பாபா – ஹசாரேவை கிழிப்பது மடமை

Posted on

ஆமாங்ணா. மாசேதுங் சொல்வாராம் “பூனை எந்த நிறமா இருந்தாலும் பரவால்லை. எலியை பிடிக்கனும் அம்புட்டுதேன்”

வெள்ளை வேட்டி கட்டினவன் தான் வரனும்னு வெய்ட்டிங்ல இருந்தா பாரதமாதா எப்பத்தேன் ஐ.சி லருந்து டிஸ்சார்ஜ் ஆகிறது.?

ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவன் தான் வரனும்னு வெய்ட்டிங்ல இருந்தா ஊழலை எப்பத்தேன் ஊத்தி மூடறது?

பாபா,ஹசாரே உத்தமர்கள் என்றோ – சுயம்புகள் என்றோ வக்காலத்து வாங்க நான் தயாரில்லை. இவர்களை ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டுகள் – பா.ஜ.க கையாட்கள் என்று திராவிட திலகங்கள் பொங்கி எழுவதை கண்டு கொஞ்சம் போல இர்ரிட்டேட் ஆகித்தான் இந்த பதிவை போடறேன்.

ஆர்.எஸ்.எஸ் , பாஜக வை எதிர்ப்பது சரிதான். ஆனால் இவற்றை எதிர்ப்பவர்களின் பின்னணி என்ன? அதையும் பார்க்கனும்ல.

ஊழலுக்கு மறு பெயர் காங்கிரஸ். அந்த கட்சிக்கு நேரடியாகவோ , மறைமுகமாவோ ” நல்லாதரவை” கொடுத்துவரும் கட்சிகளின் பின்னணியும் இதுவே. அட வெளியிலருந்து ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகளின் சாமுத்ரிகமும் இதே இழவுதேன்.

அதுக்காவ ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆட்சிக்கு வந்துட்டா சாக்கடையில எல்லாம் பாலும் தேனும் கலந்து ஓடும்னு சொல்லமாட்டேன்.

“இஷ்யூ பேஸ்ட் சப்போர்ட்”ங்கறாப்ல இஷ்யூ பேஸ்ட் விமர்சனம் பண்ணனும். ஊழல் எதிர்ப்பா? அதை பேசுங்க.ஹசாரே,பாபா, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க என்னெல்லாம் ஊழல் பண்ணியிருக்காய்ங்கனு லிஸ்ட் அவுட் பண்ணுங்க.

அதை விட்டுட்டு அக்கிரகாரத்து அதிமேதாவிகள் மாதிரி – சிதம்பரம் மாதிரி பேசினா எப்படி?

தாளி.. ஊழலே இல்லைன்னா பாபா,ஹசாரேக்கு என்ன வேலை. கக்கூஸு நாறிக்கிட்டு கிடந்ததாம். அப்பம் எவனோ நான் கழுவிவிடறேன்னு துடைப்ப கட்டை ஃபெனாயிலோட வந்தானாம். அப்பம் வூட்டுக்காரன் உன் துடைப்பம் மேட் இன் இன்டியா இல்லை, உன் ஃபெனாயில் தரமானதில்லேன்னு தடை போட்டானாம். அந்த கதையா கீது பாபா,ஹசாரே மீதான விமர்சனங்கள்.

தெரியாம கேட்கிறேன். பாபா,ஹசாரே இந்தியர்கள் தானே. (இத்தாலியர்கள் அல்லவே) ஆர்.எஸ்.எஸ் என்ன தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பா? அவிகளோட வரலாற்றில் எமர்ஜென்சிக்கு எதிரான தியாகமும் இருக்கு. பாபர் மசூதி இடிப்பு என்ற குள்ள நரித்தனமும் இருக்கு. இல்லேங்கலை.

அவிக மதவாதம் பேசினா வாங்க நானும் சவுண்டு விடறேன். அவிக ஊழலை எதிர்த்தா யாருக்கு வலிக்குது.எங்கே வலிக்குது. ஊழல் பண்ணவுகளுக்கு வலிக்குது. உங்களுக்கு எங்கே வலிக்குது.

இன்னொரு குற்றச்சாட்டு ” சன்னியாசி அரசியல் பண்றாரு”. சன்னியாசிங்க பேரையெல்லாம் வாக்காளர் பட்டியல்லருந்து நீக்கிட்டிங்களா? இந்த குற்றச்சாட்டை சோனியா முன் வைத்தால் சந்திராசாமிதான் அரசியல் பண்ணனும். மத்தவுகல்லாம் சட்டி பானை பண்ணனும்னா எப்படின்னு கேட்கலாம்.

ஆனால் நம்மாளுங்க பாய்ண்ட் அவுட் பண்றப்ப என்ன சொல்ல முடியும்? குன்றக்குடி அடிகளார் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டியதை – பங்கெடுத்ததை திமுக அதிமுகவோ விமர்சித்ததில்லையே. அட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவுடன் மாறி மாறி கூட்டு வச்சிக்கிட்ட கட்சிகள்தானே.

உங்க பிரச்சினைதான் என்ன? ஜன நாயக நாட்டுல ஊழலை எதிர்க்கிறவனுக்கு முன் நிபந்தனைகள் இருக்குமா என்ன? சரி மோரல் கிரவுண்ட்ஸ்ல பேசினாலும் ராம் தேவ் பாபா, ஹசாரே ஊழலே பண்ணியிருந்தாலும் அவிக ஊழலுக்கு எதிரா வேட்டி வரிஞ்சுக்கட்டின பிற்பாடுதான் அதெல்லாம் அரசுக்கு ஞா வருமா?

அரசுக்கு வந்தா சரி .. நம்மாளுங்களுக்குமா?

