'ஜெ' க்கு டி.என்.சேஷன் சொன்ன ஜோசியம்
இந்த சம்பவம் நடந்தப்ப அம்மா என்னவா இருந்தாய்ங்க? சேஷன் என்னவா இருந்தாரு/ எங்கன நடந்ததுன்னெல்லாம் டிட்டெய்ல்ஸ் கேட்காதிங்க. இந்த ஜோசியம் சொன்ன மேட்டரே அந்த காலத்துல வெளி வந்த ஸ்கூப்பு. ( ஜர்னலிசத்துல டூப்புக்கு கவுரமான பேர் ஸ்கூப்பு)
அந்த ஸ்கூப்போட சாராம்சம் என்னன்னா.. டி.என்.சேஷன் ஜெயலலிதாவோட ஜாதகத்தை பார்த்து உங்களுக்கு இந்த நாட்டுக்கே பிரதமராகக்கூடிய யோகம் இருக்கு. என்னை உங்க அட்வைசரா வச்சுண்டா பிரதமராக்கி காட்டறேன்னு சொன்னதுதான்.அதுக்கு அம்மா நக்கலா சிரிச்சு மழுப்பிவிட்டுட்டதா ஸ்கூப் முடியுது.
அது சரி இந்த மேட்டரை எல்லாம் இப்ப எதுக்கு தூசு தட்டறேன்னு நினைக்கிறிங்களா? இந்த பார்ப்பன மீடியாக்களோட கொசுத்தொல்லை தாங்க முடியலை. அம்மா ஆட்சிய மீண்டும் கொண்டு வந்தவுக ரெண்டு பேராம். ஒன்னு திருவாளர் சோ. இன்னொருத்தரு சசிகலா.
ஒவ்வொரு வெற்றியாளனான ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொன்மொழி. அம்மாவை பொம்பள லிஸ்ட்ல வைக்கமுடியாது. அதனால இந்த பொன்மொழிப்படி சசிகலா வேணம்னா ஒரு காரணகர்த்தாவா இருந்திருக்கலாம்.
இந்த பட்டியல்ல சோவை கொண்டு வந்து லொள்ளு பண்றாய்ங்ணா.. ங்கொய்யால சாணக்யம், சைனா டீன்னு பீலா விடறே இல்லை. லதா அய்யரோட ஆத்துக்காரரை (அதாங்க ரஜினி காந்து) ஒரு வாய்ஸ் விடச்செய்யமுடிஞ்சதா? இல்லை.
சரி ஒழிஞ்சு போவட்டும் அட்லீஸ்ட் உங்க குல கட்சியான பா.ஜ.க தனித்து போட்டியடறதை -அதுலயும் அனைத்து தொகுதியிலயும் – தடுத்து நிறுத்த முடிஞ்சதா? இல்லை.
சோசியம் பார்த்து வை.கோ கும்பராசி -அவரை கழட்டிவிடுங்கன்னு ப்ரஷர் பண்ண அந்த கிச்சன் கேபினட் லக்னாதிபதியை எட்டுல கொண்ட விசயகாந்தை மட்டும் ஏன் கழட்டிவிடலை? அப்போ கிரகங்களை விட விஜயகாந்த் வச்சிருக்கிற வாக்கு சத்வீதம் பவர்ஃபுல்லுன்னு அர்த்தமா?
விஜயகாந்த் ஜாதக பிரபாவத்தாலதான் மரியம் பிச்சை அகால+துர்மரணமடைஞ்சாருன்னு நான் சொல்றேன். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ?
இன்னைக்கு வை.கோ மட்டும் ஜெ அணியில இருந்திருந்தா கலகலத்து போயிருக்கிற திமுக அப்படியே வந்து மதிமுகவுல மெர்ஜ் ஆகியிருக்கும். ங்கொய்யால கெடுத்தானுவ.
நான் அம்மாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னுதேன். நீங்க பிறப்பால அய்யரா இருக்கலாம். ஆனால் குணத்தால க்ஷத்திரியர். க்ஷத்திரியனுக்கு மரியாதை வெற்றி அ வீரமரணம் தான். நீங்க என்னவா இருக்கிங்கன்றது முக்கியமில்லை. சனம் உங்களை என்னவா பார்க்குதுங்கறதுதான் முக்கியம்.
நான் கூட மெட்ராஸ் பாஷைல்லாம் எழுதறேன், பெரியார் கொள்கையில 99% ஃபாலோ பண்றேன். அவாளை ஐ மீன் உங்களவாளை திட்டின திட்டு திட்டாம திட்டறேன். ஆனால் உலகம் மட்டும் என்னை பிராமணனாத்தான் பார்க்குது.
