கொம்பர்களும் சும்பர்களும் -ஆஃப் பாய்ல் ஆய்வு

Posted on

பதிவர் :தனி காட்டு ராஜா

ஜாதகம் பாக்குறேன் பேரு வழின்னு ஊர் உலகத்துள்ள உள்ள எல்லா ஆளுகளையும் கிழி கிழி-நு கிழிச்சு (நம்ம சூப்பர் ஸ்டார் உட்பட) இந்த மனுஷன் (அதுதாங்க நம்ம தல முருகேசன்) பண்ணுற அலும்பு தாங்க முடியல… 🙂

இவர் ஜாதகத்தோட போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ட அரை வேக்காட்டு முறைபடி ரெடி பண்ணிபோடுவோம். நம்ம பங்குக்கு இவர ஒரு கிழி கிழிப்போம்..

இவரோட நிர்வாண உண்மைகள் கில்மா பதிவுகள் ஒன்னு விடாம படித்தவன் (அரசியல் பதிவுகள் தவிர) என்ற முறையில் இவரோட வாழ்க்கை வரலாறு நமக்கு அத்துபடி..ஹி..ஹி 🙂

போன ஜென்மத்துள்ள இந்த ஆத்மா கேது திசை தொடக்கத்துள்ள உயிரை விட்டு இருக்கிறது..அப்போது தான் ஞான தேடல் கொஞ்சம் தீவிரமாக ஆரம்பம் ஆகி இருக்கலாம்.

சரி…இந்த ஜென்மதுள்ள நீ கிழிச்சது போதும் என்று காலன் இவரை ( அந்த ஆத்மாவை… இந்த ஜென்மத்து சித்தூர் முருகேசனை.)மகம் நட்சத்திரத்தில் அள்ளி போட்டு கொண்டு போயி இருப்பான் 🙂

இவர் ஆத்மா நிலையில் இருந்த போது “தாளி 🙂 இந்த ஜென்மத்துள்ள முக்தி பெற்று விட வேண்டும்” என தீர்மானித்து கொண்டு விட்ட குறை தொட்ட குறையாக மீண்டும் மகம் நட்சத்திரத்தில் ஜெனனம் செய்து உள்ளார்.

முக்தி என்ன அவ்வளவு சாதரணமா என்ன??
ஆசையை(காமம்) கடக்க வேண்டும்….கர்மா அனைத்தும் கடக்க வேண்டும்.

ஏறக்குறைய ஆறு வயதில் ஆரம்பித்து இருபத்து ஆறு வயதில் முடிந்த சுக்கிர திசையில் காம களியாட்டம் அனைத்தும் போட்டு விட்டார்.சுக்கிரன் அம்சத்தில் ஆட்சி பலம் வேறு.அதன் விளைவு தான் நிர்வாண உண்மைகள் என்ற தளமே 🙂

அதாவது முக்தியின் ஒரு பகுதியான காமத்தை அனுபவித்து ஆயிற்று.
அடுத்து கர்மாவை கரைக்க வேண்டும்..

அரைவேக்காடு முறைப்படி திருமணதிற்கு பின்பு அல்லது 30 வயதுக்கு பின்பு அம்சத்தை பார்த்து பலன் சொல்லுவது அம்சமாக பொருந்தும்.

அம்சத்தில் குரு,சூரியன்.
சூரியன் திசை இவருக்கு ஏறக்குறைய 27 -ல். சூரியன் மகர (அம்ச) லக்கணத்துக்கு 8 -க்கு உடையவனாய் இவருக்கு லக்கினத்தில் …பெரியதாக தொழில் எதுவும் இவருக்கு செட் ஆகவில்லை.இதில் அடிக்கடி வாயை கொடுத்து அரசியல் மோதல் வேறு.அப்புறம் எப்போ பாரு …உலகத்தையே திருத்தறதா நினைச்சுக்கிட்டு ஆபரேஷன் 2000 நு சொல்லிக்கிட்டு கடிதம் வேறு…[ தல….கோவுசுக்காதீங்க…..உங்க ஆபரேஷன் 2000 எனக்கு பிடிக்கும் …ஆனால் நான் சொல்லுவது …கிரக தூண்டல் ,உங்கள் செயல்பாடு ,அதனால் சமுக மன நிலை, அரசியல் வாதிகள் சப்போர்ட் போன்றவற்றை..].

