கனி,மாறன் எதிர்காலம் : ஜோதிட ஆய்வு

Posted on

கனிமொழி தயாநிதி மாறன் : எண்கணித பார்வை

எண்கணிதம்ங்கறதே ஒரு மேஜிக் மாதிரி உட்டாலக்கடின்னெல்லாம் நானே எழுதியிருக்கேன்.அதுக்கு காரணம் என்னன்னா

நீங்க ஒன்னாம் தேதி பிறந்துட்டா போதாது. உங்க ஜாதகத்துல சூரியன் ஓரளவாச்சும் இம்பார்ட்டன்ஸ் பெற்றிருக்கனும். இல்லாட்டி எண்கணிதம் வாயை பிளந்துரும்.

ஆனால் உங்க ஜாதகத்துல சூரியன் உச்சம் ஆட்சின்னு அமைஞ்சு லக்னத்தை ,அஞ்சை இப்படி முக்கியமான ஸ்பாட்டை பார்க்க நீங்க 1, 19,28 தேதிகள்ள பிறக்கலைன்னாலும் சூரியனோட இம்பாக்ட் உங்க வாழ்க்கை மேல நிச்சயமா இருக்கும்.

இந்த ஒரு பாய்ண்டால தான் எண்கணிதம்னாலே சைடு வாங்க ஆரம்பிச்சம். (அனுபவம் வாத்யாரே..) இடையில ஒரு விசப்பரீட்சையில மாட்டினேன்.

பாசிட்டிவ் திங்கர்ஸ் க்ளப் காரவுக மன அழுத்தத்துக்கு ஜோதிட ரீதியான கவுன்சிலிங் கொடுக்கமுடியுமான்னு கேட்டாய்ங்க. சரின்னுட்டன். அவிக நம்ம நெம்பரை சனத்துக்கு லீக் பண்ணிட்டாய்ங்க போல.

ஃபோன்ல பர்த் டீட்டெயில்ஸ் கேட்டு நான் ஆற அமர ஜாதகம் போட்டு பலன் சொல்றதுக்குள்ள பில் எகிறி புதுசா ஒரு அழுத்தம் வந்துருமே.

அப்பத்தேன் நம்ம மைண்ட்ல இருந்த நியூமராலஜி தொடர்பான நியூரானை எல்லாம் தூசு தட்டினேன். ஜஸ்ட் டேட் ஆஃப் பர்த் வாங்கிக்கவேண்டியது. உடனடி லாட்டரி மாதிரி பர்த் நெம்பர் காம்பவுண்ட் நெம்பர் காம்பினேஷனை வச்சு ரெண்டு பாய்ண்ட் விடவேண்டியது. சூட் ஆனா உடனே உங்க பிரச்சினை என்ன? அதுக்கு இதான் சொல்யூஷனுன்னு சொல்லி ச்சூ காட்டிர வேண்டியது.

இது ஒரு புது அனுபவமா இருந்தது. பீத்திக்கிறேன்னு நினைச்சுராதிங்க. 90 சதவீதம் வரை டேலி ஆச்சு. அந்த தகிரியத்துலதேன் எலக்சன் நேரம் ஸ்டாலின்,அழகிரி எண்கணித ஆய்வெல்லாம் போட்டோம்.

இப்பம் கனிமொழி அண்ட் தயா நிதி மாறன்

கனிமொழி:

இவிக பிறந்த தேதி 5/1/1968 பிறப்பு எண் 5 (புதன்) கூட்டு எண் (30) குரு. ஆக குரு புதன் காம்பினேஷனை கொண்டிருக்கு.

தயா நிதி மாறன். இவரோட பிறந்த தேதி 5/12/1966 பிறப்பு எண் 5 (புதன்) கூட்டு எண் (30) குரு. ஆக இதுவும் குரு புதன் காம்பினேஷனை கொண்டிருக்கு.

குருவும் புதனும் சுபகிரகம் தானே. இதுல என்ன தவறு? இதுல என்ன தோஷம்னு கேப்பிக சொல்றேன். குருன்னா ஃபைனான்ஸ் புதன்னா வியாபாரம்
குருன்னா செல்வாக்கு புதன்னா கம்யூனிகேஷன் இன் தி /வித் தி சொசைட்டி
குருன்னா அரசியல் புதன்னா மீடியா
குருன்னா அரசியல் புதன்னா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (பேச்சு,எழுத்து)
குருன்னா சேவை புதன்னா மருத்துவம்
குருன்னா ஆன்மீகம் புதன்னா ஜோதிடம்
குருன்னா சேவை புதன்னா ஜோதிடம்
குருன்னா ஞாபக சக்தி புதன்னா கல்வி

இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. அப்பாறம் எங்கே ராங்கா பூட்சின்னு கேப்பிக சொல்றேன்.

