திமுக தோல்விக்கு மனவியல் காரணங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே..
பதிவுக்கு போறதுக்கு முந்தி சின்ன மேட்டர். ” நம்மில் ரெண்டு பேர் எதை நினைச்சாலும் ஆத்தா உடனே நிறைவேற்றி வச்சுருவா.” ஆனாலும் ஆத்தாளுக்கு என்னா குசும்பு பார்த்திங்களா? நாம என்னைக்கு ஒரே விஷயத்தை நினைக்கப்போறோம்?

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”னுட்டு ரேக்கி விட்டுட்டு ஆத்தா கண்டுக்காம விட்டுட்டாளோனு கொஞ்சமா டர்ராயிட்டன். அதனாலதான் என் உணர்வுகளை ஒரு பதிவாக்கினேன். ஆனாலும் இத்தீனி பேரு நமக்கு மோரல் சப்போர்ட் தரும்போது “தாளி ரெண்டு ஒன்னு பார்த்துரவேண்டியதுதான்னு டிசைட் ஆயிட்டன்.உடுங்க ஜூட். அல்லாருக்கும் டாங்ஸுப்பா.

(எல்லாருக்கும்னு சொல்லாம “அல்லா”ருக்கும்னு சொல்றதுல ஒரு சதி இருக்கு) இப்ப பதிவுக்கு போயிரலாமா?

செத்த பாம்பை அடிக்கிறாப்ல தாத்தாவையும் – கனிமொழியையும் கிழி கிழினு கிழிச்சுக்கிட்டே இருக்கிறாய்ங்க பதிவுலகம்,மீடியா மட்டுமில்லை. சீரியல் நேரத்துல கூட தாய்க்குலங்களுக்கிடையில இந்த டாப்பிக் ஓடுதுன்னா பாருங்க..

( நாம மட்டும் சைவமா என்ன?) ஆனால் காட்டுக்கிழிப்பு அவிகளுக்கே அனுதாபத்தை தேடி தந்துரும். ஜனதா பீரியட்ல மொர்ரார்ஜி தேசாய் இந்திராவை அரெஸ்ட் பண்ணாம “ஏன்யா இன்னம் அரெஸ்ட் பண்ணலைன்னு ஒவ்வொரு இந்தியனும் ரோட்டுக்கு வந்து போராடறாப்ல செய்திருக்கனும். கோட்டை விட்டாய்ங்க. படக்குன்னு கைது செய்யவே அனுதாப அலை துவங்கிருச்சு.

கிழிப்புலயும் ஒரு தியரிட்டிக்கல் அண்ட் ஆர்ட்டிஸ்டிக் டச் இருக்கனும்.அப்பத்தேன் அனுதாபம், விரகதாபம்லாம் கிளம்பாது. அதனாலதான் இந்த மனோதத்துவ போஸ்ட் மார்ட்டம்.

1.எம்.ஜி.ஆர் நல்லவரோ கெட்டவரோ நல்லவருன்னு பேரெடுத்த பார்ட்டி -அவரு தாத்தாவை நாட் நாட்லயே திருடன், தீய சக்தின்னுட்டாரு. இது கிழவாடிகளுக்கும், நடுத்தர வயதினருக்கும் பொருந்தும்.

இதுல இன்னொரு ட்விஸ்ட் என்னன்னா தாத்தாவுக்கு நிர்வாகத்துல புலின்னு ஒரு பேருண்டு . ஆனால் தாத்தா கீதை மொழியை மறந்து சுதர்மத்தை விட்டு பரதர்மத்தை கையிலெடுத்தாரு. இது எம்.ஜி.ஆர் ஃபோபியாவுல இருக்கிறவுகளுக்கு ஒரு வித இர்ரிடேஷனை கொடுத்திருக்கனும்.

நீயெல்லாம் அவராயிர முடியுமா? இப்பம் ஜெயிச்சு வந்தா எம்சியாரு பேரையே இல்லாம பண்ணிருவாரு இந்தாளுன்னு ஒரு எண்ணம் அடிமனதுல துளிர்த்திருக்கலாம்.

