மேக்ரோ ஜோதிடம்

Posted on

எக்கனாமிக்ஸ்ல மேக்ரோ எக்கனாமிக்ஸ், மைக்ரோ எக்கனாமிக்ஸ்னு இருக்கிறாப்ல ஜோதிடத்துலயும் கொண்டுவரலாம். நாட்ல இன்னைக்கு செலாவணியில உள்ளதெல்லாம் 99.9% மைக்ரோ ஜோதிடம் தான். ஐ மீன் ” என் ஜாதகம் எப்படி இருக்கு ? எனக்கு எப்போ வேலை கிடைக்கும்? எப்போ சேலை கிடைக்கும்? எப்போ குட்டி போடுவன்”ங்கற கேள்விகளோட நின்னுர்ர ஜோதிடம் மைக்ரோ ஜோதிடம்.

இந்தா தாட்டி நல்ல மழை இருக்குமா? அரசாங்கம் ஸ்திரமா இருக்குமா? இடை தேர்தல் எதுனா வந்துருமா?
( கானிப்பாக்கம்? காளாஸ்திரியா ஞா இல்லை தேவஸ்தானத்து ஆஸ்தான பண்டிதர் ஆந்திராவுல கிரண் சர்க்கார் ஸ்திரமா இருக்கும்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காரு – ஆகஸ்டுல இருக்குடி உனக்கு ஆப்பு)
சீனாக்காரன் எதுனா வேலை கொடுத்துருவானா? – பாக் இனிமேயாச்சும் திருந்துமா? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய ஜோதிடம் மேக்ரோ ஜோதிடம்.

இந்த மேக்ரோ ஜோதிடத்தை ஒட்டு மொத்த மனித குல மேன்மைக்கு பயன்படுத்த முடியுமான்னா நிச்சயம் முடியும். தற்போதைய தலைமுறைய திருத்தறது கஷ்டம்தேன்.ஆனால் அடுத்த தலைமுறை சீரழியாம சேஃப் பண்ண முடியும்.

கண்ணால ஸ்டேஜுலயே இதை ஆரம்பிச்சுரனும். ஆருக்கெல்லாம் மணவாழ்க்கை இமிசையா இருக்குமோ அவிகளுக்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்து திருமணமில்லாமயே வாழ்ந்துர்ராப்ல செய்யலாம்.

இந்த சோடியிலயும் அஞ்சாமிடம் கெட்டிருந்தா குழந்தை பெத்துக்க அனுமதி மறுப்பு.
இந்த மாதிரி ரிலேஷன்ல தொடர்ச்சி – முதுமையில் பாதுகாப்புல்லாம் ரிஸ்குங்கறதால கட்டாய இன்ஷியூரன்ஸ் (அரசே கூட ப்ரிமியம் செலுத்தலாம்) – உலக சேவை நிறுவனங்களின் நேரடி பார்வையில முதியோர் இல்லங்கள் ஏற்படுத்தலாம்.

ஆனால் இப்படிப்பட்ட உறவுல பிறக்கிற குழந்தைகளுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு – அரசாங்கத்தோட சிறப்பு கவனம் அவசியம் இருந்தாகனும்.

( தாம்பத்ய வாழ்க்கைக்கான கொடுப்பினை இல்லாத ஆண் ,பெண்களுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் ப்ரொசிஜரா : சேர்ந்து வாழ அனுமதிக்கலாம் – கேடு கெட்ட சாதகமா இருந்தா பாலியல் தொழிலுக்கு ரெக்கமெண்ட் பண்ணலாம். அதுக்கு மிந்தி அந்த தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்.

குழந்தை பிறப்பு:
ஆருக்கெல்லாம் குழந்தை பிறப்புல பிரச்சினை வரும்னு தெரியுதோ அவிக பெத்துக்காம இருந்துர்ராப்ல செய்யலாம்.ஒரு வேளை குழந்தை பெற்றோரை பிரிந்து வாழ்ந்தா பெட்டர்னு இருந்தா பெற்றதும் பிரியனுங்கற கண்டிஷனோட பர்மிஷன் தரலாம்.

இந்த மாதிரி குழந்தைகளை வளர்க்க உலக சேவை நிறுவனங்களின் நேரடி பார்வையில ரெசிடென்ஷியல் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தலாம்.

