ரஜினியின் மறுபிறவி எப்போ? எங்கே?

Posted on

அண்ணே வணக்கம்ணே.. அடச்சீ என்னய்யா இது அச்சாணியமா மறுபிறவி கிறு பிறவின்னிக்கிட்டு இப்ப என்ன நடந்து போச்சு? சீக்கிரமே நல்ல ஆரோக்கியத்தோட ,துடிப்போட திரும்பிவரப்போறாரு தலைவருன்னுட்டு உணர்ச்சி வசப்பட்டுராதிங்க.

ஏன் எட்டாங்கிளாஸ் படிக்கிற பையனை ஸ்கூல் ஃபைனல்ஸ் முடிச்ச பிற்பாடு எந்த காலேஜ்ல சேர்க்கலாம்னு அவன் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்ப ரோசிக்கக்கூடாதா என்ன? ரஜினி நல்லபடி திரும்பி வரட்டும். நிறைவா 120 வருசம் வாழட்டும் . நமக்கொன்னும் அப்ஜெக்சன் கிடையாது.

இந்த பிறவி மேட்டர்ல நமக்குன்னு ஒரு ஃபார்முலா இருக்கு. அதை வச்சு ஒரு சில விஷயங்களை சொல்றேன்.

மொதல்ல இந்த பிறவியை பார்ப்போம். வாக்குஸ்தானத்துல சனி நின்னாரு.இதனால பேச வேண்டிய நேரத்துல பேசாம (உ.ம் ஏப்ரல் 12) பேச தேவையில்லாத நேரத்துல பேசிர்ரது (உ.ம் ஏப்ரல் 13) மொதக்கொண்டு பேச்சால எத்தீனி பிரச்சினைய தருவிச்சிக்கனுமோ அத்தீனி பிரச்சினைகளையும் விலைக்கே வாங்கிக்கிட்ட பார்ட்டி ரஜினி.

கரும காரகனாகிய சனி இவருக்கு 3 ஆவது இடத்துல நிக்கும்படியான கிரக நிலையில பிறப்பார். அப்போ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசி கிழி கிழின்னு கிழிப்பாரு.

இந்த பிறவியில சிம்ம லக்னம்.இது ராஜ கிரகம்ங்கறதால அதுக்கேத்த என்விரான்மென்ட்ல பிறந்தார். ரஜினியோட முன்னோர்கள் சத்ரபதி சிவாஜி கிட்டே மெய்காவலர்களா இருந்தவுகன்னு ஒரு பேச்சு. அப்பா காவல்துறையில இருந்ததாவும் ஒரு தகவல்.

சிம்ம லக்னக்காரவுக சைக்காலஜியே டிஃப்ரண்டா இருக்கும்.ரெம்ப சைல்டிஷா இருப்பாய்ங்க. ஓவர் கான்ஃபிடென்டா இருப்பாய்ங்க. முன்ன பின்ன யோசிக்காத செலவழிச்சுருவாய்ங்க.

சிம்மத்துக்கு அதிபதியான சூரியன் எல்லா கிரகங்களையும் நோக்கி தன் கதிர்களை வீசுறாப்ல அல்லாரையும் அனுசரிச்சிக்கிட்டு போகனும்னு ஒரு கான்செப்ட் வச்சிருப்பாய்ங்க. முக்கியமா இது நடுவயசுக்கப்பாறம் ஆரம்பிக்கும். அதுவரை தன்னை புகழ்பவர்கள் எல்லாம் நல்லவுக மத்தவுகல்லாம் ஆயிப்பசங்கங்கற நினைப்புல இருப்பாய்ங்க.அது வேற விஷயம்.

இப்படி அல்லாருக்கும் நல்லவனா இருக்கிறது ஒரு வகையில கெட்டவுகளுக்கு துணைபோறாப்லயும் ஆயிருது. நல்லவுகளுக்கு துணை நிக்காத மாதிரியும் ஆயிருது. சிம்மம் ராசிச்சக்கரத்துல அஞ்சாவது ராசி.பேர், புகழ், வாரிசுகளை காட்டும் இடம்.

இதனால இவிக வாழ்க்கையில பேர், புகழ், வாரிசுகள் ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமா இருக்கும். இவிக சப் கான்ஷியசா இதை விரும்புவாய்ங்க. இயற்கையின் குரூரமான விதி என்னன்னா நீங்க எதை எந்த அளவுக்கு விரும்பறிங்க்ளோ அந்த அளவுக்கு எட்டிப்போகும். தட்டிப்போகும்.

ரஜினியை தூக்க எத்தனை ஆளு இருக்காய்ங்களோ அவிகளுக்கு ஒன்னு ரெண்டு நெம்பர் கூடுதலாவே கிழிக்கவும் ஆளிருக்கு. அதிர்ஷ்டம் முத்தமிட்டா கிராஃப் ஒரேயடியா தூக்குது. துரதிர்ஷ்டம் கண்ணடிச்சா
கிராஃப் அதலபாதாளத்துக்கு சரிஞ்சுருது. வாரிசுகள் மேட்டரும் இப்படித்தேன் ஓடிக்கிட்டு இருக்கு.

