ஈகோ என்ற வைரஸ்

Posted on

பிறந்த குழந்தையோட மைண்ட் புத்தம் புதிய ஹார்ட் டிஸ்க். ஓ.எஸ் மட்டும் போட்டிருக்கும். அப்பா,அம்மா,ஆசிரியர்கள் , சமூகம் எல்லாரும் என்ன பண்ணனும் ஒரு ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் ஒன்னை போட்டு விடனும். ஆனால் கண்ட கண்ட பென் ட்ரைவை செருகி வைரஸா குவிச்சுர்ராய்ங்க. இதனால ஹார்ட் டிஸ்கோட ஃபங்சனிங்கே ஃபணாலாயிருது.

பேச்சுவழக்குல நாம ஈகோங்கற வார்த்தைய அகந்தை -அகங்காரம்ங்கற அர்த்தத்துலயே உபயோகிக்கிறோம். ஆனால் ஈகோங்கற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தன்னை இந்த படைப்புலருந்து வேறுபடுத்தி பார்க்கிறது.இது என்விரான்மென்டோட கோ ஆபரேஷனால கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி தன்னை இந்த படைப்புக்கு மையமா நினைச்சுக்கிற அளவுக்கு போயிருது.

குழந்தையோட ஒக்காபிலரில நான் ங்கற வார்த்தையே இருக்காது. தன்னை தேர்ட் பர்சன்ல தான் குறிப்பிடும் . (பாப்பாக்கு பாச்சி குது) ஆனால் அப்பா,அம்மா,ஆசிரியர்கள் , சமூகம் எல்லாரும் அந்த பாப்பாவுக்கு நீ பாச்சா நாய்குட்டி ஆயி – கணக்கா வித்யாசத்தை சொல்லித்தராய்ங்க.

அந்த குழந்தை தன்னை இயற்கையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்கிடுது. நம்ம சனம் கொடுக்கிற பூஸ்டுல ( சச்சின் சொல்ற பூஸ்ட் இல்லிங்கண்ணா) ஈகோ டெவலப் ஆயிட்டே போகுது. இயற்கைக்கே தான் தான் மையங்கற கான்செப்ட் மைண்ட்ல வந்துருது.

மலையூர் மம்பட்டியான் சினிமால பார்த்திருப்பிங்க.பத்து பைசா கொடுத்தா எது வேணம்னா பண்ணிர்ர காமெடி பீஸு செந்தில் மம்பட்டியானுக்கு சங்கு ஊதிருவாரு. நாயகன்ல ஒரு பைத்தியக்காரன் வேலு நாயக்கரை போட்டு தள்ளிருவான்.

இந்த இயற்கையில அல்லாரும் சமம்தேன். அல்லாரும் புலிதேன்.அல்லாரும் எலிதேன். எலி 24 மணி நேரம் -365 நாள் புலியா இருக்காது.இருக்கவும் முடியாது. புலி புல்லைத்தின்னாதுங்கறதெல்லாம் டகுலு. கும்பி காஞ்சி கிடக்கிற காலத்துல என்னைக்கோ தான் ரிஜெக்ட் பண்ணிட்டு போன அழுகிப்போன மாமிசத்தை தின்னுப்புட்டு வவுத்து வலியில தவிக்கிறப்ப அருகம்புல்லை தேடி தின்னுமாம் புலி.

அதே போல புலியும் 24 மணி நேரம் -365 நாள் புலியாவே இருந்துர முடியாது. ஈகோவால வர்ர முக்கிய பிரச்சினை என்னன்னா அது மைண்ட்ல புகுந்ததுமே குள்ளமணி மனசுக்கு அவரு அமிதாப்பா தோணுவாரு. அமிதாப்பே எதிர்க்க வந்தாலும் ஏறக்குறைய இந்தாளு என் தோள்பட்டை ரேஞ்சுக்கு வ்ருவான் போலனு தோணும்.

உண்மைய பார்க்காதவன் பொழப்பு கடலலை மேலே போற காகிதப்படகு மாதிரி. எந்த செகண்டு வேணம்னா கவுந்துரும். “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்”னு வாத்யாரு சொன்னாரே.. ஈகோ உள்ள மைண்டை வச்சுக்கிட்டு எங்கே அறியறது?

