சந்திர கிரகணம் : திகீர் விளைவுகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே,

2011 ல மொத்தம் பத்து கிரகணம். இதுல நாலு சூரிய கிரகணம் . 6 சந்திர கிரகணம் -சன் நியூஸ் தகவல்

ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற தோழிகளுக்கு ஆரம்பத்துல வெவ்வேறு தேதிகள்ள பீரியட்ஸ் இருந்தாலும். படிப்படியா தேதிகள் நெருங்கி வந்து ஒரு கட்டத்தில் ஒரே நாளில் மாதவிலக்கு வர ஆரம்பிக்குமாம்.

அப்படியாக நம்ம அனுபவஜோதிடம் குரூப்பு சனத்துக்கிடையில் இப்படி ஒரு ஒத்திசைவு ஏற்பட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைக்கிறேன்.

நேத்து இரவு 8.30 க்கு சந்திர கிரகணத்தை பத்தி ஒரு பதிவு போடலாம்னு ஆரம்பிச்சு எடுப்பு -தொடுப்பு -தொகையறா வரைக்கும் வந்தன்.

பல்லவிக்கு வரும்போது மின்சார கண்ணன் நொள்ளை கண்ணன் ஆகிட்டாரு. தூத்தேறிக்கனு விட்டுட்டன்.
பார்த்தா நம்ம சுகுமார்ஜியும் கிரகணத்தை தொட்டு காட்ட முயற்சி பண்ணியிருக்காரு.

ஸ்.. அப்பாடா வில்லங்க தலைப்புக்கு ரீசனிங் கொடுத்தாச்சு. பதிவுக்கு போயிரலாமா?

சந்திர கிரகணங்கறது ஒரு சாதாரண நிகழ்ச்சி. சூரியனோட ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனுக்கும் – அந்த ஓளியை வழங்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வர்ரதால சந்திரனுக்கு சூரிய ஒளி கிடைக்காம போயிருது. இதனால சந்திரன் கண்ணுக்கு தெரியாம போயிர்ராரு.இது ஒரு பவர்கட் மாதிரி தான் தட்ஸால்ங்கறது பகுத்தறிவு வாதிகளோட வாதம்.

ங்கொய்யால எல்லாமே விசமாயிரும். விசமாயிட்டதை திங்கனும்னா அதுல தர்ப்பைய போட்டு வச்சு திங்கனும். கர்பிணி வெளிய வரப்படாது. கிரகணம் விட்டதும் வீடுவாசல் எல்லாம் கழுவி குளிச்சு முழுகனும் – இது பண்டிதர்களோட எச்சரிக்கை.

புத்தர் சொன்னாப்ல உண்மை என்னவோ இது ரெண்டுக்கும் நடுவுல இருக்கு. ( ரெண்டு பக்கமும் செருப்படிதாண்டி மாப்ளே)

மொதல்ல சந்திர கிரகணத்தோட டைமிங்கை பார்த்துருவம்.

2011, ஜூன் 15 ஆம் தேதி இரவு 11.53 முதல் நள்ளிரவு 1.42 வரை சந்திரன் என்ற ஒளி வட்டம் ஜீரோ டிகிரியலருந்து ஆரம்பிச்சு 360 டிகிரியும் மறைக்கப்படும். இந்த மறைப்பு (கிரகணம்) விடியல் 3.32 வரை ( ஜூன் 16 ) தொடரும்.

இது சாதா கிரகணம்னா இதை பத்தி பெருசா பதிவு போடவேண்டிய அவசியமே இல்லை. ( மசாலா கிரகணமானு நக்கலடிக்காதிங்க) இது 1971 க்கு பிறகு ஏற்படும் மிக நீண்ட சந்திர கிரகணம்.

1-42 முதல் 3.32 வரைன்னா ரெண்டு மணி நேரத்துக்கு பத்து நிமிடம் குறைவு. ஆக்யுரேட்டா சொன்னா 110 நிமிடங்கள்.

110 நிமிடங்கள் சந்திரனுக்கு சூரியனோட ஒளி கிடைக்காது. அதனால சந்திரன் அந்த ஒளியை பிரதிபலிக்க முடியாது.

இதனால என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும்னு ரோசிப்போம்.

சூரியனை பித்ருகாரகன்னு சொல்றோம். ( டாடி) சந்திரன் மாத்ருகாரகன் (மம்மி) . காலேஜ்ல டூர் போகனும்னா மம்மிக்குத்தேன் இன்டெண்ட் போடறோம். காசு என்னவோ டாடிதுதான். ஆனால் அதை டாடிக்கிட்டே வாங்கறதுக்குள்ள டங்குவார் அறுந்துரும்.

இதே போல சந்திரன் வீசுவதும் சூரியனுடைய ஒளியை தான். ஆனால் சூரியனை கண்கொண்டு பார்க்கமுடியாது ( உதய அஸ்தமனங்களின் போது தவிர) ஆனால் சந்திரன் .. பௌர்ணமி சந்திரனா இருந்தாலும் மொட்டை மாடில படுத்துக்கிட்டு கோடி விட்டு கோமளியோட நாலணா முகத்தை அதுல கற்பனை பண்ணிக்கமுடியும். எழுத்துப்பிழைகளோட கவிதை கூட எழுத முடியும்.

அட..எதிர் வீட்டு குட்டிய கணக்கு பண்ணி கண்ணாலம் பண்ணிக்கனும்னா மம்மி கிட்டேதான் கெஞ்சறோம்.” மம்மீ மம்மீ ப்ளீஸ் மம்மி”

அம்மா ” கண்ணா! உங்க அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே. அவருக்கு எப்ப கோபம் வரும் .. எப்ப எரிச்சல் வரும்னு சொல்லவே முடியாது. உன் லவ் மேட்டரை சொல்ல ட்ரை பண்றேன். அவர் என்ன சொல்வாரோ என்னமோ எனக்கு தெரியாதுங்கறாய்ங்க.