குரு 3,12 க்கு உடையவனாய் 1 -ல்.பெரும்பாலும் மோசமான கிரகம் கூட திரிகோண பலம் பெற்றால் பெரிதாக நன்மையை செய்யாவிடினும் கெடுதலை செய்யாது.குரு நீசம் என்பதால் ,3,12 குடைவன் நீசம் …குரு மறைவதால்….குருவால் ஏற்படும் கெடுதல் பெரியதாக இவரை பாதிக்காது.[“அவா” விமர்சனம்]

12,8 குடைய குரு,சூரியன் லக்கினத்தில் .இது சிவ யோகம்.இதுக்கு உறுதுணை செய்வது போல 12-ல் கேது +சனி.பொதுவாக கேது +சனி சேர்க்கை குண்டலினி சக்தி ஆக்னா சக்கிர தூண்டலை குறிக்கும்.
இவர் ஜாதகமே முக்தி யோக ஜாதகம்.

சுக்கிர திசைக்கு அடுத்த சூரிய திசையில் சூரியன் இவரை படுக்க போட்டு அடித்து உள்ளான்.[ சொம்மா தமாசு 🙂 பின்னே…கரி துண்டு எப்படி வைரம் ஆக்க முடியும்?]

அடுத்த சந்திர திசையில் 7 குரிய சந்திரன் 4 -ல். மனைவி வழி நன்மைகள் கிடைத்து இருக்கலாம். இவரை இவர் மனைவி பொருத்து கொண்டு இருப்பதே மிக பெரிய நன்மை தான் 🙂 பின்ன நீங்களே சொல்லுங்க …ஒரு பொண்ண சீரியல் பார்ப்பது பைத்தியகார தனம் என்றால் எந்த பெண்தான் பொருத்து கொள்ளுவார் ..ஹா ஹா 🙂

சந்திர திசை ஏற்ற இறக்க பலனை ( 12 நாள் உண்ணா விரதம் ….அதே சமயம் மாலை மரியாதை) போன்றவற்றை தந்து இருக்கிறது.

தற்சமயம் செவ்வாய் தசை.4,11 குரிய வன் இரண்டில்….ஜோதிட வழி தொழில் அமோகமாக சென்று கொண்டு உள்ளது.[செவ்வாய் -11 -பாதகாதிபதி வேறு..கொஞ்சம் ஜாக்கிரதை தல..]

கடக லக்கினம், சுக்கிர பலம் ,ராகு பலம் போன்றவற்றால் இவருக்கு சக்தி யோகமும் கை கூடி வந்து உள்ளது.

அடுத்து வருவது ராகு திசை…ராகு 6 -ல் இருந்து திசை நடத்துவதால் …12 இல் கேது சனி….இவருக்கு ஆன்ம வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம்.முயற்சி செய்தால் ஜீவன் முக்தி(அது தாங்க வாழும் போதே முக்தி ) கூட கிடைக்கலாம்.

ஆபரேஷன் 2000 நிறைவேறுமா என்றால் ராகு திசையில் “ஆத்தா” அருளாலால் இவர் திட்டங்கள் அரசாங்கத்தால் ஏற்று கொள்ள படலாம்.
இவர் ஜாதகத்தில் சனி (லக்னாதிபதி, கர்ம காரகன் மறைந்து முக்தியை குறிப்பதால் ) , 3 குரிய குரு நீசம் பெறுவதால் இவர் வெறுமனே பார்த்த சாரதி வேலை (பகவத் கீதை கிருஷ்ணன் வேலை ) செய்வது மட்டும் நல்லது..

இது வெறும் அரை வேக்காட்டு பலன் மட்டுமே.. நாளை எனக்கு என்ன நடக்கும் என்பதை நானே அறியேன்
அனைத்தும் சிவன் சித்தம்…[ எனக்கோ நமிதா மீது பித்தம் ..ஹா ஹா 🙂 ]

பின் குறிப்பு : அரைவேக்காட்டு முறை படி யோக ஜாதகம் எல்லாம் யோகம் இல்லை. யோகம் கர்மாவை அதிக படுத்த வாய்ப்பு அதிகபடுத்தும்.
பாவ ஜாதகம் எல்லாம் பாவமும் இல்லை.பாவம் கர்மாவை கரைக்கும் வழியை காட்டும் .

குரு உச்சம் பெற்றவன் கொம்பனும் அல்ல…நீச்சம் பெற்றவன் சும்பனும் அல்ல..

