பெண்ணுக்கு காதலால் சிக்கலா?

Posted on

Sugumarje_Caricaturist

பெண்ணுக்கு காதலால் சிக்கலா? ஒரு ஜோதிட அலசல்…

 

 

 

 

வாழ்த்துக்கள் … ஜோதிட ஆய்வுக்காக தங்களின் விபரம் தந்தமைக்காகவும், என்னை தேர்ந்தெடுத்ததிற்காகவும் என் மனமார்ந்த நன்றி…

தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாவல்ல முழுமுதற் பொருளின் துணையோடு வாழ்த்துகிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.தங்களின் ஜாதக விபரங்களில், நான் தரும் இந்த விபரங்கள் அப்படியே 100 சதவிகிதம் பொருந்தும் என்பதல்ல… ஜோதிடக்கடலில் நான் ஒரு துளி. அதில் எல்லாமே உள்ளடக்கம் என்று கருதிவிட முடியாது. இதில் தவறு இருப்பின், தெய்வ அருளால் தாங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதே உண்மையாம். உள்ளே செல்லும் முன்பாக இந்த 12 விசயங்களை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்வது நலம் என்று கருதுகிறேன்…

இதற்கான பதிலை பிறகு தனியாக என்னிடம் சொல்லிவிடவும்…

1_எல்லாவிதமான வாழ்வு, அதன் சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த நீங்கள் காலப்போக்கில் மாறி இருப்பீர்கள்.
2_சில நேரங்களில் அமைதியும், சில நேரங்களில் கொடூர மன நிலையும் இருக்கும்
3_வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் கோபம் கொண்டிருக்கும். ஆனால் மற்றவரிடம் அது சில நேரம் பலனளிக்காது.
4_தலைவலி அவ்வப்போது வந்து செல்லும், கண் பார்வைக்குறைக்காகவோ, தலைவலிக்கோ கண்ணாடி அணிய வேண்டியிருக்கும்.
5_எங்கிருந்தாலும், இங்கே நிம்மதியில்லை என்று புலம்பல் இருக்கும். ஆனால் நல்ல வசதியான, அமைப்பான இல்லத்திலோ, அதன் அருகிலோ வசிப்பீர்கள்.
6_காதல் வயப்படுவீர்கள், அதிலும் தங்கள் தகுதிக்கு கீழ் இருக்க கூடியவரின் அன்பை பெற விரும்புவீர்கள். அதாவது வேறு மதம், வேறு சாதி என்பது போல. அப்படியான மனிதர்களை நமபி மோசம் போகும் நிலை உருவாகலாம்
7_ எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் துணிவோடு, வந்தால் பார்ப்போம் என்ற தைரியமிருக்கும். உங்களை கிண்டல், கேலி செய்பவர்களை ஒரு கை பார்ப்பீர்கள்.
8_ தாயிருந்தும், தந்தையிருந்தும் அனாதையாக வாழும் நிலை உருவாகலாம், அல்லது இருக்கலாம். அவர்களின் அன்பையும் பெற இயலாது. பொதுவாக உங்கள் பெற்றோர்கள் தங்களுக்குள் சண்டையிட்டபடி இருக்கலாம்.
9_தாயோடு பிறந்தவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கலாம்
10_ உயர்கல்விக்கு தடைவந்து, இருக்கிற பட்டத்தோடு, கணிதம், கணிணி, தொடர்பான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
11_ வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரலாம், ஆனால் தட்டிப்போக வாய்ப்புள்ளது. பிறந்த இடத்தில் வேலை அமையாது. வேலையில் அலைச்சல் இருக்கலாம்
12_ மனம் அமைதியை நாடும். வாழ்வில் தனக்கென இருப்பதையெல்லாம் இழக்கவும் விரும்புவீர்கள். சாதுக்கள் வழிபாடு கிடைக்கும்.

