இன்னொரு உலகம்

Posted on

ஒருத்தன் மாடி கைப்பிடி சுவர்ல உட்கார்ந்துக்கிட்டு கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்கிறேன்னு அடம் பிடிச்சுக்கிட்டு இருப்பான். சனம் “அவன் குதிப்பானா? குதிகமாட்டானான்னுட்டு பந்தயம் கட்டிக்கிட்டிருப்பாய்ங்க.
வடிவேலு தான் அய்யோ பாவம்னுட்டு மேல போயி காப்பாத்த ட்ரை பண்ணுவாரு.

இந்த காட்சியில ஒரு அரிய ரகசியம் ஒளிஞ்சிருக்கு. தற்கொலை பண்ணிக்கிறேங்கறானே அந்த ரோல் நம்முடையது.

குதிப்பான், குதிக்கமாட்டான்னுட்டு பந்தயம் கட்டிக்கிறாங்களே அதான் ஆவிகள் உலகம். அய்யோ பாவம்னுட்டு பதறி ஓடிவர்ர வடிவேலுவோட ரோல் தான் கடவுளோடது.

இந்த ஆவிகளை ஆடி முடிச்சு ரிட்டையராயிட்ட ப்ளேயர்ஸோட ஒப்பிடலாம். அவிக கோச் ஆகி ட்ரெய்ன் பண்றாப்ல, வர்ணனையாளராகி ஆட்டத்தை வர்ணிக்கிறாப்ல, விமர்சகர்களாகி விமர்சிக்கிறாப்ல இந்த ஆவிகள் விளையாடுது.

இந்த ஆவிகள் தங்களோட கடந்த கால வாழ்க்கைய இப்பம் வாழ்ந்துட்டிருக்கிற மனிதர்களை நெருங்கி கவனிக்குதுங்க.

உ.ம் குடிச்சே குடல் வெந்து செத்த குடிகாரனோட ஆவி குடிக்க ஆரம்பிக்கிறவனை நெருங்குது. மேலும் மேலும் குடிக்க தூண்டுது.

நாம நம்மை யாரும் கவனிக்கலைன்னு என்னமோ பண்ணிக்கிட்டிருக்கோம். ஆனால் ஒரு ஊசி குத்தும் இடத்துல பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்கள் இருந்துக்கிட்டு நம்மை வாட்ச் பண்ணுது.

அதுகளுக்கு ஆர்வமுள்ள துறையில நாம இறங்கும்போது நம்மை என்கரேஜ் பண்ணுது.

நம் சிந்தனைகளுக்கு நாமதான் ஹோல்சேல் பேட்டண்ட் ரைட் ஹோல்டருன்னு நாம நினைக்கிறோம். ஆனால் இந்த சிந்தனைகளுக்கு மூலம் நம் கடந்த பிறவிகளிலான அனுபவங்களா இருக்கலாம். அல்லது நம்மை சுத்தி இருக்கிற ஆவிகளோடதா இருக்கலாம்.

நமக்கு நடக்கிற விஷயங்கள் எல்லாம் ஃப்ரெஷ். இந்த படைப்புலயே மொதல் மொதலா நமக்கு நடக்குதுன்னு நாம நினைக்கறோம். ஆனால் இது தவறு.

கடந்த பிறவிகளில் நமக்கு நடந்த அதே விஷயங்கள் தான் இந்த பிறவியிலும் நடக்குது. கடந்த பிறவியில் எந்த ஜங்சன் பாய்ண்ட்ல நாம முக்தி மார்கத்திலிருந்து டைவர்ட் ஆனோமோ அந்த ஜங்சன் பாய்ண்ட் வரைக்கும் மறுபடி மறுபடி வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஒவ்வொரு பிறவியிலும் சின்ன சின்ன முன்னேற்றம். மறுபடி அடுத்த ஜங்சன் பாய்ண்ட்ல டைவர்ஷன். இப்படித்தான் நம்ம வாழ்க்கை போயிட்டிருக்கு. பில்லா படத்தை மறுபடி எடுத்தப்பயும் ரஜினிகாந்தே நடிச்ச மாதிரி ஒரு காலத்துல (பிறவியில்) நாம வாழ்ந்த வாழ்க்கைய மறுபடி வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இது ஒரு கோணம்.