ஒவ்வொரு கிரகமும் மனிதனில் ஏற்படுத்தக்கூடிய குண நலனை வச்சு ஒவ்வ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணத்தை கொடுத்தாய்ங்க ( கலரில்லிங்கோ – சாதி)

இதன் படி குரு பிராமணன் புதன் வைசியன். ஒரு மனிதனுக்குள்ள குரு தரும் பிராமண குணங்கள் இருந்தாலும் ஓகே ( ஐ மீன் த்லைமை செயலகத்துலயும் – மீடியாவுலயும் ஆட்டம் போடற குடிகேடிகளின் குண நலன் இல்லிங்கண்ணா. கீதை சொல்ற சத்வ குணங்கள்)

அட புதன் தரக்கூடிய வைசிய குணங்கள் இருந்தாலும் ஓகேதான். ஏன்னா வியாபாரங்கறது ஐ.பி.சிபடி குற்றம் கிடையாது. (வ்யாபாரம் த்ரொஹ சிந்தஹாங்கறது வேற விஷயம்)

பிராமணன் தனியா இருந்தாலும் பிரச்சினையில்லை. வைசியன் தனியே இருந்தாலும் பிரச்சினையில்லை. இவிக ரெண்டு பேரும் சேர்ந்தா தாளி பா.ஜ.க காங்கிரஸ் கூட்டு மாதிரி நாடே சுடுகாடாயிரும்.

கனிமொழி , மாறன் ரெண்டு பேர் ஜாதகத்துலயும் இந்த குரு புதன் காம்பினேஷன் வந்தது ஆச்சரியமா இருக்கலாம். ஆனால் ஓரினத்து பறவைகள் ஒரே கூட்டில் மாதிரி இதெல்லாம்.

இப்பம் குரு காரகத்வத்துக்கும் – புத காரகத்வத்துக்கும் உள்ள முரண்பாடுகளை பார்ப்போம்

குருன்னா சேரிட்டி , எம்.ஜி.ஆர் வேலைகள் புதன்னா யாவாரம்

சேரிட்டியும், யாவாரமும் சேர்ந்தா என்னாகும்? சேரிட்டி நிக்குமா? என்.ஜி.ஓனு கேள்விப்பட்டிருப்பிக. நான் கவர்ன்மென்டல் ஆர்கனைசேஷன். இவிகள்ள 99.99 சதம்.. டுபுக்கு பார்ட்டிங்க. இவிகளுக்கு ஃப்ண்ட் வாங்கித்தர பெரீ நெட் ஒர்க் இருக்கு. கத்தையா கரன்சி எடுத்துக்கிட்டு ஹ்யூமன் ரிசோர்சஸ் டிப்பார்ட்மென்டுக்கு போயிட்டா போதும் எப்படியெல்லாம் ஆட்டைய போடலாம்னு அவிகளே ஸ்கெட்ச் கொடுத்து மூட்டை கொடுத்து அனுப்பிருவாய்ங்க

குருன்னா அரசு கஜானா புதன்னா யாவாரம்

அரசாங்கம் பெட்ரோல் விலைய ஏத்திக்கிட்டே போகுது கேட்டா நஷ்டம் வ்ருதுங்கறாய்ங்க. தாளி இங்கன பெட் ரோல் பத்து காசு ஏறினா விலை வாசி ஒரு ரூவா ஏறிரும். லாபம்தேன் வேணம்னா நம்ம லைன் அப்பை பிடிக்கவேண்டியதுதானே (பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் – சுற்றுலா துறை சொம்மா பிச்சுக்கும்)

ஆக அரசு,அரசு கஜானா யாவாரத்தை மனசுல வச்சு செயல்படக்கூடாது. பட்டா நமக்கு பட்டா பட்டி கழண்டுரும்.

நீங்க ஒன்னும் குழந்தைங்க இல்லை. ஒவ்வொரு பாய்ண்டையும் நானே படம் வரிஞ்சு பாகங்கள் குறிக்கனுங்கற அவசியம் இல்லை . இதர முரண்பாடுகளை நீங்களே அனலைஸ் பண்ணுங்க (கமெண்டா கூட போடலாம்)

குருன்னா தொலை நோக்கு – புதன்னா யாவாரம்
குருன்னா மந்திரி புதன்னா யாவாரம்
குருன்னா தர்ம காரியம் புதன்னா கணக்கு
குருன்னா நீதிமன்றம் புதன்னா யாவாரம்
குருன்னா வாரிசுகள் புதன்னா விபச்சாரம்

ஜஸ்ட் குரு புத காம்பினேஷனே இந்த ரேஞ்சுக்கு கொண்டு போயிருச்சான்னு கேப்பிக. கூட்டு எண்ணை பாருங்க 30 . தாளி கடைசியில மிஞ்சறது என்ன ஜீரோ -முட்டை – எக் – அன்டா – குட்டு .

