சுகுமார்ஜியின் பதில்கள்- பகுதி 1

Posted on

கேள்விகள் – சித்தூர் முருகேசன்

தங்களின் கேள்விகளுக்கு நன்றி அய்யா!
1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

நான்கு சுவர்களுக்குள் நான் ஒரு நினைத்ததை சாதிக்கும் திமிர் பிடித்தவன். சுவர்களுக்கு வெளியே நான் உலகை கற்றுக்கொள்ளும் மாணவன். ஏன்னென்றால் என்க்குத்தெரியாதது இன்னுமிருக்கிறது 😦

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

சுகுமார்ரா? ரொம்ப அமைதியான பையனாச்சே! என்று எல்லொரையும் இன்னும் சொல்லவைத்துக் கொண்டிருப்பதே சான்று… என் தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள், என் அத்தை இவர்களே என்னை வடிவமைத்தவர்கள்… மனதை வடித்தால் அது தானே நம்முடைய குணம்.
உள்ளே இருக்கும் எரிமலை கனல், என் கைகளில் கலையாக வந்து கொண்டிருக்கிறது 🙂

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

Elephant என்று நானாக புரிந்து எழுத ஆரம்பித்தது என் மூன்றாம் வகுப்பில்… ஓ. இப்படித்தான் இங்கிலீசா என்று ஐந்தாம் வகுப்பிலேயே (!?) ஆங்கில வார்த்தைகளை உருவாக்கத் தொடங்கியாயிற்று. என்ஜாய் பண்ணாம இதெல்லாம் ஆகாது. படிக்க என்பதை விட கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தாலே போதுமானது.

ஆக… மாணவர்களே… நான் கூட இப்பவும் மாணவன் தான்ப்பா… நம்பர் ஒன்னு, நம்பர் ரெண்டு அப்படின்னா குளியலறையோ, கழிப்பறையோ போங்க… படிப்பிலே வேணாம். ஜஸ்ட் பாஸ் பண்ணிடுங்க… படிச்சாத்தான் (அட! படி+ சாத்தான்) அறிவு வளரும்னு சொன்னா கண்டுக்காதிங்க… பல முன்னாள் அறிவு கொழுந்து எல்லாம் மூலம் பிடிச்சு உட்கார்ந்த இடத்திலேயே இருக்காங்க… நீங்க துள்ளி விளையாடுங்க… உலகம் புத்தகங்களில் இல்லை.

முன்னாள் நம்பர் ஒன்னு, நம்பர் ரெண்டு இப்ப என்ன பண்றாங்கன்னு யாராச்சும் சர்வே பண்ணுங்கப்பா!

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

ஆமா, ரொம்ப ஹெல்ப் ஃபுல்… அந்த புத்தங்களையெல்லாம் கடையில் போட்டு காசு வாங்கி சில்வர் ஸ்கிரீன் பார்க்க போனோம்.

ஆர்வம், ஆர்வம், ஆர்வம் மட்டுமே… இது கல்விக்கு மேலே கற்றுத்தரும். ஆர்வம் இஸ் த சீக்ரட் ஆஃப் சுகுமார்ஜி எனர்ஜி 🙂

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

கொய்யாலே, எங்களை எங்கே அறிவாளி ஆக்கினாங்க இந்த மனித வளம் மற்றும் கல்வித்துறைக்காரங்க… எங்களை விடவும் இவன் அறிவாளி ஆகிடுவான் என்று பொறாமை… எல்லாமே நாங்களே தேடிப்போய் கத்துகிட்டதுதான்.

இப்ப மட்டும் என்னவாம் ஆறாம் வகுப்பு மூளைக்கு மல்டிமீடியா பாடம் தந்து இருக்கிற கொஞ்ச அறிவையும் அழிச்சிடுறாங்க.

என் கருத்து என்னவென்றால் குழந்தைகளை குழந்தைகளா இருக்கவிட்டத்தான், இந்த உலகம் தானாக அழியும்.

குரு இல்லையேல் அறிவுமில்லை. எனக்கு ஏகப்பட்ட குரு… ஒவ்வொருத்தர் கால்களிலேயும் விழ ஆரம்பிச்சா நான் படுத்தேதான் இருக்கனும்.

