தில்லு துரை(கள்) : ஜானகிராமன் பதில்கள்

Posted on

பேட்டி:
கேள்விகள்: சித்தூர்.முருகேசன்
பதில்கள்: திரு.ஜானகிராமன்

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

வாழ்வில் நிறைய அடிபட்டிருப்பதால் – என்னை ஒரு ” சிவனடியார் ” னு மக்கள் ஏத்துகிட்டா போதும்..

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

உண்மையில் அவர்கள் எனக்கு ஆதரவாக இல்லை.. அதுவே என்னை செம்மைபடுத்தியது…

18 வயதிலிருந்தே தனிக்குடித்தனம் தான்…

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

எவ்வளவோ விரும்பியும் – பெங்களூவில் சட்டம் ( 5 ஆண்டு திட்டத்தில் ) படிக்க சென்றும் எனது விதி அதை முடிக்க விடவில்லை. 3 ஆண்டுகளில் ஓடிவந்துவிட்டேன் ( படிக்க முடியாமல் அல்ல )

” காலத்தே பயிர் செய் என்பது போல.. இளமையில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் தராது

படியுங்கள்.. படியுங்கள் .. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..”

பின்னால் விரும்பினாலும் கிடைக்காது…

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

நிச்சயமாக இல்லை.. படித்ததிற்கும் இன்றைய எனது வாழ்விற்கும் ஏழாம் பொருத்தம்.

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

இல்லை…ஒரு ஆண்டு காலம் ஒரு தனியார் கணிணி நிறுவனத்தில் படித்த அனுபவம்

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

18 வயதிலேயே ஆன்மிக வாழ்வில் நுழைந்தேன். எதோ இன்று வரை அந்த இறைவன் புகழ்பாடியே ஜீவனம் ஓடுகிறது.

வலைத்தளமும் பதிவரான அனுபவமும் – சற்றேறக் குறைய 6 மாதங்களே ஆகின்றன…

சுப்பையா வாத்தியாரின் வகுப்பறையை பார்த்து தான் இதுபோல நாமும் முயற்சித்தால் என்ன என்று

தோன்றியது..

ஒரு முகலாய நண்பர் பிளாகர் பற்றிய செய்திகளை சொல்ல அதன்பின் முயன்று கற்று இன்று ஒரு பதிவராக

இறையருளால் வலம் வருகிறேன்…

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

நாங்கள் படித்த காலத்திலேயே செக்ஸ் அறிவு என்பது உயர்நிலை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இன்றைக்கு சொல்லவே வேண்டாம்.. இரு பாலரும் இதற்காக எதையும் தியாகம் செய்துவிடுகிறார்கள். இது உலக இயற்கை .. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தோணவில்லை…

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே..

இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

ஆகா.. கஷ்டப்பட்டிருக்கிறேன். எனது முதல் குழந்தை பிறந்த சமயத்தில் அவனுக்கு பால் வாங்க கூட காசில்லாமல் அலைந்திருக்கிறேன்.. எனது லைப் ஒரு டிராஜடி

( உங்களுக்கு தான் பர்சனலாக எழுதியிருக்கேனே ? )

முதலில் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சமயோசிதம் போல செய்யுங்கள்..

சும்மா மட்டும் இருக்காதீர்கள் – அது மனதையும் உடலையும் கெடுத்துவிடும்…

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

கால்ப் லவ் ? உண்டு .. பள்ளியில் படித்த காலத்தில் எனது சக தோழியின் மீது ஏற்பட்டிருந்தது..

அது காதலா என்றே தெரியாது… ஆனால் காதலித்தேன்.. பிறகு அவர் வேறு ஊருக்கும் சென்றுவிட்ட பிறகுதான்

அது காதல் அல்ல என்பது புரிந்தது..

சத்தியமா நம்புங்கப்பா.. சில்மிஷம் லாம் பண்ணலே – பண்ற வாய்ப்பு கிடைக்கலே..

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

நீங்கள் சொல்வது உண்மை.. காரணம் இன்றைய கலாச்சாரம்..

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

எனக்கென்னமோ ? பெண் சனத்தொகை குறையிறதனாலே பாதிப்பு என்பதை விட – கலாச்சார சீர்கேடால் தான் பாதிப்பு என்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதாலும் + எல்லோரும் அஜீத், சூர்யாவையும், அனுஷ்கா, பாவனாவையுமே எதிர்பார்த்தால் ?

அதான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ? 32 வயதாகியும் திருமணமாகாத ஆண் + பெண் இருபாலரையும்..

எப்படியோ நாமெல்லாம் தப்பிச்சுட்டோம்…

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

மிகமிக ஏமாற்றமே அடைந்திருக்கிறேன்.. அதுவும் ஒரு ஆன்மிக பேச்சாளராக நான் சென்ற பல

இடங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பார்த்து வெறுப்பு தான் மிச்சம்..

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

சத்தியமாக மலிந்துவிட்டது…பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே…

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

இரண்டுமே..

