சூப்பர் ஜோதிடராக 11 டிப்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே..
நம்ம ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்குதுங்கண்ணா. கடந்த 12 வருசத்துல கொடி மரம், வாகனங்கள் தேர், வாகன மண்டபம் எல்லாமே ஷெட் ஆகி இம்மாம் வருசம் உற்சவமே நடக்காம போயிருச்சுங்கண்ணா. நம்ம தொகுதி எம்.எல்.ஏவோட இனிஷியேஷன்ல சனம் வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கி இந்த வருஷம் உற்சவம் இன்னைக்கு துவங்குது.

இந்த அக்கேஷன்ல நம்ம லோக்கல் ஃபோர்ட் நைட்லியோட ஸ்பெஷல் எடிசன் ஒன்னை ரிலீஸ் பண்றோம். அது தொடர்பான வேலைகள்ள கொஞ்சம் பிசி. அதனால ஆனைப்பசிக்கு சோளப்பொறியா ஒரு 11 டிப்ஸ் மட்டும் கொடுத்திருக்கேன்.

கமெண்ட் சைஸ்ல பதிவு போடறாய்ங்கனு நானே நக்கல் அடிச்சிருக்கேன்.ஆனால் இன்னைக்கு நம்ம நிலைமையும் அப்படி ஆயிருச்சு. என்ன பதிவுக்கு போயிரலாமா?

1.கிரகங்கள் என்னமோ ஃபுட் பால் ப்ளேயர்ஸ் மாதிரியும் நீங்க என்னமோ வர்ணனையாளர் மாதியும்ஃபீல் பண்ணிக்காதிங்க. கிரகங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா வா.வெ.

மனிதனின் உடல்,மன செயல்பாடுகளை, குண மாற்றங்களை தீர்மானிக்கிறது நாளமில்லா சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலந்து விடற இரசாயனங்கள். இந்த நா.சுரப்பிகளை கமாண்ட் பண்றது ஹைப்பொதலாமஸ். ஹைப்போதலாமஸை கமாண்ட் பண்ற்து உங்க எண்ணம். கிரகங்கள் உங்க எண்ணங்களை தூண்டுது அவ்ளதான்.மத்த வேலைகளை க்ளாண்ட்ஸ் பார்த்துக்குது

2.லக்னாதிபதி , சந்திரன், ஐந்தாம் பாவாதிபதி ஸ்ட்ராங்கா இருந்தா அஷ்டமசனி கூட ஜுஜுபி. மேற்சொன்ன மேட்டர்ல பிரச்சினை இருந்தா தாளி சந்திராஷ்டமத்துல கூட செத்துப்போயிர்ராய்ங்க. மொதல்ல ஜாதகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பார்க்கவேண்டியது இந்த 3 மேட்டரை தான்.

3. அடுத்து லக்னாத் 6,8,12 காலியா இருக்கா பாருங்க. இது மினிமம் கியாரண்டி. இந்த இடங்கள் காலியாவே இருந்தாலும் இதன் அதிபதிகள் விடமாட்டாய்ங்க. அம்மா கொடைக்கானல்ல இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டிர்ராப்ல வேலை “கொடுத்துருவாய்ங்க”

4.இந்த 6,8,12 அதிபதிகள் எங்கே இருந்தாலும் அந்த பாவத்துக்கு ஆப்புதேன்.ஆரோட சேர்ந்தாலும் அந்த கிரகத்துக்கு ஆப்புதேன்.

5.கிரகயுத்தம்னா தெரியுமோல்லியோ? எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ் நிக்கறது. செவ்வாய்க்கு பின்னாடி நிற்கிற கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துப்போனாப்ல கணக்கு.

6.பரஸ்பர முரண்பாடுள்ள கிரகங்கள் சேருவது : உ.ம் சூரியன்+சனி/ராகு சந்திரன்+கேது , இந்த சேர்க்கையில் சூரியன் பால் மாதிரி சனி/ராகுல்லாம் பாலிடால் மாதிரி. பாலிடால் கலந்தது ஒரு பேரல் பாலாயிருந்தாலும் அதை பாலிடாலா ட்ரீட் பண்றாப்ல மொக்கை பண்ண கிரகத்தோட எஃபெக்ட் தான் அதிகமா இருக்கும்.

7. உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது.

8.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதியும் நீசமான உச்சம் பரிகாரம்

9.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதி உச்சம்/ஆட்சி பெற்று நீச கிரகத்தை பார்த்தா நீசம் பங்கமாகி ராஜயோகம் ஏற்படும்

10.ஜாதகத்துல லக்னாத் 6, 8, 12 அதிபதிகள் இந்த 6 ,8 ,12 பாவங்களில் ஏதோ ஒரு பாவத்தில் ஒன்று சேர்ந்தா அது விபரீத ராஜ யோகம். ஓ.பன்னீர் செல்வம் சி.எம் ஆன கதையா படக்குனு க்ளிக் ஆயிருவாய்ங்க.

11.குரு+செவ் , சந்திரன்+செவ் மாதிரியான கிரகங்களோட காம்பினேஷன் ஓகேதான். ஆனால் இப்படி சேர்ந்த கிரகங்கள் லக்னத்துக்கு சுபர்களா இருக்கனும்.

Advertisements

25 thoughts on “சூப்பர் ஜோதிடராக 11 டிப்ஸ்

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 2:29 am

  அருமையான டிப்ஸ் நைனா.

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 2:34 am

  பூர்வ ஜென்ம வாசனைப்படி ராம பக்தர்கள் சிவ பக்தர்கள் அந்த கோயில் உள்ள ஊர்களில் ஜாதகத்தில் அதே அம்சத்துடன் பிறப்பார்கள். இப்ப உதாரணத்துக்கு நம்ம தம்பி போன சென்மத்துல ஒரு சிவ பக்தன். அதனால சிவனுக்கு புடிச்ச நட்சத்திரத்துல பொறக்க வெச்சி, கொஞ்சம் கர்மத்த களிக்கனும்க்ரதுக்காண்டி ராகு தெசைல ரெண்டு பொரட்டு பொரட்டி கிள்ளிகுடுத்து, குறு தசைல அள்ளிக்குடுக்கனும்னு கர்மக்காரனோட கணக்கு. அது மாறி ராம பக்தர்களுக்கும் அப்டிதேன்னு நெனைக்கிறேன்.

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 2:45 am

  இப்ப காலப்புருசப்படி மேசத்துக்கு நாலாமெடம் கடகம். பொதுவா நாளுன்னா தாய குறிக்கும். இப்ப நாலாம் ஊடான கடக்க ராசியோட ஓனரும் பெண் கெரகமான சந்திரனோட சொந்த ஊடு. இதனால சந்தெரன் நாள்ல தனியா இருந்திச்சின்னா தாய்க்கு தோஷம் கெடயாது. ஆனா இதே நாலாமெடம் சுகத்தையும் குறிக்கி. சொகத்த குறிக்கிற சுக்கிரன் நாள்ல (அதாவ்து கடகத்துல) தனியா இருந்தாக்க சுகக்கேடு உண்டாவும். ஏன்னா கடகம் சுக்கிரனுக்கு பக வூடுல்லா. அதுனால சுக்கிரன் நாளுல (எந்த லக்னமாருந்தாலும்) தனிச்சிருந்தா சுகம் கொஞ்சகாண்டு கொறையும்.

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 3:03 am

  இப்ப போன சென்மத்துல நாம எப்டி இருந்தோம்னு தெரிஞ்சிக்க அகஸ்தியர் ஜீவ நாடி (தினத்தந்தில வந்த ஹனுமத்தாசன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்கதானே) மேட்டருக்கு போவோம். குருதேன் பார்ட்டிக்காறன குறிக்கிற பிளானெட்.இந்த பெறவில குறு எந்த ராசில இருக்காரோ அப்டியே ஒரு கட்டம் பின்னாடி ரிவர்சுல வைங்க. இப்ப எக்சாம்புளுக்கு இந்த பெறவில குறு மீனத்துல இருக்காருன்னு வெச்சிக்குவோம். போன சென்மத்த ஆராச்சி பண்ணனும்னா குருவ கும்பத்துல போட்டு (மத்த கெரகங்கள தொட வேண்டாம்) அனலைஸ் பண்ணுங்கோ. பலான மேட்டர்லாம் சிக்கும். அது போவ குருவ லக்னமா வெச்சி டீல் பண்ணுங்க.