ஈகோ உண்மைகளை மறைக்குது. பொய்களை உண்மையா காட்டுது. ஊரை ஏமாத்தலாம். (என்னைக்கோ ஒரு நா செருப்படியோட கதை முடிஞ்சுரும்) தன்னை தான் ஏமாத்தினா? நாறிரும். நம்மாளுங்க நிறைய பேரு கோகர்ணம் கஜகர்ணம்லாம் போட்டு ஜாதகத்துக்கு பலன் சொல்ல ட்ரை பண்றாய்ங்க.

உலகத்துல உள்ள எல்லாருக்கும் பொருந்திவரக்கூடிய ஒரு ஜோதிடப்பலன் உண்டு .அதென்னா தெரியுமா?
” நிங்க ரெம்ப நல்லவருங்க – இந்த உலகம்தேன் உங்களை புரிஞ்சிக்கிடமாட்டேங்குது” இந்த பாய்ண்டை கலைஞருக்கு சொன்னா அவரு கூட ஆக்செப்ட் பண்ணிருவாரு.

ஏன்? ஈகோ.. உண்மையை மறைக்கும் ஈகோ. பொய்யை உண்மையாக காட்டும் ஈகோ. இந்த ஈகோ மன்சனை எந்த ரேஞ்சுக்கு பாதிக்குதுன்னா.. ஒரு கோழிப்பண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா போதும் ரெண்டு மூணு நாள்ள எல்லா கோழிக்கும் வந்துரும்.

ஆனால் ஒரு பேட்டையில ஆயிரம் பேர் இருக்காய்ங்கன்னு வைங்க. ஒருத்தனுக்கு காலரா வந்தா ஆயிரம் பேருக்கும் வரணுமில்லியா? வராது. ஒரு பத்து பன்னெண்டு பேருக்குத்தேன் வரும். (நன்றி:ஓஷோ)

ஏன்னா அந்த கோழிகளுக்கு ஈகோ கிடையாது. தன்னை தன் கூட்டத்துலருந்து பிரிச்சு பார்க்கிறதே கிடையாது. ஆனால் மன்சன்?

ஈகோவால கிடைக்கற ஒரே நன்மை இதுதேன்.தெரியாம கேட்கிறேன். ஜப்பான்ல சுனாமி வந்துச்சே.. சனத்தை நீ யாரு என்ன ? டேக்ஸ் பேயரா? திமுகவா? அதிமுகவானு கேட்டா தூக்குச்சு? நோ .. ஒரே தாட்டியா தூக்கிருச்சு.

நீ ஸ்பெஷலுன்னு நீ நினைச்சுக்கிட்டா போதாது. இயற்கை உன்னை அங்கீகரிச்சிருக்கனும்.ஆனால் இயற்கையோட பார்வையில ரஜினியும் ஒன்னுதேன்.ரஜினி ரசிகனும் ஒன்னுதேன்.ரஜினி நான் தான் சூப்பருன்னு நினைச்சா அது அவரோட முட்டாள் தனம்.

நாமெல்லாம் ஒரே உயிர்லருந்துதான் ஆரம்பிச்சோம். அமீபா. ஒன்னு ரெண்டாச்சு,ரெண்டு நாலாச்சு. செல் காப்பியிங்ல எர்ரர் வந்து கொஞ்சமா மாறிப்போயிட்டமே தவிர நமக்கெல்லாம் மூலம் ஒன்னுதேன்.

நாம ஓருடல் -ஓருயிரா இருந்தப்ப அசால்ட்டா, நிம்மதியா இருந்தோம். இன்செக்யுரிட்டி இல்லே. கம்யூனிகேஷன் பிராப்ளம் இல்லே. காலம் இல்லே,கர்மம் இல்லே.

நாம இப்ப பல உடல் பல உயிரா பிரிஞ்சிருந்தாலும் செல் காப்பியிங் மூலமா நம்ம ஜீன்ஸ்ல நாமெல்லாரும் ஓருடல் ஓருயிரா இருந்த க்ஷணங்கள் பதிவாகியிருக்கு. மீண்டும் ஓருடல் ஓருயிரா மாறனுங்கற துடிப்பு இருக்கு.