எவனொருத்தன் சீக்கிரமே அழிஞ்சு போகனும்னு இருக்கோ அவனுக்குத்தேன் உடம்பெல்லாம் எண்ணெய் பூசி ரோட்டெல்லாம் உருள்ற ஆத்திரம் வரும். இத்தீனி நாள் நல்லாதானே போயிட்டிருந்ததுனு கேப்பிக சொல்றேன்.

இவிக வாழ்க்கைய அஞ்சு அஞ்சு வருஷமா பிரிச்சுக்கங்க. ஒவ்வொரு அஞ்சு வருசமும் ஒரு ரவுண்டு. இந்த கணக்குல இவிக எத்தீனியாவது ரவுண்டுல இருக்காய்ங்கனு பாருங்க.

புதன் கோசாரத்துல எந்தெந்த வீட்ல இருந்தா நல்லதுன்னு டேட்டா இருக்கா? ( என்ன இல்லியா தரேன்) ஒவ்வொரு ரவுண்டையும் ஒவ்வொரு வீடா நினைங்க. இப்பம் எத்தீனியாவது ரவுண்டுனு பார்த்து அத்தீனியாவது வூட்ல புதன் இருந்தா நன்மையா தீமையா பாருங்க

நன்மை: 2 , 4 , 6 , 8 , 10 , 11 தீமை: 1, 3 , 5 , 7 , 9, 12

கனிமொழி கதைய பார்த்தா அவிகளுக்கு 43 ஆவது வயசு. இதை அஞ்சால வகுத்தா எட்டாவது ரவுண்டு முடிஞ்சு 9 ஆவது ரவுண்டு ஆரம்பம் . அதாவது புதன் 9 ஆவது இடத்துல இருந்தா என்ன பலனோ அதை சொல்லனும். இது இன்னம் ரெண்டு வருசத்துக்கு தொடரும்.

குறிப்பு: 9ன்னா அப்பா, அப்பா வழி உறவு,அப்பா சொத்து, சேமிப்பு, முதலீடு ,தூர பிரயாணங்களை காட்டும் பாவம். இதெல்லாம் கோவிந்தா கோவிந்தா..

இப்ப தயா நிதி மாறனை பொருத்தவரை இவரு தன்னோட அடுத்த பிறந்த நாளைக்கு தன்னோட 9 ஆவது ரவுண்டை முடிக்கப்போறாரு ( ஐ மீன் டிசம்பர் 5 ) அதுவரைக்கும் ஆப்புதேன்.

இவருக்கும் அப்பா, அப்பா வழி உறவு,அப்பா சொத்து, சேமிப்பு, முதலீடு ,தூர பிரயாணங்களை காட்டும் பாவம். இதெல்லாம் கோவிந்தா கோவிந்தாங்கற பலனை தான் சொல்லனும்.. அப்போ மாறன் டிசம்பர் 5 க்கு அப்பாரம் சேஃபானு கேட்டுராதிங்க.

இவருக்கு வேற ஒரு ஃபிட்டிங் இருக்கு. அதாவது இவரோட பேர்ல ” D ” ங்கற ஆங்கில எழுத்து வருது. இப்படி வந்தா ரன்னிங் ட்ராக்ல ரிப்பனை தொடற சமயம் பார்த்து கால் சுளுக்கிக்குமாம். மாத ஜோதிடத்துல அந்த காலத்துல ஆரோ ஒரு புண்ணியவான் கென்னடி,காந்தி, இந்திரா காந்தினு விட்டிருந்தாரு.

எங்க வீட்லயே பார்த்தேன் அப்பா சுந்தரேசன், அம்மா சுசீலா தேவி, லேட்டஸ்டா புத்ததேவ் பட்டாச்சார்யா
கடவுள் சதிவலை பின்ன ஆரம்பிச்சிட்டான். தாளி மீன்வலையிலருந்து வெளிய வரமுடியாத ரேஞ்சுல மாட்டியாச்சு. இதுல சதி வலையெல்லாம் ..பேச்சே இல்லே கண்ணா..