   Vintoh said:
   June 12, 2011 at 6:11 am

   paandi . unga kadai enna atchu..?
   sari… guru vai lagnama parkkumpothu… ippo guru irukkara idathaya… illa guruvai..matthi vaccha idathaya… enakku magara lagnam guru rishabam.. appo guru vai meshathula vaachu parkanaum sari.. appo riisaba lagnam , guru mesham .. ippadi parkanuma ? illa mesha lagnam guru mesham ippadi parkanuma ?

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 9:23 am

    விநோத்தன்னே,
    நாடி மேட்டருல லக்னம் தேவைப்படாது. குருதேன் லக்னம். லக்னம்தேன் குறு. ஓகேவா.

    ///paandi . unga kadai enna atchu..?///
    நம்ம டவுசர் கிழிஞ்சிதேன் இருக்கு.

   Ismail said:
   June 12, 2011 at 6:49 am

   பாண்டி அண்ணே அப்பப்போ காணாம போயிட்டு கமெண்ட்ஸ் பகுதியில் இப்படி நல்ல டிப்ஸ் கொடுக்கிறதை விட்டுட்டு முழுமையாக ஒரு பதிவே போடலாமே.

  Sudharsan said:
  June 12, 2011 at 5:22 am

  hai Murugesan sir,
  People with moon and mars combination are very hasty in their actions.They are also subjected to severe mental depression and psychiatric problems.According to my analysis these people face severe trouble in marital affiars.Examples are Rajini,jayalalitha

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 10:02 am

  கெரகநம் வேற நெருக்குது. ஆரு தல உருலப்போவுதோன்னு நெனச்சா பிகிலாகீது. பஞ்சாங்கம் இல்லாத காலத்துலேயே சொசியக்காரவுக கேரகணத்த வெச்சி நல்லது பொள்ளதுகள கரீட்டா சொல்லிருக்காங்கோ. அப்டின்னா பஞ்சாங்கத்த லெப்டு ரைட்டு வாங்குற இந்த காலத்துல எப்டி எல்லாம் கணிச்சி வெச்சிருப்பாங்கோ. ஆராச்சும் ஒரு குன்சா ஒரு பிரபல டிக்கட் டிக்கெட் வாங்குறத பத்தி எதுனாச்சி நமக்கு மிந்தி கணிச்சி ரவுண்டு கட்டிருப்பாங்கன்னு பாத்தாக்கா புஸ்ஸுன்னு ஆய்ட்டு. சரி.

  சின்ன டிப்சு. சூரியன் ராசாவையும் சந்திரன் சனங்களையும் குறிக்கி. ராகு இவிகள லபக் பண்ணா ராகு கிறச்தம். கேது புடிச்சா கேது கிறச்தம். எந்த நாட்ட குறிக்கிற ராசில கேரகனம் உண்டாவுதோ அந்த நாட்டுல கொயப்பமும் பாதிப்பும் உண்டாவுது. இப்ப சூரிய கேரகனம் நாட்டோட தலவிதிய தீர்மானிக்கி. எப்டி? அதாவ்து சூரியன் கெரகன்களின் தலைவநா இருக்குறதால ஒரு தலைய (நாட்டோட தலைய) உருட்டப்பாக்குது.

  லக்குனமும் டென்த் ப்லேசும் நாட்டோட ப்ரைம் மிநிச்டரையும், லேவேந்த் பிளேஸ் பார்லிமேன்டையும், செகண்டு பட்ஜெட்டையும் அப்பெக்ட் பண்ணுது. …. இன்னும் சொல்லவா? .(நான் கிருக்குனா ஆரு படிப்பா?)

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 11:37 am

  வர்ற ஜூன் பதுனன்ஜான்தேதி கெரகநம் வருதுல்லா. அது இன்னாடான்னா நம்ம நாட்டுக்கு ஏழாம் டீலிங் வெச்சிக்கினு கீறதால ஆரும் ஒப்பந்த வெக்கப்போறேன் கூட்டணி வெச்சிக்க போறேன்னு ஆழந்தெரியாம கால வெச்சிக்கினு அப்பால பீசாயிராதீங்கோ. பிளைட்டுல போம்போது சாக்கிரத. அம்புட்டுதேன். தோணுச்சி சொல்ட்டேன்.

