எனக்குள்ளும் ஒரு கலைஞர்

Posted on

கலைஞர் எப்படி தன் ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததை மறந்து – அடுத்து வர இருந்த தேர்தலை மறந்து பாராட்டு விழாக்கள்ள மெய்மறந்து இருந்தாரோ அப்படி நம்ம ரேஞ்சுக்கு அஸ்ட்ராலஜி,சைக்காலஜி,செக்ஸாலஜின்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். எப்படியோ ஆத்தா தாலாட்டு பாடி தூங்க வச்சிராம தட்டி எழுப்பிட்டா.

ஆகையினால அல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா இந்த அஸ்ட்ராலஜி, சைக்காலஜி, செக்ஸாலஜிக்கெல்லாம் லீவுன்னு சொல்லமாட்டேன். இதெல்லாம் தொடரும். அதே சமயம் நமக்கும் ஆத்தாளுக்கும் அமல்ல இருக்கிற அக்ரிமென்டை இம்ப்ளிமென்ட் பண்ண முடிவு பண்ணியிருக்கேன்.

ஆத்தாளுக்கும் நமக்கும் உள்ள அக்ரிமென்ட் ரெம்ப சிம்பிள். ஆத்தா நீ என்னை பார்த்துக்க நான் இந்த மண்ணை பார்த்துக்கறேன். நாட்ல நடக்கிற மேட்டரை எல்லாம் பார்த்தா ரெம்ப பயம்மா இருக்குதுங்கண்ணா. அது ஊழலாகட்டும் – அணு மின் நிலையமாகட்டும் – பூச்சிமருந்து சமாசாரமாகட்டும்.

இதையெல்லாம் கிழிச்சே ஆகனும். கிழிக்கனும்னா மாஞ்சு மாஞ்சு டைப் அடிச்சுக்கிட்டிருந்தா விடிஞ்சுரும். ( நெஜமாலுமே விடிஞ்சுருச்சு இப்ப நேரம் 4.55) .

ஜோதிட ஆலோசனைக்குன்னுட்டு ஏற்கெனவே காசு போட்டிருக்கிற/ இனி போடப்போற அன்பர்களுக்கெல்லாம் ஒரு வேண்டு கோள்.

வெறுமனே சோசியம் சொல்லி காசு வாங்கி அந்த காசுல வவுத்த கழுவிக்கினு போக வந்த கிராக்கி நான் இல்லே. எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு. கடமை இருக்கு.இம்ப்லிமெண்ட் பண்ண வேண்டிய அக்ரிமென்ட் எல்லாம் பெண்டிங்ல இருக்கு. ஆப்பரேஷன் இந்தியா 2000 ஞா இருக்குல்ல?

இதுக்கு மொதல்ல நான் கொஞ்சம் நேரத்தை மீட்டெடுக்கனும். ஜோதிடபிரியர்களின் அமோக ஆதரவு நம்மை ஏறக்குறைய ஒரு க்ளர்க் கணக்கா ஆக்கிருச்சு. ரவுண்ட் தி க்ளாக் டொக்கு டொக்குன்னு தட்டிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ( அதுலயும் தமிழ் நாடு தேர்தல் மேட்டர்ல நம்ம கணிப்பு ஒரு அந்தாஸா மெட்டீரியலைஸ் ஆனபிற்பாடு திணற வைக்கிறாய்ங்க)

அதனால இனி ஜாதக பலன்லாம் வாய்ஸ் மெயிலா மட்டுமே அனுப்பப்படும்.ஏற்கெனவே காசு போட்டுட்டு வெய்ட்டிங்ல இருக்கிறவுகளுக்கு ரெண்டு ஆப்ஷன்

ஆப்ஷன் நெம்பர் ஒன்னு :

வாய்ஸ் மெயிலே அனுப்பிருப்பா வாரக்கணக்குல .. காத்திருக்கிற அளவுக்கு நமக்கு பொறுமையில்லைனு மெயில் பண்ணலாம்

ஆப்ஷன் நெம்பர் ரெண்டு:

நமக்கு பொறுமை சாஸ்தி . டேக் யுவர் ஓன் டைம். நிறுத்தி நிதானமா டெக்ஸ்ட் ஃபைலாவே அனுப்புன்னு மெயில் பண்ணலாம்.