ட்ராஃபிக் போலீஸ் டூ வீலரை புடிச்சு வச்சுக்கிட்டாரு. மாமூல் கொடுத்துட்டு தான் வண்டி எடுத்துட்டு போகனுனு சொல்ட்டாரு. அவசரமா ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வரோம். அப்பா இருக்கமாட்டாருன்னு தெரியும். மம்மீக்கும் உடம்பு சரியில்லை டாக்டர் கிட்டே போனாய்ங்கனு பக்கத்து வீட்ல சொன்னா நம்ம நிலைமை என்ன?

அதே நிலைதான் சந்திர கிரகணத்தின் போதும் ஏற்படும்.

சூரிய ஒளியோட பவர் என்னன்னு நமக்கு ஓரளவுக்கு தெரியும். ( விட்டமின் டி , விட்டமின் இ , பாக்டிரியாவை கொல்லும் சக்தி, சோலார் பவர்)

சந்திர ஒளியோட பவர் என்னன்னு பார்ப்போம்.

மீன்களின் இனப்பெருக்கம், சமுத்திர அலைகள், மனித உடலில் உள்ள வாட்டர் கன்டென்ட்,கர்பிணி பெண்ணின் கருப்பையில் உள்ள பனிக்குட நீர், பெண்களில் மாதவிலக்கு , மனிதர்களின் மன நிலை, சிறு நீரகம், நுரையீரல்களின் செயல்பாடு ஆகியவற்றின் மீது சந்திரனின் இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும்,

சாதாரண நிலையில் உள்ள போதே சந்திரனோட இம்பேக்ட் அதிகம் இருக்கக்கூடிய விஷயங்கள் இவை. இதுல கிரகணம்னுட்டு சந்திர கிரணமே நாட் அவெய்லபிள்னா எப்டி இருக்கும்? நீங்களே கெஸ் பண்னிக்கங்க.

அதுலயும் நுரையீரல், சிறு நீரக பிரச்சினையால அவதிபட்டுக்கிட்டிருக்கிறவங்க நிலைமை எப்படியோ? டாக்டர்ஸ் டேக் கேர் !

சமுத்திர அலைகளின் மீதான சந்திரனின் எஃபெக்ட் சைன்டிஃபிக். ப்ரூவன். சனத்துக்கு தெரியாத விஷயம் என்னன்னா சமுத்திர நீர், பனிக்குட நீர்,மனித உடலிலான வாட்டர் கன்டென்டின் கெமிக்கல் காம்பினேஷன் ஒன்னுங்கறதுதான்.

அட கிரகணத்தை விடுங்க. எதாவது டிக்கெட்டு இழுத்துக்கிட்டிருந்தா இந்த அமாவாசை தாண்டிட்டா பிரச்சினையில்லைனு சொல்வாய்ங்க. வேணம்னா ஒரு சர்வே பண்ண சொல்லுங்க. அமாவாசைய ஒட்டி வரும் நாட்களில் தான் மரண சதவீதம் அதிகமா இருக்கும்.

மொதல் பாரால சொன்னாப்ல சந்திர கிரகணத்தை ஜஸ்ட் பவர் கட் மாதிரின்னு சொல்லிர முடியாது. அட பவர் கட்டுன்னே வச்சுக்கிட்டாலும் ஒரு சாதாரண கம்ப்யூட்டர்.. பவர்ல ஒரு அரை செகண்டு இன்டரப்ஷன் வந்தா சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆயிருது.

அட ஒரு மணி நேரம் பவர் கட்டுன்னா ஃப்ரிட்ஜ்ல வச்ச பால் நாறிப்போகுது. மூளைக்கு ஒரு நிமிசம் ரத்த சப்ளை தடைபட்டா மன்சன் சொத்துனு கீழ விழுந்துர்ரான் ( நன்றி:சுஜாதா)

ரத்தம் ஆக்சிஜனை கொடுக்குதுன்னு அல்லாருக்கும் தெரியும். சந்திரன் என்னத்தை கொடுக்கிறாருன்னு ஆருக்கு தெரியும்.

லோக்பால் மேட்டரை பத்தி விவாதம் நடக்குது. இதை கிரகணம் இல்லாத ஒரு பவுர்ணமி நாள்ள ஓப்பன் ஏர்ல மூன் லைட்ல நடத்த சொல்லுங்க. படக்குன்னு பைசலாகும். இதான் சந்திரனோட ஸ்பெஷல்.

ஃபுல் மூன் டேல , மூன் லைட்ல பார்த்தா பத்து பைசா முகம் கூட தக தகக்கும். கற்பனையும்,காதலும் பிச்சுக்கிட்டு வரும்.

சரிங்கண்ணா சந்திரனோட காரகத்வங்களை கீழே தரேன். ( சந்திரனே சொல்றாப்ல ) மேற்படி கிரகண சமயத்துல இந்த மேட்டர்ல எல்லாம் பிரச்சினை வரும்.

வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், மதர்லி ஃபிசிக் கொண்ட பெண்கள் இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள், நண்பர்களுடனேயே மோதுதல்,எதிரிகளுடன் நட்பு கொள்ளுதல் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.

அடுத்து இந்த தர்பை மேட்டருக்கு வருவம். தர்பை விஷ முறிவை தரும்ங்கறதை கொள்கை அளவுல ஏத்துக்கிடறேன்.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் இவிக சொல்றது காஞ்ச புல். அதையும் சொம்மா போட்டு வச்சுட்டா ப்ராப்ளம் சால்வ்டுங்கறாய்ங்க . இங்கதான் லாஜிக் உதைக்குது.

