சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் டு டிஸ்கஸ்

Posted on

1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல

2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)

3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்

6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.

7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.

8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.

9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ ங்கறதே இருக்ககூடாது

10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.

11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.

12.ஜோதிஷத்து மேல கமாண்ட் ஏற்படற வரை அது அரித்மெட்டிக்ஸ் மாதிரின்னு தோணும். போகப்போக இது குவாண்டம் தியரிய விட குழப்படியான சப்ஜெக்டுன்னு புரிஞ்சுக்குவிங்க

13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு பல்பு கொடுக்குதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?

14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க

சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.

1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.

2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.

3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்

4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்

5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்

6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)

7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்

8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்

9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,

10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.

11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.

12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.

13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

Advertisements

22 thoughts on “சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் டு டிஸ்கஸ்

  Mani said:
  June 1, 2011 at 1:30 am

  ரிப்பீட்ட்ட்ட்டு???????????!!!!!!!!!!!!!

  டவுசர் பாண்டி said:
  June 1, 2011 at 3:02 am

  //////ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்//////

  நைனா இதுக்கு அர்த்தம் புரியலியே. செல்வம்னா திருவள்ளுவர் சொன்ன செல்வமா இல்லாங்காட்டி டப்புவா?

  //////////14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க////////

  நைனா நம்ம கான்செப்ட் படி அந்தக்கொயந்த எப்ப ஒரு தனி சீவனா ஜீவிக்கோ அப்பதேன், அந்த நேரந்தேன் கரீட்டான நேரம். அதாவது ஒரு மண்ச சென்மமா அவதாரம் எடுக்குற அந்த பச்ச உசுரு எப்ப தனி உசுரா மூச்ச தொடங்குதோ அந்த நேரமே கரீட்டான நேரம். கத்திரிக்கோல வெச்சி தாய்க்கும் புள்ளைக்கும் உள்ள தொப்புள்கொடி ரெலேசன துண்டிச்சி புள்ள எப்ப மொத மூச்சு உடுறதுக்கு ரெடியாவுதோ அந்த நேரமே அந்தப்புல்லையின் சனன நேரம். நம்மக்கருத்த சனங்க ஏத்துக்க மாட்டாய்ங்க. மொதல்ல அஜீர்நமாத்தேன் இருக்கும். ரெக்டிபை பண்ணாலும் அந்த வெடதேன் வரும்.

   S Murugesan said:
   June 1, 2011 at 4:24 am

   பாண்டி!
   ஆன்மீக தேடல்,செல்வம்னா ஆன்மீக தேடல்+ஆன்மீக செல்வம்னு அருத்தம். சுருக்கம் கருதி ஃப்ளோ கருதி எழுதறம்ல..

   ஜனன கால நிர்ணயம் குறித்த தங்கள் கருத்து தர்க பூர்வமானது.ஆனால்………..??????????

   கிருமி said:
   June 1, 2011 at 5:01 am

   //நைனா நம்ம கான்செப்ட் படி அந்தக்கொயந்த எப்ப ஒரு தனி சீவனா ஜீவிக்கோ அப்பதேன், அந்த நேரந்தேன் கரீட்டான நேரம். அதாவது ஒரு மண்ச சென்மமா அவதாரம் எடுக்குற அந்த பச்ச உசுரு எப்ப தனி உசுரா மூச்ச தொடங்குதோ அந்த நேரமே கரீட்டான நேரம். கத்திரிக்கோல வெச்சி தாய்க்கும் புள்ளைக்கும் உள்ள தொப்புள்கொடி ரெலேசன துண்டிச்சி புள்ள எப்ப மொத மூச்சு உடுறதுக்கு ரெடியாவுதோ அந்த நேரமே அந்தப்புல்லையின் சனன நேரம். நம்மக்கருத்த சனங்க ஏத்துக்க மாட்டாய்ங்க. மொதல்ல அஜீர்நமாத்தேன் இருக்கும். ரெக்டிபை பண்ணாலும் அந்த வெடதேன் வரும். //

   அய்யா, இதொண்ணும் புது கான்செப்ட் கிடையாது. முப்பது வருசத்துக்கு முன்னாடியே விவாதம் பண்ணி பல சோதிடர்கள், மருத்துவ சோதிடர்கள், சோதிட மருத்துவர்கள் ஏத்துக்கிட்ட ஒரு விசயம். மிகப்பல அனுபவசாலிகள் இதத்தான் இன்னிக்கு பின்பற்றிக்கிட்டு வர்றாங்க.