நீங்க பண்ற யாகம் இத்யாதி எதுவும் உங்க க்ஷத்திரிய இமேஜை அசைக்க முடியலை. சாமானிய அதிமுக தொண்டனோ , எம்.ஜி.ஆர் ரசிகனோ உங்களோட ப்ரோ ப்ராமின் பாலிசிஸ், யாகம் இத்யாதிகளையெல்லாம் சிரமப்பட்டுத்தான் விழுங்கி வைக்கிறான்.
உங்க தனிப்பட்ட வாழ்க்கையில நீங்க எப்படி வேணா இருந்துட்டு போங்க. ஆனால் பொதுவாழ்க்கையில மட்டும் இந்த பிராண்டு உங்க மேல ஒட்டிக்காம பார்த்துக்கங்க.
மகாமகக்குளியல், கோவிலுக்கு ஆனை கொடுக்கிறது பூனை கொடுக்கிறதெல்லாம் உங்களை மக்கள் கிட்டேருந்து அன்னியப்படுத்துச்சே தவிர நெருக்கமாக்கலை.
இவிக எல்லாம் வெற்றியில மட்டும் வந்து பங்கெடுத்துக்கற பார்ட்டிங்க. தோல்வியிலயும்,அவமானத்துலயும் பங்கெடுத்துக்கக்கூடிய சாமானிய தொண்டர்கள் லட்சக்கணக்குல இருக்காய்ங்க.
சமச்சீர் கல்வி மேட்டர்லயே பாருங்க. உங்களுக்கு கலைஞர் மேல உள்ள கடுப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க கொள்கை முடிவுக்கு பிரதான காரணம் அதான். ஆனால் அதை நீங்க கிடப்புல போட்டது ஆருக்கு லாபமாச்சுன்னு ரோசிச்சிங்களா?
அன்னைக்கு பிராமணாள் அல்லாதவாளுக்கு அனுமதியில்லேன்னு உடுப்பி ஹோட்டல்ல போர்டு போட்ட கணக்கா சென்ட்ரல் சிலபஸ்னு பம்மாத்து பண்ணிக்கிட்டிருந்தானுவ. அதை தாத்தா பொதுவாக்கினாரு. இப்பம் நீங்க யு டர்ன் எடுத்திங்க.
இன்னைக்கு தனியார் பள்ளி உரிமையாளர்கள்ள அவாள் எத்தனை சதம். இதரர் எத்தனை சதம்? அட கல்வி கட்டண மேட்டரும் அப்படித்தானே போகுது. ஆராச்சும் விவரமா ஆராய்ஞ்சு வித் பர்ஃபெக்ட் டேட்டா அட்டாக் பண்ணா அது மக்கள் மத்தியில எப்படியா கொத்த மெசேஜை கொண்டு போகும்.
இது இப்படியே தொடர்ந்தா உங்க நிலைமை கொஞ்சம் கொஞ்சமா வெறும் பிராமணாள் மட்டும் படிக்கிற கல்கி மாதிரி ஆயிரும். அலெக்ஸா ரேங்க்ஸ் : நம்ம அனுபவஜோதிடத்தை விட கல்கி 85,097 ரேங்க்ஸ் பின் தங்கி இருக்குதுங்கம்மா.. வெறும் பிராமணாள் மட்டும் ஓட்டுப்போட்டிருந்தா நீங்க சி.எம் ஆகியிருக்கமுடியுமா?
அட நீங்க ஆட்சிக்கு வந்த காலத்துல எல்லாம் வேதம்,ஜோசியம்,வாஸ்துன்னு கும்மியடிச்சானுவ. கோர்ட்டு,கேசு, தண்டனை,பதவி இழப்பு, தேர்தல் தோல்வி “எதையாவது” தடுத்து நிறுத்த முடிஞ்சதா? இல்லை. எது எப்போ எப்படி நடக்கனும்னு பைப் லைன்ல இருக்கோ அதெல்லாம் நடந்தே தீரும்.
இந்த பாரசைட்டு, ஒட்டுண்ணிகளையெல்லாம் விரட்டுங்க.தாத்தா உள்ளூற வவுறு கலங்கிக்கினு இருந்தாலும் மேலுக்குனா டகுலு விட்டுக்கினு இருந்தாரு. அந்தாளுக்கு மஞ்ச சால்வைய போட்டு ஏறக்குறைய பார்ப்பானா ஆக்கிட்டானுவ.
