சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்:3

Posted on

அண்ணே வணக்கம்ணே,
சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்ங்கற இந்த தொடரோட மொத அத்யாயம் ரெம்ப மொக்கையா போச்சுன்னுட்டு ரெண்டாவது சாப்டர்ல டிப்ஸ் மழையா பொழிஞ்சாச்சு.

தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி. இப்பம் இன்னம் சில டிப்ஸ் பார்த்துட்டு நின்னு நிதானமா ரோசிப்பம்

1.லக்னத்தை நெல்லா ஸ்கேன் பண்ணிக்கனும். ஏன்னா இது ஜாதகரை காட்டற இடம். லக்னத்துல ஆரு நின்னா? ஆரெல்லாம் பார்க்கிறான்னு நிதானமா நோட் பண்ணிக்கனும். குரு பார்த்தா கோடி புண்ணியம் அது இதுன்னு ஜல்லியடிக்காம நிறுத்தி நிதானமா பார்க்கனும்.

இங்கே சுபர்/அசுபர்ங்கற ப்ரஸ்தாவனை வந்தே தீரும். நைசர்கிக சுபத்வ பாபத்வத்தை கணக்குலயே வச்சுக்காதிங்க. லக்னாத் சுபத்வ பாபத்வம் தான் முக்கியம்.

குரு நைசர்கிக சுபர். ஆனால் இவரு ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதி. குரு லக்னத்தை பார்த்தா என்ன ஆகும்?

சனி நைசர்கிக பாவி . ஆனா மகரத்துக்கு ? லக்னாதிபதியே இவர் தான் இவர் லக்னத்தை பார்த்தா நல்லதுதானே. புலி குரூர மிருகமா இருந்தாலும் தன் குட்டிக்கு அது தாய் தானே.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அடிப்படை குணம் இருக்கும். உ.ம் சூரியன் – விழிப்பு நிலை ,சந்திரன் -கற்பனை – சஞ்சலம் செவ் -கோபம் ராகு – ரகசியம் குரு -ப்ளானிங் ,சனி – சோம்பல், நீண்ட கால உழைப்புக்கு தயங்காத தன்மை புதன் -கணக்கு ,கம்யூனிகேஷன் ,கேது – லோகாயதமா போகும்போது அல்லல் அலைச்சல் விரக்தி , ஸ்பிரிச்சுவலா போகும்போது தியானம்,யோகம் சுக்கிரன் -கில்மா

லக்னத்தை எந்த கிரகமெல்லாம் பார்க்குதோ அது தொடர்பான விதைகள் ஜாதகனோட மைண்ட்ல இருக்கும். அந்த கிரகங்கள்ள லக்னாத் சுபன் பார்த்தா அந்த விதை கெட்டதா இருந்தாலும் ஜாதகனுக்கு லாபம் தரும். லக்னாத் பாபி பார்த்தா அந்த விதை நல்ல விதையா இருந்தாலும் ஆப்பு வச்சிரும்.

ஜோதிடத்துல ஒரே ஒரு பாய்ண்டை வச்சுக்கிட்டு பலனை அடிச்சு சொல்லக்கூடாது. அதுக்கு சப்போர்ட்டிவா இன்னொரு அமைப்பு இருக்கா பார்க்கனும். உம்: ஐந்தில் குரு நின்றால் ஆண் வாரிசில்லைங்கறது பொது விதி. குரு நின்ற பாவாதிபதி என்ன ஆனாருன்னு பாருங்க. அவர் ஆணா பெண்ணா பாருங்க. பலம் பெற்றாரா பலஹீனமடைஞ்சாரா பாருங்க. அப்பாறமா ரிசல்ட்டை கொடுங்க.

ஒவ்வொரு லக்னத்துக்கும் பேசிக்கல் குவாலிட்டி இருக்கும். எக்காரணத்தை கொண்டும் – எக்காலத்துலயும் அந்த குவாலிட்டி மாறவே மாறாது.

உ.ம் ரிஷபம். இவிகளுக்கு காசு பணம் குடும்பம் பேச்சுன்னா வெல்லம். தாத்தாவை பாருங்க இந்த க்ளைமேக்ஸ்லயாவது இதை விட்டாரா?

இப்பயாச்சும் ராசா,கனிமொழியை பார்ட்டிய விட்டு சஸ்பெண்ட் பண்ணி கலைஞர் டிவியை இழுத்து பூட்டி சாவியை சி.பி.ஐ கிட்டே ஒப்படைக்கலாமில்லை. ஊஹூம்.