  Varshen said:
  June 12, 2011 at 12:25 pm

  உங்களின் கருத்துக்கு எனக்கு உடன் பாடு இல்லை? ஜோதிடம் என்பது கணிதம். கணிப்பு தப்பாகலாம், கணக்கு தப்பாகது 1+1=2.

   டவுசர் பாண்டி said:
   June 12, 2011 at 5:09 pm

   வர்சன்னே,
   கரீட்டா சொன்னீங்கநே. கணக்கு எப்பவும் தப்பாதுனே. கூட்டிக் கழிச்சி சொன்னா கணக்கு தப்பாது. எல்லாம் சரிதேன். ஆமா நீங்க கண்டுபுடிச்ச அந்த தப்புக்கணக்கு எதுனே. நானு போட்ட கணக்கா? கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா கணக்க டேலி பண்ணிரலாம்.

  Varshen said:
  June 12, 2011 at 12:33 pm

  மேலே சொன்ன கருத்து அனைத்தும் தவறானவை, சுய ஜாதகத்தில் லக்கணம் எத்தனை பாகையில் அமருகின்றது என்ற அடிப்படை விபரம் தெரியாதா ஜோதி(ரு)டர்கள், இருக்கும் இந்த காலத்தில் உங்களின் கருத்து நகைப்புக்குரியதாய் உள்ளன வாழ்க வளமுடன்.

  Varshen said:
  June 12, 2011 at 12:41 pm

  ஜோதிட கலை ஒருவருக்கு சிறப்பாக அமைய 1ம் வீடு, 2ம் வீடு, 5ம் வீடு 7ம் வீடு 10ம் வீடு ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜோதிடன், இல்லை என்றால் ஜோதி(ரு)டன்.

  Varshen said:
  June 12, 2011 at 12:51 pm

  பிறந்த தேதி 07/02/1980 இரவு 7:30 நாமக்கல்.
  சித்தூர் s.முருகேசன் அவர்களின் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?

  Varshen said:
  June 12, 2011 at 12:56 pm

  ஜோதிட அறிவுக்கும், அனுபவ ஜோதிடத்திற்க்கும் சம்பந்தமே இல்லை இது எனது கருத்து. ஜோதிடன் வர்ஷன்.

  yogi said:
  June 12, 2011 at 4:57 pm

  இது எப்டி இருக்குத்ன்னா பழய குங்பூ படத்துல எல்லாம் ஒவ்வொரு குருவும் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவாஙக அங்க அடிக்கடி திடீர்னு வில்லன் குருப்பு எங்கைருந்தோ வந்து லொல்லு பன்னுவாங்க அப்புரம் செமத்தியா அடிவாங்கிகினு ஓடுவாங்க இங்கேயும் ஒவ்வொரு தடவையும் அப்டிதான் ஆவுது

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 6:03 pm

  வர்சன்னே, 
  ஒரு சின்ன டிப்சு. அதாவ்து முர்கேசு நைனாவோட அடுத்த பதிவுல எத்தினி கமெண்டு உலும்னு ஒரு ப்ரசன்னம் பாக்கலாம். அதாவ்து நமக்கு நாமெ கேல்வி கேட்டா உதயத்த லக்னமா வெச்சி உதயத்லருந்து ஆருடம் எந்த ராசில உலுதோ அந்த என்னிக்கய (உத்யத்லருந்து கவுண்டிங் ஷ்டார்ட்) னோட் பன்னிவெச்சிருன்கோ. 

