கிச்சனில் கில்மா

Posted on

கிச்சன்ல கில்மாவுக்கு அவசியம் என்னனு அலட்சியமா கேட்டுராதிங்க. கூட்டு குடும்பமா இருக்கலாம். அல்லது ரிலேட்டிவ்ஸ் வந்திருக்கலாம். அல்லது குழந்தைங்களுக்கு ஸ்கூல் லீவா இருக்கலாம். எனி ஹவ் கிச்சன்ல சமையல் மட்டும் தான் செய்யனும். சல்லாபம் செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன?
அது சரி கிச்சன்ல கில்மாவுக்கு இத்தனை காரணம் சொன்னாலும் முக்கியமான காரணத்தை சொல்லவே இல்லையே.

கணவன் பத்து நாள் கேம்பலருந்து ரிட்டர்ன் ஆகிறான். அப்பம் விரக தாபம், விறகு தாபம்,கியாஸ் தாபம்லாம் இருக்கும்ல அப்பம் இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்த்துட்டிருக்கமுடியுமா என்ன? அது சரி இந்த கிச்சன் கில்மா எந்த ராசிக்கு வாய்க்கும்னு கேட்பிங்க. சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.

“சோனியா, சோனியா, சோனியா…., சோனியா…. சோனியா….
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா”

என்று துவங்கும் பாடல் வரிகள் எழுதப்பட்டபோது சோனியா “சோனி”யாவா இருந்தாப்ல இருக்கு. இந்த வரிகள் நம்ம பதிவுக்கு தேவையில்லாதவை . உடு,,கண்ணா

//காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு//ங்கற வரிகளை பாருங்க. காதல்ல கூட ரெண்டு வகை இருக்கு. அப்போ ராசிகள்ள இருக்காதா என்ன? இருக்குங்ணா. பல அடிப்படைகள்ள ராசிகளை பல வகையா பிரிச்சிருக்காய்ங்க.

இன்னைக்கு சரம்,ஸ்திரம்,உபயம் .

மேஷத்துலருந்து சரம் ஸ்திரம் உபயம்னு தொடர்ந்து சொல்லிட்டே வாங்க. சரம்னு வந்த ராசியெல்லாம் ஒரு க்ரூப்பு,ஸ்திரம்னு வந்ததெல்லாம் ஒரு க்ரூப்பு ,உபயம்னு வந்ததெல்லாம் ஒரு க்ரூப்பு .ஓகேவா.

சர ராசிகள் :
மேஷம், கடகம், துலா, மகரம்

ஸ்திர ராசிகள்
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்

உபய ராசிகள் :
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

சரம் ,ஸ்திரம் ,உபயம்னு ராசிகளை 3 க்ரூப்பா பிரிச்சிருக்காய்ங்க.

உயில் எழுதறச்ச மூவபிள், இம்மூவபிள் ப்ராப்பர்ட்டீஸ்னு குறிப்பிடுவாய்ங்க. இதுக்கு அசையும், அசையா சொத்துக்கள்னு அர்த்தம் .

இதை ஒரு காலத்துல ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள்னுட்டும் – கொஞ்ச காலத்துக்கு பின் பின் சர,ஸ்திர
சொத்துக்கள்னும் குறிப்பிட ஆரம்பிச்சாய்ங்க.

இந்த பத்திரம் எழுதற ஃபீல்டுல ப்ராமின்ஸ்,ப்ராமின்ஸுக்கப்பாறம் கணக்கு பிள்ளைங்க தேன் இருந்தாய்ங்க -இப்பவும் இருக்காய்ங்க. இதுல இவிக பண்ற லந்துகளை பிரஸ்தாபிச்சா அதுவே ஒரு தனிப்பதிவாயிரும்.
ஆரும் இதை பத்தி எழுதலின்னா நானே பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

ஆக சரம்னா அசையும் – ஸ்திரம்னா -அசையா ங்கறது அர்த்தம். இட்ஸ் ஓகே. அதென்ன உபயம்?