அந்த மாதிரி ஒவ்வொரு லக்னத்துக்கும் உள்ள பேசிக்கல் குவாலிட்டி என்னங்கறதை மனசுல வ்ச்சு – அங்கே எந்த கிரகம் இருக்கு. – எந்த கிரகமெல்லாம் பார்க்குது – இவன் ஹெல்த் எப்படி? குணம் எப்படி? கோபக்காரனா? சதிகாரனா? கோழையா வீரனாங்கற மேட்டரை எல்லாம் ஜட்ஜ் பண்ணிக்கனும்.

அப்பத்தேன் மற்ற பாவங்கள் ,பாவாதிபதிகள், கிரக சேர்க்கைகள் எந்த மாதிரி சாய்ஸ் தர்ரப்ப எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவான்னு கெஸ் பண்ணமுடியும்.

சரிங்கண்ணா நான் அடிக்கடி சொல்ற ஆழமான உடலுறவு மாதிரி உலகத்தை மறந்து சப்ஜெக்டுக்குள்ள ரெம்ப டீப்பா போயிட்டம். கொஞ்சம் போல தம் ஆத்திக்கலாம்.

நம்ம சைட்டுக்கு தினசரி விசிட் அடிக்கிறவுக பல விதம். அவிகளுக்கு அஸ்ட்ராலஜி மட்டும்னா பிடிக்காது – அரசியல் சினிமா ஆன்மீகம் ,தத்துவம் எல்லாம் கலந்து கொடுத்தா ஓகே. -இது ஒரு விதம்.

இன்னொரு விதமான க்ரூப் இருக்கு கில்மாவும் வேணம் – சென்சேஷனும் வேணும். அல்லாரையும் திருப்தி படுத்தறது முடியாத காரியம்.

என்னை பொருத்தவரை அஸ்ட்ராலஜிங்கறது நமக்கு ஆத்தா கொடுத்த பல நூறு வித்தைகள்ள இது ஒன்னு தட்ஸால். ஆனால் என்ன பண்ண இதான் சீக்கிரத்துல போனியாகுது. காசு புரளுது. கூடவே ஆன்மீகத்தையும் ஊடுபயிரா விளைவிக்க முடியுது.

ஆக்சுவலா ஜோதிடம்லாம் இன்னொருத்தரு கத்துக்கொடுத்து கத்துக்கற மேட்டரில்லேங்கறது என் கருத்து. எனக்கு எல்லாமே உதிரியாத்தேன் கிடைச்சது . நானா ஒரு சரடு தயாரிச்சு ஒரு குன்ஸா கோர்த்து வச்சிருந்தேன்.

1990 மார்ச் டு ஜூன் ஒரு ட்யூட்டோரியல்ல கேம்ப் போட்டேன்.அப்பம் ஜாதகம் வந்ததும்.. அந்த லக்னத்துக்கு ஆரு பாவி,ஆரு சுபன் ஆரு மாரகன்னு புஸ்தவம் பார்த்து தனியா குறிச்சுக்கிட்டுத்தேன் பலன் சொல்லவே ஆரம்பிப்பேன். அந்த நிலையில இருந்து இன்னைக்கு எந்த கிரந்தத்துலயும் சொல்லப்படாத கிக்கான மேட்டர்லாம் வாரிக்கொட்டறோம்னா என்ன அர்த்தம்?

தகவல்களை உதிரியா சேமிச்சு வச்சுக்கறது முக்கியமில்லை. அதை செரிச்சுக்கனும்.ரத்தத்துல கலந்துக்கனும். அசை போட்டுக்கிட்டே இருக்கனும். அந்த செறிவை டைமிங்கோட அப்ளை பண்றது கூட பெருசுல்ல. ரிசல்ட் எப்படி இருக்குன்னு பார்த்து அந்த அனுபவத்தை டேட்டா பேஸ்ல பத்திரப்படுத்திக்கனும்.

நான் எந்த அளவுக்கு ரோசிப்பேன்னா உடல்,மனம்,புத்தி எல்லாத்தையும் கடந்து அது போயிட்டே இருக்கும். குடும்ப ஜோதிடம்ங்கற புஸ்தவம். சோதிட அரிச்சுவடி மாதிரி. அதுல செவ் 11 ல இருந்தா பூமிலாபம் -சகோதர நஷ்டம்னு போட்டிருந்தாய்ங்க.

