சுகுமார்ஜி கேள்விகளுக்கு சி.எம் பதில்

Posted on

முதல்வர்னதுமே உங்களுக்கு அம்மா ஞா வந்திருக்கும். சமச்சீர் கல்வி, சட்டமன்ற கட்டிடம் தவிர்த்து பார்த்தா அம்மாவோட ஸ்டாண்ட் மத்த எல்லா மேட்டர்லயும் “வித்யாசமாவே” இருக்கு.

அதுலயும் இலங்கை மீது பொருளாதார தடை தீர்மானம் நெத்தியடி. தமிழின காவலர்கள் எல்லாம் “ஓய்வில்” இருக்க ( வேலையில இருக்கிறப்பயும் என்னத்த கிழிச்சாரு) அம்மான்னா அம்மாதான் நிரூபிச்சிருக்காய்ங்க.

தமிழக நதிகள் திட்டம் எஸ்பெஷலி எனக்கு ரெம்ப சந்தோசம். ஆனா இதை ஹைலைட் பண்ணி மத்த இலவசத்தையெல்லாம் 6 மாசம் தள்ளிப்போட்டிருந்தா நிதி நிலைமை சீராகியிருக்கும். ஹும் பத்தோட பதினொன்னா இருந்தாலும் அறிவிச்சிருக்காய்ங்களே சந்தோசம்.

இதை இளைஞர்களோட பங்களிப்போட ( இளைஞியரும் தேன்) முன்னெடுத்து சென்றால் தூள் பண்ணலாம். பார்ப்போம்.

இப்ப முதல்வரின் பதில்கள் பதிவுக்கு வந்துருவம். முதல்வர்னா ஆங்கிலத்துல C.M ங்கறோம். நாம Chittoor Murugesan. சந்திரபாபு மேல வழக்கு போட்டதுலருந்து மஸ்தா பேரு செல்லமா நம்மை CM னு குறிப்பிடுவதுண்டு.

ஆனால் நமக்கு அந்த பதவி மேல ஆர்வமில்லை. (சதா ..சென்டர்ல கையேந்திக்கிட்டு கிடக்கனும். பதவின்னா தாளி நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியானா கொஞ்சம் போல ட்ரை பண்ணி பார்க்கலாம்)

ஆக மொத்தத்துல இந்த பதிவின் தலைப்பு ஜெ பதில்கள் அல்ல. சித்தூர் முருகேசன் பதில்கள்.

நம்ம சுகுமார்ஜீ கேட்டிருந்த வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் இந்த பதிவுல பதில் தரப்போறேன்.

1) உங்கள் ஆப்பிரேசன் இந்தியாவுக்கான திட்டங்களில், குழந்தைகள் அவர்களின் கல்வி குறித்து எந்த திட்டமும் இல்லையே ஏன்?

என்னைப்பொறுத்தவரை அரசை விட பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் ,அவர்கள் கல்வி மீது அக்கறை அதிகம். சனத்துக்கு வேலை வாய்ப்பை கொடுத்து பசி பட்டினி வறுமைய ஒழிச்சுட்டா அவிக குழந்தைகளுக்கு என்னா மாதிரி படிப்பு வேணமோ அவிகளே டிசைட் பண்ணிக்குவாய்ங்க.

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி ஒட்டு மொத்த மறுமலர்ச்சியை கொண்டு வந்துரும். அப்பம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள் தன்னிச்சையா தோன்றும். என்னை கேட்டா ஒரு மேட்டரை சீரழிக்கனும்னா அதுல அரசாங்கத்தை நுழைச்சா போதும்.

ஆமை புகுந்த வீடும் அரசு புகுந்த துறையும் உருப்படாது.ஆனால் ஆ.இ.2000 திட்டத்தின் பிற்சேர்க்கையான எக்கானமி பேக்கேஜ்ல திட்டவட்டமா சொல்லியிருக்கேன்.

படிப்புங்கறது மாணவனுக்கு அவன் உடல்,மனம்,புத்தி,ஆத்மா, பெற்றோர்,குடும்பம்,தெரு,பேட்டை, மாவட்டம் ,மானிலம், நாடு,கண்டம்,உலகம் குறித்த புரிதலை தரனும். சுய நலம் பொது நலத்தை பொசுக்கும் நிலை வந்தா அதை துக்கியெறியற மோரல் ஸ்ட்ரெங்த் அவனுக்கு/அவளுக்கு கிடைக்கனும்.

