சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் ( நெஜமாலுமே)

Posted on

1.ஒர்ஜினல் புக்ஸ் படிங்க ( உரை ,மொழி பெயர்ப்பு எல்லாம் எக்ஸ்க்யூஸ் )

2.மனப்பாடம் பண்ணாதிங்க (ஒரு சிலதை தவிர – ஐ மீன் கிரக,பாவ காரகத்வம் மற்றும் ஒரு சில பொது சிறப்பு விதிகள்)

3.படிக்க ஆரம்பிச்ச வாரம் – பத்து நாள்ல தாளி ஜோதிடமே நம்ம பாக்கெட்லங்கற ஃபீலிங் வரும். அதை வளரவிடாதிங்க. (இப்படித்தேன் அந்த காலத்துல நானும் அலைஞ்சேன்)

4. ஜோதிட விதிகளை தெரிஞ்சுக்கிட்டா போதாது புரிஞ்சிக்க பாருங்க. உதாரணமா சந்திர மங்கள் யோகம்னா என்ன? சந்திர செவ் சேர்க்கை . புஸ்தவத்துல இன்ன கிரக ஸ்திதி இருந்தா இன்னது நடக்கும்னு மட்டும் சொல்லியிருப்பாய்ங்க.

சப்போஸ் அது நடக்கலைன்னா என்ன காரணம்னு சொல்லியிருக்காது. மேலும் ஒரு வேளை புஸ்தவம் சொன்ன பலன் நடந்துருச்சுன்னா அது எப்படி மெட்டீரியலைஸ் ஆச்சுங்கற மேட்டர் புஸ்தவத்துல இருக்காது.

சந்திரன்னா மனசு – செவ்வாய்னா கோபம். சந்திரன் எந்த நட்சத்திரத்துல/எந்த பாதத்துல என்ன பண்ணுவாருன்னு கெஸ் பண்றதே கஷ்டம். ( பாதம்: ஜஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் – அதுலயும் ஒரு பாத முடிவுல விவாதம் நடக்குதுன்னு வைங்க அஞ்சு பத்து நிமிசத்துல கூட சீன் மாறிடலாம்.

ஒரு ஆளுக்கு கோபம் திடீர்னு முன்னறிவிப்பு இல்லாம வருதுன்னு நாலு பேருக்கு தெரிஞ்சுட்டா அவிக அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ( அட போடா நான் கேட்க மாட்டேன் அந்தாளுக்கு நாய்க்கு வரமாதிரி வரும்) இது ஒரு ப்ளஸ்தானே.

சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி. செவ்வாய்ன்னா ரியல் எஸ்டேட்ஸ். இவன் ஏக்கரு 1 லட்சத்துக்கு வாங்கின நிலம் அடி 300 ரூ 400 ரூவாய்க்கு வித்தா எப்பூடி இருக்கும்? இதைத்தான் சந்திரமங்கள யோகம்னு சொல்றாய்ங்க. ( யோகம் எப்படி மெட்டீரியலைஸ் ஆகும்னு சொல்றேன் பார்த்திங்களா? இந்த ரேஞ்சுக்கு வரனும்னா அதே நினைவா இருக்கனும். படிச்சதை ரோசிக்கனும். ரோசிச்சதை அசை போடனும்.

5.விதிகளை குருட்டுத்தனமா அப்ளை பண்ணக்கூடாது
உதாரணமா சந்திர மங்கள யோகத்தையே எடுத்துக்குவம். லக்னம் கடகம்.அங்கன சந்திர செவ் சேர்க்கை ஏற்பட்டா ஓகே லக்னம் விருச்சிகம் அங்கே சந்திர செவ் சேர்க்கை ஏற்பட்டா ஓகே. சப்போஸ் லக்னம் கன்னி அங்கன செவ் சந்திர சேர்க்கை ஏற்பட்டா யோகம் ஒர்க் அவுட் ஆகுமா?

