ஆவி படுத்திய பாடு

Posted on

அண்ணே வணக்கம்ணே , நாட்ல என்னென்னமோ நடக்கு முருகேசு பாட்டுக்கு ஆவி புடிச்சிக்குனு கிடக்காருனு நினைச்சுராதிங்க. ராஜபக்ஷே அல்லா தமிழனையும் போட்டு தள்ளிட்டா – எல்லா தமிழச்சியையும் கர்பப்படுத்திட்டா ஆனந்தமா வாழ்ந்துரலாம்னு தேன் அப்படியா கொத்த அக்குறும்பை பண்ணாரு. ஆனால் நிலைமை என்னாச்சு?

அழகிரி தா.கி மேட்டர்ல கலைஞரு அடக்கி வாசிச்சுட்டாரு. ஆனா இப்பம்?ரீ ரிக்கார்டிங் ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் செத்தாய்ங்க. குடும்பம் ஒற்றுமையானதும் அவிக கேஸை டீல்ல விட்டுட்டாரு மாறன். இன்னைக்கு வழக்கு, விசாரணைன்னு ஒரு பெரிய மாரத்தான் ரேஸ் காத்திருக்கு.

அட.. எங்க ஊர்ல சந்திரபாபு கதைய பாருங்களேன்.ஜகன் பண்ண லொள்ளு தாங்க முடியாம நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்தாரு.உதவி சபா நாயகர் பதவி ஏற்பு வைபவம் முடிஞ்சதும் ஓட்டல்ல காசில்லாம சாப்டவன் கணக்கா மெல்ல நழுவிட்டாரு. பாபு பாவம் கவர்னர் கிட்டக்க ஓடி புகார் தராரு. கவர்னரு த்ரெட் பார்ட்டி. பயங்கர நக்கல் புடிச்ச கிழவாடி. ஒரு தாட்டி அன் லைசென்ஸ்ட் மதுக்கடைகள் பத்தி புகார் கொடுக்கப்போனா உங்கள்ள லாலா போடறவுக எல்லாம் கை தூக்குங்கன்னு கேட்ட மன்சன். ஆனால் நிலைமை மறுபடி அங்கன போயி தேவுடுகாக்கவேண்டியதாயிருச்சு. ஜகன் என்னடான்னா “பட்டா நீ கிரண் கிட்டே பேசி வச்சுக்கிட்டு நாடகமாடறே”ன்னு கிழிக்கிறாப்ல.

என்.டி.ஆரை முதுகுல குத்தி அவரு அதே வேதனையில மாரடைப்புல சாக காரணமா இருந்தப்ப பாபு என்ன நினைச்சுருப்பாரு. தாளி ” நான் தான் மீதியெல்லாம் டூப்பு”ன்னு நினைச்சிருப்பாரு. நடந்ததா> ஊஹூம். நாயடி. அவரோட 9 வருச ஆட்சியை சனம் 90 வருசம் போனாலும் மறக்கற மாதிரி இல்லே.

இதெல்லாம் ஆவிகள் படுத்தும் பாடுதேன். மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.

வருஷம் 1993, மார்ச் ,திருப்பதியில இந்தி வாத்யார் வேலை. (ப்ரைவேட்டுதேன்) சஞ்சய் காந்தி காலனியில வீடு. கண்ணாலமான புதுசு (1991 , நவம்பர்) கையில குழந்தை. (2 வயசு) புது ஊர். புது வேலை. ப்ரைவேட் ஸ்கூலுன்னா மேட்டர் தெரியுமில்லியா? காலைல 7.30 க்கு ஆரம்பிச்சா சாயந்திரம் வரை ஸ்கூல். நமக்கு டிஃபன், மதிய சாப்பாடெல்லாம் ஹாஸ்டல்லயே நடந்துரும். ராத்திரிக்கு மட்டும் வீடு.

லொகேஷன்,ஜாப் மாறினா நம்ம மைண்டை சைலண்ட் மோடுக்கு அனுப்பிருவம். 100% ப்ராக்டிக்கல் தேன். சுத்தி உள்ளதுல எந்த நாயி சாதி நாயி எது நாட்டு நாயி எது சொறி நாயி எது எப்ப கடிக்கும், அதுல விசக்கடி எது மாதிரி டேட்டாவை எல்லாம் பக்காவா கலெக்ட் பண்ணிக்கிட்டிருப்பம்.