18 வ்யசு முடியறதுக்குள்ள அவன் தன் சொந்தக்கால்களில் நின்று சொந்த முயற்சியில் தான் விரும்பிய கல்வியை பெற முடியனும். ( ஐ மீன் பார்ட் டைம் ஜாப்ஸ்)

2) ஒரே பிரபஞ்சம், நம்மைபொறுத்தவரை ஒரே பூமி, ஒரே சந்திரன் எனினும் ஒரே தளத்தில் இரண்டு நபர்கள் கூட இயங்க முடிவதில்லையே, இது வரமா இல்லை சாபமா?

இல்லை பாஸ்! ஒரே தளத்தில் இயங்கும் ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவிகளுக்குள்ளே கம்யூனிகேஷன் இல்லை – ஒருங்கிணைப்பு இல்லை. தட்ஸால். இதை விஞ்ஞானப்பூர்வமா சோஷியல் நெட் ஒர்க் சைட்ஸும்
மெய் ஞான பூர்வமா தியானமும் விரைவிலேயே சாதிக்கும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.

3) இறப்பு என்பது நிச்சயமாக் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அடுத்தவனை குறித்து ஒரு நொடி சிந்தனையே இல்லாமல் தான், தனது என வாழும் மனிதர்கள்களை இயற்கை என்ன செய்கிறது? குறிப்பாக பழிவாங்குகிறதா?

இல்லிங்க பாஸ் . தன்னுடனான லின்கை கழட்டி விட்டுருது. அவன் ஒரு கூட்டில் அடைபட்டு போயிர்ரான். அவனோட வெற்றி, செல்வம், மகிழ்ச்சி கூட அவனை மகிழ்விக்க முடியாத நிலை ஏற்பட்டுருது. அவன் ஒரு தீவா இருக்கிறவரை அலைகள் அவனை அச்சுறுத்திக்கிட்டே இருக்கும். இந்த கடல்ல கரைஞ்சு போயிட்டான்னா எவ்ரி திங் வில் பீ ஓகே.

உயிரின் அடிப்படை உணர்வு பரவுதல். பொது நலம் இதை சாத்தியமாக்குது. சுய நலம் அவனை சுருக்கிருது. தான் உயிரோடதான் இருக்கமா? தன்னை சுத்தி உள்ளவுக உசுரோட தான் இருக்காய்ங்களாங்கற சந்தேகம் வந்துருது. அதனாலதான் கொல்லாம கொன்னுக்கிட்டு – தற்கொலை அல்லாத தற்கொலைகளை செய்துக்கிட்டு தவிக்கிறான்.

4) செக்ஸ் குறித்த விழிப்புணர்வுக்கு, உங்கள் திட்டம் என்ன? எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?

நீங்க திருச்சில இருந்து புறப்பட்டு சித்தூர் வரனம்னாலும் அதே நேரம் தான், நான் சித்தூர்லருந்து திருச்சி வரனும்னாலும் அதே நேரம்தான். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல புறப்பட்டா மையத்துல சந்திச்சுரலாம்.அதுவும் பாதியளவு நேரத்துல.

அதனால இரு முனைகளிலும் ஆரம்பிக்கனும். ஐ மீன் குழந்தையின் கர்ப காலம் தொட்டே தாய்க்கு வழங்கினா அது பாப்பாவுக்கும் போய் சேரும். இது ஒரு முனை. அடுத்து வயது வந்தவர்களுக்கும் இது தரப்பாட்டாகனும்.

5) சிவலிங்க ரூபத்தில் மறைமுகமாக உயிர் உறுப்புக்களை வணங்கவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் செக்சில் ஒருவனோ, ஒருத்தியோ திளைப்பது சரியானதுதானே?

உயிர் உறுப்பு ? புதிய பிரயோகம். இவை உடலின் மையங்கள் மட்டுமல்ல. மனதின் மையங்களும் தான். நீங்க என்னதான் பம்பாடு, நாகரீகம்னு பம்மாத்து பண்ணாலும் உங்க மைண்ட் அங்கனதான் குவியும். மனம் குவிப்பது தியானம் அல்ல என்றாலும் தியானத்துக்கான முதல் படி எண்ணங்களை ஒரு புள்ளியில் நிறுத்துதல்.

