நீங்க சூப்பர் ஜோதிடராகனுமா? டிப்ஸ்! டிப்ஸ்!

Posted on

ஜோதிடங்கறது மனித வாழ்வோட ரெம்ப நெருக்கமான சப்ஜெக்ட். அதனால மனித வாழ்க்கையோட ஒவ்வொரு அம்சத்தோடயும் உங்களுக்கு அறிமுகம் இருக்கனும். அது குறித்த ஆராய்ச்சியும் முக்கியம். இது தொடரனும். அதுக்கு உங்க மனசுல மனித குலத்தின் பால் அக்கறை இருக்கனும்.

ஏன் வந்தது எப்படி வந்ததுன்னெல்லாம் தெரியாது. என் கனவுகள் நெஜமாலுமே ராஜ கனவுகள் தான்.ஏதோ வாழ்க்கையில நாயடி பட்ட பின்னாடி – நான் பட்ட பாடு ஆரும் படக்கூடாதுங்கற அனுபவத்துல வந்திருந்தா பரவால்லை.

சின்ன வயசுலயே நான் படிச்ச ரத்னபிரபா, அம்புலிமாமா,பாலமித்ரா கதையில கூட என்னை இளவரசன் பாத்திரத்தோட தான் இன்வால்வ் பண்ணிப்பேன். நம்ம படிப்பு,ரசனையோட திக்கு திசை மாற மாற நாம படிச்சுக்கிட்டிருந்த புஸ்தவங்களும் மாற ஆரம்பிச்சது.

அதிலான கதாநாயகர்கள்,ஆதர்ச புருஷர்களோட என்னை நான் இன்வால்வ் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இன்வால்வ்னா சொம்மா ஜொள்ளு விடறதில்லிங்கண்ணா. அவிகளை நமக்குள்ள ஃபீல் பண்றது. செக்யூர்ட் லைஃப் – மேன் ஆஃப் தி மேட்ச் மாதிரி வீட்ல,ஸ்கூல்ல எங்கயுமே நமக்கு ரெட் கார்ப்பெட் தேன்.

இதையெல்லாம் படிக்கிறச்ச “அடடா இந்த பார்ட்டிங்கல்லாம் என்னமா கஷ்டப்பட்டிருக்காய்ங்க. நாம என்னடான்னா தண்டத்தீனி தின்னுட்டு சுத்திக்கிட்டு வரமே – நாம எங்கே இவிக ரேஞ்சுக்கு வளர்ரதுன்னு நினைக்கிறதுண்டு.

1987 ல பத்திரிக்கை ஆரம்பிச்சேன். (அப்போ வயசு 20) அது ஊத்திக்கிட்டது வேற கதை . அப்படி ஒரு வெறி. கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் அப்படிங்கறாய்ங்களே.. முமு /முபின்னு சொல்ற ரேஞ்சுக்கு நாம என்னவாச்சும் செய்யனும்பா.அதென்னா தாளி எந்த ஜட்ஜு தலைக்கு மேலயும் தாத்தா படம். அங்கன நம்ம படம் எப்ப வைப்பாய்ங்க.

லட்சியம் என்னமோ அவதார புருசன் ரேஞ்சுக்கு. யதார்த்தம் என்னடான்னா நியூஸ் ரீல் மாதிரி உப்பு சப்பில்லாம போயிட்டிருக்கு.சனங்க பிரச்சினை எனக்கு பிரச்சினையாவே தோணலை. என் பிரச்சினை சனங்களுக்கு நக்கலாயிருந்துச்சு.

சனங்க பிரச்சினையெல்லாம் ஜுஜுபி. தாளி நம்ம கிட்டே பத்து நிமிசம் உட்கார்ந்து பேசி ஒர்க் அவுட் பண்ணான்னா அவன் பிரச்சினை ஃபணால். ஆனால் என் பிரச்சினை? லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா வச்சுக்கிட்டு ஜட்ஜு தலை மேல உள்ள காந்தி தாத்தா ஃபோட்டோ பக்கத்துல என் ஃபோட்டோவை வயின்னு கேட்டாலும் நடக்குமா? நடக்காது.