   Mani said:
   June 1, 2011 at 5:36 am

   க்க்கும் டவுசரு! இந்த பிட்டு பிட்டு பாயிண்ட்டுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஏதாச்சும் உருப்படியா சொல்லுவன்னு பார்த்தா பெரிசா பில்டப் கொடுத்துட்டு ஜகா வாங்கறியே. அதாவது உன்கிட்டயும் சரக்கு இருக்குன்னு சும்மாச்சும் அப்பப்ப வந்து ரவுசு உடற அதானே. இப்படி எங்க கோவத்த வாங்கிகட்டிக்காதே ஆமா சொல்லிபுட்டேன். மெதல்ல ரசிநி ஜாதகத்துக்குன்னு ஜகா வாங்கின அப்புறம் நைனா ஜாதகத்தை கணிக்கறன்னு பிட்டு பேப்பரை எல்லாம் ஷாட் போட்ட அப்புறம் என்னடான்னா புதுசு புதுசா ரவுசு காட்டறியே. ஒன்னு ஒழுங்கா எதாச்சும் எழுது இல்லாங்காட்டி பெசாம கருத்து மட்டும் சொல்லு. இப்படி எங்கள உசுப்பி விட்டுட்டு ரவுசு காட்ற வேலையெல்லாம் வேணாம் சொல்லிப்புட்டேன் ஆமா.

    டவுசர் பாண்டி said:
    June 2, 2011 at 3:56 am

    மணியண்ணே இந்த அவசர் யுகத்துல அல்லாத்துக்கும் அவசரம்தேன்.

    நைனா ஜாதகம் யோக ஜாதகம். அதனால அவிக அல்லாத்துக்கும் சாதகமாத்தேன் இருப்பாக. அப்டிபட்ட ஜாதகத்துல அவாள மிக்ஸ் பண்ணி “அவ”யோக ஜாதகமா மாத்திராதீங்கப்பூ. குரு நல்ல முறைல லக் கூட சேந்திருந்தா அந்த பார்ட்டியோட இலக்கு (goal) அல்லாமே LUCKதேன். இது அல்லாத்துக்கும் தெரியும் அப்டிதானே. குரு லக் கூட டீளின்க் வெச்சாலே நெறைய திருவிளையாடல் இருக்குந்க்னா. பின்ன அவசரத்துக்கு கைகுடுக்க வந்தாகனும்லா.

    அதுபோவ குருதேன் நைனாவுக்கு அதிர்ஷ்டசாளியும்கூட. யாரால வாங்கிக்கட்டுராகளோ அந்த பய்யிங்க்தேன் பெரிய சேல்ஸ் ஆகி லாபத்த கொட்டும். புரிலல்லா. எனக்கும்தேன். எதோ கீபோர்டுல கைய வெச்ச ஒடனே வர்ற மேட்டர்தேன். சரி வார்த்தால சொன்னா சரிப்படாது ஸ்னேப் போட்டாத்தேன் புரியும்னு நெனைக்கேன். நம்ம ஹென்றைட்டிங் நமக்கே புரியாது. சரி கண்ணு கேட்டுபோச்சுன்னா நம்மட்ட கேக்காதீங்கோ.சீக்கிரம் போட்டுர்தேன். அதுக்குள்ளார நமக்கு பில்ட்டப் பாண்டின்னு நாமம் போடுராதீங்கோ.