 

 

விரிவான பலன்கள்

தங்கள் தற்பொழுது மன குழப்பத்திலிருக்கிறீர்கள். அனேகமாக அது சென்ற மாதத்தில் ஆரம்பித்திருந்த காதலால் கூட இருக்கலாம். காதல் என்பது ஒருவகையான Insecurity யில் இருந்து விடுதலை என்பதாக நாம் அர்த்தம் செய்து கொள்கிறோம். அது மிகவும் தவறு.

கல்வி, அலுவல் தொடர்பான விசயங்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கலாம். ஆனாலும், உங்களுக்கு எதையும் யோசித்து செய்யும் ஆற்றலிருப்பதால், முதலில் கெட்டதை நினைத்து பிறகு நல்லது நினைக்கவும். எல்லாமே நன்றாக அமையும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் துணை வராது. கவனம் அவசியம்.

வாழ்விற்கான அனுபவ பாடங்கள் அனேகமாக இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தொடரலாம்.

இரண்டிலிருக்கிற செவ்வாய் திருமண தோசத்தை ஏற்படுத்துகிறார். ஆனாலும் சிறுவயதிலேயே திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. கணவரோடு சில பிரச்சனைகாக சண்டையிட வேண்டியிருக்கும். கணவர் தென் திசையை சார்ந்தவராக இருக்கலாம். முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.

பொதுவாக எதையும் அலசி ஆராயும் தன்மை இருந்தாலும், சில நேரம் தடுமாற்றமிருக்கும். பெற்றோருக்கு கீழ்படியும் குணமிருக்கும். கலை ஆர்வமிகுந்திருக்கும். பலவிதமான தடைகளில் இருந்து மீண்டு வந்திருப்பீர்கள். ஏனோ உடல் கவர்ச்சி, ஆண், பெண் கவர்ச்சியில் மனம் ஈடுபடும். என்நேரமும் காதல் தொடர்பான விசயங்களில் ஆர்வமிருக்கும். சந்தேகமும் உருவாக்கூடும்.

கண் தொடர்பான நோய், பல் பலமின்மை, பதட்டம் இருக்கலாம். மூத்த சகோதரர் இருந்தால் அவரோடு நல்ல சுமூகமிருக்கும்.

இறைவழிபாட்டின் மூலமாக தங்களின் நிறைகளை பெற்று குறைகளை களைந்து வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்த்துக்கள்

மேற்கண்ட 12 பொது நிகழ்வு செய்திகளும், விரிவான பலன்களும் தஙகளின் ஜோதிட ஆராய்ச்சியின் பலனாகவே தரப்பட்டிருக்கிறது. நிகழ்ந்தது, நிகழாதது குறித்த சந்தேகம் தேவையில்லை.

மேற்கொண்டு 10 கேள்விகள் கேட்க விரும்பினால் தாராளமாக கேட்கலாம். அடுத்த இரண்டு நாட்களில் கிடைக்கும்.

என் அலைபேசி: +91 9442783450
மின்னஞ்சல்: Sugumarje

பார்க்க: www.sugumarje.com

அன்பன்
சுகுமார்ஜி
for Ohedas Astrology Research Center

 

குறிப்பு: நான் என்னிடம் ஜாதக விளக்கம் கேட்பவருக்கு ஒரு ஓவியம் இணைத்தே தருவதுண்டு. கூடுதலாக கட்டணமின்றி 🙂

கட்டணத்தொகை: மின்னஞ்சல் அல்லது கைபேசியில் அணுகவும்

Advertisements

7 thoughts on “பெண்ணுக்கு காதலால் சிக்கலா?