இந்த இணைப்புக்கு நம்ம உடல் தான் காரணம்னு இந்த உடலை உதிர்த்து போட துடிக்கறோம். சைக்காலஜி கூட இந்த கொலை -தற்கொலை இன்ஸ்டிங்டை நெஜம்னு தேன் சொல்லுது.

பல உடலா இருந்தாலும் நாமெல்லாம் இணைஞ்சே இருக்கோம். செல்ஃபோன்கள் எத்தனை விதமான மேக்கா இருந்தாலும் எப்பை இணைக்கப்பட்டிருக்கோ அப்படி இணைக்கப்பட்டிருக்கோம்.

இந்த ஈகோ அந்த இணைப்பை மறக்கடிச்சுருது. மறுபடி இணையனும்னு துடிக்க வைக்குது.எல்லா குழப்பங்களுக்கும் இதான் காரணம்.

இணையறது மனவெளியில அசாத்தியம் (ஈகோ தடுக்குது ) . உடல் வெளியில இணையலாம். ஆனால் அது டெம்ப்ரரி.

பின்னே என்ன வழி? உடல்கள் உதிரனும். அப்போ உயிர் வெளியில அல்லாரும் இன்டராக்ட் ஆகலாங்கற பிரமை மனித மனங்கள்ள இருக்கு. அதுதேன் சைக்காலஜில சொல்ற கொலை+தற்கொலை இச்சையா வெளிப்படுது.

செக்ஸ் (செமன் எஜாகுலேட் ஆகும்போது ஏற்படற ப்ளாக் அவுட்) – பணம் – பதவி -அதிகாரம்லாம்.
கொலை,தற்கொலைககன மாற்றுகளா மாறிப்போகுது.

ஒவ்வொரு மைண்ட்லயும் செல்ஃப் இருக்கு (சுயம்?) இதை இந்த ஈகோ போய் கவர் பண்ணிருது. ஈகோ தான் தன் சுயம்னு மன்சன் நம்ப ஆரம்பிச்சுர்ரான்.ஈகோவை ஆருனா சீண்டினா மிருகமாயிர்ரான்/

என்னா ஒரு சோகம் பாருங்க. ஈகோனு ஒன்னு இல்லவே இல்லை.அது மாயா. ஆனால் இல்லாத ஒன்னை திருப்தி படுத்த தவியா தவிக்கிறதும் – இல்லாத ஒன்னுக்கு ஏதோ ஆயிருச்சுன்னு பதறிப்போறதும் சில்லி ஜோக் இல்லியா?

இப்ப சின்ன உதாரணத்தை பார்ப்போம்:

முருகேசன் யாரு? கவிஞர் -கதாசிரியர் – ஜோதிட ஆய்வாளர் – லோக்கல் எம்.எல்.ஏவோட சம்பளம் வாங்காத பி.ஆர்.ஓ – ஒரு சி.எம் மேலயே வழக்கு போட்டு கிழிச்சவரு – 20 மாசத்துல 3 லட்சமோ என்னமோ ஹிட்ஸ் வாங்கின ப்ளாகர். இதெல்லாம் உலகமக்களை பொருத்தவரை முருகேசன் என்ற எனக்கான அடையாளங்களா இருக்கலாம் தப்பில்லை.

‘அங்கே போறாரு பாரு அவர்தான் சந்திரபாபு மேல கேஸ் போட்டவரு”

“வராரு பார்த்தியா ..அவருதேன் தி ஃபேமஸ் ப்ளாகர் சித்தூர் முருகேசன்”

ஏன்னா அவிகளுக்கு இதுக்கெல்லாம் முந்தி இருந்த முருகேசனையும் தெரியாது. இதெல்லாம் ஒழிஞ்சு போயிட்டாலும் இருக்கப்போற முருகேசனை அறவே தெரியாது. அதனால அவிக இதையெல்லாம் ஒரு அடையாளமா வச்சுக்கிடலாம் .தப்பே இல்லை.

ஆனால் எனக்கு தெரியுமில்லியா? இதுக்கெல்லாம் முந்தி இருந்த முருகேசனையும் தெரியும் இதெல்லாம் ஒழிஞ்சு போயிட்டாலும் இருக்கப்போற முருகேசனையும் தெரியும்.