என் சஜஷன் என்னன்னா இன்னைக்கு அளவா சமைச்சுருங்க. மாலை ஆறுமணிக்குள்ள சமைச்சதையெல்லாம் பைசல் பண்ணிருங்க. (ஃப்ரிட்ஜுல வைக்காதிங்க) முக்கியமா அவுட் டோர் பார்ட்டி, முக்கியமா லாலா பார்ட்டில்லாம் வேண்டாம். வீட்ல இருந்தாலும் வில்லங்க சப்ஜெக்டை எல்லாம் ரெய்ஸ் பண்ணாதிங்க. சிவனேன்னு ஹிண்டு பேப்பரை படிங்க ( படிக்கிறாப்ல பாவ்லா காட்டுங்க)

கிரகணம் முடிஞ்சதும் ஒரு குளியல் போட்டுருங்க. குடி நீர்ல பச்சை அருகம்புல்லை நல்லா கழுவிட்டு போட்டு வச்சிருங்க.

புல் ஸ்டாக் இருந்தா மிக்சில போட்டு அரைச்சு மிளகு சீரகம் சேர்த்து ஒரு க்ளாஸ் அருகம்புல் ஜூஸ் அடிங்க. ஓகேவா உடுங்க ஜூட்.

Advertisements

38 thoughts on “சந்திர கிரகணம் : திகீர் விளைவுகள்

  vinoth said:
  June 15, 2011 at 6:05 am

  தல … இந்தியாவுக்கு , தமிழ் நாட்டுக்கு , தலைவர்களுக்கு, பிரமுகர்களுக்கு என்ன நன்மை தீமை?

  Sankar Gurusamy said:
  June 15, 2011 at 6:15 am

  மிகவும் உபயோகமான டிப்ஸ்.

  கிரகண நேரத்தில செய்யும் பூஜைக்கும், ஜபத்துக்கும், தியானத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் அதிக பவர் இருக்குன்னு சொல்றாங்களே.. அது பத்தி நீங்க என்ன சொல்றீங்க…. இதுல உங்க சஜஷன் என்ன???

  பகிர்வுக்கு நன்றி…

  http://anubhudhi.blogspot.com/

   Mani said:
   June 15, 2011 at 7:28 am

   வாங்க சங்கர் குருசாமி அவர்களே! நானே இதை பற்றி நம்ம தலைக்கிட்ட கேட்கனும்ன்னு இருந்தேன். நான் கூட படிச்சிருக்கேன் கிரகண சமயத்தில் ஒரு முறை உச்சரிக்கப்படும் மந்திரங்கள் 1000 முறை உச்சாடனம் செய்ததற்கு சமம் என்று எந்த புஸ்தகத்திலோ படித்த ஞாபகம் இருக்கிறது மெய்யாலுமே நெசந்தானா தலை. அது ஒர்க் அவுட் ஆகறது சூரிய கிரகணத்துக்கா இல்லை சந்தி கிரகணத்துக்கா தலை? நம்ம தலை தான் ஆத்தா சீடராச்சே அதுமட்டுமல்லாம மந்திரம் பற்றியெல்லாம் எழுதறீங்க அதான் அதைப்பத்தி கொஞ்சம் விளக்கி எழுதுங்களேன் தலை. நம்ம டவுசர் பாண்டி கூட பிட்டு தரலாம்.

    S Murugesan said:
    June 15, 2011 at 8:03 am

    மணி!
    சந்திரன் மனோகாரகர் – மந்திரம் என்பது மனம் கடந்த நிலையை தர சொல்லப்படுவது. எனவே சந்திர கிரகணம் மனம் கடக்க உதவலாம்.

    சூரியன் ஈகோவுக்கு காரகர் – மந்திரம் என்பது ஈகோவை கடக்க செய்யும் முயற்சி. எனவே சூரிய கிரகணம் ஈகோவை கடக்க உதவலாம்.

    என்ன இருந்தாலும் சூரிய, சந்திரர்கள் உயிர்களுக்கு மம்மி டாடி மாதிரி. கிரகணங்களின் போது மனம் ,ஈகோ ஒடுங்கலாம்ங்கறதை தவிர இன்ன பிற நெகட்டிவ் ஆஸ்பெக்ட்ஸும் நடக்கலாம்.

    எனவே மந்திரம் அது இதுன்னு ட்ரை பண்றதை விட மனம் ஒடுக்கி -ஈகோவை ஒதுக்கி சகலரும் நலம் பெற பிரார்த்தனை மட்டுமே பண்ணலாம்ங்கறது என் கருத்து

    Mani said:
    June 15, 2011 at 9:05 am

    பொருத்தமான விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

    Ismail said:
    June 15, 2011 at 10:11 am

    அய்யா தங்களது விளக்கம் மிக அருமை. அதிலும் சந்திர சூரிய கிரஹனம் பற்றிய வேறுபாடு மிக அருமை.
    மந்திரத்தில் மனம் லயிப்பதை விட மனம் ஒடுங்கி ஆன்மா உணரும் தியானம் இந்த சந்திர கிரகனதில் செய்வது மிக சிறந்தது. காரணம் உயிரின் படர்கை நிலையே மனமாக இருக்கிறது.

    டவுசர் பாண்டி said:
    June 15, 2011 at 1:46 pm

    சூப்பர் நைனா. காலங்காத்தாலேயே ஒரு சின்ன வருத்தம் அதாவது, இன்னாங்கடா இது சந்திர கிரகணம் அதுமா சந்திரனின் ஆதிக்கமுடைய நைனாட்டருந்து ஒரு நியூசும் இல்லியேன்னு ஒரு பீலிங். நல்லவேளையா நைனாட்டருந்து சந்திரன பத்தி பதிவு வந்திட்டு.

    S Murugesan said:
    June 15, 2011 at 7:49 pm

    பாண்டி !
    அப்போ கிரகணத்தை பத்தி எழுதச்சொல்லி டெலிபதி மூலமா டார்ச்சர் பண்ண பார்ட்டி நீங்க தானா?