அதிலும் அந்த குழந்தைகள்னே இல்லே – எல்லா குழந்தைகளோட ஜாதகங்களும் பரிசீலிக்கப்பட்டு அவற்றின் பலம் பலகீனங்களுக்கு ஏற்ற உணவு ,உடை , என்விரான்மென்ட் தரனும். ஜாதகப்படியா கல்வியை தரனும். உ.ம் சனி நல்லாருந்தா டெக்னிக்கல், சுக்கிரன் நல்லாருந்தா ஃபைன் ஆர்ட்ஸ்

குழந்தைகள் அவற்றின் ஜாதகப்படி எதிர்காலத்துல என்னவா மோல்ட் ஆகப்போகுதோ அந்த டார்கெட் -கோல் அதன் மனசுல நல்லா பதியவைக்கப்படனும்.

வேலை வாய்ப்பு:
இதுவும் அவரவர் ஜாதகப்படியே நிர்ணயிக்கப்பட்டு அதுக்குரிய பயிற்சி தரப்படனும். செவ் பலமுள்ளவன் போலீஸ்லயும், ராகு பலம் உள்ளவன் ரகசிய போலீஸ்லயும் ,குரு பலம் உள்ளவன் வங்கித்துறையிலயும் இருந்தா நாடு இப்படி சிங்கியடிக்காது.

இதே டெக்னிக்கை கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் விஷயத்துல ஒர்க் அவுட் பண்ணலாம். மொள்ளமாரி,முடிச்சவிக்கி ஜாதகத்துல பிறந்த பிக்காலிகளை தங்கள் ரத்தம் என்ற ஒரே காரணத்துக்காக ப்ரமோட் பண்ணி திகாருக்கு அனுப்பறதை விட இது பெட்டரில்லையா?

எச்சரிக்கை:
ஆனால் குழந்தை பிறப்பின் நேரத்தை குறிக்க ஜாதகங்களை கணிக்க கணிணியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பலனை கேல்குலேட் பண்ண நாட்டில் தலை சிறந்த ( சித்தூர் முருகேசனை தவிர) ஜோதிடர்களின் உதவியுடன் ஒரு புதிய சாஃப்ட்வேரை தயாரிக்கவேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் தர்ரப்பயே அப்ளிகண்டோட ஜாதகத்தை பார்த்து நாசகாரி ஜாதகனா இருந்தா ரெஃப்யூஸ் பண்ணி வீட்டுக்கனுப்பிரனும்.

சுமார் ஜாதகனா இருந்து லைசென்ஸ் கொடுத்தாலும் கோசாரத்துல எப்பல்லாம் செவ் சனி சேர்க்கை எங்கே – எப்போ ஏற்படும்- அந்த காலகட்டத்துல என்னென்னைக்கு சனி ,செவ்வாய்க்குரிய நட்சத்திரங்க்ள் வரும்னு னு அறிக்கையை கொடுத்து விட்டுரனும். அந்த நாட்கள்ள நமீதாவே வரச்சொன்னாலும் இவன் போகக்கூடாது. மீறிபோனா நஷ்ட ஈடு கிடையாது .

இதுமாதிரி ரோசனைங்கள நீங்களும் சொல்லலாம்ணே. (கமெண்டா போடலாம் – நீளமா இருந்தா மெயிலுக்கு அனுப்புங்க -பதிவாவே போட்டுரலாம்)

Advertisements

21 thoughts on “மேக்ரோ ஜோதிடம்

  டவுசர் பாண்டி said:
  June 2, 2011 at 4:03 am

  நைனா இந்த எச்சரிக்க டிப்ஸ் இருக்குல்லா இதமாரி நம்மூருல நேரியபெருட்ட சொல்லி நல்லா வாங்கிக்கட்டிருக்கேன். இப்ப இதுக்கு என்கரேஜ் கெடைக்கிறது சந்தொசமாருக்கு. நைனாவுக்கும் கருநாக்கா? நைனாவுக்கும் நமக்கும் நெரிய விஷயம் சூட்டாவுதே. எப்புடி. எனுக்கு ஏழு நைனாவுக்கு பதினாலு. நானு ஆடி மாசம். அது போவ குரு இப்பிடி முக்காவாசி சூட்டிங்க்ஸ் மேட்சிங்க்ஸ். ஆனா ஒன்னே ஒன்னு இடிக்கி. அடியேன் நைனா மாறி பெரிய சோசியக்காரன் கெடயாது. அது ஒன்னுதேன் வித்தியாசம்.

