அஜால் குஜால் வேலைகள்:மனவியல் பார்வை

Posted on

அண்ணே வணக்கம்ணே,
“பெண்கள் வீட்டோட இருந்துர்ரது பெஸ்ட். வெளிய வந்தா அவளுக்கு சேஃப்டியே கிடையாது. குடும்பத்துக்கு ஃபைனான்சியல் அசிஸ்டன்ஸ் தரனும். பசங்களை பெட்டரா வளர்க்கனும் அது இதுன்னு பைத்தியக்காரத்தனமா வேலைக்கு வர்ரது முட்டாள் தனம்.”

இந்த ஸ்டேட்மென்டு நம்முது கிடையாதுங்கண்ணா.திருப்பதி டெப்போவை சேர்ந்த ஒரு பெண் கண்டக்டரோட ஸ்டேட்மெண்ட். கண்ட்ரோலர் பண்ண டார்ச்சருக்கு அந்தம்மா இப்படி ஒரு ஸ்டேட்மென்டை கொடுக்குது.

நமக்கு வழ வழ கொழா மேட்டர்லாம் பிடிக்காது. இந்த மேட்டர்ல நம்ம கருத்துக்களை பதிவு பண்ணியே ஆகனுங்கற வெறி வந்துருச்சுங்கண்ணா. இந்த ஸ்டேட்மென்ட் ஏதோ அரையணா பேப்பர்ல எட்டாம் பக்கத்துல துணுக்கு செய்தியா வரலிங்கண்ணா ஏறக்குறைய எல்லா சேனல்லயும் மறுபடி மறுபடி போட்டு காட்டிக்கிட்டே இருந்தானுக.

இந்த மேட்டர்ல நம்ம கருத்துக்கள்:

1.மன்சனுக்குள்ளே இருக்கிறது ஒரே பவர்.அது செக்ஸ் பவர். மேலே போனா யோகிக் பவர். கீழே வந்தா செக்ஸ் பவர்.

2.இந்திய நாடு என் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதிரிகள் “அதை” அல்ப்ப சங்கியைக்கு மட்டும் உபயோகிக்கனும் இல்லாட்டி அறுத்துருவம்னா உலக ப்ளேடு கம்பெனிகள் தயாரிக்கும் எல்லா ப்ளேடும் இந்தியாவுக்கே தேவைப்படும்.

3. செக்ஸ்ல பிறந்த பிக்காலியை ஒனக்கு செக்ஸ் கிடையாதுன்னா வேலைக்காகாது.

4.ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை கொடுத்திருக்கிற ஆணைகள் ரெண்டே 1.உயிர் வாழ்தல் 2.பரவுதல் . இதுல மொத பாய்ண்டை ஃபாலோ பண்றாய்ங்களோ இல்லையோ (சாலை விபத்துக்களை பாருங்க) ரெண்டாவதை மட்டும் செய்யறாய்ங்க. தாளி பரவறதுக்கு எத்தனையோ வழியிருக்கு. ஆனால் செக்ஸை மட்டும் பிடிச்சு கட்டி மாரடிக்கிறாய்ங்க

5.என்னதான் இயற்கைக்கு புறம்பா கண்ணால அமைப்பை ஏற்படுத்தி பொஞ்சாதிங்களை விட்டு டார்ச்சர் பண்ணி அவனோட ஆண்மையை சிதைச்சு சீரழிச்சாலும் இயற்கை தன் வேலைய கரீட்டா செய்யுது.
மவனே இதான் மேட்டரு.. நீ உடனே வேலிக்கு அந்தாண்டை குதிச்சுரு. நீ ஆண்மையின் சிகரம்டானு இஞ்செக்ட் பண்ணுது.

6.மேலும் மேற்சொன்ன கண்ட்ரோலர்லாம் தன் ஆண்மையில் குறைவு -சந்தேகம் உள்ள பார்ட்டி. இந்த மாதிரி கிராக்கிங்கதான் ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன கதையா வக்கிரங்களை வளர்த்துக்கிறாய்ங்க.

7.உயிருக்கு மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா. அதுலருந்து தான் அல்லாரும் பிரிஞ்சு வந்தொம். ஓருயிர் ஓருடலா இருந்த “அற்புத நிலையை” மீண்டும் பெற இந்த உடல்தான் தடைங்கற ஃபோபியால உடலை உதிர்க்க தவிக்கிறோம். அதனாலதான் ஒவ்வொரு மன்சனுக்குள்ளயும் கொல்லும் -கொல்லப்படும் இச்சை இருக்கு. இது செக்ஸ்ல பக்காவா நிறைவேறுது. இதனாலதேன் மன்சன் செக்ஸுக்கு அலையுதான்.