மறுபடி பத்திரப்பதிவுக்கே போகனும். ரெண்டு பேரு தேர்ட் பார்ட்டி யாருக்கோ எதுனா அக்ரிமெண்ட் போட்டு தராப்ல இருந்தா தெலுங்குல ” உபயுலம் அங்கீகரிஞ்சி”னு எழுதுவாய்ங்க. உபயுலம்னா ரெண்டு பேரும்னு அர்த்தம்.

மேலவை, கீழ் அவைனு தனி தனியா சொல்லாம ” உபய சபல்லோ” னு குறிப்பிடறதும் உண்டு. உபயம்ங்கற வார்த்தைக்கு இத்தனாம் பெரிய விளக்கம் கொடுக்க காரணம் “உபயம்’னா தானம்,தருமம், ஸ்பான்சர்ட் பைனு ஒரு அர்த்தம் உங்க மைண்ட்ல வந்துரும். அதை உடைக்கத்தான் இத்தனை விளக்கம்.

ஆக உபயம்ங்கற வார்த்தைக்கு அர்த்தம் ஆங்கிலத்துல சொன்னா ட்யூயல் / தமிழ்ல சொன்ன இரட்டை குணம்.

அது சரிங்ணா ராசிகள்ள சர,ஸ்திர உபய வேறுபாடுகளை தெரிஞ்சிக்கிறதால என்ன லாபம்னு கேப்பிக. சொல்றேன்.

பாதகாதிபதின்னு ஒரு கான்செப்ட் உண்டு. அதாவது சர ராசிகளுக்கு (லக்னங்களுக்கு) 11 ஆவது ராசி பாதகஸ்தானம். இதனோட அதிபதி பாதகாதிபதி. இவர் எங்கன இருந்தாலும் அந்த இடம் ஷெட். பார்த்த இடம் ஷெட். ஆரோட சேர்ராரோ அந்த கிரகம் ஷெட்

உ.ம்: கடகம் சர லக்னம் – 11 ஆவது ராசி ரிஷபம் / அதிபதி சுக்கிரன்

ஸ்திரராசிகளுக்கு 9 ஆவது ராசி (பாக்ய பாவம்) பாதகஸ்தானம்

உபயராசிகளுக்கு 7 ஆவது ராசி (களத்ரம்) பாதகஸ்தானம்.

நைசர்கிக சுபத்வ பாபத்வம் – லக்னாத் சுபத்வ பாபத்வம் பார்ப்பதோடு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் லக்னம் ஸ்திரமா சரமா உபயமா .. இதுக்கு பாதகஸ்தானம் எதுனு பார்த்து கணிச்சா இன்னம் கொஞ்சம் பெட்டர் ரிசல்ட் வரும்.

கான்செப்ட்:
சர ராசி காரவுக பிரயாணத்துக்கு அஞ்ச மாட்டாய்ங்க – இழந்த சக்தி வைத்தியர்கள் ஊர் ஊரா சுத்தறாப்ல கேம்ப் அடிச்சிக்கிட்டே இருப்பாய்ங்க. ஆஃபீஸ், வீடு, தொழில் இப்படி மாற்றத்துக்கு அஞ்சவே மாட்டாய்ங்க.

இவிகளுக்கு லாபஸ்தானம் பாதகஸ்தானம்னு சொல்லப்பட்டிருக்கு. ரோலிங் ஸ்டோன் கேதர்ஸ் நோ மாஸ்
சுக்கிரன் பாதகாதிபதின்னு சொல்லப்பட்டிருக்கு.சுக்கிரன்னா கில்மா பத்து நாள் பொஞ்சாதிய விட்டு கேம்ப்ல இருந்துட்டு வந்தா துரித ஸ்கலிதம் மாதிரி பிரச்சினைகள் வரலாம். அல்லது கேம்ப்லயே எவளாச்சும் வேம்ப் (வில்லி) மாட்டிக்கலாம். இப்பம் புரியுதா?

