ஆத்தா ஒரு ட்ராகுலா !

Posted on

இன்னாங்கடா இது நம்ம முருகேசு பெரியாரை சித்தபுருசரும்பாரு – இன்னய தேதிக்கு நான் சாமியாருனு மாஃப் காட்டற திருட்டு பசங்களோட ஒப்பிட்டா பெரியாருதேன் உண்மையான சன்யாசிம்பாரு அம்புட்டுதேன். ஆனால் படக்குனு ஒரு யு டர்ன் அடிச்சு நாத்திகத்துக்கு இறங்கிட்டாரோன்னுட்டு குழம்பிராதிங்க.

என்னை உங்க ஊருக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பறிங்க. நானு அடப்போங்க சார்.. பஜாருக்கு போகவே நேரமில்லை. நான் எங்க வர்ரதுன்னு கழண்டுக்கறேன். நீங்க வாரம் பத்து நாள் தொடர் மெயில்கள் அனுப்பி வரச்சொல்லி வற்புறுத்தறிங்க.

நான் என்னைக்கு வரேன்னு சொல்லமுடியாது. புறப்படறனன்னைக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்னு சொல்றேன். உங்க நல்ல நேரமோ என் கெட்ட நேரமோ ஒர்க் அவுட் ஆகி, உங்க வில் பவர் / உங்க எண்ண அலைகள் என்னை கிண்டோ கிண்டுன்னு கிண்ட புறப்படலாம்னுட்டு உங்களுக்கு ஃபொன் பண்றேன். உங்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நான் புறப்படுவேனா?

ஒரு வேளை நீங்க ஃபோன் ஆன்ல வச்சிருந்து என் காலை எடுத்து பேசி வேலூர் வந்து வந்துருங்க சார் .ஷார்ட். புது பஸ்ஸ்டாண்ட் போகாதிங்க. பழைய பஸ் ஸ்டாண்டுல இறங்கிட்டு ஒரு மிஸ்டு கால் தட்டி விடுங்க நான் பிக் அப் பண்ணிக்கிறேங்கறிங்க.

நானும் நம்பிக்கையா புறப்பட்டு வரேன். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஃபோன் பண்றேன். நீங்க ” சார் .. நீங்க என்ன பண்றிங்கண்ணா அப்படியே வெளிய வாங்க.வந்து ஆட்டோ ஸ்டாண்ட்ல் காந்தி நகருன்னு சொல்லுங்க. நூறு ரூபாதான் கேட்பான் அப்படியே வந்து”ங்கறிங்க.. நான் என்ன பண்ணுவேன்/

அடப்போங்கடா நீங்களும் உங்க இழவும்னுட்டு அடுத்த பஸ் பிடிச்சு சித்தூரை பார்க்க வந்துருவேன்.

ஒருவேளை .. நீங்க பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணி என்னை பிக் அப் பண்ணி டீ,காஃபி, பான்,பீடா,பீடி,சிகரட்டு எல்லாம் வாங்கி கொடுத்து ஊட்டுக்கு கூட்டி போயி திண்ணையில உட்கார வச்சுட்டு உள்ள போறிங்க.( உங்க ஊர்ல இன்னம் திண்ணைங்க இருக்கா பாஸ்? எங்க ஊர்ல இடிச்சு கட்ட வசதியில்லாத திவால் பார்ட்டிங்க மட்டும் விட்டு வச்சிருக்காய்ங்க )

அஞ்சு நிமிசம்,பத்து நிமிசம்.பதினைஞ்சு நிமிசம் ஆச்சு . ஆளை காணோம். இன்னாங்கடா இது இந்த வீட்டு எலிவேஷன் மட்டும் உண்மையோ.. பின்னாடி ஒன்னும் இருக்காதோ/ வெட்ட வெளியோ? இந்த ஆளு அப்படியே பொடி நடையா மலையாள பிட்டு படம் பார்க்க போயிட்டாரோன்னுட்டு எனக்கு டவுட்டு வருது. நான் என்ன பண்ணுவேன். ” ஆளை விடுங்கடா”ன்னுட்டு பிச்சிக்கினு சித்தூர்.

