தில்லு துரைகளுக்கு மட்டுமான கேள்விகள்

Posted on

முன்னுரை:
ஒரு ஜோதிட ஆலோசகனாக சனங்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொ(வெ)றுப்பான நிலையில் இருந்த எனக்கு கேள்வி கேட்க கிடைத்த மொத சான்ஸ் இது. அதனால என் கேள்விகள் “குட்டெத்து சேன்லோ பட்டட்டு” இருக்கும். ( குருட்டு காளை கழனியில இறங்கின மாதிரி) .

முடிஞ்சா அல்லாத்துக்கு பதில் கொடுங்க. இல்லாட்டி முடிஞ்சதுக்கு இப்ப பதில் கொடுங்க. முடியாததுக்கெல்லாம் முடிஞ்ச போது பதில் கொடுங்க.

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

1.

Advertisements

19 thoughts on “தில்லு துரைகளுக்கு மட்டுமான கேள்விகள்

  viji said:
  June 9, 2011 at 4:15 am

  nalla thane poikittu erunthathu. chanrashtamam kuda illayae. yathukkum bp check pannidanum.

  sugumarje said:
  June 9, 2011 at 4:51 am

  இதென்னா வம்பா போய்விட்டது. உங்களிடம் நான் பத்து கேள்விகள் தான் கேட்டிருந்தேன். எனக்கு, நீங்கள் 25 கேள்விகள் கேட்டிருக்கீங்களே நியாயமா?
  சரி, சரி. எல்லாமே பொதுநலன் போலத்தான் தோன்றுகிறது…
  ஆக… பதில்களை ஆரம்பிக்கிறேன்..

  Mani said:
  June 9, 2011 at 5:22 am

  என்ன அண்ணே திடீர் திடீர்ன்னு ஆளாளுக்கு கேள்விகள் எல்லாம் டெஸ்ட் வைக்கறீங்க. கேள்விக்கு பதில் கேள்விகளோ?

  சரி எனக்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் எதாச்சும் கிறுக்கி வைக்கிறேன். ஓ.கே.வா

  1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்?
  என்னைப்பற்றி நானே அறிமுகப்படுத்திக்கறத விட என்னை மக்கள் என்னவா அறிந்திருக்கிறார்களோ அவ்வாறே அழைக்கப்பட விரும்புகிறேன்.

  2.உங்க குடும்ப பின்னணி?
  நமக்கெல்லாம் ஏதுன்னே பின்னணி. நாமெல்லாம் என்ன கலைஞர் வாரிசா. சமுதாயத்தில உள்ள சராசரிகள்ள நாங்களும் ஒன்னு.

  //உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க//

  நாமல்லாம் அவ்வளவு பெரிய ஆளா உருவாகிடலிங்கண்ணா!

  3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா?
  என்னது என்ஞாய் பண்றதா? எப்படா லீவு உடுவாங்கன்னு காத்துகிட்டு இருப்போம்.

  ///இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?///

  நான் என்ன சொல்ல வறேன்னா?… தம்பிகளா படிப்பு மட்டும் ஒரு மனுசனுக்கு சோறு போடாது. கொஞ்சம் பொதுவிஷயங்களையும், நாட்டு நடப்பயும் தெரிஞ்சு வச்சிக்குங்க. வருங்காலத்தில நீங்க கூட சமுதாயத்தில பெரிய ஆளுங்களா வரலாம். அப்படி வந்தாக்கா மத்தவங்க மாதிரி ஆடாதீங்க. உங்களால மக்களுக்கு உபயோகமா ஏதாச்சும் செய்ய முடிஞ்சா செய்யுங்க. இல்லாங்கட்டி சும்மா தொந்தரவு கொடுக்காமலாவது இருங்கப்பூ

  4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா?
  கல்வி நேரடியாக ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இல்லங்கண்ணே. ஆனா கல்வி கற்றதனால வந்த அறிவு ரொம்ம யூஸ் ஃபுல்லா இருக்குங்கண்ணே.

  5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா?

  இல்லங்கண்ணே. நம்ம மேல் அதிகாரிங்க சொல்லிக்குடுத்தாங்க. ஆனா நம்ம அறிவுன்னு ஒன்னு இருக்குல்ல அதை வச்சு நோண்டி நோண்டி எல்லா ரகசியத்தையும் கண்டுபுடிச்சுட்டோம்ல.

  6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்.