[[தல… நான் உங்க கடக லக்கினம், குரு உச்சம் அதை பத்திதான் மறை முகமா சொல்லுறானு நெனைச்சு காதீங்க …பொதுவா சொன்னேன் …ஹி ஹி 🙂 ]]

என்ன செய்ய நமிதாவும் ஒரு நாள் கிழவி ஆவாள்..ஹி ஹி 🙂 🙂

தல எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் ….ஏனா இவரு ரொம்ப நல்லவர் மட்டும் அல்ல …. ஆத்மா பலம் ஜாஸ்தி …. இல்லைனா இந்தியாவுக்கே ஆபரேஷன் 2000-நு ஒரு திட்டத்த சொல்லுவாரா…முடிஞ்சா மறு மொழில தலை ஜாதகத்தை கிழிங்க. 🙂

Advertisements

22 thoughts on “கொம்பர்களும் சும்பர்களும் -ஆஃப் பாய்ல் ஆய்வு

  டவுசர் பாண்டி said:
  May 31, 2011 at 2:48 am

  ராசான்னே,

  நல்ல அலசல். அம்சத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்றத ஒங்களோட பதிவ படிச்சாப்பொரவுதேன் தெரியுது.

  நம்ம கணிப்ப ஆரும் ஏத்துக்க மாட்டுக்காங்கனே. கஷ்டமாருக்கு. அல்லாரும் ஒரு சாதகத்துக்கு பலன் சொள்ளச்சில ரெண்டுக்குரியவன் பத்துக்குரியவன்னு லாந்க் டிச்டன்சுலருந்தே பலன் சொல்லிட்டு போய்டுறாங்க.

  இப்ப உதாரணதுக்கு நைனா சாதகத்துல செல கெரகம் இருக்குற ஊட்டுக்கும் அதுக்கும் சம்மந்தமே கெடயாது. நம்ம ஊட்டு மொட்ட மாடி சொவத்துல நின்னு எட்டி பாக்கும்போது நம்ம நெழலு பக்கத்து ஊட்டுல உளும்லா அது மாறி இருக்குது.

  நம்ம நிழல்தான் அடுத்த ஊட்டுல இருக்குமே தவிர நம்ம இருக்குற பாடி இங்கனதானே இருக்கு. செல கெரக அந்த ஊட்டுல இருக்குற மாரிதேன் இருக்கும். ஆனா அங்கன இருக்காது.அதாவது அந்த ஊட்டுக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்காது!

  எப்புடி? உதாரணத்துக்கு நைனா சாதகத்துல சந்திரன் மற்றும் மத்த கெரகங்கள பாருங்க. கொலப்புதா? அப்டின்னா நம்ம ஸ்னேப்புல உள்ள ராசி கட்டத்த பாருங்கோ. ஒன்ன நம்பர் ஊட்டுக்கு ஒன்னுலருந்து முப்பதடி தூரந்தேன் இல்லன்னு முடிவு பண்ணிடுறாங்க.

  ரெண்டா நம்பர் ஊடுன்னா முப்பத்தொன்னுலருந்து அறுவது ……….இப்புடியே மேலோட்டமா பாத்தே பலன்கல அடிக்கிடுராங்கோ. சரி அது போவட்டும். இதுக்குத்தேன் பாவச்சக்கரம் போட்டு பாக்கணும். கம்பீட்டரு சாதகத்த கொற சொல்றேன்னு நெனைக்காதீங்கோ. அடியேனும் ஒரு காலத்துல கம்பீட்டர தலைல வச்சி கொண்டாடுன டிக்கட்டுதேன்.

  பொறவு லக்குனம் அது இதுன்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்புல காட்டுன ஒடனே கம்பீட்டருக்கு பெருசா ஒரு கும்புடு போட்டு வெலகிட்டேன். மன்சன் மூளையே பவர்புல் இது நம்ம கான்செப்ட். சரி.

  டவுசர் பாண்டி said:
  May 31, 2011 at 3:52 am

  ராசான்னே,
  நீங்க ஒரு கொஸ்டின் கேட்டுருக்கிரீங்க மைண்டுலருக்கு. நாளும் கோளும் வரும்போது கோள்சொல்றேன். சரியா. ரசினிய சிங்கப்பூரு கொண்டுப்போனாலும் சித்தூருக்கு கொண்டுப்போனாலும் பாடி பீடிதேன். அதாவது மனுஷன் புண்பட்ட நெஞ்ச பொக விட்டு ஓவரா ஆத்திட்டாறு. ரசினி நல்லாருக்கனும்னு எல்லாரும் வேண்டிக்குவோம். நீங்க பாவக்கணக்கு போட பழகிட்டீங்கன்னா இப்புடி கோள்சொல்ரவுகல்ட தாங்க/தொங்க வேண்டியதில்ல. அல்லாமே ஓங்க வெரலுக்கு வந்துரும்.

