தான தர்மங்கள செய்றதாலும், தன்னோட பாவங்களுக்காக பீல் பண்ணி நல்ல விசியங்கள் செய்றதாலும் ப்ராப்த பழங்களின் உக்கிரத்த கொறைக்க முடியும்.

  பரிகாரம்னாலே உட்டாலக்கடின்னு சொல்லல. பரிகாரத்த ஈடுபாட்டோட நீங்களே (சம்மந்தப்பட்டவங்க) ஈடுபாட்டோட பண்ணுங்க. அவன் பேர சொல்லி நான் சாப்பிட்டுக்கிடுறேன்னு சொல்லி பார்ட்டிக்காறன பட்டினி போட்டுறாதீங்க. சரி மேட்டருக்கு வந்துர்ரன்.

  சோசியத்துல லக்னத்துக்கு பத்தாம் பாவத்துக்கு கர்ம ச்தானம்னு நமக்கு தெரியும். அதுதேன் நம்மோட ப்ராப்த கர்மாவ குறிக்கி. ஒம்போதாம் பாவம் நம்மோட பரிகார ஏரியா. மாத்தெலுத்து இல்லாத விசியங்கள குறிக்கிறது பத்தாம் பாவம். இந்த பத்தாம் பாவாதிபதிக்கி எந்தெந்த பாவங்களோட டீலிங் ஆவுதோ அந்த மேட்டேர்லாம் நிச்சியம் நடந்தே ஆவும். அத மாத்த முடியாது.

  ஆனா ஒம்போதாம் பாவாதிபதிக்கி எந்தெந்த பாவங்களோட தொடர்பு உண்டாவுதோ அந்த பாவ பழங்கால தான தர்மம், சாமி வழிபாடு, பூஜ… இந்த மாறி மாத்தி அமைக்க முடியும். இப்ப காலப்புருஷ தத்துவப்படி லக்னம் மேசம்னு நமக்கு தெரியும்.

  காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு பத்தாமெடம் மகரம். ஒனறு சனி பகவான் இவுரு கர்மக்காரகன்னு தெரியும். ஜென்ரளா காலப்புருஷ ராசின்னு சொல்றது கடகத்த. கடகத்துக்கு பத்தாமெடம் மேஷம். செவ்வா ஊடு. ஆக செவ்வாவும் கர்மகாரகன் லிஸ்டுல வர்றாரு. இந்த ப்ராப்த மேட்டருல பாவ புண்ணியம் நாம சாவுற வர கட்டாயம் நடந்தே ஆவும். இதனால நாம ஆயுள் ஸ்தானத்தையும் பாக்கணும்.

  காலபுர்ஷப்படி எட்டாமெடம் விருச்சிகம். செவ்வா வூடு. அதேமாரி கால்ப்புருஷ ராசியான கடகத்துக்கு எட்டாமெடம் கும்பம். சனியோட வூடு. ஸோ, தலைய வலது கையால சுத்துனாலும் எடது கையாள சுத்துனாலும் இந்த ரெண்டு கெரகமும் மாறி மாறி வருது. இதான் சனிக்கும் செவ்வாக்கும் உள்ள மேச்சிங்க்ஸ்.

  இந்த ரெண்டு கெரகமும் சேந்து எந்த பாவங்களோட லிங்க் ஆவுரான்களோ அந்த பாவபலன்கள நிச்சியம் அனுபவிச்சாகனும். அத மாத்த முடியாது. எட்டாம் ஊடு போன சென்மத்துல செஞ்ச பாவங்கள குறிக்கி.

  இப்ப காலப்புர்சா லகனமான மேசத்துக்கு ஒம்போதாம் ஊடு தனுசு. குருவோட வூடு. குறு தர்மக்காறாரு, புன்னியக்காரருன்னு நமக்கு தெரியும். கால்ப்புர்சா ராசியான கடகத்துக்கு ஒம்போதாம் ஊடு மீனம். அதே குருவோட ஊடு. மறுபடியும் ஆஜராகுராறு குறு. இதனால குருவ பரிகார காரகண்ணும் சொல்லலாம். இதனால குருவோட டீலிங் எந்தெந்த பாவங்களுக்கு ஏற்படுதோ அத பரிகாரம் மூலம் கரீட் பண்ணிரலாம்.

   டவுசர் பாண்டி said:
   June 17, 2011 at 2:34 am

   பாடுன காலும் ஆடுன வாயும் சும்மாருக்குமா? – ஸாரிங்கனா, டங்கு ஜம்ப் ஆச்சு.

   பாடுன வாயும் ஆடுன காலும் சும்மாருக்குமா?

   டவுசர் பாண்டி said:
   June 18, 2011 at 2:54 am

   இன்னாங்கடா இது மாங்கு மாங்குன்னு குந்திக்கினு எழுதுனத சனங்க செயலலிதா தாயி ஓமந்தூர் பில்டிங்க புறக்கநிச்ச மாறி படிக்காம பூட்டாங்களா.

  Mani said:
  June 17, 2011 at 11:46 am

  அட நம்ம தலைக்கு என்னாச்சு!! சந்திர கிரகணம் வந்து மைன்டை ஃபார்மெட் பண்ணிடிச்சி, இனிமேல் பூந்து வெளையாட வேண்டிதான் அப்படின்னு முறுக்கினாரு. சுத்தமா சவுண்டையே காணோமே. ராகு சந்திரனை முழுங்கிடுச்சோ?.

  தலை ஃபார்மெட் பண்ணா என்ன? உங்ககிட்ட இல்லாத டேட்டாவா? சும்மா கொஞ்சம் எடுத்து வுடுங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s