மனிதர்களோடு போராடும் ஆவிகள்

Posted on

Sugumarje_Caricaturist

எச்சரிக்கை: இந்த தலைப்பில் வரும் தொடர்கள் குழந்தைகளுக்கானதல்ல – அன்பன் சுகுமார்ஜி

அனுமனுக்கு தன் பலத்தை உணர்த்துவது போல அவ்வப்பொழுது சகோதரர் முருகேசன் அவர்கள்  என்னை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் விலகிப்போவதென்பதல்லாம் இல்லை, வேலைப்பளு எழுதத்தூண்டவில்லை (சோம்பேறி- ஆறில் சனி அப்புறம் எப்படியிருக்கும்? ஆனா அடி தூள் கிளப்புவோம்ல).

ஆனாலும் சில விசயங்களை சொல்லுவதால் மட்டும் எதும் நடந்துவிடுவதில்லை. தாத்தா கூட இப்ப “நான் செஞ்சது தப்பாய்யா!” என்று எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருப்பதாக கேள்வி

குழிக்குள் விழுந்தவனை காப்பாற்ற வேண்டியதுதான். என் கைகளை பிடித்தால் தானய்யா, அவனைதூக்க முடியும். என் கைகளை தரமாட்டேன் என்பவனை என்ன செய்வது? ”அனுபவிடா!?” என்று இருந்துவிடவேண்டியது தான். ஆனாலும், தேள் கொட்டுவது அதன் குணம், அதை நீரில் மூழ்கவிடாமல் தடுப்பது என் குணம் என்று ஜென் துறவி சொன்னது போல, முருகேசன் எழுதிக்கொண்டே… இருக்கிறார். ஆனால் நான் கேட்டால் தவிர கொடுப்பதில்லை. கேட்டால்தான் கிடைக்கும் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். 🙂

காமம் “பற்றி” எழுதலாம் என்று தான் சில செய்திகளை மனதிற்குள் தொகுத்துக்கொண்டிருந்த வேளையில் “ஆவி”யை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஆவி என்றால் ரெண்டுவகையாக பிரிக்கலாம், அதாவது நாம் அறிந்து கொண்டவகையில்(!?) நல்லது மற்றும் கெட்டது. வேடிக்கை என்னவென்றால் ஆவி குறித்த எந்த தகவலும் அனுபவபூர்வமாக என்னிடம் இல்லை. எல்லாமே பிறர் வகையில் அறிந்து கொண்டது தான். அது ( அஃறிணையாக சொல்லலாமா?) நல்லது செய்யுமோ என்ற சந்தேகமிருந்தாலும், சக மனிதனைப்போல மிக சத்தியமாக கெடுதல் செய்யாது என்பது நான் அறியும் வரை உண்மை.

கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுவோம்… நான் பள்ளி சென்று கொண்டிருந்த காலத்தில் ஒரு ஜனரஞ்சக ஜல்லி பத்திரிக்கையில் “கோஸ்ட்” என்று ஒரு வெளிநாட்டுக்கரடி விட்டுக்கொண்டிருந்தனர். அக்காலத்திலும் எழுத்துக்களை மேயும் பழக்கமிருந்ததால் அதையும் மேய்ந்து கொண்டிருக்கையில் என் சகோதரி…

“டேய், அதெல்லாம் படிக்காதே”

“ஏன்? படிச்சா என்னவாம்?”

“பயம்வந்துடும்டா”

“யாருக்கு? கோஸ்ட்டுக்கா?” என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு “என்ன இப்படி கரடி விடுறாங்க?” என்றும் சொல்லிவிட்டு,

“அக்கா, கொஞ்சம் கூட வர்ரியா? ஒரே இருட்டா இருக்கு?” என்று பயம் என்றவார்த்தையை (மட்டும்) மென்று முழுங்கியவன் நான் 🙂

இப்பொழுது மணி இரவு 11.10 🙂 12.00 மணிக்கு ஆவிகளின் அட்டகாசம் ஆரம்பிக்கும் என்று ஒரு மனித கணக்கு இருக்கிறது. திடீரென்று இருட்டைப்பார்த்தால் எதோ நகர்வது போல காணலாம். அய்யா. அது எலியாக கூட இருக்கலாம். ஆனால் நமக்கு? காலில்லாத ஏதோ ஒன்று பறப்பது அல்லது மிதப்பது போல தோன்றக்கூடும். ஆமா? அதுக்கு கால் இல்லையாமே? அப்படியா?