இந்த ரேஞ்சுல – இந்த சீரியல்ல தொடர் பதிவே போடலாம். மத்ததை எல்லாம் உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

ஒரு காலணா சோசியன் நான். உங்களுக்கு மூட்டை அவுத்து கொடுக்கப்போறது ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா வெத்தலை பாக்குல ரூவா வச்சு எனக்கு அழப்போறிங்க. இருந்தாலும் என்னை இன்வைட் பண்ணி ரிசீவ்பண்ணிக்கிட்டு சோசியம் கேட்டுக்கறதிலியே இத்தனை கண்டமிருக்கு.

அப்படியா கொத்தது ஆத்தாவை இன்வைட் பண்றதுன்னா தமாசா? ஆத்தாவுக்கு கடுப்பானா இன்னா ஆவும்? ஆத்தாளை இன்வைட் பண்ணவேண்டியது நம்ம மன்சால – மனசுக்குள்ள.

அவளை இன்வைட் பண்றதுக்கு முந்தி நம்ம மனசுக்குள்ள இருக்கிற தனி மனித கழிவு, சமூக கழிவு,பிராமண கழிவு ,அமெரிக்க கழிவு எல்லாத்தையும் மனிதம் என்ற கங்கையை ஓடவிட்டு சுத்தப்படுத்தி வச்சுக்கிடனும்.

சதா சர்வ காலம் அவளையே நினைச்சு ஜொள்ளு விட்டு – வா வான்னுட்டு லொள்ளு பண்ணிக்கினே இருக்கனும். எப்பயாச்சும் நம்ம ஊருக்கு வெளிய போற ரிங் ரோட் பக்கமா பொடி நடையா போவாள் பாருங்க. அப்ப ஆத்தாளோட தண்டை ,சலங்கை இத்யாதியெல்லாம் குலுங்குமே அந்த டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்டை காதால கேட்ச் பண்ண முடிஞ்சா போதும்.

இந்தியா மிலிட்டரி பாக்கிஸ்தான் மிலிட்டரி ஒன்னா வந்து ஏர் பாம்பிங் பண்ணாலும் ஒரு ம..ரும் நடக்காது. சரி.. கெஞ்சி, கூத்தாடி ,ப்ளாக் மெயில் பண்ணி மனசுக்குள்ளாறயே வந்துட்டான்னு வைங்க. அப்பாறம் தான் இருக்கு ஆப்பு.

“கண்ணுக்குள் நூறு நிலவா” னுட்டு பாட்டுல பீலா விடலாம். ங்கொய்யால ஒரே நிலாவை தாங்குமா நம்ம கண்ணு?

புராணத்துல ஒரு கோடி சூரியபிரகாசத்துடன் தோன்றினாள்னு சொல்வாய்ங்க. பட்டா. இந்த வர்ணைனையெல்லாம் எம்ர்ஜென்ஸி காலத்து செய்தி மாதிரி.

வெறும் ஒளிதானா இருக்கும்? வெப்பமும் இருக்கும். இன்னாமாதிரி வெப்பம்னுட்டு நான் இன்னொரு டுபாகூர் வர்ணனையை தர தயாரா இல்லை. ஒளிக்கு எடை இருக்குன்னு தெரியுமா பாஸ்?

ஆத்தா எங்கன இருந்தோ வந்து கேம்ப் அடிக்கிறாங்கற மாதிரி சொல்லிக்கினு வந்தேன். இதெல்லாம் பழக்கதோஷத்துல வர்ரது. ஆத்தா எங்கன இருந்தோ வரலை. உனக்குள்ளே புதுசா ஜனிக்கிறா.

ஏதோ ஒரு படத்துல நின்னு போன லிஃப்டுக்குள்ள பாண்டிய ராஜன் சமைப்பாரு. அதுக்குண்டானதெல்லாம் அவரோட சூட் கேஸ்லயே இருந்தாப்ல ஆத்தா ஜனிச்சு வர தேவையான மூலப்பொருள் எல்லாம் உங்களுக்குள்ளயே இருந்ததுதேன்.

