ரஜினி நலம்பெற நறுக் பரிகாரம்

Posted on

ரஜினியே “காசு வாங்கறேன் .. நடிக்கறேன்”னு சொல்லிட்டதாலயும், இனி உங்களை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேனுட்டு கடந்த காலத்துல தலைகுனிய வச்சதை மறைமுகமா ஒப்புத்துக்கிட்டதாலயும் நம்ம ஹார்ட்டு கொஞ்சமா மெல்ட் ஆயிருச்சுங்கண்ணா. அது கூட அந்தாளுக்காக இல்லிங்கண்ணா அவரோட ரசிகர்களை நினைச்சு பொன்மேனி கணக்கா உருகுதுங்கண்ணா.

பார்ட்டி ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருக்கிறப்பயே ஃபுட் பாய்சன், நுரையீரல், சிறு நீரக பாதிப்பு இத்யாதியை முன் கூட்டியே கணிச்சு தெரிவிச்ச பதிவின் முக்கிய பகுதிகளை மறுபடி இங்கே தரேன். இன்னைக்கு நடந்துக்கிட்டிருக்கிறதை அன்னைக்கே ஐ மீன் 2011,பிப்ரவரி 28 ஆம் தேதியே கரீட்டா கணிச்ச தில்லு தந்த தில்லால ரஜினி நலம் பெற சில நறுக் பரிகாரங்களை இங்கே தர்ரேன்.

பதிவின் தலைப்பு: ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு
பதிவிட்ட தேதி:28/2/2011

http://anubavajothidam.com/rajini-astro-search/

ரஜினி ஜாதக குறிப்பு: ( ராசிச்சக்கரம் கீழே)

ஜனனம்: 12/12/1950 நட்சத்திரம்: திருஓணம் ராசி: மகரம் ,லக்னம் : சிம்மம்.முதல்ல கிரக நிலைய பார்ப்போம்:
2 ஆவது இடத்துல கேது சனி, நாலாவது இடத்துல சூரியன், அஞ்சுல சுக்கிர புதன், ஆறுல சந்திரன்,செவ்வாய், 7ல குரு, எட்டுல ராகு

ரெண்டுல கேது – எட்டுல ராகு.

இந்த அமைப்பு ஃபுட்பாய்சனிங், மர்ம சாவு, விடமருந்தி சாவு, பாம்பு கடித்து சாவு,மெடிக்கல் அலர்ஜி, அன் வாரன்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்சுக்கும் காரகமாகுது.

ரஜினியின் எதிர்காலம் கேள்விக்குறிதானா? பதிவிட்ட தேதி : 1/3/2011
http://anubavajothidam.com/raj-fut/

இப்போ 08/Dec/2009 => முதல் 07/Jul/2011 வரை சனி தசையில் சந்திர புக்தி.தசா நாதனான சனி இரண்டில் உட்காந்ததால் வாய விட்டு எதையோ புண்ணாக்கிக்கவேண்டி வரலாம். ஆனால் ஆத்துல விடமாட்டாய்ங்க. டோன்ட் ஒர்ரி.

இவரோட எதிரி ஒருத்தருக்கு வாயிதா பூடும் (ராமதாஸ்?) -ஒரு கடனை பைசல் பண்ணுவார் கூடவே கேது இவர் பேச்சே விஷமா பீய்ச்சியடிக்கலாம். அல்லது திங்கற சோறு ஒவ்வொரு பிடியும் விசமா இறங்கலாம். ஃபாரீன் கொலாபரேஷன் ப்ராஜக்ட் ஊத்தி மூடிக்கலாம். அல்லது தலைவரு மூட்டை அவுக்க வேண்டி வரலாம். அவுத்து கொட்டினது கொள்ளை போன மாதிரி நஷ்டமாகலாம். வெளி நாடு போன சமயம் பாஸ்போர்ட் தார வாந்து போயி பல்பு வாங்க வேண்டி வரலாம்.