என்னைப் பற்றி கவலைப்படும்போது – மிரட்டுகிறது..

உலகத்தைப் பற்றி நினைக்கும்போது – பரிதாபப்பட வைக்கிறது..

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

நீ வாழ பிறரை கெடுக்காதே…

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

அவசியம் தான்.. இது தானே உலக இயக்கமே ? ஆனால் அதில் ஒரு வரையறையும் ஒழுக்கமும் வேண்டும்

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

உதவி தான் .. அனுபவிக்காத எந்த ஒன்றின் மேலும் நமக்கு தீடிரென பற்று வரும்.. சோ.. அனுபவித்து

கழித்துவிட்டால் அதன்மீதான மோகம் தணியும்.. ( தணியுதா ? )

எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே – இது தான் ஆன்மீகம்

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

ஒப்பிட விரும்பவில்லை –

அது காலத்தின் பரிணாம வளர்ச்சி..

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

சத்தியமாக.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

உணவும் ஊறுகாய்க்கும் உள்ள வித்தியாசம் போல…

வாழ்க்கைக்கும – இவற்றிற்கும் வித்தியாசம் அறிவது நன்று..

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

வலையுலகில் – இந்த இரண்டிலும் இன்னும் அனுபவம் ஏற்படவில்லை

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

நிறைய சொல்லனும்.. வகுப்பறை, உஜிலாதேவி, அனுபவ ஜோதிடம், ஆண்டவன் அனுபூதி

வந்தேமாதரம், வசந்த மண்டபம், ஆகமக்கடல், கேள்வியும் நானே பதிலும் நானே, சித்த ஜோதிடம்,

அனுராதா, முத்துச் சிதறல்கள், பனித்துளி சங்கர், சிவக்குமாரன் கவிதைகள், ( அதனதன் பதிவர்கள் )

இன்னும் நிறைய – நல்லன சொல்லும் எல்லா சகோதர சகோதரி வலைப்பூக்களும்..

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

எனது 34 வயது வரை நம்பியதில்லை.. கடந்த ௨ ஆண்டுகளாக நம்பத் துவங்கி + கற்கத் துவங்கி + கணிக்கவும் துவங்கியிருக்கிறேன்..

விசயம் இருக்கிறது… நடைமுறையில் ஒத்துப் போகிறது..

அனுபவ ஜோதிடமா ?

மொழியில் + எழுத்து நடையில் மாற்றம் தேவை…

சொல்ல வந்த விசயத்தை தெளிவாக சொல்ல வேண்டும்.. பெரும்பாலும் புரிவதேயில்லை

( எனக்கு அறிவு கம்மியோ ? ) எதையும் உருப்படியாக சொல்லி முடிப்பது போல தெரியவில்லை..

பாமரனுக்கும் புரியும்படி எழுத வேண்டும்.. முக்கியமாக ஆரம்பித்த விசயத்தை

முடித்துவிட வேண்டும்..

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

அப்படியில்லை எந்த மனைவி இத்தனை கேள்விகள் கேட்டு எந்த கணவன் இத்தனை

பதில் சொல்லியிருக்கான் ? நிச்சயமாக அனுபவ ஜோதிடத்திற்கு நன்றி பாராட்டுகிறோம்..

எங்கள் மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி..

இதனால் மேலும் எங்களுக்கு ( எங்கள் உணர்வுகளுக்கு ஏற்ற ) நண்பர்கள் கிடைப்பார்களே ?

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம்

எதுனா இருந்தா சொல்லுங்க

அப்பா தலை – இதை எங்கே போடறே ? ன்னு சொல்லிடப்பா ? அனுபவ ஜோதிடத்திலே

சில ஆப்சனை சேர்த்தா சொன்ன கண்டுக்கறதே இல்லை.. இனிமேலாச்சும் அதை செய்யுங்கப்பா ,,

இதை நீங்க பிரசுரிச்சீங்களா ? இல்லையானு தெரிஞ்சிக்கவே நான் ௭ தடவை உள்ளே வரனும்..

சோ.. நான் ஏற்கனவே கேட்டிருக்கும் பின் ஊட்டத்திற்கான மெயில் ஏற்பாடுகளை செய்யவும்.

பின் குறிப்பு – நீங்க கேட்கும் இந்த கேள்வி பதில் பகுதியை விளையாட்டா நினைக்காமா இதை பதிவர்களின் பயோ டேட்டா என்னும் அளவுக்கு செம்மையாக்குங்கள்… நன்றி.

இங்கு இதுபோல பதில் தர வரும் அன்பர்களும் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்

கொள்ளுங்கள்.

நன்றி – திருச்சிற்றம்பலம்

Advertisements

9 thoughts on “தில்லு துரை(கள்) : ஜானகிராமன் பதில்கள்

  Sankar Gurusamy said:
  June 11, 2011 at 11:58 am

  திரு ஜானகிராமன், அருமையான பதில்கள். தங்களைப்பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..