இது ஒரு ஆங்கிள் தாத்தானு கலைஞரை மட்டும் தேன் தகிரியமா சொல்றோம். ,ஆனால் ஸ்டாலின்,அழகிரி கூட தாத்தாதேன். தாத்தா வயசுல உள்ள கலைஞர் சின்ன வீடு பெரியவீடுகளுக்கு இடையில ஷட்டில் அடிச்சுக்கிட்டு -பஞ்சாயத்து பேசிக்கிட்டு பேரன் கொள்ளுப்பேரன்,அவிக பெத்த புள்ளைங்களையெல்லாம் லைஃப்ல செட்டில் பண்ணிக்கிட்டு இருக்கிறச்ச நடுவயசு பார்ட்டிக்கெல்லாம் இந்த அலம்பல் செமை கடுப்பை கொடுத்திருக்கலாம். “என்னடா நாம நாப்பதுக்கே நாடி நரம்பெல்லாம் தளர்ந்து கிடக்கோம் இவர் என்னடான்னா ஓடிவிளையாடு தாத்தா ரேஞ்சுல குத்தாட்டத்தை ரசிச்சிக்கிட்டிருக்காருன்னு கடுப்பாயிருக்கலாம்.

2.யூத்தை பொருத்தவரை இந்த காலத்து ஃபிகருகளை மடக்க பைக், காஸ்ட்லி செல்,கழுத்துல தாம்புகயிறு கனத்துக்கு மைனரு செயின் , மல்ட்டிகலர்ல டெபிட் கார்டு,க்ரெடிட் கார்டுல்லாம் தேவைப்படுது. இது இல்லையேங்கற ஏக்கத்துல டாஸ்மாக்கை சரணடைஞ்சாலும் மேற்படி ஐட்டங்களுக்கெல்லாம் ட்ரை பண்ணியாகவேண்டிய அவசியமும் இருக்கு. அஞ்சுவருசத்துக்கு முந்தி கூட இவிகளோட எச்சி சிகரட்டு பிடிச்ச லோக்கல் தலைவர்களோட வாரிசுகள் எல்லாம் பி.எம்.டபுள்யூலயும் ,ஸ்கார்ப்பியோலயும் பறக்க இவிக மட்டும் சிகரட்டுக்கு சிங்கியடிச்சிட்டிருக்கிறதை மறக்கலை.

கலைஞ்ர் வீட்டுக்கு மட்டும் ரேஷன் கார்டுக்கு பதில் லாபுக் ரேஞ்சுல காலிகோ பைண்டுல ஒரு புஸ்தவம் கொடுத்திருக்கிறதா கேள்வி. சனத்தொகை சாஸ்தியாச்சா. ஆளுக்கொரு ஃபீல்டுல நுழைஞ்சு கலக்க ஆரம்பிச்சாய்ங்களா. இதனால ஒவ்வொரு க்ரூப்பும் இவிக ஒழிஞ்சாதேன் நமக்கு பொழப்புங்கற முடிவுக்கு வந்துட்டாய்ங்க போல.

2.கலைஞர் கைக்கு அதிகாரம் வந்ததுமே பூமாலை வீடியோ மேகசின் சன் டிவியா மாறும் -ஃபர்னிச்சர் கடை அதிகார மையமாவே மாறும். இதெல்லாம் ஊரறிந்த ரகசியம். சனம் கெட்டதை கூட ஏத்துக்கும். ஆனால் கெட்டது நல்லது மாதிரி மாறுவேடம் பொட்டுக்கிட்டு வந்தா சகிச்சவே சகிச்சுக்காது. ஊழலை பொருத்தவரை நான் நெருப்பு மாதிரின்னுட்டெல்லாம் கலைஞர் வசனம் விட்டது ரெம்ப ஓவராயிருச்சு. வாஜ்பாய் காலத்துல இப்படித்தேன் இந்தியா ஜொலிக்கிறதுன்னு விளம்பரம் விட்டு விலா எலும்புல்லாம் நொறுங்கி வீட்டுக்கு போனாய்ங்க.