    டவுசர் பாண்டி said:
    June 16, 2011 at 3:56 am

    லைட்டாத்தேன் நெனச்சேன். அதுக்குள்ளார நைனாக்கு டவர் கெடைச்சிட்டா. ஆச்சர்யம். ஆனால் உண்மை.

    Arun said:
    June 15, 2011 at 2:43 pm

    Boss,
    How to decide a man, whether he influence by moon or sun?

    S Murugesan said:
    June 15, 2011 at 7:48 pm

    அருண் !
    இதெல்லாம் நாட் நாட்லயே விலாவாரியா எழுதிப்போட்ட சப்ஜெக்டு. வேணம்னா http://www.kavithai07.blogspot.com போய் சூரிய மனிதர்கள் -சந்திர மனிதர்கள்னு சர்ச் பண்ணி பாருங்க

  Name said:
  June 15, 2011 at 6:32 am

  தல .. இந்த லிங்க்லை படிச்சு பாருங்க..
  http://tinyurl.com/6ywr77e

  சிவ யோகி said:
  June 15, 2011 at 7:12 am

  சந்திர கிரகணம் ஒரு அற்புதமான நிகழ்வு..
  மனம் இங்கே முற்றிலுமாக மறைகிறது..
  ஆத்மா வின் சுய பிரகாசம் அறிய இது ஓர் அற்புதமான வாய்ப்பு….
  இன்று காலையில் யோக அப்பியாசம் செய்கிறேன்…
  சாதரணமாக அடங்க மறுக்கும் மனம்….இன்று நன்றாக லயப்படுகிறது …
  என்னை சுற்றி என் பிரஞ்சை என்றும் இல்லாத அளவு இன்று விரிவடைவதை உணர முடிகிறது..
  ஒரு பெரிய கட்டிடம் அளவுக்கு என் பிரஞ்சை விரிவு பெறுவதை உணர முடிகிறது
  பொதுவாக அம்மாவாசை , கிரகணம் அன்று மனம் அடங்கும்….அதாவது உள் நோக்கி திரும்பும்….
  இந்த நாட்களில் வெளி நோக்கிய காரியங்களில் மனம் நிற்காது….எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது…
  கிரகணம் அன்று வெளி வேலைகளை ,புது முயற்சிகளை தள்ளி போடலாம்…..
  சூரிய பலம் கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான நாள் 🙂

  Mani said:
  June 15, 2011 at 7:59 am

  அதே மாதிரி கிரகண காலங்களில் விஷ ஜந்துக்களுக்கு உள்ள விஷத்தின் வீரியம் அதிகம் இருக்குமாம். அவை கிரகண காலங்களில் கடித்துவிட்டால் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் படித்திருக்கிறேன். மேலும் தீய சக்திகள் பலம் பெற்றும் இருக்கும் என்பதால் கோவிலில் நடைசாத்துவார்கள் என்றும் படித்திருக்கிறேன். அவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களை தங்களுக்கு தெரிந்த வரையில் எழுத முடியுமா முருகேசன்ஜி.

  vinoth said:
  June 15, 2011 at 9:23 am

  அஸ்ட்ராலஜி லிங்கைபடிச்சு பார்த்தீங்கள? http://tinyurl.com/6ywr77e அஸ்ட்ரொ சுகில் எழுதீ இருக்க்கர்

  சிவ யோகி said:
  June 15, 2011 at 10:00 am

  //http://tinyurl.com/6ywr77e//

  //சந்திர கிரகணம் : திகீர் விளைவுகள்//

  இப்படி -க்கா பயம் காட்டி காட்டியே மக்களை தன் பக்கமா திருப்பரதே இந்த ஜோசிய கார பயலுவ பொளப்பா போச்சு…..

  அப்புறம்…. ஓஷோ ஒன்னு சொல்லி இருப்பாரு….

  மக்கள் ஆரோக்கியத்த பத்தி தான் ….
  அதாவது குடும்ப டாக்டர் ஒருத்தர் இருக்கறதா வச்சுக்குவோம்…
  அதாவது டாக்டர் ஒரு குடும்பத்த ஆரோக்கியமா வச்சுக்க அவருக்கு மாசம் மாசம் ஒரு பீஸ் நாம கொடுக்கணும்…..
  suppose ,ஒரு மாசம் யாராச்சும் ஆரோக்கியம் கேட்டு போனா அந்த மாசம் டாகடர் பீஸ் கட்…..

  இதை படிக்கும் போது…எனக்கு காமடியாக இருந்தது…..அப்புறம் யோசிக்கும் போது …அட …இதன் பின்னால் எவ்வளவு பெரிய உண்மை உள்ளது என்பது தெரிய வந்தது

  அதாவது டாகடர் தான் குடும்ப ஆரோக்கியத்துக்கு காரண கர்த்தா ஆகும் போது…. டாகடர் ரொம்ப அக்கறையா குடும்ப நபர்களை பார்ப்பார்…..
  ஆரோக்கியதுக்கான அணைத்து ஆலோசனையும் சொல்லுவர்….குடும்ப நபர்களை கடை பிடிக்குமாறு வலியுருத்துவார்…..

  அப்படியில்லாமல் ….நோய் வந்தால் தான் காசு என்றால்…..டாகடர் என்ன பண்ணுவார்….எப்படா இவனுகளுக்கு நோய் வரும்…பெரிய அமௌன்ட் ஆக பிடுங்கலாம் என்று தான் எதிர் பார்த்து கொண்டு இருப்பார்….

  அது போல்தான் ..இந்த ஜோசிய காரர்களும்….சந்திர கிரணம் ….சூரிய கிரணம் வந்துட்டா போதும் …ஒரே கொண்ட்டாட்டம் தான்….