எனக்கே எனக்கான பார்வையில ஜஸ்ட் முருகேசனை ஒன்லி முருகேசனை பார்க்கமுடிஞ்சா எனக்கு ஈகோ இல்லைன்னு அர்த்தம்.

சொன்னா வெட்கக்கேடு. ஆராச்சும் பிரபல பதிவர்கள்னு ஆரம்பிச்சு தலைப்பு வச்சு பதிவு எழுதினா உடனே பார்க்கத்தோணுது.

இதான் ஈகோ.

எல்லாம் சரி..மேற்சொன்ன விருதுகள்/தகுதிகள் எல்லாத்தையும் நீக்கிட்டா நான் செத்துப்போயிருவனா? நோ…2000 ஜூலை 31 ல ஆரம்பிச்ச கவிதை07 வலைப்பூவை 2009 மே வரைக்கும் 2006 பேர் தான் பார்த்தாய்ங்க. நான் செத்துப்போயிட்டேனா?

20 மாசத்துல 2 லட்சம் ஹிட்ஸ் கிடைச்சது. ( சில்லறையும் புரண்டதுங்கண்ணா) இன்னொரு கை முளைச்சுதா? அல்லது என் முக்கால தோல்விகள் ஊமை முள்ளா குத்தறது நின்னுருச்சா?
இல்லையே?

நல்ல ஸ்விங்ல இருக்கிற சமயம் தமிழ்மணம் கவிதை07 ஐ தடை பண்ணிட்டாய்ங்க. என்ன நடந்து போச்சு?

அப்பாறம் அவிகளே அனுபவஜோதிடத்தை திரட்டியில சேர்த்துக்கிட்டாய்ங்க. இதனால என்ன நடந்து போச்சு?

நான் என்ன சொல்லவரேன்னா இதெல்லாம் பாதிக்காத – இதனாலெல்லாம் பாதிக்கப்படாத இன்னும் ஏதோ ஒன்னு எனக்குள்ள இருக்கு. அது எப்பயும் இருக்கும். அதை விஜாரிச்சு வச்சுக்கனும்.அப்பப்ப ஹலோ சொல்லிக்கிட்டே இருக்கனும்.

அப்ப ஈகோங்கறதோட கனம் குறையும்.அடர்த்தி குறைஞ்சு ட்ரான்ஸ்பரண்டா மாறும்.எவன்னா ஈகோவை ஹர்ட் பண்ணா “வாடா பங்காளி .. இதென்னமோ வேட்டையாடு விளையாடு படத்துல ஜோதிகா பண்ற தற்கொலை முயற்சி மாதிரி மூச்சுத்திணற வச்சுக்கிட்டு இருந்தது .. லேசா சிதைச்சு மூச்சு விட வைச்சே தேங்க்யூனு சொல்லமுடியும்.

சரி .. இந்த ஈகோவை எப்படி மைண்ட்லருந்து டெலிட் பண்றது? மொதல்ல இந்த படைப்போட பிரம்மாண்டத்தை தெரிஞ்சுக்கனும். விசுவத்தில் பூமி தம்மாத்தூணடு கோலிகுண்டுனு புரிஞ்சிக்கனும். இந்த பூமியோட அமைப்பை தெரிஞ்சுக்கனும் இது எப்படியா கொத்த அபத்திரத்துல மிதந்து கிட்டு இருக்கு. இந்த கோளத்துக்குள்ள நடக்கிற சலனங்கள் என்ன? இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட ஒப்பிட்டா நாம தம்மாத்தூண்டு கொசுங்கற மேட்டரை மைண்டுக்குள்ள ஏத்தியே ஆகனும்.

அதே போல நமக்கு தெரிஞ்ச சர்க்கிள்ள எவனெல்லாம் அல்பாயுசுல செத்தான்னு ஒரு டேட்டாவை மைண்ட்ல வச்சுக்கனும். ஈகோங்கறது வாழ்க்கையின் ஃப்ளெக்சிபிலிட்டியை – மாற்றத்தை கணக்கில் கொள்ளப்படாத ஒரு ஃபோபியா.மனோ வியாதி.