  கோள்கள் புல்லா ஒங்களுக்கு கோள்சொல்ல ஹெல்ப் பண்ணும். இந்த மாறி சொல்லும்போது கெரக சாபங்கள் ஒரு கிளுகிளுப்ப உண்டாக்கும். அதுக்குதேன் ஒங்களோட குல அல்லது பேவரிட் சேன்ட்டிங்க சேன் ட் பண்ணுங்கோ டெய்லி. ஸ்பேர் பார்ட்ஸ புல்லா சேன்ஜ் பண்ணாலும் மன்சன் தலைஎழுத்த சேன்ஜ் பண்ண எந்த டாக்டராளையும் முடியாதுங்க்னா.

  ரசினி சாதகத்த மேலோட்டமா பாத்தீங்கன்னா தீர்க்காயிசுன்னு நெத்தியடியா சொல்லிருவீங்க. ரசினிக்குல்ல ராசி நட்சத்திரம் யோகம் தாகம் போகம் அல்லாமே நமக்கும் மேட்சாகும். இப்புடித்தேன் சாய்பாபா மேட்டருல நம்ம கணிப்ப சொல்லும்போது நம்மள சனங்க பைத்தியக்கார லிஸ்ட்டுல வெச்சாங்கோ. இப்ப ஆரு பைத்தியம்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  அவருக்கு பிறக்கும் பொழுதே தீர்க்காயிசுன்னு கணிச்சதால உயிலு, சொத்து பத்துக்கள கூட என்ன பண்ணனும்னு டிசைட் பண்ணாம உட்டுட்டாங்கோ. அதான் இன்னும்காலந்கேடக்கேன்னு ஒரு அசால்ட். அதுபோவ கைய தூக்குன திருநீறு வருது காலத்தூக்குனா தங்கம் வருதுன்னு சனங்க குறிப்பா அந்த பத்திரிக்ககார மகராசங்க சீரணிக்க மருத்துட்டாய்ங்க. சரி நல்லாருக்கட்டும்.

  நான் ஏன் செல இரகசியங்கள போட மாட்டுக்கேன்னா இப்ப உள்ள சனங்க (என்னையும் சேத்துதேன்) அறிவுப்பசி மிகுந்தவர்கள். கெடச்சத வச்சி டெவலப் பண்ண மாட்டேன்றாங்கோ. பில்டப்ப்தேன் பண்றாங்க. எந்த ரகசியத்தையும் கொஞ்சன்கொஞ்சமா அவுத்து உட்டாத்தேன் மவுசு இருக்கும் என்ற கருத்த நம்மளோட மொத ஒப்பெநின்க்லையே தெரிஞ்சிட்டேன். பழைய பதிவுல பாருங்கோ.

  சொசியக்காரவுக கூடப்பொரந்தவுகள கரீட்டா சொல்ற டெக்னிக்க அவுத்து உட்ருப்பேன். அத நான் பப்ளிக்கா சொன்னாப்பொரவு அல்லாரும் எனுக்கும் தெரியும், நானும் கொடி கட்டிருக்கேன் கோவணம் கட்டிருக்கேன்னு முண்டா தட்டி சொல்றாங்கோ. அப்ப ஏன் மிந்தியே நாலு சனங்களுக்கு தெரியப்படுத்திருக்கலாமே. காரணம்…. தொழில் ரவசியம்னு நெனிக்கிறேன்.

  நான் ஒரு நிமிஷம் ஆச்சரியப்பட்டேன். இன்னாங்கடா இது சனங்க அல்லாத்தையும் தெரிஞ்சிக்கிநேதேன் பிலிம் காட்ராங்கலான்னு. நானு மொதல்ல அந்த மேட்டர கண்டுபுடிக்க ரொம்ப தெனருனேன். ஆனா அத ஈசியா நம்ம சனங்க தூசுமான்னு சொன்ன ஒடனே ஷாகக்காயட்டேன்.

  ஆகா எந்த ரகசியத்தையும் நமீதா தாயி மாறி கொஞ்சம் கொஞ்சமா ஸீன் காட்டுனாத்தேன் சனங்க ரசிப்பாங்க போலன்னு நென்ச்சேன். அல்லாத்துக்கும் நமீதாக்கு என்னருக்குன்னு எப்பயோ கற்பனைல முழுசா பாத்துருப்பாங்க. ஆனாலும் அந்த சின்ன வெலகளுக்காண்டியும் அந்த கறி….சாரி ..மஷ்ஷிளுக்காண்டியும் ஏங்குறாங்க. இதுதான் ஒலகம். இதுதான் வாழ்க்கை.