நீங்க எந்த முடிவெடுத்தாலும் ஓகே. ஆனால் சீக்கிரமா எடுத்துட்டு கன்வே பண்ணுங்க.

________________________________________________________________________________________________

இனி மேட்டருக்கு வரேன். ” எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்” பதிவை படிச்சிருப்பிங்க. அந்த நிலைக்கு நான் வந்தாதேன் ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ ஒரு வழி பண்ணமுடியும்.

அதுக்கு ஆத்தாளோட கருணை தேவை. அது ஒரு காலத்துல மானாவாரியா இருந்தது. இப்பம் தேசலா இருக்கும். அந்த மூடுக்கு நான் வந்தாகனும். அதனால ஒரு காலத்துல நான் எழுதி வச்சிருந்த கவிதைகளை ஆடியோ ஃபைலா போஸ்ட் பண்ணலாமுன்னு ப்ளான் பண்ணியிருக்கேன்.

நம்ம சென்னைத்தமிழால நொந்து கிடக்கிற சனம் கேட்டு மகிழலாம். இந்த கவிதைகளுக்கெல்லாம் தலைப்பு கிலைப்புன்னு மெனக்கெடலை. ஃபைலுக்கு பேரு கூட வைக்கலே. ஆர்வமுள்ளவுக கேட்டுப்பாருங்க.

பிடிச்சிருந்தா யூனிகோட்ல தட்டச்சி மெயில் பண்ணி உதவலாம். இந்த போட் காஸ்டிங் ஆத்தாளுக்கு சோப் போட மட்டுமில்லே. பேச்சு ,கவிதை வாசிப்புல ஒரு ஃபார்முக்கு வந்த பிற்பாடு ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ ஒரு பிடி பிடிக்க ப்ளான் வச்சிருக்கேன்.

அதுக்கான ரிகார்சல் தான் இந்த கவிதைகள். பார்த்துக்கங்க நானும் கவிஞன் தான் நானும் கவிஞன் தான்..

என் கவிதைகளை இந்த போட் காஸ்டிங்குக்கு தேர்ந்தெடுக்க ஒரு அளவுகோல் வச்சிருக்கேன். அது ஒரு தெலுங்கு கவிதை கவிதைவரி:

“எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..?
கவரு கொனுக்கொனி காகிதாலு கொனுக்கொனி
பாவாலு கொனுக்கொனி
எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..?
ஜீவிதம் நுன்டி ஜாரி போயே ஜாருடு கவித்வம்

எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..?
நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்”

பொருள்:

“ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?
காகிதம் வாங்கி ,கவர் வாங்கி, கருத்துக்களை வாங்கி
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?
வாழ்க்கையிலிருந்து நழுவிச்செல்லும் நழுவல் கவிதை
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?
தடை செய்ய தகுதியற்ற கவிதை”

சரிங்கண்ணா என் கவிதையை என் குரலிலேயே கேட்க விரும்பறவுக இனி கேட்கலாம்
காதுல ரத்தம் வந்தா நான் பொறுப்பு கிடையாது தம்பிங்களா

Record000

Record001

Record002

Record003

Advertisements

13 thoughts on “எனக்குள்ளும் ஒரு கலைஞர்

  நான் கூட ஒரு தடவை கவிதை எழுதிட்டா அத நானே திரும்ப படிக்க மாட்டேன் …ஹா ஹா 🙂 🙂

  Thirumalaisamy said:
  May 25, 2011 at 5:33 am

  நாங்க என்ன பண்ணனும் நு தெளிவா சொல்லுங்க அண்ணே !!!