ஸ்திர ராசிக்காரவுக பெரும்பாலும் உள்ளூர்ல இருக்கவே விரும்புவாய்ங்க. “சொர்கமே என்றாலும் சொந்த ஊரைபோல வருமா”ங்கறது இவிக கான்செப்ட். பெத்தவுக முக்கியமா அப்பா ( 9ஆவது பாவம்) தன் பிள்ளை தன்னை மாதிரியே (இல்லாம) நாலு ஊர் தண்ணி குடிச்சு கழுதைன்னாவது காத தூரத்துக்கு பேர் வாங்கனும்னு நினைப்பாரு. ஆனால் ஸ்திர ராசிக்காரவுக குண்டு சட்டியிலயே குதிரை ஓட்டுவேன்னா அப்பா எப்படி மெச்சுவார்? அப்பா வழி சொத்தையே நம்பி வாழ்ந்தா குந்தி தின்றால் குன்றும் மாளுமே

அடுத்து உபயராசி. இவிக காடாறு மாசம் நாடாறு மாசம் கிராக்கி. ஒரு கட்டத்துல சர ராசிக்காரவுக மாதிரி உலகம் சுற்றும் வாலிபன் களா இருப்பாய்ங்க (பொஞ்சாதிகளுக்கு அது ஒரு வகை இம்சை) – இன்னொரு காலகட்டத்துல வளையில நண்டு மாதிரி பொஞ்சாதி முந்தானைய பிடிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க (இது ஒரு வகை இம்சை) இதனாலதான் இவிகளுக்கு களத்ரபாவத்தை (7) பாதகஸ்தானமா நிர்ணயிச்சிருக்காய்ங்க.

உள்ளூர் வெளியூர்:

எனக்கு மனைவி உள்ளூரா வெளியூரான்னு கேப்பாய்ங்க. அப்பம் களத்ரபாவம் சரமா,ஸ்திரமா பார்த்து சொல்லலாம்.

எனக்கு வேலை உள்ளூர்ல கிடைக்குமா வெளியூர்ல கிடைக்குமான்னு கேப்பாய்ங்க. அப்பம் ஜீவன பாவம் சரமா ஸ்திரமா பார்த்து சொல்லலாம்.

குறிப்பு:
பாவம், பாவாதிபதி,காரக கிரகம் இதுல எது சுப பலமா இருக்குன்னு பார்த்து அந்த ராசி சரமா ஸ்திரமா பார்க்கனும். டவுசர் மாதிரி இன்ட்யூஷன் பார்ட்டிங்க இந்த சப்ஜெக்ட்ல இன்னம் கொஞ்சம் நோண்டி நுங்கெடுத்தா நல்லது. டிக்கெட் உள்ளூரா வெளியூரானு கூட சொல்லலாம். (பத்தவச்சுட்டயே பரட்டை!)

Advertisements

20 thoughts on “கிச்சனில் கில்மா

  Kalam said:
  June 13, 2011 at 4:30 am

  Onnum puriyalle…

   S Murugesan said:
   June 13, 2011 at 4:55 am

   கலாம் அவர்களே,
   அஞ்சு வருசம் ஜனாதிபதியா இருந்த அந்த கலாமுக்கே இந்தியாவோட பிரச்சினை என்னன்னு புரியலை.

   பாவம் உங்களுக்கு இந்த பதிவு புரியலைன்னா என்ன? ஒரு நஷ்டமும் இல்லை.

   இதைவிட கீழே இறங்க நமக்கு தம் இல்லே. சாரி

  டவுசர் பாண்டி said:
  June 13, 2011 at 5:17 am

  ஆஹா. நானு கிரிக்கெட் கமெண்ட்ரி மாறி ஏதாச்சும் ஒரு ப்லோவுல அப்பப்ப ஏதாச்சும் கிராஸ் டாக் வுட்டுக்குனு இருப்பேன். நைனா இன்னாடான்னா நம்மள மெய்யாலுமே இன்டியூசன் பார்ட்டின்னு நம்பிட்டாரே. நம்மளோட உண்மயான பொசிசன் (தர டிக்கட்டுன்னு) தெரிஞ்சிட்டா……மானாம்பா.. இதையே மெயின்டைன் பண்ணிருவோம். பரவால்ல சனங்க ஓவரா பிலிம் காட்டுனா ஒடனே நம்பிடுராங்கலே.