  Mani said:
  June 2, 2011 at 5:20 am

  அண்ணே உங்க கற்பனைக்கு எல்லையே இல்லீங்கண்ணே. சும்மா எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு ஆழத்துக்கு போயிட்டீங்க சூப்பர். ஆமா நம்ம நாடு சுதந்திர நாடுண்ணே இங்க இப்படி எல்லாம் கம்யூனிசம் பண்ணா அப்புறம் கதை கந்தலாயிடும்ணே. வேணாம்ணே.

  ////இந்த சோடியிலயும் அஞ்சாமிடம் கெட்டிருந்தா குழந்தை பெத்துக்க அனுமதி மறுப்பு.////

  அய்யையோ! இந்திரா காந்தி பீரியட்ல சஞ்சய் காந்தி அல்லாருக்கும் கட்டாய காயடிப்பு செஞ்சது நினைவுக்கு வருங்கண்ணா.

  நாம என்ன நினைக்கிறோம்னா இந்த மேக்ரோ ஜோதிடத்தால நம்ம நாட்டிற்கு வரக்கூடிய தீமைகளை முடிந்தவரை முன்கூட்டியே அறிந்து தெரியப்படுத்தலாம். ஆனாலும் பவர்ல உள்ளவுக எதுவும் கண்டுக்க மாட்டாக. ஆனா உங்க கணிப்பு நெசமாலுமே உண்மையாயிடுச்சுன்னு வையிங்க அப்புறம் நீங்கதான் மன்மோகன் சிங், சோனியாவுக்கு ஆஸ்தான ஜோதிடர் ஓ.கே.வா.

   S Murugesan said:
   June 2, 2011 at 6:52 pm

   மணி,
   //உங்க கணிப்பு நெசமாலுமே உண்மையாயிடுச்சுன்னு வையிங்க அப்புறம் நீங்கதான் மன்மோகன் சிங், சோனியாவுக்கு ஆஸ்தான ஜோதிடர் ஓ.கே.வா.//
   உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? நான் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு அறிவிச்சப்ப பின்லேடன் இஷ்யூ இல்லே.

   இப்ப பாக்ல இன்னொரு தாக்குதலுக்கு அமெரிக்கா அடி போட்டுக்கிட்டிருக்கு. நம்ம உள்துறை அமைச்சகத்துக்கு மோஸ்ட் வான்டட்ல எவன் செத்தான் -எவன் இந்தியாவுல இருக்கான்னே தெரியாது. முந்திரிகொட்டை மாதிரி பாக்கிஸ்தான் கிட்டே லிஸ்டை நீட்டி மூக்கை உடைச்சிக்கிட்டாய்ங்க.

   இன்னம் யார் யாரெல்லாம் வந்து இங்கன செட்டிலாயிருக்காய்ங்களோ? இந்த மாசம் மொத்தமா 3 கிரகணம் வரப்போகுதாம்.

   என் கணிப்புகள் தோத்துப்போகனும்னு தான் நான் வேண்டிக்கறேன். என் கணிப்பெல்லாம் நெஜமானா நாடு தாங்காது சாமியோவ்

  Mani said:
  June 2, 2011 at 5:27 am

  ///பாலியல் தொழிலுக்கு ரெக்கமெண்ட் பண்ணலாம். அதுக்கு மிந்தி அந்த தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்///

  இதுக்கு அங்கீகாரம்ன்னா என்னன்ணே மீனிங். அவிக சம்பாதிச்சதுல இன்கம் டேக்ஸ் கட்டணுமா? நாமளும் போனதுக்கு பில்லு வாங்கிகிட்டு வரணுமா? தப்பித்தவறி ஊட்டுகாரிகிட்ட அந்த பில்லு கடிச்சதுன்னு வையிங்க நாம தொலைஞ்சோம். (நாங்கெல்லாம் தியேட்டர்ல பலான படம் பார்த்ததுக்கப்புறம் அங்கேயே டிக்கெட்ட ஞாபகமா கிழிச்சுருவோம்ல)

   //(நாங்கெல்லாம் தியேட்டர்ல பலான படம் பார்த்ததுக்கப்புறம் அங்கேயே டிக்கெட்ட ஞாபகமா கிழிச்சுருவோம்ல)//