3.முக்கியமா பெண்கள் வீக்கர் செக்ஸ். அவிக உலகம் சின்னது. அது அவிக வீடு. அந்த வீட்டுக்குள்ளாறயும் புகுந்து அலப்பறை பண்ணிட்டாரு கலைஞரு. நான் சொல்றது டாஸ்மாக்ல செலவழியற பணத்தை மட்டுமில்லிங்கண்ணா புருசன் மாரும், புள்ளை,மருமகபுள்ளைங்களும் ஹேங் ஓவர், மஞ்ச காமாலைல ஆரம்பிச்சு சந்தேகம், ,. இருமனப்போக்குன்னு ரூட்டை பிடிச்சு ஆல்க்கஹாலிக்ஸாவே மாறிட்டாய்ங்க.அரசாங்கம் விக்குது சரி – நம்ம வூட்டு ஆளுங்களுக்கு புத்தி எங்க போச்சுன்னு அஜீஸ் பண்ணிக்கினு இருந்திருப்பாய்ங்க .ஆனால் டாஸ்மாக் விற்பனையிலான வளர்ச்சி சாதனை கணக்கா பீத்திக்கிட்டாய்ங்களே அங்கன பத்திக்கிச்சுன்னு நினைக்கிறேன். அடுத்தது . மின் வெட்டு ( அதுவும் எந்த சீரியல் வரப்ப வெட்டுவாய்ங்கனு தெரியாத வெட்டு). இந்த கேட்டகிரில கேஸ் விலை உயர்வு, ரேஷன் கடைக்காரவுக அக்கிரமம் -அவிகளுக்கு பின்னணியில லோக்கல் தலைவருங்கன்னு எக்கச்சக்க மேட்டர் வருதுங்கண்ணா.

4. அடக்குமுறை ஊழலை பொருத்தவரை நம்ம சனங்களோட சைக்காலஜி வேறே. நம்ம நாடே பல நூற்றாண்டுகளாய் ஆன்மீகத்தில் செழித்த நாடு. ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானமாவே வளர்த்தெடுத்த நாடு.
அந்த விஞ்ஞானத்தின் மேம்போக்கான அம்சங்க்ளை வச்சு ஒரு இனம் தன்னை வளப்படுத்திக்கிட்டது வேறு கதை.

யுக யுகமாக லௌகீகத்துலருந்து ஆன்மீகத்துக்கு திருப்பிவிடப்பட்ட மனங்கள் நிறைந்த நாடு இது. இதனாலேயே நாம லௌகீக விஷயங்கள்ள பின் தங்கியிருக்கோங்கறது வேறு விஷயம். ஆன்மீகத்துக்கும் லௌகீகத்துக்கும் உள்ள வித்யாசம் என்ன/

ஆன்மீகம்னா என்ன?

உலகத்தின் பால் எண்ணங்களை சிதறவிடாம உள் நோக்கி திருப்பறது – ஆமை தன் அவயவங்களை ஓட்டுக்குள்ள இழுத்துக்கறாப்ல பஞ்சேந்திரியங்களை சொந்த கட்டுப்பாட்டுல வச்சிக்கிறது.

இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர்ந்து – இயற்கை தரும் சுகங்களை அனுபவித்து மாளாதுன்னு ரியலைஸ் ஆகி தேவைகளை சுருக்கி, வாழறது.

புனரபி மரணம் புனரபி ஜனனம் – இந்த பிறவியில இல்லாட்டியும் அடுத்த பிறவியலயாச்சும் நல்ல கதி கிடைக்கனும்னு அடக்கி வாசிக்கிறது – முடிஞ்சா வீடு பேற்றுக்கு/முக்திக்கு ட்ரை பண்றது.

லௌகீகம்னா என்ன ? பார்வையை – எண்ணங்களை இந்த உலகம் நோக்கி திருப்பறது. வாலை அவிழ்த்து விடறது. ( இன்னம் என்னென்னத்தையோ அவிழ்த்து விடறாய்ங்க அது வேற விஷயம்) கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழறது. லைஃப் ஈஸ் ஷார்ட். இளமை தீர்ந்து போறதுக்குள்ள தீர்த்துரனும்னு துடிக்கறது. இன்னொரு வாழ்க்கையே இல்லைன்னு டிசைன் பண்ணிக்கிட்டு கிடைச்ச இந்த வாழ்க்கையை சொந்த கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரனும்னு தவிக்கிறது.