ராம் தேவ் பாபா தற்காப்புக்காக என் ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி தருவேன்னாரு. நெஜம்தேன். நம்ம வாத்யாரு சி.எம் ஆ இருக்கிறச்சயே அதிமுக தொண்டர்கள் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்னு பேசினது ஞா இல்லையா?

அரசு , போலீஸ்லாம் நாய் மாதிரி. அது என்னை கடிக்கிறப்ப உங்களுக்கு ஆனந்தம் – உங்களை கடிக்கிறப்ப எனக்கு ஆனந்தம்னு நாம ரியாக்ட் பண்றதாலதான் மனித உரிமைகள் எல்லாம் மண்ணாகி கிடக்கு.

நாய் ஆரை கடிச்சாலும் வலிக்கும். நாயை விட்டவன் “ஸ் அடடா.. எங்க சீசர் சாமானியமா கடிக்கமாட்டானே.. ஒன்னும் ஆகாது பத்து பைசா சுண்ணாம்பு வச்சிக்கிடுங்க சரியா பூடும்”னு தான் சொல்வான்.”

கடி வாங்கினவனுக்குத்தான் தெரியும் வலி. யோகா பயிற்சிக்குன்னு ராம் லீலா மைதானத்துக்கு பர்மிஷன் வாங்கினாய்ங்க. ஆனால் பாபா உண்ணாவிரதம் இருந்தாரு. அதனால காலி பண்ணவேண்டியதாயிருச்சு – சிதம்பரம்.

அடங்கொய்யால பாபா என்ன ராம்லீலா மைதானத்துல ஹோமோ செக்ஸா பண்ணாரு. உண்ணாவிரதம்ங்கறது ஜன நாயகத்துல மக்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியா தெரிவிக்க தரப்ப்ட்டுள்ள ஆயுதம்.

பத்தாவது நாளோ பன்னெண்டாவது நாளோ தற்கொலை முயற்சி வழக்கு போட்டு கைது பண்ணா அது வேற கதை.

களவாணி பசங்க மாதிரி பாதி ராத்திரி -அதுவும் தூங்கிக்கிட்டிருக்கிற சமயம் – நுழைஞ்சு தூக்கினாய்ங்களே.. இது மனித உரிமை மீறல் இல்லியா?

இது பாராளுமன்ற முறைக்கு எதிரானது. ப்ளாக் மெயிலிங் – இது இன்னொரு குற்றச்சாட்டு.. அப்பம் அன்னைக்கு ஒரு தாத்தா பண்ணாரே அது?

பாஸ்கலின் விதினு ஒன்னு இருக்கு. தண்ணீரை அழுத்தி சுருக்கமுடியாது. அதை போன்றதுதான் ஊழல் எதிர்ப்பும். இதை அழுத்த அழுத்த ங்கொய்யால பீய்ச்சி அடிக்கும்.

ஆகஸ்டு 15 க்கு மேல உங்களுக்கெல்லாம் இருக்குடி…

பி.கு: விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொன்ன பலன் இப்ப்டி மெட்டீரியலைஸ் ஆகப்போகுதோ என்னமோ? சனம் வீட்ல இருக்கிறவரை தேன் சீரியல் பார்ப்பாய்ங்க. ரோட்ல இறங்கி வந்துட்டா.. ரோபோ க்ளைமேக்ஸ் தாண்டி..

கோடானு கோடி மனிதர்களும் ஒரே உடலா இயங்க ஆரம்பிச்சுருவாய்ங்க. அப்பம் உங்க போலீஸ், புண்ணாக்கெல்லாம் ஜுஜுபி ஆயிரும்.

Advertisements

14 thoughts on “பாபா – ஹசாரேவை கிழிப்பது மடமை

  sugumarje said:
  June 9, 2011 at 4:22 pm

  //இது பாராளுமன்ற முறைக்கு எதிரானது. ப்ளாக் மெயிலிங் – இது இன்னொரு குற்றச்சாட்டு.. அப்பம் அன்னைக்கு ஒரு தாத்தா பண்ணாரே அது?//
  NETHTHIYADI .

   S Murugesan said:
   June 9, 2011 at 5:44 pm

   வாங்க சுகுமார்ஜீ,
   பாராட்டுக்கு நன்றி. அந்த தாத்தாவை நானே விமர்சிச்சிருக்கேன்.அது வேற விஷயம். நம்முது இஷ்யூ பேஸ்ட் விமர்சனம், இஷ்யூ பேஸ்ட் சப்போர்ட் தான்.

   சனம் பிரிச்சு பார்க்காம மொத்தையா திட்டறாய்ங்க அ மொத்தையா சப்போர்ட் பண்றாய்ங்க.

   அதான் கடுப்பு

  Mani said:
  June 9, 2011 at 5:02 pm

  கூல்டவுன், கூல்டவுன். உங்க கோபம் நியாயமானது தான். எல்லா காலத்திலயும் எல்லாரையும் ஏமாத்திட முடியாது. சமுதாயத்தில் விழிப்புணர்வு வரும் வரை இவர்களது ஆட்டம் இருக்கும். மக்கள் விழித்துவிட்டால் இப்படி தான் வெட்ட வெட்ட அன்னா ஹசாரேக்கள், பாபாக்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.

  ”வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
  உள்ளத் தனைய உயர்வு” என்ற குறளின் அடிப்படையில் சமுதாயத்தின் மக்களின் எழுச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு அமையும் தலைவனின் தன்மையும் இருக்குமாம்.