   “கில்மா ஜோதிடர்” மணி அண்ணன் வாழ்க…வளர்க 🙂
   இப்போ புரியுதா டவுசர்….. மணி அண்ணன் …ஏன் ஜாதகத்த சபைல வைக்க மாட்டேன்குராருனு 🙂 🙂 [ சொம்மா தமாசு 🙂 ]

    Mani said:
    June 2, 2011 at 6:14 am

    ஏம்ப்பா அரைவேக்காடு நாங்களும் மனுசங்கதானே. உங்கள மாதிரி வயசுல ஆட்டம் போட்டவுங்கதேன். ஜோசியருக்கெல்லாம் என்ன நூல்போட்டு கட்டியா இருக்கு.

    //ஜோசியருக்கெல்லாம் என்ன நூல்போட்டு கட்டியா இருக்கு.//

    🙂 அண்ணனுக்கு குசும்பு ஓவரு 🙂

  வினோத் said:
  June 2, 2011 at 6:51 am

  ஜோதிடத்தை பள்ளி படிப்பில் சேர்க்குறத்க்குகே.. பா.ஜ.க. முயன்றபோது .. மிக பெறும் எதிர்ப்பு வந்தது. அதை வச்சு ஆட்சி பண்ணலாம்னா விடுவாங்களா? போலி பர்த் சர்டிபிகட் தயார் பண்ணினா?

  மேலும் விவாகரத்த்து .. கள்ள காதல் , விபத்து கொலை, இதெல்லாம் அனுபவிக்கவேண்டிய ஆத்துமா இருந்ததுனா, இவைகளை நடக்க விடாம நீங்க தடுத்தா என்னா ஆகும் ?

   S Murugesan said:
   June 2, 2011 at 6:54 pm

   வினோத்ஜீ,
   வாய்கால்ல தண்ணி வேகமா ஓடி வருது .தடுத்தா என்ன ஆகும்? பக்கவாட்ல ஏற வாய்ப்பிடுந்தா ஏறும் (உ.ம் சேர்ந்து வாழ்தல் -பாலியல் தொழிலாளியை அணுகுதல் / கழிவறையில கால் சறுக்கி விழுதல் ) தட்ஸால். இந்த ஜுஜுபியையெல்லாம் தடுத்தா பிரளயம் வரும்ங்கறைங்க?

  வினோத் said:
  June 2, 2011 at 7:21 am

  ஜோதிடத்தை பள்ளி படிப்பில் சேர்க்குறத்க்குகே.. பா.ஜ.க. முயன்றபோது .. மிக பெறும் எதிர்ப்பு வந்தது. அதை வச்சு ஆட்சி பண்ணலாம்னா விடுவாங்களா? போலி பர்த் சர்டிபிகட் தயார் பண்ணினா?

  மேலும் விவாகரத்த்து .. கள்ள காதல் , விபத்து கொலை, இதெல்லாம் அனுபவிக்கவேண்டிய ஆத்துமா இருந்ததுனா, இவைகளை நடக்க விடாம நீங்க தடுத்தா என்னா ஆகும் ?

  பாலியலை சட்டபூர்வமாக்க அந்த தொழில் நடத்துறவங்களே விட மாட்டாங்களே..?
  அதிகபட்ச சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கும் தொழில்
  1) ஆங்கில மருந்து.
  2) போதை மருந்து
  3) ஆயுத வியாபாரம்

  ஆங்கில மருந்துல உயர் தொழில்நுட்பம் காப்புரிமைன்னு இருக்கு. அவங்க பொருளுக்கு அவன்க்க வச்சது தான் விலை. சும்மா காய்சல்லு கடையில் 1 அல்லது 2 ரூபாய்க்கு கிடைக்கும் மாத்திரையின் மருந்து கடை / மருத்துவமனைக்கு வரும் அடக்க விலை 10 பைசா இல்லை 20 பைசா.

  போதை மருந்து- ஹெராயின் சர்வதேச மார்க்கட்டில் கிலோ வுக்கு கோடிக்கு மேல் . மூல பொருள் கஞ்சாவுக்கு அந்த விலை கிடையாது .. அதேபோல் ஆயுதம் ஒருமுறை ஆராயிச்சி செய்து மாடல் தயார் செய்துவிட்டால் லட்சக்கணக்கில் தொடர்ந்து தயாரிக்கும்போது மாடல் செலவு 1 பைசா கூட வராது ..