ஆன்மீகத்துல வீடு பேறு முக்கியம் – லௌகீகத்துல வீடு முக்கியம். இதுல உள்ள ஒரு முரண்பாடு என்னன்னா வீடு பேறு முக்கியம்னு வாழறானே அவனுக்கு வீடும் கரீட்டா அமைஞ்சுரும். பூர்வ கருமங்கள் காரணமா அப்படி இப்படி இருந்தாலும் செட் ரைட் ஆயிரும். செட் ரைட் ஆகாமயே போயிட்டாலும் இந்த அம்சம் அவனோட சாதனைக்கு உதவுது.

தான்,தன் சுகம் , தன் வீடுதான் முக்கியம்னு அலைபாயறான் பாருங்க அவனுக்கு வீடு பேற்றுக்கான
வாய்ப்பும் ஜீரோ ஆயிருது அவனோட வீடும் காடாயிருது – சுடு காடாயிருது.

ஒரு ஆச்சரியம் என்னன்னா ஆன்மீக வாதி லௌகீக வாதி ரெண்டு பேருமே உலகத்தை நெகட்டிவாவே அப்ரோச் பண்றாய்ங்க. ஆன்மீக வாதி இந்த உலகம் என்னை / என் எண்ணங்களை சிதறடிச்சுரும். முக்திக்கான முயற்சிகளை மூளி ஆக்கிரும்னு நினைச்சு உலகத்தை நெக்லெக்ட் பண்றான்.

லௌகீகவாதி இளமையில – சக்தி ஊற்றெடுக்கிற காலத்துல உலகத்தை வெல்லக்கூடிய எதிரியா நினைக்கிறான். ஆக்கிரமிச்சுரக்கூடிய ஒரு நிலப்பகுதியா பார்க்கிறான்.

உலகமே என்னை திரும்பி பார்க்கனும்.(பார்க்காதுங்கறது அவனுக்கே தெரிஞ்சிருக்கு)
இங்கன என்னோட ஆதிக்கம் தொடரனும். (தொடராதுன்னும் தெரிஞ்சிருக்கு)

ஒரு கட்டத்துல மேற்படி உண்மைகள் ஆக்செப்ட் பண்ணிக்கிறான். அதனாலதேன் கண்ணாலம், பொஞ்சாதி.புள்ளைக்குட்டின்னு யு டர்ன் எடுக்கிறான்.

உலகத்தை செயிக்க முடியாதுங்கற சப்கான்ஷியஸ் ரியலைசேஷன் காரணமா லௌகீகவாதி தன் வீட்டையே உலகம்னு நினைச்சுக்கறான். ( நான் இங்கே வெறுமனே தாத்தாவை மட்டும் மென்ஷன் பண்றேன்னு நினைச்சுராதிங்க – எல்லா லௌகீக வாதிக்குள்ளயும் ஒரு தாத்தா இருக்காரு)

ஆன்மீக வாதி உலகத்தை அவாய்ட் பண்றதுக்காக வீட்டுக்குள்ள பதுங்க வேண்டி வந்துருது. ஆக ஆன்மீக வாதி -லௌகீகவாதி ரெண்டு பேருக்குமே வீடு ரெம்ப முக்கியமானதா இருக்கு. வீடுன்னா சொம்மா கடியாது. அது மனித உடலின் நீட்சி .எக்ஸ்டென்ஷன் மாதிரி.

வீட்டை மன்சன் ஒரு பங்கர் மாதிரி நினைக்கிறான். தன்னை பாதுகாக்கும்னு நம்பறான். உலகம் எக்கேடோ கெட்டுப்போகட்டும்னு வீட்டுக்குள்ளாற வந்து பதுங்கிக்கறான். இது ஒரு எஸ்கேப்பிசம் தான். ஹிப்பாக்ரசிதான்.ஆனால் 90 சதம் பிரஜைகளை இதுதான் உயிரோட வச்சிருக்கு.

லஞ்சம் – ஊழல் – முறைகேடு -வன்முறை -கொலை -கொள்ளை -அரசியல் தலையீடு – அதிகார துஷ்பிரயோகம் இத்யாதியெல்லாம் சிக்ஸ் ட்ராக் ரோட்ல போனாலும் -நேஷ்னல் ஹைவேல போனாலும் – மன்சனுக்குள்ள பெருசா பதற்றம் வர்ரதில்லை.