  அப்புறம் ஒரு சீக்ரெட்டு. சி எம் நைனாவ தமிழ்நாட்டுல உள்ள சி எம் பார்ட்டிங்க அரசியல்+சோசிய ஆலோசகரா யூஸ் பண்ணாக்க கொஞ்சமாச்சும் டமில் நாடு முன்னேறும். இன்னாங்கடா இது டவுசரு ஓவரா ஐசு வெக்கிதுன்னு நெனைக்காதீங்கோ.

  நைனாவோட கட்டம்லாம் ஒங்களுக்கு மைண்ட்ல இருக்கும்தானே. நைனா தமிழ்நாட்டுல இருக்க வேண்டிய ஆளு.

  வனவாசம் போனமாரி எட்டாத தூரத்துலகீராறு. கடகராசி தமிழ்நாட்ட குறிக்கி. சி எம் நைனாவ நா சிஎம்மா இருக்க சொல்லல. தமிழ்நாட்டு ராசிய லக்னமா வெச்சி அதுல (6,9காண) குருவ டாப்ல வெச்சி இருந்தா அந்த பார்ட்டி பார்ட்டி ஆரம்பிச்சா கொஞ்ச வருசத்துக்கு வண்டி ஓடும்.

  அது போவ குறு சந்திர யோவம் உள்ளவரு நம்ம சி.எம் நைனா. குருவும் ஸ்ட்ராங்கு சந்திரனும் ஸ்ட்ராங்கு. சொல்லவா வோணும்.

  நைனா லைப்புல மினி ராமாயணமே மிக்சாயிருக்கனும்னா. வேணாம்னா நைனாவ அவன் அவள் அது தொடர கண்டினியூ பன்னச்சொல்லுங்க.

  அப்புறம் நீங்களே புரிஞ்சிப்பீங்க. நைனா சிறந்த வாக்குப்பளிதமுள்ள சோசியருன்னு நிரூபிக்க ஒண்ணா நம்பர் ஊட்டுல ஒண்ணா இருக்குற கெரகங்கள பாருங்கோ. அப்புடியே வெளிச்சம் போட்டுக்காட்டுது. இதுக்குமேல நானு இன்னாத்த சொல்ல.

   S Murugesan said:
   June 13, 2011 at 6:47 am

   டவுசர் பாண்டி,
   வாக்குல சனிய வச்சுக்கிட்டு இதுவரைக்கும் வாங்கின பேரையெலாம் அந்த சனி லவுட்டிக்கினு பூடுவாரோனு அரண்டு கிடக்கறேன். இப்பம் போயி கண்டதையும் சொல்லிக்கிட்டு ஆள வுடுப்பா..

   ஆஃப்டர் ஆல் பாதகஸ்தானங்களை குறிப்பிடறப்பயே பல்பு வாங்குது.. நான் அம்பேல். இன்னொரு மேட்டர் விசயகாந்த் தன் கட்சி எம்.எல்.ஏங்களுக்கெல்லாம் இமெயில் ஐடி தந்திருக்காராம்ல.

   ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்த கணக்கா ஆப்பரேஷன் இந்தியா 2000 + தமிழக நதிகள் இணைப்பை ஸ்பீட் அப் பண்றதை பத்தி ஒரு மெயில் தட்டிவிட்டிருக்கேன். (கேப்டனுக்கும் சேர்த்துதேன்)

   பார்ப்போம்..

  Mani said:
  June 13, 2011 at 6:10 am

  //ஸ்திரராசிகளுக்கு 10 ஆவது ராசி (ஜீவன பாவம்) பாதகஸ்தானம்//

  சிறு திருத்தம். ஸ்திர ராசிகளுக்கு 9வது ராசி (திரிகோணம் மற்றும் பாக்கியஸ்தானம) பாதகஸ்தானம் என்று தான் ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் மாற்றிவிட வேண்டாம்.