ஆனா அடுத்த பிறவியில இவரோட லக்னம் கன்னிக்கு நகர்ந்துரும். கன்னிக்கு அதிபதி புதன்.இதனால ரஜினி அவரோட அடுத்த பிறவியில நல்ல கல்வியாளரா, கணிதம், கணக்குத்தணிக்கை மாதிரி துறைகளில் ஈடுபாடு கொண்டவரா இருப்பாரு. பிசினஸ் மைண்ட் இருக்கும்.

இந்த பிறவியில குகைக்குள்ள சோம்பேறி சிங்கமா தனிக்கட்டையா கிடந்த ரஜினி அடுத்த பிறவியில லட்சக்கணக்கான ஆட்களோட இன்டராக்ட் ஆவாரு.

இந்த பிறவியில வலுச்சண்டைக்கே இழுத்தாலும் நமக்கேன் வம்புன்னு விலகிப்போயிட்டே இருந்த ரஜினி ( த.மா.கா திமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தது ஒன்னுதேன் விதி விலக்கு) அடுத்த பிறவியில வம்பை தேடி மைல் கணக்குல போவாரு. (உ.ம் : ஜகன் மோகன் ரெட்டி)

க்கும்… கனைச்சுக்கறேன். ஆக்சுவலா ரஜினியின் துரோகங்கள்னு ஒரு தலைப்புல பதிவெழுதத்தான் உத்தேசம். ஆனால் இன்னைக்கு ரஜினி இருக்கிற நிலையில இப்படி ஒரு பதிவு தேவையான்னு மனிதாபிமான சிந்தனை ஒரு பக்கம் தடுத்துக்கிட்டே இருந்தது.

ஆனால் நம்ம ரோல் ஏறக்குறைய ஒரு சர்ஜனோட ரோல்.கொல்லனோட ரோல். கட்டி பழுத்துவந்தப்பதேன் அறுக்கனும். தங்கம் நல்லா செம்பிழம்பா இருக்கிறப்பதேன் அதை உருவாக்கனும்.

ஓரளவுக்கு ரஜினிக்கு சாமி,பூதம்,ஆன்மீகம்,தியானம் அது இதுன்னு கொஞ்சம் இனடரஸ்ட் இருக்கிறதால ” நான் யாருக்கும் துரோகம் பண்ணல்லே..எனக்கு ஒன்னும் ஆகாது”ன்னு வெளிய சொல்லியிருக்கலாம். ஆனால் மனசுக்குள்ள “யாருக்கு என்ன துரோகம் பண்ணேன். எதுக்கு திடீர்னு இந்த மாதிரி ஆயிருச்சு”ன்னு கேள்வியும் கேட்டுக்கிட்டிருக்கலாம்.

அதுக்கான பதிலாவும் இந்த பதிவை எடுத்துக்கலாம்.அதுக்கு முந்தி ஒரு சின்ன விளக்கம். ரஜினியோட கீழ்காணும் துரோகங்களுக்கு ஸ்தூலமா லோகாயதமா பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த காரணங்களுக்கு பின்னாடி இருந்ததெல்லாம் இன்செக்யூரிட்டி,ஹிப்பாக்ரசி,எஸ்கேப்பிசம்தான்.

இன்செக்யூரிட்டி:

யாரை ஆள விட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாதுன்னு சொன்னாரோ அதே ஜெயலலிதாவை வீரலட்சுமின்னு புகழ்ந்தது

ஹிப்பாக்ரசி:

லதாங்கற நடிகைய காதலிச்சு அது கைகூடலைன்ன உடனே அதே பேர் கொண்ட் பெண்ணை மணந்துக்கிட்டது.

ஜெயலலிதா அம்மாவை ஒன்னும் பண்ணமுடியாம படையப்பாவுல அதே மாதிரி ஒரு கேரக்டரை உருவாக்கி ரம்யா கிருஷ்ணாவை கிழிச்சது. (என் பார்வையில இது ஒரு சுய இன்பம் மாதிரி)

எஸ்கேப்பிசம்:
காவேரி தண்ணீருக்காக திரையுலகம் நெய்வேலி போராட்டத்துக்கு புறப்பட்ட சமயம் குணமெனும் குன்றேறி நின்ற விஜயகுமாரோட உண்ணாவிரதம் இருந்தது.

தில்லிருந்தா இந்த போராட்டமே தேவையில்லாதது. கர்னாடகா நான் பிற்ந்த மண் அதுக்கு எதிரான போராட்டட்த்துல நான் கலந்துக்கமாட்டேனு சொல்லியிருக்கலாம்.