  sugumarje said:
  May 31, 2011 at 4:56 am

  //அரைவேக்காட்டு முறை படி யோக ஜாதகம் எல்லாம் யோகம் இல்லை. யோகம் கர்மாவை அதிக படுத்த வாய்ப்பு அதிகபடுத்தும்.பாவ ஜாதகம் எல்லாம் பாவமும் இல்லை.பாவம் கர்மாவை கரைக்கும் வழியை காட்டும் .//
  ங்கப்பா! அரைவேக்காடு மெத்தட்ஸ் தூள் கிளப்பும் போல இருக்கே! எல்லாம், நம்ம டவுசர் சொன்னாப்போல திருநெல்வேலிக்கே அல்வா தருவாங்க போல இருக்கே 🙂
  வாழ்த்துக்கள் அரைவேக்காடு…

  இந்த அம்சம் பார்க்கிறது, கிரக நிலை, கிரகத்தின் செயல் திறனை முழுமை செய்யும் என்பது உண்மைதான் 🙂

  இதோடு இன்னொரு விசயம்… பாவசக்கரம், அந்த ஜாதகனை இன்னும் முழுமையாக சொல்கிறது… (ரகசியத்தை சொல்லிட்டேன்பா…யார்கிட்டயும் சொல்லிடாதீங்க… 🙂 )

   S Murugesan said:
   May 31, 2011 at 6:56 am

   வாங்க சுகுமார்ஜீ !
   நீங்களும் பாவ சக்கரத்துக்கு வந்துட்டிங்களா? என்.டி.ஆர் படத்துல ஒரு தூள் டயலாக் உண்டு “எவரு ஏ தாரிலொக்கி வெள்ளினா சிவரிக்கி ராவலசிந்தி மா தார்லோக்கே”

   பொருள்: யாரு எந்த வழியில போனாலும் கடைசியில வர வேண்டியது எங்க வழிக்குத்தான்”

  sugumarje said:
  May 31, 2011 at 4:59 am

  //ஆகா எந்த ரகசியத்தையும் நமீதா தாயி மாறி கொஞ்சம் கொஞ்சமா ஸீன் காட்டுனாத்தேன் சனங்க ரசிப்பாங்க போலன்னு நென்ச்சேன். அல்லாத்துக்கும் நமீதாக்கு என்னருக்குன்னு எப்பயோ கற்பனைல முழுசா பாத்துருப்பாங்க. ஆனாலும் அந்த சின்ன வெலகளுக்காண்டியும் அந்த கறி….சாரி ..மஷ்ஷிளுக்காண்டியும் ஏங்குறாங்க. இதுதான் ஒலகம். இதுதான் வாழ்க்கை//

  ஆகா. டவுசரு பாண்டி… தத்துவ பாண்டி ஆகிறாரா?

  நீயே சொல்லு டவுசரு… முழுசா பார்த்துட்டா, திரும்ப பார்ப்பியா? சரக்கு அவ்வளவுதான்னு அடுத்து பார்க்க போய்ருவேல்ல?!

  //ஆகா எந்த ரகசியத்தையும் நமீதா தாயி மாறி கொஞ்சம் கொஞ்சமா ஸீன் காட்டுனாத்தேன் சனங்க ரசிப்பாங்க போலன்னு நென்ச்சேன்.//

  🙂

  //நாளும் கோளும் வரும்போது கோள்சொல்றேன். சரியா//

  சரிங்க டவுசர்…

  ////ரசினிய சிங்கப்பூரு கொண்டுப்போனாலும் சித்தூருக்கு கொண்டுப்போனாலும் பாடி பீடிதேன். அதாவது மனுஷன் புண்பட்ட நெஞ்ச பொக விட்டு ஓவரா ஆத்திட்டாறு. ரசினி நல்லாருக்கனும்னு எல்லாரும் வேண்டிக்குவோம்.////

  ரஜினிக்கு இப்போது 60 வயது…..ஒரு மனுஷன் உச்ச கட்டமா எதை எதை அனுபவிக்கனுமோ அதை எல்லாம் அனுபவித்து வாழ்ந்தவர்…
  இனி மேல் அவர் திரும்பி வந்தாலும் இன்னும் ஒரு 15 வருடங்கள் வாழ்வார ?
  அதிரடியாய்,கம்பீரமாய் வாழ்ந்தவர் …அதிரடியாய் போய் சேர்ந்தாலும் என்னை பொருதவரை சந்தோசமே…
  அவரை நோன்ஜானாய் பார்ப்பது தான் கஷ்டம்..
  சிவன் சித்தம் 🙂

  //இதோடு இன்னொரு விசயம்… பாவசக்கரம், அந்த ஜாதகனை இன்னும் முழுமையாக சொல்கிறது… (ரகசியத்தை சொல்லிட்டேன்பா…யார்கிட்டயும் சொல்லிடாதீங்க…//

  அப்படியா சேதி …
  ஜி ..அப்படினா நீங்க பாவ சக்கரத்த பத்தி ஒரு பதிவு போடுங்களேன்…ரகசியத்த போட்டு உடைங்க 🙂