  இந்தியாவுக்கு ஆபத்து …..பிரதமருக்கு ஆபத்து அப்படின்னு ஒரே அலப்பறை
  வாழறதுக்கு வழிய சொல்லுங்க அப்பு….

  ஒரு சமுகத்தில் டாகடர் ,ஜோசிய காரர்கள் நன்றாக வாழ்கிரார்கள் என்றால் …சமுகம் நோய் வாய் பட்டு உள்ளது என்று அர்த்தம் ….என்ன நான் சொல்லுறது சரி தானே முருகேசன்..??

  நீங்க ஜோசிய காரர் மட்டும் இல்லை ….ஆன்மிகவாதி என்பதால் தான் உங்களிடம் இந்த கேள்வியை கேக்கிறேன்

   S Murugesan said:
   June 15, 2011 at 11:16 am

   சிவயோகி சார் !

   //ஒரு சமுகத்தில் டாகடர் ,ஜோசிய காரர்கள் நன்றாக வாழ்கிரார்கள் என்றால் …சமுகம் நோய் வாய் பட்டு உள்ளது என்று அர்த்தம்//

   மேலெழூந்தவாரியா இந்த கருத்து கரெக்டுனு தோணும். ஆனால் இது கிரகத்தால வந்த பிரச்சினை ஜோசியரை பார்க்கனும் – இது நோயின் அறிகுறி டாக்டரை பார்க்கனும்ங்கற ரேஞ்சுல சமுதாயம் இருந்தாத்தான் நீங்க சொன்ன விளைவு ஏற்படும்.

   ஆனால் சமுதாயம் எப்படி இருக்குன்னா ஆனா அந்த மடம் இல்லாட்டி சந்தைமடம். ஒன்னு நாங்க அக்மார்க் பகுத்தறிவுவாதியாக்கும்னு பீத்திக்க வேண்டியது. அல்லது சாமியாருங்க காலடில விழுந்து கிடக்கிறது.

   உண்மை இந்த ரெண்டு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் மத்தியில இருக்கு. மத்தவுக எப்படியோ? 2000 ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து ஜோசியம் சொல்லாம கூட இருந்திருக்கலாம். ஆனால் பதிவு போடாம இருந்ததில்லை.

   நம்ம முதல் லட்சியம் அவாய்டிங் ப்ராப்ளம்ஸ்தான். சால்விங் ப்ராப்ளம்ங்கறது செகண்டரிதான்..

  //சூரியனோட ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனுக்கும் – அந்த ஓளியை வழங்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வர்ரதால சந்திரனுக்கு சூரிய ஒளி கிடைக்காம போயிருது. இதனால சந்திரன் கண்ணுக்கு தெரியாம போயிர்ராரு.இது ஒரு பவர்கட் மாதிரி தான் தட்ஸால்ங்கறது பகுத்தறிவு வாதிகளோட வாதம்.//

  //சந்திரனுக்கு சூரிய ஒளி கிடைக்காம போயிருது. //

  பகல் முழுதும் சந்திரனுக்கு ஒளி கிடைப்பது இல்லையே தல…அப்ப ஒவ்வொரு நாளும் பகல் முழுதும் சந்திர கிரகணம் மாதிரி தானே தல …

   S Murugesan said:
   June 15, 2011 at 11:07 am

   ராசா !
   இது சீரியசா காமெடியா புரியலை. பகல்லயும் கிடைக்குது. ஆனால் சூரிய இருப்பால் ஜெ ப்ரசன்ஸ்ல மந்திரி மாதிரி சந்திரன் மங்கி கிடக்கும். தட்ஸால்

  //மேலும் தீய சக்திகள் பலம் பெற்றும் இருக்கும் என்பதால் கோவிலில் நடைசாத்துவார்கள் என்றும் படித்திருக்கிறேன்.//

  அண்ணே…தீய சக்தி யிடம் இருந்து காத்து கொள்ள தான் நாம் கோவிலுக்கு செல்லுகிரோம்…..அப்புறம் கோவிலையே சாத்தி விட்டால்….. நாம் எங்கே சென்று நம்மை காப்பாற்றி கொல்வது…?

  அட பாவமே….. கடவுளுக்கே சோதனையா …இந்தக் கிரகணம் 🙂 🙂

  சரி….கோவிலை சாத்தி புட்டா பரவாயில்லை…..தியேட்டருக்கு போக வேண்டியது தான் 🙂

   S Murugesan said:
   June 15, 2011 at 11:05 am

   ராசா !
   நெகட்டிவாவே ஏன் ரோசிக்கிறிங்க. கிரகண சமயத்துல கடவுளுக்கு ஏதோ ஆயிரும்னு தேன் நடை சாத்தறாய்ங்கனு ஏன் நினைக்கிறிங்க.

   கடவுள் மழை மாதிரி . அவரோட கருணை பொழிஞ்சிக்கிட்டே தான் இருக்கும். நம்ம பாடி , மைண்ட் எல்லாம் கிரகண சமயத்துல கவுத்து போட்ட சின்டெக்ஸ் டேங்க் மாதிரி ஆயிரும் – எதுக்கு வெத்தா சனம் அல்லாடனும்னு இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கலாம்லியா?.

    Ismail said:
    June 15, 2011 at 11:27 am

    சூரிய சந்திர கிரகனதில் நடக்கும் விசயங்களுக்கும்
    ரகு கேதுவால் நடக்கும் விசயங்களுக்கும் தொடர்பு உண்டா.