  Thirumalaisamy said:
  May 25, 2011 at 5:58 am

  வருக வருக !! என வரவேற்கிறோம் !!!
  அண்ணே , உண்மையில் உங்கள் குரல் ..நச்சுன்னு இருக்கு போங்க !!!
  ஆனா ரெகார்டிங் தெளிவா இல்ல நே , கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்க .///////

  பிடிச்சிருந்தா யூனிகோட்ல தட்டச்சி மெயில் பண்ணி உதவலாம். இந்த போட் காஸ்டிங் ஆத்தாளுக்கு சோப் போட மட்டுமில்லே. பேச்சு ,கவிதை வாசிப்புல ஒரு ஃபார்முக்கு வந்த பிற்பாடு ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ ஒரு பிடி பிடிக்க ப்ளான் வச்சிருக்கேன்.

  அதுக்கான ரிகார்சல் தான் இந்த கவிதைகள். பார்த்துக்கங்க நானும் கவிஞன் தான் நானும் கவிஞன் தான்../////

  கொஞ்சம் விளக்கம் தேவை !!!

   S Murugesan said:
   May 25, 2011 at 12:18 pm

   ஆப்பரேஷன் இநதியா2000 என்பது இந்தியாவின் வல்லரசு கனவுகளை நனவாக்க நான் வைத்திருக்கும் கனவுத்திட்டம். மேலதிக விவரங்களுக்கு

   http://kazhuhu.blogspot.com/2010/08/blog-post_19.html

   S Murugesan said:
   May 25, 2011 at 1:32 pm

   திருமலைசாமி,
   அது ரெக்கார்டிங் பிரச்சினை இல்லை. அது அதிகாலை நேரம் . ராத்திரி முழுக்க சிவராத்திரியா வேற ஆகிப்போச்சா.. அதான் அப்படி.

   என் குரலை பாராட்டின மொத பார்ட்டி நீங்கதேன். நன்றி.

  Mani said:
  May 25, 2011 at 3:01 pm

  ஹலோ முருகேசன் அண்ணே! அம்சத்தை பத்தி பதிவு போடறேன்னு சொல்லிட்டு எங்கண்ணே! போயிட்டீங்க இங்க வாங்க. எங்க பிரச்சனைக்கு ஒரு முடிவு சொல்லுங்க. நானும் த.கா. ராசாவும் அம்சத்தை பத்தின பதிவுல மாத்தி மாத்தி புலம்பிகிட்டு இருக்குறோம்.

  அண்ணே! உங்களுக்கு அம்சம் பார்க்க தெரியாதுன்னுட்டு எங்க பார்த்தாலும் சில பேரு உங்களை வெளியில கிழிக்கிறாங்க. இனிமேலும் பொறுமையா இருக்க கூடாதுன்ணே. அம்சத்தை பத்தி எல்லாருக்கும் புரியிற மாதிரி சீக்கிரம் பதிவு போடுங்கண்ணே!!

   S Murugesan said:
   May 25, 2011 at 9:08 pm

   மணி அண்ணே,
   தெரியும் தெரியாதுங்கறதெல்லாம் அப்பாறம். நாம பார்க்கிறதே இல்லை. இருந்தாலும் 40 முதல் 90 சதவீதம் வரை நம்ம பலன் சிக்குனு பொருந்துதுங்கண்ணா..

   இந்த பர்சண்டேஜ் குறைஞ்சா ரீ கவுண்டிங்குல பார்க்கிறதுதேன்.