கிரகயோகம்னா கிரக சேர்க்கைன்னு அர்த்தம். சமஸ்கிருதத்துல கில்மாவுக்கு சம்யோகம்னு ஒரு வார்த்தை உண்டு. சம் = நல்ல யோகம் = சேர்க்கை .

ரெண்டு கிரகம் சேர்ந்துட்டதாலயே கூரைய பிச்சிக்கிட்டு கொட்டாது. அந்த ரெண்டு கிரகமும் அந்த லக்னத்துக்கு அனுகூல கிரகமா இருக்கனும். ரெண்டு பேர்ல அட்லீஸ்ட் ஒருத்தருக்காவது பலம் இருக்கனும்

6.விதிகள்ள எது தவிர்க்க முடியாதது – எதெல்லாம் சப்சிடரிங்கற ஜட்ஜிங் முக்கியம்.

உதாரணமா 4 விதமான பஞ்சமகா புருஷ யோகங்களும் ஜாதகத்துல இருக்கு .ஆனால் லக்னாதிபதி நீசம். இதுல எந்த பாய்ண்ட் தவிர்க்க முடியாதது? லக்னாதிபதி நீசமானதுதேன். ஏன்? கட்டிலை வச்சுத்தேன் தொட்டில் போடமுடியும். ரஜினிய வச்சுத்தான் ராணா. ராணாவை வச்சு ரஜினி இல்லையே.

7.தாளி ஆப்பரேஷன் பண்றப்ப சக டாக்டர்கள் எதுனா தப்பு பண்ணிட்டாய்ங்களோன்னு சீஃப் டாக்டர் கொஞ்சமா டர்ராவாராம். அப்பாறம் ங்கொய்யால போஸ்ட்மார்ட்டத்துல தெரிஞ்சுரும் ஆவட்டும்னு மனசை ஆத்திக்குவாராம். ஆப்பரேஷன் பண்றது கஷ்டம். போஸ்ட் மார்டம் ஈஸி (பேசண்ட் ஃபுல் கோ ஆப்பரேசன் தருவாரே. நான் என்ன சொல்லவரேன்னா எதிர்காலத்தை கணிச்சு சொல்றது கஷ்டம்.இது ஆப்பரேஷன் மாதிரி. ஆனா நடந்து போன விஷயத்தை அனலைஸ் பண்றது ஈஸி. இது போஸ்ட் மார்ட்டம்.

கத்துக்குட்டியா இருக்கிறச்ச போலி டாக்டர் மாதிரி ஆப்பரேஷன் பண்றதை விட போஸ்ட் மார்டம் பண்றது ஈஸி. நம்மாளுங்க கூட வி.ஐ.பிக்களோட ஜாதகங்கள எடுத்து வச்சுக்கிட்டு எப்போ செயிலுக்கு போனாய்ங்க? எப்போ போட்டுத்தள்ளிட்டாய்ங்கனு ஆராய்ச்சி பண்ணுங்க இது சேஃப். மருத்துவம் வளர்ந்ததே போஸ்ட் மார்ட்டத்தாலதேன். ஃப்ரீயா உடுமாமே..

8.போஸ்ட் மார்டம் பண்ணனும்னாலும் கத்திய கரீட்டா போடனுங்கண்ணா .அதனால ஒவ்வொரு கிரகத்தை பத்தியும் டீப்பா தெரிஞ்சுக்கங்க. கதைகள் இருக்கும். க்தை தானேனு நெக்லெக்ட் பண்ணாதிங்க. அதனோட உள்ளர்த்தம் என்னனு ரோசிங்க. முருகேசன் நாளைக்கு போடப்போற பதிவு கில்மாவா? ஆன்மீகமா? ஜோதிடமான்னு கெஸ் பண்றாப்ல இந்த கிரகத்தோட கேரக்டர் இது . இது நின்ன பாவத்தோட காரகத்வம் இது இங்கன நின்னா என்ன ஆகும்னு லாஜிக்கலா யோசிக்கனும்