இந்த பரபரப்பு ஒரு பக்கம் – ஸ்கூல்ல புள்ளைகளோட மாரடிச்சு ( நமக்கு அடக்கி வாசிக்க – கணக்கு பண்ண தெரியாதே) ஊட்டுக்கு வந்ததுமே மென்சஸ் ஆன பொம்பள மாதிரி அப்படி ஒரு களைப்பு அப்படியே தூங்கி போயிர்ரது.

இது இப்படியிருக்க ஆன்டி வைரஸ் எல்லாம் பக்காவா ஒர்க் ஆக ஆரம்பிச்ச பிற்பாடு ஒரு வாரம் போல லீவு கிடைச்சது. கவனத்தை ஊட்டுப்பக்கம் திருப்பினேன் பொஞ்சாதி முகத்தை பார்க்கிறேன். பேஸ்தடிச்ச மாதிரி கிடக்கு. ஊட்டை பார்க்கிறேன் குப்பையும் கூளமுமா கிடக்கு. சோத்துப்பானைகள் எல்லாம் நிரம்பி வழியுது. ஒன்னுத்துல சுடு சோறு . ஒன்னுத்துல புளி சோறு ,ஒன்னுத்துல பழையது.

“இன்னாங்கடி இது “ன்னுட்டு சீற நேத்து சாப்பிடலைங்கறா. பேச்சுல சுரத்தே இல்லை.கண்ணெல்லாம் பஞ்சு. நம்ம ஸ்டைல்ல ரொட்டினா பல கேள்வி எல்லாம் கேட்டு வெரிஃபை பண்னிக்கிட்டேன். ஒரு இயவும் ஸ்ட்ரைக் ஆகலை.

நானும் சாம,பேத,தான,தண்டோபாயங்கள் , மணி மந்திர வைத்திய சேகர ஞானத்தையெல்லாம் அப்ளை பண்றேன். நாலு நாளும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மந்திரம்னு எதையோ சொல்ல ஆரம்பிச்சா ஒடனே ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ். பூஜைன்னு ஆரம்பிக்கலாம்னு பார்த்தா எதிர்த்த வீட்ல சாவு. சமைக்கவேண்டியது , அப்படியே கொண்டு போய் நாய்க்கு வைக்கவேண்டியது.

ரெண்டு நாள்ள நம்ம நிலையும் இதே. தம்மடிச்சா உறைக்கமாட்டேங்குது. ( இது தான் என் ஆரோக்கியத்துக்கான அளவு கோல்) சிந்தனையில ஒரு உதறல். ஏதோ ஒரு பதட்டம். பொஞ்சாதிக்கு நம்ம அத்தனை வில் பவர்லாம் கிடையாது. படக்குனு டிசைட் பண்ணேன். இவளை ஊருக்கு பைசல் பண்ணிட்டு ரெண்டு ஒன்னு பார்த்துர வேண்டியதுதான்னு அவளை ரெடி பண்ணேன்.

சொன்னா நம்ப மாட்டிங்க பஸ்ஸ்டாண்டுல அரைமணி நிக்கறோம் பஸ்ஸு வரலை .(சித்தூருக்குதேன்) தமிழ் நாடு அ.போ.க.பஸ்ஸுக இருக்கு.அதுல வேலூர்னா ஏறுங்கறான். மறுபடி மதியம் கூட்டிக்கிட்டு போனேன்.. அப்பவும் இதே இழவுதேன்.எப்படியோ சாயந்திரமா புடிவாதமா வெய்ட் பண்ணி ஏத்தி விட்டேன்.

பர்க்லி, சர்மினாரு, தாளி சின்ன சிசரு கூட உறைக்கமாட்டேங்குது. மொதல்ல இதுக்கு ஒரு வழி பண்ணனும்னு வேல் ராம்ஸ் தியேட்டர் பக்கமா போனேன். அங்கன ஒரு பெரியவரு பெரிய நெத்தியோட நெத்தி சைஸுக்கு நாமம் போட்டு சுருட்டு அடிச்சிக்கிட்டிருந்தாரு. சட்டுனு ஃப்ளாஷ் ஆகவே பக்கத்து கடையில லங்கர் சுருட்டு வாங்கினேன்.

சாதாரண நிலையிலன்னா பக்கத்துல உள்ளவன் மோர் சிகரட்டு புகைய விட்டாலும் நாம கழண்டுக்குவம் அ அவன் ஏமாந்த பார்ட்டியா இருந்தா ” ங்கோத்தா இன்னாடா மூஞ்சில புகை விடறே”ங்கற கேஸு நாம. அப்படியிருக்க சுருட்டெல்லாம் கொசனே கிடையாது.