  ஒரு 23 வயசிலேர்ந்து வையுங்களேன். நாங்கல்லாம் பெரிய பதிவர் இல்லீங்கண்ணா.

  Mani said:
  June 9, 2011 at 5:29 am

  கேள்வி பதில்கள் தொடர்ச்சி…

  7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

  இப்பெல்லாம் தமிழ் சினிமாவுலேயே எல்லாத்தையும் சொல்லித்தராய்கண்ணா? அது அவனுக்கு செக்ஸை பத்தின ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கி கண்டவளையெல்லாம் கணக்கு பண்ண நினைக்கறாங்கண்ணா. நம்ம அனுபவத்தையெல்லாம் எதுக்குண்ணே கேக்குறிங்க. போங்க வெக்கமா இருக்கு. சொல்லித்தெரிவதில்லை மன்மத கலை.

  Mani said:
  June 9, 2011 at 5:31 am

  கேள்வி பதில்கள் தொடர்ச்சி…

  8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்.

  கொஞ்ச வருஷம் இருந்ததுண்டுங்கண்ணா. சும்மா தெண்டத்தீனி தின்னதுக்கல்லாம் அனுபவமா. உத்யோக வேட்டையில இருக்கறவுகளுக்கு என்ன சொல்றேன்னா. உங்க தகுதிக்கு ஏத்த வேலைன்னு அலையறத விட கிடைச்ச வேலையை செஞ்சுகிட்டே உங்கள் தகுதிக்கு ஏத்த வேலைக்கு மாறிட வாய்ப்பு இருக்குங்கண்ணா. அதுவரைக்கும் பொருத்திரு மனமே.

  சிவ யோகி said:
  June 9, 2011 at 6:40 am

  //1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க//

  ப்ரொஃபெஷன் தவிர்த்து என்னை என் மனதுக்குள் சிவ யோகி என்று சொல்லி கொள்ள தான் விருப்பம்…
  ஏன்னா எந்த அடையாளமும் அற்றவன் தான் யோகி…
  கால போக்குல யோகி என்பதே அடையாளம் ஆகி விடுகிறது 🙂
  உதாரணத்துக்கு உடம்புக்கு பேரு கோயம்பல்ஸ் நு வெச்சுகொவோம்…….
  சமூகத்தோடு தொடர்பு கொள்ள கோயம்பல்ஸ்….மோனத்தில் பெயறற்ற நிலை ..அது தான் யோகி …. அது தான் நமக்கு வேணும் 🙂

  Mani said:
  June 9, 2011 at 7:14 am

  கேள்வி பதில்கள் தொடர்ச்சி….
  9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

  இதெல்லாம் நெரையா இருக்குங்கோ. திருமணம் பெர்னல் மேட்டர். வேண்டாம் தலை. சில்மிஷம் எல்லாம் பொதுவுல சொன்னா ஈவ்டீசிங் கேசுல புக்பண்ணிட மாட்டாய்ங்களே.

  10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

  பேச்சலர்ஸ் எண்ணிக்கை – வேலை கடிக்கலையா அதான் அதிகமாயிடிச்சு
  விவாகரத்துக்களோட சதவீதம் – பெண்கள் படிப்பு, வேலைன்னு சுதந்திரம் அதிகமாயிடுச்சு. நம்மாளுங்க அவிய்ங்க பழையபடி நமக்கு கால்புடிச்சு சேவைசெய்யனும்னு நினைக்கறாங்க. அதால் ஏற்பட்ட இடைவெளி. அதனால விவாகரத்து சதவீதம் அதிகமாயிருக்கலாம்.

  இது நல்லதுக்கில்லை. இதனால் சமுதாய ஓழுங்கு பாதிக்கப்படலாம்.

  Mani said:
  June 9, 2011 at 7:19 am

  11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க.

  பஞ்ச பாண்டவர்கள் கதை நினைவுக்கு வருதுங்கண்ணா.

  12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?
  நீ வாழ்ந்தால் உன்னை சமூகம் மதிக்கும். நீ வீழ்ந்தால் சமூகம் உன்னை மிதிக்கும். உன்வாழ்க்கை உன் கையில் – நம்ம தலிவர் சொன்னது தாங்கோ்.

  13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?
  முள்ளிவாய்க்கால் சம்பவம் இன்னும் மனதிலேயே நிக்குங்கண்ணா. – மலினப்படுத்தப்பட்டுள்ளது.

  14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?
  கேள்வி எண் 12 க்கு உள்ள பதில் பொருந்தும்ன்னு நினைக்கிறேன்.