அதே போல பாவங்கள்.ஒவ்வொரு பாவமும் எதை கண்ட்ரோல் பண்ணுதுன்னு பாருங்க. ஒவ்வொரு பாவகாரகத்வ ஐட்டங்களும் ஒன்னோட ஒன்னு எப்படி பின்னிப்பிணைஞ்சிருக்கு – இன்டர்லிங்க் ஆயிருக்குன்னு பாருங்க. உ.ம் 4 ஆம் பாவம் தாய் வீடுங்கறாய்ங்க. தாய்க்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? வீடு சரியில்லைன்னா அம்மாவுக்கு என்ன நஷ்டம் . அம்மா சரியில்லைன்னா வீட்டுக்கு என்ன நஷ்டம் ரோசிங்க

9..இப்போ ஜாதகத்தை எடுத்து வச்சுக்கங்க. லக்னாதிபதி பலம் பெற்றாரா? 6, 8, 12 அதிபதிகளோட தொடர்பு இல்லாம இருக்காரா? அஸ்தங்கதம் ஆகாம இருக்காரா? ராகு கேதுவோட எங்கன சேர்ந்து தொலைச்சுட்டாரா? நிதானமா பாருங்க. இதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப். அவரு ஆரோட சேர்ந்தாருன்னு பாருங்க.

10 எடுத்ததுமே அட அவர் உச்சம் இவர் உச்சம்னு துள்ளிக்குதிக்காதிங்க. மொதல்ல பலம் பெற்ற கிரகம் லக்னத்துக்கு நல்லதை செய்யுமானு பாருங்க.இன்னொரு முக்கியமான மேட்டர் உச்சமான கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்த்துருச்சான்னு பாருங்க. நமீதாவும் – மல்லிகா ஷெராவத்தும் ஒரே மேடையில வந்தாப்ல களேபரமாயிரும்.

11.உச்சம் பெற்றதை எப்படி கவனிக்கிறிங்களோ அதே போல நீசமான கிரகத்தையும் கவனிங்க. ஏன்னா நீச கிரகம் நின்ற பாவாதிபதி உச்சமாகி/ஆட்சியாகி அதே பாவத்தை பார்த்தா நீசம் பங்கமாயிரும். இதே போல ஒரு நீச கிரகம் நின்ற பாவாதிபதியும் நீசம் பெற்றால் நீசம் பங்கமாயிரும். நீசம் பெற்ற கிரகத்தை உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும் பரிகாரம்தேன்.

உ.ம் கலைஞர் சோனியா. தாத்தாவுக்கு ஆட்சி போயிட்டாலும் – அம்மா கடைக்கண் பார்வையில கனிமொழிக்கு இன்னொரு சப்பாத்தி எக்ஸ்ட் ரா தருவாய்ங்களா இல்லியா? ( சொம்மா தமாசு)

12.அஸ்ட்ராலஜி அல்ஜீப்ராவ விட மோசம். அல்ஜீப்ரால மைனஸ் ப்ளஸ் மைனஸ் ஈஸ் ஈக்வல் டு ப்ளஸ்ம்பாய்ங்க .ஆனால் அஸ்ட்ராலஜில ப்ளஸ் + ப்ளஸ் = மைனஸுன்னும் சொல்வாய்ங்க. உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை கூட கிடைக்காது

13.அடுத்து சனி செவ் இவிக ஒன்னு சேர்ந்துட்டாய்ங்களா? அல்லது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடறாய்ங்களா? அ ரெண்டு பேரோட பார்வையும் ஒரே ராசி மேல விழுதா பாருங்க. இந்த இழவு 3,6,10,11 ல நடந்தாலே வில்லங்கம். இன்ன பிற பாவங்கள்ள நடந்தா முள்ளிவாய்க்காவல் தேன்.