தர்க்கம் என்கிற ஒரு பார்முலாக்கு விடை தெரியுமா? தெரிந்தால் உலகம் உன் கையில்…

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

என் தந்தை உயிரற்ற சடலமாக கிடந்த அந்த இரவிலிருந்து…
இரண்டாயிடத்து ஐந்திலிருந்து உடு ஜூட் தான்…முன்னெல்லாம் என் மொபைல் நம்பரை வலையில் பதிக்க மிகுந்த பயமாக இருக்கும்… இப்பொழுது +91 9442783450 அப்படின்னு கூகுள் ல அடிச்சிபாருங்க தெரியும்… நான் எப்பொழுதோ ஒரு கடந்த காலத்திலேயே கடினப்பட்டு, தழும்புகளோடும், காயங்களோடும் ஒரு மலையில் ஏறி உச்சியின் மேல் நின்று கொண்டிருக்கிறேன்… ஒரு சிலரைத்தவிர யாரும் தலைதூக்கி பார்ப்பதில்லை… ஒருவேளை தலைக்கனம் அதிகமிருக்குமோ?அதுபோல எனக்கு சொல்லித்தர ஆர்வமிருக்கும் அளவிற்கு அதை கற்றுக்கொள்ள யாருமில்லை… அதேவேளையில் சும்மா தருவதற்கு எங்க தாத்தா, இந்த தாத்தா மாதிரி இல்லை.

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

இந்த சமூகம்தான். பேச்சு, செயல், கதைகள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள்… ஆங்கில படங்கள் அதிகம் பார்த்தா (அய்யா, அந்த மாதிரி…) செக்ஸை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். கொய்யாலே… வேற என்னடா இருக்கு அதிலே அப்படின்னு தோன்றும் அல்லது தோன்ற வேண்டும்.

ஆனால் இந்த சமூகம் எல்லாம் பகலில் பூரா தள்ளி வைப்பங்க, ராத்திரியில் கட்டிபிடிச்சுக்குவாங்க, அது அடுத்தவன் சம்சாரமாவோ, சமாச்சாரமாவோ இருக்கும்.

இந்த இரட்டைவேச சமூகத்தில் நானும் வாழவேண்டி இருப்பது குறித்து வருந்துகிறேன். எதுவுமே தெரியாது வளர்த்து கல்யாணம் செய்து வைத்தால்… இப்பவாவது இண்டெர்நெட் இருக்கு, மனசை தொட்டு, ஆமா மனசுதான்… பதில் சொல்லுங்கய்யா? எது எங்க இருக்குன்னு தேடலை?

கடவுள் கிட்ட செக்ஸை படிக்கிறத விட பிசாசு கிட்ட செக்ஸை பாடமா படிகிறது நல்லதுன்னு இந்த ச்மூகம் இன்னமும் நம்புகிறதே…ஹ்ம்ம்… நான் என்னத்தைச் சொல்ல…

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

அன் எம்ளாய்மெண்ட்டா இருக்க வச்சிருக்காங்க… உனக்கேற்ற வேலை இங்கே இல்லை அப்படின்னு சொல்லி…

மனம் தளராமல், அடுத்தவனை எண்ணி தாழ்வுமனப்பான்மை இல்லாது, கிடைத்தவேலையை செய்யப்பழகுவது ஏற்றம் தரும்.

உனக்கேற்ற வேலை இங்கே இல்லை என்று அவர்கள் சொல்லலாம். எனக்கேற்ற வேலை இங்கே இல்லை என்று ஒரு பொழுதும் சொல்லாதே.

வேலை நிறைய இருக்கிறது… உனக்கும் எனக்கும் தான் தகுதியில்லை.

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.)

நிஜமான கன்றுக்குட்டியைகூட காதலிச்சதில்லை… அது குறித்த கவலையுமில்லை… காதலிக்கிறதுகுள்ளே எனக்கு 30 வயசாச்சு, கல்யாணமும் ஆச்சு. ஆனா காதலுக்கு அனுமாரான அனுபவம் நிறைய இருக்கு. அதெல்லாம் கதைகளாக மாறி இன்னமும் என் பெட்டியில் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் சொல்லி உங்களுக்கு தண்டனை தரமாட்டேன், நம்புங்கள்.

சில்மிஷமெல்லாம் இல்லை… நான் காகிதங்களில் 12 வயதிலேயே ஓரிகாமி செய்வதுண்டு… பெண் பிள்ளைகளை கவர அதெல்லாம் செய்திருக்கிறேன்… ஹ்ம்ம், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?!

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கவேண்டும் என்று நினைக்கும் பொழுதுதான் பிரச்சனை அதிகமாகிறது. உன்னை நம்பி நானில்லை என்று ஒரு பெண் சொன்னால் பயப்பட வேண்டியது ஒரு ஆண்தான்.

