ஜாதகமும் -ரேஷன் கார்டும்

Posted on

ஒரு சினிமாவுல வடிவேலு ஜோசியர்க்கிட்டே ஜாதகத்துக்கு பதில் ரேஷன் கார்டை கொடுத்துருவாரு. ஆனால் நெஜமாலுமே ஜாதகத்துக்கும்,ரேஷன் கார்டுக்கு லிங்க் இருக்குதுங்கண்ணா. அதை இந்த பதிவுல பார்ப்போம்.பை தி பை துண்டு துக்கடாவா நிறைய டிப்ஸும் கொடுத்திருக்கேன். மறக்காம உங்க கருத்துக்களை தெரிவிங்க.

ரேஷன் அட்டையில ரெண்டு கேட்டகிரி இருக்கு. ஒன்னு அரிசி அட்டை. இன்னொன்னு சர்க்கரை அட்டை. அரிசி அட்டை இருந்தா தாத்தா ரெண்டு ரூவா அரிசி தருவாரு/அதை ஒரு ரூவாயாக்குவாரு/ அம்மா இலவசமாவே அரிசி தருவாய்ங்க.ஃபேன்,மிக்ஸி,கிரைண்டரு இன்னபிற வாங்கிக்கலாம்.

ஆனால் அதை வச்சுக்கிட்டு எஸ்.எஃப்.சி, சி.எஃப்.சில லோன் கேட்டு போனா “ஓடி பூடு”ம்பாய்ங்க.சக்கரை அட்டைக்கு அரிசி பருப்பு கிடையாது ஆனால் பெரிய பெரிய வேலைல்லாம் செய்யலாம்,

நம்ம ஜாதகம் அரிசி அட்டையா சக்கரை அட்டையா பார்த்துக்கிடனும். ஐ மீன் கரையேறினாலே ஆச்சரியங்கற ஜாதகமா? அ அசால்ட்டா கரையேறி பத்து பேரை கை தூக்கிவிடற ஜாதகமா பார்த்துக்கனும்.

அட அரிசி அட்டைய சக்கரை அட்டையா மாத்திக்க முடியும்ங்கற பொது உருப்படாத சாதகத்தை கூட மினிமம் கியாரண்டி ஜாதகமா மாத்திக்க முடியுமா இல்லையா? முடியும்.

இதுல ஒரு சிக்கல் இருக்கு. அரிசி அட்டை வேணாம்ன உடனே சர்க்கரை அட்டைய தூக்கி கையில தரமாட்டாய்ங்க. அப்படியே தந்துட்டாலும் மறு நாளே தேசியமயமாக்கப்பட்ட வங்கிலயோ – மேற்படி எஸ்.எஃப்.சி, சி.எஃப்.சிலயோ டோக்கா லோனை தூக்கித் தந்துர மாட்டாய்ங்க. அதே சமயம் அந்த மாசமே அரிசி கட் . பருப்பு கட்.

இந்த மாதிரி ஒரு நிலையை சமாளிச்சு நாலு சோடி செருப்பு தேய திரிஞ்சு லோன் கிடைச்சு அதை உருப்படியா இன்வெஸ்ட் பண்ணி தொழில் பண்ணா ஓகே. இடையில இதெல்லாம் வேலைக்காகாதுப்பான்னுட்டு யு டர்ன் அடிச்சா பல்புதேன்.

உருப்படாத ஜாதகம் – பிலோ ஆவரேஜ் ஜாதகம் – ஆவரேஜ் ஜாதகத்துல பிறந்துட்ட ஒரு பார்ட்டி தன் லைஃப் ஸ்டைல மாற்றிக்கொள்வதன் மூலமா தூள் கிளப்பலாம். அதுக்கெல்லாம் வழி இருக்கு.

க்ளூ:
நீ எதையாவது பெற வேண்டுமானால் வேறு எதையாவது இழந்தே ஆகவேண்டும்

ஜாதகங்கள்ள பல வகை இருக்கு. உ.ம் முன் யோகம் ,பின் யோகம் , பெண்கள் ஜாதகத்துல ஹவுஸ் வைஃப் – ஆஃபீஸ் கோயர்னு ரெண்டு ஜாதி இருக்கு.

நான் பார்த்த வரை மேரீட் லைஃப், கேரியர் ரெண்டும் நெல்லா இருக்கிற ஜாதகங்கள் ரெம்ப ரெம்ப ரேர். ஆரு ஒருத்தருக்கு (தாய்குலத்தை சொன்னேன்) சுக்கிரன், 7 ஆமிடம் , 7 ஆம் பாவாதிபதி கெட்டிருக்காய்ங்களோ அவிக ஜாதகத்துல பார்த்திங்கனா 2, 5,9 ,10, 11 பாவங்கள் பெட்டரா இருக்கும்.அட்லீஸ்ட் ஏதோ ஒன்னு பெட்டரா இருக்கும்.