  15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க.

  வேண்டாம் விளைவுகள் மோசமாயிடும். அமெரிக்காவை பார்த்து பாடம் கத்துக்கங்க.

  Mani said:
  June 9, 2011 at 7:26 am

  16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

  என்னங்கண்ணா! இப்படி கேட்டு புட்டீங்க. நீங்க பசிச்சா சாப்பிடறதில்லையா. தூக்கம் வந்தா தூங்கறதில்லையா? அதுமாதிரிதான் அதுவும் நமது உடல் தேவைகள்ள ஒன்று. இதுல எதுக்குண்ணே ஆடம்பரம். மானம் போயிரும்.

  17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?
  இது பெரிய சப்ஜெக்ட்ங்கண்ணா. சுருக்கமா சொல்ல பார்க்கிறேன்.
  கில்மா ஆன்மீகத்திற்கு உதவிதான். ஆனா கில்மா எல்லாத்தையும் கழிச்சு கட்டிட்டு ஆன்மீகத்துக்கு வந்தால் நம்ம பாதையில் தடம் மாறாமல் போகலாம். இல்லாங்காட்டி நித்தி கதைதேன்.

  உண்மையான ஆன்மீகம் என்பது வள்ளலார் சொன்ன வழிதாங்கோ. அன்பே கடவுள்.

  Mani said:
  June 9, 2011 at 7:34 am

  18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

  பெருமூச்சுதான், ஏக்கம் தான் என்ன பன்றது. நாம் வாழும்வரையில் நல்லபடியாக வாழ முடிந்தால் நன்மைதான்.

  19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?
  அடக்கடவுளே! நம்மக்கு இருக்கிற ரோடுகளே இதற்கு சாட்சி. நம்ள முழுசா அழிச்சுடுமோன்னு பயமா இருக்கு.

  20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?
  மனிதனின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அவசியமான ஒன்று. இவைகள் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாயிடுவான். இதையே பிடிச்சிகி்ட்டிருந்தாலும் பைத்தியமாயிடுவான்.

  21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி.

  இதுவரைக்கும் எதுக்கும் அதிரலை. அப்படி ஒன்னும் இதுவரை நடக்கலை.

  நாம ப்ளாக்ரா இருப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான். பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. கருத்துப்பரிமாற்றம் போன்ற விஷயங்கள் உபயோகமாக இருக்கிறது.

  22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?
  சங்கர் குருசாமி சொன்ன அனைத்தும்.

  Mani said:
  June 9, 2011 at 7:41 am

  23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

  ஜோதிடம் மனித வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான ஒன்று அதை பயன்படுத்தும் விதத்திலும், விஷயம் தெரிந்தவர்களையும் அனுகுவதிலும்தான் அதன் பயன் அடங்கியிருக்கிறது. சரியான கடையில் தங்கத்தை வாங்காமல் இருப்பது தங்கத்தின் குற்றமல்ல.

  ///அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?///

  வசமா மாட்டீகிட்டீங்களா.

  அண்ணே!. இங்க நல்ல விஷயங்களாதான் எழுதறீங்க, விவாதிக்கறோம். எல்லாம் சரியாகத்தான் போயிகிட்டு இருக்கு. ஆனா எதுவும் தொடர்ச்சியாக இல்லை. என்ன பன்றது. ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததுக்கு போனா நன்னா இருக்கும்.

  அப்புறம் நல்ல விஷயம் இருக்கறச்சே கில்மா படங்களை போடறதனால வீட்ல தனியாக இருந்தா தான் படிக்க முடியுது. யாராவது பார்த்தால் நம்மளை தப்பா நினைக்க கூடாதுல்ல. பசங்க, மனைவி இருக்கறச்சே படிக்க முடியறதில்லை. அதனால ஒரு சின்ன வேண்டுகோள். முடிஞ்சா நல்ல படங்களா போடுங்கோ. இல்லாங்காட்டி படமே வேணாம். மேட்டர் மட்டும் போதும்.

  உங்களிடம் இருந்து இன்னும் அதிக விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.

  24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

  நம்மள எல்லாம் ஒரு வி.ஐ.பி ரேஞ்சுல நினைச்சு கேள்வி கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா!. நம்ம கருத்தையும் பதிவு பண்ணதில் ரொம்ம மகிழ்ச்சியா இருக்குதுங்கோ.

  Mani said:
  June 9, 2011 at 7:42 am

  25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

  ஒன்னும் இல்லீங்கோ.