20 வதுக்கு அப்புறம், இந்தா இனி இவனோடயே எல்லாம் என்று பெண்னை ஒப்படைப்பது கொடுமையான செயல். புது இடம், புது பழக்க வழக்கங்கள் ஏற்றுக்கொளாமலிப்பதுவும், மாற்றாகசில பெண்கள், எனக்கு என் வீட்டில சுதந்திரம் இருக்கும், உங்க வீட்டில எதுவுமே இல்லை என்று பேச ஆரம்பித்து 25 வயதுக்கு மேல் மேல் ஆவதற்கு பையன் முயற்சித்து, பெற்றோரை தவித்து, தனியே அல்லல்பட்டு, எப்படா இவ ஒழிவா என்றும் நினைக்க ஆரம்பித்துவிடுகிறான்.

இதனால் தான் கமிட்டட் பேச்சலர்ஸ் அதிகமாகி விட்டார்கள்

சிவாஜி ரஜினி போல “வாங்க பழகலாம்” சரியானது தான். செக்ஸுக்காக மட்டும் பழகுவதும், சேர்ந்து வாழ்வதும் அவர்களை மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளையும், இந்த சமூகத்தையும் நிலை குலையச்செய்யும்…

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

மற்ற எல்லாவற்றிற்கும் பெண் வேணும், ஆனா குழந்தையாக மட்டும் வேண்டாம்… இது தான் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. திருமணத்திற்கு அதிக வரதட்சிணை கேட்பவனை…“மாப்பிளை உங்களாலே ஒரு மணி நேரம் திருப்தி படுத்த முடியுமா? நீ கேட்கிறத விட ஒரு மடங்கு எக்ஸ்ட்ரா தரேன்னு” கேட்டு, தனியறையில், தனித்து சோதனை செய்துவிட்டால் ரொமப நல்லதுன்னு நினைக்கிறேன்.

விடுங்க… பெண்கள் எண்ணிக்கையில் குறைந்தாலும், இயற்கையும் பெண் தன்மை கொண்டதால், அது பார்த்துக்கொள்ளும். முதலாக இந்த திருமண ச்ந்தையில் இருக்கிற கசடுகளை களைய வேண்டும்.

சக பெற்றோரும் காதலை ஏற்றுக்கொண்டு, அவர்களின் கண்காணிப்பிலேயே வாழ வகை செய்யவேண்டும். திருமணத்திற்கான செலவை மணமக்களின் பெயரில் வங்கியில் வைப்புநிதியாக வைக்கவேண்டும். வரதட்சிணை கூடவே கூடாது, மணமக்கள் இருவருமே வேலைக்கு செல்வதாக இருக்கவேண்டும், திருமணத்திற்குப்பிறகும்.
திருமணச்சந்தை மாற்றம் பெற்றால் இந்த பெண் சனத்தொகை நிலை கண்டிப்பாக மாறும்.

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

என் சமூகம் நன்றாக இருக்கிறது சில குறைகளை மட்டும் களைய வேண்டியுள்ளது. நீ ஒழுங்கா? என்று கண்ணாடியை பார்த்து கேட்பதாக் அமைந்துவிடும். எனவே மாற்றம் என்னிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது.

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

தன் பெயருக்குப்பின்னால் தன் படிப்பை எழுதும் காட்டுமிராண்டித்தனம் இல்லாதிருக்கவேண்டும். படிக்காதவன் படித்தவனை மதிக்கும் அளவிற்கு எதிராக படித்தவன் படிக்காதவனை இகழ்கிறான். கேவலமான இந்த கல்வி மனிதத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.

கல்வியிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த பத்துவருடத்தில் நல்ல சமூகம் இந்த உலகுக்கு கிடைக்கக்கூடும்.

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

பொறியாளர்களும், வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் உலகை மிரட்டுகிறார்கள், அரசியல் வாதிகளும், ஆட்சியாளர்களும், தலைவர்களும் பரிதாபப்பட வைக்கிறார்கள்.

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

எல்லோருக்கும் சாவு நிச்சயம்… அப்படினு சொன்னா 50 சதவீத நபர்கள் அப்படியா, இனி சரி செய்ய்யலாம்னு நினைப்பர்கள்.  மீத 50 சதவீத நபர்கள் அதனால் தான் இப்படி இருக்கிறேன் என்பார்கள்.