  இப்ப கனக்குக்கு வருவோம். ஆருடம் விழுந்த ராசியோட கதிர்+ஆருட ராசில எதும் கெரகம் இருந்த அதோட கதிர்+அதுக்கு ஏலாமெடத்துலவுல்ல ராசியோட கதிர்+அதில் கெரகம் இருந்தா அதோட கதிர சேத்து மொத்தம டோட்டல் போடுன்கோ. வர்ர பிகர(?) அதாவ்து நம்பர ஆருடத்லருந்து உதயம் வர என்னி வந்த என்னிக்கயால மல்ட்டிப்லை பன்னிருன்கோ. இன்னாத்துக்கு என்னிக்கயால பெருக்குரோம்னா இது செல்ப் கொச்டின்குரதால. இதே கேல்விய மத்தவன்க வாயால கேட்டு ப்ரசன்னம் போட்டா என்னிக்கை பெருக்கல் வேண்டாம். மொத உல்ல டோட்டலே சரியான பிகர(!) காட்டும். இந்த சூத்தெரத்த எலக்சன் கவுண்டின்குக்கும் யூஷ் பன்லாம்.

   டவுசர் பாண்டி said:
   June 13, 2011 at 2:33 am

   கதிர் பற்றி லைட்ட ஒரு ரிவிசன்

   மேஷ = 7
   ரிஷ = 8
   மிது = 5
   கட = 3
   சிம் = 7
   கண் = 11
   துல் = 2
   விறு = 4
   தணு = 6
   மக = 8
   கும் = 8
   மீன் = 27

   சூரி = 5
   சந் = 21
   செவ் = 7
   புத = 9
   குறு = 10
   சுக் =16
   சனி = 4
   ரா = 4
   கே = 4

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 6:24 pm

   நைனா, அந்த போர்ட்னைட் எடிசன் பத்தி சொல்லுங்க ப்லீஷ்

   S Murugesan said:
   June 13, 2011 at 1:13 am

   பாண்டி!
   ஃபோர்ட் நைட்லின்னா பெருசா நினைச்சுராதிங்க. ஏ3 சைஸ்ல மல்ட்டிகலர்ல 4 பக்கம் சிங்கிள் கலர்ல ரெண்டு பக்கம். கலர் பேஜஸ்ல வெறும் விளம்பரங்கள் -சிங்கிள் கலர் பேஜ்ல மேட்டர் வரும். இலவசமா வினியோகிக்கப்பட்டும். பேரு “இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப்”

   கண்ணால் காண (படிக்க ஒன்னுமிருக்காது -இருந்தாலும் தெலுங்கு) கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்க

   http://chittoortiger.blogspot.com/2011/01/sakaranthi-spl-4-ck-fans-1.html

    டவுசர் பாண்டி said:
    June 13, 2011 at 1:31 am

    ரொம்ப டேங்சு நைனா லிங்க் குடுத்ததுக்கு. நமக்கு தெலுங்கு வராததால படம் மட்டும் பாத்தேன்.

  Varshen said:
  June 15, 2011 at 3:58 pm

  ஜோதிட சாஸ்திரம் என்பது மிகவும் புனிதமான கணிதம் ஆகும். இதில் கணிப்பிற்க்கு இடம் இல்லை.

  Varshen said:
  June 15, 2011 at 4:23 pm

  நன்பர்களே உண்மை ஜோதிட அறிவினை எல்லோரும், பெற்று மனித குல சமுதாயம் பகுத்தறிவு பாதையில் வெற்றி நடை பயில, நமது அறிவு பயன் பட வேண்டும் என்பதே எனது ஆவல்.
  சில ஜோதிட சிரோண்மணி அன்பர்கள் ராசி கல் & பெயர் மாற்றம் என்று அடிக்கும் நகை சுவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
  ராசி கல் கொடுத்து நவகிரகங்களை ஆக்டிவேட் செய்யலாம் என்று நவகிரகங்களை தமது வீட்டு பணியாள் கணக்கில் விடும் கதை தாங்க முடியலையட சாமி.
  உண்மை என்ன, ஒரு ஜாதகருக்கு அறிவில் விழிப்பு நிலை வரும் வரையில் பெறிய மாற்றம் எதுவும் நடந்து விடாது.
  கர்ம விணை எனும் கருமைய துய்மை அடைய என்ன வழி என்ற விழிப்புனர்வு வரும் வரை மக்களின் அறியாமையை ஜோதி(ரு)டர்கள் காட்டில் மலைதான்.
  இப்படிக்கு ஜோதிடன் வர்ஷன்
  பகுத்தறிவு பகலவன் பிறந்த மண்ணில் பிறந்தவன்.

  Varshen said:
  June 17, 2011 at 3:35 am

  nothing special

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s