இன்னொரு கோணத்துல பார்த்தா கடவுள் கிட்டே கோடானு கோடி ஸ்க்ரீன் ப்ளேஸ் இருக்கும். நமக்கெல்லாம் தலா ஒன்னு கொடுத்து வாழ் சொல்லியிருக்காருனு நான் நினைக்கலே.

மொத்தமா ஒரு 48 விதமான வாழ்க்கைகளுக்கான ஸ்க்ரீன் ப்ளேஸை டைப் பண்ணி கோடானு கோடி காப்பீஸ் ப்ரிண்ட் அவுட்ஸ் எடுத்து மொத்தத்தயும் பேப்பர் ஸ்க்ராப் கணக்கா துண்டு துண்டா வெட்டி எல்லாத்தையும் ஒரு கிரவுண்ட்ல போட்டு கலக்கி ஒவ்வொரு துண்டா பொறுக்கி (ஈவனா இல்லாம) ஒரு ஸ்க்ரீன் ப்ளேவை ரெடி பண்ணா எப்படி இருக்குமோ அப்படித்தான் நம்ம வாழ்க்கைங்கற ஸ்க்ரீன் ப்ளேவும் இருக்கு.

இந்த அளவுக்கு ஜம்பிள் பண்ணாலும் ஆங்காங்கே ஒற்றுமைகள் தெரிவதை பார்க்கலாம். (டவுசர் பாண்டி கூட ” நைனா வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் நமக்கும் சிக்குனு பொருந்துது”னு சொன்னதை இங்கே ஞா படுத்திக்கங்க.

எல்லாம் சரி முருகேசன்.. இந்த மேட்டரை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யறதுனு கேப்பிக சொல்றேன்.

1. நல்லதையே நினைங்க – நல்லதையே செய்ங்க . அப்போ இதே ரேஞ்சுல வாழ்ந்து முடித்த ஆன்மாக்கள் வழி நடத்தும் .உதவும்.

2.எதை நினைச்சாலும் இதை நான் தான் நினைக்கிறேன்னு ஈகோ ஃபீல் ஆகாதிங்க – ஆரோ விளையாடறாப்ல இருக்கு – இதெல்லாம் எங்கன போயி முடியும்னு சந்தேகப்பட்டு ரோசனை பண்ணுங்க

3. எது நடந்தாலும் ங்கொய்யால எனக்கே ஏன் இது போல நடக்குதுனு சலிச்சுக்காதிங்க – உங்களுக்கு இது பல முறை நடந்திருக்கு ( கடந்த பிறவிகளில்) – இந்த தாட்டியாவது டிஃப்ரண்டா செய்யனும்னு நினைங்க

4. உங்களுக்கு நடக்கிற சம்பவங்கள்ள உங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதெல்லாம் உங்களை முக்தி மார்கத்துலருந்து டைவர்ட் பண்ணத்தான் நடக்குதுனு புரிஞ்சிக்கங்க.

5.உங்களுக்கு நடக்கற சம்பங்கள்ள உங்களுக்கு எதெலாம் கெட்டதுன்னு படுதோ அதெல்லாம் உங்களை முக்தி மார்கத்துக்கு பை பாஸ் பண்ற நிகழ்ச்சின்னு புரிஞ்சிக்கங்க

6.கருப்பையில உள்ள குழந்தை தலை கீழா திரும்பனும் – வெளியேறும் வழி குறுகலா இருந்தாலும் – தலை நுழைய மறுத்தாலும் ட்ரை பண்ணி நுழைஞ்சு தான் ஆகனும். அதை விட்டுட்டு ஈஸியா இருக்குன்னு காலை விட்டுட்டா மூச்சு திணறி சாகவேண்டியதுதான்.

7.எதுவுமே முதல் தடவையா..உங்களுக்கே உங்களுக்குன்னு நடந்தாதான் அதிகமான துக்கம் ஏற்படும் – உங்களுக்கே பல தடவை நடந்திருக்கு – உங்களுக்கு நடக்கிற இதே க்ஷணம் பல்லாயிரம் பேருக்கு நடக்குதுனு நினைச்சுப்பாருங்க. வாட் எ சில்லி திங்னு தோணும்.