   S Murugesan said:
   June 13, 2011 at 6:27 am

   வாங்க மணி,
   கிளம்பி போறதுக்கு முந்தி இந்த வாக்குஸ்தானத்துல சனி ஒரு ஆட்டு ஆட்டி வைச்சுட்டுதான் போகும் போல.

   ராத்திரி,பகலா டொக்கு டொக்குன்னு தட்டிக்கிட்டே இருக்கிறதால மூளை பஜ்னு ஆயிருது போல.

   சிறு திருத்தம் இல்லே. பெரீ திருத்தம். எங்கே பாண்டிய காணோம்?

   உபய ராசிக்கு ஏழாச்சும் கரீட்டா இல்லியா? பழைய ஞா அடிச்சு தொலைச்சுர்ரதால இந்த லொள்ளு..

   இனி ரெஃபர் பண்ணிக்கிட்டுத்தான் அடிக்கனும் போல

    Mani said:
    June 13, 2011 at 6:55 am

    //கிளம்பி போறதுக்கு முந்தி இந்த வாக்குஸ்தானத்துல சனி ஒரு ஆட்டு ஆட்டி வைச்சுட்டுதான் போகும் போல.//

    கவலைப்படாதீங்க தல அதான் நாங்க இருக்கோம்ல. நீங்க கொஞ்சம் அசந்தாலும் நாங்க எதுக்கு இருக்கோம் ஞா படுத்திவோம்ல.

    உடனே திருத்தியமைக்கு மிக்க நன்றி.

    S Murugesan said:
    June 13, 2011 at 9:17 am

    மணி !
    அபயத்துக்கு நன்றி.

  vinoth said:
  June 13, 2011 at 8:03 am

  தல ஒரு டவுட்டு…. கிச்சனில் கில்மாவுக்கும்…
  பாதகாதிபதிக்கும் என்ன சம்பந்தம் ?

   S Murugesan said:
   June 13, 2011 at 9:14 am

   வினோத்ஜீ,
   சர ராசிக்காரவுக நிறைய கேம்ப் அடிப்பாய்ங்க. ஒரு இடைவெளிக்கப்பாறம் திரும்பி வரச்ச இப்படியெல்லாம் நடக்கலாம்னு ஒரு ஹன்ச்.

   இதே கேள்வியை குமுதம் ஆசிரியரை தான் கேட்பாய்ங்க. அப்பம் நாம குமுதம் ரேஞ்சுக்கு வந்துட்டம் போல.

  sugumarje said:
  June 13, 2011 at 8:28 am

  சமீபத்திலே ரட்ஷகன் திரைப்படம் பார்த்த பாதிப்பு இருக்கு போலிருக்கே?

  Mani said:
  June 13, 2011 at 9:32 am

  முக்கிய செய்தி:

  இன்று காலை (13.06.2011) அனுபவ ஜோதிடம் தளத்தின் வாசகர்கள் கூட்டம் தலைவர் திரு. சித்தூர் S. முருகேசன் அவர்கள் தலைமையில் அவசர அவசரமாக கூடியது. கூட்டத்தில் முக்கியமான கீழ்கண்ட கண்டனத்தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

  கண்டனத்தீர்மானம் பற்றிய விபரம்.

  சமீப காலமாக அனுபவஜோதிடம் தளத்தில் டவுசர் பாண்டி என்பவர் அடிக்கடி தோன்றி டிப்சு கண்ணா டிப்சு என்று அடிக்கடி ரவுசு காட்டிய வண்ணம் வலம் வருகிறார். அவரது டிப்சில் மயங்கிய பிற வாசகர்கள் அது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. கேட்டால் எங்க ஊர்ல கெரண்டு கட்டு அதான் அப்பப்ப காணாம போயிற வேண்டியாகீது என்று ஒரே புலம்பல்.

  சரி கெரண்டு வந்தப்பிறகு எதாச்சும் முழுசா எழுதுங்கண்ணு சொன்னா நானெல்லாம் அரைகுறை, கிழிஞ்ச டவுசரு, புஸ்தவத்ல படிச்சதுதான், நேக்கு ஒன்னும் தெரியாது அப்படின்னு பம்முதல்.