பெண்கள் மொதல்ல தங்கள் ஜாதகம் என்ன ஜாதின்னு பார்த்துக்கிடனும். அப்பாறம் தேன் எக்ஸ்ட் ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் , பப், நெட் சென்டர்னு டைவர்ட் ஆகனும், திருமண வாழ்க்கையில சிக்கல் இருக்கும்னு தெரிஞ்சா ஒழுங்கு மரியாதையா படிப்பு மேல கவனம் செலுத்தி வேலை வெட்டி பார்த்துக்கிடனும். கண்ணாலத்துக்கு அப்பாறம் எக்காரணத்தை கொண்டும் வேலைய விட கூடாது.

சுபகிரகங்கள் -அசுப கிரகங்கள்: (நைசர்கிகம்)

இது நாள் வரை என் பதிவுகள்ள நைசர்கிக சுபத்வ பாபத்வம் முக்கியமில்லை. லக்னாத் பாபத்வ சுபத்வம் தான் முக்கியம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். (இப்பவும் மாத்தப்போறதில்லை .டோன்ட் ஒர்ரி) ரெண்டு கேட்டகிரி கிரகங்களும் தரக்கூடிய நல்ல பலன்ல உள்ள வித்யாசத்தை சொல்லப்போறேன்.

ஒரு கிரகம் நைசர்கிக சுபகிரகமாவும் இருந்து ( வளர்பிறை சந்திரன், குரு,பாவிகளுடன் சேராத புதன்,சுக்கிரன்) உங்க லக்னத்துக்கும் சுபனா இருந்தா நோ ப்ராப்ளம். உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் ரைட் ராயலா ,ரொட்டீனா வந்துரும்.

ஒரு கிரகம் நைசர்கிக்க பாபியா இருந்து (சூரியன், தேய்பிறை சந்திரன்,செவ்,ராகு,சனி, பாபிகளோடு சேர்ந்த புதன், கேது) உங்க லக்னத்துக்கு சுபனாவோ ,சுப பலத்தை தரக்கூடிய நிலையிலயோ இருந்தா உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் கொஞ்சம் வித்யாசமா இருக்கும்.

உ.ம் ஏலத்துல எடுக்கிறது – கோர்ட் ஜப்தி பண்ண சொத்து ,வழக்கு வில்லங்கத்துல உள்ள சொத்து, ஆளடிச்ச வண்டி, துர்சம்பவம் நடந்த சொத்து, அடிச்சு பிடுங்கறது -ஏமாத்தறது – விரோதிகள் உருவாக்கிக்கிறதால கிடைக்கறது – அடுத்தவுக வயிறு எரிய வாங்கறது

அது சரி ஒரே கிரகத்துக்கு ரெண்டு வித ஆதிபத்யம் கிடைச்சா ? உ.ம் மிதுனம். இந்த லக்னத்துக்கு சனி அஷ்டமாதிபதியாவும் இருக்காரு -பாக்யாதிபதியாவும் இருக்காரு. அப்பம் எப்படி பலன் தருவாரு?

மொதல்ல துஸ்தானாதிபத்யத்தோட பலனை தருவாரு. அப்பாறம் சுஸ்தானாதிபத்ய பலனை தருவாரு. இது அந்த தசா வருடங்கள்ள பாதியாவும் இருக்கலாம். ஜாதகரோட ஆயுள்ள பாதியாவும் இருக்கலாம்.

( நம்ம ஜாதகத்துல குரு 6,9 க்கு அதிபதி . குருன்னா அவாள். நான் என் வாழ் நாள்ள பாதிகாலம் அவாளோட மல்லு கட்டியே ஆகனும். இப்பம் 45 வயசு. ங்கொய்யால 3ஆம் கிளாஸ்லயே நமக்கு இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு. அதாவது 5+3 = 8 வயசுல . 45-8=37 வருசமா பிராமண எதிர்ப்பு தொடருது.

அப்பம் இன்னைய தேதிக்கு நம்ம ஆயுசு இன்னொரு 37 வருசம் வரை இழுத்துரும் போல)

ஜாதக சக்கரத்துல மொத்தம் 12 கட்டம் இருக்கு. தீர்காயுசா வாழ்ந்தா 120 வயசு வாழலாம்.அந்த கணக்குப்படி ஒவ்வொரு ராசிக்கு பத்து வருசம்.ஆனால் தாத்தாவை தவிர நாம ஆரும் அந்த ரேஞ்சுக்கு வாழ்வம்னு நான் நினைக்கலை. ஃபெடல் கேஸ்ட்ரோவே உளற ஆரம்பிச்சுட்டாரு ( நெல்ல வேளை ரிட்டையராயிட்டாருப்பா – அந்த அளவு ஆவிசும் வேணாம் . இளந்தாரிங்க கேலி கிண்டலுக்கு ஆளாகவும்வேணா ஆள விடுங்க )

இன்னைக்கு சராசரி வயசு என்ன? குறிப்பிட்ட ஜாதகருக்கு எந்த ரேஞ்சுல ஆவிசு இருக்கும்னு குன்ஸா ஒரு கணக்கு போட்டுக்கங்க. அதை பன்னெண்டால வகுத்துருங்க.