இன்னாபா ரெம்ப கொயப்பமா கீதா? இன்னா பண்றது நைனா என்னால முடிஞ்ச மட்டும் டைல்யூட் பண்ணித்தான் எழுதியிருக்கேன். இன்னொரு தபா படிச்சு புரிஞ்சிக்க பாருங்க..

உடு ஜூட்.

Advertisements

14 thoughts on “இன்னொரு உலகம்

  sugumarje said:
  June 14, 2011 at 10:45 am

  //4. உங்களுக்கு நடக்கிற சம்பவங்கள்ள உங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதெல்லாம் உங்களை முக்தி மார்கத்துலருந்து டைவர்ட் பண்ணத்தான் நடக்குதுனு புரிஞ்சிக்கங்க.

  5.உங்களுக்கு நடக்கற சம்பங்கள்ள உங்களுக்கு எதெலாம் கெட்டதுன்னு படுதோ அதெல்லாம் உங்களை முக்தி மார்கத்துக்கு பை பாஸ் பண்ற நிகழ்ச்சின்னு புரிஞ்சிக்கங்க//

  அய்யா… அற்புதமான குறிப்பீடுகள்… நானும் யோசிச்சிருக்கேன்…

  ஹ்ம்ம்ம்… யாருக்கு புரியுதோ? பார்க்கலாம்

  vinoth said:
  June 14, 2011 at 11:00 am

  நன்றி தல.. சரியான நேரத்தில் சரியான பதிவு

  superrsyed said:
  June 14, 2011 at 11:06 am

  \மொத்தமா ஒரு 48 விதமான வாழ்க்கைகளுக்கான ஸ்க்ரீன் ப்ளேஸை டைப் பண்ணி கோடானு கோடி காப்பீஸ் ப்ரிண்ட் அவுட்ஸ் எடுத்து மொத்தத்தயும் பேப்பர் ஸ்க்ராப் கணக்கா துண்டு துண்டா வெட்டி எல்லாத்தையும் ஒரு கிரவுண்ட்ல போட்டு கலக்கி ஒவ்வொரு துண்டா பொறுக்கி (ஈவனா இல்லாம) ஒரு ஸ்க்ரீன் ப்ளேவை ரெடி பண்ணா எப்படி இருக்குமோ அப்படித்தான் நம்ம வாழ்க்கைங்கற ஸ்க்ரீன் ப்ளேவும் இருக்கு./////////

  நம்ம தல ரொம்ப டீப்பா படைப்பின் ரகஸியத்த ஆராய்ச்சி பன்னி தின்க் பன்னி எழுதி இருக்கார் ஜாதகம் பலமா இல்லாதவுஙக‌ல்லாம் நழுவிடுங்கோ
  இல்லாட்டி கன்ப்யூஸ் ஆயீ பேஜார் ஆயிடும்

  சொல்ரதெல்லாம் சரியாதான் இருக்கு ஆனா ஜாதகத்துல சந்த்திரன் வீக்கா இருக்குர பார்ட்டிங்க இதெல்லாம் படிச்சு புரிஞ்சுக்குவாங்கலானு தெரியல‌

  vinoth said:
  June 14, 2011 at 11:09 am

  சந்திர கிரணத்தினாலய பயன் என்ன தல…
  இந்தியா காங்கிரசு, சோனியா இவுகளுக்கெல்லாம் நல்லதில்லையாமெ..

   சிவ யோகி said:
   June 14, 2011 at 11:58 am

   //இந்தியா காங்கிரசு, சோனியா இவுகளுக்கெல்லாம் நல்லதில்லையாமெ.//

   எதுவுமே ஏற்கனவே நல்லா இல்லையே 🙂

  சிவ யோகி said:
  June 14, 2011 at 11:42 am

  இந்த பதிவு புரிஞ்சாலும் புரியலினாலும் இதை படிச்சி ரிலாக்ஸ்
  பண்ணிகோங்கா 🙂
  http://www.livingextra.com/2011/06/lovely-tamil-jokes.html

  Sankar Gurusamy said:
  June 14, 2011 at 11:58 am

  //1. நல்லதையே நினைங்க – நல்லதையே செய்ங்க . அப்போ இதே ரேஞ்சுல வாழ்ந்து முடித்த ஆன்மாக்கள் வழி நடத்தும் .உதவும்.//

  இது முற்றிலும் உண்மை. இப்படி இருந்தால் தீயவை நடந்தாலும் தீமையால் ஏற்படும் பாதிப்புகள் சற்று குறைவாக இருக்கும்.