  சரிங்கண்ணே. தில்லுதுரை போட்டிக்கு முடிவு என்னாச்சு. யாரும் பதில் எழுதலையா. வேலைமெனக்கட்டு உங்க 25 கேள்விகளுக்கு பதில் சொன்ன எனக்கு பதில் எழுதக்கூட உங்களுக்கு நேரம் இல்லையோ? இல்லை எனக்கெல்லாம் எதுக்கு பதில் எழுதனும்ன்னு விட்டுட்டீங்களோ? அப்புறம் என்னாத்துக்கு அம்புட்டு கேள்விகளை கேட்டு துளைச்செடுத்தீங்க. ஓ ஒங்களுக்கு பொழுதுபோகலைன்னு கேட்டீங்களோ. நான் ஒரு வேலையத்தவன் கமெண்ட் போடுறேன் பேர்வழின்னு கேட்டு வைக்கிறேன். ஒருவேளை இதுக்கும் பதில் இருக்காதோ? ஓ.கே. ஓ.கே. விடைபெறுகிறேன்.

   S Murugesan said:
   June 9, 2011 at 5:49 pm

   மணியண்ணே,
   ஏன் கடுப்பாகறிங்க. உங்க பதில்கள் எனக்கு மட்டுமானதுன்னா மெயில் அனுப்ப சொல்லியிருப்பேனே.சபையில வச்ச பிறவு நாலு பேர் இன்னா சொல்றாய்ங்கனு பார்க்கனும். நான் என்ன சொல்லி என்ன ஆகப்போகுது. நாலு பேர் சொன்னாதான் செல்லுபடி. நான் என்ன சொல்வேன்? தில்லு துரை நெம்:2 னு ஒரு விருது கொடுப்பேன். கொடுத்தாச்சு.ஓகேவா.

   //சமுதாயத்தின் மக்களின் எழுச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு அமையும் தலைவனின் தன்மையும் இருக்குமாம்.//

   இந்த பாய்ண்டை நானே ஒரு பதிவுல சொல்லியிருக்கேன். யதா ப்ரஜா ததா ராஜா. ராமனுக்கும் கிருஷ்ணனுக்குமே எவ்ளோ வித்யாசம் இருக்கு.

   இந்திராகாந்திக்கும் -சோனியாகாந்திக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு. அந்தம்மா என்னதான் எமர்ஜென்சி அது இதுன்னு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போனாலும் தேசம் குறித்த அந்தம்மாவோட கமிட்மெண்ட் அப்பழுக்கற்றது.

   ஆனால் இந்தம்மா?

    Mani said:
    June 9, 2011 at 6:02 pm

    அட விருது முக்கியமில்லீங்கண்ணே. நீங்க எந்த எதிர்பார்பில் கேள்விகளை கேட்டீங்க. அந்த வகையில் நாங்க சரியா சொல்லியிருக்கோமான்னு ஒரு வரி எழுதலையேன்னு கொஞ்சமா ஃபீலிங் வந்துருச்சு அதேன் படக்குன்னு கேட்டுட்டேன்.

    //நான் என்ன சொல்லி என்ன ஆகப்போகுது. நாலு பேர் சொன்னாதான் செல்லுபடி.//

    கேள்விகளை கேட்டது நீங்கதானே. நீங்க சொன்னா தான் செல்லுபடியாகும். எதுக்கு மத்தவங்களை இழுக்கறீங்க.

    S Murugesan said:
    June 10, 2011 at 12:38 am

    மணியண்ணே,
    கெட்டவுகல்லாம் கூட்டா கொள்ளையடிக்க – நெல்லவுகல்லாம் சிதறிக்கிடக்கோம்.

    ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க – ஒதகாத மேட்டர்ல இருக்கிற ஒதகாத கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வச்சு இணைந்து செயல்பட ஒரு புரிதல் ஏற்பட நம்மாலான ஒதவிங்கற கான்செப்டுதேன்.

  உன்னை புரிஞ்சிக்கவே முடியலே தலை…

  ஆமா..

   S Murugesan said:
   June 10, 2011 at 2:19 am

   ஜா.ரா,
   என்னை புரிஞ்சிக்கிடறது ரெம்ப சிம்பிள். எனக்கு படைப்பாளி முக்கியம். அவனோட உறவு முக்கியம்.அதுக்காவ படைப்போட உறவு பாராட்டறேன். அதுக்காவ படைப்பின் ஒரு பாகமான சகமனிதனை நேசிக்கிறேன்.

   மனிதனை -மனிதத்தை மண்ணாக்கும் எதையும் எதிர்க்கிறேன். இவற்றை காக்க முன்வரும் யாரையும் ஆதரிக்கிறேன்.

  vasu said:
  June 10, 2011 at 2:32 am

  உணர்வுபூர்வமான பதிவு..
  ஆகஸ்ட் 15 எப்போ வரும் காதுகிடகிறேன்
  ஊழல் பண்ண வர்களை எல்லாம் ஜென்மத்துக்கும் எதவும் செய்ய முடியாதவன் போல் ஆக்கணும் .
  ஆகஸ்ட் 15 சனி பெயர்ச்சி தானே ?