பொதுவாக இருட்டு என்றால் நமக்கு பயம் தான்… காரணமில்லா, விளக்கிக்கொள்ள இயலா பயம்.

இத்தனைக்கும் அது நமக்கு ரொம்ப பழகின ஒன்றுதான். எப்பொழுது?

அது தாயின் கர்ப்பத்தில் இருந்த காலத்தில்…

அந்த இருட்டு இன்னமும் பழகவேண்டும் என்பதற்காகவும், நீ ஏற்கனவே கர்ப்பத்தில், இப்படியான இருட்டில், இறைவனின் (!?) பாதுகாப்பில்தான் இருந்தாய் என்பதை உணர்த்தும் முகமாகவே இறைவன் கர்ப்பகிரகமும் இருட்டிலிருக்கிறது. திருச்சி அகிலாண்டேசுவரியை ஒளியில்லாது காணவே இயலாது… அவ்வளவு கர்ப்பபைத்தன்மை…

சிறு குழந்தைகள் மிகுந்த பயம் கொண்டிருப்பதைக் காணலாம். என் வழக்கமான ஒரு குழந்தை கொஞ்சல் பாணி கைவசமிருக்கிறது. குழந்தைக்கு மிக அருகில் போய்… “இப்ப உன்னை பறக்கச் செய்யலாமா?” என்றபடி அதன் கைகளுக்கிடையில் என் கைகளைத்தந்து உயர தூக்கும் பொழுது அவர்களின் கண்களில் மிகுந்த பயத்தினை கண்டிருக்கிறேன்… இரண்டு முறை மட்டுமே… மூன்றாவது முறை “அங்கிள்(!?) இன்னும் வேகமா தூக்கி போடுங்க” என்பார்கள். அடுத்த முறை அவர்கள் என்னை பார்த்த உடனே ரொம்ப “அட்டாச்மெண்டு” ஆகிவிடுவார்கள் 🙂

கவனம்: சுழலும் மின் விசிறிக்கு அருகில் செய்யவேண்டாம்.
முயற்சி செய்து பார்த்துவிட்டு ராயல்டியை எனக்கு தந்துவிடவேண்டும் ஆமா!

இந்த முயற்சி 3 முதல் 6 வயது குழந்தைகளிடம் மட்டுமே செல்லுபடியாகும். “அட்டாச்மெண்டு” க்காக 18 வயது குழந்தையை (!?) தூக்குகிறேன் பேர்வழி என்றால், அதற்கு நான் பொறுப்பல்ல…

பொதுவாகவே மனித வாழ்வுக்கு பயம்… ரொம்ப முக்கியம்… அந்த பயம் என்பது குறித்தும் நிறைய அலெக்சா கல்லா கட்டலாம் 🙂

ஏற்கனவே  சகோதரர் முருகேசன் அதை கோடி காட்டியிருக்கிறார். கவிதை07 ல தேடுங்கபா… சாறெல்லாம் அங்கே இருக்கு… ஆமா…

ஆக, இருளோடு தொடர்பு கொண்டது தான் நம்ம (!?) ஆவி… சக மனிதனாக வாழ்ந்த மனிதனின் மறுபக்கம் ஆவிதானே? அப்படின்னு யாரு சொன்னது? ன்னு கேட்டா பதிலிருக்காது.

“யே. அப்பா! அந்த வீடா, அங்க ஒரு வயசுப்பொண்ணு தூக்கு மாட்டி போய்டுச்சிப்பா… அது ஆவியா வேற அலையுதாம், வேணாம்பா…!”

“இதே இடத்திலதாண்டா, நேத்தும் விழுந்தேன், இங்கனக்குள்ளே ஏதோ ஆவி நிச்சயமா இருக்குடா மாப்ளே”

இப்படி பலதரப்பட்ட ஆவி வகைகள் மனிதருக்குள் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன…

துன்பம் என்பது என்ன? என்று வேத்தத்திரி மகரிஷியிடம் கேட்ட பொழுது “இன்பத்தின் மறுபெயராம் துன்பம், இன்பத்தின் அளவு முறை மீறும் பொழுது அந்த இன்பத்தையே துன்பமாக உணர்கிறோம்” என்கிறார்.