    மணியண்ணே, இம்புட்டு நல்ல சேதியா சொல்றீங்களே, ஒங்க சாதகத்த போடுன்கனே. அலசுவோம்.

    Mani said:
    June 2, 2011 at 5:36 am

    //////மணியண்ணே, இம்புட்டு நல்ல சேதியா சொல்றீங்களே, ஒங்க சாதகத்த போடுன்கனே. அலசுவோம்.////

    யப்பா பாண்டி ஆள வுடு. உங்கிட்ட ஏற்கனவே குடுத்த ஜாதகம் எல்லாம் நாறிகிட்டு இருக்கு. நீ என்னடான்னா நம்மளயே கிழிக்கலாம்ன்றியா. எந்த வைத்தியருகிட்டயவாவது போயி உனக்கு ஊசி போடறேன்னு சொன்னா நம்மள தொறத்தி விட்டற மாட்டான் அப்படிதேன் ஜோசியரும். எங்க ஜாதகத்தையெல்லாம் அக்கு வேற ஆணிவேறயா கழட்டி வீட்ல மாட்டி வச்சிருக்கோம்ல. எங்க வீக்னெஸ்லாம் வெளிய தெரியக்கூடாதுப்பா டவுசரு. அப்புறம் நம்ம கதை கந்தலாயிரும் வர்ட்டா.

    டவுசர் பாண்டி said:
    June 2, 2011 at 3:48 pm

    டவுசர் பாண்டி மணியண்ணே, என்னத்தனே பெரிய வீக்குநெச்சு. என்ட்ட இல்லாத வீக்நெசா ஒங்கள்ட்ட இருக்கபோவுது. என்னயமாதிரி ஒரு அயோக்கியன் இந்த ஒலகத்துலையே கெடயாது. அந்தளவுக்கு கீழ்த்தரமானவன் நான். ஒலகத்துல உள்ள அம்புட்டு கெட்ட பயக்கமும் நம்ம சட்டப்பைக்குல்லாரகீது. நான் தம்மடிப்பேன், தன்னியடிப்பேன், கஞ்சா அடிப்பேன், கை கால் ரெண்டையும் அடிப்பேன், சைட்டடிப்பேன், பதில் சொல்லலன்னா ஒங்களையும் அடிப்பேன் (சும்மா தமாசுக்கு). இவ்வளவும் என்னோட வீக்நெச்தேன். இதுக்கு மேலையா ஒங்கள்ட்ட வீக்கு இருக்கப்போவுது. சும்மா போடுன்கனே. நமக்குள்ள என்ன மானம் ரோஷம் வேஷம் வேண்டிக்கெடக்கு. சட்டுபுட்டுன்னு போட்டு ஓடைங்கனே.

    ஒங்களுக்கு செவ்வா வீக்கா (என்ன, எங்கயோ கேட்ட மாரிகீதா? நீங்க சொன்ன டயலாகுதேன். மறு ஒளிபரப்பாய்ட்டு. …. ரிப்பீட்டேய்)

    டவுசர் பாண்டி said:
    June 2, 2011 at 3:57 pm

    ஈகோ ஏதாச்சும் தடுத்துச்சினா கோன்னு சொல்லிப்பாருங்க. அப்புடியும் போவாம அடம்புடிச்சிசின்னா வேண்டாம்னே. வெக்கம் வந்தா வெல்கம்னு சொல்லாதீங்கோ.

    சாதகத்த போடணும்னு கட்டாயம் இல்லனே. உண்டான சாதகத்தையே கட்டங்கட்ட நேரங்கடிக்க மாட்டுக்கு. சும்மா கேட்டுப்பாத்தேன். அப்புறம் ஒங்க இஷ்டம். கஷ்டம்னு நெனச்சா நமக்கு நஷ்டம்தேன்.