“இன்னைக்கும் நான் ஆம்பள சிங்கம் ! எனக்கென்னடி குறைச்சல் நான் பெத்தது எல்லாம் ஆம்பள சிங்கங்க’ மாதிரியான டயலாகுகளை கேட்டுக்கிட்டே இருக்கோம். அனந்தபூர்ல ஒரு என்.ஆர்.ஐ பிக்காலி ஒரு கோடி ரூபா வ்ரதட்சிணையோட கல்யாணம் பண்ணிக்கிட்டு பொஞ்சாதி பிடிக்கலைன்னு போட்டுத்தள்ளிட்டான். பாவம் அந்த பொம்பள நல்லாவே இருக்கு. சீரியல்ல கேள்வி கேட்காம ஹீரோயினா போட்டுக்கிடலாம்.

தாளி இன்னைக்கு நடக்கிற கருக்கொலை – சிசுக்கொலை,- பொஞ்சாதி கொலைல்லாம் தொடர்ந்து ஒரு கட்டத்துல பெண் சனத்தொகை பாதியா குறைஞ்சு போச்சுன்னா இந்த சிங்கங்கள் எல்லாம் பெண் சிங்கங்களுக்கு …………………………… வேணாம்னே கெட்ட கெட்ட வார்த்தையா வருது.

“மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று”

இந்திராகாந்திய தோற்கடிச்சது ராஜ் நாராயணன்ங்கற பைத்தியம் ஞா இருக்கா? நம்ம அம்மா கூட ஒரு மருந்து கடைக்காரர் கிட்டே தோத்தவர்தானே.

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் ஒன்னுதான் – இந்த சத்தியத்தை உணர்ந்தாலே ஈகோ எல்லாம் சமீபத்திய தேர்தல்ல திமுக மாதிரி காணாம போயிரும்.

இருக்கிற ப்ளஸ் பாய்ண்ட்ஸை பூதாகரமாக்கி ஈகோவை வளர்த்துக்கிட்டாலும் பரவால்லை. இல்லாததையெல்லாம் இருக்கிறதா போலியா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிற பார்ட்டிங்கள என்ன சொல்ல?

நமக்கும் ஒரு காலத்துல இந்த இழவெல்லாம் இழவெடுத்துக்கிட்டுதான் இருந்தது. நாம ஆன்மீகத்தை நோக்கி அடியெடுத்து வைக்க காரணமே இந்த குட்டிகளோட போலித்தனம் தேன். அதுகளுக்கும் வேண்டி தான் இருக்கும். ஆனால் முக்கியமான நேரத்துல ஆயிரத்தெட்டு ப்ளீஸ் போடனும். அப்பாறம் எல்லாம் முடிஞ்சப்பாறம் ரொட்டீன் டயலாக்ஸ் .. ஷாட் கட் பண்ணா அப்பன் ஆயியோட ஷாப்பிங் போற சமயம் நம்மை என்னமோ ஞாயிற்றுக்கிழமை போஸ்ட் பாக்ஸை பார்த்த தினுசுல பார்க்கிறது.

நாம தனியா சிக்கினா மறுபடி டார்ச்சர் ஷிட்.. இந்த போலித்தனங்கள் சலிச்சு போய் தேன் உண்மையா இருக்கனும்னுதேன் நான் ஆஞ்சனேயரை பிடிச்சேன்.

இப்பல்லாம் யாராச்சும் டீ குடிக்க கூப்டா மொதல்ல பாக்கெட்ல எவ்ள சில்லறை இருக்கு எண்ணி ‘யப்பா என் கிட்டே முப்பத்தி ஓரு ரூபாயும் ஒரு செல்லாத நாலணாவும் தேன் இருக்குன்னிர்ரது.

“எப்டி சார் .. 44 வயசுலயும் யூத்தா இருக்கிங்கன்னு கேப்பாக”

“அடப்போய்யா பத்து நிமிசம் நின்னு பேசினா இடுப்பு கழண்டு போகுது யூத்தாம்ல யூத்துன்னிர்ரது”

எதெல்லாம் நிரந்தரம் இல்லையோ அதனால கிடைக்கிற பூஸ்ட் எல்லாம் அப்பாறம் தன்னிரக்கத்துலதேன் தள்ளிவிட்டுரும்.