இங்கத்தேன் நாம ஆன்மீக பேட்டைப்பக்கமா ஒதுங்க வேண்டி வந்தது. அங்கே கடவுளோட நிலைமை என்னை விட ரெம்ப மோசம். என்னாலயாச்சும் சனங்களோட மொழியில பேச முடிஞ்சது -சனம் என்னை பார்க்க முடிஞ்சது .ஆனால் கடவுளோ பேதியாகி கிடக்காரு.

ஆத்தாளுக்கு நமக்கும் பெரிய பெரிய வாக்கு வாதம்லாம் நடக்கும். அதுவும் தெலுங்குலன்னா ரத்தக்களறி ரணகளறியா கவிதை குதிச்சு வரும்.நீங்க ஸ்க்ரால் பண்ணிரமாட்டேன்னு எச்சி உமிஞ்சி சத்தியம் பண்றதா இருந்தா ஒரே ஒரு சேம்பிள்.

அம்மா ! அம்மோரு தல்லி !
நாலுகு கோடல மத்ய பந்தீகா உண்டி
நுவ்வு சாதிஞ்சிந்தேமி

பாபல கடுப்பு நிம்படம் மினஹா
நாதோ ரா..

நின்னூரேகிஸ்தா நீ சமுத்ரம் நுண்டி தோச்சுக்குன்ன
நீ முத்யால பல்லக்கீலோ காது

கணிதமுலெருகனி நான் சுனித ஹ்ருதய ஜனித
முத்து முத்து பதால பல்லகீலோ ஊரேகிஸ்தா

குடிச குடிசன அன்னபூர்ணேஸ்வரிவை கொலுவுண்டேலா
நின்னு ப்ரதிஷ்டிஸ்தா

ப்ரஜாஸ்வாம்ய யுகான
மெஜாரிட்டி போகொட்டுக்குனி
மைனாரிட்டிலோ படின
நீக்கு மெஜாரிட்டி சாதிஞ்சி பெடதா ராவே ரா

கல்த்தீ கல்ப்பூராலதோ நீக்கு லங் கேன்சர் வச்சே லோப்பு
நாதோ ரா.

அகண்ட ப்ரஜானீகம் சேத ப்ரூமத்யான வெலிகே
தீபம் தோ ஹாரத்துலு பட்டிஸ்தா

நின்னீ ப்ரஜலு பத்தரஃப் சேசே லோப்பு ரா

இதனோட அர்த்தம்:

நாலு சுவத்துக்குள்ள சிறையிருந்து
நீ சாதிச்சதென்னா
நாலு பிராமணாள் வயித்த ரொப்பினது தவிர

எங்கூட வா
உன்னை ஊர்வலமா அழைச்சிட்டு போறேன்

உன் கடல்ல இருந்து திருடின உனக்கு சொந்தமான முத்துக்களால செய்த பல்லக்குல இல்லே

கணக்கு வழக்கு தெரியாத என் மென் மனசுல பிறந்த
அழகழகான வார்த்தை முத்துக்களால செய்த பல்லக்குல ஊர்வலமா அழைச்சுட்டு போறேன்

ஒவ்வொரு குடிசையிலும் உன்னை அன்னபூர்ணேஸ்வரியா ப்ரதிஷ்டை பண்றேன்

ஜன நாயக யுகத்துல மெஜாரிட்டி இழந்து கிடக்கிற உனக்கு
மெஜாரிட்டி பெற்றுதரேன்

கலப்பட கற்பூர புகையால உனக்கு நுரையீரல் புற்று நோய் வர்ரதுக்கு முந்தி
என் கூட வந்துரு

பெருவாரியான மக்களோட புருவ மத்தியில சுடர் விடற தீபத்தை கொண்டு
ஆரத்தி காட்ட வைக்கிறேன். வா..