அட.. எஸ்கேப்பிஸ்டாவே இருந்தாலும் – கொஞ்சம் பெட்டரா ரோசிச்சு இந்த போராட்டத்தால எல்லாம் பிரச்சினை தீராது வாங்க நதிகளை இணைக்க போராடலாம்னு ரசிகர்களுக்கு அழைப்பு விட்டு ஒர்க் அவுட் பண்ணியிருக்கலாம். என்னோட ஷேர் ஒரு கோடி ரூபா என் ரசிகர்களோட ஷேர் இத்தீனி கோடி ரூபான்னு பிரதமரை பார்த்து தூக்கி வீசியிருக்கலாம்

ரஜினி யாருக்கெல்லாம் துரோகம் பண்ணியிருக்காருன்னு சின்ன பட்டியல்

1.தன் ரசிகர்கள்

ரஜினி காந்தை வளர்த்து விட்டது யாரு? சேரிப்பசங்க,சூத்திர பசங்க. இட்லி ,சாம்பார் எல்லாம் சின்ன சாம்பாருக்கு (கமல்ஹாசன்) சேவை பண்ணிக்கிட்டிருந்தப்போ ரஜினிக்கு காவடி எடுத்தது மேற்படி பசங்கதான். கமல் என்னவோ தன் ரசிகர்களை சகலகலாவல்லவன் ரேஞ்சுல இருந்து வளர்த்தெடுத்துக்கிட்டே போறாரு. ஆனால் ரஜினி நேத்து ஒரு ரோபோ, நாளைக்கொரு ராணா.. நாளன்னைக்கு ஒரு கானா. எக்காரணத்தை கொண்டும் ரசிகனோட ரசனை உயர்ந்துடக்கூடாதுங்கறது ரஜினியோட பாலிசி.

தன் சுயலாபத்துக்காக ஆட்சியாளர்கள்/ பாமக மாதிரி பார்ட்டிங்களுக்கு எதிரா சவுண்டு விட்டுக்கினு ரசிகர்களை ரேங்க விட்டு இதோ அதோன்னு பிழைப்பை கெடுத்தது. ஆமா நதி இணைப்புக்கு தரேன்ன ஒரு கோடி செட்டில் பண்ணிட்டாருங்களாங்க? என்ன.. ரசிகர்களுக்கு தரேன்னு சொன்ன கண்ணால விருந்தே இன்னம் தரலையா?

2.சினிமா ரசிகர்கள்:
பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் கூட சினிமாவிலான தங்கள் சம்பாத்தியத்தை நல்ல சினிமா,பேர்லல் சினிமான்னு சினிமாவுல போட்டு ரிஸ்க் எடுக்கறப்ப ரஜினி மட்டும் பேண்ட் பாக்கெட்ல விட்ட கையை எடுக்கறதே இல்லை. எடுத்தா தாளி மாவீரன் தேன்

3.கை தூக்கிவிட்ட சின்ன சின்ன தயாரிப்பாளர்கள்:
ரஜினியோட திரையுலக வாழ்க்கையில ஆரம்பத்துல எத்தனையோ தயாரிப்பாளர்கள் ரஜினியை வச்சு படம் பண்ணாய்ங்க. இன்னைக்கு அவிக ,அவிக குடும்பம் எந்த கதியில இருக்குதுன்னு தெரியாது. ஆனால் ரஜினி மட்டும் எந்திரன் பண்ணுவாரு. எந்திரன் தயாரிப்பாளர் ஒன்னு ரெண்டு டிவி பேட்டி கொடுக்கவேண்டி வரும்னு சொன்னா டபுள் ஓகே சொல்வாரு.

4.எம்.ஜி.ஆர், சிவாஜி , ராஜ்குமார்: என்.டி.ஆர்:

ரஜினி தன்னோட படங்கள்ள எம்.ஜி.ஆரை இன்டைரக்டா நக்கலடிச்சிருக்காரு. தன்னோட கேரக்டரைசேஷன் எம்.ஜி.ஆர் படங்கள் மாதிரி இருக்கக்கூடாதுன்னு ரெம்பவே மெனக்கெட்டிருக்காரு.உ.ம் ராணுவ வீரன் ” இந்த மாதிரி நகை போட்டுக்கிட்டு ரயில்ல வர்ரது திருடங்களுக்கு வெ.பாக்கு கொடுத்து கூப்பிடற மாதிரி.பொம்பளைக்கு தேவை பொன்னகை இல்லை.புன்னைகை”

ஒரு காலத்துல எம்.ஜி.ஆர் மேடையில இருக்கிற ஃபங்சனுக்கு போய் ஹலோ எம்.ஜி.ஆர்னுட்டு ஸ்டன்ட் அடிச்சதெல்லாம் கூட உண்டு. அத்தீனி வெறுப்பு வாத்யார் மேல.

ஆனால் இன்னைக்கு எம்.ஜி.ஆர் ஃபார்முலா இல்லாத ரஜினி படமே கிடையாது.

ஆந்திரா போனா நான் என்.டி.ஆர் ஃபேன், ஏ.என்.ஆர்,ஃபேன்ம்பாரு

கர்னாடகா போனா ராஜ்குமார் ஃபேன்,

இங்கன வந்தா எம்சியார் சிவாஜி ஃபேனும்பாரு

மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேகிட்டே ஆசீர்வாதம் வாங்குவார்

இதனால அவரோட சந்தர்ப்பவாதம் வெட்ட வெளிச்சமாகுதுதான் இல்லேங்கலை. ஆனால் இந்த உட்டாலக்கடியால அந்த சரித்திர புருஷர்களுக்கும் அவமானம்தானே.