சொன்னா நம்ப மாட்டிங்க. ஒரு முழு சுருட்டை ஒரே தீக்குச்சியில அடிச்சி முடிச்சேன்.( அப்படி ஒருஇழுப்பு)
அடிச்சு முடிச்சப்பாறம் தேன் மூக்குன்னு ஒன்னு இருக்கிறதே உறைச்சது.

“ஸ் அப்பாடா.. இப்பத்தேன் பழைய ரேஞ்சு வந்திருக்கு’னு நினைச்சுக்கிட்டே திரும்பறேன். ஒரு கடையில ஆஞ்சனேயர் சீனரி இருக்கு. தினகரன் சைஸுனு வச்சுக்கங்களேன். பேரம் பேசாம வாங்கிக்கிட்டேன்.

கொஞ்சம் போல பூசை சாமான் வாங்கிக்கிட்டு நேர வீடு . தரையில உள்ளதை எல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பையை எல்லாம் கழிச்சு – இழுத்து அலமாரியிலயும் – பரணையிலயும்,சமையல் மேடையிலயும் போட்டு சுத்தமா கழுவி விட்டேன். ஆஞ்சனேயர் படத்தை சலஃபைன் டேப் போட்டு ஒட்டி அஷ்ட திக் பந்தனம் , மாந்திரிக பத்தத்தில கோலம் அது இதுன்னு சாங்கியமெல்லாம் செய்து ப்ராண ப்ரதிஷ்டை – (?)செய்து தீப தூப நைவேத்தியம்லா காட்டி முடிச்சுட்டு அர்த பத்மாசனத்துல ராம நாமத்தை சொல்லிக்கிட்டே இருந்தேன்.

எப்ப கட்டை சாஞ்சுருச்சு, எப்ப தூங்கினேன்லாம் தெரியாது. மறு நாள் போஸ்ட் மேன் கதவை தட்டறாரு “சார் போஸ்ட்” இனலண்டு லெட்டர். அதுல மேட்டர் இப்படி துவங்குது.

அன்பு சகோதரனுக்கு,
உன் மனைவிக்கு அப்படி ஆனதுக்கப்பறம் நீ அந்த வீட்ல இருக்கிறது நல்லதில்லை. சீக்கிரமா காலி பண்ணிரு…………………

அப்பாறம் என்னாச்சுங்கறிங்க? போலீஸ் ஜீப்பை கண்ட மதுரை திமுக தலை மாதிரி பிச்சுக்கிட்டு ஒரே தம்முல வீடு தேடி மாருதி நகர்ல நம்ம ஸ்டூடெண்ட் வீட்டு மேலயே ஒரு போர்ஷன் கிடைக்க அட்வான்ஸ் பண்ணி ஜாமான் செட்டை ஷிஃப்ட் பண்ணி அதுல போட்டு தொலைச்சு பொஞ்சாதிய கூட்டி வந்தேன்.

வந்தவள் வந்து ஒரு வாரத்துல ” என்னா டிவிங்க இது கொஞ்சம் பெருசா இருந்தா நல்லாருக்கும்ல”ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டாள். மெள்ள மேட்டரை எடுத்து விட்டேன்.

இன்னைக்கு நாளைக்கு கூட கில்மா மேட்டர்ல எப்பனா முரண்டு பிடிச்சா அந்த திகீர் சம்பவத்தை ஞா படுத்திட்டா போதும் பசைதேன்.

Advertisements

9 thoughts on “ஆவி படுத்திய பாடு

  டவுசர் பாண்டி said:
  June 5, 2011 at 7:40 am

  நைனாவுக்கு வணக்கம், சனங்களுக்கும் வணக்கம். புதுசா ப்ளாக் அண்ட் ஒய்ட்டுல ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிருக்கேன். நீங்கதேன் வந்து ரிப்பன் கட் பண்ணனும். கட்டாயம் வந்துருங்கோ. ஒங்களோட வருகைக்காக நான் காத்திருப்பேன்.

  http://tavusarpandiyan.blogspot.com

  டவுசர் பாண்டி said:
  June 5, 2011 at 9:14 am

  //////…………தீப தூப நைவேத்தியம்லா காட்டி முடிச்சுட்டு அர்த பத்மாசனத்துல ராம நாமத்தை சொல்லிக்கிட்டே இருந்தேன்……./////

  ஐயா சக சோசிய ஜாம்பாவான்களே, நா அப்பவே சொன்னேன்லா, நைனா சாதகத்துல ராமர் டீலிங் உண்டுன்னு. நீங்கதேன் சந்திரன் ரெண்டாம் வூட்டுல கீது அடுத்து மூனா வூட்டுல சூரியன் கீது அதுனால சிவசக்தி யோவம் அது இதுன்னு டாப் கியருல போய்க்கினே இருக்கிறீங்க. நைனா சாதகத்துல யோவக்காரன் குருவும், லக்னாதிபதி சந்திரனும் ஒன்னாம் வூட்டுலதாம் இருக்காங்கப்பூ. சரி நம்பலன்னா போங்கப்பா. வேணாம்னா நைனா சொல்ற ப்ளாஷ் பேக்குல ஒரு ராமாயணமே வருமப்பா. வெயிட் அண்ட் ஸீ.