உங்க வில் – அவளோட அருள் ரெண்டும் சேரும்போது வழக்கமா தூங்கி வழியற அரசு இயந்திரம் ஒரு
நியாயமான தலைமை தேர்தல் அதிகாரி கீழே மட்டும் நெருப்பா வேலை செய்யற மாதிரி உங்களுக்குள்ளே இருந்ததெல்லாம் ஆக்டிவேட் ஆகி – ஆத்தா ஜனிச்சுர்ரா.

கோல்ட் ஸ்டோரேஜ்ல கூட மின் கசிவு -மின் விபத்து ஏற்பட்டுருது. அட ஒரு அம்பாசிடர் காரை எடுத்துக்கங்க. சல்லுனு போறோம். ரேடியேட்டர் ஹீட் ஆயிருச்சுன்னா வண்டி நின்னுருது.

அப்படி ஆத்தா வந்து கேம்ப் அடிச்சுட்டாள்னா அவள் ஒரு ட்ராகுலா.அவளுக்கு ஆகாரம் கொடுத்துக்கிட்டே இருக்கனும். காஷ்மோரா சினிமாவுல காஷ்மோராவுக்கு தினசரி ரத்தத்துளிகளை தராய்ங்களே அப்படி.

ஆத்தா மேட்டர்ல ரத்தம்லாம் தேவையில்லை. வெளி உலகம் உங்களை கூப்பிடும்போது ” ஆத்தா .. இதோ வந்துட்டன்”னுட்டு அந்த பஞ்சாயத்தை சுருக்க முடிச்சுட்டு ஆத்தாளோட சிரிச்சு,பேசி கலாய்ச்சுக்கிட்டே இருக்கனும்.

அவள் அஹங்காரி. அவள் சான்னித்யத்துல ( இந்த பிரபஞ்சம் முழுக்க அவளோட சான்னித்யம் தேன்) வேற எந்த பிக்காலியையாவது – வேற எந்த மேட்டரையாவது ஹைலைட் பண்ணிங்க நாஸ்தி தேன். அவளோட ஈகோ ஹர்ட் ஆச்சுன்னா பல்புதேன்.

ஆத்தா ஒரு கொயந்த மாரி.(ஸ்ரீபாலா) ” கண்ணு உனக்கு நாளைக்கு ஐஸ்க்ரீமு வாங்கிதரேன்”னுட்டா தலிவரு டிக்கெட் வாங்கினதோ – ஸ்டேட் எல்லாம் பந்தா இருக்கிறதோ – நாற்சந்திலயெல்லாம் டயர் எறியறதோ கொயந்தைக்கு முக்கியம் கிடையாது . ” ஐஸ்க்ரீம் வாங்கித்தரேன்னுட்டல்ல வாங்கித்தா ” இதான் அதனோட ஸ்டாண்ட்.

சரி இந்த மேட்டர்லாம் திடீர்னு இப்பம் எதுக்குன்னு கேப்பிக? சொல்றேன். நாம ஆத்தாளுக்கு கொடுக்கிற ஆகாரமே மஞ்ச தண்ணியும் , எலுமிச்சம்பழமும்தேன். இது சூப்பரா ஒர்க் அவுட் ஆகிட்டு தான் இருந்தது. எதுவரை?

அந்த மஞ்சத்தண்ணிக்கும், எலுமிச்சம்பழத்துக்கும் சிங்கியடிச்சிட்டிருந்தவரை சூப்பர் ஒர்க் அவுட். சமீப காலத்துல ஆத்தா லைன் அப்பை மாத்திக்கிட்டா போல.