  கேள்விகள் கேட்டு பதிவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைத்து தந்த திரு முருகேசனுக்கு நன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  டவுசர் பாண்டி said:
  June 12, 2011 at 1:27 am

  ஹையா, இந்த பேட்டி பதிவு சூப்பரா இருக்கே. ஜானகி ராமன் அவர்களது பதில்கள் அருமையாக உள்ளது. ஜா.ரா அவர்களும் ஒரு ஜோதிடர் என்பதை பேட்டியில்தான் தெரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.

  /////சத்தியமா நம்புங்கப்பா.. சில்மிஷம் லாம் பண்ணலே – பண்ற வாய்ப்பு கிடைக்கலே..////
  ஹா ஹாஹா ஹா…. ஒளிமறைவில்ல்லாத பதில்.

  கேள்விகளும் சூப்பர் பதில்களும் சூப்பரோ சூப்பர்.

  வணக்கம் முருகேசன் சார்,

  எனது கருத்துக்களையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி…
  இதனால் எங்களுக்கு பல புதிய நண்பர்களும் அறிமுகமாகிறார்கள்..
  ஒரு நல்ல நட்பு பாலத்தை இணைக்கின்ற பெருமையும் புண்ணியமும் உங்களைச் சேரும்..

  எனது வேண்டுகோள்களையும் கொஞ்சம் செய்யுங்க..
  முக்கியமா subscribe via email ( கமண்ட்களை ) நம்ப மின்னஞ்சல்லேயே
  பெறும் வசதி..

  அப்போதான் நமது கருத்துக்களுக்கு பின் ஊட்டமிடும் அன்பர்களுடைய கருத்துக்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும்..

  நமக்காக பின் ஊட்டமிடுபவர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் அது மரியாதைக் குறைவு அல்லவா ?

  எனவே முதலில் இந்த வசதியை ஏற்படுத்தவும். நன்றி.

  இப்போ பாருங்க .. நான் இங்கே கமண்ட் பண்ணினது உங்களுக்கு தெரிஞ்சி நீங்க எனக்கு ரிப்ளை பண்றீகளா இல்லையா னே தெரிஞ்சிக்க முடியறதில்லே..

  நன்றி…

   டவுசர் பாண்டி said:
   June 12, 2011 at 2:56 pm

   ஜானகிராமண்ணே,

   கேள்விகளா? ………எஸ்கேப்? நம்ம கைலயும் கட்டுக்கட்டா வெட தெரியாத கேள்விகல் நெரிய இருக்குனே. கேள்விதான் ஆரும் கேக்கலாமே? எனக்குள் ஆயிரம் கேள்விகள்? நான் யார்?……. அப்டின்னு ஆரம்பிச்சி முடிவில்லாம போய்க்கினேருக்கு. சரி அப்டி என்னத்த பெருசா கேட்டுரப்போரீங்க. நைனா இருக்கும்போது நமக்கென்ன கவலை? கேளுங்க? கேளுங்க? கேட்டுக்கினேருங்க!

   S Murugesan said:
   June 13, 2011 at 1:19 am

   ஜா.ரா !
   //subscribe via email//
   http://feeds.feedburner.com/kavithai07 இதுதான்னு நினைக்கிறேன். ட்ரை பண்ணி பாருங்க..

  வணக்கம் சங்கர் குருசாமி அவர்களே,

  தங்களோடெல்லாம் நட்பு வைத்திருப்பது இறைவன் தந்த கொடையே..
  நம் நட்பை மேலும் சீராக்கும் முருகேசன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  வணக்கம் தோழர் டவுசர் பாண்டி அவர்களே,

  இன்னும் ஜோதிடர் என்று சொல்லும் அளவிற்கு தயாராகவில்லை..
  படித்து வருகிறேன்..

  நிறைய சந்தேகங்கள்.. விளக்க யார் தயார் என்றாலும் கேள்விகளை கேட்க நான் தயார்…

  நன்றி தோழரே..

  s.n.ganapathi said:
  June 13, 2011 at 2:08 am

  அன்புடன் வணககம்
  அட இது நம்ம சிவசிமஜா தளம் !!!!
  எல்லாருக்கும் இரண்டு முகம் உண்டு என்பார்கள்!!! பெரும்பாலும் இன்னொரு முகம் கொஞ்சம் சரி இருக்காது ??
  பரவாஇல்லை உங்களுக்கு ரெண்டு முகமுமே நன்றாக உள்ளது.(ஊறுகாயும் வேண்டும் ,)இறைவன் கருணை மிக்கவன்.(1..முகம்.) சில நேரங்களில் மறகருனயும் காட்டுவான் (2.-முகம் ) ராவணன் .இமயத்தை தூக்கும்போது விரலால் அழுத்தி சாமகானம் பாடவைத்தது ? !!!வாழ்த்துக்கள் .சகோதரரே!!

  அனுபவ பதில்கள் அருமை 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s