இன்னைக்கு கடல் கடந்தும் பயணிச்சு சனங்களுக்கு உடனடி லாட்டரி கணக்கா உபயோகப்பட்டு க்கிட்டிருக்கிற நம்ம நவீனபரிகாரங்களுக்கு விதை இந்த வரிதான். இதுல அப்படி என்னதான் சூட்சுமம் இருக்குன்னு கொஞ்சம் போல முக்கிப்பாருங்கண்ணா.

இத்துணூண்டு வரியில இருந்து ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கான மேட்டரை டெவலப் பண்றதுன்னா அது மனுஷ யத்தனம்னு சொல்ல முடியாது. இங்கனதான் நம்ம பாஸுங்க, பாசினி (ஆத்தாப்பா) எல்லாம் வர்ராய்ங்க. நிக்கறாய்ங்க.

நம்ம லைஃப்ல எதெல்லாம் நடக்கனும்னு இருக்கோ அது எல்லாத்தையும் 2 வருசம் முந்தியோ , அல்லது பத்து வருசம் முந்தியே ஆரம்பிச்சு தொலைச்சுர்ரது வழக்கமா போச்சு.

வாட் ஐ திங்க் ஈஸ் மை மைண்ட் ஸ்மெல்ஸ் தெ ஃப்யூச்சர் இன் அட்வான்ஸ். இதனால சாதிக்கிறதுன்னு ஒன்னம் கிடையாது.

ஜெ மேட்டரையே எடுத்துக்கங்க 2000 – 2001 ஜூனுக்குள்ளயே கணிப்பு – கணிப்பு உண்மையாறது – அம்மா தேங்க்ஸ் கார்ட் அனுப்பறது எல்லாம் முடிஞ்சு போச்சு – என்ன ஒரு வித்யாசம்னா அப்போ கணிப்பு நெஜமான பிற்பாடு கட்டுரை பப்ளிஷ் ஆச்சு. இப்பம் கொஞ்சம் முன்னே பின்னே.ஆனால் இந்த சின்ன வித்யாசத்தோட விளைவு ( நமக்கு இன்னம் கொஞ்சம் தாவு தீர்ந்து போயிட்டிருக்கு- வேற என்ன மாடு மாதிரி பலன் அடிச்சிக்கிட்டே இருக்கறதுதேன்)

இப்பவும் என் சந்தேகம் என்னன்னா இந்த டிப்ஸ் சமாசாரம் கூட கொஞ்சம் முன் கூட்டி ஆரம்பிச்சுட் டேனோங்கறது தான். சரிங்கண்ணா துவங்கியாச்சு. முடிச்சுருவம்ல. கவலை வேண்டாம்.

இப்போ என் ஜாதகத்தையே கூட உதாரணமா எடுத்துக்கிடுங்க. லக்னம் கடகம். லக்னத்துல சூரிய -குரு-புதன். என் குண நலன், உத்தி,வியூகம்,புரிதல் பத்தி கெஸ் பண்ணுங்க பார்ப்போம்.

Advertisements

17 thoughts on “சூப்பர் ஜோதிடராக டிப்ஸ்:3

  Sudharsan said:
  May 27, 2011 at 7:58 pm

  hai Murugesan sir,
  My lagnam is katagam.In lagnam I have moon and mars.What is the benefit?

   S Murugesan said:
   May 28, 2011 at 1:05 pm

   Sudarsan,
   Benifit : Real Estates Effect: Sudden Changes in Mood

  R.Puratchimani said:
  May 27, 2011 at 8:39 pm

  kaaranam solla virumba villa only points
  நீங்க செக்ஸ் பத்தி அதிகமா நினைக்க எழுத லக்ன அமைப்பு தான் காரணம்….
  நீங்க nallaa yosikka, aaraichi panna intha அமைப்பு தான் காரணம்
  நீங்க “அவாள்” மேல கோப பட காரணம் இங்க இருக்கிற ஒருத்தர் நவாம்சத்துல suththamaa valuvizhanthu vittaar …..
  நீங்க idam porul aeval theriyaama ezutha kaarnamum intha லக்ன அமைப்பு தான்….
  உங்களுக்கு koncham kadan irukkalaam…
  . aethenum noi thontharavu irukkalaam….
  pira koal nilaigalai poruththu ivaigal maaravum seiyyalaam…
  enna soldreenga sir

   Name said:
   May 28, 2011 at 9:35 am

   மற்றவங்களுக்கு உதவி செயய்ய்னுமு எண்ணம் வர, உங்களுக்கு ஜோதிட ஆர்வம் மற்றும் அறிவு வர..உங்களை சுற்றி எதிரிகள் இருக்க காரணமும் இந்த அமைப்பு தான்