  vasu said:
  June 10, 2011 at 2:34 am

  எல்லாரும் கேள் உள்ள லிங்க படிங்க .. நம் நாடு எதிர்கால அரசியற் நிலை பற்றி

  http://www.politicsparty.com/SONIA_FOREIGN_TRIP.php

  covaisiva said:
  June 10, 2011 at 5:00 am

  ஏனுங்கண்ணா கொஞ்சம் நல்லா ராம்தேவ் செய்யற வேலைய யோசித்து பாருங்கள். கொஞ்ச நாளுக்கு முன்ன கட்சி ஆரம்பிக்க முயன்றார். வரவேற்பு இல்லை. சமயம் பார்த்து அன்னஹசரே உண்ணாவிரதம் இருந்ததில் கிடைத்த வரவேற்பை பார்த்து தனது அரசியலுக்கான அடித்தளத்துக்கு மட்டுமே இதனை செய்வது போல தெரிகிறது. நேற்று பாருங்கள் உண்ணாவிரதத்தினை கொஞ்சம் இலகுவாக்கி கொண்டு தண்ணீர் தேன் சாப்பிடுவாராம். இது கேலி கூத்தான உண்ணாவிரதம். அப்புறம் போலீஸ் வந்து கைது செய்கிறேன் என்றாள் பயந்துபோய் எதற்கு பெண் உடைபோட்டு தப்பிக்க வேண்டும். தேசத்தின் மீது அபிமானமும் சட்டத்தினை மதிப்பவர் இவரா?.
  அதேபோல அன்னஹசாரே உண்ணாவிரதம் ஆரம்பித்த போது அவரிடம் இருந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் இப்போது அவருடன் இருந்தவர்களின் கைகளில். ஒவ்வொருத்தரும் அரசையும் பிரதமரையும் கேவலமாக விமர்சிக்கும் முறை ஒரு நாலாம் தர கட்சியின் நிலையில் உள்ளது. ப்ளாக்மெயில் செய்வது போல ஒவ்வொன்றையும் கேட்பதும் செய்வதும் நாம் இப்போது இருக்கும் ஊழலுக்கு எதிரான மனநிலையில் நன்றாகதான் இருக்கிறது. இதுவே பின்னர் மக்களட்சியாமைப்பை கேலிகூத்து ஆகிவிடும் ஆபத்து இருப்பதை உணருங்கள்.
  இவர்கள் மீதான காங்கிரஸ் அரசின் விமர்சனத்தை விட்டுத்தள்ளி கொஞ்சம் யோசித்துபாருங்கள்.

   S Murugesan said:
   June 10, 2011 at 9:05 am

   கோவை சிவா!
   ஒரு நாட்டின் சமகால மனிதர்களின் தரம் என்னவோ அந்த தரத்தில் தான் தலைவர்கள்,சாமியார்கள் சமூக சேவகர்கள் எல்லாம் இருப்பார்கள். நீங்கள் உச்சாணி கொம்பில் நின்று அளவெடுத்தால் எல்லாரும் குள்ளமணி சைஸில் தான் தெரிவார்கள்.

   யதா ப்ரஜா ததா ராஜா

  சிவ யோகி said:
  June 10, 2011 at 5:29 am

  ஆகஸ்டு 15 க்கு அப்புறம் முன்றாம் உலக போர் வராம இருந்தா சரி

  Ravee said:
  June 10, 2011 at 12:10 pm

  அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி
  by Barathi Thambi on Monday, April 11, 2011 at 11:34am
  எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில் 5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு. ’இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க’ என மத்திய வர்க்க மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆக்‌ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன?

  ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். ’தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது. இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது’. அதாவது எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான் பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணையம் எதிர்க்கிறதேயன்றி, வாக்காளர்களை ஊழல்படுத்தும் இந்த சிஸ்டத்தை எதிர்க்கவில்லை. ’இருக்கும் நிர்வாக அமைப்பு சிறந்தததுதான், அதில் சில ஓட்டை, உடைசல்கள் இருக்கின்றன. அதை சரிசெய்துவிட்டால் வண்டி நன்றாக ஓடும்’ என முட்டுக்கொடுக்கவே முயற்சிக்கிறது.

  அப்படியானால் ’சட்டப்பூர்வமாக’ நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்கு என்ன வழி? தேர்தலை ஒரு பகடைக் காயாக மாற்றி ‘எங்களுக்கு ஓட்டுப்போட்டால் உங்களுக்கு மிக்ஸி தருவோம்’ என ஆஃபர் தருவதும், ‘எங்களுக்கு வாக்களித்தால் லேப்டாப் தருவோம்’ என பேரம் பேசுவதும்… மக்கள் நலனின் பெயரால் சட்டப்பூர்வமாக நடக்கிறது என்பதால் ஊழல் இல்லை என்றாகிவிடுமா? இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்னை. அதன் செயல்பாடுகள் சட்டப்பூர்வமற்ற ஊழல்களை மட்டுமே ‘ஊழல்’ என மதிப்பிடுகிறது. இதையே பொதுப்புத்தியாக நிறுவுகிறது.

  ஜார்கண்ட் மாநிலத்தில் பூர்வீக பழங்குடிகளுக்கு சொந்தமான 1,10,000 ஏக்கர் நிலம் வன்முறையாக பிடுங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது ஊழலா, இல்லையா? அதே மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் இரும்புத் தாது உலக சந்தையில் ஒரு டன் 7000 ரூபாய் விலைபோகிறது. இதை ஒரு டன் வெறும் 27 ரூபாய்க்கு ரெட்டி சகோதரர்களுக்கு விற்கிறது அரசு. இது ஊழலா, இல்லையா? ‘இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரவில்லை. ஆணையம் அதன் எல்லைக்குள் என்ன செய்ய இயலுமோ அதைத்தான செய்கிறது’ என இதற்கு பதில் வரும். ஆனால் நடைமுறையில் இது இந்த அளவுகோலில் புரிந்துகொள்ளப்படவில்லை. தேர்தல் ஆணையம் ஊழலை ஒழிக்க வந்த ரட்சகனாகவே மதிப்பிடப்படுகிறது. அவர்களும் அவ்வாறுதான் தங்களை கருதுகின்றனர் என்பது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.

  ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் விளைந்த விளைவுகள் என்ன?

  பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது நிற்கவில்லை. அரசியல்வாதிகளிடம் பதுங்கிக் கிடக்கும் பணம், இம்மாதிரியான தேர்தல் சமயத்தில்தான் கொஞ்சமாவது வெளியே வரும். ஒலி-ஒளி அமைப்பாளர்கள், மேடை அமைப்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள், கலைக் கூத்தாடிகள், இசைக் கலைஞர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், அச்சக உரிமையாளர்கள், பந்தல் பணியாளர்கள் என பெருந்தொகையிலான தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில்தான் கொஞ்சம் பணம் பார்ப்பார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும் இப்போது எந்த வேலையும் இல்லை. அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தபோது எல்லாம் கண்டுகொள்ளாது, கொள்ளையடித்தப் பணத்தை செலவு செய்யும்போது ஓடிவந்து தடுக்கிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக ஊழல்வாதிகளுக்கு காப்பரண்களாகவும் திகழ்கிறது தேர்தல் ஆணையம்.

