நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்

Posted on

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி – புலிய பார்த்து நரி சூடு போட்டுக்கிட்டாப்ல – ரேஞ்சுல சொன்னா சொல்ல வந்தது புரிய ஒரு சில செகண்ட் ஆகும். ” நானும் ரவுடிதன் நானும் ரவுடிதான்“-ன்னுட்டா அரை மைக்ரோ செகண்டுல செனேரியோ புரிஞ்சுரும். கலைஞர் அண்ட் ஃபேமிலி தமிழ்மக்களுக்கு செய்த உண்மையான சேவை ஆதித்யாதான்.

யாருக்காகவோ – நம்மை யாராவோ ப்ரொஜெக்ட் பண்ண விரும்பறது கேணத்தனம். நம்மை நாம யாரா பார்க்கிறோம்ங்கறது உலகத்துக்கு முக்கியமில்லை. உலகம் நம்மை என்னவா பார்க்குதுங்கறது நமக்கு முக்கியமில்லை. இது தான் அசலான பிரச்சினை. இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு உண்மையில நாம ஆருங்கறத புரிஞ்சுக்க முடிஞ்சு நம்மை டெவலப் பண்ண முடிஞ்சா தூள் பண்ணலாம்.

இதை அச்சீவ் பண்ணனும்னா நமக்கு அனலட்டிக்கல் கப்பாசிட்டி இருக்கனும். இந்த கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ஒரு 45 செ.மீ தூரத்துல உள்ளதால தான் இந்த பதிவை படிக்க முடியுது.

இதே போல நாம நம்மை பத்தி என்ன நினக்கிறோம் -இந்த உலகம் நம்மை பத்தி என்ன நினைக்குது – உண்மையில நாம ஆருன்னு 3 வகையான் டேட்டாவை கலெக்ட் பண்ணனும்ன ” நான்”லருந்து கொஞ்சம் விலகி இருக்கனும்.

மேற்படி 3 டேட்டாவை கலெக்ட் பண்ணிக்கிட்டு ஊறுகாய் போட்டா வேஸ்டு. லௌகீக வாழ்க்கையில உலகம் நம்மை பத்தி என்ன நினைக்குதுங்கறது தான் முக்கியம். அந்த எண்ணம் பாசிட்டிவா இருந்தா பிரச்சினை இல்லை. ( பாவம் .. நல்ல மன்சன் தான் ஆனால் போறலை )

ஒரு வேளை நெகட்டிவா இருந்தா ரெம்ப கஷ்டம்..( அட அவனா .. செரியான அலிகிரிப்பா – சரியான் உட்டாலக்கடி பட்டாபிப்பா) மொதல்ல அதை பாசிட்டிவா மாத்த பார்க்கனும்.

உலத்துக்கான உங்க முகத்தை ப்ளீச் பண்ணி ஃபேர் அண்ட் ல்வ்லி -பாண்ட்ஸ் போட்டு ரெடி பண்ணிரனும். இதை உலகத்துக்கு ப்ரொஜெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா அது தேமேன்னு கிட்க்கும். ஆனால் இந்த முகம் தான் உங்க சொந்த முகம்னு மயங்கிட்டா ரெம்ப பிரச்சினையாயிரும். இந்த மேட்டர்ல ரெம்ப அலார்ட்டா இருக்கனும்.

அப்பாறமா உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு பார்க்கனும்.(இது உலகத்துக்கு முக்கிமில்லை)
இது கூட ஈஸிதான்.அடுத்த ப்ராசஸ்தான் சிக்கலானது. அதாவது இது ரெண்டுத்துக்கும் இடையில உள்ள இடைவெளிய ஸ்டெப் பை ஸ்டெப்பா ஃபில் அப் பண்ண “ரகசியமா” முயற்சி பண்ணனும்.

அட் தி சேம் டைம் இந்த ரெண்டுத்துக்கும் இடையில ரெம்ப காண்ட்ராடிக்சன் இருந்தா அதை குறைக்க பார்க்கனும். இல்லாட்டி சைக்கியாட்ரிஸ்டுகிட்ட போக வேண்டி வந்துரும்.

ஃபைனலா உண்மையில நீங்க யாருன்னு கண்டுபிடிக்கனும்.அதுக்கான ஆரம்பங்கள் உங்களுக்குள்ள இருக்கும். (விதையா -ரா மெட்டீரியலா -ஸ்பேர் பார்ட்ஸா) விதையா இருந்தா விதைக்கனும். ரா மெட்டீரியலா இருந்தா ப்ரொடக்சன் ப்ராசஸ் ஆரம்பிக்கனும். ஸ்பேர் பார்ட்ஸா இருந்தா ஃபிட் பண்ண ஆரம்பிக்கனும்.

கரணம் தப்பினால் மரணம்ங்கற மாதிரி லொள்ளு பிடிச்ச டெக்னிக் இது. ங்கொய்யால எனக்கு நிம்மதி தான் முக்கியம்ங்கறிங்களா?