  டவுசர் பாண்டி said:
  June 2, 2011 at 3:36 pm

  மிகவும் அருமையான அலசல். சுகுமார்ஜியன்னே, நீங்க ஓவியரா! இவ்வளவு நாள் தெரியாம போச்சே. ஒங்களோட சைட்டுல உள்ள போடோஸ் சூபெராக உள்ளது. ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும் என்பது நிஜம்தான் போல. கலக்குறீங்க. கம்ப்யூட்டர்ல மட்டும் பண்ணுவீங்களா அல்லது கைட்டுமா?

   sugumarje said:
   June 3, 2011 at 2:43 pm

   என்னா டவுசரு… படிச்சி முடிச்சதும் ரொம்ப தெளிவான தமிழ் ல பின்னூட்டம் போட்ருக்காப்ல இருக்கு 🙂
   நான் இப்போதைக்கு ஓவியரில்லே, என் ஆறு வயசிலே இருந்தே ஓவியர்தாம்லே 🙂
   பாராட்டுக்கு நன்றி டவுசர்…

  கிருமி said:
  June 2, 2011 at 9:35 pm

  யாராவது, ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரின் சரியான பிறந்த தேதி, நேரம், இடம் குறிப்பு இருந்தால் தரவும்.

   டவுசர் பாண்டி said:
   June 3, 2011 at 1:25 am

   கிருமியன்னே நீங்க இங்கன தட்டிப்பாருங்கோ
   http://www.singaporejunction.com/eserv/en/pub/astrology/HoroscopeChart.asp

   1 Barack Obama 04-Aug-1961 at 7:24 P.M.
   [Honolulu – Longitude:157° 51′ 30” W & Latitude:21° 18′ 25” N]

   2 Manmohan Singh 26-Sep-1932 at 02:00 P.M.
   [Jhelum – Longitude:73° 45′ E & Latitude:33° 00′ N]

   3 Sonia Gandhi 09-Dec-1946 at 09:30 P.M.
   [Milan – Longitude:9° 10′ E & Latitude:45° 28′ N]

   4 Karunanidhi 03-Jun-1924 at 03:00 P.M.
   [Tirikuvlai – Longitude:79° 13′ E & Latitude:11° 59′ N]

   5 Jayalalitha 24-Feb-1948 at 03:00 P.M.
   [Mysore – Longitude:76° 37′ E & Latitude:12° 18′ N]

   Film Actors & Actresses

   1 Rajini Kanth 12-Dec-1950 at 11:54 P.M.
   [Bangalore – Longitude:77° 38′ E & Latitude:12° 58′ N]

   2 Kamalahasan 07-Nov-1954 at 12:00 P.M.
   [Paramakudi – Longitude:78° 22′ E & Latitude:9° 21′ N]

   3 Aishwarya Rai 01-Nov-1973 at 12:00 P.M.
   [Mangalore – Longitude:74° 53′ E & Latitude:12° 52′ N]

   4 Amitabh Bachchan 11-Oct-1942 at 04:00 P.M.
   [Allahabad – Longitude:81° 50′ E & Latitude:25° 57′ N]

   5 Shahrukh Khan 02-Nov-1965 at 02:30 A.M.
   [Delhi – Longitude:77° 13′ E & Latitude:28° 39′ N]

  yogi said:
  June 2, 2011 at 10:02 pm

  நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாவல்ல முழுமுதற் பொருளின் துணையோடு வாழ்த்துகிறேன்.

  really supper nalla aaramba varigal

  வணக்கம் முருகேசன் சார் மற்றும் இங்கு வருகை தந்துகொண்டிருக்கும் சோதிட ஆய்வு மேற்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,

  ஒரு சந்தேகம்,

  ஜாதகம் கணிப்பதற்கு எந்த அயனாம்சம் சிறந்தது ?

  கே.பி
  சித்திர பட்சம் ( லகரி )
  ராமன்

  இதில் எதன் அடிப்படையில் பலன் துல்லியமாக வருகிறது ?

  இயன்றால் எனது மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம்..
  sivaayasivaa@gmail.com

  நன்றி..

   S Murugesan said:
   June 3, 2011 at 4:11 pm

   ஜா.ரா !
   நான் லஹரி உபயோகிக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s