வெளிநாடுகளில் அரசாங்க கல்விக்கூடங்களே மிகச்சிறப்பாக அமைத்திருக்கிறது, இந்தியாவிலே அரசு சாராயக்கடை திறக்கிறது. அந்த தொழிலதிபர்களெல்லாம் கல்வித்தந்தை ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களைப்பற்றிய விபரமெல்லாம் அரசு பதிவு செய்து, மாதமொருமுறை கருத்துக்கள் கேட்க கூட்டங்கள் நடத்தி பொருளாதார மேம்பாடுக்கு ஏதாவது செய்யலாம்.

 

அடுத்த பதிவிலும் தொடரும்….

அன்பன் சுகுமார்ஜி

என்னைப்பற்றி அறிய சுகுமார்ஜி

என் மின்னஞ்சல்: sugumarje@gmail.com

மொபைல்:+91 9442783450

Advertisements

23 thoughts on “சுகுமார்ஜியின் பதில்கள்- பகுதி 1

  Sankar G said:
  June 13, 2011 at 9:15 am

  லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா இருக்கு…

  சுகுமார்ஜிக்கு வாழ்த்துக்கள்.

  http://anubhudhi.blogspot.com/

   sugumarje said:
   June 14, 2011 at 9:19 am

   வாழ்த்துகளுக்கு நன்றி சங்கர்ஜி

  S Murugesan said:
  June 13, 2011 at 9:43 am

  //என் கருத்து என்னவென்றால் குழந்தைகளை குழந்தைகளா இருக்கவிட்டத்தான், இந்த உலகம் தானாக அழியும்.//

  ஒரு வாசகம்னாலும் திருவாசகம்னா இதான். சூ..ஊஊஊஊஊஊஊஊஊ…..ப்பர்

   sugumarje said:
   June 14, 2011 at 9:20 am

   ஆகா… நன்றி…

  S Murugesan said:
  June 13, 2011 at 9:45 am

  //முன்னாள் நம்பர் ஒன்னு, நம்பர் ரெண்டு இப்ப என்ன பண்றாங்கன்னு யாராச்சும் சர்வே பண்ணுங்கப்பா!//
  நம்ம கொள்கையும் இதான்.

   sugumarje said:
   June 14, 2011 at 9:21 am

   இதை கட்டாயம் செய்தால் பள்ளிக்கொள்ளையை தடுத்து நிறுத்தலாம்…

  S Murugesan said:
  June 13, 2011 at 9:48 am

  //குரு இல்லையேல் அறிவுமில்லை. எனக்கு ஏகப்பட்ட குரு… ஒவ்வொருத்தர் கால்களிலேயும் விழ ஆரம்பிச்சா நான் படுத்தேதான் இருக்கனும்.//
  – இது உங்க வெர்சன்

  வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
  வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்
  -இது என் வெர்சன்

   sugumarje said:
   June 14, 2011 at 9:22 am

   உண்மை… அனுபவத்தில் உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள்

  S Murugesan said:
  June 13, 2011 at 9:53 am

  //கேவலமான இந்த கல்வி மனிதத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.//

  நெத்தியடி!

   sugumarje said:
   June 14, 2011 at 9:27 am

   இப்பொழுது யோசித்தா இந்தவரி திடீர்னு புகுந்து வந்து உட்கார்ந்து விட்டதோன்னு, மறுபடி சோதனை செய்து கொண்டேன்… ஆக… எழுதுனது நான் தான், ஆனா…

  Mani said:
  June 13, 2011 at 10:00 am

  சுகுமார்ஜி உங்கள் பதில்கள் அத்தனையும் அருமையாக உள்ளது. (ரூம் போட்டு யோசிப்பீங்களோ!)

  ம்ம்ம் நாங்களும் தான் பதில் எழுதினோம். நம்ம தலைகிட்ட கருத்து வாங்கறதுக்குள்ள கல்லில் நார் உறிச்சிடலாம் போல இருந்தது. ஆனா உங்கள் பதில் ஒவ்வொன்றுக்கும் நம்ம தலை ரொம்ம ரசிச்சி பதில் எழுதராரு (பதவுரை, விளக்கவுரை) இதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்ப்பா!

   S Murugesan said:
   June 13, 2011 at 11:01 am

   மணி சார்,
   ஆத்தா பார்த்துக்குவான்னுட்டு கண்டவுகளை களறிவிட்டுட்டு அவிக வைபரேஷன் எல்லாம் சகட்டு மேனிக்கு தாக்க டர்ராகி கிடக்கேன்.

   அதையும் மீறித்தான் காரியம் நடக்கு. நீங்க கேட்காட்டாலும் உங்க பதில்கள் மேல கமெண்ட் வந்திருக்கும்.