8.மேலும் பிரிந்த உயிர்களோட இணையும் /தொடர்பு கொள்ளும் சப் கான்ஷியல் முயற்சித்தேன் செக்ஸ்

9.பையன் தாயை தேடறான் – பெண் தந்தைய தேடறாள். காதல்ல இதெல்லாம் சாத்தியமே இல்லை. ரெண்டுமே அரை டிக்கெட்டுதேன்.

10.நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் தான் வன்முறையா வெடிக்குதுங்கறாய்ங்க.

11.நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கொண்ட ஆண்,பெண் எல்லாம் டைம் பாம் மாதிரி. எப்ப வெடிப்பாய்ங்கன்னே தெரியாது.

12.பெண்ணை பொருத்தவரை இயற்கையின் தூண்டுதலால செக்ஸ் மேல நாட்டம் இருக்கலாம். அது முதல் அனுபவம் வரைதான். தாளி குஷ்பூ இட்லி பரிமார்ரேன்னுட்டு இத்துனூண்டு கப்புல அரை கரண்டி சாம்பார்ல மாத்திரை கணக்கா இட்லியை போட்டு இதான் குஷ்பூ இட்லின்னா ‘ங்கொய்யால இதை தின்னு வாயை ,வவுத்தை கெடுத்துக்கறதை விட சொம்மா இருக்கலாம்ங்கற முடிவுக்கு பெண் வந்துர்ரா.

13.ஆணை பொருத்தவரை அன்னைக்குத்தான் அப்படி மத்தபடி நான் ஆண்பிள்ளை சிங்கமாக்கும், நேத்துதான் அப்படி – நாளைக்கு நான் மதன காமராஜன் – இவள் சரியில்லை -இவளை பார்த்தாலே சர்வம் ஒடுங்கி போகுது மாதிரி சால்ஜாப்பு சக்கரவர்த்தியா இருக்கான்.

14.இதுக்கு காரணம் இல்லாம போகலை. மாறிய வாழ்க்கை சூழல் காரணமா ஒடுங்கி போற வயசு வந்தால் தவிர கண்ணாலம் கிண்ணாலம்லாம் நை. அதுவரை தன் கையே தனக்குதவின்னு வாழுதான். உச்சத்தை தள்ளிப்போட வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் கில்ட்டி,ரகசியம் காத்தாகவேண்டிய அவசியம், அசூயையான சூழல் காரணமா சட்டு புட்டுனு முடிக்கவேண்டிய அவசியம். இதெல்லாம் சேர்ந்து அவனை துரிதஸ்கலித கேஸாக்கிருது.

காரணங்கள் எல்லாம் ஓகே. அதுக்காக எவனோ பெத்த பெண்ணையும், எவனோட பொஞ்சாதியையோ கூப்ட சொல்லுதா? அதுக்கு தன் சாதி, பணம், பதவி,பவிசு ,அதிகாரம் எல்லாத்தையும் உபயோகிக்க சொல்லுதா?

ஒன்னை விட ஒசந்த சாதி, ஒன்னை விட அதிக பணம், பவர் ஃபுல்லான பதவி,அதிகாரம் உள்ளவன் உன் பொஞ்சாதிய,உன் பொண்ணை கூப்டா தாங்குவியா?

ங்கொய்யால ஆணினமே ஆடிப்போயிருக்கு. கடைக்காலே ஆட்டம் கண்டாச்சு. சுய இன்பம், கட்டுப்பாடில்லாத செக்ஸ், மினிமம் ஹெல்த் ரூல்ஸ் கூட ஃபாலோ பண்ணாம பீடி,சிகரட் , பான்,பீடா ,ஜரிதா,டாஸ்மாக்,வெட்டு குத்து கொலை,கிரைம், உதவாக்கரை அரசியல்,கிரிக்கெட்டு,ஷேர் மார்க்கெட்டுன்னு நாசமா போயாச்சு. இன்னைக்கு பேர்பாதி குடும்பங்கள் ரன் ஆறதே தாய்குலத்தோட சம்பாதனையிலதான்.