இவிக காலனி பக்கமோ – கிராமப்பக்கமோ தலைகாட்டினா பதறிப்போயிர்ரான். தெருப்பக்கம் வந்துட்டா சிதறிப்போயிர்ரான். தாளி இவன் வீட்டு கதைவையே தட்டினா ?

திமுக ஆட்சியில லஞ்சம் – ஊழல் – முறைகேடு -வன்முறை -கொலை -கொள்ளை -அரசியல் தலையீடு – அதிகார துஷ்பிரயோகம் இத்யாதியெல்லாம் கதவை தட்டிருச்சு. தாளி ஆன்மீகவாதி -லௌகீகவாதியெல்லாம் பேதியாயிட்டான். ஊதித்தள்ளீட்டான்..

Advertisements

27 thoughts on “திமுக தோல்விக்கு மனவியல் காரணங்கள்

  covaisiva said:
  May 22, 2011 at 7:56 am

  ஏண்ணே
  இனி பதினாறு வருடத்திற்கு ஜெயலலிதா ஆட்சிதானமே அவங்க ஜாதகம் சொல்லுதமே. நெசமா?

   S Murugesan said:
   May 22, 2011 at 8:00 am

   covaisiva அவர்களே,
   ஜோதிடப்படி ரெண்டரை வருடம், ஒன்னரை வருடம்,ஒரு வருடம்,ஒன்னரை மாதம் ,ஒரு மாதம்,ஏன் ரெண்டே கால் நாள், இன்னம் சொல்லப்போனா 6 மணி நேரம்,ரெண்டு மணி நேரத்துல கூட அதிரடி மாற்றம் ஏற்பட்டுரலாம்.

   இதெல்லாம் டுபுக்கு. நம்பாதிங்க

  Ismail said:
  May 22, 2011 at 8:27 am

  அய்யா
  மற்ற ஜோதிடர்களெல்லாம் கடைசி நேரத்தில் நடக்க போவதை சொல்லும்போது(அதிலும் பலருடயது தவறாக போகிறது) நீங்க தான் எல்லாமே முன்கூட்டியே உறுதியாக சொல்றீங்க. இப்ப சொல்லுங்க அடுத்த ஆட்சி தமிழ் நாட்டில் யாருடையதாக இருக்கலாம். முடிந்தால் ஒரு பதிவே போடுங்களேன்

   Ismail said:
   May 23, 2011 at 10:48 am

   இன்றைய செய்தி.
   தங்கள் ஏற்கனவே கலைஞர் ஜாதகம் பற்றி சொல்லும் போது நண்பன் உடன் இருப்பவனே எதிரி ஆவான் என்று சொன்னதாக ஞாபகம்.
   ஹிந்து நாளிதழில் தயாநிதி மாறனை சம்பந்த படுத்தி ஒரு செய்தி வந்துள்ளது. அனேகமாக இது தி மு க வில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தலாம்.

  ராஜா said:
  May 22, 2011 at 8:59 am

  வணக்கம்,
  தாங்கள் மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள், நீங்க குதிரமாதிரின்னு தெரியும் தலைவா எங்களுக்கு, சட்டுன்னு எந்திருசுட்டிங்க பாருங்க
  தங்கள் ராஜபாட்டை தொடரட்டும்
  ராஜா

  viji said:
  May 22, 2011 at 9:30 am

  sayththu pona pamba innum yaththana vithama sava attippinga. innum adangalana ice water kudinga thala….c….o…o….l.

  முல்லை மைந்தன் said:
  May 22, 2011 at 11:54 am

  தமிழக அரசியல் குறித்து உங்களது முன்னறிவிப்பு அருமை..
  இலங்கை அரசு எதிர்கொள்ளும் போர்க்குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக ஏற்படக் கூடிய ஈழத்தமிழ் அரசியல் எதிர்காலம் பற்றியும் ஒரு ஜோதிட ஆய்வை இடலாமே..

