ஆவிகள் குறித்த புரிதல்

Posted on

எச்சரிக்கை: சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் ஆடியோவுக்கு இங்கே அழுத்துங்க
காத்துல என்னென்னமோ ஃப்ரீக்வென்சில என்னென்னமோ ஒலி , ஒளி அலைகள் கிடக்கு. அதுக்குரிய கருவியை வச்சுக்கிட்டு அததுக்கேத்த மாதிரி ட்யூன் பண்ணா எல்லாத்தையும் நமீதா குளியல் காட்சி மாதிரி சிறை பிடிக்கலாம்.

இந்த ஆவி சமாசாரமும் அப்படித்தேன். சனம் ஆவின்னவுடனே டர்ராயிர்ராய்ங்க. இல்லை கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாய்ங்க.

எங்க சி.எம் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் செத்துப்போனாரு.(2009 செப்.2) ரோசய்யா சி.எம் ஆயிட்டாரு. 2010 ஜூலை 8 ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் பிறந்த நாள். கரெக்டா அன்னைக்கே ரோசய்யாவுக்கு ஹார்ட் அட்டாக். இதை எப்படி பார்க்கிறது?

சரி லேட்டஸ்டா சொல்றேன். மே,28 என்.டி.ஆர் பிறந்த நாள். சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிறவும் – என்.டி.ஆரோட மதுவிலக்கு -மலிவு விலை அரிசி மாதிரி எல்லா திட்டங்களுக்கும் ஆப்படிச்ச பிறவும் சந்திர பாபுவை ஏன்னு கேட்க நாதியே இல்லை.(அவரோட பிரசார உத்திகள் அப்படி – லோக்கல்ல என்னமோ நாறிக்கிட்டிருக்கும் – தேசீய அளவுல – உலக அளவுல பெத்த பேரு)

நான் என்.டி.ஆர் பக்தன். அவரு தெய்வாம்சம் கொண்டவரு அது இதுன்னு எக்கச்சக்க பிரமைகள். டெப்ரஸா இருக்கிறப்ப மான்சிகமா அவர் கிட்டே பேசுவேன்

” பாஸ்! என்ன பாஸ் இது அநியாயம்? நீங்க என் மேல இறங்கனும்னுல்லாம் பிடிவாதம் பிடிக்கமாட்டேன். உங்க ஃபேன்ஸ் எத்தீனி பேரு இருக்காய்ங்க. அதுல பவர்ஃபுல் பார்ட்டியா பார்த்து இறங்கனும் இந்த சந்திரபாபுவோட மாயா ஜாலங்கள் மேல மந்திர ஜலம் தெளிச்சு விரட்டனும். அப்பத்தேன் நீங்க பவர்ஃபுல்லுனு அர்த்தம்”

இந்த மெசேஜ் என்.டி.ஆர் ஆன்மாவுக்கு ரீச் ஆச்சோ என்னமோ கொஞ்சம் போல ஃபேக்சன் லீடர், காங்கிரஸ் கட்சியில ஆஃப்டர் ஆல் ஒரு கோஷ்டி (க்கு) தலைவரா இருந்த ஒய்.எஸ்.ஆர் 2003 ல பாதயாத்திரை ஆரம்பிச்சாரு. 2004 தேர்தல்ல சந்திர பாபுவுக்கு ஆப்படிச்சாரு.

என்.டி.ஆரோட நல திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற ஆரம்பிச்சாரு. ஒரு கட்டத்துல ஏறக்குறைய என்.டி.ஆர் ரேஞ்சுக்கு போயிட்டாரு. ஏன் என்.டி.ஆரையே மிஞ்சிப்போயிட்டாரு. என்.டி.ஆர் மாதிரியே பரிதாபமான மரணத்துக்கும் இலக்கானாரு.