  A.K 47 துப்பக்கி 1947ல் ரஷ்யா சிப்பாய் கண்டுபிடித்தது.. கள்ள மார்க்கட்டில் துப்பக்கி விலை பல லட்சம் . துப்பக்கியின் எடை 10 கிலோன்னு வைச்சாலும் மூலபொருள் இரும்பின் அடக்க விலை 150 ருபாய் வரலாம் … உற்பட்த்தி செலவு கூலி 300 ரூபாய்னாலும் 10% லாபத்துடன் 500 ரூபாய்க்கு விற்கலாம் அப்ப லட்சகணக்கில் பணம் யாருக்கு போகிறாது ?

  பர்மா பஜார் வியாபரிகளிடம் பேசினால் , தாரளமயத்துக்கு முன்னால் பாரின் செண்ட், டிவி, டேப் ரிக்கர்டர் பேக்ஸ் மிசின், வாக்மேன், தங்கம்,வைரம் எல்லாம் கடத்தல் சரக்கு. இவைகளை வியாபாரம் பண்ணினால் போலிஸ் ரெய்டு, செயில் நிச்சயம். அப்படி போலீஸ் துரத்தும்போது எங்களுக்கு பண மழை கொட்டுச்சு. எங்கிருந்து வருதுன்னே தெரியாமல் பண வரவு இருந்துச்சு,

  இப்போ தாரள மயத்துக்கு பின் போலிஸ் கெடுபிடி இல்லை , அதை விட ஹைடெக் இருக்கு, ஆனா பாரின் கம்பனி ஷோருமில் கூல்டிரிங்க்ஸ் கொடுத்து, கேரண்டியுடன் பொருள் விக்கரான், எங்களுக்கு முந்தய வரவேற்பு இல்லை, லாபம் இல்லை, சாதா வியாபாரி ஆய்ட்டோம்ன்னு சொல்ற்றார்.

  போலிஸ் துரத்தும் வரை தான் பொருளுக்கு அநியாய விலை வச்சு விக்க முடியும். இது போலிசுக்கும் , கடத்தல் பேர்வழிக்கும் தெரியும்.

  பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினா இதே தான் நடக்கும். திருமணம்ஙிற அமைப்பை ஒழிச்சுட்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கின பிரச்சனை இல்லை. திருமணம் , குடும்பம் இருக்கும்போது அதை பண்ணினா, குடும்பத்தில் இருக்கும் பலர் பகுதி நேர பாலியல் தொழிலாளி ஆவார்கள். குடும்பத்தில் மேலும் குழப்பம் அதிகரிக்கும் திருப்பூர் மாதிரி ஊர்களை பார்த்தீங்கனா தெரியும்.

   S Murugesan said:
   June 2, 2011 at 7:04 pm

   வினோத் ஜீ,
   //திருமணம்ஙிற அமைப்பை ஒழிச்சுட்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கின பிரச்சனை இல்லை.//
   பாலியல் தொழில் வளரவே திருமண அமைப்புத்தான் காரணம்னு நான் சொல்றேன்

   //திருமணம் , குடும்பம் இருக்கும்போது அதை பண்ணினா, குடும்பத்தில் இருக்கும் பலர் பகுதி நேர பாலியல் தொழிலாளி ஆவார்கள். //

   இதுக்கு நீங்களே விடையும் தந்திருக்கிங்க

   //திருப்பூர் மாதிரி ஊர்களை பார்த்தீங்கனா தெரியும்.//

   தாளி.. தனியார் மயம் – தொழில் மயம் – உலகமயம் இப்படி பல மயத்தால வந்த நிலை இது. திருப்பூர்ல மட்டுமில்லை. இந்த மயங்கள் எங்கேல்லாம் வேர் விட்டிருக்கோ அங்கெல்லாம் இருக்கு.லக்சரிக்காகவோ -சதைப்பசிக்காகவோ நடந்தா இதனால குடி முழுகிப்போறது ஒன்னுமில்லை. வறுமை/அச்சுறுத்தல் மாதிரி காரணங்களால பரவிவர்ரதுதான் கவலைய தருது.

   செல்வ குவிப்புக்கு காரணமே நிறைவேறாத செக்ஸ் தான். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுட்டா செல்வக்குவிப்பே இல்லாம போயிரும்லா.