  மேலும்
  அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஜோதிடத்தில் எதைப்பத்தி வேணும்ணா கேளுங்கோ. நம்ம நைனா இருக்க நமக்கு என்ன பயம் அப்படின்னு வீரவசனம் எடுத்துவிடுவது.

  ஆனால் ஜோதிடம் பற்றி மற்றவர்கள் அறியாத பல விஷயங்களை அவர் மட்டும் தெரிந்துகொண்டு அவ்வப்போது பிட்டு போட்டு சீன் காட்டுவதால் மற்ற வாசகர்கள் அவர்மீது கடுமையான அதிப்தியில் உள்ளனர். விட்டால் அவரையும் அவரது டவுசரையும் கிழி கிழியென கிழித்துவிடவேண்டும் என்று கோபத்தில் உள்ளனர்.

  எனவே அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க மேற்கண்ட கண்டனத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இனிமேலும் டவுசர் பாண்டியில் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் இனி நாங்கள் அனைவரும் அவரது பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கப்போவதில்லை (ரகசியமாய் படித்துக்கொள்வோம்) இனி நாங்கள் டவுசரிடம் நம்ம தலை ஜாதகத்திற்கு பலன், ரஜினியின் ஆயுள்பாவம் போன்ற விஷயங்களைப்பற்றி கேட்க மாட்டோம். (டவுசரு எழுதினா படிக்க ஆசைதான்)

  தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் விபரம்.
  1) திரு.சித்தூர் S. முருகேசன், தலைவர். அ.ஜோ.தளம்.
  2) திரு. சுகுமார்ஜி
  3) திரு. அரைவேக்காடு (எ) த.கா. ராஜா
  4) திரு. வினோத்
  5) திரு. சிவ. சி.மா. ஜானகிராமன்
  6) திரு. மணிகண்டன்
  7) திரு. கிருமி
  8) திரு. இஸ்மாயில்
  9) இன்னும் பல அனுபவஜோதிடம் வாசகர்கள்

  தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்தவர்கள் விபரம்.

  நமது மதிப்பிற்குரிய திரு. டவுசர் பாண்டி.
  (அடப்பாவிகளா நம்மை கட்டம் கட்டிடாங்களே)

  மேற்கண்ட தீர்மானம் நடைமுறைக்கு வராமல் இருக்க உடனடியாக டவுசர் எதைப்பற்றியாவது முழுமையாக எழுத வேண்டும். குறைந்த பட்சம் தில்லுதுரைக்கான கேள்விகளுக்காவது உடனடியாக பதில் தரவேண்டும். இல்லையேல் தீர்மானம் 24 மணி நேரத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

  இவன்.
  அனுபவ ஜோதிட வாசகர்கள் சங்கம்.

   டவுசர் பாண்டி said:
   June 14, 2011 at 12:33 pm

   இன்னாங்கடா இது கேரகனம் வேற நெருங்கிட்டு. களிஞறு வேற வெயிட்டிங் லிஸ்ட்ல கீறாரு. இந்த கெரவனம் வேற சந்திரன் பவர கொரச்சிக்கிநேருக்கு. களிஞறு இன்னாடான்னா மழ (மழைக்கு சுக்கிரன்) காலத்துல தேன் போவேன்னு அடம்புடிக்கிராறு. சூரியன் வேற காத்து ராசில (மிதுனம்) கால வெக்குரதுக்குல்லாற தரைல கெடக்குற மண்ணெல்லாம் மூஞ்சில வந்து உளுது. என்னைய மண்ணா போன்னு சொல்லுதா இல்லாங்காட்டி மினிஸ்டர் கேட்டகிரில ஒரு டிக்கட்டு மன்னுக்குல்லாற போப்போதான்னு கண்பீசாகுதுங்கோ. இன்னும் கொஞ்ச காண்டு நாளுக்குல்லாற ஒரு தல உருலனும்னு ஒரு கணக்கு இடிக்குதுங்கோ. சந்திரன (அம்மா?) ராகு (விடோ) புடிச்சிட்டு. தூறல் உலுற சமயம் ஒரு சங்கு இருக்குடி மாப்ளே.