    //ஹலோ முருகேசன் அண்ணே! //
    //மணி அண்ணே,//

    எனக்கொரு உண்மை தெரிஞ்சு ஆகணும்….எனக்கொரு உண்மை தெரிஞ்சு ஆகணும்..
    உங்க ரெண்டு பேருல யார் அண்ணன் …யார் தம்பி 🙂

    //இருந்தாலும் 40 முதல் 90 சதவீதம் வரை நம்ம பலன் சிக்குனு பொருந்துதுங்கண்ணா..//

    தல … 40 சதவிகிதம் என்பது என்னை போன்ற அரை வேக்காடு கூட சொல்ல முடியும்….
    உங்களிடம் ஆலோசனை கேட்டு வருபவர் ஜோதிடத்தை மட்டும் நம்பும் ஒரு முக்கா வேக்காடு என்று வைத்து கொள்ளுவோம்….
    நீங்கள் பாட்டுக்கு ராசியை மட்டும் வைத்து பலன் சொல்லி பலன் பொய்த்து போனால் என்ன ஆவது …அதுதான் 40 சதவிகிதம் சரியா சொல்லி புட்டேன் என்று சொல்லி கொள்ளுவீர்களா..

    திருமண பலன் போன்றவற்றில் 40 சதவிதம் சரியா இருந்தால் என்ன பயன் ? இன்னைக்கு நீங்க எப்படி ரஜினி படுக்கையில் கிடக்கும் போது கூட கிழி கிழி என்று கிழிகீர்களோ….அது போல தான் உங்கள் பலன் பொய்த்து போன ஒருவன் உங்களை கிழி கிழி என்று கிழிப்பான்…ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்…

    சமுகத்தில் மக்களுக்கு ஜோதிடர் மேல் பெரியதாக மரியாதை இல்லை என்பதை கவனித்து பாருங்கள் ….[ஆனால் நான் மரியாதை வைத்து உள்ளேன்]

    தல …பொதுவாக ஜோதிடத்தை தொழிலாக செய்ய கூடாது என்பது என் கருத்து….உண்மையில் நம் பிழைப்புக்கு ஏதாவது தொழில் செய்து கொண்டு ….ஓய்வு நேரத்தில் ஜோதிடம் சொல்லலாம்….அதில் வரும் தட்சணையை (கவனிக்க….வருமானம் அல்ல) பொது நோக்கில் தான தர்மம் செய்து விட வேண்டும்….குறைந்த பட்சம் பாதியை யாவது தான தர்மம் செய்து விட வேண்டும்……. இது தான் ஜோதிட தர்மம் ……அப்படி செய்யும் போது…நாம் சொல்லும் பலன் 75 முதல் 95 சதவிதம் வரை பலிக்கும்…

    ஜோதிடத்தை தொழிலாக செய்தால் பற்று வந்து விடும் …அதன் காரணமா கர்மா சேர்ந்து விடும்…

    உங்களை பொறுத்த வரை நீங்கள் ஆபரேஷன் இந்தியா 2000 என்ற பொது நோக்கில் செயல் படுவதாலும் …..சக்தி அருள் பெற்றவர் என்பதால் தான்….அதே நேரம் ஆன்ம விழிப்புணர்வு நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பவர் என்பதால் தான் நீங்கள் சொல்லும் பலன் 40 முதல் 90 சதவிகதம் வரை எடுபடுகிறது….

    மற்ற படி ஜோதிட புலி என்று எல்லாம் நான் நெனைக்க வில்லை…நீங்கள் இன்னும் அம்சம் பார்த்து பலன் சொன்னால் நீங்கள் சொல்லும் 40 சதவிதம் என்பது 60 முதல் 75 சதவிதமாக மாற வாய்ப்பு உண்டு என்பது என் கருத்து 🙂

    S Murugesan said:
    May 26, 2011 at 6:59 am

    ராசா,
    நீங்க டெக்னிக்கலா பேசறிங்க. ஜோதிடம் டெக்னிக்கல் மேட்டர் அல்ல. அது மிஸ்டிக் சைன்ஸ். ஷிர்டி பாபா சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம். அவரோட பக்தர் ஒருத்தர் கடுமையான வயிற்றுப்போக்கால அவதிபடறாரு. அப்ப பாபா அவருக்கு வறுத்த வேர்கடலைய கொடுக்கிறார். வ.போ படக்குனு நின்னு போகுது.