என் லட்சியம் நிறைவேறனும்னா கடவுள் தான் ஒரு வழிய காட்டனும். ஆனால் அவருக்கு நான் வழி காட்ட வேண்டிய நிலைம வந்துருச்சு.

இருந்தாலும் அப்படி இப்படி மேனேஜ் பண்ணிக்கிட்டு நூல் விட ஆரம்பிச்சேன்.1997 வரைக்கும் தாளி ஒரு மயிருமில்லை. ( 1991 ல கண்ணாலமாச்சு – வறுமைன்னா என்னனு எக்ஸ்பீரியன்ஸ் ஆக ஆரம்பிச்சுருச்சு. 1992 ல ஜனசக்தி பேப்பர்ல ஆப்பரேஷன் இந்தியா2000 பற்றிய என் கட்டுரை பப்ளிஷ் ஆச்சுங்கண்ணா)

தாளி!
ராம,ராவணர்களோட கலவை நான்
காந்தி காட்ஸேவோட மிக்சர் நான்

ஏதோ போனால் போகட்டும் நம்ம கிட்டே அறிவுங்கற ஆயுதம் இருக்கு. இதை நிராயுதபாணிகள் மேல உபயோகிக்க கூடாதுன்னுட்டு தான் இருக்கோமே தவிர . இந்த பிக்காலிங்க மாதிரி திகார் ஜெயில்ல போய் செட்டில் ஆகிற சீன் எல்லாம் இருக்காது.

ஆனால் பாருங்க. நாம ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டோம்னு சனத்துக்கு தெரிஞ்சு போச்சு . ங்கொய்யால கசாப்புதேன். இதுல என்ன ஒரு அற்புதம்னா.. அவிக மேல கோவமே வரலை. இன்னம் சொல்லப்போனா சனம் மேல ஒரு வித கருணை பிறக்க ஆரம்பிச்சுருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 ஒரு மாயாஜால திட்டம். அது அமலானா ஜஸ்ட் நமக்கு கிடைக்கப்போற ஒரே ஒரு லாபம் என்னன்னா.. ஜட்ஜுங்க தலைமேல நம்ம ஃபோட்டோ இருக்கும். அவ்ளதேன்.

ஆனால் ஆப்பரேஷன் இந்தியா2000 திட்டமே பை மிஸ்டேக் அமலாயிட்டாலும் இவிக பிரச்சினைகள் தீராதோ என்னமோன்னு ட்ர்ராயிட்டன்.

மக்களோட பிரச்சினைக்கு தீர்வை கொடுக்கிற எந்த மேட்டரா இருந்தாலும் வ்ர்ஜியா வர்ஜியமில்லாம படிக்க ஆரம்பிச்சேன் – அவ்தானிக்க ஆரம்பிச்சேன் – ரோசிக்க ஆரம்பிச்சேன் – ரோசனை சொல்ல ஆரம்பிச்சேன்.

அந்த 116 சப்ஜெக்டுல ஜோசியமும் ஒன்னு. அவ்ளதேன். அது ஏன் வந்ததோ எப்படி வந்ததோ இப்பமும் ஒரு காரணத்தை சொல்லமுடியலை.

குரு உச்சம்னு நான் சொன்னா ஒடனே நவாம்சத்துல நீசமாயிட்டாரேம்பாய்ங்க. சரி ஏதோ ஒரு இழவு காரணம். என் சக மக்கள் மேல நான் கொண்ட அக்கறை தேன் கடவுளுக்கு நம்மை நெருக்கமாச்சு. வாழ்க்கையின் மர்மங்கள் எல்லாம் காபரே ஆட ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல ப்ளூ ஃபிலிம் கணக்கா வெட்ட வெளிச்சமாக ஆரம்பிச்சது.

இந்த ஒரு மேட்டர் இல்லாம ஒரு கண்டெய்னர் நிறைய புஸ்தவங்களை தருவிச்சு மண்டைக்குள்ள ஏத்தினாலும் மண்டை முடியெல்லாம் கொட்டிப்போகுமே தவிர ஒரு பப்பும் வேகாது.