ஒய்.எஸ்.ஆர் சந்திரபாபுவுக்கு ஆப்படிக்கறப்பல்லாம் , என்.டி.ஆரோட நலதிட்டங்களையெல்லாம் அமல் படுத்தறப்பல்லாம் என்.டி.ஆரோட ஆவி வேலை செய்யறாப்லயே ஒரு ஃபீலிங். ஆனால் ஒரே ஒரு குறை ” ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆரோட ரசிகர் இல்லையே”ங்கறதுதான்.

ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் காரரா இருந்தாலும் – 2003 க்கு அப்பாறம் என்.டி.ஆரை மட்டும் ஒரே ஒரு வார்த்தை கூட விமர்சனம் பண்ணதில்லை. இன்னம் சொல்லப்போனா ” பெத்தமனிஷி -கவுரவஸ்துடு -இச்சின மாட்ட நிலபெட்டுக்கோவாலி அன்ன தத்வம் கலவாடு”ன்னுல்லாம் புகழ் மாலை சூட்ட ஆரம்பிச்சாரு.

ஒய்.எஸ்.ஆர் மறைவுக்கு பிறகு தினசரிகள்ள ஒரு வாரத்துக்கு அவரை பத்தின பழைய தகவல் எல்லாம் வெளியாக ஆரம்பிச்சது. அதுல ஒரு தகவல் என்னடான்னா …………….

கர்னாடகா குல்பர்கா மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறப்ப ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆர் ஃபேன். எந்த அளவுக்கு ஃபேனுன்னா தலைவரோட புதுப்படம் ரிலீஸான புல்லட்லயே ஹைதராபாத் வந்து படம் பார்த்துட்டு போற பார்ட்டி.

மேலும் ஒரு பேட்டி:

நிருபர்: உங்களை என்.டி.ஆர் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாரா?
ஒய்.எஸ்.ஆர் : யாரை வேணம்னா இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பவர்ஃபுல் கேரக்டர் என்.டி.ஆர்

பாதயாத்திரை ஆரம்பிச்சதுமே நான் ஒய்.எஸ்.ஆர்ல என்.டி.ஆரை பார்க்க ஆரம்பிச்சுட்டன். நம்ம தெலுங்கு ப்ளாக்ல என்.டி.ஆரோட உண்மையான அரசியல் வாரிசு ஒய்.எஸ்.ஆர்தான்னு விஸ்தாரமா எழுத ஆரம்பிச்சுட்டன். நம்ம லோக்கல் மேகசின்லயும் இதே லைன் அப் தான். காங்கிரஸ் கட்சியோட பிரச்சார ரதம் ஏறி பிரச்சாரம் பண்ணப்பவும் இதே லைன் அப் தான்.

ஒய்.எஸ்.ஆர் மரணத்துக்கு பிறகு ராமண்ணா ராஜண்ணாங்கற பேர்ல வோர்ட்ப்ரஸ் ப்ளாக் ஆரம்பிச்சேன்.
ஆந்திராவுல கம்மா-ரெட்டி சாதிகளுக்கு எப்பயுமே ஆகாது. என்.டி.ஆர் கம்மா , ஒய்.எஸ்.ஆர் ரெட்டி. ஆனாலும் நம்ம வழி தனி வழி ஆச்சே. அதுக்கேத்தாப்ல என்.டி.ஆர் மனைவி லட்சுமி பார்வதி கூட ஜகனோட எல்லா போராட்டங்களுக்கு நேர்ல போய் ஆதரவு தர்ராய்ங்க. கடப்பா தேர்தல்ல பிரச்சாரம் கூட
செய்தாய்ங்க.

இந்த மே28 ஆம் தேதி – என்.டி.ஆர் பிறந்த நாளைக்கு ஜகன் மோகன் ரெட்டியோட சாட்சி டிவியில
ஒரு சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு என்ன தெரியுமா? ” ராமண்ணா ராஜண்ணா” இப்பம் சொல்லுங்க ஆவிகள் இருக்கா இல்லியா?