( நான் எதுக்கு “தான்”ங்கற வார்த்தைக்கு பதில் “தேன்’ உபயோகிக்கிறேன் தெரியுமா? அப்படியாவது நம்ம பதிவு இனிக்காதாங்கற எண்ணத்துலதேன்)

குறிப்பு:
பழனி மொட்டை கணக்கா துவக்கியாச்சு. இதுல சில சின்ன சின்னமேட்டர்லாம் தெரிஞ்சாதேன் புச்சா வந்த பார்ட்டிங்களுக்கு மேட்டர் பிடிபடும். இல்லாட்டி இருட்டுல நிக்கிற ஆன்டி கையில இருக்கிற குழந்தை கையில இருக்கிற பந்தை ( அய்யய்யோ ரெம்ப வல்கரா போகுதோ ஸ்டாப்) . அந்த மாதிரி சின்ன சின்ன மேட்டர்லாம் ( உ.ம்: கிரகங்கள் எந்த இடத்தை பார்க்கும்) நம்ம ராசா,புரட்சிமணி ,வினோத்ஜி மாதிரி பார்ட்டிங்க அள்ளி அள்ளித்தருவாய்ங்க.

நீங்க கேளுங்க ராசா !

(தொடரும்)

Advertisements

16 thoughts on “சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் ( நெஜமாலுமே)

  R.Puratchimani said:
  May 26, 2011 at 8:46 pm

  //ஒர்ஜினல் புக்ஸ் படிங்க //
  சார் எது எது ஒரிஜினல்னு சொல்லிடுங்க

   S Murugesan said:
   May 27, 2011 at 10:02 am

   ஆர்.புரட்சிமணி,
   பலான புஸ்தவம் வாங்கியிருக்கிங்களா? அட்டைய பார்த்தே உள்ள சரக்கிருக்கா இல்லியான்னு சொல்லனும். டுபாகூர் புஸ்தவம்லாம் மல்ட்டிகலர் ரேப்பரோட தளதளங்கும்.
   ஆனால் சரோஜாதேவி புஸ்தவம் அப்படி கிடையாது. இதெல்லாம் ஒரு குன்ஸ்.

   டைட்டிலை சமஸ்கிருதத்துல அப்படியே வச்சிருப்பாய்ங்க உ.ம் சாராவெளி சாரம், ஜாதக சந்திரிகா கூகுலாண்டவரை கேளுங்கண்ணே பெரிய லிஸ்டா கிடைக்கும்

    Tallin said:
    June 2, 2011 at 5:42 pm

    Good to see a tlanet at work. I can’t match that.

  Sudharsan said:
  May 26, 2011 at 9:24 pm

  Hai Murugesan sir,
  I read in an astrology article that to go to SABARIMALA ,Sani should be very strong in our horoscope.Is it true?.Does the temple related to sanigraha.? Kindly clarify me.What should I do to get darshan of lord IYAPPA?

  //தாத்தாவுக்கு ஆட்சி போயிட்டாலும் – அம்மா கடைக்கண் பார்வையில கனிமொழிக்கு இன்னொரு சப்பாத்தி எக்ஸ்ட் ரா தருவாய்ங்களா இல்லியா? ( சொம்மா தமாசு)//

  ஹா ஹா 🙂

  //( நான் எதுக்கு “தான்”ங்கற வார்த்தைக்கு பதில் “தேன்’ உபயோகிக்கிறேன் தெரியுமா? அப்படியாவது நம்ம பதிவு இனிக்காதாங்கற எண்ணத்துலதேன்)//

  முடியல…. வேணாம் …வலிக்குது …ம்…அழுதுடுவேன் 🙂

  // போஸ்ட் மார்டம் ஈஸி (பேசண்ட் ஃபுல் கோ ஆப்பரேசன் தருவாரே. நான் என்ன சொல்லவரேன்னா எதிர்காலத்தை கணிச்சு சொல்றது கஷ்டம்.இது ஆப்பரேஷன் மாதிரி. ஆனா நடந்து போன விஷயத்தை அனலைஸ் பண்றது ஈஸி. இது போஸ்ட் மார்ட்டம்.