  ஆமா இப்ப எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்டு மடக்கறீங்க. யாரும் பதில் சொல்லாம தலைதெறிக்க ஓடிடுவாங்க நினைச்சுதானே.

  நான் ஓடமாட்டேன். ஏன்னா நாங்க தில்லுதுரைங்கோ.

  Mani said:
  June 9, 2011 at 7:44 am

  அண்ணே உங்க கேள்விகளுக்கு நம்ம பதில் எப்பூடி. ஒரு ரிப்ளை குடுங்களேன். ஆறுதலா இருக்கும். நன்றி.

  கேள்விகள் இவ்வளவு தானா? இன்னும் இருக்கா? நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல.

  சிவ யோகி said:
  June 9, 2011 at 8:09 am

  சரி….எல்லா கேள்விக்கும் பதிலை நானும் ஒரு தனி பதிவாகவே முருகேசுக்கு அனுப்பி புடுறேன் சங்கர் குருசாமி மாதிரி 🙂

   S Murugesan said:
   June 9, 2011 at 5:50 pm

   சிவயோகி சார்,
   உடனே அனுப்புங்க. ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

  வணக்கம் தோழர் மணி அவர்களே,

  //22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?
  சங்கர் குருசாமி சொன்ன அனைத்தும்.//

  ஆகா.. மகிழ்ச்சி தோழரே..
  அப்போ எங்க சிவயசிவ – வலைத்தளமும் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கீக..

  நன்றி.. நன்றி .. நன்றி..
  அப்புறம் இன்னிக்குத்தான் உங்களோட முத்துச் சிதறல்கள் பார்த்தேன்..
  இத்தனை நாள் இப்படி ஒரு அருமையான தளத்தை பார்வையிடாமல் இருந்ததுக்கு மன்னிக்க வேண்டும்..

  இனி தொடர்ந்து வருவோம்லே…

   Mani said:
   June 10, 2011 at 5:44 am

   உங்களைப்பற்றியும், உங்கள் ஆக்கங்களையும் வகுப்பறையில் படித்திருக்கிறேன். உங்கள் வலைதளமும் எனக்கு மிகவும் பிடிக்கும். தேவாரம் முழுமையும் தெரிந்த உங்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு.

  சிவ யோகி said:
  June 10, 2011 at 7:32 am

  முருகேசன் அவர்களே ,

  என்னுடைய பதிலை தந்து விட்டேன்….கமெண்ட் ஆகவோ ..அல்லது தனி பதிவாகவோ போட்டு விடவும்

  பதிவர் :சிவ யோகி
  வலை தளம் : எந்த ஒரு வலையிலும் சிக்கி கொள்ள விரும்பாதவன்.

  1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

  ப்ரொஃபெஷன் தவிர்த்து என்னை என் மனதுக்குள் சிவ யோகி என்று சொல்லி கொள்ள தான் விருப்பம்…
  ஏன்னா எந்த அடையாளமும் அற்றவன் தான் யோகி…
  கால போக்குல யோகி என்பதே அடையாளம் ஆகி விடுகிறது 🙂

  உதாரணத்துக்கு உடம்புக்கு பேரு கோயம்பல்ஸ்-நு 🙂 வெச்சுகொவோம்…
  சமூகத்தோடு தொடர்பு கொள்ள கோயம்பல்ஸ்….மோனத்தில் பெயறற்ற நிலை..அது தான் யோகி…அது தான் என் தேடல்.

  2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

  இந்த குடும்பத்த நான் தான் ஆத்மா நிலையில் இருந்த போது தேர்ந்து எடுத்தேன் என்று நெனைக்கும் அளவுக்கு இருக்கிறது… குடும்பம் என்பது ஒரு பாதுகாப்புகான சுய நல அமைப்பு….குடும்பத்துக்கு நாம அதிகமா கொடுத்தா மதிப்பு….அதிகமா எடுத்தா அவ மதிப்பு..

  3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

  பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் தான் பள்ளி முதல் மாணவன்..கல்வியை என்ஜாய் பண்ணினேன் என்று எல்லாம் சொல்ல முடியாது…அனால் அந்த பருவ நட்பு,விளையாட்டு, பருவ கிளர்ச்சி காதல் என்ற பெயரில் காமம்,சுய இன்பம் 🙂 எல்லாமே நன்றாக தான் இருந்தது என்று சொல்லலாம்.