என்.டி.ஆருக்கு செய்த சிறப்பு துரோகம்:

ரஜினிக்கு திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவுல உறுப்பினர் பதவியை கொடுத்தாரு என்.டி.ஆர். ( ரஜினி வாழ்க்கையில மொதல்ல கிடைச்ச பதவி அது – அதுவே கடைசியுமா ஆகிப்போச்சு)
முழு ரிப்போர்ட்டுக்கு இங்கே அழுத்துங்க.

ஆனால் சில மாதங்கள்ல லட்சுமிபார்வதி மேட்டர்ல சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சுர பஞ்சாயத்து பேச வந்த ரஜினி லட்சுமி பார்வதி ஒரு தீய சக்தி – அவிகளை என்.டி.ஆர் தள்ளி வச்சுரனும். சந்திரபாபு கட்சியில தலைவர் பதவியை காலியா வைக்கனும் என்.டி.ஆர் மைனஸ் ல.பார்வதி வந்தா தலைவரா எத்துக்கனும்னு பேசிட்டு போனாரு.

சந்திரபாபு தலைவர் பதவியை காலியா விடலை.தானே உட்கார்ந்துக்கிட்டாரு. ஆனால் பஞ்சாயத்து பேசின ரஜினி மட்டும் தன் சீட்டை சீட்டை விட்டு நகர்த்தாம பம்மிட்டாரு.

இத்தனைக்கும் ரஜினின்னா ஆருன்னே தெரியாத காலத்துல டைகர் சினிமாவுல சான்ஸ் கொடுத்து – ஸ்கொப்பும் கொடுத்தவரு என்.டி.ஆர்

கட்டக்கடைசியா கலைஞர்:
பா.ம.க எப்படி கடேசி வரை அதிகாரத்தை அனுபவிச்சுட்டு தேர்தல் நேரத்துல கழண்டுக்குச்சோ அதை கோரமா – அசிங்கமா -அருவறுப்பா தேர்தல் நடக்கிற் நாள்ள “மக்கள் மாற்றத்தை விரும்பறாய்ங்க”ன்னு பேட்டிக்கொடுத்தவர்தானே இந்த ரஜினி.

குழந்தையும் தெய்வமும் மனத்தால் ஒன்றும்பாய்ங்க. இந்த பட்டியல்ல கலைஞர் வயசு பார்ட்டிகளையும் சேர்த்துக்கனும்.

பாவம் கிழவனார் மனசு என்ன பாடு பட்டிருக்கும்? வெந்த புண்ல வேல் பாய்ச்சறாப்ல சாயந்திரமே தாத்தாவோட ப்ரிவ்யூ.

தாத்தா! எந்திரன் படத்துக்கு பேரன் மாரு ரஜினியோட எந்த நாட்டு அக்கவுண்ட்ல எத்தனை கோடி ப்ளாக்கு போட்டாய்ங்கனு ஒரு மேட்டரை லீக் பண்ணிருங்க. தானிக்கி தீனிக்கி சரி பூடும்.

Advertisements

23 thoughts on “ரஜினியின் மறுபிறவி எப்போ? எங்கே?

  swami said:
  May 23, 2011 at 2:49 am

  அண்ணா, உங்களுக்கு இரண்டில் சனி நல்லா வேலை செய்யுது.இப்ப இருக்கற நிலைமையில் இந்த பதிவு தேவையா?

   Reena said:
   May 23, 2011 at 5:53 am

   அதானே?

   S Murugesan said:
   May 23, 2011 at 7:28 am

   ஸ்வாமி !
   சனி கர்மகாரகன்னு தான் தெரியும். நியாயம் வழங்குறதும் சனியோட டிப்பார்ட்மென்டுதான்னு தெரியுமா? அதனாலதான் நீதியும் தாமதமா நிலை நாட்டப்படுது போல ( சனி மீன்ஸ் டிலே)

   வாக்கு ஸ்தானத்துல சனி இல்லேன்னா இந்த அளவுக்கு பட்டவர்த்தனமா எழுதியிருக்க முடியாது. சனிக்கு நன்றி.

  Ismail said:
  May 23, 2011 at 4:26 am

  ஏதோ வெசனப்பட்டு உக்கர்ந்திருன்தீங்கன்னு பார்த்த இப்படி முழு வேகத்தில கேளம்புவீனன்னு எதிர்பார்கவே இல்லை. ஆனா இப்ப இருக்கும் நிலைமையில் இந்த மாதிரி பதிவு தேவையான்னு யோசிக்க வைக்குது.
  ஏங்க ரஜினிக்கு எதாவது உங்க பாணியில் பரிகாரம் சொல்லலாமே. எத்தனையோ அப்பாவி ரஜினி ரசிகன் திருப்தி அடைவானே.