“படவா ராஸ்கல்! நாய்க்கு பால், பிஸ்கட்டு மாதிரி மஞ்ச தண்ணியும், எலுமிச்சம்பழமும் வச்சுட்டா ஆச்சா .. ஒரு காலத்துல நீ ப்ரெட் ஹன்டர். ஏதோ ஒழிஞ்சு போவட்டும்னு விதிவிலக்கு கொடுத்து வச்சிருந்தேன். உன்னை ரொட்டீன் லைஃபுக்கு கொண்டு வந்துட்டேன். நீ இன்னமும் ஆதர்சம், ஆமை வடை, மானவ சேவா , மனிதமே புனிதம்னு வசனம் விட்டுக்கிட்டிருந்தா எப்படி? அதுலயும் மானவ சேவாக்கெல்லாம் சம்மர் ஹாலிடேஸ் மாதிரி விட்டு பல காலம் ஆச்சு. இப்பம் உன் பொழப்பை நீ பார்க்கறே அவ்ளதேன். ஒழுங்கு மரியாதையா – உன் ஸ்டைல்லயாச்சும் -மாசத்துக்கு ஒரு தாட்டியாச்சும் என்னை ஸ்தோத்திரம் பண்ணு”ன்னுட்டாப்ல இருக்கு.

இது நமக்கு உறைக்கல்ல. 2011 பிப்ரவரி 1 ஆம் தேதி கருகி சாக இருந்து தப்பிப்பிழைச்சப்போ நாமாவளிய படிச்சாப்ல இருக்கு.அதுக்கப்பாறம் ..பெரிய்ய இடைவெளி. ( இடையில ஒரு தாட்டி ரத்ததானம் பண்ணிட்டு வந்தன். அதனால ஒரு மாச கணக்கு வஜா ஆயிட்டாப்ல இருக்கு ) . நான் சொன்ன ஆன்மீக “பீரியட்ஸ்” மெனோஃபஸ் எஃபெக்ட் இன்னைக்கு வரைக்கும் கன்டின்யூ ஆயிட்டிருக்கவே இந்த விடியல்ல ” ஆத்தா ! நீயும் எங்க ஜெ ரேஞ்சுக்கு வந்துட்டாப்ல இருக்கு. உனக்கென்னா நாமாவளி படிக்கனும் அவ்ளதானேன்னுட்டு படிச்சுட்டன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னுட்டு அதனோட பதிவையும் கொடுத்திருக்கன்.ஆர்வமுள்ளவுக இங்கே அழுத்தி கேட்டுக்கலாம்.

சுகுமார்ஜீ .. இனி டல்லடிக்க வாய்ப்பே கிடையாது. ஓகேவா உடுங்க ஜூட்

19 thoughts on “ஆத்தா ஒரு ட்ராகுலா !

  டவுசர் பாண்டி said:
  June 7, 2011 at 2:29 am

  சூப்பர் நைனா. நல்ல அனுபவம்.

  டவுசர் பாண்டி said:
  June 7, 2011 at 3:08 am

  ஆ வூன்னா டவுசர் தம்பி இன்டியூசன்நு பிலிம் காட்டுதே அப்டின்னா இன்னா?. இண்டீசன்கிறது ஒரு ப்ரீகாக்னிசன் பவர் மாறி.

  அது ட்யூசன் வெச்சி வர்ரதில்லீன்க்னா. அவிக சாதகத்துல அந்த அமைப்பு இருக்கணும். அதாவது ஒரு பார்ட்டிக்காரனுக்கு மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்க லக்னமாவோ இல்லாங்காட்டி ராசியாவோ இருந்திச்சின்னா கொஞ்சகாண்டு இன்டியூசன் டீபால்ட்டா இருக்கும்.

  இந்தமாரி பார்ட்டிங்கல்ட்ட ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கும். அது மாறி மர்ம ராசியான விருச்சிக, கும்ப ராசி பார்ட்டிங்களுக்கும் அப்டிதேன். அதென்ன மர்ம ராசி? அதான் நீங்க ஏற்கனவே பிரசன்ன அருடத்துல படிச்சிருப்பீங்கதானே?

  இப்ப விருச்சிக ராசி இருக்குல்லா அது வெஷ ஜந்துக்கள் வசிக்கிற எடத்த குறிக்கும். வெளிய புத்து மாதிரித்தேன் இருக்கும். ஆனா உள்ள பாம்பு இருக்கா தேள் இருக்கா இல்லாங்காட்டி எறும்பு இருக்கான்னு கண்டுபிடிக்க முடியாதபடி மர்மமா இருக்கும். இதனால விருச்சிக ராசி பொதுவாவே ஒரு மர்ம ராசி.