அடுத்து செக்ஸில் திளைப்பது. தி…ளை…ப்ப….துங்கற வார்த்தை அருமையான வார்த்தை பிரயோகம். செக்ஸ்ல எவனும் திளைக்கறதில்லை. (செக்ஸ் குறித்த கனவு கற்பனைகளில் திளைப்பது வேறு ). செக்ஸுக்குள்ள தட்டு தடுமாறி என்டர் ஆகிறான். உடனே அது இவனை தூக்கி எறிஞ்சுருது. திருப்பதி சர்வதரிசனம் கணக்கு.

உங்களை ஒரு அரைமணி நேரம் பெருமாள் முந்தி உட்கார வச்சுட்டா என்னாகும்? அடுத்த தரிசனத்துக்கு உங்க மனம் ஏங்க குறைஞ்சது ஒரு வருஷம் பிடிக்கும்.செக்ஸும் அப்படித்தான். அதில் திளைக்க முடிந்தால் உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கும்.

6) ஒரு குழந்தையின் பிறப்பில் தொடங்கும் கர்ப்பச்செல் நீக்கிய காலம், அந்த குழ்ந்தையின் குடும்பத்தில் ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவரை அல்லது திசை இருப்பை குறிக்கிறதா?

அந்த “ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவர்” அதே குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறிக்கலாம்.

7) செக்ஸ் என்ன ஒன்றிலிருந்து தோன்றியதனாலயேதான், அதுலிருந்து மீள முடியாதிருக்கிறோமா?

இல்லிங்க. அங்கன ஆரம்பிக்க வேணம்னா இது காரணமா இருக்கலாம் ஆனால் ஆரம்பிச்ச இடத்துலயே நின்னுர இந்த சமூகம் தான் காரணம். நாம ஒவ்வொருத்தரும் சைக்காலஜில சொல்ற ஆசனப்பருவத்தை கடந்து தான் ஆகனும்.

நம்ம கவனம் இன உறுப்பு பக்கமா டைவர்ட் ஆகும்போது தடுக்கப்படறோம். அதனால தான் வாய் சொல் வீரர்களா, தின்னி பண்டாரங்களா,ஹோமோவா மாறிர்ரம். இந்த தடைக்கு மட்டும் தடை விதிக்கப்பாட்டால் சரியான விழிப்புணர்வு உள்ளவன் ரெண்டு வருஷத்துல செக்ஸ்லருந்து ஜம்ப் ஆயிரலாம்.

குண்டலி யோகாப்படி பார்த்தாலும் ஆக்னா ( ஆசனத்துக்கு சற்று மேல்) ஸ்வாதிஷ்டானம் (இன உறுப்புக்கு சற்று மேல்) இந்த தியரி சரி.

பயணம் தொடரனும். அது தொடர செக்ஸை தாண்டனும். தாண்டனும்னா அதுல இறங்கித்தானே கரையேறனும். தின்னு கழியவே 30 வயசு போயிருது. அப்பாறம் செக்ஸ். இந்த சந்தர்ப்பத்தையும் சரியா உபயோகிச்சுக்க முடியாத அளவு பிரச்சினைகள். இவன் காமச்சேற்றிலிருந்து கரையேற முடியாம அதுலயே மூழ்கி செத்துப்போயிர்ரான்.

சிறுமியை கற்பழித்த 90 வயது முதியவர்லாம் இந்த கேஸுதேன்

8) செக்ஸ் என்ற தாகத்தை, ஒரே மூச்சில் தண்ணீர் குடித்து தணிக்க என்ன செய்யலாம்?

அஸ்கு புஸ்கு .. நம்ம கில்மா பதிவுகளையெல்லாம் மனப்பாடம் செய்து ப்ராக்டீஸ் பண்ணி அப்ளை பண்ணாலும் உங்க ஒக்காபிலரில சொன்னா “திளைச்சாலும்” இடைவெளி அதிகரிக்கலாமே தவிர இந்த மேட்டர்ல லைஃப் டைம் வேலிடிட்டி எல்லாம் கடியாதுங்கோ. மந்த்லி டாப் அப் தேன்.