இப்ப மூஞ்சி மூக்கு நெஞ்சம் எல்லாம் பேர்ந்து போயி ” எவ்ள அடிச்சாலும் தாங்கறான் இவன் ரெம்ப நல்லவ………….ன்னு சொன்னாய்ங்கம்மா”ன்னு தயாளு அம்மாள் கிட்டேயும் ராசாத்தியம்மாள் கிட்டயும் புலம்பிக்கிட்டிருக்காரு.
இவர் ஜாதகத்துல குரு அஞ்சுல தனிச்சிருக்காரு. அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்ங்கற மாதிரி வாழ் நாள்ள எதிர்கொள்ளாத மெகாசைஸ் நிந்தனையை இப்பம் ஃபேஸ் பண்ணிக்கிட்டிருக்காரு.
குருவுக்குரிய நிறம் மஞ்சள். அவர் தான் புத்திர பவுத்திர காரகன். அந்த மஞ்ச சால்வைய போட்டு போட்டு புத்திர பவுத்திரர்கள் எல்லாம் டப்பா டான்ஸ் ஆடிப்போயி கிடக்காய்ங்க. புத்திரி திஹார் ஜெயில்ல சப்பாத்தி தால் சாப்டுக்கினு இருக்காய்ங்க.கண் கெட்ட பிறவு சூரிய நமஸ்காரம் மாதிரி இப்ப வெள்ளைக்கு மாறியிருக்காரு. தாத்தா த.செ ல வச்சு வளர்த்த வாஸ்து மீன் காப்பாத்துச்சா நஹி.
அட உங்களை கூட கொஞ்சமாவா குழப்பி விட்டானுவ. அஞ்சுல கேது உள்ள உங்களை தத்தெடுக்க வச்சு – அந்த தத்து பிள்ளைக்கு கண்ணாலம் கட்ட வச்சு சமாதியே கட்டிட்டானுவ.
பார்த்து நடந்துக்க ஆத்தா.. இன்னைக்கு கலைஞரை நக்கலடிக்கிற இதே நாற வாயனுங்க உங்களை நக்கலடிக்க ரெம்ப நேரம் ஆகாது.
June 3, 2011 at 1:38 am
//அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.
சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.
2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.//
அப்படீன்னு சொன்னவர் இப்போ என்ன சொல்லறாரு?
அன்புடன்,
டோண்டு ராகாவன்
June 3, 2011 at 3:24 am
டோண்டு சார்,
வாங்க. ” நிச்சயமற்ற தனமைங்கறது ஜோசியம்” “கூட்டணிங்கறது கெஸ்” – இது மாமாங்கத்துக்கு முன்னே சொன்ன விளக்கம். இதுவே போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா.
வந்தது வந்திங்க. லேட்டஸ்ட் பதிவை பத்தியும் திருவாய் மலரலாமே. அடடே புதுசு கிளப்பின சூடுதான் பழசை பீராய வச்சுருச்சோ.
திருத்தமுடியாதுங்களே..
June 3, 2011 at 2:21 am
இன்னா நைனா மாத்தாஜிக்கு பாடி கண்டிசன் வீக்காருக்குற நேரத்துல எதுக்குநைனா அவிகலுக்கு ப்ரெஸ்ஸர ஏத்துற. இந்த வருசத்துல நெறைய தலைகள் உருளும்னு சொல்றாய்ங்களே நெசந்தானா?
June 3, 2011 at 5:25 am
//விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய நேரம்….அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது…இந்தாளு இரண்டு தேர்தல் முடிஞ்சு,மூணாவது பொது தேர்தலில் (சட்டமன்றம்)ஜெயிச்சு முதலமைச்சரா வருவார்…..என்றார்.அது இப்போது நினைவுக்கு வருகிறது….
இவர் சொன்னது பலிக்குமா…அப்படியென்றால் அடுத்த முதல்வர் விஜயகாந்தா..? பார்க்கலாம்.
http://www.astrosuper.com/2011/05/blog-post_26.html#more //
இது பற்றி உங்க ஒபினியன்
June 3, 2011 at 5:39 am
////////லக்னாதிபதியை எட்டுல கொண்ட விசயகாந்தை மட்டும் ஏன் கழட்டிவிடலை? அப்போ கிரகங்களை விட விஜயகாந்த் வச்சிருக்கிற வாக்கு சத்வீதம் பவர்ஃபுல்லுன்னு அர்த்தமா?