ஆவி என்பது நம்முடைய இன்னொன்று என்று நம்பலாமா?

அப்பனுக்கு பயப்படாதவன் அப்பன் ஆவியாக வந்து பயமுறுத்துவானோ என்று விளக்கின் ஒளி குறைக்காமல் வாழ்கிறான்.

நீ செத்தால்தான்டி எனக்கு நிம்மதி என்று கூறிய கணவன் ஆவியாக வந்து விடுவாளோ என்று தினம் தினம் பயந்து சாகிறான்.

நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆவிகள் “பற்றி”…

என் தந்தை கூட தன் கிராமத்தில் இருட்டில், பூனை என்று நினைத்து பார்த்து கொண்டிருக்க அது மிதந்து போனதாக சொல்ல கேட்டிருக்கிறேன். அது என்னை பயமுறுத்துவதற்காக சொன்னாரோ என்று அப்பொழுதே யோசித்திருக்கிறேன்.

அப்பாடா! மணி 12.00 ஆச்சுப்பா 🙂

10 நிமிடத்திற்கு பிறகும்… எதும் நடைபெறவில்லையே 😦

இதில், இந்த ஆவிகளின் அட்டகாசத்திற்கு எல்லாவகையான திரைப்படங்களும், கதைகளும், கட்டுரைகளும், மனித மூளையின் அதிக பிரசங்கித்தனமும் தான் காரணம் என்று சொல்லலாமா?

சரி, ஆவிய பார்த்தவங்கலாம் கைய தூக்குங்கப்பா…

என்னது? தினம் காபி குடிக்கும் பொழுதா? செல்லாது, செல்லாது… ம். அப்புறம்?

 

அடுத்த பதிவிலும் ஆவி பிடிக்கலாம்…

___________

Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and Parties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Coffee Mug Caricature, Gift Caricature Avail… Call to: +91 9442783450 / mail:Sugumarje
Visit: www.sugumarje.com
___________

 

 

 

Advertisements

5 thoughts on “மனிதர்களோடு போராடும் ஆவிகள்

  Name said:
  May 29, 2011 at 10:42 am

  ippo ennathan solringa aavi irukka illayaa parthirukkaayngala illaya?;;;

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 10:47 am

  சுகுமார்ஜியன்னே பதிவு நல்லாருக்கு. ஆவிய பத்தி நம்ம ப்ரெண்டு ஒருத்தர் அல்பாயுசுல போனவங்க, தீர்க்க முடியாத் ஆசயோட அகால மரனமடஞ்சவங்க இவிங்கலொட சூக்கும ஒடல ஈசியா கம்மினிகெட்டு பன்ன ட்ரை பன்லாமாம். இதுக்கு நம்ம ட்ரான்ஸுல இருக்கனும். ஈசியான ரெண்டு பயிர்சி ஆனா கொஞ்சம் ரிச்குன்னும் சொல்ராரு. அப்பால நம்ம மீடியமா மாரிலாமாம். நீங்க பொய்னு சொல்லுவீங்கதானே!

  எக்ஸ் சூச் மீ ,

  //எச்சரிக்கை: இந்த தலைப்பில் வரும் தொடர்கள் குழந்தைகளுக்கானதல்ல – அன்பன் சுகுமார்ஜி//

  ஜி… நான் தூங்கும் போது மட்டும் குழந்தை….மனச சொன்னேன் …[ நீங்க உச்சா போறதா பத்தி கீது நெனைச்சுக்க போறீங்க 🙂 🙂 ]

  கொட்டாவியை விரட்ட வந்தால் காபி ஆவி….
  கெட்ட ஆவியை விரட்ட என்ன வழி…?

  param said:
  May 30, 2011 at 3:51 am

  சின்ன வயசிலேயிருந்தே ஆவி , பூதம் எதிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.இருந்தாலும் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது.

  நாங்கள் எங்கள் குடும்பமாக [ மொத்தம்24பேர்] லங்காவி சென்றிருந்தோம். அது ஒரு ஷெல்லெட் வகையை சேர்ந்த வீடு. ஒரு ஹால், இரண்டு அறைகளைக் கொண்ட வீடு அது.ஒரு அறைக்கும் அடுத்த அறைக்கும் இடையில் ஒரு நுழைவு வாசல் இருந்தது. அதாவது இந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு போக முடியும். அடுத்த அறையில்தான்கழிவறை அமைந்திருந்தது. இரவு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நள்ளிரவுக்குப் பிறகுதான் தூங்க தொடங்கினோம்.