   S Murugesan said:
   May 23, 2011 at 7:25 am

   இஸ்மாயில் !
   //இப்ப இருக்கும் நிலைமையில் இந்த மாதிரி பதிவு தேவையான்னு //
   ரொட்டீன் லைஃப் சிதறும்போது ஈகோவும் சிதறும். ஈகோ சிதறிய மனசு ஆழ உழப்பட்ட மனசு மாதிரி. அப்பத்தேன் நாலு மேட்டரை விதைக்கமுடியும்.

   //பரிகாரம் சொல்லலாமே.//
   அஸ்கு புஸ்கு ..ரஜினிசாரோட ஃபைல் ஆத்தா டேபிள்ள இருக்கு. அம்மாவாச்சும் டாக்ஸி தான் அனுப்புவாய்ங்க.ஆத்தா இருந்த இடத்துல இருந்து எதையாவது எக்கு தப்பா எறிஞ்சு தொலைச்சா நான் காலி.
   உண்மையான பரிகாரம் ரியலைஸ் ஆகிறதுதான்.அது ரஜினி கையிலயே இருக்கு

  viji said:
  May 23, 2011 at 4:54 am

  NEENGA SONNATHU KONCHANTHAAN. YANNA MATHIRI CINIMAVULA IRUKIRAVANGA NIRAYA SOLVANKA, RAJINIYAE UNMAYA SONNALUM JANAM NAMBATHU BOSS.MAKKAL MADAYARKALNU YAPPATHAN PURINCHIKA PORINGALOW.

  தல ,
  ரஜினி கிட்ட நீங்க ரொம்ப அதிகமாக எதிர் பார்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…..ஒருவேளை இது ரஜினி மீது உள்ள அதித அன்பின் negative வான வெளிப்பாடோ ?

  என் கருத்து கீழ் கண்ட லிங்க் உள்ள கருத்தை ஒட்டியது தான்

  http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-post_21.html

  //லதாங்கற நடிகைய காதலிச்சு அது கைகூடலைன்ன உடனே அதே பேர் கொண்ட் பெண்ணை மணந்துக்கிட்டது.//

  http://www.astrosuper.com/2011/03/blog-post_13.html

  //ஆந்திரா போனா நான் என்.டி.ஆர் ஃபேன், ஏ.என்.ஆர்,ஃபேன்ம்பாரு

  கர்னாடகா போனா ராஜ்குமார் ஃபேன்,

  இங்கன வந்தா எம்சியார் சிவாஜி ஃபேனும்பாரு

  மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேகிட்டே ஆசீர்வாதம் வாங்குவார்

  இதனால அவரோட சந்தர்ப்பவாதம் வெட்ட வெளிச்சமாகுதுதான் இல்லேங்கலை. ஆனால் இந்த உட்டாலக்கடியால அந்த சரித்திர புருஷர்களுக்கும் அவமானம்தானே.//

  ஒன்றே குலம்…ஒருவனே தேவன் …
  அவரு இமய மலை கூடதான் போறாரு

  //ஆனால் மனசுக்குள்ள “யாருக்கு என்ன துரோகம் பண்ணேன். எதுக்கு திடீர்னு இந்த மாதிரி ஆயிருச்சு”ன்னு கேள்வியும் கேட்டுக்கிட்டிருக்கலாம்.//

  துரோகம் பண்ணுனா தான் நோய் ,மரணம் எல்லாம் வருமா என்ன ?

  //ரஜினியோட திரையுலக வாழ்க்கையில ஆரம்பத்துல எத்தனையோ தயாரிப்பாளர்கள் ரஜினியை வச்சு படம் பண்ணாய்ங்க. இன்னைக்கு அவிக ,அவிக குடும்பம் எந்த கதியில இருக்குதுன்னு தெரியாது.//

  படம் தோற்றப் போதும் விநியோகஸ்தர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பணத்தை திருப்பிக் கொடுத்தவர்தான் ரஜினி….

  //ஆமா நதி இணைப்புக்கு தரேன்ன ஒரு கோடி செட்டில் பண்ணிட்டாருங்களாங்க? //

  யாராச்சும் போய் கேட்டு அவரு கொடுக்க மாட்டேனு சொன்னாரா தல?

  //ஓரளவுக்கு ரஜினிக்கு சாமி,பூதம்,ஆன்மீகம்,தியானம் அது இதுன்னு கொஞ்சம் இனடரஸ்ட் இருக்கிறதால//

  oh ..நமக்கு வந்தா ரத்தம்…அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா 🙂

  நீங்க “ஆத்தா” “ஆத்தா” -ங்கற மாதிரி,நான் “நமிதா” “நமிதா” ங்கற மாதிரி அவரு “பாபா” “பாபா” ங்ராறு …

  //என்ன.. ரசிகர்களுக்கு தரேன்னு சொன்ன கண்ணால விருந்தே இன்னம் தரலையா?//

  இதெல்லாம் ஒரு விசயமா தல ?

  ஒண்ணுமே இல்லாத நெறைய விசயங்களை ஊதி பெரிதாக்குகீர்கள் என்று நினைக்கிறேன்..

   Mani said:
   May 23, 2011 at 4:20 pm

   பத்தவச்சிட்டியே பரட்ட! ஹா! ஹா! இது எப்படி இருக்கு சூப்பர்.