Advertisements

9 thoughts on “கனி,மாறன் எதிர்காலம் : ஜோதிட ஆய்வு

  sugumarje said:
  June 4, 2011 at 5:18 am

  அய்யா!, நல்ல அலசல்… ஆனால் நியூமராலஜி பாஸ்ட் புட் மாதிரியாச்சே… செரிக்க லேட்டாகும். பசியும் அடங்காது…

  ஏற்கனவே பிரபலமானவங்க இல்லாது, முன் பின்தெரியாத புது நபர்னா… கொஞ்சம் ஒப்பிட்டு பார்க்கலாம்… (அப்பத்தானே ஜனம் நம்பும் )

  ஆனால் இங்கேயும் நம்ம புராதன ஜோதிட அறிவு தான் வேலை செய்யும் என்பது என் கருத்து.

   S Murugesan said:
   June 4, 2011 at 6:28 am

   வாங்க சுகுமார்ஜீ,
   ஜோதிடம் 12 சேனல் கொண்ட டிவியில சினிமா பார்க்கிற மாதிரி இல்லேங்கலை. ஆனால் நியூமராலஜி யு ட்யூப்ல வீடியோ பார்த்த ரேஞ்சுக்காவது ஒர்க் அவுட் ஆகுதுன்னு தான் சொல்லவந்தேன்.

  Sudharsan said:
  June 4, 2011 at 8:25 am

  hai murugesan sir,
  I’am eagerly expecting an article about the effect of saturn in second house.

  டவுசர் பாண்டி said:
  June 5, 2011 at 8:58 am

  டக்கரான பதிவு.

  நா மிந்தி ஒரு பொஸ்தத்துல படிச்சது மைண்ட்ல வர்து. அதாவது பேருல டை di, die, dhi என்ற உச்சரிப்பு வரக்கூடாதாம். அப்டி வந்தாக்க அவிக அந்த தசா பீரிடுல மண்டைய போட்ட்ருவாகலாம். அது மாறி பேருல கன் gun நுனு உச்சரிப்பு வரக்கூடாதாம் அப்டிருந்தா அவிக சுட்டுக்கொல்லப்படுவாகலாம். இது நெசமான்னு தெரில.

  அது போவ பேருக்கும் ஒரு கட்டம் கட்டி ரவுண்டு கட்ராறு. அவரு பேரு மைண்ட்ல வரமாட்டுக்கு. அவர சொல்லிக்குத்தமில்ல.

  நம்ம சோசியத்துல உள்ள சூத்தெரத்த மண்டைல ஏத்தவே எடம் காண மாட்டுக்கு. இதுல புதுசு புதுசா கண்டிபிடிக்க்காயங்க. அம்புட்டையும் மண்டைல எத்துனாக்க மண்ட சூடாயி கார்ட் டிஸ்க் கரப்டாயிரும். ஏற்கனவே பார்மட் பண்ற கண்டிசன்லதேன் நம்ம மண்டகீது.

   டவுசர் பாண்டி said:
   June 5, 2011 at 9:02 am

   இதுல ஒரு கொடும இன்னான்னா INDIA வுல டை உச்சரிப்பு வந்துட்டாம். அதுனால இந்தியாவுல முன்னேற்றமே இல்லியாம். அதுனால இந்தியாவ BHARATH துன்னு மாத்தனுமாம் (ஆப்பரேஷன் பார்ட்டிகள் கவனிக்கவும்). அப்டி மாத்துனாக்க தூள் பரத்துமாம்.

    S Murugesan said:
    June 5, 2011 at 5:47 pm

    பாண்டி,
    ” D ” மேட்டர்ல சில மேட்டர் விட்டுப்போச்சு. பேர்ல ” D ” வந்தா டெவலப்மெண்ட் இருக்காதுன்னுல்ல. இருக்கும். அது ஆவரேஜா போற வரை பிரச்சினை இல்லை.

    இனி திரும்பி பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. எதிரியே இல்லேங்கற நிலைமையில பஞ்சர் ஆயிரும். (உ.ம் : ஆ.ராசா திகாருக்கு போன பிற்பாடு தயாநிதி சாருக்கு ஆப்பு )

    ஆப்பரேஷன் அமலாயிட்டிருக்கிறச்சயே ” D ” யை தூக்கிருவமில்லை

  Sudharsan said:
  June 5, 2011 at 6:48 pm

  Hai Murugesan sir,
  My birhdate is 30/11/1977.This has combination of guru and moon.Is it good?

   S Murugesan said:
   June 6, 2011 at 1:49 am

   Sudharsan,
   Please mail your horoscope and ask up to 5 Q (Free) But don’t repeat personal questions at public platform. Don’t think otherwise.

  viji said:
  June 6, 2011 at 8:28 am

  bill gates. intha payrula ill irukku gate irukku. vellangatha cikkalliya avaru.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s