  டவுசர் பாண்டி said:
  June 1, 2011 at 3:10 am

  ராசான்னே,

  சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. நமக்கும் ரசினிய புடிக்கும். ரசினி தம்பி ஆடுன ஆட்டத்துக்கு இப்ப ஒடம்புல உள்ள ஸ்பேர் பார்ட்ஸ ஒவ்வொன்னா மாத்திக்கினு இருக்காங்கோ. இந்த மாதிரி http://www.youtube.com/watch?v=XnBzv78vNEM எளிதிக்குடுத்தா நல்லா மூச்சுவுடாம பேசுவாரு. இப்ப அவரு போட்ட கணக்கெல்லாம் டேலியாகாம நெகடிவ் பேலன்ஸ் காட்டுதுனே. Be Calm படிச்சிக்கினு காமா இருந்துருக்கலாம். மேக்கொண்டு படிச்சலாதால……. நமக்கெதுக்கு வம்பு.

   S Murugesan said:
   June 1, 2011 at 4:22 am

   டவுசரு,
   இன்னைக்கு அமாவாசை .மேலும் வர்ர நாட்கள்ள வரிசையா கிரகணங்கள் வேற இருக்கு. ரஜினி பிறந்திருக்கிற சிம்ம லக்னத்துக்கு சூரியன் தானே அதிபதி? கிரகணம்னா என்ன? ராகுவோட கை ஓங்கறதுதானே ந்டக்கிறது ராகு தசை . சந்திர கிரகணம் கூட இருக்கு. தலைவருக்கு 6 ல சந்திரன். இவர்தான் கிட்னிக்கு அதிபதி. அல்லாரும் ஒழுங்கா ப்ரே பண்ணுங்கப்பா.

   ஒரு வேளை பழைய கசடுகள் எல்லாம் வடிகட்டப்பட்ட புது ரசினி கூட கிடைக்கலாமில்லையா?

    //ந்டக்கிறது ராகு தசை//

    நடக்கிறது சனி திசை தல

    //ஒரு வேளை பழைய கசடுகள் எல்லாம் வடிகட்டப்பட்ட புது ரசினி கூட கிடைக்கலாமில்லையா?//

    புது ரஜினி கிடைப்பார் என்பது தான் ரசிகர்களின் நம்பிக்கை…
    இவ்வளவு மருத்துவ வசதி வளர்ந்து விட்டது….இன்னும் என்ன சந்தேகம் தல 🙂

    S Murugesan said:
    June 1, 2011 at 12:38 pm

    த.கா.ராசா!
    நம்ம மைண்டு அம்மா ஜாதகத்துலயே ஃபிக்ஸ் ஆயிருச்சு போல.

   Let Us Watch டவுசர் 🙂

   இது நமக்கு ஒரு பாடம்…
   ஏன் நான் இதை சொல்லுறேனா …நாம நாளைக்கு வயசு ஆகி ..படுக்கைல்ல விழுந்ததுக்கு அப்புறம்….. நம்மள சுத்தி நாலு பேரு இப்படி தானே பேசுவாங்க…..
   ஆள் ஆளுக்கு ஒன்னு சொல்லுவாங்க….
   ம்…தேறாது நு ஒரு குரல் வரும்…
   ம்…இன்னிக்கோ நாளிக்கோ நு ஒரு குரல் வரும்
   ம்…நல்ல மனுஷன் நு ஒரு குரல் வரும்
   ம் ..நாற மனுசனு ஒரு குரல் வரும்
   ம்..அம்மாவாசை வரை தாக்கு பிடிக்குமா என்பார்கள்?

   ஜோதிடம் எல்லாம் மொக்கை ஆன்மிகம்
   நோய்,மரணத்தை கூர்ந்து கவனிப்பது தான் உண்மையான ஆன்மிகம் 🙂

  Sudharsan said:
  June 1, 2011 at 4:10 am

  Hai Murugesan sir,
  A person can learn astrology only if the planet BUDHAN is strong in his horoscope.He should also have the blessings of the planets SUN and GURU.These two planets indicate “ATMA BALAM” in a person’s horoscope.