  ஆனா நா ராவணன் இல்லீங்கோ. அது மட்டும் எனுக்கு தெரியும்.

   S Murugesan said:
   June 5, 2011 at 5:43 pm

   டவுசரு,
   லக்னத்துல குரு சந்திரன் காம்பினேஷன் பாவச்சக்கரத்துல உண்டு. ராசியில இல்லையே

  டவுசர் பாண்டி said:
  June 5, 2011 at 3:40 pm

  இன்னாங்கடா இது. எழவு உழுந்த ஊடு மாறி வெறிச்சினுக்கீது. ஆவி மேட்டர படிச்ச ஒடனே அல்லாரும் (பொக மாறி புஸ்ஸுன்னு) ஆவியாயிட்டாங்களா? படம் கசாப்பு கடைல உள்ள உரிச்ச கோழிகனக்கா டக்கராருக்கு நைனா.

  டவுசர் பாண்டி said:
  June 6, 2011 at 2:07 am

  இதெல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்ச மேட்டருதேன். இருந்தாலும் சொல்றேன்.

  செல பார்ட்டிங்க சாதகத்துல ஏவல், பில்லி, சூனியம், செய்வெனை, துஷ்ட தேவதை அண்டு கெட்ட ஆவியையும் குரிக்கிற ராகு இருக்காருல்லா அவ்ரும், மனச குரிக்கிற சந்திரன், வெரித்தனம், கொடூறமான அக்டிவிடீஸ், மர்டர் இதுகள குரிக்கிற செவ்வா, இப்பிடி இந்த மூணு கெரகமும் (சந்+செவ்+ரா) ஒரே வூட்டுல இருந்தாலோ இல்லாங்காட்டி திரிகொனத்துல லுக்கு வுட்டுக்கின்னு இருந்தாலோ இந்தக்கூட்டணி பார்ட்டிக்காறன நிம்மதியா இருக்க வுடமாட்டாக. நல்லா அசந்து தூங்கச்ச திடீர்னு ராம நாராயணன் படத்த ஓடவிட்டு பிகிலாக்கிக்கினு இருப்பாங்கோ. குறு பாத்தாக்க படத்தோட ரீல் கொறையும். அதாவ்து ட்ரைலர் மட்டும் ஓடும்.

   டவுசர் பாண்டி said:
   June 6, 2011 at 2:18 am

   இதெல்லாம் இருந்து அவிகளுக்கு ஆவிக பத்தி ட்ரீம் வராட்டி சாதகத்துல ராகு டென்ட் அடிச்சிருக்கி வூட்டுக்கு மறுபடியும் ரிவர்ஸ் கியருல அதே எடத்துக்கு வரச்ச ஆவிக அவிகளுக்கு டிஸ்டப் பண்ணும். ஒரே வழி ருத்ர செபம்தேன்.

    S Murugesan said:
    June 6, 2011 at 2:41 am

    பாண்டி !
    வில் பர்ஃபெக்டா இருந்தா இதெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாது. லக்னம், அஞ்சாவது,ஏழாவது , 12 ஆம் பாவம் பல்பு வாங்கறது – சந்திரன் கெடுதல்
    ( சந்திர+ராகு/கேது) , சனி, ராகு ,கேது கெடறது மாதிரி மேட்டர் இருந்தா வில் பர்ஃபெக்டா இருக்காது.

    அப்பம் இதெல்லாம் டிஸ்டர்ப் பண்ணும்னு நினைக்கிறேன்.

    டவுசர் பாண்டி said:
    June 6, 2011 at 3:51 am

    சரியா சொன்னீங்க நைனா.

  vinoth said:
  June 7, 2011 at 4:13 am

  என்ன டவுசரு… அடுத்த சரக்கு எதும் போடலைய கடையில…
  வந்து பார்த்தேன் பின்னுட்டம் போட முடியல..
  நேத்து சரக்கு தான் இருக்கு.. ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s