இதுமட்டும் இல்லிங்கண்ணா ஒய்.எஸ்.ஆரோட என்.டி.ஆர் வேலைகளை பார்த்து எவ்ளதான குஜிலியானாலும் “தாளி இந்தாளு என்.டி.ஆர் கணக்கா காங்கிரசோட மோதமாட்டேங்கறாரே”ன்னு ஒரு மனக்குறை இருந்தது. இப்பம் அவரோட பிரதிரூபமான ஜகன் அந்த குறையையும் தீர்த்துவச்சுட்டாரு.

இப்ப சொல்லுங்க ஆவிகள் இருக்கா இல்லியா?

என்னோடஊகம் என்னன்னா என்.டி.ஆர் -ஒய்.எஸ்.ஆர் ரெண்டு பேரோட ஆவியும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குக்கு வந்து ஜகன்மோகன் ரெட்டிக்கு உதவறாய்ங்கங்கறதுதேன்.

கடப்பாவுல வாக்குபதிவு துவங்கின கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு வாக்கு பதிவு மையத்துக்குள்ள பாம்பு ஒன்னு என்ட்ரி கொடுத்திருக்கு.

இவ்ள எதுக்கு ரோசய்யா பேட்டி கொடுக்கிறாரு. அவர் சேருக்கு அடியில பாம்பு

(மூதாதையர்கள் பாம்பு வடிவில் சஞ்சரிக்கிறதா ஒரு ஹன்ச் இருக்கு)

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.

கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்திருப்பதை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இன்னொரு பதிவுல ஒரு ஆவி நேரடியா நம்மை லொள்ளு பண்ணதையும் – அதை ஆஞ்சனேயர் துணையோட முறியடிச்சதையும் பார்க்கலாம்.

அய்யய்யோ.. சூப்பர் ஜோதிடராக டிப்ஸு தொடரும் கோவிந்தாவான்னு பேஜாராயிராதிங்க. நீங்க சூப்பர் ஜோதிடராக இதுவும் ஒரு டிப்புதேன்.

ஏற்கெனவே வாழ்ந்து செத்துப்போன ஜோதிடர்களை உளமாற நினைச்சுக்கங்க.”யப்பா..இந்த ஜோதிஷ கடல்ல நீந்த கொஞ்சம் போல உதவுங்கப்பா.. நீங்க பண்ண தப்பை நான் பண்ணிராம இருக்க ஹெல்ப் மீ” ன்னுட்டு ப்ரே பண்ணுங்க. உதவி நிச்சயம் கிடைக்கும்.

( நமக்கும் அப்படித்தேன் அப்பப்போ உதவி கிடைக்குது ) பத்தவச்சுட்டியே பரட்டை !

Advertisements

10 thoughts on “ஆவிகள் குறித்த புரிதல்

  டவுசர் பாண்டி said:
  May 30, 2011 at 4:08 am

  பரவால்லையே நைனாவுக்கும் நமக்கும் லைப்புல செல மேட்டருங்க மேட்சாகுதுங்கோ. ரொம்ப நன்றி நைனா.

   வினோத் said:
   May 30, 2011 at 6:14 am

   ரசனி, ஆயுர் பாவம் பாருங்க பாண்டி

  அய்யய்யோ.. சூப்பர் ஜோதிடராக டிப்ஸு தொடரும் கோவிந்தாவான்னு பேஜாராயிராதிங்க. நீங்க சூப்பர் ஜோதிடராக இதுவும் ஒரு டிப்புதேன்.

  ஒரு நிமிசம் அப்படித்தான் நினைச்சேன் .. நம்ப தலை எதையும் உருப்படியா பண்ணாதானு ?

  ஆனா படிக்க படிக்க புரிஞ்சிட்டேன்.

  ஓகே..
  நம்ப வேண்டுகோளை நிறைவேத்தினதுக்கு ரொம்ப நன்றி…
  குரு காரகத்துவம் பத்தியும் சொல்லிட்டீகன்னா நிம்மதி..

  அப்புறம் இன்னொரு முக்கிய விசயம் தலை..

  ரொம்ப நாளா நினைக்கிறேன் சொல்ல மறந்துடுது..

  இந்த வாசகர்கள் தரும் கமெண்ட் ஐ எல்லாம் நம்ப மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளும் ஆப்சனை ( subscribe via email ) ஆன் பண்ணி விடுங்களேன்.