  //அப்டின்னா நம்ம ஸ்னேப்புல உள்ள ராசி கட்டத்த பாருங்கோ. ஒன்ன நம்பர் ஊட்டுக்கு ஒன்னுலருந்து முப்பதடி தூரந்தேன் இல்லன்னு முடிவு பண்ணிடுறாங்க. ரெண்டா நம்பர் ஊடுன்னா முப்பத்தொன்னுலருந்து அறுவது ……….இப்புடியே மேலோட்டமா பாத்தே பலன்கல அடிக்கிடுராங்கோ. சரி அது போவட்டும்.//
  ஆமாங்க டவுசர் …நானும் இதை பத்தி யோசித்து இருக்கேன்……
  உதாரணத்துக்கு மேஷ லக்கணம் 25 டிகிரி -ல் ஒரு ஜாதகன் பிறக்கிறான் என்று வைத்து கொள்ளவோம்…அப்படி பார்த்தால்…..லக்கினம் என்பது மேஷம் 25 முதல் ரிசபம் 55 வரை அல்லவா வரும்?

  // இதுக்குத்தேன் பாவச்சக்கரம் போட்டு பாக்கணும்//
  இதை பத்தி கொஞ்சம் விளக்குங்களேன் 🙂

   S Murugesan said:
   May 31, 2011 at 6:53 am

   வாங்க ராசா!
   அட இப்பத்தேன் பாவச்சக்கரம் பக்கம் வந்திருக்கீங்க. நான் பார்த்த 90 சதவீதம் ஜாதகத்துல ராசிக்கும் -பாவத்துக்கும் வித்யாசமே இருந்ததில்லை. இந்த ஒரு பாய்ண்டால தேன் நாம ராசி சக்கரத்துலயே நின்னுட்டம்.
   நம்ம ஜாதகத்துல பாவத்துல கடகத்துல குரு, அந்த குருவோட சந்திரன் வேற சேர்ந்தாருங்கோ.

   இப்ப இன்னா செய்விங்க இப்ப என்னா செய்விங்க

    //நான் பார்த்த 90 சதவீதம் ஜாதகத்துல ராசிக்கும் -பாவத்துக்கும் வித்யாசமே இருந்ததில்லை. //
    உண்மை தான்….
    அட… ராசி கட்டம் மாதிரி more or less same ஆ இருக்குமே அதை தான் சொல்லுறீங்களா..

    நான் என்ன நினைக்கிறென்ன…..

    உதாரணத்துக்கு ஜாதகனுக்கு (மேஷ) லக்கினம் 25 டிகிரி யில் விழுவதாக கொள்வோம்…..ஆனால் மேஷத்தில் செவ்வாய் 5 டிகிரி யில் இருப்பதாக கொள்வோம்…மேலோட்டாமாக பார்த்தால் செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி….
    ஆனால் லக்கிணத்தின் ஆரம்பத்துக்கும் செவ்வாய்க்கும் 20 டிகிரி இடைவெளி….அதாவது செவ்வாய் லக்கினத்துக்கு விரயத்தில் உள்ளார்…..
    அதே சமயம் ஜாதகன் குணம் 5 /30 பங்கு மேஷ இயல்பும் ,25/30 பங்கு ரிசப இயல்பும் இருக்கும் என்பது என் கருத்து….

    இதை தான் நவ அம்சம் சுச்சமாமாக விளக்குகிறது என நான் நினைகிறேன்…..[அம்சம் பற்றி தற்சமயம் எந்த புத்தக அறிவும் எனக்கு கிடையாது…என் அரை வேக்காட்டு அறிவு ஆராய்ச்சி மட்டுமே ]

    முதலில் ராசி கட்டத்தை தட்டையாய் போட கூடாது….நீள் வட்டத்தில் போட்டு …எந்த எந்த டிகிரி யில் எந்த எந்த கிரகம் உள்ளது என போட வேண்டும்…. அப்போது தான் கிரக பலம் சரியாக தெரிய வரும் …..என்ன நான் சரியா பேசுரனா தல 🙂

    S Murugesan said:
    May 31, 2011 at 1:44 pm

    ராசா,
    உங்க லாஜிக் படி கரீட்டுதேன். நான் இன்னொரு டிப் தரேன் ரோசிங்க. ( ஐ மீன் ஏற்கெனவே உள்ளதை கோட் பண்றேன்)

    சூ,சந்,செவ்,புதன்,சுக் எந்த டிகிரியிலருந்தாலும் பலன் தருவாய்ங்க. ( காலமெல்லாம் காதல் வாழ்கங்கறாப்ல -காலமெல்லாம் எஃபெக்ட் பண்ற ப்ளேனட்ஸ் இவை)