   த.கா. ராசா சும்மா சொல்லக்கூடாது உங்க பதில் ஒவ்வொன்றும் நெத்தியடி!

   ரஜினி ரசிகர்களே இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கும் போது தலைவர் எவ்வளவு யோசிப்பாரு.

   அவரு பாட்டுக்கு அவரு வழியில போய்கிட்டு இருக்காரு அவரை சீண்டறதே மத்தவங்களுக்கு வேலையாப் போச்சு. காய்த்த மரம் தான் கல்லடிபடும்ன்னு சும்மாவா சொன்னாய்ங்க.

   சினிமாவுல நடிக்கறவுங்க எல்லாம் மக்களுக்கு திருப்பி செய்யனும்னா இதையே மத்த நடிகருங்க எதிர்பார்க்க மாட்டேங்குறாங்க. தலைவர் விளம்பரம் இல்லாமல் பல நல்ல விஷங்களை பன்றார். மத்த நடிகருங்க பிறந்த நாளுக்கு தையல் மிஷின் கொடுத்துட்டு பத்திரிக்கையில பெரிசா போஸ் கொடுக்கறாங்க.

   இன்னும் எவ்வளவோ சொல்லலாம். விடுங்க

   superrsyed said:
   May 23, 2011 at 7:42 pm

   சபாஷ் சரியான பதிலடி குடுத்திங்க‌
   தனி காட்டு ராஜா

  டவுசர் பாண்டி said:
  May 23, 2011 at 12:57 pm

  சூப்பர் நைனா டக்கரான பதிவு.

  நம்ம சொந்தக்காரப்புக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலஞ்சதால இங்கன அப்செண்டாக வேண்டிதாச்சி. இந்த ரசிகருங்க தொல்ல தாங்கமுடியலடா சாமி. அவுங்க பெத்தவுங்களுக்கு கூட இப்புடி ஜெவம் பண்ண மாட்டானுக. எவனோ ஒரு…… மவனுக்காண்டி எங்கூருல உள்ள ரசிகனுங்க தொல்ல இருக்கே… யப்பா அவனுக பண்ற அலம்பல் இருக்கே மண்ணுல சோத்த கொட்டி அப்புடியே அள்ளி திங்காணுவ….. அம்புட்டையும் இங்கன அவுத்து உடனும்னா பீபி எகிருப்பூடும். நம்ம பேட்டைல உள்ள சனங்க ஆராச்சும் கோச்சுகாதீங்கப்பு. அவுரு சனங்களுக்கு டாட்டா காட்டிக்கினு போய்க்கினே இருப்பாரு. இவுனுகளுக்கு மண்டைல எப்பதான் ஒரைக்குமோ. நைனாவுக்கே வெளிச்சம்.

   வினோத் said:
   May 23, 2011 at 1:54 pm

   டவுசரு.. உங்களை தான் எதிர்பார்த்தேன்…ரஜினியின் ஆயுள் பாவம் பார்த்து சொல்லுங்கப்பூ

  //ஓரளவுக்கு ரஜினிக்கு சாமி,பூதம்,ஆன்மீகம்,தியானம் அது இதுன்னு கொஞ்சம் இனடரஸ்ட் இருக்கிறதால ” நான் யாருக்கும் துரோகம் பண்ணல்லே..எனக்கு ஒன்னும் ஆகாது”ன்னு வெளிய சொல்லியிருக்கலாம். ஆனால் மனசுக்குள்ள “யாருக்கு என்ன துரோகம் பண்ணேன். எதுக்கு திடீர்னு இந்த மாதிரி ஆயிருச்சு”ன்னு கேள்வியும் கேட்டுக்கிட்டிருக்கலாம்.//

  சில நடிகர்கள்…பாக்கியராஜ்,கார்த்தி போன்றோர் தன் சொட்டை தலையை மறைக்க கேப் போட்டு கொண்டு சுற்றி கொண்டு இருப்பவர்கள்…..இமேஜ் -க்கு அடிமைகள்….
  இந்தி சூப்பர் ஸ்டார் கூட தலை முடிக்கு டை அடித்து கொண்டு …வெப்ப நாடான இந்தியாவில் கோட்டு போட்டு கொண்டு சுத்தும் ஒரு இமேஜ் அடிமை….
  நீங்கள் கூட தலை முடிக்கு டை அடிப்பவர்…

  ஆனால் ரஜினி யிடம் உள்ள எளிமையே அவர் ஆன்மிகவாதி என்பதை காட்டுகிறது…
  ஓட்டை பானையில் ஈ புகுந்த மாதிரி மந்திரம் சொல்லுவது மட்டும் தான் ஆன்மிகம் என்று இல்லை
  [உங்களுக்கு தெரியாததா என்ன ]

  மனம் லய பட்டால் மந்திரம் சபிக்க வேண்டாம் என்பது சித்தர் மொழி…

  ஆன்மிகமே தெரியாதவர் போல நீங்கள் அவரை காட்ட முயற்சி செய்கீர்களோ என்று தோன்றுகிறது..