    //கடவுள் மழை மாதிரி . அவரோட கருணை பொழிஞ்சிக்கிட்டே தான் இருக்கும். நம்ம பாடி , மைண்ட் எல்லாம் கிரகண சமயத்துல கவுத்து போட்ட சின்டெக்ஸ் டேங்க் மாதிரி ஆயிரும் – எதுக்கு வெத்தா சனம் அல்லாடனும்னு இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கலாம்லியா?.//

    நானும் அதை தான் நினைக்கிறன் தல …..சும்மா நூல் விட்டு பார்த்தேன் ..என்ன சொல்ல வரீங்கன்னு.. 🙂

   சிவ யோகி said:
   June 15, 2011 at 12:23 pm

   //அட பாவமே….. கடவுளுக்கே சோதனையா …இந்தக் கிரகணம்//

   கோவில் என்பதன் மூலம்…..மந்திர தகடுகள் …மற்றும் அதன் அதிர்வுகள் தான்..
   ஆறு வேலை பூஜை எதுக்கு ? அந்த மந்திர அதிர்வுகளை அப்படியே மைண்டைன் பண்ண தான்…

   கொடி மரம் ஆகாயத்து பிராண சக்தியை இழுத்து கோவிலை ஒரு குறிப்பிட்ட அதிர்வுடன் வைத்து இருக்கும்…

   மந்திர அதிர்வுக்கு ஏற்ப ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு அதிர்வு இருக்கும்…..அந்த அதிர்வில் பாதிப்பு கூடாது என்று தான் நடையை சாத்தி விடுகிறார்கள்…..

   தன்னை அறிய தன்னை உள் நோக்கி பார்ப்பவர்களுக்கு கோவில் தேவை இல்லை…ஆனால் சித்தர்கள் ஜீவ சமாதி பயனுடையதாய் இருக்கும் 🙂

  டவுசர் பாண்டி said:
  June 15, 2011 at 2:24 pm

  இந்த மாறி கெரகந நேரம் தியானம் பண்ணி ஒங்களோட பேவரிட் மந்திரத்தை ஒரே நடைல ஒரே மாதிரி ஒரே தொனில மனசுக்குள்ள உச்சரிங்க. ஆயிரத்தெட்டு தடயாச்சும் சேன்ட் பண்ணா நல்லதுன்னு சொல்லுவாங்க. ஆராச்சும் இன்னிக்குள்ள கோச்சாரத்த பாத்தீங்களா. சந்+ரா காம்பினேசன் குறு பார்வை இல்லாம கீது. நம்ம சோசியத்துல ரா/கே ரிஷபத்துல நீசம், விருச்சிகத்துல உச்சம்னு தெரியும்தானே. நாடி சோசியத்துல சந்திரனோட ரெண்டு துருவந்தேன் இந்த ராகுவும் கேதுவும். சந்திரன் மண்ச குறிக்கி. மனம் அழிந்ஜாதானே எண்ணமும் அழியும். பொறவு ஆச அழிஞ்சி ஞானம் பொறக்கும். சரி மேட்டருக்கு வர்றேன். மனச குறிக்கிற சந்திரன் உச்சமடைர எடத்துலதேன் ராகுவும் உச்சமடையுது. பொதுவா ராகு போட்டுத்தல்ற வேலையைமட்டும் செய்யாம எந்த விவகாரத்தையும் நல்லா விகாரமா டெவெலப் பண்ணுது. ஆனா கேது வந்து எதையும் சுருக்கா நறுக்குன்னு செய்யும். இன்னிக்கி சனங்க அல்லாரும் தியானம் பண்றாங்க. சந்தோசந்தேன். தியானம் பண்ணா மனசுக்கும் ஒடம்புக்கும் நல்லதுன்னு அல்லாத்துக்கும் தெரியும். அவன் செஞ்சதத்தேன் நானும் செய்றேன் ஆனா என்னவிட அவனுக்கு மட்டும் ரொம்ப இது (?) கெடைக்கேன்னு கேக்கலாம். சந்திரன ராகு பாத்துக்கினு இருந்தா மனசு அளபாஞ்சிக்கினுதேன் இருக்கும். தியானம் பண்ணச்சில ஆ(சா)பாசங்கள அள்ளி வுட்டுக்குநேருக்கும். ஆனா இதே சந்திரன் கேது பாத்தாக்க எண்ணங்கள் சுருங்கும். ஈசியா மனசு ஒடுங்கிரும். மனசு ஒரு கட்டுப்பாட்டுக்குல்லாற வந்துரும். சாதகத்துல குருவ கேது பாத்தாக்க பார்ட்டிக்காரன் பொறந்துதுலருந்தே ஆன்மீகத்துல ஈடுபாட்டோட இருப்பான். சாதகத்துல மோட்சக்காரகன் கேதுவ, கர்மக்காரகன் சனியோ, இல்லாங்காட்டி ஜீவக்காரகன் குருவோ பாத்தா மட்டும் பத்தாது. சந்திரனையும் பாக்கணும். அப்பதேன் பார்ட்டிக்காரன் ஞானியாக முடியும். சந்திரன் உச்சமடைர எடத்துல ராகு உச்சமடைறார். சந்திரன் நீசமடைர எடத்துல கேது உச்சமடைறார். அதாவ்து மனம் அழியிற எடத்துல ஞானக்காரன் கேது ஞானத்த கொடுக்குறார்.