  அதுமாரி பானை ராசியான கும்பமும் அப்டிதேன். பானைக்குள்ளார அதாவது மலைக்குகை சொரங்கம் இந்தமாரி பிளேச குறிக்கி. இந்த மாறி சீக்ரெட்ட புரிஞ்சிக்கிற கெப்பாசிட்டி இந்த ரெண்டுராசிய லக்காவோ ராசியாவோ கொண்டவுகளால முடியும்.

  ஓகே. நம்ம நாடி சோசியத்துல ராக்குக்கு சொந்த ஊடு கும்பம்னும் கேத்துக்கு விருச்சிகம்னும் சொல்றாங்கோ. சும்மாவா சொன்னாங்க. அதுலயும் ஒரு ட்ரிக்கு இருக்குங்க்னா. ரெண்டு கெரகமும் நெழலுன்னு நமக்கு தெரியும்தானே. சித்த மார்க்கத்த ராகு குறிக்கி. ரிஷி மார்க்கத்த கேது குறிக்கி. ராகு வருஷம் பதினெட்டு கேத்துக்கு ஏழு. அதாவது சித்தர்கள் பதினெட்டு, ரிஷிகள் ஏழு. அது மாறி ராகு கேதுவும் மர்ம கேரகங்கன்னு நமக்கு தெரியும்.

  நீங்க சித்தர்கள், ரிஷிகள் எழுதுன காப்பிகள பாத்தீங்கன்னா ஷார்ட் ஹென்ட்ல ஸ்ட்ரோக் போட்டு வெச்ச மாறி கீச்சாம் பூச்சாம்னு இருக்கும். அதுல உள்ள மேட்டர கப்புன்னு புரிஞ்சிக்க முடியாது. அதெல்லாம் ஒரு கோடிங்சல இருக்கும்.

  இந்த மாறி மர்ம முடிச்ச அவுக்கனும்னா ராகு கேது ஆதிக்கமுள்ளவர்களால ஈசியா முடியும். அவிகளுக்குதேன் சித்தர்கள் ரிஷிகள் டீலிங் கெடைக்கும். இந்த சூட்சுமங்கள புரிஞ்சிக்கிற பவரும் இவிகல்ட்ட இருக்கும்.

  அது போவ குண்டலிய தட்டி எழுப்பி படிப்படியா சகஸ்ராரத்துக்கு கொண்டு போனவுகளுக்கும் இன்டியூசன் ப்ரைட்டாருக்கும்.
  ஆனா குண்டலினிய அல்லாரும் தட்டி எழுப்ப முடியாது. அதுக்கும் ஒரு ஸ்ட்ரக்சர் வேணும் போல தெரிது. ராகு கேத்து கொஞ்சம் மோசமா இருந்திச்சின்னா ஒபெநின்க்லையே ஆவிகளால தாங்க முடியாது.

  அதாவது ரசினி தம்பி சொல்ற மாறி எனக்குள்ள தூங்கி கெடக்குற (சிங்கம்லாம் கேடயாதுங்கோ ஒன்லி ஷ்நேக்குதேன்) பாம்ப தட்டி எழுப்பிட்ட அப்டிம்பாறு. சரி மேட்டருக்கு வந்துடுறேன்.

  இப்ப சித்தர்கள் மேட்டருல இன்னா சொல்லறாங்கன்னா, எந்த பார்ட்டியோட சாதகத்துல கர்மக்காரகன் சனிக்கு ஒன்னு அஞ்சி ஒம்போது முக்கோணத்துல ராகு இருந்தாக்க ஆவிகளுக்கு சித்தர்கள் டீலிங் கெடைக்கும். அது மாறி சனிக்கு ஒன்னஞ்சி ஒம்போதுல கேது இருந்தாக்க ஆவிகளுக்கு ரிஷிகள் தொடர்பு கெடைக்கும்.