   அந்த துறையே நீங்க சொன்ன பர்மா பஜார் கணக்கா ஆயிரும்லா.. சனம் அடுத்து என்னன்னு ரோசிக்க ஆரம்பிப்பாய்ங்கல்லா

  Vinoth said:
  June 2, 2011 at 7:31 am

  டவுசர் .. ரசினி ஜாதகம் ஆயுர் பாவம் பார்க்க மாட்டீங்களா?

   Mani said:
   June 2, 2011 at 8:16 am

   வினோத் என்ன இது சின்ன புள்ளையாட்டம் ரஜினி ஆயுள் பாவம் பாருங்கன்னு தொடர்ந்து அடம்புடிக்கிறீங்க. நீங்களும் சொல்லிகிட்டு தான் இருக்கீங்க அந்த டவுசரு எதாச்சும் கண்டுக்குதா. விட்டு தள்ளுங்க.

   நம்ம டவுசரு கணக்கெல்லாம் போட்டு ஆயுள் பாவம் பார்க்கறதுக்குள்ள நம்ம ஆயுசு பூடும் போலருக்கே. நம்ம கணக்குப்படி இப்ப ரஜினிக்கு கொஞ்சம் கஷ்டகாலம்தான் என்றாலும் ஆயுள் எல்லாம் முடியல நல்லா இருப்பாரு கவலைப்படாதீங்க.

    டவுசர் பாண்டி said:
    June 3, 2011 at 2:43 am

    கும்புடுறேன் சாமி,

    நமக்கு அவ்வளவா துல்லியமா ஆயுள் கணிக்க தெரியாதுங்கோ. நம்ம கணிப்புல மூணு நாலு நாளு தள்ளிப்போவுது. இதால நமக்கும் நாக்கு தள்ளுது. ஒருவேள பொஞ்சாதியோட எபக்டு பார்ட்டிக்காரனுவளுக்கு வேலை செயுதான்னும் புரிய மாட்டுக்கு. இருந்தாலும் அந்த போட்டுத்தள்ற கெரகம் சேட்டர்ணா இருக்கும் பட்சத்தில் உறுதியா அடிச்சி சொல்லலாம். கர்மக்காரகர் செட்டர்ன் கருமத்துல கண்ணா இருப்பார். ஆனா போட்டுத்தள்ற பொறுப்பு சந்திரனுக்கு கெடைக்கும்போது மட்டும் இந்த சந்திரன் மித்த கெரகங்களுக்கு ப்ரெண்டா இருக்குறதால கொஞ்சம் கடல் மாறி அமைதியாகீது. ஆனா சுனாமி நிச்சயம். அதாவது சங்கு நிச்சயம். அல்லா கெரகத்தயும் தன்னோட தசைல சவாரி செய்ய உடுது. காலபுருஷ தத்துவப்படி நாலாமெடத்த ஜலராசியான சந்திரன் வூடான கடகத்த தாய்க்கி ஒதுக்குனதாளவோ என்னவோ சந்திரன் தாயுள்ளத்தோட செயல்பட்டு செலற போட்டுத்தள்ள கரிசனம் காட்டிட்டுருக்கு. ஒருவேள சுக்கிரன்கூட பேச்சு வார்த்த நடக்கும்போது?………அடப்போங்கப்பு… ரொம்ப யோசிச்சா மண்ட காஞ்சிருது. மூள ட்ரையாயிருது. எட்டாத உச்சிக்கி கொண்டுபோன சனி அதே ஸ்பாட்டுல ரிவிட்டடிக்க ரிட்டனாய்ட்டிருக்கு. ஆமா நான் இத ஆருக்கு சொல்றேன். நா பாட்டுக்கு ஒளரிக்கினுகீறேன்.

    Mani said:
    June 3, 2011 at 5:28 am

    அப்பு என்னா உளறிகினு இருக்கற. தலைக்கு ஒருவிதத்தில பார்த்தா சந்திரன் புக்தி மாதிரி தெரியும். ஆனா நிஜத்தில் செவ்வாய் புக்தி நடக்குது (360 நாட்கள் முறையில்) செவ். யாரு 4, 9க்குடையவர் 6ல் உச்சம் 6ம்இடம் வயிற்றுப்பாகத்தை குறிக்குது அதான் நிலைமை கொஞ்சம் ஓவரா போயிட்டுது. செவ். 9க்குடையவராகி 12, 1ஐப் பார்ப்பதால் வெளிநாடு செல்ல வேண்டியதாயிடுச்சி. செவ்வாய் பாதகாதிபதியாயினும் யோகாதிபதி எனவே மாரகம் எல்லாம் செய்யமாட்டார். தலை தற்போதைக்கு கொஞ்சம் ரிலிஃப் ஆவார்ன்னு நினைக்கிறேன்.