  டவுசர் பாண்டி said:
  June 15, 2011 at 2:56 pm

  இன்னிக்கி டேட்டுல ஆன்மிகம் சனங்கல்ட்ட அசுர வேகத்துல ரீச்சாயிக்கினு இருக்கு. கோயில் ரூட்டுல பஸ்சும் அதிகரிச்சிட்டு வசூலும் அமோகம். இந்த மேட்டர சொல்ற நானு சத்தியமா விரும்பி இதுவர எந்த கோயில் வாசல்லயும் காலடி எடுத்து வெச்சதில்லீன்க்னா. டவுசர் போட்ட வயசுல ஒருதாட்டி மொட்ட போட்டு விட்டதோட சரி. நானு மனசுக்குல்லாரையே ஆத்தாளுக்கு கோயில கட்டி கேரகப்பிரவேசம், கும்பாபிஷேம்லாம் நடத்துற கேசு. சரி மேட்டருக்கு வந்துர்றேன். இன்னிக்கி எல்லாரும் யோகா, யோக சாதன பழகுறாங்க. சந்தோசந்தேன். பொதுவா கேது வந்து மணி (நம்ம மணி இல்லேங்க்னா), மன்தெரம், யோகம், தியானம், யாத்தர, புனித பயணம், சாது, சந்நியாசி யோகி…………..இப்டி மென்ஷன் பண்றார். இப்ப நம்ம போன சென்மத்துல உள்ள கருமன்கல கேப்சர் பண்ணி வெச்சிருக்குற சனிபகவானும் கேதுவும் கோணத்துல (ஒன்னஞ்சி ஒம்போது) பாத்தாக்க பார்ட்டிக்காரன் போன சென்மத்துலையே யோக சாதனைல எறங்கி வுட்ட கொற தொட்ட கொற இந்த பெறவிளையும் தொடருவாறு. எந்த மாறி ட்ரெயினிங் எடுத்திருக்காங்கன்னு இந்த பெறவில செக் பண்ணிரலாம். அதாவ்து குருவுக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட சூரியன் செந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் ராஜ யோகி. அது மாறி குருவுக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட செவ்வா சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் ஹட யோகி. அதே மாறி சனிக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட செவ்வா சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் ஹடயோகி. குருவுக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட சந்திரன் சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் பக்தி யோகி. சனிக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட புதன் சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் ஞா யோகி. சனிக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட சந்திரன் சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் சகஜ யோகி அதாவ்து பார்ட்டிக்காரன் குண்டலினி யோகம் செய்வாரு. அதே மாறி சனிக்கு கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட சுக்கிரன் சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் சகஜ யோகி. சனிக்கி கோணத்துலையோ இல்லாங்காட்டி ரெண்டு ஆறு பத்துலையோ கேது கூட சனி சேந்துருந்தாலோ, பாத்தாலோ பார்ட்டிக்காரன் கர்ம யோகி. ……………இன்னாங்கடா மர்மயோகிய காணும்னு தேடாதீங்கோ. மர்மயோகி(!) நம்ம கமலஹாசன்னு ஒங்களுக்கு தெரியும்தானே.

   S Murugesan said:
   June 15, 2011 at 7:47 pm

   பாண்டி !
   விளக்கம்லாம் ஓகே. பாரா பிரிச்சு விடலாம்ல. கண்ணு வலிக்குதப்பு.

    டவுசர் பாண்டி said:
    June 16, 2011 at 1:14 am

    சாரி நைனா, எதோ ஒரு வேகத்துல படார்னு பூந்துட்டு.

  வணக்கம் முருகேசன் சார்,

  தலை இந்த பதிவுக்கு பின் ஊட்டமிடுவதா ?
  நமது தோழர்களின் பின் ஊட்டத்திற்கு பின் ஊட்டமிடுவதா ?

  அவ்வளவு அருமையான பின் ஊட்டங்கள்..
  இங்கதான் தலை நீங்க நிக்கறீக..

  வாழ்த்துக்கள்..

   S Murugesan said:
   June 15, 2011 at 7:26 pm

   ஜா.ரா !
   என்னை நிக்க வைக்கிறதே அந்த தோழர்கள் தேன்.. (இதில் நீங்களும் உண்டு)

  டவுசர் பாண்டி said:
  June 16, 2011 at 1:12 am

  இன்னா நைனா! நீ வர வர சரியிலையே. எதோ ஒன்னு தேஞ்சி கட்டெறும்பு ஆன கத மாறி இருக்கப்பா. மிந்தில்லாம் காலங்காத்தாலேயே சூடா பதிவு இருக்கும். இப்ப வர வர என்னடான்னா கட லேட்டாவே தொரக்குதப்பா. இப்டிருந்தா யாவாரம் எப்டி பாக்குறது.

   S Murugesan said:
   June 16, 2011 at 5:46 am

   பாண்டி!
   கிரகணம் முடிஞ்சுருச்சுல்ல. இனி நம்ம மைண்ட் ஃபார்மெட் அடிச்ச டிஸ்க் மாதிரி தேன். மேலும் ஸ்ரீராமன் சிக்னல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. ஊதித்தள்ளிருவம்ல.

   ஜெய் ஸ்ரீராம்!

  டவுசர் பாண்டி said:
  June 16, 2011 at 3:34 am

  நான் இந்நிலருந்து ஒரு வாரத்துக்கு எளவு மேட்டர எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டன். எனுக்கு தட்சணாமூர்த்தி தாத்தா மேல கோவம். கருமாதிக்கி நாள் குறிச்சா அந்த மன்சன் இன்னாடான்னா கண்ணாலத்துக்கு போய்க்கினு இருக்காரு. அது போவ தமிழ்நாட்டுல ஒரு அரசியல்வாதி மரணம்னு சொன்னா சனங்களோட மைண்டு கபால்னு இவர் மேல பாயுது. காரணம் போற ஸ்டேஜுல இப்போதைக்கி இவ்ருதானே கீறாரு. சனங்க இப்பிடி தின்க் பண்ணிக்கினுருக்கும்போது, தாத்தா இன்னாடான்னா உடன்பிறப்புகளுக்கு மலர் வளையம் வெச்சிக்கினுகீறாரு. சரி நல்லாருக்கட்டும். குறு பார்வையும் இல்ல. பொரவேப்டி இப்டிலாம் நடக்கு. சரி நமக்கெதுக்கு வம்பு.