    R.Puratchimani said:
    May 28, 2011 at 9:36 am

    Naan thaan antha “Name”

  Mani said:
  May 28, 2011 at 7:25 am

  ////புலி குரூர மிருகமா இருந்தாலும் தன் குட்டிக்கு அது தாய் தானே.////

  அண்ணே! சூப்பர். ஆயிரம் வாலா கணக்கா கொளுத்திவிடறீங்க. அருமையாக இருக்கிறது உங்கள் டிப்ஸ். எவ்வளவு தூரம் நீங்க ரோசிச்சிருந்தா, அனுபவப்பட்டிருந்தா இவ்வளவு தெளிவா அழகா கோர்வையா எழுத முடியும்.

  உங்க ஸ்டைல் எழுத்துக்கு நான் அடிமையாயிட்டேன்.

  இடையில தம் ஆத்த போயிட்டீங்க. ஆனாலும் அங்கேயும் இந்த மேட்டர தான் அசைபோடறீங்க.

  நீங்க வெறும் சாதாரண ஜோதிரடா இருக்க விரும்பலை அதுக்கும் மேல ஒரு உயர்ந்த லட்சியத்தோட இருக்கறீங்க, இருக்க விரும்பறீங்க என்பது எங்களுக்கு புரிகிறது.

  அண்ணே ஜோதிடம்ங்கறது சாதாரண விஷயம் இல்லை உங்களோட அஜெண்டா, நோக்கம் முழுமையும் இதிலே உள்ளடங்கியிருக்கிறது என்பதை ரோசிச்சிங்களா அண்ணே (நீங்க எவ்வளவு ஆழமா போறவங்க நிச்சயம் இதையெல்லாம் தாண்டிதான் போயிருப்பீங்க) .

  நான் என்ன நினைக்கிறேன்னா நாம் சாராண மனிதர்கள் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் நன்மை தீமைகளை நிர்ணயிக்கும் சக்தியற்றவர்கள். நம்மை வழிநடத்துவது அந்த இறைவன் அவனது தூதுவர்களான நவகிரக நாயகர்கள். அவர்களைப்பற்றி அவர்கள் செய்ய போகும் நன்மை தீமைகளைப் பற்றி அறிந்து கொள்ள வழிசெய்வது ஜோதிடம். அறிந்தபின் நமது மதியால் முடிந்தவரை நமக்கு சாதகமாக்க முயல உதவுவது ஜோதிடம்.

  நம் பவர் என்னவென்று நமக்கு தெரிந்தபின்பு அதற்கு ஏற்ப நாம் வாழமுடியுமல்லவா? பிறரை வழிநடத்தவும் நம்மால் முடியும் அவ்வாறு பெரிய தலைவர்களுக்கு உதவினால் அவர்களை நம் அறிவாற்றலால் வழிநடத்த முடிந்தால் உங்கள் ஆ.இ.2000 முழுவதும் சக்சஸ் ஆகிவிடாதா?

  அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும். மேலும் மேலும் ரோசிச்சு 40 முதல் 80 வரையிலான உங்கள் பலன்களை இன்னும் பட்டைதீட்டி மெருகேற்றினால் மற்றுமொரு பி.வி.இராமன் உருவாகலாம் இல்லையா அது ஏன் நீங்களாக இருக்க கூடாது. உங்களது தனிப்பட்ட திறமை மற்றவர்களை உங்களை நோக்கி தானாக இழுத்துவரும். உங்கள் கனவுகளை நனவாக்கும்.

  சாதாரண சூரிய ஒளி எல்லா பொருட்களின் மீதும் படுகிறது ஆனால் பஞ்சின் மீது லென்சு மூலம் அதனை குவித்தால் தீப்பற்றி எரிகிறது அல்லவா? அப்பதான் தலை இதுவும்.

  எனவே நான் வெறும் ஜோதிடனாக இருக்க விரும்பவில்லை என்று இனிமேல் கூறாதீர்கள் தலை மேலும் துல்லியமான ஜோதிடனாக இருக்க ஆசைப்படுங்கள் தலை. அது உங்கள் கனவு திட்டத்தை நிறைவேற்ற மிகவும் உதவியாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

   S Murugesan said:
   May 28, 2011 at 1:03 pm

   மணி சார்,
   //நம் பவர் என்னவென்று நமக்கு தெரிந்தபின்பு// – இது ஓகே
   // அதற்கு ஏற்ப நாம் வாழமுடியுமல்லவா? // – இதுவும் ஓகே

   //பிறரை வழிநடத்தவும் நம்மால் முடியும்// – இது 00.01% கூட சாத்தியமில்லே. ஏன்னா ஒவ்வொரு மன்சனும் ஒரு போஸ்ட் கார்டு மாதிரி கடவுள் கிளீனா அட்ரஸை ப்ரிண்ட் பண்ணியே தொலைச்சுட்டாரு.