   S Murugesan said:
   June 1, 2011 at 4:19 am

   சுதர்சன்!
   லேசா மாத்தி யோசிங்க . புதன் என்றால் லிங்கிங் திங்ஸ் – சூரியன்னா எதனோடும் (விதிகள்) கொலைட் ஆயிராம ஒட்டாம தனித்தன்மையோட ரோசிக்கிறது – குருன்னா ஞா சக்தி. இந்த கேரக்டரிஸ்டிக்ஸ் இந்த 3 கிரகங்களால தான் கிடைக்கும்னில்லை. இன்னபிற கிரகங்கள்,பாவங்களாலயும் கிட்டும்.

  R.Puratchimani said:
  June 1, 2011 at 12:03 pm

  //லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. //

  சார் ஆட்சி உச்சம் கூட விதிவிலக்கு கிடையாதா?

  //நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்//
  சார் ஆயிரத்துல ஒரு ஜோசியர்க்கு கூட இது தெரியுமானு சந்தேகம்தேன்.

  Ravi Sankar said:
  June 1, 2011 at 2:16 pm

  Murugesan Sir,

  Enakku sevva thosam irukkirathaa endru thayavuseithu solla mudiyuma.

  kadaka laknam, thulaamil sevva (siththirai natsathiram), in navamsam sevvaa is same place.

  please give me a reply. thanks.

   S Murugesan said:
   June 1, 2011 at 4:52 pm

   ரவிசங்கர் !
   ஜாதகத்தை தள்ளி விடுங்க. சொல்லிருவம்.

  உபயோகமான செய்திகள் சார் …

  நன்றி..

  Mani said:
  June 3, 2011 at 5:49 am

  ////சும்மா போடுன்கனே. நமக்குள்ள என்ன மானம் ரோஷம் வேஷம் வேண்டிக்கெடக்கு. சட்டுபுட்டுன்னு போட்டு ஓடைங்கனே./////

  வேணாம் டவுசரு நம்மள விட்ரு. இன்னுமும் அடம்புடிச்சினா அப்புறம் நீ ரஜினி அப்புறம் தம்ம தலை (அதான் உங்க நைனா) அவிக ஜாதகத்தை எல்லாம் அலசு. நீ அலசி சொல்ற விதத்தை வச்சிதான் உன்கிட்ட நம்ம டீடெயில சொல்லலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும். அதுவும் பொதுவில் சொல்ல மாட்டேன் மெயில் ஐ.டி. குடுத்தா அனுப்புறேன்.

  ////ஒங்களுக்கு செவ்வா வீக்கா (என்ன, எங்கயோ கேட்ட மாரிகீதா? நீங்க சொன்ன டயலாகுதேன். மறு ஒளிபரப்பாய்ட்டு. …. ரிப்பீட்டேய்)/////

  நீ பெரிய தில்லாலங்கடின்னு எனக்கு தெரியும்டி. என்ன நம்ம கையாலேயே என் வாய கிளறியா. நமக்கு சிம்மலக்னம் செவ்வாய் யாரு பெரிய்ய்ய யோகாதிபதி அவரு நம்மளுக்கு பவராகதான் இருக்கிறாரு (வர்க்கோத்தமம்) இப்பேர்பட்ட ஆளைப்போயி பயந்தாங்கொள்ளின்னு கணக்கு போடறியே.

  ரஜினி ரசிகன் said:
  June 3, 2011 at 8:28 am

  ///ரஜினி பிறந்திருக்கிற சிம்ம லக்னத்துக்கு சூரியன் தானே அதிபதி? கிரகணம்னா என்ன? ராகுவோட கை ஓங்கறதுதானே ந்டக்கிறது ராகு தசை . சந்திர கிரகணம் கூட இருக்கு. தலைவருக்கு 6 ல சந்திரன். இவர்தான் கிட்னிக்கு அதிபதி. அல்லாரும் ஒழுங்கா ப்ரே பண்ணுங்கப்பா////

  இங்கன கொஞ்சம் பாருங்களேன்.
  http://www.tamilleader.in/news/231-2011-05-27-09-46-22.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s