   நானு சங்கு மேட்டர எழுதலாம்னு வந்தாக்க, மணியண்ணே இன்னாடான்னா நமக்கு மனியடிச்சிட்டாறு. வள்ளுவர் சொன்ன குரல் மனசுக்குள்ளார ஒலிச்சிசி.

   ///முக்கிய செய்தி:///
   ரொம்ப முக்கிதேன் எளிதிருக்கீங்க. அதாவ்து நம்மள என்னச்சட்டில முக்கி முக்கி எழுதிருக்கீங்க.

   /////நம்ம நைனா இருக்க நமக்கு என்ன பயம் அப்படின்னு வீரவசனம் எடுத்துவிடுவது./////
   நெசந்தானுங்க. யாமிருக்க பயமேனுன்குற மாறி நைனா இருக்கும்போது நமக்கென்ன பயம்.

    S Murugesan said:
    June 14, 2011 at 2:25 pm

    பாண்டி!
    நானே டர்ராகி கிடக்கேன். இதுல நீங்க வேற நான் இருக்கேன்னு வாலை அவுத்து உட்டுராதிங்க. ஆத்தா இருக்கான்னு நான் கண்டபடி அவுத்து வுட்டு எக்கச்சக்க டேமேஜ்.

    புத்தர் பாலிசி தான் கரீட் ” நீயா உனக்கு ஒளியாய் இரு”

  விஜயகாந்த் said:
  June 14, 2011 at 6:58 am

  //குறைந்த பட்சம் தில்லுதுரைக்கான கேள்விகளுக்காவது உடனடியாக பதில் தரவேண்டும்.//

  தம்பி டவுசரு வாப்பா வா …வந்து ஒரு பதிலை சொல்லிட்டு போ….ஆங்ங்ங்ங்ங் 🙂

   டவுசர் பாண்டி said:
   June 14, 2011 at 12:47 pm

   இந்தியக்குடிமகன்(?) விஜயகாந்த் அவர்களே,

   காந்திதாத்தா நாட்டுக்காவ பாடு பட்டாருன்னு அவர தூக்கி நோட்டுல வெச்சாங்க. தட்சணாமூர்த்தி தாத்தா (?) நோட்டுக்காவ பாடுபட்டாருன்னு வூட்டுல வுள்ளவங்கள தூக்கி உள்ள வெக்காய்ங்க. நோட் பண்ணி வெச்சிக்கோங்க மீட்டிங்கு யூசாவும்.

   குடும்ப அரசியல ஒழிப்போம் ஒழிப்போம்னு சொல்லி கடைசில ஒங்க குடும்பத்துல உள்ள அல்லாத்தையும் அரசியலுக்கு கொண்டாந்துட்டீங்க. வாழ்க சனநாயகம். சிறந்த குடிமகன்னு நிரூபிச்சிட்டீங்க.

   டவுசர் பாண்டி said:
   June 14, 2011 at 12:50 pm

   கும்பனோடு கூடாதேன்னு ஒரு ஓல்ட் லேங்குவேஜ் உண்டு. கும்ப லக்ன பார்ட்டிங்க கூட பார்ட்னர் ஷிப் வெச்சா ஷிப் ஒரு சைடாத்தேன் சாஞ்சிக்கிநேருக்கும்.

  //தம்பி டவுசரு வாப்பா வா …வந்து ஒரு பதிலை சொல்லிட்டு போ….ஆங்ங்ங்ங்ங் //

  டவுசர் …கேப்டனே அழைக்கிறார் ..வந்து ஒரு பதிலை சொல்லிட்டு போங்க…

   டவுசர் பாண்டி said:
   June 14, 2011 at 1:00 pm

   ராசான்னே,
   அவிங்க திங்க் பண்றலவுக்கு நம்மள்ட்ட திங்க்ஸ் இல்லேன்றதுதேன் மேட்டர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s