விஜயகாந்த் ஜாதக பிரபாவத்தாலதான் மரியம் பிச்சை அகால+துர்மரணமடைஞ்சாருன்னு நான் சொல்றேன். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ? /////
தலை நீங்க விஜயகாந்த்தோட உண்மையான ஜாதக விபரங்களை வச்சிருக்கீங்களான்னு தெரியலை முன்பு அவரு மிதுன லக்னம்ன்னு அவரு ஜாதகத்தை வச்சி நீங்க சொன்னதா ஞாபகம். ஆனா அவருடைய உருவம், குணம், தலைமைப்பண்பு முதலியவற்றையெல்லாம் பார்க்கும் போது அவரு சிம்ம லக்னமாகவோ அல்லது சிம்ம ராசியாகவோ இருக்கனும்ன்னு எனக்கு தோனுது.
தலை எதுக்கும் அவருடைய ஜாதக விபரங்களை நன்றாக உறுதிப்படுத்திக்கொண்டு அப்புறம் லக்னாதிபதி 8ல் அப்படி இப்படின்னு சொல்லுங்களேன். இல்லாட்டி நீங்க ஒன்று சொல்லிவைக்க வேறமாதிரி ஆயிடப்போவுது.
June 3, 2011 at 5:48 am
விஜய காந்த் ..கும்ப லக்கினம் , சூரியன் ஆட்சி ,செவ்வாய் ஆட்சி(விருச்சிகம்) -சூரியன் சுக்கிரன் இணைவு ……
For Date of birth ..search in google…
time of birth…i donot know exactly அண்ணே ணே ணே ணே ……
June 3, 2011 at 6:14 am
///time of birth…i donot know exactly அண்ணே ணே ணே ணே ……////
ஆங்! அது அதைதான் எதிர்பாத்தேன். எது முக்கியமோ அதுல கோட்டைவிட்டாச்சி அப்புறம் அது உச்சம், ஆட்சின்னு சொல்லி என்ன பிரயோசனம்.
June 3, 2011 at 11:16 am
http://thoppithoppi.blogspot.com/2011/06/blog-post.html
June 3, 2011 at 3:24 pm
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், “தில்’லான கணிப்பு
பதிவு செய்த நாள் : மே 11,2011,23:45 IST
மாற்றம் செய்த நாள் : மே 13,2011,01:18 IST
எப்படியும் நாளை பகல் வேளையில், தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும் என்ற நிலையில், ஜோதிடத்தில் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, உலக ஜாதகம், எண் கணிதம், தலைவர்களின் ஜாதகங்கள், கிரக பெயர்ச்சிகள், தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, நாளை தமிழகத்தை ஆளப்போவது யார் என்பதை கணித்து, ஜோதிடர்கள் பலர் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் நடந்த ஏப்., 13லிருந்து, மே 13ம் தேதி வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில், குருப் பெயர்ச்சி நடந்துள்ளது. அடுத்து புதிய அரசு பதவியேற்கும் சமயத்தில், ராகு, கேது பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இப்படியொரு நிலை இதற்கு முன் இருந்ததில்லை. இத்தனையையும் மீறி, இதுதான் நடக்கும் என உறுதி தெரிவித்து வெளியிட்ட, “தில்’லான ஜோதிடர்களின் கணிப்புகள் இதோ:
சென்னை திருவல்லிக்கேணி, சந்தனலிங்கம் ரமேஷ் (மொபைல்: 96772 80866) : தெய்வ வாக்கின்படி, இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாக தெரிகிறது. தி.மு.க.,விற்கு இது கடுமையான சோதனைக் காலம். அ.தி.மு.க., அதிக இடங்களில் வென்று ஆட்சிப் பீடம் ஏறுவது உறுதி. தேர்தல் முடிவிற்கு பின், தி.மு.க.,வின் நிலை கடும் பாதிப்படையும். காங்கிரசுடன் பிணக்கு ஏற்படும். மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும். அரசியலில் நிலைத்தன்மை இருக்காது. கருணாநிதியின் வாரிசுகள், கடும் சோதனையை சந்திக்க நேரிடும். இம்முறை அமையும் அ.தி.மு.க., ஆட்சி, வெகு சிறப்பானதாக இருக்கும்.