மேட்டருன்னா மஸ்தா கீது நைனா.. எது எப்போ எந்த அளவு முக்கியம்னு ஜட்ஜிங் பண்றோம் பாரு அதான் முக்கியம்.

ஓகே உடு ஜூட் , டிப்ஸுக்கான முன்னுரையே தனிப்பதிவு ரேஞ்சுக்கு போயிருச்சு அடுத்தடுத்த பதிவுல என் அனுபவத்துல ஜோதிட குப்பையில எந்தெந்த பாய்ண்ட் பவர்ஃபுல்னு உறைச்சதோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணிர்ரேன். ஓகேவா..

Advertisements

7 thoughts on “நீங்க சூப்பர் ஜோதிடராகனுமா? டிப்ஸ்! டிப்ஸ்!

  //ஏன் வந்தது எப்படி வந்ததுன்னெல்லாம் தெரியாது. என் கனவுகள் நெஜமாலுமே ராஜ கனவுகள் தான்.ஏதோ வாழ்க்கையில நாயடி பட்ட பின்னாடி – நான் பட்ட பாடு ஆரும் படக்கூடாதுங்கற அனுபவத்துல வந்திருந்தா பரவால்லை.//

  நான் கூட 10 வயசுல பிரதமர் ஆகணுமுனு கனவு கண்டேன்…. ஹா ஹா 🙂

  //ஆனால் ஆப்பரேஷன் இந்தியா2000 திட்டமே பை மிஸ்டேக் அமலாயிட்டாலும் இவிக பிரச்சினைகள் தீராதோ என்னமோன்னு ட்ர்ராயிட்டன். //

  🙂 🙂

  Thirumalaisamy said:
  May 26, 2011 at 7:14 am

  உங்க அனுபவத்த லிஸ்ட் அவுட் பண்றீங்கன்னு சொல்லுங்க …ரொம்ப சந்தோசம் … கவிதை நல்லா இருக்கு நே !!! ஐ பீல் யுவர் indepth பீலிங்க்ஸ் .

  R.Puratchimani said:
  May 26, 2011 at 3:29 pm

  சார் திருமணத்துக்கு செவ்வாய் தோஷம் பத்தி உங்க அனுபவத்த கொஞ்சம் சொல்லுங்க…

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:41 am

  நைனா! நீ கொவக்காரரா? இல்லாங்காட்டி ரோசக்காரரா? ஒரே கொயப்பமாகீது மாமு.

   S Murugesan said:
   May 29, 2011 at 4:09 am

   டவுசர் பாண்டி ,
   சொந்த மேட்டர்ல மானம்,ஈனம்,சூடு ,சுரணை பார்க்கிற ஸ்டேஜு தாண்டியாச்சு. பொது விஷயத்துல தாளி ஒபாமாவே ஆனாலும் கைமா தேன்.

    டவுசர் பாண்டி said:
    May 29, 2011 at 4:20 am

    இன்னா நைனா, ஆச்சர்யமாகீது. அல்லாருமே சொந்த விசியத்துக்குத்தேன் நீ சொன்ன அந்த மா,ஈ, சூ, சொவ சட்டப்பைக்குல்லாற போட்டுக்கினு வேட்டிய மடிச்சிக்கினு வெட்டியா சண்டைக்கு வருவானுக. நீ இன்னாடான்னா ஆப்போசிட்டா இருக்கியே.

    S Murugesan said:
    May 29, 2011 at 12:26 pm

    டவுசரு,
    மைனஸ் ஆத்தா முருகேசன் ரஜினியை விட மோசமான குழப்படி ஆசாமி – ப்ளஸ் ஆத்தா நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் கிராக்கி.

    சொந்த மேட்டர்ல ஆத்தா நம்மை ஃபாலோ பண்றதில்லை.அப்படியே ஆத்தா ஃபாலோ பண்றேன்னாலும் நாம ராகுல் மாதிரி செக்யூரிட்டிக்கு கடுக்கா கொடுத்துட்டு விடியல்ல பைக்ல போயி இறங்கிர்ரது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s