  கேள்விப்பட்டது said:
  May 22, 2011 at 6:10 pm

  கீழ்கண்ட பதிவில் உங்களைப் பற்றி கமெண்டில் குறிப்பிட்டளார்கள். இதற்கு உங்கள் விளக்கம் என்ன. முடிந்தால் பதிவு போடுங்களேன்.

  http://timeforsomelove.blogspot.com/2011/05/blog-post_19.html

  பாபு said…

  சதீஷ்குமார் டுபாக்கூர்னு இப்போதான் தெரியுமா உங்களுக்கு? அவர் எழுதும் பல சோதிடக் குறிப்புகள் “சுராவின் சோதிட உண்மைகள்” என்ற புத்தகத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை. அப்பட்டமான வரிக்கு வரியிலான காப்பிகள். பல புத்தகங்களிலிருந்து திருடி, ஏதோ தன் சொந்த சரக்கு மாதிரி அவிழ்த்து விடுவார். பதிவுத் திருட்டுகள் ஏதாவது நடந்தால் மட்டும் பொங்கி எழுந்து விடுவார், பொங்கல் வைத்து விடுவார்.

  சோதிடம் பற்றி:
  இது மாதிரிதான் சித்தூர் முருகேசன் என்பவரும் அவரது பிளாகில் எழுதுபவர்களும். பத்திரிகைகளில் ஏதாவது புதிய செய்திகள் வந்தால் போதும், உடனேயே சோதிட ரீதியில் ஆய்வு என்று கும்மி அடித்து அவர்களுக்குள்ளாகவே பாராட்டிக் கொள்வார்கள். முருகேசனாவது பரவாயில்லை, கொஞ்சம் சொந்த சரக்கு உண்டு. ஆனால் இவருக்கு நவாம்சம் கூட பாக்க தெரியாது, கேட்டால் என் வழி தனி வழி என்பார். யாராவது ஏதாவது வில்லங்க்மா கேட்டா நோஸ்கட் பண்ணி ஏதாவது எழுதி எரிச்சலூட்டுவார். இவர் பிளாக்ல எழுதுற கத்துக்குட்டிங்க்க் எல்லாம் அரைவேக்காடுகள். செய்திகளை ஜோசியத்துடன் தொடர்பு படுத்தி ஜோசியம் சொல்பவர்கள்.
  21 May 2011 10:49 AM

   S Murugesan said:
   May 23, 2011 at 7:31 am

   கேள்விப்பட்டது அவர்களே,
   என் பங்குக்கு என் மறுமொழியை மேற்படி ப்ளாக்ல போட்டாச்சு. நம்மாளுங்களை கத்துக்குட்டிங்கறாரு. “வ்ருத்த வைத்ய ..பால ஜோதிஷ”ங்கற மேட்டர் அவருக்கு தெரியாது போல. அரை வேக்காடு இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு வெந்துரும். ஏற்கெனவே வெந்தது? ஒன்னு காந்தனும் அ ஊசிப்போகனும்.

   அட வலையுலகத்துல இதெல்லாம் சகஜமப்பா…

  Thirumalaisamy said:
  May 23, 2011 at 5:00 am

  தெளிவான விளக்கங்கள் …அனைவருக்கும் தேர்தல் மாற்றங்கள் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது . இந்த பதிவு அதற்க்கான பதில் . அண்ணே மறக்காம ஈகோ பத்தின பதிவு !!!

  veera said:
  May 23, 2011 at 6:14 am

  அரசியல உடுங்க. ஆன்மீகத்துக்கும் லௌகீகத்துக்கும் சூப்பர் விளக்கம் குடுத்ருகீங்க. நல்லா தெளிவா யோசிச்சுதான் எழுதுறீங்க அப்பறம் என்ன பொலம்பல் போன பதிவுல 🙂

   S Murugesan said:
   May 23, 2011 at 7:37 am

   வீரா !
   நீங்க வெறும் அவுட் புட்டை மட்டும் பார்க்கறிங்க. உ.ம் சீலிங் ஃபேன்ல வர்ர காத்து. ஆனால் ப்ராசஸ்ல எக்கச்சக்க சிக்கல். வைரஸ் புகுந்த கணிணி மாதிரி திக்கல். இது ஆண்டி வைரஸோட கூப்பாடு வேற.