9) ஜோதிடம் பார்ப்பதினாலும் அல்லது பார்க்காமலேயே வாழ்வதனாலும், பிறப்பின் நோக்க்த்தை அடைவதில் நிறைவோ, குறைவோ ஏற்படுகிறதா?
ஹ்யூமன் மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல தேவையான எல்லா சாஃப்ட் வேரும் போட்டுத்தான் அனுப்புது இயற்கை. அதுக்குள்ள ஈகோங்கற வைரஸ் புகுந்து குழப்படி பண்ணிருது. அப்பம் சோசியம், தியானம் இதெல்லாம் ஆன்டி வைரஸ் மாதிரி வேலை செய்யுது.

யூனிவர்சல் மைண்டோட – வாழ்ந்தா ஜோதிடம்லாம் தேவையே இல்லை. என்ன பண்றது சனம் யூனிவர்சல் மைண்டோட வர்ர குழந்தைக்குள்ளே ஈகோவை இஞ்ஜெக்ட் பண்ணி பண்ணி தன்னை இந்த படைப்பின் மையமாக கருதும் கெட்டப்பழக்கத்தை உருவாக்கிர்ராய்ங்க. பஸ் ட்ரைவருக்கே எந்த ரூட்ல போகனும்னு தெரியாத பூட்டா என்னாகும் ? ஒவ்வொரு ஜங்க்ஷன்லயும் பஸ் ரைட்டுக்கும் லெஃப்டுக்கும் அலைபாயுது.

அப்பம் ஆரோ ஒரு பயணி “யோவ் ட்ரைவர் லெஃப்ட்ல திருப்புய்யா ..என்ன ரூட்டுக்கு புதுசா”ன்னு கூவ வேண்டியிருக்கு.

10) தங்களைப்போல ஜோதிட தாகம் கொண்டோருக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் ஏதேனும் ஜோதிட கல்வி நிலையம் தொடங்குவது போன்ற சிந்தனையுண்டா?

ஹய்யோ ஹய்யோ.. நானே இன்னம் கத்து முடியலை. இதுல கல்வி நிலையம் வேறயா? ராகுலை பிரதமாராக்கின கதையாயிரும் பாஸ்.. அதுக்கெல்லாம் சுப்பையா சார் மாதிரி பார்ட்டிங்க இருக்காய்ங்க. ஆள விடுங்க.

Advertisements

22 thoughts on “சுகுமார்ஜி கேள்விகளுக்கு சி.எம் பதில்

  sugumarje said:
  June 10, 2011 at 4:20 am

  மிகுந்த அர்த்தமுள்ள, சிந்தனை தூண்டும் பதில்கள்… வாழ்த்துகள் அய்யா…

   S Murugesan said:
   June 10, 2011 at 4:39 am

   வாங்க சுகுமார்ஜீ,
   கேள்வி பதில் ப்ரோக்ராம் க்ளிக் ஆனால் அந்த வெற்றியில் கேள்வி கேட்டவர், பதில் சொன்னவர் ரெண்டு பேருக்குமே சமப்பங்கு உண்டு

  அருமையான பதில்கள் தல 🙂

  viji said:
  June 10, 2011 at 9:25 am

  ஆக்னா ( ஆசனத்துக்கு சற்று மேல்) athu mulatharam. aghna puruvamaththeil.

   S Murugesan said:
   June 10, 2011 at 1:26 pm

   விஜி,
   நமக்கு பை பர்த் குண்டலி ஆக்னால இருந்ததா/இருக்கிறதா ஒரு எக்ஸ்பெர்ட் சொன்னாரு. (அதான் ஆணை மேல ஆணையா வெளியிட்டுக்கிட்டே இருக்கோம் போலும்) அது நெஜம் தானா என்னனு புரியலை. தான் இருக்கிற இடத்தை சுட்ட வச்சுருச்சு போலும். எனி ஹௌ.. தவறை திருத்தியமைக்கு நன்றி.