  இதுநாள் வரை மக்கள் ஓட்டரசியல்வாதிகளின் ஊழல் அரசியலில் சிக்கித் திளைத்து மக்கள் சலிப்புறும் சமயத்தில் கொஞ்ச நேரம் கௌரவ கதாபாத்திரத்தில் கதாநாயகத்தனம் செய்துகொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். மிடிள் கிளாஸ் மனநிலைக்கு தீனி போடும் இந்த நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக ஓடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலின் அளவு இன்னும் பல்கிப் பெருகவே செய்யும். அப்போது அதைத் தடுக்க எந்த ஆணையம் வரும்? அன்னா ஹசாரே வருவாரா?

  ஊழலுக்கு எதிரான மசோதாவை சட்டமாக்கிவிட்டால் நாட்டில் ஊழலே ஒழிக்கப்பட்டுவிடும் என அன்னா சாமியாடுவதைப் பார்த்தால் காமெடியாக இருக்கிறது. ஏற்கெனவே இங்கு ஊழல் செய்வது சட்டப்படி சரியானது என்று இருக்கிறதா என்ன? இந்த கோயிந்து கோரிக்கைக்கு நாடு முழுக்க ஆதரவு அலைப் பெருகியது தற்செயலான ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்டது.

  முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியால் உலகம் முழுவதும் உருவாகி வரும் மக்கள் புரட்சி யூகிக்க முடியாத திசைகளிலும் தன் செல்வாக்கை நிலைநிறுத்திவருகிறது. இதைக்கண்டு உலகின் பல நாடுகள் அஞ்சுகின்றன. இந்தியாவில் இப்படி ஓர் புரட்சி தற்போது சாத்தியமில்லை என்றாலும், ஆளும் வர்க்கங்களுக்கு மக்கள் மனங்களில் உருவாகியிருக்கும் கூட்டு எதிர்ப்பு மனநிலையை உடனடியாக வடிய வைக்க வேண்டும். பசித்து குரைக்கிற நாய்க்கு ஒரு பொறைத்துண்டு வீசுவது போல, பொருளாதார நெருக்கடியால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் மத்திய கிழக்கின் எழுச்சி ஆகியவற்றினால் இந்திய மனங்களில் உருவாகிவரும் எதிர்ப்புணர்வை நோக்கி இந்த அரசு வீசியெறிந்த பொறைதான் அன்னா ஹசாரே.

  இப்போது மட்டுமல்ல… மக்களின் எதிர்ப்புணர்வை வடிய வைக்க அரசே அவ்வப்போது இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அந்த எல்லைக்குள் ’திறம்பட கோபப்பட்டால்’ நீங்கள் மிடிள்கிளாஸ் ஹீரோவாகலாம். எதிர்ப்புணர்வை ஓர் எல்லையில் நிறுத்தி வைத்து மழுங்கடிக்கும் வேலையை ஹசாரே திறம்படவே செய்து தந்தார். மற்றபடி ’ஆண்டி கரப்ஷன் ஃபோர்ஸ்’ நடத்த அன்னா ஹசாரே என்ன ரமணா விஜயகாந்த்தா?

  ஹசாரேவும் இந்த சிஸ்டத்தின் ஓட்டை, உடைசலை சரிசெய்து இதற்குள் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை கண்டடைந்துவிடலாம் எனவும், ஊழல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நடப்பு ஜனநாயக அமைப்புக்குள்ளேயே தீர்வு உண்டு எனவும் நம்புகிறவர்தான். இந்திய அளவிலான டிராஃபிக் ராமசாமி என இவரை வரையறுப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு வழக்குப் போடும் டிராஃபிக் ராமசாமி மயிலாப்பூர் கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் சென்று வரும் உரிமைக்கு ஆதரவாக வழக்குப் போட மாட்டார். அதேபோல்தான் அன்னா ஹசாரே ஓட்டரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவாரேத் தவிர, கார்பொரேட் கொள்ளைகளைக் கண்டுகொள்ள மாட்டார்.

  ’ஊழலை ஒழிக்க வேண்டும்’ என மொன்னையாக பேசும் அவர், ‘தொலைதொடர்புத் துறையில் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி 2,500 கோடி ரூபாய் கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும்’ என்றோ, ‘ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் 2 ஜி அலைவரிசையைக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்த நிறுவனங்களை அரசு முடக்க வேண்டும்’ என்றோ கோரிக்கை வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கைகள்.

  நாடு முழுக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வந்து நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியுள்ளனர். தாமிரபரணி தொடங்கி பிளாச்சிமடா வரை நாட்டின் நீர்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன. கடல்வளத்தை கடற்கரையோர மேலான்மை சட்டம் என்ற பெயரால் குத்தகைக்கு விடுகின்றனர். எல்லையோர இனங்களுக்கு அனுதினமும் துன்ப, துயரம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது. இவற்றை வெளிப்படையாகப் பேசி மக்களை அணி திரட்டும் வேலையை அன்னா ஹசாரே செய்வாரா? மாட்டார். அவரது பிரச்னை எல்லாம் ‘ஏம்ப்பா இல்லீகலா ஊழல் பண்றிங்க. சட்டப்படி ஊழல் பண்ணீங்கன்னா யார் உங்களைக் கேட்கப்போறா?’ என்பதுதான். இதற்காகத்தான் அவர் சட்டம் இயற்றச் சொல்லி போராடுகிறார்.