  இன்றைய மாணவர்கள் பெற்றோர்,ஆசிரியர் போன்ற அரை குறை கோயம்பல்சு களால் ஏறக்குறைய அடிமை போல் ஆக்க படுகின்றனர். மாணவன் ஒரு எந்திரம் போல ஆக்க படுகின்றான். மாணவர்கள் பெற்றோர்,ஆசிரியர் சொல்லுவதை கேக்காமல் சுய புத்தியை குறைந்த பட்சம் 15 வயதுக்கு மேலாவது உபயோகம் செய்ய வேண்டும்.

  4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

  நானு படிச்ச படிப்பு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லாதான் இருக்கு இன்றைய என் ப்ரெட்க்கு…

  5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

  நம்ம அகடமிக் சில்லபஸ்ஸே கணிப்பொறிய வச்சுதான்….ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருந்தது ….இப்படியே எந்நேரமும் கம்பியுட்டர்ர வெச்சு உக்கார்ந்து இருந்தா பினிஷிங் சரியில்லாம போயிடும் போல இருக்கு

  6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது?

  என்னை பொறுத்தவரை என் அடையாளம் 7 வருடத்துக்கு ஒரு முறை மாற்றம் பெறுவதாக உணர்கிறேன் .
  [ஓஷோ சொனனது போல]
  பழைய பதிவுகளை எல்லாம் முடிந்த வரை அவ்வபோது கடக்க அல்லது அழிக்க முயற்சி செய்து வருகிறேன்.

  // பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்//

  பொழுது நன்றாக போகிறது… நிறைய பதிவுகள் படிக்க படிக்க நேரம் போவதே தெரிவதில்லை.
  சில நேரங்களில்வெறும் எழுத்தில் மல்லு கட்டி கொள்ளும் போதும்….அதை நினைத்து மன உளைச்சல் படும் போதும்…என்ன மாதிரி பொழப்பு இது என்று நினைக்கவும் தோன்றுகிறது.

  7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

  எனக்கு முதன் முதலில் என் சின்ன வயதில் என்னை விட பெரியவன் ஒருவன் உன் அம்மாவும் உன் அப்பாவும் ஓ_ _தான் உன்னை பெற்றார்கள் என்றான்..முதல் முறை கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் செக்ஸ் குறித்த பார்வைய நண்பர்கள் தான் தருகிறார்கள்.

  8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

  ஒரு வருஷம் அன் எம்ப்ளாய்டா..இருந்தேன்….அடடா அது சரியான அனுபவம்….அப்போ எனக்கு ஏழரை சனி வேறு …அடடா என்ன ஒரு சுகம் 🙂

  ஆம்பளையா சமுகத்துள்ள மதிப்பு வேணுமுனா பணம் வேணும் …பணம் வேணுமுனா உத்தியோகம் வேணும்….புத்தி உள்ளவனுக்கு உத்தியோகம் தான் முதல் பொண்டாட்டி..

  9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

  காதலா …அந்த எழவை உண்மைன்னு நம்பி…என் வாழ்க்கைல ஒரு 5 ஆறு வருசத்த வீண் பண்ணி புட்டேன்….

  //தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க. //

  சில்மிஷம் ஒன்னா இரண்டா….இதுவரிக்கும் ஒரு 100-க்கு மேல பாலியல் சமுக சேவையை அள்ளி வழங்கும் பெண்களிடம் வெளையாடி உள்ளேன்..சவுத் இந்தியன் ,நார்த் இந்தியன் , ஆங்கிலோ இந்தியன் எல்லாம் இதில் அடக்கம்.

  இதுல்ல ஒரு சிலரு வேற பிரெண்டு ஆகி புடுவாங்க… பார்டி நல்லா கும்முனு இருந்தா நானும் பிரென்ட் ஆகி விடுவேன்.அந்த கிளு கிளுப்பு கதை எல்லாம் சொன்னா…நெரிய பேருக்கு வயுத்துள்ள வாயுல புகை புகையாய் கெளம்பும் 🙂

  சென்னை,அரக்கோணம் ,திருத்தணி[அந்தராவுல நகரிக்கு வரலாம் என்று புறப்பட்டு வந்தபோது எம் பெருமான் முருகன் …ஆந்திராவில் சென்று நீ பாசை தெரியாமல் முழிக்க வேண்டாம் என்று சொல்லி திருத்தணியிலேயே ஒரு வழி காட்டினான்],பெண்களூர் என்று ரௌண்டு கட்டி வெளையாடி உள்ளேன் 🙂

  10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

  பொம்பளை பொம்பளியாய் இல்லை….ஆம்படையான் அம்படையானாய் இல்லை…விவாகரத்து அதிகமாகம என்ன பண்ணும்?