   என்ன ஒரு நா ரெண்டு நா லேட்டா..

   sugumarje said:
   June 14, 2011 at 9:29 am

   மணி… கொஞ்சம் நிதானித்து கேள்விகளை உள் வாங்கி பதில் கொடுத்தீர்களென்றால், தலையிடமிருந்து என்ன? தலைக்கு மேலிருந்தே பின்னூட்டம் தங்களுக்கு கிடைக்கும்.

    Mani said:
    June 14, 2011 at 10:14 am

    //கொஞ்சம் நிதானித்து கேள்விகளை உள் வாங்கி பதில் கொடுத்தீர்களென்றால்//

    சுகுமார்ஜி. நான் கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் என்று நினைத்து பதில்களை எழுதி தள்ளிவிட்டேன்.

    நீங்கள் 5 மதிப்பெண்களுக்கு விரிவாக அலசி பிரித்து மேய்ந்து விட்டீர்கள்.

  Mani said:
  June 13, 2011 at 4:03 pm

  சித்தூர்ஜி உங்களுக்கு chittoor.s.murugesan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இமெயில் அனுப்பியுள்ளேன். அதில் கமெண்டுகளை மின்னஞ்சலில் பெறும் settings பற்றி விளக்கி எழுதியிருக்கிறேன். பாருங்கள். உடனடியாக அதனை செயல்படுத்த முடிகிறதா என்று எனக்கு எழுதுங்களேன்.

  நன்றி.

   S Murugesan said:
   June 14, 2011 at 1:39 am

   மணி சார் !
   மிக்க நன்றி. உடனே செய்கிறேன்.

  krishnamoorthy said:
  June 14, 2011 at 8:15 am

  தலைவர் சுகுமார் அவர்களே !
  வணக்கம் .நம்மை பற்றி நாமே சொல்லும் சுகம் மிக சௌகர்யமான புதையல் சுகம் .
  உங்களுக்கு அது வச பட்டுவிட்டது .
  அருமையான வெளிப்பாடு.
  வரிகள் யார்க்கர் லென்த்தில் விழுகிறது .
  யோசிக்க இடம் தராத பார்முலா கார் வேகம் .

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

   sugumarje said:
   June 14, 2011 at 9:30 am

   என்னாது, தலைவரா? வேணாம்ப்பா…
   வாழ்த்துகளுக்கு நன்றி.. கிருஷ்ணமூர்த்தி

  சிவ யோகி said:
  June 14, 2011 at 8:25 am

  தாங்கள் கன்னி லக்கணமோ – புதன் உச்சமோ ? சும்மா தெரிஞ்சுகலாமேனு கேட்டேன் 🙂
  பதிலில் புதன் விளையாடுகிறது !!

   sugumarje said:
   June 14, 2011 at 9:32 am

   புதன் உச்சம் பெற்றிருக்கிறார்… சிவயோகி… பாராட்டுகளுக்கு நன்றி

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 1:18 pm

  சுகுமார்ஜியன்னே,

  அருமையா திங்க் பண்ணி எளிதிருக்கிறீங்க. செகண்ட் பார்ட்ட சட்டுன்னு போடுங்க. ஆர்வமா இருக்கிறோம்.

  இந்த சைட்டுல உள்ள மெம்பர் எல்லாருமே (என்னைத்தவிர) ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்னு அவுங்க எழுதுற பதில்களிருந்தே தெரியுது. ஆனா நான் கடந்து வந்த பாதைகள் முட்களும் சேறும் நிறைந்தது. அதை வெளிக்கொணர்ந்தால் சனங்களின் உமிழ் நீர் மழையில் நான் நனைய வேண்டி இருக்கும்என்ற அச்சத்தினால் என் கன்றாவிகளை பற்றி நானே எழுத நினைக்கும் பொழுது கீபோர்ட் ஒத்துழைக்க மறுக்கிறது.

  டவுசர் பாண்டி said:
  June 14, 2011 at 1:21 pm

  சுகுமார்ஜியன்னே,

  பெய்ண்டிங் சூப்பர். நச்சினு இருக்கு.

  Harikumar A said:
  June 16, 2011 at 1:12 pm

  பதில்கள் அருமையோ அருமை!
  உங்களின் பதிவால் NHM பெற்றேன். இன்று முதல் Tamil typing கற்றுக்கொண்டு தொடர்ந்து இங்கு மெதுவாக பயணிக்க ஆவல் கொண்டுள்ளேன். எனது எழுத்து மற்றும் இலக்கண பிழையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s