  ஊழல் எதிர்ப்பு என்கிறார். அந்த ஊழலை உற்பத்தி செய்யும் இந்த அரசு என்னும் நிறுவனத்தை கேள்வி கேட்கமாட்டார். அதனால்தான் அவருக்கு பத்மபூஷன் தொடங்கி, பத்மஸ்ரீ வரை சகல அரச விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் உச்சமாக 2008-ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்காக அன்னா ஹசாரேவுக்கு உலக வங்கி விருது வழங்கி கௌரவித்தது. உலக வங்கியால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதும், அதை இந்திய மிடிள்கிளாஸ் மனநிலைக் கொண்டாடுவதும் எத்தனை நகைமுரண்?

  இதை எல்லாம் தாண்டி உண்ணாவிரதம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது… போன்றவற்றுக்கு எல்லாம் நடப்பு சூழலில் எந்தப் பொருளும் இல்லை. ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்ற கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் உண்ணாமல் இருப்பதை ஒரு போராட்டமாக செய்வது, அவர்களை நோக்கி கிண்டல் செய்வது போலதான். இதையும் தாண்டி, விதர்பா விவசாயிகள் தற்கொலை, காஷ்மீரிலும், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவக் கூலிப்படை நிகழ்த்திவரும் கொலைகள் என உயிர்களை பலியெடுப்பதை பெருவிருப்புடன் செய்து வருகிறது இந்த அரசு. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு எதிரான சக்தி ஒன்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு மடிந்துப்போகிறது என்றால் அதற்காக இந்த அரசு மகிழ்ச்சி அடையத்தான் செய்யும்.

  வடகிழக்கில் பத்து வருடங்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் Armed Forces Special Powers Act (AFSPA) சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இரோம் சர்மிளா ஜானு உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் கேரளா முத்தங்கா காடுகளில் தங்கள் பூர்வீக நில உரிமையை ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டம் மூலம் வென்றடைந்தார் சி.கே.ஜானு. இப்போது நமக்குத் தேவை சர்மிளா ஜானுவா, சி.கே.ஜானுவா என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும்.

  மறுபடியும் ஹசாரேவுக்கு வருவோம். அவர் வரையறுக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரைபடம் முதலாளிகளால் வரையப்பட்டது. பாதுகாப்பான உடலுறவுக்கு காண்டம் அணியச் சொல்லி வலியுறுத்தப்படுவதைப் போல, பாதுகாப்பான ஊழலை உத்தரவாதப்படுத்த லோக்பால் மசோதாவை சட்டமாக்கச் சொல்கிறார் ஹசாரே. இந்த உண்மைகளை மறைத்து ஊடகங்கள் இவரை Romanticise செய்கின்றன. ஏனெனில் இந்திய மத்திய தர வர்க்கம்தான் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை. அந்த மத்திய தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஹசாரே பிரதிபலிக்கிறார்.
  Like · · Share
  Like this item
  87 people like this.
  50 of 62

  Karthik Param good views, these are the questions that arise in my mind whenever i see the cheap, third rated politics, we should gutter those inglorious corrupted guys
  April 11 at 1:06pm · Like

  Geetha Narayanan ஆழமான வாசிப்பும்,புரிதலும்,களப்பணி அனுபவமும் இல்லாத ஊடகவியலாளர்களையும் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
  April 11 at 1:07pm · Like · 2 people

  Priya Thambi ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்ற கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் உண்ணாமல் இருப்பதை ஒரு போராட்டமாக செய்வது, அவர்களை நோக்கி கிண்டல் செய்வது போலதான். // excellent article…
  April 11 at 1:09pm · Like · 1 person

  Geetha Narayanan the media persons who lack understanding on structural issues of class,caste ,gendercorruption and governance should not touch upon these issues.
  April 11 at 1:10pm · Like

  Geetha Narayanan media is also a big part of the problem.
  April 11 at 1:11pm · Like · 2 people

  Laksh Manan மிக அற்புதமான பதிவு
  April 11 at 1:13pm · Like · 2 people

  Geetha Narayanan ஊடகங்களின் நேர்மையையும்,மதிப்பீடுகளையும் நாம் பொதுவெளியில் கேள்வி கேட்பது மிக அவசியம்.
  April 11 at 1:24pm · Like

  Chennai Thamizhan உலகத்தில் அதிகமான இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா…. அந்த இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை தேடிக்கொண்டிருக்கிறார்கள்….. வீரனும் விவேகமும் நிறைந்தவர்கள் விடுதலை கிடைக்கும் வரை பிறந்து கொண்டே இருப்பார்கள்…. இதுதான் காலத்தின் தத்துவம்…
  April 11 at 1:26pm · Like · 2 people

  Imayan Thambi http://toostep.com/insight/the-other-side-of-the-company-that-anna-hazare-keeps
  April 11 at 1:33pm · Like

  Veera Pandian G I am giving the slightly similar comment put, few days ago when the whole country fell sick with the virus of anti corruption, on our friend PG Saravanan’s link on suddenly mushroomed anti-corruption movement. When Our ‘ELDER BROTHER 1000 R…See More
  April 11 at 1:34pm · Like · 2 people

  Veera Pandian G ‎@ leela manimegalai, thanks leena to remind me gandhi’s name at this juncture… We need to answer a great question… Can a Gandhian eliminate corruption from our society if he follows his principles in public life?
  April 11 at 1:48pm · Like

  Barathi Thambi ‎Veera Pandian G: http://gandhism.net/
  April 11 at 1:51pm · Like

  Nandha Ra ஊடகங்கள் நேர்மையானவை இல்லை.மக்களை முட்டாளாக்கவே இந்த ஊடகங்கள் அரசுக்கு தேவையாக உள்ளன.அருமையான கட்டுரை.
  April 11 at 1:54pm · Like · 2 people