  11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

  ம்…..கேரளாவில் ஆணை விட பெண்கள் அதிகமாமே?? கேரள குட்டிகள் தமிழ்நாட்டு மொக்கைகளை விட அழகு அதிகம்….எதிலும் விழிப்புணர்வு தேவை..

  12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

  கோயம்பல்சுகள் 🙂

  13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

  எப்போதும் போல் உள்ளது
  அன்று மகாபாரத குருசேத்ரம் …..இன்று …..(அது தான் உங்களுக்கே தெரியுமே)

  14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

  இந்த சமுக உலகம் பகல் பொழுதில் என்னை மிரட்டுகிறது…
  பணம் சாம்பாதிக்க அலைய வேண்டி உள்ளதை நெனைக்கும் போதும் என்னை பார்த்து நானே பரிதாப பட்டு கொள்ளுகிறேன்..

  15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

  ட்..ட்..ட் …இதோ குட்டி விட்டேன்.. குட்டு போதுமா..இல்லை இன்னும் வைக்கணுமா 🙂

  16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

  அத்யாவசியாம் தான் …இதில் என்ன சந்தேகம் ?

  17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

  கில்மா கீழ் நிலை யோகம் …யோகா மேல் நிலை யோகம்…இரண்டும் அத்தியாவசியம்..

  யோகம் தான் உண்மையிலும் மேலான உண்மை..மற்ற எல்லாமே பொய்

  18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

  நான் நல்ல ஒரு சரியான கால கட்டத்தில் பிறந்ததாக நினைக்கிறன்..நான் பிறந்தது கிராமத்தில் தான். இன்றைய கால கட்டம் ஒரு பொன்னான கால கட்டம் .

  எல்லா வசதி வாய்ப்புகளும் அருமையாக கிடைகின்றன.இன்டர்நெட் மூலம் உலகமே நம் கைக்குள் வந்து விட்டது.அமெரிக்க பிகர் முதல் சீன பிகர் வரை நெட்டில் ரசிக்கலாம்…இதே 20 வருடத்துக்கு முன்…ம் … சரியான போர் என்று தான் தோன்றுகிறது.

  இன்னும் 20 வருடம் கழித்து பிறந்தாலும் கடினம்….ஏன்னா…மனிதர்கள் அனைவரும் தற்போது செயற்கை சாம்பிரானியாய் மாறி வருகின்றனர்.

  19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

  இல்லியா பின்ன..?

  20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

  மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன.

  21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

  நெறைய விசயங்களை தெரிந்து கொள்வது மகிழ்ச்சி…நம்மை போன்ற அலைவரிசை யுடைய மனிதர்களை சந்திப்பது மகிழ்ச்சி..
  இருண்ட பக்கம்-சமுக மாயை வலையுலகிலும் உண்டு

  22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

  வினவு
  அட்ரா சக்க
  யுவகிருஷ்ணா
  anubavajothidam.com
  சாஸ்திரம் பற்றிய திரட்டு
  வகுப்பறை
  உஜிலாதேவி by யோகி ஸ்ரீ ராமானந்த குரு
  ஓம்சிவசிவஓம் by ஆன்மீகக்கடல்
  சித்தர்களின் முழக்கம்….
  பிச்சைக்காரன் by thozhan29@yahoo.com (பார்வையாளன்)
  பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்…. by ஜாக்கி சேகர்
  இளமை
  http://cutephotosss.blogspot.com

  23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

  ஜோதிடம் ஒரு கலை
  அனுபவ ஜோதிடம் ஒரு வலையுலக ஜோதிட முத்து.

  24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

  இரண்டுமே இல்லை ..ஹா ஹா 🙂

  25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

  சரி ஓர் கேள்வி…. நான் பகிர்ந்துக்க நெனைக்கிறேன்..

  பாட்டி வட சுட்ட கதைல வடையை சுட்டது யாரு?

  A)பாட்டி
  B)காக்கா
  C)நரி
  D)வடை சட்டி

  ம்..முடிஞ்சா பதில் சொல்லுங்க 🙂

   S Murugesan said:
   June 10, 2011 at 8:58 am

   சிவயோகி அவர்களே,
   தங்கள் ஆணை எனது பாக்கியம். அப்படியே ஆகட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s