ஆற்காடு ஜோதிடர் ஆ.செ.ந.சோம சேகரன் (மொபைல்: 93671 50888) : கருணாநிதியின் பிறந்த தேதி, 03.06.1924; மிருகசீரிஷ நட்சத்திரம். ரிஷப ராசி. கடக லக்னத்தில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும், தற்போது சுக்ர தசை சூரிய புக்தி மிக சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஜாதகப்படி, தற்போது நல்ல தசை புத்திகள் நடைபெறுவதாலும், குருப் பெயர்ச்சி மிக சாதகமாக உள்ளதாலும், கருணாநிதியை விட சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.விஜயகாந்தின் பிறந்த தேதி, 25.08.1952. சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக குரு நன்றாக இருந்தாலும், நடக்கின்ற புதன் தசை, கேது புக்தி சரியில்லாததால், இவர் எதிர்பார்க்கும் இடங்களை விட சற்று குறைவான இடங்கள் கிடைக்கும். ஜெகத் ஜாதகத்தில் லக்னாதிபதியான, புதன் நீசமடைவதால், கூட்டணி கட்சிகள் பெறும் சில இடங்களும், கலியுக தர்மப்படி விலை போகும் கட்சிகளுமே, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய சக்தியாக இருப்பர்.
புவனகிரி ஜோதிடர் சிவஅண்ணாமலை தேசிகன் (மொபைல்: 96002 33910) :லக்னத்தின் அடிப்படையிலான என் கணிப்பின்படி, இந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். சுக்கிரன் உச்சம் பெற்றுள்ள நிலையில், அவர், ஸ்ரீரங்கம் தொகுதியை தேர்வு செய்ததும், அவரின் யோக கிரகமான குரு, 10ல் ஆட்சியில் அமர்ந்துள்ளதால், ஜெயலலிதாவின் செல்வாக்கு கூடும். அதே சமயம், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் எதிரியாக செயல்பட்டுள்ளதால், எதிரியின் தவறான செயல்களாலும், நடவடிக்கையாலும், வெற்றியில் சந்தேக தன்மையை ஏற்படுத்தும். ஆனாலும், குரு பலம், அவருக்கு கைகொடுக்கும். இருப்பினும், கூட்டணி நண்பர்களின் தொல்லையை அவர் சந்திக்க நேரிடும். பிரச்னைகளுக்கு இடையேயே அவரது ஆட்சி பயணிக்கும். கடக லக்னத்திற்கு, 10ல் குரு அமர்வதால், கருணாநிதியின் பதவி பறிபோகும். காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். சோனியாவின் பதவிக்கும் பாதகம் ஏற்படும். கடந்த கால நட்பு, பகையாக மாறும்.
விழுப்புரம் ஜோதிடர் சிவகுரு ரவி (மொபைல்: 98946 76928) : ஆங்கில புத்தாண்டு, சனி பிரதோஷ நாளில், விருச்சிக ராசியில், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது. இது சனியின் ஆதிக்கம். சந்திரன் நீச்ச ஸ்தானத்தில், நீச்ச பங்க குருவின் ஒன்பதாம் பார்வை பதிந்து சிறப்படைகிறது. அரசியலில் ராஜ கலகம் நிகழும்; மாற்றம் ஏற்படும். “கர’ ஆண்டு சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில், கேது மகா திசையில் பிறந்துள்ளது. அனைத்து கிரகங்களும் பெயர்ச்சியாகும் சிறப்பும், இந்த ஆண்டிற்கு உண்டு. இது, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையும். ஜெயலலிதா வெற்றிநடை போடுவார்; சாதனைகள் புரிவார்; இவரின் கூட்டணி வெற்றி பெறும்.
திருக்கோவிலூர் மணம்பூண்டி பரணிதரன் (மொபைல்: 98408 20560) : தேர்தல் முடிவு வெளிவரும் மே 13 அன்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கும் நேரம், மிதுன லக்கினம், உத்ரம் நட்சத்திரம், கன்னி ராசியாகும். மேஷத்தில் சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்ரன், மிதுனத்தில் கேது, கன்னியில் சந்திரன், சனி, தனுசில் ராகு அமர்ந்துள்ளனர். தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் இவற்றையும், கருணாநிதியின் ஜாதகத்தையும் ஆராய்ந்தால், குருவும், சனியும் அவருக்கு அதிக கெடுபலன்களை அளிக்கின்றனர். இப்படி பல்வேறு இயல்புகளையும் நோக்கும் போது, கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்க்கும் போது, சூரியன் ராஜயோகத்தை வழங்குவார். ஜெயலலிதாவிற்கே முதல்வராகும் யோகம் இருப்பதை கிரகங்கள் உணர்த்துகின்றன.
October 23, 2012 at 8:01 pm
You rock!