புக்தி நாதனான சந்திரன் 6 ல இருக்கிறதால எதிரிகள் மாறுவார்கள்- நுரையீரல்,சிறு நீரகம்,மனம் பாதிக்கும். வீடு,வாகன வகையில் பிரச்சினை வரும்.முதலீடு,சொத்து வகையிலும் பிரச்சினைகள் முக்கியமாக மனத்தாங்கல் ஏற்படும்.

சரிங்கண்ணா நாம என்ன பலன் சொன்னோம் இன்னைக்கு என்ன நடந்ததுன்னு டேலி பண்ணிக்கிட்டிங்களா?

பாவம் நம்ம நல்ல நேரம் சதீஷ் ஏதோ ரஜினி ரசிகர்ங்கற முறையில ரஜினியோட உடல் நலம் பற்றி ஒரு பதிவு போட்டா ஆரோ ஒரு பார்ட்டி ரஜினி நெல்லாருக்கிறப்பயே சொல்லியிருந்தா நீ ருஸ்தும்னுட்டு கமெண்ட் அடிச்சிருந்தாரு.

இப்பம் ஜோதிட உலகத்தின் பிரதி நிதியா இந்த முருகேசன் முன் கூட்டியே பதிவு போட்டிருக்கேனே.. அந்த பார்ட்டி ஜோதிடத்தோட நம்பகத்தன்மைய ஏத்துக்குமா/

அது சரி.. பரிகாரம் சொல்லனும் அவ்ளதானே. சொன்னா போச்சு.

ஆரு ஜாதகத்துல ராகு கேது நெல்லாருக்கோ அவிகளுக்கு தேன் ஃபாரின் சரக்கு ஒர்க் அவுட் ஆகும். தலைவரு ஜாதகத்துல இவிக ரெண்டு பேரும் டப்பாஸு. ஆனா பாவம் அவரை ஃபாரீனுக்கு கூப்டுக்கினு பூட்டாங்கோ. பெரிய எடத்து விவகாரம் நாம என்ன சொல்ல முடியும்?

அதனால ராகு கேதுக்கு முதற்கண் பரிகாரம் பண்ணியாகனும்.

ராகுன்னா சினிமாதேன். பண்ண பாவத்துக்கெல்லாம் பரிகாரம் மாதிரி தலா ஒரு கோடி ரூபா செலவுல தன்னோட ஆர்.கே ப்ரொடக்ஷன்ஸ் சார்புல நாலு படம் எடுக்கனும் ( ஹார்ட்ஃபுல்லா கமிட் பண்ணிக்கினு நாலு டைரக்டருக்கு நாலு ஒரு ரூபா அட்வான்ஸ் கொடுத்தா போதுங்கண்ணா)

அந்த நாலு படமும் ஒரு விதவை – ஒரு கடத்தல்காரன் – ஒரு முஸ்லீம் – ஒரு பாம்பாட்டியோட வாழ்க்கைய உண்மையா பிரதிபலிக்கிறதா இருக்கனும். படம் 25 நாள் மட்டும் ஓடினாலும் பரவால்லைன்னு சின்சியரா எடுக்கனும். டைரக்டர்ஸ் கூட ரெண்டு பேரு முஸ்லீம் ரெண்டு பேரு கிறிஸ்தவர்களா இருக்கனும்.

கேதுன்னா ஆறாத புண்கள். இந்த மாதிரியான 7 கேஸை தேர்வு செய்து அவிக சிகிச்சை செலவை ஏத்துக்கறதோட அவிக பேர்ல தலா ஒரு லட்ச ரூபா எஃப்.டி போட்டு விட்டுரனும்.

இங்கன மெயினா பிரச்சினையை கொடுத்தது சந்திரன்.சந்திரன்னா மனோகாரகன். யூத் லுக் வேணம்னு நினைச்சது -டயட் கண்ட்ரோல் பண்ணதெல்லாம் மனசு பண்ண கூத்துதானே.