  அது மாறி இந்த ராகு கேது இன்டியூசன தூதுர ராசியான மிதுனம், சிம்மம், தனுசு, கும்மம்ல இருந்தாலோ அல்லது சீக்ரெட் ராசியான விருச்சிகம் குமத்துலயோ அல்லது மோட்ச ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்துலையோ இருந்தா நல்லாருக்கும்.

  அது மாறி இன்டியூசன் ஓவரா இருக்கணும்னா குறு,சந்திரன்,கேது இந்த மூணு கெரகமும் ஒன்னாவோ இல்லாங்காட்டி ஒன்னஞ்சி ஒம்போது லுக்குலையோ, இல்லாங்காட்டி அடுத்தடுத்து வருசையாவோ இருந்தா பார்ட்டிக்காரனுக்கு டப்பு டப்புன்னு ப்யூச்சர் டிஸ்ப்ளே ஆயக்கிநேருக்கும்.

   Ismail said:
   June 7, 2011 at 4:50 am

   //சாதகத்துல கர்மக்காரகன் சனிக்கு ஒன்னு அஞ்சி ஒம்போது முக்கோணத்துல ராகு இருந்தாக்க ஆவிகளுக்கு சித்தர்கள் டீலிங் கெடைக்கும். //

   ஒரு வித்தியாசமான கட்டுரை. ஐந்தாம் இடம், கேது பற்றித்தான் தியான மார்க்கம் பற்றி இதுவரை
   எல்லோரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். சனி ராகு கேது சம்பந்தம் பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன்.
   ஒரு சந்தேகம் : சனி நிற்கும் இடம் பாதகமான இடமாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்துமா. உதரணமாக எட்டில் சனி இருந்தாலும் இது பொருந்துமா.
   மேலும் நான் கேள்விப்பட்ட ஒன்று : ஞான குருவாக இருப்பவர்களின் ராசி அல்லது லக்னம் மிதுனம், கன்னி, தனுசு மீனமாக இருக்குமாம். இது சரியா?

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 2:10 am

    இஸ்மாயில் அண்ணே,
    சித்தர்கள் சொல்ற நாடி சோசியத்துல லக்னம் என்டராகாதுனே. ஆம்பளைங்களுக்கு குறு இருக்குற எடந்தேன் லக்னம். எடம் பொருள் பாத்து எப்டி இருக்கோ அதுக்கேத்த மாறி கூட்டியோ கொறச்சோ வெச்சிக் கொங்கனே (தருமி சார் மாறி)

   S Murugesan said:
   June 7, 2011 at 6:53 am

   டவுசரு !
   பதிவா போடவேண்டிய மேட்டரை கமெண்டா போட்டுர்ரிங்க. அதுவும் ஓகேதான். பாரா பிரிச்சு விட்டா கண்ணு வலிக்காம படிக்கலாம்ல. நம்ம மாதிரி வயசாளி கூட படிக்கிறம்ல

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 1:57 am

    சாரி நைனா. அவசரத்துல அப்டி இப்டின்னு ஆய்ட்டு. இனிமே பிரிச்சிருவோம்லா.

   sugumarje said:
   June 7, 2011 at 7:41 am

   அதானே… டவுசரு… ஒரு பதிவாத்தான் போடுறது… இன்னும் நிறைய நபர்களிடம் போய்ச்சேரும் அல்லவா?
   ஆக, டவுசருக்குள்ளேயும் விசயமிருக்கிறது நிஜமாகிடுச்சு 🙂

    தனி காட்டு ராஜா said:
    June 7, 2011 at 8:01 am

    டவுசுருக்குள்ள தான் விசயமே இருக்கு….நான் சுண்டெலி மன்னிக்கவும் குண்டலினிய சொன்னேன் 🙂 🙂

    S Murugesan said:
    June 7, 2011 at 8:07 am

    வாங்க சுகுமார்ஜீ,
    கமெண்ட் சைஸ்ல பதிவு போடற பார்ட்டியும் இருக்கு. பதிவு சைஸ்ல கமெண்ட் போடற பார்ட்டியும் இருக்கு.

    வாழ்க பதிவுலகம்!