  ///2.எதை நினைச்சாலும் இதை நான் தான் நினைக்கிறேன்னு ஈகோ ஃபீல் ஆகாதிங்க – ஆரோ விளையாடறாப்ல இருக்கு – இதெல்லாம் எங்கன போயி முடியும்னு சந்தேகப்பட்டு ரோசனை பண்ணுங்க///

  எல்லாம் அவன் செயல்.. நம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியவற்றை செம்மையாக செயல்படுத்தி மற்றவற்றையெல்லாம் கடவுளிடம் விட்டு விட்டால், வாழ்வு சரியான திசையில் பயணிக்கும்…

  அருமையான ஆழ்ந்த கருத்துகள். பகிர்வுக்கு நன்றி…

  http://anubhudhi.blogspot.com/

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 1:07 pm

  சூப்பர் நைனா. அருமையான கட்டுரை.

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 3:18 pm

  நைனா ஒரு டவுட்டு,
  ஒராளுக்கு கஷ்டம் வரும் அது மாறி இன்னொராளுக்கு கஷ்டம் வரும். வூட்டுக்கு வூடு வாசப்படி. சரி.

  ஆனா ஒருத்தர் லைப்புல செல விசியம் மேட்சாகுறது இன்னா கணக்கு? புரியலியே. அந்த ரெண்டு பார்ட்டியும் கிட்டத்தட்ட ரிலேசனும் கெடயாது. பட் எப்டி பிட்டாவுது?

  swami said:
  June 15, 2011 at 3:02 am

  அட்டகாசமான பதிவு.

  டவுசர் பாண்டி said:
  June 15, 2011 at 3:49 am

  அரசியல் தலைகளுக்கு அன்பான எச்+அறிக்கை

  கொச்சாரத்துல சூரியனும் ராகுவும் வர்ற ஆடில மீட் பண்ணி ஒரு தலைவர்களுக்கு ஆட்டம் புக் பண்ணிருக்காங்க. கோணத்துல மீட் பண்ணச்ச……… சரி வாணாம்……..ஸ்ட்ரேயிட்டா மேட்டருக்கு வர்றேன்…….. இன்னான்னா வர்ற ஆடி மாஸ்தைல ஒங்களோட பெருந்தலைங்கள ………….நல்லா பாத்துக்கோங்க……… சாரி பார் பிட் நோட்டிஸ். பட் ப்ளீஸ் நோட் திஸ்

   டவுசர் பாண்டி said:
   June 15, 2011 at 3:51 am

   கடகம் டமில்நாடுன்னு தெரியுமில்ல. சூரியன் கடகத்த கடக்கச்சில…… சங்கே முழங்கு.

    Ismail said:
    June 15, 2011 at 4:22 am

    வேணாம் விட்டுடுங்க அழுதுருவன். ஹூஊஊஊஊ
    அப்பப்ப வந்து இப்படி குடுகுடுப்பைக்காரன் மாதிரி சொல்லி எங்கள படுத்துறீங்க. ஒரு பதிவா போடுங்களேன்.

    Mani said:
    June 15, 2011 at 5:51 am

    இஸ்மாயில் டவுசரு ஒண்ணும் விவரம் தெரியாத புள்ளையில்லை. அவரு பதிவு போட்டா அவருடைய இமெயில் ஐ.டி. நம்ம தலைக்கு தெரிஞ்சுடுமாம் அதான் டவுசரு நம்ம தலைக்கே அல்வா குடுக்குறாரு. பார்ப்போம் டவுசரு எத்தனை நாளைக்குதான் நமக்கெல்லாம் அல்வா குடுப்பாருன்னு. என்னைக்கா இருந்தாலும் பூனைக்குட்டி வெளியில் வந்துதானே ஆகனும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s