  என்னடா இவன் இந்த கிழி கிழி ரானே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் சொல்லுதா….
  யாரும் எதிர் கேள்வி கேக்கலைனா ..எங்களை மாதிரி சில ஆளுக கேக்க வேண்டி வந்துருது …என்ன பண்ண 🙂

  ஆன்மிகம் என்பதே மடத்தனாமான கட்டு பாடு அற்ற அன்பு என்பது தானே…

  கடவுள் நமக்கு எதுவே தரவில்லை என்ற போதும் …கடவுள் மீது காட்டும் அன்பு போல தான் இதுவும்..

  அம்மா ,அப்பா மீது உண்மையான அன்பு வரமால் இருக்க என்ன காரணம் தெரியுமா….? எந்த விலங்குமே…யப்பா நான் பத்து மாசம் சுமந்து பெத்தேன் என்று அரற்றுவதில்லை…..ஆனால் மனிதன் கேவலமாக எல்லா வற்றிலும் எதிர் பார்த்து ,ஒரு வித கணக்கோடு தான் அன்பு செய்கிறான்…

  ரஜினி ரசிகன் ரஜினி மீது வைத்து உள்ள அன்பு …கட்டுபாற்ற அன்பு …..ஆன்மிகத்தில் இதன் பெயர் பக்தி யோகம் 🙂

   S Murugesan said:
   May 23, 2011 at 2:00 pm

   ராசா,
   பேசிக்கலா நானும் ஒரு ரஜினி ரசிகன் தேன்.அவரோட பாட்டும் – வசனமும்- ஸ்டேட்மென்ட்ஸும் வேதமா இருந்தவன் தேன். என்னடா பிரச்சினைன்னா நான் வளர்ந்துட்டேன்.அவர் வளரவே இல்லை. ரெம்ப குட்டையா தெரியறாரு.

   //ரஜினி ரசிகன் ரஜினி மீது வைத்து உள்ள அன்பு …கட்டுபாற்ற அன்பு …..ஆன்மிகத்தில் இதன் பெயர் பக்தி யோகம்//

   நான் என்னைக்குமே ரஜினி ரசிகனை குறை சொன்னதே கிடையாது. அவனோட அன்பு ஆமை வடைல்லாம் அவனுக்கு பெருமை தேன். இல்லேங்கலை. ஆனால் இவரோட சொந்த பஞ்சாயத்துகளுக்கு ரசிகனை சந்தில நிறுத்தி வேட்டி உருவ வச்சுட்டு ..( வாய்ஸ் மேட்டரை சொல்றேன்) இவர் மட்டும் தன் கோவணத்தை இறுக்கிப்பிடிச்சுக்கிட்டாரே இது அவருக்கு அவமானமில்லையா?

    Mani said:
    May 23, 2011 at 4:42 pm

    தல ரசிகர்கள் கட்சி ஆரம்பிக்கச் சொன்ன போதல்லாம் மொதல்ல உங்க வீட்ல அப்பா அம்மாவை கவனிங்க, குடும்பம் குழந்தைகளை கவனிங்க மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்ன்னு அட்வைஸ் பன்னியவருதான் நம்ம தலைவரு.

    கலைஞர் மாதிரி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் நிறைந்த நம் நாட்டில் தலைவர் விரும்பியிருந்தால் எப்போதோ ரசிகர்களை பயன்படுத்தி அரசியலுக்கு வந்து ஆதாயம் பார்த்திருக்கலாம். ஆனால் அவர் ரசிகர்கள் மீது உள்ள அன்பினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் அரசியலில் இறங்குவதை தவிர்த்து வந்தார் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

    நம் தலைவர் ஆன்மீகத்தில் பெற்ற அனுபவத்தால் அரசியல் போன்ற சாக்டைக்குள் நுழையாமல் பட்டும் படாமல் இருந்து வருகிறார். அரசியலுக்கு வந்தால் அவர்மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் மரியாதையும் தற்போதைய தரம்தாழ்ந்த அரசியல்வாதிகளால் கெட்டுவிடும் என்பதை நன்கு உணர்ந்தே உள்ளார்.

    ரஜினி ரசிகரான நீங்களே தலைவர் இந்த நிலையில் இருக்கும் போது இப்படி எழுதலாமா. வேண்டாம் தலை. எங்க மனது மிகவும் கஷ்டப்படுது. விட்டுடுங்க. நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை தலைவர் கஷ்டப்படும் போது தூற்றாமலாவது இருக்கலாம் அல்லவா.

    S Murugesan said:
    May 23, 2011 at 6:09 pm

    மணி சார்,
    எங்கே தன்னை சந்திக்கு இழுத்துருவாய்ங்களோன்னு தன்னோட சேஃப்டிக்கு விட்ட வசனம் இது.