   //அவ்வாறு பெரிய தலைவர்களுக்கு உதவினால் அவர்களை நம் அறிவாற்றலால் வழிநடத்த முடிந்தால் உங்கள் ஆ.இ.2000 முழுவதும் சக்சஸ் ஆகிவிடாதா? //

   இது தான் பிராமணீயத்தின் சாரம். என் ஜோதிடம் மக்கள்/ தலைவர்கள் கவனம் கவரும் ஒரு உத்தி மட்டுமே. மற்றபடி லட்சியத்துக்காக கயித்துல நடக்கிறது – நெருப்பு வளையத்துல குதிச்சு வர்ரதெல்லாம் தனி டிப்பார்ட்மென்ட்.

   //எனவே நான் வெறும் ஜோதிடனாக இருக்க விரும்பவில்லை என்று இனிமேல் கூறாதீர்கள் தலை மேலும் துல்லியமான ஜோதிடனாக இருக்க ஆசைப்படுங்கள் தலை//

   ஊருக்கு நூறு துல்லிய சோசியர்கள் இருக்காய்ங்க.. நாம மார்க்கெட்டுக்கு வந்தது காசு தேத்தி ஆ.இ.2000 ஐ ப்ராப்பகண்டா பண்ணத்தேன்..துல்லியமான ஜோதிடனாகனும்னா நான் நாத்திகனாகனும். அதைவிட குன்ஸுல காலம் ஒட்டற ஆத்தாவின் செல்லப்பிள்ளையாவே இருக்க விரும்பறேன்.

    Mani said:
    May 28, 2011 at 2:42 pm

    /////துல்லியமான ஜோதிடனாகனும்னா நான் நாத்திகனாகனும்.//////

    இனிமேல்தான் நீங்க நாத்திகனாக ஆகனுமாக்கும். ஜனம் எதையெல்லாம் ஆத்திகம்ன்னு நம்பிகிட்டு இருக்கோ அதையெல்லாம் நீங்க கிழிச்சு தொங்க விட்டாச்சு தலை. எதுக்கு முக்காடு. தூக்கி தூரப்போடுங்க தலை.

    ////குன்ஸுல காலம் ஒட்டற ஆத்தாவின் செல்லப்பிள்ளையாவே இருக்க விரும்பறேன்.//////

    இது இது தான் வேணாங்கறது. ஆத்தாவின் செல்லப்பிள்ளையாவே காலத்தை ஓட்டினா அப்புறம் ஆ.இ.2000 மட்டும் எதுக்காம்.

    S Murugesan said:
    May 28, 2011 at 6:23 pm

    மணி,
    ஆ.இ.2000ங்கறது மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். சுய நலம் மன்சனை சுருக்கும். பொது நலம் எக்ஸ்பாண்ட் பண்ணும். உயிரோட அடிப்படை இச்சை பரவுதல் தான். அதுக்கான லொடக்கானி மார்கம்தேன் செக்ஸ். அதை 1984 டு 1986 லயே உண்டு இல்லைன்னு பண்ணிட்டம்.

    அடுத்து இது ஆத்தாளுக்கும் நமக்கும் உள்ள அக்ரிமெண்ட். நீ என்னை பார்த்துக்கிட்டா நான் மண்ணைப்பார்த்துக்கறேன்.

    உயிர்கள் செய்வது ரெண்டே வேலை கொல்வது -கொல்லப்படுவது. ஆ.இ.2000 பிரச்சாரம்,அமல் எல்லாம் ஏறக்குறைய தற்கொலை முயற்சி மாதிரி.

    தில்லிக்கி ராஜைனா தல்லிக்கி பிட்டே – தில்லிக்கு ராஜான்னாலும் தாய்க்கு பிள்ளையாதான் இருக்கனும். அதான் சுகம். அம்மா சுகம்.

    மடமை சுகம்.அறிவுடைமை நரகம். என் நரகத்துல அப்பப்போ வீசற தென்றல் ஆத்தா.