    sugumarje said:
    June 10, 2011 at 3:26 pm

    தாங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை… ஒரு பிறந்த குழந்தை முதற்கொண்டே குண்டலினி ஒரு சக்தியாக மட்டுமே இருக்கிறது… அதன் அப்பொழுதைய இருப்பிடம், ஆக்ஞை யின் உள்ளே…. மூளையின் அடிப்புறத்தில் சிவ சிவா?! ( அனுபவத்தை வாங்கிக்கொண்டு வெறுமனே) என்று இருக்கிறது… அந்த குழந்தையின் பருவ வயதில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி உயிர் உறுப்புகளின் சுரப்பி அல்லது சக்கரம் அல்லது மூலாதாரம் வந்தடைகிறது…

    அதுக்கப்புறம்…. நாமதான் அதிலேயே நிக்கிறோமே… அப்புறம் என்ன அப்புறம்… சப்பரம் (அதாங்க தேர்)

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 1:33 am

    ஆஹா அருமையான விளக்கம். ஓஹோ இதான் சங்கதியா.

  தல,
  follwers கெஜெட் மாதிரி அப்படியே ஹிட்ஸ் கெஜெட் ஒன்னு வையுங்க …எத்தனை பேரு வந்து படிக்கிறாங்க …ஒண்ணுமே பிரியல…
  தினமும் 1000 ஹிட்ஸ் வந்துச்சுனா நாமளும் ஊருக்குள காலரா தூக்கி விட்டுகிட்டு நடக்கலாமுல 🙂

  தல,
  அந்த கும்புடு போட்டுக்கிட்டு இருக்கிற பழைய முருகேசு போட்டவ தூக்கிட்டு…..முகத்துல்ல தேசஸ் இருக்குற மாதிரி போட்டவ……இப்போ இந்த தளத்துள்ள முகப்புல நல்ல தேசஸ் யோட போட்டோ இருக்கே அந்த மாதிரி போட்டவ போடுங்க..

  இன்றைய சமுக மனநிலைக்கு கும்புடு முருகேசு சரி இல்லை..ஒருத்தன் கும்புடு போட்டவே….இவன் நம்மை ஏமாத்தி புடுவானோ என்று நினைக்கிறார்கள்

  அதனால தான் ஆரம்ப காலத்துள்ள ஹிட்ஸ் வரல போல….

  பழைய பிம்பத்தை அப்பதிக்கு அப்போ தூக்கி போட்டு எரிச்சிகிட்டே இருக்கனும்…அதுதான் ஆன்ம பாதையில் செல்லும் யோகிக்கு அழகு.. 🙂

   S Murugesan said:
   June 10, 2011 at 1:22 pm

   வாங்க ராசா !
   ஃபோட்டோ தானே மாத்திட்டா போவுது. ஹிட்ஸ் கவுண்டரு? சாதிக்கலவரம் எதுனா வந்துரப்போவுதுன்னு வைக்கல்லே. இன்விசிபிள் கவுண்டரின் படி நம்ம ஹிட்ஸ் எப்பமோ ஆயிரத்தை தாண்டிருச்சு..

   காலரை தூக்கிவிடறது என்ன? கியாஸ் பலூனே கட்டிக்கிருங்க.

   //ஆன்ம பாதையில் செல்லும் யோகி//

   நல்ல ஆறுதல் வார்த்தை.

    sugumarje said:
    June 10, 2011 at 3:33 pm

    //ஆன்ம பாதையில் செல்லும் யோகி//
    ஏங்க யோகி ஆன்ம பாதையில் செல்லாம வேற எதுல போவாரு… ஓ… நீங்க நம்ம ”நித்திய” பத்தி சொல்றீங்களோ?
    அது சரிதான்… இப்பத்தான் யோகிக்கான ட்ரெண்ட் மாறிப்போச்சே!

    viji said:
    June 10, 2011 at 3:40 pm

    tamilla yappdi type panrathu.neraya mattra vachikkittu thindaduraan.

    sugumarje said:
    June 10, 2011 at 3:48 pm

    Hi, go to NHM.in””and get software, install to your system… follow by the application and choose your language to “Tamil”. Restart your System. now You get Tamil type Software on your System.
    Now come to Comment Box, Key press Alt+2, Type Your Thought 🙂
    Yes… Like சுகுமார்ஜி… Type. su gu ma r ji Now you got சுகுமார்ஜி…
    LET START 🙂

    //காலரை தூக்கிவிடறது என்ன? கியாஸ் பலூனே கட்டிக்கிருங்க.//

    🙂

  sugumarje said:
  June 10, 2011 at 3:40 pm

  முருகேசன் அய்யா… என் வார்த்தை பிரயோகமெல்லாம் தானா வர்ரது… எனக்கு இதிலென்றும் வியப்பு இருந்ததில்லை… ஆனால் என்னிடமே ஒருசிலர்… “ ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம்யா” என்று பாராட்ட கேட்டிருக்கிறேன்… எனக்கு பாராட்டு தேவையில்லை, நம்ம ரஹ்மான் சொன்னது போல எல்லா புகழும் இறைவனுக்கே!