  அன்பர்கள் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்க ஒவ்வொரு முறையும் இங்ஙன வந்து தேட வேண்டியதாயிருக்கு.

  viji said:
  May 30, 2011 at 6:07 am

  aavikalidam adikkadi(often) paycinaal, body weight kuraium. thani mannitha muyarchi kuraium. yallaam freeyaka koduthu, orunaal nirantharamae kadaya saathidum.becareful.

  Mani said:
  May 30, 2011 at 6:27 am

  /////ஏற்கெனவே வாழ்ந்து செத்துப்போன ஜோதிடர்களை உளமாற நினைச்சுக்கங்க.”யப்பா..இந்த ஜோதிஷ கடல்ல நீந்த கொஞ்சம் போல உதவுங்கப்பா.. நீங்க பண்ண தப்பை நான் பண்ணிராம இருக்க ஹெல்ப் மீ” ன்னுட்டு ப்ரே பண்ணுங்க. உதவி நிச்சயம் கிடைக்கும்./////

  அட இது ஒரு குறுக்கு வழியா இருக்கே தலை. ஆனா எல்லாருக்கும் ஆவிகளை தொடர்புகொள்ள வழிஇருக்கா தலை. சில பேருக்கு மட்டும்தான் ஒர்க்அவுட் ஆகும்ன்னு கேள்விபட்டிருக்கேன் (அவிக ஜாதகத்தில் ராகு, கேதுக்கள் 8ல் அல்லது 5ல் இருந்தா மாந்தீரீகம், ஆவிவழிபாடுன்னு போவாய்ங்கன்னு).

  எனக்கு பயமா இருக்கு தலை. நம்பள ஒன்னும் பண்ணிடாதில்லே.

  ///////( நமக்கும் அப்படித்தேன் அப்பப்போ உதவி கிடைக்குது ) பத்தவச்சுட்டியே பரட்டை !//////

  பரட்டை நீங்க பெரிய தில்லாலங்கடிதான் போங்கோ.

  perumalshivan said:
  May 30, 2011 at 11:53 am

  yhow murugesaa nee shatharana aalu illiyaaaaaaaaaaaaa?????????!!!!!!!!!!!!!!!!!!!

  kalakkunga anne !

  Mani said:
  May 30, 2011 at 5:11 pm

  தலைவரே உங்க ஆடியோ விளக்கத்தை கேட்டேன். நன்றாக உள்ளது. என்னதான நீங்க ஆடியோவில் பேசினாலும் நீங்க எழுதறத படிக்கும்போது தான் நன்றாக இருக்கிறது. தெளிவாக படித்து அசைபோட முடிகிறது. அப்படியோ உங்க கருத்துகளை தனிபதிவா போடுங்களேன் ப்ளீஸ் எல்லோருக்கும் மிகவும் உதவியாகவும் விவாதிக்கவும் எளிதாக இருக்கும். செய்வீர்களா தல.

   S Murugesan said:
   May 30, 2011 at 10:43 pm

   மணி சார்,
   நிச்சயமா செய்வோம். கொஞ்சம் முன்னே பின்னே..

  sambargaadu responded:
  April 14, 2018 at 9:21 pm

  //ஒய்.எஸ்.ஆர் சந்திரபாபுவுக்கு ஆப்படிக்கறப்பல்லாம் , என்.டி.ஆரோட நலதிட்டங்களையெல்லாம் அமல் படுத்தறப்பல்லாம் என்.டி.ஆரோட ஆவி வேலை செய்யறாப்லயே ஒரு ஃபீலிங். ஆனால் ஒரே ஒரு குறை ” ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆரோட ரசிகர் இல்லையே”ங்கறதுதான்.//

  தவறான கருத்து. ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆர் ரசிகர் தான். குல்பர்கால மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறச்ச புல்லட்ல ஹைதராபாத் வந்து என்.டி.ஆர் ரிலீஸ் சினிமால்லாம் பார்த்த பட்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s