    இவரு பாராளுமன்ற தேர்தல்கள்ள பா.ம.க வேட்பாளர்களை தோற்கடிக்க சொன்னப்ப அவரோட ரசிகர்கள் இந்த மேட்டரை அப்படியே ஃபாலோ பண்ணிட்டாய்ங்க போல

    S Murugesan said:
    May 23, 2011 at 6:16 pm

    மணி சார்,
    ரஜினி தன் சினிமா பிம்பத்தை நிஜ்ம்னு நம்பிக்கிட்டிருந்த குழந்தை /உண்மை கலைஞன். அவர் தா.ம.க -திமுகவுக்கு ஃபேவரா விட்ட வாய்ஸ் அவரோட நம்பிக்கையை சாஸ்தியாக்கிருச்சு. இவர் பண்ண குழப்படியால எத்தீனி ரசிகர்கள்/அவர்களோட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுது தெரியாதா உங்களுக்கு?

    நேத்து முந்தா நேத்து ரஜினிகு டூப்ளிக்கேட்டா ஃபீல்டுக்கு வந்த விஜய்காந்த் எதிர்கட்சி தலைவரு. அவரோட ரசிகர்கள் ஏரியால விஐபிக்கள்.ஆனால் ரஜினி ரசிகன்?

    இந்த நிலையில இந்த பதிவை போட்டது அவர் காதுக்கு இது போய் அவர் கருமம் தொலையாதாங்கற நல்ல எண்ணத்துலதான் ..

  ராஜா said:
  May 23, 2011 at 3:13 pm

  வணக்கம்,
  திரு. N.Mariyam Pichai – Environment Minister , தமிழ்நாடு அவர்கள் இன்று காலை பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில்
  சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

  இன்றுதான் தமிழ்நாட்டில் M.L.A க்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அந்நிகழ்ச்சிக்கு வரும் வழியில்தான் அவர்
  மரணமடைந்துள்ளார். அவர் ஒரு முஸ்லிம். அவரது ஊர் திருச்சி. பிறந்த தேதி 27.04.1951 . அவர் M.L.A ஆவது இது முதல் முறை, முதல் முறையிலேயே அமைச்சராகியுள்ளார்.

  முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி பிடிபடவில்லை. மேலும் அமைச்சர் மட்டுமே இறந்துள்ளார், வேறு எவருக்கும் பெரிய காயம் கூட இல்லை என
  தெரிகின்றது.

  முதல் முறை M.L.A க்கள் எடுக்கவிருந்த அன்று காலையில், புதிய ஆட்சி வந்தவுடன் நிகழ்ந்திருக்கும் இந்த கோர நிகழ்வை
  தாங்கள் ஜோதிட ரீதியாக எப்படி அணுகுகிறீர்கள்? இதைப்பற்றி தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஒரு பதிவு போடவும்.

  நன்றி,
  ராஜா

   ராஜா said:
   May 23, 2011 at 3:19 pm

   மேலும் சில தகவல்கள்: அமைச்சர் மரணமடைந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
   இவர் முன்னாள் அமைச்சர் (தி.மு.கவிலும் திருச்சியிலும் செல்வாக்குள்ள) திரு.கே.என்.நேரு அவர்களை திருச்சி மேற்கு தொகுதியில்
   தோற்கடித்து M.L.A. ஆனவர். இவருக்கு மணமாகி மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

   நன்றி,
   ராஜா

   டவுசர் பாண்டி said:
   May 23, 2011 at 3:37 pm

   வணக்கம் ராஜாண்ணே,

   என்னுடைய குறுக்கீட்டிற்கு நைனா மற்றும் சக ஜாம்பாவான்கள் மன்னிக்கணும். ஆயுள் மேட்டருன்க்ரதால முந்திரிக்கொட்ட மாதிரி முந்தி மூக்கறுபட முடிவு பண்ணிட்டன்.

   ராஜாண்ணே, மரியம் அவர்களின் பெர்த் டீட்டைல்ஸ் கெடைக்குமா? எஷ்ஷுன்னு சொன்னீங்கன்னா, இம்மீடியேட்டா நல்லா யோசிச்சி கண்ண மூடி 249குள்ள ஒரு நம்ப செலக்ட் பண்ணி டக்குன்னு போடுங்க. பட்டய கெளப்ப நான் ரெடி.

    vinoth said:
    May 23, 2011 at 4:14 pm

    paadni 113 amaicharukku matumalla rajinikkum paarunga

    ராஜா said:
    May 23, 2011 at 4:33 pm

    தங்கள் பதிலுக்கு நன்றி, அவரது பிறந்த தேதிமட்டுமே தெரியும்: 27.04.1951 . மேலும் அவர் திருச்சியை சேர்ந்தவர்.
    நீங்க கண்ணமூடிட்டு செலக்ட் பண்ண சொன்னதுல நமக்கு பிளாஷ் அடிச்சது 9

  swami said:
  May 24, 2011 at 2:49 pm

  தனிக்காட்டு ராஜா பிச்சு உதறிட்டார்.ரொம்ப அழகாக சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். வாழ்த்துக்கள் ராஜா.

  //தனிக்காட்டு ராஜா பிச்சு உதறிட்டார்.ரொம்ப அழகாக சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். வாழ்த்துக்கள் ராஜா.//

  நன்றிங்க சுவாமி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s