  வாயை கட்டி, காதுகளை திறந்துவைத்தால் இதென்ன, இது போன்ற ஆயிரமாயிரம் வார்த்தைகளை நாம் பெறலாம்.

   S Murugesan said:
   June 10, 2011 at 4:49 pm

   வாங்க சுகுமார்ஜீ,
   அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் சொரிகிறது – இது என் ஒக்காபிலரி. உங்க வியாக்யானம் வேறு. ஆனால் மேட்டர் மட்டும் ஒன்னு. நீங்க சொன்ன ஆக்னா மேட்டர் ஏதோ என் விசயத்துல மட்டும் ஸ்பெசலுன்னு நினைச்சிருந்தேன்.

   நீங்க சொல்ற தியரி லாஜிக்கலா ஓகே. ஆனால் சனம் என்ன சொல்றாய்ங்கனு பார்ப்போம்.

    Ismail said:
    June 11, 2011 at 4:31 am

    அய்யா திரு.சுகுமார்ஜி சொல்வது மிகச்சரி. ஒரு குழந்தை பிறந்துடன் அதன் முகத்தில் இருக்கு தேஜசும் ஒரு நல்ல ஞானம் பெற்ற யோகியின் முக தேஜசும் ஒரே மாதிரி இருப்பதை கவனியுங்கள்.

    மேலும் பிறந்த குழந்தைக்கு சுமார் ஒரு ஆண்டு வரை உச்சி மண்டை இலகுவாக இருக்கும். உச்சி கூடவில்லை என்று சொல்வார்கள். அந்தகுழந்தை தூங்கும்போது தானாக சிரிக்கும். பெரியவர்கள் இதனை குழந்தைக்கு தேவர்கள் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதாக சொல்வார்கள்.

    அதே போல நல்ல மகான்களின் தலை உச்சியும் நம் உச்சியை விட இலகுவாக இருப்பதை கவனித்துப்பாருங்கள். அவர்களிடம் உலகியல் இன்ப துன்பங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பாதிப்பு இருக்காது.

    காரணம் குண்டலினி தலையிலேயே எந்த நேரத்திலும் இருப்பதாலேயே. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு அந்த குழந்தைக்கு நாம் பால் தவிர பிற ஆகாரம் கொடுக்க ஆரம்பித்து நமது சிந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க திணிக்க குண்டலினி கீழிறங்கி சுமார் ஏழு வருட அளவில் முழுமையாக மூலாதாரத்திற்கு வந்து விடும்.

    அதன் பின்னரே அந்த குழந்தையின் உடலில் பாலியல் சிந்தனைகள் (அடிவயிற்றில் குறுகுறுப்பு தெரிய ஆரம்பிக்கும்) தோன்ற ஆரம்பிக்க பிறகு குண்டலினி முழுமையாக மூலதாரதிலேயே நின்றுவிடும்.

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 1:34 am

    இஸ்மாயில் அண்ணே அருமையான பதில்.

    சிவ யோகி said:
    June 14, 2011 at 8:17 am

    //நீங்க சொன்ன ஆக்னா மேட்டர் ஏதோ என் விசயத்துல மட்டும் ஸ்பெசலுன்னு நினைச்சிருந்தேன்.