  கத்துக்குட்டியா இருக்கிறச்ச போலி டாக்டர் மாதிரி ஆப்பரேஷன் பண்றதை விட போஸ்ட் மார்டம் பண்றது ஈஸி.//

  தல ….உங்க date of birth ,time, தாங்க ……முன்னாடியே தந்து இருக்கீங்க…….அத ஒவ்வொரு மறுமொழியா போய் தேடனும்….So மறுபடியும் ஒரு முறை தாங்க. உங்க ஜாதகத்தோட போஸ்ட் மார்டம் ரெடி பண்ணி கத்துக்க முயற்சி பண்ணுறேன் 🙂

   S Murugesan said:
   May 27, 2011 at 9:51 am

   ராசா!
   கண்ணாலம் பண்ணிக்கன்னா நீ என் பொஞ்சாதியா வான்ன கதையா இருக்கு. (ச்சொம்மா தமாசு – தெரிஞ்ச பழமொழிய எடுத்து விட்டே ஆகனும்ல)

   பர்த் டீட்டெயில்ஸ்:
   7/8/1967 – காலை 6.10 – சித்தூர் ஆ.பி

  Thirumalaisamy said:
  May 27, 2011 at 5:30 am

  அது சரி , ஒரு 10 தடவ படுச்சு பாக்குறேன் , எதாச்சும் ஒரைக்குதாணு !!! அண்ணே , நடு ரோட்ல விட்ட தொடர எல்லாம் மறக்காம கண்டினூ பண்ணுங்க !!!

  perumal said:
  May 27, 2011 at 5:32 am

  good morning -G . tips are all super .

  Mani said:
  May 27, 2011 at 6:15 am

  அண்ணே! சூப்பரோ சூப்பர். உங்க பாய்ண்ட்டெல்லாம் ரொம்ப அருமையாக இருக்கிறது. படிக்கும் போதே வாய்விட்டு கத்தனும் போல இருக்கு. அண்ணே! என்னதான் நாங்க ஜோதிடத்தை படிச்சாலும் உங்க ஸ்டைல்ல படிக்கறச்சே வருகிற கிக் இருக்கே அதுபோல வருமா?

  அண்ணே! உண்மையிலே நீங்க ஜீனியஸ் தான். அசத்திட்டீங்க போங்க.

  ரொம்ம நன்றிண்ணே! இப்படி அடிக்கடி எழுதினா எங்களுக்கு ரொம்ப உற்சாகமாக இருக்குண்ணே!. தொடர்ந்து எழுதுவீங்கல்ல இல்ல கடக லக்னம்ன்னு சொல்லிட்டு வேற டாபிக்போயிட மாட்டீங்கல்ல.

   superrsyed said:
   May 27, 2011 at 11:21 am

   அது அவர் வாங்கிவந்த வரம் அவர் ஜாதகத்துல சுக்கிரனும் சந்திரனும் ஜோடிபோட்டு வாக்குஸ்தானதுல இருக்குரதுதான் காரனம் (அப்டின்னு நெனைக்கிரென்}அவர் பெசுனா கேட்டுகிட்டே இருக்கலாம் எழுதுனா படிச்சுக்கிட்டே இருக்கலாம் இந்த அமைப்பு இருக்குரவுங்க பிறவிப்பேச்சாளர்கள்

  //படிக்கும் போதே வாய்விட்டு கத்தனும் போல இருக்கு. அண்ணே! //

  🙂 🙂 🙂

  sugumarje said:
  May 27, 2011 at 10:51 am

  //நான் என்ன சொல்லவரேன்னா எதிர்காலத்தை கணிச்சு சொல்றது கஷ்டம்.இது ஆப்பரேஷன் மாதிரி. ஆனா நடந்து போன விஷயத்தை அனலைஸ் பண்றது ஈஸி. இது போஸ்ட் மார்ட்டம்.//

  அடி தூள் கிளப்பேய் 🙂

  //கத்துக்குட்டியா இருக்கிறச்ச போலி டாக்டர் மாதிரி ஆப்பரேஷன் பண்றதை விட போஸ்ட் மார்டம் பண்றது ஈஸி.//