    ராகு,கேது,சனி ராசியில் பாதியை கடந்திருந்தா இன்னம் எஃபெக்டிவா பலன் தருவாய்ங்க. குரு மத்தியில இருந்தா டபுள் ஸ்ட்ராங் பலன் தருவார். ஓகேவா

    //சூ,சந்,செவ்,புதன்,சுக் எந்த டிகிரியிலருந்தாலும் பலன் தருவாய்ங்க. ( காலமெல்லாம் காதல் வாழ்கங்கறாப்ல -காலமெல்லாம் எஃபெக்ட் பண்ற ப்ளேனட்ஸ் இவை)//

    தல ,
    சந்திரன் ,புதன் ,சுக்கிரன் சந்திரன் எல்லாம் பூமிக்கு உள் வட்ட கிரகங்கள் ….அதாவது பூமிக்கு மிக அருகில் இருந்து உள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன..எனவே இவை அனைத்துக்கும் 7 ம் பார்வை மட்டும் உண்டு…

    செவ்வாய் பூமிக்கு அருகில் உள்ள வெளி வட்ட பாதை கிரகம் …. 4,8 விசேச பார்வை உண்டு…
    குரு,சனி பூமிக்கு மிக அதிக தொலைவில் உள்ளது …சனிக்கு 3,10 குருவுக்கு 5,9 விசேச பார்வை உண்டு…
    குரு சனி போன்றவை பூமிக்கு வெகு தொலைவில் உள்ளதால் …ராசியை பாதி கடந்த பின் பலன் தரலாம்…
    இது என்னோட லாஜிக் ….

    நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு சொல்லுங்க தல 🙂

    உலகம் தடைன்னு சொல்ல்லிட்டு காட்டு மிராண்டியா மனிதர்கள் அலைந்த கால கட்டத்தில்யே நமது நாட்டு ரிஷிகள் இதை கண்டு உணர்ந்து சொல்லி இருக்கிரார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு புல் அரிக்கிறது…..

    ஒரு நிமிஷம் இருங்க….சொரிஞ்சிட்டு வந்து அடுத்த மறு மொழி போடுறேன் 🙂

  perumalshivan said:
  May 31, 2011 at 7:16 am

  eambaa ! sarakku ullavanga gonjam illa illa rombave sollikodungappa ! hello mr. tavusar pandi entha jathaganoda koodappiranthavangala eththiniperunu kandupidikiratha konjam sollunga -G
  AND murugesanne namma aalunga solraththellam eantha alavukku sariya keethunu reply pannune !

   //sarakku ullavanga gonjam illa illa rombave sollikodungappa//

   சரக்கு உள்ளவங்க நீங்க மட்டும் ராவா அடிக்காதீங்க …எங்களுக்கும் கொஞ்சம் ஊத்தி கொடுங்க-நு சொல்லுறீங்க அப்படிதானே தல ( சொம்மா தமாசு 🙂 )

  R.Puratchimani said:
  May 31, 2011 at 8:19 am

  தனி காட்டு ராஜா…உங்கள் அலசல் அருமை

  டவுசர் பாண்டி said:
  May 31, 2011 at 4:42 pm

  ராசான்னே,
  கட்டத்த பத்தி ஒரு சின்ன கேள்வி! நீங்க கட்டாயம் பதில் சொல்லனும்னு கட்டாயம் கெடயாது. முடிஞ்சா சொல்லுங்க. நீங்க ஆராய்ச்சியாலர்னு கேள்விப்பட்டேன். கரீட்டா சொன்னீங்கன்னா ப்ரைஸ் கெடயாது ஆனா ஒரு சர்ப்ரைஸ் வெய்ட்டிங். வெய்ட் அண்ட் ஸீ. இப்ப நைனா பொறந்த அதே டேட்டுல அதே டைம்முல இன்னொரு டூப்ளிகேட் நைனாவும் (அதாம்பா ரெட்டபெரவி) பொறந்திருக்காருன்னு வெச்சுக்குவோம். அந்த டூப்ளிகேட்டும் நைனா மாறி செயல்படுவாரா?

  நெக்ஸ்டு, நைனாவோட அதே டேட்டு, அதே டைம்மு, பட் பிளேஸ் வேற? கெரகம் எப்படி பார்ட்டிக்காரண்ட டீளின்க் வைக்கும்! ஆராச்சும் சொல்லுங்களேன்.