    நீங்க சொல்ற தியரி லாஜிக்கலா ஓகே. ஆனால் சனம் என்ன சொல்றாய்ங்கனு பார்ப்போம்.//

    முருகேசன் (சந்திரமுகி டயலாக்) பேய் வர்ரத சில அறிகுறிகளை வச்சு தெரிஞ்சுக்கலாம் …அந்த மாதிரி குண்டலினி ஆக்னா சக்கரதுள்ள நிக்குதான்னு சில அறிகுறிகளை வச்சு தெரிஞ்சுக்கலாம்…

    ரஜினி :நம்முடைய கர்மா எல்லாம் ஏறக்குறைய எரிஞ்சு போய்…சும்மா உடம்பு,மனசு எல்லாம் அனுஷ்கா மாதிரி லேசா,லேசா ஆகி இருக்கும்..[[லேசா லேசா …குண்டலினி நீ இல்லாமல் வாழ்வது லேசா லேசா நு பாட்டு பாடனும் போல இருக்கும் ]]
    முருகேசன் :ம்.. ம்… உடம்பு லேசா ஆனமாதிரியே இருக்கேப்பா…ம்…அப்புறம்

    ரஜினி :அப்புறம் நம்ம வாழ்க்கை பாதையை பத்தி நாம கவலை படலினா கூட…. அதுவா ஒரு flow வுல போக ஆரம்பிக்கும்…[நீ திரிசாவுக்கு ஆசை பட்டினு வை..குறைந்த பட்சம் திவ்யா வாவது கிடைப்பா… நீ திரிசாகிட்ட எதிபார்த்த சுகத்த திவ்யா வந்து கொடுப்பா..]
    முருகேசன் :அய்யோ…அது ஒரு flow -வுல தான்பா போய்கிட்டு இருக்கு…ம்….மேல சொல்லு…

    ரஜினி : முருகேசன்,குண்டலினி ஆக்னாவுல நின்னா…எண்ணங்களுக்கு இடையே இடை வெளி அதிகரிக்கும்….[[முந்தி எல்லாம் அனுஷ்காவும் ஹன்சிகாவும் நெருக்கி ஒட்டிக்கிட்டு வருவாங்க….ஆக்ஞாவுல குண்டலினி நின்னுதுன்னு வை அனுஷ்காவும் ஹன்சிகாவும் இருபது முப்பது மீட்டர் இடைவெளி விட்டு வருவாங்க….]]
    முருகேசன்:ம்..அப்பா…. அதுவும் நடக்கும் போல இருக்கேப்பா..எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கேப்பா..

    ரஜினி :இன்னும் சொல்லுறேன் கேளு ..முருகேசன்… குண்டலினி சக்தி அதிகரிக்க அதிகரிக்க நீ வெறும் ஒரு புள்ளியாய் ஆக்நாவில் நிற்பாய்…..
    ஒரு கட்டத்தில் சக்தியின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க உன் பிரஞ்சை உன் உடம்பில் மட்டும் இல்லாமல்…உன் அருகில் உள்ள அனைத்திலும் நீ இருப்பது போல உணர்வு வர ஆரம்பிக்கும்….
    முருகேசன் :அப்பா…எனக்கும் அந்த உணர்வு வர்ர ஆரம்பிச்சிருச்சே யப்பா ..வர்ர ஆரம்பிச்சிருச்சே யப்பா 🙂

  rajeshwar said:
  June 12, 2011 at 6:15 pm

  ………….. nee oru alu one kelviyum bathilum

   S Murugesan said:
   June 13, 2011 at 1:15 am

   ராஜேஸ்வர் தம்பி,
   பேருல Ash , War எல்லாம் வந்தா டப்பா டான்ஸ் ஆடிரும். பேசாம ராஜ்ங்கறதை மட்டும் யூஸ் பண்ணி நாகரீகமா கமெண்ட் போடு.

   இனி சமஸ்கிருதம் எல்லாம் கலந்து கமெண்ட் போடாதே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ..கிழி..ஞ்சுரும்

  முத்துவாப்பா said:
  July 29, 2012 at 8:24 pm

  சினா முனா ஐயா. எதேட்சையாக தங்கள் வலைப்பூ தட்டுப்பட்டது (ஓராண்டுக்கு முன்) அதிலிருந்து தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். இந்தப்பதிவு ஏதோ ஒரு ப்ரவாகம் போல் தோன்றியது. அதனால் பின்னூட்டமிடுவதை தவிர்க்க முடியவில்லை. உங்கள் ஆ.இ 20?? வெற்றிபெற ப்ரார்த்தனைகள். தொடர்ந்து வலைப்பூ இணைப்பில் தொடர்வோம். (வஸ்ஸலாம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s