    டவுசர் பாண்டி said:
    June 12, 2011 at 2:04 am

    ரொம்ப டேங்சுநே. நம்ம உள்ள சரக்கு புல்லா பொஸ்தத்துல படிச்சதுதேன். மத்தபடி நமக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். நானு பொறக்கும்போது ட் ரெச்சு கூட இல்லாம் வித்தவுட்லதேன் வந்தேன். வுட்ட கொற தொட்ட கொற நம்ம கட்டத்த ஆராச்சி பண்ணச்சில லோக்கல் டிஸ்க் சீல உள்ள விண்டோஸ் போல்டர் மாறி நம்ம கருமத்த ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கிற கர்மக்காரகன் சனிய நோன்டும்போது நெரிய விஷயம் கெடிச்சிசி. அத மாடு மாறி அப்பப்ப அசபோட்டுட்டே இருக்குறது அம்புட்டுதேன்.

   Ismail said:
   June 8, 2011 at 5:15 am

   அய்யா பாண்டி அப்பபோ அந்தர் தியானத்திற்கு போய்டறீங்க போல இருக்கு. அல்லது டவுசர் லூசயிடுசுன்னு இழுத்துவிட போயிட்டீங்களா. இப்படி கமெண்டில ஒரு அருமையான விசயத்தை ஆரம்பித்துவிட்டு கானமபோறதே உங்க வேலையாக போச்சு

  டவுசர் பாண்டி said:
  June 7, 2011 at 3:25 am

  நைனா, நாமாவளியில் அருமையான உச்சரிப்பு. சூப்பர் நைனா.

   S Murugesan said:
   June 7, 2011 at 4:00 am

   டவுசரு!
   பாராட்டுக்கு நன்றி.

   (ஆக்சுவலா ரெண்டுமூணு இடத்துல உச்சரிப்பை கோட்டைவிட்டாச்சு. ஒவ்வொரு நாமாவோடபேக் ஃப்ரண்ட் எல்லாம் ரோசிச்சிக்கினே சொல்றதால)

   நீங்களும் உங்க அனுபவங்களை எழுதினா நெல்லாருக்கும்னு ஒரு ஆசை எதிர்பார்க்கலாமா?

  vinoth said:
  June 7, 2011 at 4:54 am

  டவுசரு .. கடையில சரக்கு போடலையா ?

  சிவ யோகி said:
  June 7, 2011 at 6:05 am

  //அது மாறி இந்த ராகு கேது இன்டியூசன தூதுர ராசியான மிதுனம், சிம்மம், தனுசு, கும்மம்ல இருந்தாலோ அல்லது சீக்ரெட் ராசியான விருச்சிகம் குமத்துலயோ அல்லது மோட்ச ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்துலையோ இருந்தா நல்லாருக்கும்//

  ஏம்பா டவுசரு , 7 ராசிய சொல்லிபுட்ட….மிச்ச இருக்கர 5 ராசியையும் சொல்லி புட வேண்டியது தானே..

  மிச்ச இருக்கர ராசி கூட …. மறை முகமா வந்துருதே ….. கடகத்துல கேது னா மகரதுள்ள ராகு
  மினத்துல கேது னா – கன்னில ராகு….

  ஏம்பா டவுசரு இன்னுமா உன்னை இந்த ஊரு நம்புது 🙂

  superrsyed said:
  June 7, 2011 at 10:54 am

  நம்ம தல முருகேசன மோகினி, யட்ச்சினி எதோ புடிச்சு ஆட்டங்காட்டுது போல தல அத ஆத்தானு நெனைச்சுகினார் போல ஒரு சின்ன டவுட்டு பொகமாதிரி கெளம்புதுபா

   S Murugesan said:
   June 8, 2011 at 3:35 am

   சையத் பாய்!
   அந்த கவலை எனக்கு ஆரம்பகட்டத்துலயே இருந்து க்ளியர் பண்ணிக்கிட்டாச்சு. யு டோன்ட் ஒர்ரி.

   என் ஜாதகத்துல 9 ல சனி . டவுட்டிங் தாமஸ்னா தெரியும்ல .அந்த கேசு நாம.

   சனி விரல்ல சதுரக்குறி வேற இருக்கு. கவலையே வேண்டாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s