உலகம் உங்களை என்னவா நினைக்குதோ அதுவாவே வாழ்ந்துட்டு போயிருங்க. – நாங்க தில்லு துரையாக்கும்னா ” உலகம் முகத்துல பெட்டை நாய் வாயு வெளியேற்ற”னுட்டு ( பாருங்க இதுலயும் மேல் சேவனிசம்) உங்களை நீங்க என்னவா நினைக்கிறிங்களோ அதுவா இருந்துட்டு போங்க.

இன்னாபா இது? இது ரெண்டுமே உண்மையில்லேனு நீயே சொல்ட்டு இப்பம் அஜீஸ் ஆயிருங்கறயேனு கோவிச்சுக்காதிங்க.

உண்மை நிம்மதியை தராது. உண்மைங்கறது மரணம். மரணமே ஒரு அக்மார்க் உண்மைதானே. நீங்க உண்மைய தேடற கொலம்பஸா இருந்தா உண்மையிலயே நீங்க ஆருன்னு கண்டுபிடிங்க. அதுக்கு சில டெக்னிக்ஸ்,ஃபார்முலால்லாம் இருக்கு அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம். இந்த ப்ராசஸ்ல ஸ்டெப் 1 தான் தில்லு துரைகளுக்கான கேள்விகள். இதுக்கு பதிலளிக்கிறவுகளுக்கு மட்டும் தான் ஸ்டெப் 2 ல வாய்ப்பு ( அப்படி போடு அருவாளை)

திரு.ஜானகிராமன் தில்லு துரைகளுக்கான என் கேள்விகளுக்கு பதில் தந்திருக்காரு. இங்கே அழுத்தி அதை படிங்க.. நீங்களும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ட்ரை பண்ணுங்க. எதுனா தேறலாம்.

Advertisements

9 thoughts on “நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்

  Ismail said:
  June 11, 2011 at 4:37 am

  //உண்மை நிம்மதியை தராது. உண்மைங்கறது மரணம். மரணமே ஒரு அக்மார்க் உண்மைதானே.//

  அய்யா சும்மா கொட்டுறீங்களே . பேசாம ஜோதிடத்தை விட்டுட்டு ஆன்மிகம் பக்கம் முழுசா போய்டுங்க.

   S Murugesan said:
   June 11, 2011 at 5:45 am

   வாங்க இஸ்மாயில்,
   கொட்டுதா? அது எங்கருந்தோ கொட்டுது. எல்லார் மேலயும் கொட்டுது.அவிக வழிய விட்டுர்ராய்ங்க. அதான் வித்யாசம்

    தல பதிவு சூப்பர் ..
    ஆன்மிக பாதையில் சென்று கொண்டே குடும்ப வாழ்வு வாழ்பவர்களுக்கு இது ரொம்ப உதவும்….

    //உண்மை நிம்மதியை தராது. உண்மைங்கறது மரணம். மரணமே ஒரு அக்மார்க் உண்மைதானே.//
    இந்த கருத்தில் எனக்கு (என் புத்திக்கு ) உடன்பாடு இல்லை…

    நிலையான உண்மை உணர்வது மட்டுமே நிம்மதியை தரும் …மற்ற அனைத்தும் நிம்மதி போன்ற உணர்வை கொஞ்ச காலம் வேண்டுமானால் தரலாம்..
    பகவத் கீதை கிருஷ்ணன் வாழ்வு உங்கள் பதிவுக்கு ஒரு உதாரணம்…நீங்கள் சொல்லும் மூன்று நிலையிலும் வெற்றி கண்டவன்

  raju said:
  June 11, 2011 at 6:15 am

  nee andrava? tamil nada?
  nee YSR and JJ pathi pesare
  nee joshiya karana? appadinna jathagatha
  mattum paathu palan sollu.
  Naan solren .un palaya pothova podathe.
  ippa nee kelattu ???
  onakku thairiyam iruntha intha commenta podu
  yenna?oru payalum un blog kku comment podaliya allathu nee delete pandriya?

   S Murugesan said:
   June 11, 2011 at 8:02 am

   வாங்க ராஜா!
   உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இந்த கொலைவெறி?

  yogi said:
  June 11, 2011 at 10:55 am

  யாருப்பா அது ராஜன் யாருபெத்த புள்ளாயோ முருகேசன் சொல்ரதுல எதுனா தப்பா இருந்தா சுட்டிக்காட்டுஙக அத விட்டுட்டு அவர நீ வா போ நு அனாகரீகமா பெசாதிங்க மொதல்ல மரியாதையா எப்டி எழுதுரதுனு கத்துகிட்டு வாங்க அப்புரமா கமென்ட் எல்லாம் போட ட்ரை பன்னுங்க‌

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 1:31 am

  ஐயா ராசு கண்ணா,
  மேட்டர தமிழ்ல போடு ராசா. இங்கிலிபிஷ்ல வீக்குப்பா. ஒன்னும் புரிலபா. கோச்சுக்காத. எதுனா பேசி தீத்துக்கலாம் கண்ணு.

  ஆமா யாருப்பா அந்த ரவுடி ?

   S Murugesan said:
   June 13, 2011 at 1:16 am

   ஜா.ரா !
   பதிவோட தலைப்பு சப்ஜெக்டுல டெப்த் இல்லாம பீத்திக்கற பார்ட்டிங்களை குறிக்குது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s