லக்னம் மொதல் 12 பாவங்கள்ள எந்தெந்த பாவங்கள்ள சுப கிரகங்கள் – சுப பலமா இருக்காய்ங்கன்னு பாருங்க. உ.ம் உங்க கணக்குப்படி ஜாதகரோட ஆவிசு 60 வருசம்னா.. ஒவ்வொரு பாவத்துக்கும் 5 வருசம். லக்னம் சுபரால் நிறைந்து ,பார்க்கப்பட்டு இருக்குன்னு வைங்க

அவரோட லைஃப்ல மொதல் நாலு/ அஞ்சு /ஆறு /ஏழு /எட்டு வருசத்துல எத்தீனி வருசம் நெல்லா, சூப்பரா ஜல்சாவா இருந்ததுன்னு கேளுங்க. அவர் சொன்ன வருசத்தின் எண்ணிக்கைய 12 ஆல பெருக்கிருங்க.அதான் அவரோட ஆவிசு.

நம்ம லைஃபை கணக்கெடுத்தா 1967 முதல் 1984 வரை ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரிதான் லைஃப் போச்சு. அப்பம் 17X12 வருசம் வாள்விங்களானு கேட்காதிங்க. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஆராய்ச்சி. எந்த அளவு ஒர்க் அவுட் ஆகியிருக்குனு வாழ்ந்து முடிச்சவுக ஜாதகத்தை பாருங்க.

ஜாதகம் எஸ்.எஸ்.சி பரீட்சை கொஸ்டியன் பேப்பர் மாதிரி , ஜாதகம் ஒரு டூ இன் ஒன் ஏடிஎம் கார்டும் அதுவே கிரெடிட் கார்டும் அதுவே ஜாதகம் ஒரு வங்கி பாஸ் புக் மாதிரி. எப்டி எப்டி எப்டினு கேப்பிக இன்னொரு நாள் பார்ப்போம்.

Advertisements

5 thoughts on “ஜாதகமும் -ரேஷன் கார்டும்

  Ismail said:
  June 8, 2011 at 5:08 am

  அய்யா வணக்கம். கொஞ்சம் நல்ல யோசிச்சு ஒரு ஐந்து முறை படித்தல் மட்டுமே நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது.
  ஆனால் எனக்கு என்னமோ நீங்கள் சொல்லவந்ததை முழுமையாக சொல்லவில்லை என்பதுபோல தெரிகிறது.
  இதன் தொடர்ச்சியை எதிர்பார்கிறேன்.
  சமீபகாலமாக DNA லெவல் தியான பயிற்சி என்று நமது கர்மாவையே மாற்றும் பயிற்சி ஒன்றினை கேள்விபடுகிறேன். அதன் மூலமாகவும் நமது ஜாதக பலனை சாதகமாக மாற்றுவது சாத்தியமா.

  சிவ யோகி said:
  June 8, 2011 at 5:21 am

  ஒம் என்று பிரவண மந்திரம் ஓது…ஓங்காரமாய் மாறு …..கர்மாவை விட்டு விலகி நிற்க இதை விட சிறந்த வழி ஏது? 🙂

  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்
  ஒம்

  🙂

  vinoth said:
  June 8, 2011 at 7:33 am

  இஸ்மாயில் அண்ணா…
  பணம் பண்ன தியானம் + சயின்சு..னு அரம்பிச்சுட்டங்க போல…
  உச்சந்தலையில் ,துரியத்தில் கவனததை வைத்து தியானம் பண்ணினா…
  DNA , RNA எல்லாம் பழய கான்செப்ட். செல்லின் அடிப்படை டி.என்.ஏ.
  ஆனா செல்லின் ஆயுளே 90 நாள் தானே.. கேட்டா எதுனா விளக்கம் கொடுப்பங்க..

  கர்மாங்கிறது மனம் சம்பந்தபட்டது.. மனத்தை டி.என்.ஏவை வச்சு என்ன செய்ய…
  பெரிய பதிவா ரெண்டு போடலாம் இத பட்திதி ஏதும் பணம் கட்டி ஏமாறதீங்க..

  துரியத்தில் தியானம் பன்ணினா கர்மா கரையும்…

   Ismail said:
   June 8, 2011 at 7:54 am

   நன்றி வினோத் அய்யா. நான் இந்த DNA தியான முறை பற்றி உங்களை போல எதிர்மறை கருத்தே கொண்டுள்ளேன்.
   துரியத்தில் கவனம் வைத்து இறைநிலையோடு இணைய இணைய சஞ்சித கர்மம் கரையுமாம்.
   இது நம் முன்னோர்கள் சித்தர்கள் சொன்னது. ஆனால் செல்கள் லெவெலில் அதிக கவனம் ஆகாது. காரணம் அதிக செல் உற்பத்தி ஆகி தேக்கம் ஏற்பட்டால் கேன்சர். செல் உற்பத்தி குறைதல் முதுமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s