  இந்த எளவு மேட்டரு எப்டி லின்காவுதுன்னா இப்ப ஒரு பன்னெண்டு ஓட்டு வீடு இருக்குன்னு வெச்சிக்குவோம். நாம டாப்லாருந்து அந்த வூடுகள வாச் பண்ணிக்கினு இருக்கோம்னு வைங்க. அந்த வூட்டாண்ட நல்லவங்களும் கெட்டவங்களும் அல்லது நல்லவங்களும் நல்லவங்களும், கெட்டவங்களும் கெட்டவங்களும் மாறி மாறி பூந்துக்கினு இருக்காங்கன்னு வெச்சிக்குவோம். நாம மேலருந்து வாசச் பண்ணாலே தெரியும். ஆஹா இந்த வூட்டுல நல்லது அல்லது பொல்லாதது நடக்கப்போவுதுன்னு கெஸ் பண்ணிக்கினு பொறவு அந்த வூட்ட (அந்நியன் படத்துல டாப்லாருந்து ஜூம் பன்னுவான்கல்லா அதுமாரி) ஜூம் பண்ணுங்க. அந்த வூடு எந்த எந்த நாட்ட குறிக்கி, எந்த பிளேச எந்த ஏரியாவ………. இப்டியே போயி கடைசில பிரசன்னம் போட்டாக்க மேட்டர் பளார்னு டிஸ்ப்ளே ஆவும். நம்ம கெஸ்ஸிங் கரீட்டான்னு செக் பண்ண நைட்டு தூங்குறதுக்கு மிந்தி ரெண்டு மன்நேரம் தியானம் பண்ணி உல் மனசுட்ட “அந்த பார்ட்டி ஆருன்னு கேட்டு” ஒரு கோரிக்க வைங்க. ஒங்களோட வில்பவர பொறுத்து மறுநாளோ இல்லாங்காட்டி அந்த வாரத்துக்குல்லாரையோ வெட கெடைக்கும்.

  இன்னொரு சீக்ரெட் மேட்டர்! காத கிட்டக்க கொண்டாந்தாதேன் சொல்லுவேன். நம்ம நைனா ஒரு அஸ்ட்ரோ+ரைட்டர் மட்டும் இல்லீன்க்னா. ஒரு அரசியல்வாதியும் கூட. இன்னாப்பா நம்ம காதுலையே மல்லிப்பூ சுத்துறேன்னு சொல்றீங்களா? நமக்கு ஓட்டுரிமதேன் இல்ல. வாக்குரிமயாவது கெடச்சிசே.

   S Murugesan said:
   June 16, 2011 at 5:45 am

   வாங்க பாண்டி,
   எட்டுங்கறது மரணத்தை மட்டும் காட்டறதில்லை – பெரு நஷ்டம் -சிறை – உறவுகளின் பிரிவு – பழி -மரணதுக்கம் எல்லாவற்றையும் காட்டுகிறது.

   எட்டு கெட்டா செத்துத்தான் தீரனும்னு ரூல் இல்லே. சோஷியலா சாகலாம், பொலிட்டிக்கலா சாகலாம், சைக்கலாஜிக்கலா சாகலாம் ,எக்கனாமிக்கலா சாகலாம்

   சாகவும் கொஞ்சம் சக்தி தேவைப்படுது. அது குறிப்பிட்ட வயசுக்கு அப்பாறம் ஃபணாலாயிருது.. (ஓஷோ)

    டவுசர் பாண்டி said:
    June 17, 2011 at 1:44 am

    இன்னா நைனா, எட்டாம் ஊட்ட வெச்சி எட்டு போட்டுக்கினுக்கிற லோக்கல் சோசியக்காரனா பீல் பண்ணிட்டியேப்பா. மேற்படி சமாச்சாரத்துல மஸ்தா தில்லாலங்கடி வேலல்லாம் கீது மாமு. சாய்பாபாவுக்கு அல்லாரும் தொண்ணூறு நூறுன்னு சொல்லிக்கினு இருக்கும்போது, ஏப்ரல் ஒப்பெநிங்க்லையே புட்டபர்த்தில மேட்டர ப்ளாஸ்ட் பண்ணி பாபாவுக்கு கவுன்ட் டவுன் குடுத்த தில்லுதொர நாம. கடக லக்ன பார்ட்டிகல்லாம் (நம்மூர் தாத்தாவ சொல்றேன்) தூசுமா.

  டவுசர் பாண்டி said:
  June 16, 2011 at 3:50 am

  காந்தி சுடப்பட்டே மரணமாவார் என்பதை ஜோதிடக்கலை முன்னக்கட்டியே கூறியுள்ளது. இந்த மேட்டர் பத்தி இந்தியாவுக்கு வெளிநாட்டு தூதரா இருந்தா ஜான் கென்னெத் எழுதுன “இந்தியன் ஆச்ற்றாலாஜி அன் பால்மிச்ற்றி” இந்த புச்தவத்துல எளிதிருக்கார். அது சரி. துப்பாக்கி சூட்டினால் காந்தி மரணமடைவார்னு சொன்னது ஆருநா திருத்தணி முருகன் கோயில் பக்கத்துல இருந்த சோசியர். அவரு பேரும் காந்தி சோசியர்னு வெச்சிட்டாங்க. அவரு இப்பம் இல்ல.

  டவுசர் பாண்டி said:
  June 16, 2011 at 3:59 am

  முருகேசன் சாப் இன்னிக்கி பதிவு போடலன்னா ஜெகன் மோகினி அண்ணன் தலைமைல உண்ணா வெரதம் இருந்துர வேண்டியதுதேன்.

  swami said:
  June 16, 2011 at 7:39 am

  மந்திரம் வேண்டாம், மனம் ஒடுங்கி சகலரும் நன்மை பெற பிரார்த்தனை செய்வோம். அருமையான பதில் அண்ணா. உங்க எண்ணங்கள் உயர்வானதா இருக்கு.நீங்க நிறைய எழுதணும். நல்லா இருக்கணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s