    எனக்கு ராகுவை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு 8ல் இருந்துக்கிட்டு குரு சாரம் வேற குரு மாரக ஸ்தானமான 7ல் (செப்.2011 முதல் ராகு புக்தி ஆரம்பம்) பார்ப்போம் நடப்பது எதுவும் நம்கையில் இல்லை. இறைவா உன் திருவிளையாடல்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே.

    //எனக்கு ராகுவை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு//

    எனக்கு இந்த ஜோசியகாரங்கள நெனைச்சா தான் பயமா இருக்கு….ஆள் ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுகராங்களே….

    இறைவா…சூனியகாரர்களை நான் பார்த்து கொள்கிறேன் …இந்த ஜோசிய காரர்களிடம் இருந்து என்னை காப்பாற்று 🙂 🙂

    டவுசர் பாண்டி said:
    June 3, 2011 at 12:07 pm

    மணியண்ணே,

    கலைஞர் கத கெடக்கட்டும். நம்ம பேட்டைக்கு வாங்க ஒரு புது சரக்கு இருக்கு. அதாவது சி.எம்.நைனாவுக்கு உண்மைலேயே சிம்மராசி கெடயாது தெரிமா? அவருக்கு நம்ம கணிப்பு படி கடகலக்னம் கடகராசி. இதுல மாத்தமே கடியாது. நல்லா யோசிச்சி பாருன்கனே. திதிய பாருங்கோ. அம்புட்டையும் பாத்தீங்கன்னா நீங்களே சொல்லுங்க “நைனாவுக்கு மகத்துக்கு மிந்தி உள்ள ஸ்டாருன்னு”. ஆயில் எப்புடி ஜலத்துல (கடகம்) ஒட்டும்னு சொல்றீங்களா? அது அப்டிதேன்.

   வினோத்-னே ஜோதிட புதிர் நு ஒரு தொடர் ஆரம்பிச்சீங்களே…என்ன ஆச்சு…. கொஞ்சம் அத தொடருங்க……
   நாம எல்லாம் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி பண்ணுவோம் 🙂

  Vinoth said:
  June 2, 2011 at 12:50 pm

  தல என்னொட கமேன்ட் ஸ்பெம் அயிட்டுது .. அப்ருவ் பண்ன மாட்டீங்களா?

  Mani said:
  June 3, 2011 at 6:16 am

  ///இறைவா…சூனியகாரர்களை நான் பார்த்து கொள்கிறேன் …இந்த ஜோசிய காரர்களிடம் இருந்து என்னை காப்பாற்று///

  அப்ப நீங்க மட்டும் யாராம்?! நீங்கெல்லாம் அரைவேக்காட்டு முறைன்னு போட்டு குதறி எடுப்பீங்க. நாங்க சொன்னா மட்டும் பயமாயிருக்கா.

   அரைவேக்காடு :ஹலோ …ஹலோ…என்ன சொன்னிங்க…இன்னொருக்கா திரும்ப சொல்லுங்க…
   அட டா ஒண்ணுமே கேக்க மாட்டேங்குதே…..
   ஹலோ …ஹலோ… என்னது….அருக்காணி வயசுக்கு வந்துருச்சா….
   எதிர் முனை :அரைவேக்காட்டு முறை -நு ஜோசியத்த குதறி எடுக்கரையாமே…
   அரைவேக்காடு : ஹலோ ..சாரி சார் …wrong Number… 🙂 🙂

   மனசாட்சி : அட டா …வேற பேருல மறு மொழிய போட்டு இருக்கனும்..
   ஷகிலா படத்துக்கு போகும் போது…படம் போட்டதுக்கு அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சி போயிட்டு…. படம் முடியறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடியே கெளம்பி வந்துருவியே ….அந்த புத்தியை இதுலயும் பயன் படுத்து …உன்னை யாரும் ஜெய்க்க முடியாது …Mind it 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s