எதெல்லாம் மரணத்தை ட்ராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி தடுத்து நிறுத்தமுடியுமோ அதனால கிடைக்கிற பூஸ்டை தவிர மத்த பூஸ்ட் எல்லாம் வேஸ்ட்.

எதெல்லாம் மரணத்துக்கப்பாறமும் தொடராதோ அதெல்லாம் கிரிமினல் வேஸ்ட். ஈகோவே ஒரு பொய். பொய்யை மெய்யா நம்பினா மெய்யே பொய்யாயிரும். பொய்யே மெய்யாயிரும். ஆளை விடுங்கப்பு.

எங்க வீட்ல ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி இருக்கு. அதை என் பொஞ்சாதி 24 மணி நேரம் கரிச்சு கொட்டிக்கிட்டே இருப்பாள்.

நான் அவளுக்கு சொல்றது வழக்கம் ” ங்கொய்யால நீ ஏதொ பெரிய மனசு பண்ணி அதை வீட்ல சேர்த்து வச்சி – சோத்தை போடறேன்னு நினைக்காதே.. நாம பிறந்து வளர்ந்து கண்ணாலம் கட்டி 20 வருசமா நான் எத்தீனி கெட்ட ஆட்டம் போட்டாலும் – நீ எத்தீனி இம்சை கொடுத்தாலும நாம டைவர்ஸ் வாங்காம வாழ்ந்துக்கிட்டிருக்கிறதே இந்த நாய்க்குட்டியை வளர்க்க தானோ என்னமோ”

ரிவர்ஸுல ரோசிங்க நைனா? நம்ம ரோசனை எல்லாம் கரப்ட் ஆயிருச்சு. இந்த பாழாப்போன வைரஸால.

பைபிள் வாசகங்கள்:
” தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.”: மத்தேயு 18:4

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 18:3

11 thoughts on “ஈகோ என்ற வைரஸ்

    Thirumalaisamy said:
    May 24, 2011 at 4:35 am

    ரொம்ப நன்றி நே !!! நீளமான பதிவே போட்டாச்சு போல .. ஆத்தா நல்லா இருக்காங்களா ? கேட்டேன் நு சொல்லுங்க !!! அருமையான உதாரணங்கள் . நம்ம favorute வாசகம் நே அது ” மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதது ” .. நன்றி .

    தல,
    பதிவு சும்மா நச்னு இருக்கு
    ஒவ்வொரு வரியும் அருமை..
    ஒருத்தன் உண்மையா வாழணும்னு நெனைச்சா இந்த ஒரு பதிவ படிச்சு உணர்ந்து வாழ்ந்தா போதும்

    உண்மைய பட்டுன்னு போட்டு உடைத்து விடுவதால் தான் நீங்க ரஜினிய திட்டினாலும் ,என்ன பம்மாத்து பண்ணினாலும் யாரும் அவ்வளாவ எதிர்த்து குரல் கொடுப்பதில்லை என்று நெனைக்கிறேன் 🙂

      S Murugesan said:
      May 24, 2011 at 11:09 am

      ராசா!
      ஈகோவை நகர்த்தி வைக்கிறதும் – உண்மைய பார்க்கிறதும் – அதை நாலு பேருக்கு சொல்றதும் ஹை ரிஸ்க் ப்ராஜக்ட். ஆரம்பத்துல டாரா கிழிச்சிருக்காய்ங்க.

      அப்பாறம் அப்பாறம் தேன் தாளி வலிச்சாலும் உண்மைய சொல்றான். நன்மை கருதித்தானே சொல்றானு புரிஞ்சிக்கிட்டாய்ங்கனு நினைக்கிறேன்.

    வினோத் said:
    May 24, 2011 at 10:18 am

    நன்ரி தல

    ஐயா,
    அழிந்துவரும் சிங்க இனங்களை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிங்க இனம் அழிந்து வருவதைக்கண்டு பூனை கூட கண்கலங்குவது போன்ற கருத்துப்படம் நன்றாக உள்ளது.தாங்கள் மனோரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      S Murugesan said:
      May 24, 2011 at 4:57 pm

      ஐயா,
      இது ஈகோவை காட்டும் படம். பூனைகூட தன்னை சிங்கமா நினைச்சுக்குதுங்கறதை காட்டும்னு நினைச்சு போட்டேன்.