  Athiyaman de Libertarian அன்னாவின் ‘போராட்டம்’ தோல்வி அடைந்தால் ஊழல்வாதிகள் மகிழ்வர். தொடர்வர். அதை தான் அப்ப விரும்புகிறீர்களா என்ன ? முழு தீர்வு இல்லை தான் இது. ஆனால் ஒரு beginning. சரி, அப்ப status quo தொடர்ந்தால் பரவாயில்லையா ? ஜனனாயக அமைப்பு இந்தியாவில் சீரழிந…See More
  April 11 at 2:25pm · Like

  Athiyaman de Libertarian தனியார்மயம் தான் இதன் ஊற்றுகண் என்றால், பின் முற்றிலும் தனியார் மயமான நாடுகளில் ஏன் இத்தனை ஊழல் இல்லை. ஊழலை பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்கும் Transparancy International ஊழலில் மிக மிக குறைந்த் நாடாக டென்மார்க்கை தான் சொன்னது. ஆனால் டென்மா…See More
  April 11 at 2:28pm · Like · 1 person

  Athiyaman de Libertarian ஒரு நண்பர் சொன்னது : வேதாந்தம் இரும்பு தாதை 27 ரூபாய்க்கு வாங்கி இரண்டாயிரத்திற்க்கு விற்கிறது என்றால் அதன் பயனாளி வேதாந்தம் மட்டுமா. எத்தனை அரசியல்வியாதிகள், அதிகாரிகள் பயனடைகிறார்கள். அதேபோல்தான் டாடா, அம்பானி எல்லாம்.
  இப்போது immunity யி…See More
  April 11 at 2:30pm · Like

  Athiyaman de Libertarian http://www.forbes.com/2007/08/15/wipro-tata-corruption-ent-law-cx_kw_0814whartonindia.html
  April 11 at 2:31pm · Like · 1 person

  Athiyaman de Libertarian TO ROOT OUT CORRUPTION, BOOT OUT BIG GOVERNMENT
  http://www.businessweek.com/archives/1994/b335623.arc.htm
  IF YOU WANT TO CUT CORRUPTION, CUT GOVERNMENT
  http://www.businessweek.com/archives/1995/b345435.arc.htm
  In modern economies, profits often…See More
  April 11 at 2:31pm · Like · 1 person

  அ. வெற்றிவேல் அருமையான பதிவு பாரதி..//அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தபோது எல்லாம் கண்டுகொள்ளாது, கொள்ளையடித்தப் பணத்தை செலவு செய்யும்போது ஓடிவந்து தடுக்கிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக ஊழல்வாதிகளுக்கு காப்பரண்களாகவும் திகழ்கிறது தேர்தல் ஆணையம்.//// இதைத்தான் என் நிலைத்தகவலாக நான் போட்டு இருந்தேன்..முகநூலில் இளைப்பாறும் தேசியப் பற்றாளர்கள் என் நண்பர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை..
  April 11 at 2:42pm · Like · 2 people

  Barathi Thambi ‎@ athiyaman: vinavu தளத்தில் காபி பேஸ்ட் செய்தவற்றை அப்படியே இங்கு மறுபடியும் காபி பேஸ்ட் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கான பதில்களும் அங்கேயே இருக்கின்றன.
  April 11 at 2:47pm · Like · 4 people

  அ. வெற்றிவேல் நான் என் சுவற்றில் பகிர்ந்துள்ளேன்.. மிக அருமையான பதிவு..
  April 11 at 2:48pm · Like

  கதிர் நிலவன் vaztthukkal! nalla pathivu barathi thmbi!
  April 11 at 3:35pm · Like

  Manoj Shidan மிக அருமையான தொகுப்பு…இந்த அன்னா ஹாசரே வை ஒரு காட்சி பொருளாகவும், விளம்பர ஹீரோவாகவும் மாற்றிவிட்டது ஊடகங்கள்…
  மேலும்,இணையதளங்களில் இவரை ஆதரிக்கிறோம் என்று கூறுவதை ஒரு பெருமைக்குரிய விஷயமாகவும்…நாட்டு பற்றை வெளி படுத்தும் பாங்காகவும் கொண்டுள்ளனர்….அவரை பற்றிய உண்மை விளக்கத்தை அவரை ஹீரோவாக நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
  April 11 at 4:22pm · Like

  Athiyaman de Libertarian no bharathi. there are no ‘answers’ there. i shared it here. if possible try to address them here.
  April 11 at 4:50pm · Like

  Athiyaman de Libertarian ‎’something is better than nothing’
  April 11 at 4:51pm · Like

  Athiyaman de Libertarian with Anna there is something or we can do with nothing
  April 11 at 4:51pm · Like

  Athiyaman de Libertarian which do you prefer ?
  April 11 at 4:51pm · Like

  Athiyaman de Libertarian and do you prescribe dictatorship of something instead of this dysfunational democracy here ?
  April 11 at 4:52pm · Like

  Athiyaman de Libertarian if so, how will it IMPROVE the situation
  April 11 at 4:52pm · Like

  Srinivas Kavenayam To be radical is to grasp the root of the matter, i din see this old dude has anything like that. but I can’t question his integrity in public interest ,instead im deeply concerned abt the publicity he earned which is quite unlike for a tru…See More
  April 11 at 6:09pm · Like

  Chandru Sekar ji simply superb
  April 11 at 7:14pm · Like

  Saroja Nagaikavin தேர்தல் நேர்மையக ந்டைபெறவேண்டும் என்பது எல்லோரும் விரும்புவது தானே]
  April 11 at 7:51pm · Like

  Balasubramaniyan Ad பா.தம்பி, 1000 லைக் போடுவதற்கு ஃபேஸ் புக்கில் ஏதாவது வழிவகை உள்ளதா? கடந்த சில நாள்களாக மனதில் புழுங்கிவந்ததை எழுதியுள்ளீர்கள். மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். தலைப்பு….. மிகமிகமிகப் பொருத்தம். முழுப் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு இந்த நாடகத்தின் இன்னொரு கூறு குறித்து எழுதுகிறேன்.
  April 11 at 7:53pm · Like