அதனால தலைவரு தன்னோட வாழ்க்கையில ஆருக்கெல்லாம் துரோகம் பண்ணாரோ அவிகளை எல்லாம் மன்சார நினைச்சு மன்னாப்பு கேட்டுக்கனும்னா. இதையெல்லாம் சின்சியரா ஒரு டிவி பேட்டியில போட்டு உடைக்கனும்னு கமிட் பண்ணிக்கனும்.

அடுத்து கிறிஸ்தவர்கள் /முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதிக்கு குடி நீர் வசதி செய்து தரனும். ட்ரெய்னேஜ் வசதியும் செய்துரனும்.

கடப்பாறைய விழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடிச்ச கதையா சர்ச்சுல போய் பிரார்த்தனை பண்ணிட்டா போதாதுங்கண்ணா.

ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
உங்கள்ள இதை படிச்சதும் உ.வ பட்டு காரியத்துல இறங்கிர்ர பார்ட்டிகளும் இருக்கலாம்.ஆனால் உங்க காசுல,உங்க கஷ்டத்துல பரிகாரம் பண்ணா ஒர்க் அவுட் ஆகாதுங்கண்ணா. சொம்மா காசுபணம், கால நேரம் தான் விரயம்.

இதை தலைவரு காசுல தலைவரை சேர்ந்தவுக பண்ணனுங்கண்ணா..

Advertisements

7 thoughts on “ரஜினி நலம்பெற நறுக் பரிகாரம்

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 1:45 am

  வணக்கம் நைனா.

  அருமையான பரிகாரம். ரசிகர்கள் நிச்சயம் உடனடி அக்சன்ல நிச்சயம் எறங்குவாங்க. அல்லது எரக்கிருவோம்லா. இவிக செஞ்சா அவிகளுக்கு குளுக்கோஸ் கணக்கா ஏதும் ஏறுமா நைனா. ரசினி வேற வெளிநாட்டுக்கு ட்ரீட்மெண்டுக்கு போயிருக்கு. எங்கூருல உள்ள ரசிகருங்க தொல்ல தாங்கமுடியல நைனா. ரெண்டு நாளிக்கி மிந்தி அன்னதானம், இலவச நீர் மோர் அது இதுன்னு ஒரே இலவசமயந்தேன்.

   வினோத் said:
   May 30, 2011 at 5:29 am

   ரசினி … ஆயுர் பாவம் பாருங்க பாண்டி..

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:06 am

  நைனா, சைடுல உள்ள “கவிதை கேளுங்கள்” நெஜமாலுமே ஒன்னோட வாயஸ்தானா! சூப்பரா டமிலு நடனமாடுதே. நான் நீ மெட்டுராசு பக்கம் அவசரத்துக்கு ஒதுங்குனதால சென்ன பாசை ஒட்டிக்கினு போலன்னு தப்பா நெனச்சிட்டேனப்பு. நைனா ஒரு டவுட். ஒனக்கு தாய்மொழி டமிலா இல்லாங்காட்டி டெலுங்கா? கவித டக்கரா இருக்கு. அதுல தேவையான எடத்துல ஏத்தமும் எரக்கமும் அருமை.

  kayalvizhi said:
  May 29, 2011 at 2:52 am

  Your Tamil is horrible. Cannot understand at all. Write in good Tamil.

   உண்மை said:
   June 1, 2011 at 1:39 pm

   // Your Tamil is horrible. Cannot understand at all. Write in good Tamil. //

   அதை நீ தமிழ்ல எழுதி கேக்கனும் !

  sugumarje said:
  May 29, 2011 at 6:04 am

  //சூப்பரா டமிலு நடனமாடுதே.//
  //Your Tamil is horrible. Cannot understand at all. Write in good Tamil.//
  அய்யா… டசவுசருக்கு மறுமொழி பலமா இருக்கே 🙂

   S Murugesan said:
   May 29, 2011 at 12:23 pm

   சுகுமார்ஜீ !
   திருவிளையாடல்ல விறகு வெட்டி ரோலையும், சிவன் ரோலையும் போட்டு குழப்பிக்கிட்டா ஏ.பி.நாகராஜன் என்ன செய்யமுடியும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s