  அவங்க குடும்பத்திலேயே கூட தேடலாமே…

  // இல்லாட்டி இருட்டுல நிக்கிற ஆன்டி கையில இருக்கிற குழந்தை கையில இருக்கிற பந்தை//
  அடுத்தவரிய நீங்க சொல்றாப்பலேயே இருக்கே 🙂 🙂

  //உ.ம் கலைஞர் சோனியா. தாத்தாவுக்கு ஆட்சி போயிட்டாலும் – அம்மா கடைக்கண் பார்வையில கனிமொழிக்கு இன்னொரு சப்பாத்தி எக்ஸ்ட் ரா தருவாய்ங்களா இல்லியா? ( சொம்மா தமாசு)//

  நடந்திர போகுது அய்யா…

  பின்குறிப்பு: பரபரன்னு என்ன ப்ண்றதுன்னு தெரியாமலேயே நாள் போகுதய்யா… அதான் எதும் பதிவிடலை.

   S Murugesan said:
   May 27, 2011 at 5:08 pm

   வாங்க சுகுமார்ஜீ,
   நான் ரெம்ப நாளா எழுதனும்னு எழுதாம இருக்கிற மேட்டர் ஆவி மேட்டர். இதை பத்தி ஆரம்பிச்சு விடுங்களேன். நானும் இடையில வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:29 am

  ஆஹா அருமையான பதிவு. ஆனா சுடச்சுட படிக்க முடியாம போச்சே. ஆனா படம் சூட ஏத்திகினே இருக்கே. இன்னா நைனா நிர்வாண மேட்டரெல்லாம் நிர்வாண பேட்டைக்குதானே (நேக்டு ட்ருத்சு) போவும். மாறி டெலிவெரி ஆச்சா. ரசினி தம்பி படம் போடுற தேட்டருல திடீர்னு சகிலா படம் போட்ட மாறி கிண்ணுனு கீது மாமு. கண்ணு கூசுதுப்பா. அஜோவ அஜால் குஜாலா மாத்திராதே நைனா. கு…ன்னு சொன்னாலே நைனாவுக்கு தாய்க்குலம் மேல ஒரு டெபிட்டு (அதாம்பா பற்று) வரும். இப்ப நைனா கண்ணுக்கு தாய்க்குலம்லா பேய்க்குலமா மாரிட்டாய்ங்களா. இன்னாங்கடா இது நைனாவ புரிஞ்சிக்கவே முடியலியே.

   S Murugesan said:
   May 29, 2011 at 2:44 am

   டவுசர் பாண்டி,
   பெண்ணுக்குள் 3 பெண்கள் இருக்காய்ங்க. ஒன்னு நீங்க நானு பார்க்கிற பெண். இன்னொன்னு இயற்கையின் பிரதியா – நிதியா-பிரதிநிதியா இருக்கக்கூடிய பென் -இன்னொரு பெண் ஊழிக்காலத்து காளி.
   நீங்க உங்களுக்கு எதுவேணுமோ அதை தவிர்த்து மத்த சிம்ப்டம்ஸை கண்டும் காணாம போயிட்டா பிரச்சினையே இல்லை.
   அதைவிட்டுட்டு கண்டுக்க ஆரம்பிச்சா நீங்க எந்த கேரக்டரை கண்டுக்கறிங்களோ அந்த கேரக்டர் டெவலப் ஆயிட்டே போகும்..
   தாங்கமுடியாது ஆமாம் சொல்ட்டேன்.

    டவுசர் பாண்டி said:
    May 29, 2011 at 4:15 am

    ஆஹா! ஆச்சர்யமாருக்கு நைனாவுக்கு கோவம் வருமா! சாரி நைனா கோச்சுக்காத.

    நைனாவ கூலாக்க என்ன பண்ணலாம்நு யோசிச்சிக்கினு இருக்குறேன். ஐடியா சிக்க மாட்டேங்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s