கொஞ்ச நாள் போனா இவிகளுக்கு ட்ரைவிங் லைசென்ஸ் கூட தரமாட்டாய்ங்க.இப்பமே அனேக தொழில்,உத்யோக,வியாபார விளம்பரங்கள்ல பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்னு வர்ரதை கவனிக்கிறிங்களா?

இத்தீனி காலம் நீங்க தானே அரசாண்டிங்க. அட பெண்ணே ஆண்டிருந்தாலும் அவளை பின்னால இருந்து ஆண்டது நீங்கதானே ? என்னத்தை கிழிச்சிங்க? போர் போர் ! வெற்றி வேல் வீரவேல்னுட்டு கும்பல் கும்பலா செத்திங்க. உங்க தப்பான முடிவுகளுக்கு தாய்குலம் பலியாச்சு.

இதெல்லாம் அவிகளுக்கு தெரியாதுன்னுட்டு கெத்தா திரியறிங்க. அல்லாம் தெரியும் ராசா. நான் பார்க்கிறேனே.பல ஃபேமிலிஸ்ல “மவனே ஆடறவரை ஆடு”ன்னு விட்டுட்டு வேக்குவம் தீர்ந்ததும் தாளி ஒரு அரையணா நியூஸ் பேப்பரையும் , டிவி ரிமோட்டையும் கொடுத்துட்டு மதுரை ஆட்சிதேன்.

அட .. அவளும் இருப்பாடா. ஒண்டியா சமாளிக்கிற நிலையில நீங்க இல்லை. அவள் வந்துதான் ஆகனும். இல்லாட்டி வண்டி ஓடாது. ( அட ஒரு செல்ஃபோனை கழட்டி உள்ளாற இருந்து ஒரு பார்ட்டை இடுக்கியில எடுக்கிறதுக்குள்ள தாளி கை அந்த ஆட்டம் போடுது)

நம்ம இனத்துல எப்படி எல்லா டைப்பும் இருக்கோ அப்படியே பெண்ணினத்துலயும் இருக்கு. ப்ராக்ட்டிக்கல்ஸ்ல ஒரு மார்க் கூடவேணும்னு லெக்சரரை உரசி சூடேத்தற கிராக்கியும் இருக்கு. இல்லேங்கலை. ராத்திரி சென்ட்ரி ட்யூட்டி கூடாதுன்னு ஏட்டோட லாட்ஜுல ட்யூட்டி பார்க்கிற பார்ட்டியும் இருக்கு.

ஒனக்கு யூரின் டேங்க் நிறைஞ்சு போச்சுன்னு போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல விட்டுருவியா? குட்டிச்சுவரையும், மூத்திர சந்தையும் தேடிக்கிட்டு போகலை. விந்துப்பையும் அப்படியாகொத்ததுதான்.

ஒனக்கு கழிய இடமில்லேன்னா பொதுக்கழிவறை கேட்டு ஃபைட் பண்ணு. ஐ மீன் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்.

எனக்கு தெரிஞ்சு சாஃப்ட் வேர் இஞ்சினீர்களும் – சைக்காலஜிஸ்டுகளும் சேர்ந்து ஒரு சாஃப்ட் வேரை தயாரிக்கனும். அது ஒவ்வொரு ஆணையும் அட்லீஸ்ட் பெண்களோட இணைந்து பணி புரியும் நிலையில் இருக்கும் ஆணையும் டெஸ்ட் பண்ணி ஓகே பண்ணாத்தான் ஆஃபீஸ் உள்ளவே பர்மிட் பண்ணனும்.அதுலயும் அன் மேரீட்,மனைவிய பிரிஞ்சு வாழறவனெல்லாம் கட்டாயம் இந்த டெஸ்ட் எடுத்தே ஆகனும்.அதுவும் தினம் தினம்.

Advertisements

9 thoughts on “அஜால் குஜால் வேலைகள்:மனவியல் பார்வை

  டவுசர் பாண்டி said:
  May 31, 2011 at 2:50 am

  பதிவு சூப்பர் நைனா.

  sugumarje said:
  May 31, 2011 at 5:11 am

  நறுக், நறுக், நறுக்

  நியாயமான, அனல் கக்கும் வார்த்தைகள்… உண்மைதான்… போய் சேரவேண்டியவங்களுக்கு சேரனும்.

   S Murugesan said:
   May 31, 2011 at 6:50 am

   ராசா!
   பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்னு பதிவோட தலைப்பையும் தரணுமில்லா.. தூள் பதிவு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s