  காலணா டவுசர மாட்டிக்கினு நம்ம கைலையே பந்தா காட்டிக்கினுகீரான்னு நீங்க கோச்சிக்கினு இருந்தாலும் சரி. ஏதாவது நீங்க சொல்லித்தான் ஆகோணும். நீங்கல்லாம் ப்ரொபசனல் ஜோதிடரா, ஆராய்ச்சியாளரா இருக்கீங்கல்லா அதேன் கேட்டேன்.

   டவுசர்,
   வகுப்பறை ஜோதிடத்துல வாத்தியார் இதுக்கு எதோ ஒரு தியரிடிக்களா பதில் சொல்லி இருப்பாரு…..ஒரு தடவ நம்ம தல முருகேசன் கூட இதே கேள்விய வாத்தியார் கிட்ட கேட்ட போது அதுக்கு அவரு எதோ ராசிய உள்ள உள்ள பிரிக்க புத்தி புத்தியா வருமுன்னு பத்தி பத்தியா பதில் சொல்லி இருந்தாரு….. எனக்கு மறந்து போச்சு….
   நம்ம தல இதுக்கு answer பண்ணுவாரு….

  டவுசர் பாண்டி said:
  May 31, 2011 at 4:51 pm

  ஒர்ர்ருவா காயின எடுத்துக்கினு சுண்டப்போறோம். சுண்டுன ஸ்பாட்டுல டாப்புல போன நேரத்துல சிஎம் பொறந்திருக்காருன்னு வெச்சிக்குவோம். அந்த நாணயம் கீழ உளுந்த நேரத்துல பொறந்தது டூப்ளிகேட் சிஎம்நு வெச்சா இந்த ரெண்டு சிஎம்முக்கும் சாதாகம் ஒரே மாரிதேன் இருக்கும். ஆனா ரெண்டு வேறும் ஒரே மாறி இருக்க மாட்டாய்ங்க (மொகரகட்டைய சொல்லலீங்கோ). எப்புடி?ஆரும் சொல்லாம டம்ப்பா இருந்தாங்கன்னா லம்ப்பா அவுத்து உடவேண்டியதேன். ப்ளீஸ் ஆராச்சும் பெரிய மன்சங்க சொல்லுங்கப்பா.

   டவுசர்,
   ஜாதகத்த வச்சு மட்டும் ஒருத்தனோட தலை எழுத்தை நாம புட்டு புட்டு வச்ச விட முடியாது-நு நான் நெனைக்கிறேன்….
   மனுஷன் ஜீவ ராசி உருவாகறதுக்கு முன்னமே கிரகங்கள் இருந்தது….மனுஷ இனமே அழிஞ்சு வேறு ஒரு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்தா கூட கிரகங்கள் இருக்கும்…
   திடிர் நில நடுக்கம், சுனாமி போன்ற வற்றின் போது எல்லாம் தனி மனித ஜாதகம் எடுபடாது..
   மனிதன் மனம் ஒரு சுழற்சி முறையில் செயல் படும் ….ஜாதகம் இந்த சுழற்சி முறையை சொல்லும்…
   ஓரளவு மனதை கட்டு படுத்தவோ ,கடக்கவோ முடிந்தால் ஜாதகத்தை கடக்கலாம் என்று எனது புத்தி சொல்லுகிறது 🙂
   மனுஷனுக்கு சுகந்திரம் நிறைய உள்ளது…
   புத்தி உள்ளவன் புரிந்து கொள்ளுகிறான்….அது இல்லாதவன் பணம், பதவி குடும்பம் ,குழந்தை ,சமுதாயம் ,நமிதா ,ஜாதகம் என்று கடைசி வரை அடிமையாக வாழ்கிறான்..

    sugumarje said:
    June 1, 2011 at 1:23 pm

    //மனிதன் மனம் ஒரு சுழற்சி முறையில் செயல் படும் ….ஜாதகம் இந்த சுழற்சி முறையை சொல்லும்…
    ஓரளவு மனதை கட்டு படுத்தவோ ,கடக்கவோ முடிந்தால் ஜாதகத்தை கடக்கலாம் என்று எனது புத்தி சொல்லுகிறது//
    யப்பா, முழுவேக்காடு… சூப்பர் போ 🙂
    சரியான வார்த்தையை சொன்னய்யா 🙂 அனுபவம் பேசுதோ?
    (இதைத்தான்யா நாங்க சொல்லிகொண்டிருக்கிறோம் )

  //சரியான வார்த்தையை சொன்னய்யா 🙂 அனுபவம் பேசுதோ?//

  ஹி…ஹி 🙂
  ம்….அடுப்புல வைக்காம எப்படி அரை வேக்காடாகவோ முழு வேக்காடாகவோ ஆக முடியும் ஜி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s