    Sudharsan said:
    May 24, 2011 at 3:59 pm

    Hai Murugesan sir,
    What is the effect of tonsuring the head in Tirumala temple?I think it reduces the evil effect of Sani.Can you clarify me?

      S Murugesan said:
      May 24, 2011 at 4:32 pm

      சுதர்சன்,
      திருமலைல தானு இல்லே சலூன்ல செய்துக்கிட்டாலும் ,வீட்டு திண்ணையில உட்கார்ந்து செய்துக்கிட்டாலும் பலன் ஒன்னுதேன்.

      நம்மை தாக்கும் பேட் வைபரேஷன்ஸை நம்ம பாடியே ரிஜெக்ட் பண்ணி வெளிய அனுப்ப பார்க்கும். ஆனால் அந்த வைபரேஷன்ஸ் ரோமக்கால்கள்ள கொஞ்சம் போல தேங்கி இருக்கலாம்.

      அதிலும் நாம குதிரை மாதிரி நின்னுக்கிட்டு தூங்கற சாதியில்லைங்கறதால இந்த பேட் வைபரேஷன்ஸ் தலை முடியின் ரோமக்கால்கள்ள தேங்கி இருக்கலாம்.

      தலைமுடிய மழிச்சு எறிஞ்சுர்ரதால அதெல்லாம் ஒழிஞ்சு போயிரும். ஆனால் சனம் நினைச்ச காரியம் முடிஞ்சு பாடியில நல்ல வைபரேஷன்ஸ் பொங்கி பிரவிகிக்கும்போது மொட்டை போட்டு தொலைச்சுர்ராய்ங்க.

      இது ஒரு கோணம்.

      இன்னொரு கோணத்துல பார்த்தா அந்த காலத்துல கிராமங்கள்ள தப்பு தண்டா பண்ணிட்டா மொட்டை போட்டுருவாய்ங்க. அது ஒரு தண்டனை/அவமானம் மாதிரிங்கண்ணா.

      இதுமாதிரி ஒரு யோகம் கிராஸ் ஆக இருந்து அந்த நேரம் நாமளா மொட்டை போட்டுக்கிட்டா அந்த யோகம் (?) அவாய்ட் ஆகலாம்.

      பெண்கள் விஷயத்துல விதவா யோகமே அவாய்ட் ஆகும். எப்படின்னு ஆருனா சொல்லுங்கப்பு

    Sekkaali said:
    May 25, 2011 at 9:02 am

    //தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.//
    அங்கன போயாவது பெரியவனாயிரலாம் அப்டின்னா ?

      S Murugesan said:
      May 25, 2011 at 12:14 pm

      சேக்காளி,
      இகம் – என்பது இவ்வுலகையும், பரம் – என்பது ஸ்வர்கத்தையும் காட்டும் என்பது பொதுவான நடைமுறை.

      ஆனால் நான் மன்சுல வச்சு சொன்னது வேற. இகம் என்பது உங்கள் ஈகோ கலந்த individual mind ஐ காட்டுகிறது.

      பரம் என்பது ஈகோ அற்ற யூனிவர்சல் மைண்டை காட்டுகிறது. இது ஸ்வர்கம்.

      அடித்து பிடித்து ம்ற்றவர்களை விட நீங்க உசந்தவருன்னு காட்டிட்டா உங்க ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகலாம். ஆனால் சப்கான்ஷியஸா உங்களுக்குள்ள கில்ட்டி தான் ஏற்படும். அதான் நரகம்.

    டவுசர் பாண்டி said:
    May 29, 2011 at 2:47 am

    நைனா பதிவுக்கு ஒரு படம் செலக்ட் பன்னுராருணா அதுல நிச்சயம் எதாவது ஒரு மெச்செஜ் இருக்கும். சிங்கம் கண்ணுக்கு அல்லாமே பூனையா தெரியுதோ. மாத்தி யோசி மாமு.

    ஈ = ஒரு பூச்சி
    கோ = அரசன்

Leave a reply to S Murugesan Cancel reply