  நான் பொதுவாகவே எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் காலையில் காலையில் தன்னிச்சையாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.அன்றும் அதேபோல் தூக்கம் போய் விட்டது. இருந்தாலும் உடல் சோர்வாக இருந்ததாலும் மணி என்னவென்று தெரியாததாலும் படுத்தே இருந்தேன்
  என் கைக் கடிகாரம் எதிரிலிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு படுத்துவிட்டதினால், அதை எடுத்துப் பார்க்க சோம்பல் பட்டுக் கொண்டுயாராவது எழுந்தால் கேட்டுகொள்ளலாம் என்று விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தேன்.

  என் இரட்டைக் கட்டிலில் என்னுடன் என் தங்கை படுத்திருந்தார். பக்கத்தில் இதேபோன்ற கட்டிலில் என் அக்காவின் மகள்,அவரின் இரண்டு பிள்ளகளுடன் படுத்திருந்தவர் [ அவர் எழுந்ததை நான் பார்க்க இயலாத அளவில்தான் எங்கள் படுக்கை அமைப்பு இருந்தது]

  எங்கள் அறையிலிருந்து அடுத்த அறைக்குப் போவதைப் பார்த்தேன். ஒரு வெள்ளை நிற நைட்டீ யில் [ அந்த நைட்டீயில் அவரை அவரின் திருமணத்துக்கு முன்பு பார்த்திருக்கிரேன்.] அப்பொழுதும் நான் யோசித்தேன் ஏறக்குறைய பத்து வருடத்துக்கு முந்திய நைட்டீயை இப்பொழுதும் போட்டுக் கொண்டிருக்கிறாரேஎன்று.] கடந்து போவதை பார்த்தேன்.போனவர் திரும்பி வருவார், அவர் படுப்பதற்குள் மணி என்னவென்று அவரைப் பார்க்க சொல்ல வேண்டும் என்பதற்காக, வைத்த கண் வாங்காமல் அந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

  ஆனால் போனவர் ஏறக்குறைய பத்து நிமிடத்துக்கு மேலாகியும் திரும்பவில்லை.
  ஏன் , என்ன காரணம் என்று அறிவதற்காக நானும் படுக்கையை விட்டு எழுந்தேன், அதிர்ச்சியுடன் மீண்டும் படுக்கையிலேயே பொத்தென்று அமர்ந்து விட்டேன், ஏனென்றால் என் பக்கத்துப் படுக்கையில் பச்சைக் கலர் நைட்டீயில் தன் இரண்டு பிள்ளைகளுக்கு இடையில் என் அக்காமகள் படுத்திருப்பதைப் பார்த்தேன்.

  ஓடிச் சென்று அடுத்த அறையில் வேறுயாரும் வெள்ளை நைட்டீயில் படுத்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்.

  அக்கா மகளை எழுப்பி இந்த விஷயத்தை சொன்னேன் ‘ எப்படி சித்தி அவ்வளவு பழைய நைட்டீ இன்னும் இருக்கும் ,அது எப்பவோ தூக்கி வீசியாகி விட்டதே’ என்றார். இதில் பாராட்டு வேறு,இன்னும் அந்தப் பழைய நைட்டீயை நினைவு வச்சிருகீங்களே என்று.அதோடு அந்த விடிகாலையிலேயே எல்லோரும் எழுந்து விட்டார்கள்.

  விடிந்த பிறகு அங்குள்ள வேலையாட்களை விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, அங்கு ஏற்கெனெவே’…………..’ நடமாட்டம் உண்டு என்று. பேயாவது பிசாசாவது அதெல்லாம் சுத்த பிரமை என்று இப்பொழுதெல்லாம் நான் சொல்லுவதே கிடையாது.

  perumalshivan said:
  May 30, 2011 at 12:20 pm

  pheygaludan enakku nheradi thodarbu(anubavam) kidaiyaathu aanaal pheyaal baathikkappattavargalai nheradiyaagapparthirukkiren avargal solli pala visayangal khettirukkiren .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s