  Iqbalahamed Iqbalahamed Iqbal ‎…like krishna iyer told one fine morning ‘oh rahulji! save india!’. Ratchagan,indhiyan, annamalai, pandiyan, padaiyappaa, sivaji, anniyan, cock kandasamy, enthiran, anna hazare,….
  April 11 at 7:56pm · Like

  Venkatesh Pandian I am gonna borrow it for my wall anna.. I may contradict with some views here but its too much of importance to look beyond with more than eyes..
  April 11 at 8:42pm · Like

  Sd Prabhakar அருமையான பதிவு.
  April 11 at 10:27pm · Like

  Anbu Mani அருமையான பதிவு. தகவல் உரிமைச்சட்டத்தை நீர்த்துப்போகச்செய்தது போல் லோக்பால் சட்டம் ஒருவேளை வந்தால் அதையும் நீர்த்துப்போக செய்திடுவார்கள். இந்த அமைப்பை மாற்றாமல் ஊழலை ஒழிக்க முடியாது. தேவை அறுவை சிகிச்சை தான். புண்ணுக்கு புனுகு பூசும் வேலை அல்ல.தேர்தல் ஆணையமும் சேசன் காலத்தில் இருந்து இந்த இத்துப்போன சனநாயகத்துக்கு பூசி மெழுகி பட்டிபார்க்கும் வேலையத்தான் செய்கிறது
  April 11 at 10:40pm · Like

  Raja Mohamed இந்தப் பதிவிற்கு இவ்வாறு பின்னூட்டம் எழுதுவதோடு முடிந்துவிட்டதா உங்கள் அனைவரின் கடமை…..அன்னா ஹசாரேவை வைத்து அரசு ஆதாயம் தேடிக்கொள்கிறது.இந்த விசயம் நம் அனைவருக்கும் தெரிகிறது.இந்த விசயம் தெரிந்தவர்கள் முன் வந்து அவர் நடத்திய போராட்டத்தை …See More
  April 11 at 11:06pm · Like · 1 person

  Felix Xavier இப்படியே ஆளுக்கு ஆள் பேசிட்டே இருக்கறதுல என்ன பயன். வேற என்ன தான் பண்றது அத யாரும் சொல்ல மாட்டீங்க
  April 11 at 11:31pm · Like · 1 person

  Sundarappa Kamaraj மிகத்தெளிவானதும் வீர்யமனதும் இந்தக்கட்டுரை.வலையில் அரிதாகாக்கிடைக்கும் இப்படியான நிஜக்கோபங்களை ஒன்று திரட்டவேண்டும்.அசத்து தம்பி.
  April 12 at 6:20am · Like

  Sundarappa Kamaraj கையெழுத்துப்போட ஐநூறு வாங்கிக்கோ,பட்டா மாத்த ஐயாயிரம் வாங்கிக்கோ,காலேஜில் சேர்க்க அஞ்சு லட்சம் வாங்கிக்கோ,வேல வாங்கிக்கொடுக்க பத்து லட்சம் வாங்கிக்கோ,அரசு நிறுவணங்களை ஊளை மோர் விலைக்கு விற்க கோடிகோடியாய் வாங்கிக்கோ.திருப்பி நூறு இரு நூறு கொடுத்தா கொன்னு போட்டுருவேன் இது தான் இப்போதைக்கு புரட்சி.
  April 12 at 6:26am · Like

  Kavitha Sornavalli ATLAST feel sick by reading this type of articles Barthi ! yen oru intiative kooda ithna _ive – a articlesum commentsumaa ?
  April 12 at 7:37am · Like

  Kavitha Sornavalli inga..ithna kovathadovum…aavesathodavum pesi irukra 55 perla ethna peru lanjam, scam-kku ethiraa munneduthu nikka poranga ? barathi
  April 12 at 7:38am · Like

  Kavitha Sornavalli Felix Xavier இப்படியே ஆளுக்கு ஆள் பேசிட்டே இருக்கறதுல என்ன பயன். வேற என்ன தான் பண்றது அத யாரும் சொல்ல மாட்டீங்க

  ithuthan kadaisi varaikkum nadakkum…evan etha senjalum kuththam sonathaan intelectual -s aa ?
  April 12 at 7:39am · Like · 1 person

  Samaran Nagan அடித்தட்டு உழைக்கும் மக்களின் நிஜ கோபகுரல் இது ! நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !
  April 12 at 10:04am · Like

  Saravanan Subramaniam உங்கள் கோணம் சரியாகவே இருக்கலாம். தற்போதையச் சூழலில், கோடிக்கணக்கான மக்களில் பெரும் பகுதியினரை ஒன்று சேர்த்து, போராட்ட மனோபாவத்தை விரிவுபடுத்த முடியும் என்று நீருபித்திருப்பதாலும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு எதிராக இந்திய மக்களை கிளர்ந்தெழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாலும் அன்னா ஹசாரே விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்தே தீர வேண்டியது காலத்தின் கட்டாயமாகவே நினைக்க வைக்கிறது.
  April 12 at 4:53pm · Like · 2 people

  Kavin Malar கவின் மலர் pinnitteenga boss! 100% i agree with you
  April 13 at 6:26pm · Like

  Balaji Mathaiyan Perfect aa sonneenga ponga !
  April 17 at 9:54pm · Like

  Samaran Nagan ‎4 நாள் உண்ணாவிரதத்திற்கு 86 லட்சம் யார் கொடுத்தது ?
  April 17 at 10:12pm · Like

  Saroja Nagaikavin vanakkam thambi pu tholil rppadi irukku?
  April 18 at 11:13pm · Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s