  Mani said:
  May 28, 2011 at 9:31 am

  ////இப்போ என் ஜாதகத்தையே கூட உதாரணமா எடுத்துக்கிடுங்க. லக்னம் கடகம். லக்னத்துல சூரிய -குரு-புதன். என் குண நலன், உத்தி,வியூகம்,புரிதல் பத்தி கெஸ் பண்ணுங்க பார்ப்போம்////

  ட்ரை பன்னி பார்க்கிறேன் தலை. சரியாக இருந்தா கன்ஃபார்ம் பன்னுங்க. தப்புன்னா திருத்தம் பன்னுங்க ஓ.கே.வா.

  பதிலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன். தனிபதிவாக போடுங்களேன்.

   S Murugesan said:
   May 28, 2011 at 12:55 pm

   மணி,
   தனிப்பதிவு தானே .ஆஹா போடுங்களேன். கரும்பு திங்க கூலியா

    Mani said:
    May 28, 2011 at 2:15 pm

    தலை உங்கள் மெயில் ஐ.டி.க்கு (chittoor.s.murugesan@gmail.com ) எனது பலன்களை அனுப்பியுள்ளேன். பாருங்கள் முடிஞ்சா அப்படியே போடுங்களேன். என்னை கிழிச்சி (என் பலன்களை) நீங்க ஒரு தனிப்பதிவு போட்டாக்கூட ஓ.கே.தான்.

  கிருமி said:
  May 28, 2011 at 4:35 pm

  ரெண்டு நாளா உருப்படியான பதிவுகள்.
  ஒங்க ஜாதகத்தை பார்த்தேன். அதுல உச்ச குரு, நவாம்சத்துல நீசமடைஞ்சது ஒரு பிரச்சினையே இல்ல. ஏன்னா அவரு ஏற்கனவே அஸ்தமனத்துல பொசுங்கிட்டாரு. இதான் ஒங்களோட பிராமண எதிர்ப்புக்கு முக்கிய காரணம். சர்க்கரை வியாதி இருக்கா என்ன?

   Mani said:
   May 28, 2011 at 4:58 pm

   கிருமி சார் நம்ம தல ஜாதகத்தில் குரு என்னவே பவர் இல்லைதான் அதுக்காக அதனால தான் அவரு பிராமண எதிர்ப்பு பண்றாருன்னு கெஸ்ஸிங் பண்ணாதீங்க. அவருக்கு அவிங்களால எதாச்சும் தொல்லை இருக்கலாம் (குரு 6க்குடையவர்). ஆனால் குருவின் 9ம் வீட்டில் இருக்கும் சனியை பாருங்கள்.

   அவருடையது பிராமண எதிர்ப்புங்கதைவிட அவாளோட நோக்கத்தை, சுயநலத்தை மக்களுக்கு குறிப்பா அடித்தட்டு மக்களுக்கு புரிய வைக்கனும்கறது தான் அவரது குறிக்கோள்.

    கிருமி said:
    May 28, 2011 at 5:09 pm

    //அவருடையது பிராமண எதிர்ப்புங்கதைவிட அவாளோட நோக்கத்தை, சுயநலத்தை மக்களுக்கு குறிப்பா அடித்தட்டு மக்களுக்கு புரிய வைக்கனும்கறது தான் அவரது குறிக்கோள். //

    எதையும் எப்படியும் தொடர்புபடுத்தலாம், சொல்லலாம், இதையும் அவரே சொன்னார்.
    அவரது குறிக்கோள்ள பிராமண எதிர்ப்பு இருக்கா இல்லியா? லட்சியம், குறிக்கோள், பிராமணனை எதிர்க்கலை, பிராமணியத்தை தான் எதிர்க்கிறார்னு அரசியல்வாதி மாதிரி சொல்லாதீங்க. இங்க நாம பாக்கறது சோசியம், வார்த்தை விளையாட்டு இல்ல.

    //அவருக்கு அவிங்களால எதாச்சும் தொல்லை இருக்கலாம் (குரு 6க்குடையவர்).//
    கிரகமே அத்தமனமாயிருச்சி, அப்றம் தொல்லை இல்லாமலா இருக்கும்? அதான் “பிராமண சதியால் மொக்கை ஆயிட்டேன்”னு எத்தனை புலம்பி இருக்காரு அண்ணன்.

  sas said:
  May 28, 2011 at 4:43 pm

  நீங்கள் எந்த அயனம்சம் பாவிக்கிறீங்கள்?

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:33 am

  சூப்பர் டிப்சு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s