    சில மாசம் கழிச்சு அதே பக்தருக்கு மறுபடி வ.போ ஆரம்பிக்க இவர் வறுத்த வே.கடலை சாப்பிட சங்கு ஊதற நிலை ஆகிப்போகுது.

    இப்படியாக எல்லா ஜோதிட விதிகளையும் அப்ளை பண்ணித்தான் சொல்லனும்னா அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.

    அப்படியே சொன்னாலும் அது ஒர்க் அவுட் ஆகிறதும் ஆகாததும் “அவள்” கையில. விதிகள் ஒன்னுதான். பஞ்சாங்கம் ஒன்னுதான். ஆனால் பலன் வெவ்வேறாக இருக்கவும் – அவை நடப்பதும் நடவாது போகவும் காரணம் அவள்.

    நானும் ஒரு காலத்துல பாவ சக்கரம் வரை போனவன் தேன். பரல்களை உரல்கள்ள இட்டு இடிச்சவன் தேன்.

    அப்படியெல்லாம் ஒர்க் அவுட் பண்ணி சொல்லும் போது அவளோட பங்கு குறைஞ்சு போகுது.
    இதெல்லாம் உங்களுக்கு புரிய நீங்க முருகேசனாகனும்.

    ஆனால் நான் த.கா.ராசாவா இருந்துதேன் முருகேசனா மாறினேன். உங்களை எனக்கு புரியுது. என்னை உங்களுக்கு புரியலை.

    //ஆனால் நான் த.கா.ராசாவா இருந்துதேன் முருகேசனா மாறினேன். உங்களை எனக்கு புரியுது. என்னை உங்களுக்கு புரியலை//

    🙂

    Mani said:
    May 26, 2011 at 9:10 am

    ///உங்க ரெண்டு பேருல யார் அண்ணன் …யார் தம்பி///

    ஏம்பா! த.கா. ராஜா என்னைய பார்த்தா முருகேசன் அண்ணனை விட வயசானவன் மாதிரியா தெரியுது. நான் ரொம்ப சின்ன பையன் பா. நம்ம முருகேசன் அண்ணாச்சி பெரிய ஆளு அவரு நமக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கே அறிவுரை சொல்ற அண்ணன் பா! அவரு சும்மா ஒரு பேச்சுக்கு என்னை அண்ணன் விளிச்சு எழுதராரு பா!. அத போயி நம்பிட்டு என்னை அவருகூட ஒப்பிடறியே பா!. தயவு செஞ்சு இனிமேல் அவருகூட எல்லாம் இந்த சின்னபையனை ஒப்பிடறத விட்ருப்பா.

    //நாட்டுக்கே அறிவுரை சொல்ற அண்ணன் பா! அவரு சும்மா ஒரு பேச்சுக்கு என்னை அண்ணன் விளிச்சு எழுதராரு பா!.//

    அவரு அறிவுல அ(ம)ண்ணன் …நீங்க தன்னடகத்துல அ(ம)ண்ணன் ….மொத்ததுல்ல நீங்க இருவரும் எங்கள் அண்ணா(கள்) 🙂 🙂

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:55 am

  நைனாவோட வாய்சு நல்லாருக்கு. கவித எழுதுறதுக்கு நல்ல கற்பன சக்தி வோணும். சிந்தனைய தட்டி வுட்டா குதிர கணக்கா துள்ளி ஓடனும். நைனாவுக்கு நல்ல கற்பன சக்தி. நல்ல சிந்தனை. இந்த கவிதைய டெக்ஸ்டா விட்டா சூப்பரா இருக்கும். திரும்ப திரும்ப ரசிச்சி படிக்கலாம். கண்ணுக்கும் வேல குடுத்த மாறி இருக்கும். நமக்கு காதுல வேற ஒரு ஸ்பீக்கர் எரச்சலா இருக்குது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s