   ஒரு நோய் வந்ததும் பாடி அதுக்கு இம்யூன் ஆயிர்ராப்ல. இந்த மாதிரி டிஸ்டர்பன்ஸ் ஒரு தரம் வந்தா மனசு அதுக்கு இம்யூன் ஆயிருது.

   அடுத்த தரம் இதை விட பவர்ஃபுல்லா எதுனா அட்டாக் பண்ணாதான் பிரச்சினை. வீரா ! சாவு நிச்சயம். அதை எதிர்க்கற அளவுக்கு நான் முட்டாள் இல்லே.

   ஆனால் அந்த சாவு நமக்கு ஒரு சவால். அது வந்து கிளம்பு கிளம்புனு டென்ஷன் பண்ணக் கூடாது. அது அங்கன ப்ளைட் ஏறுவதற்கு முந்தியே நாம இங்கே பெட்டி படுக்கயோட வெய்ட் பண்ணனும்.

   என் வேலை ஜஸ்ட் ஒரு மேசேஜ் தான்.அதை இன்னம் கொஞ்சம் எஃபெக்டிவா -வைடா -பவர்ஃபுல்லா கொடுத்து தொலைச்சுட்டா போதும்.சனம் எடுத்தா எடுக்கட்டும் விட்டா விடட்டும்.

   நம்ம ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணிரனும். பண்ணுவம்

    veera said:
    May 23, 2011 at 9:09 am

    புரியுது முருகேசன். நான் சும்மா தமாஷ் பண்ணேன் புலம்பல்னு.

  //இவர் பிளாக்ல எழுதுற கத்துக்குட்டிங்க்க் எல்லாம் அரைவேக்காடுகள். //

  🙂 🙂

   Mani said:
   May 23, 2011 at 4:28 pm

   ஏம்ப்பா த.கா.ராசா உன்னால எங்க எல்லாருக்குமே கெட்ட பெயர வாங்கி குடுத்திட்டியே இப்ப சந்தோஷமா. அரைவேக்காடுன்னு பேரை வைக்காதே மாத்திபுடுன்னு எத்தன வாட்டி சொன்னேன் கேக்க மாடிங்கிறியேப்பா.

    //ஏம்ப்பா த.கா.ராசா உன்னால எங்க எல்லாருக்குமே கெட்ட பெயர வாங்கி குடுத்திட்டியே இப்ப சந்தோஷமா. அரைவேக்காடுன்னு பேரை வைக்காதே மாத்திபுடுன்னு எத்தன வாட்டி சொன்னேன் கேக்க மாடிங்கிறியேப்பா//

    அண்ணே …இதெல்லாம் ஒரு சைக்காலாஜி 🙂

    நம்ம நாமளே அரை வேக்காடு நு சொல்லுரபோது நம்மோட ஈகோ அடிபடுது…எதிராளியோட ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகுது

    இதன் மூலம் நம்மோட அகங்காரம் அடி படுவதால் சிந்தனை கொஞ்சம் தெளிவாக இருக்கும்….கோவம் மட்டுப்படும்…

    நாம் ஜோதிட ஆராய்ச்சி செய்வது பிடிக்காத சில பிரகிருதிகள் நம்மை இகழும் போது ஒரு புன்னகையோடு நம்மால் கடந்து செல்ல முடியும்….மனம் பக்குவ படும்…

    இந்த மாதிரி ஆட்களை நாம் எதிர் கொள்ளும் போது உணர்ச்சிவசப் படாமல் நம்மால் பதில் கொடுக்க முடியும்..
    நம் சமுதாயத்தில் போலியான முக மூடி போட்ட மனிதர்கள் அதிகம்….இவர்களை சாமாளிக்க அரைவேக்காடு என்ற கவசம் நமக்கு முக்கியம் 🙂

    அண்ணே …அது மட்டும் அல்லாமல் …இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு ….. கற்றது கை அளவு …கல்லாதது உலக அளவு ….அதை வைத்து பார்த்தாலும் நாம அரை வேக்காடு தான் அண்ணே 🙂

    Mani said:
    May 24, 2011 at 2:11 pm

    என்னமோ போங்கப்பா! பெரிய தாத்தாவாட்டம் சைக்காலஜி, தத்துவமெல்லாம் எடுத்து உடறீங்கோ (ஆனாலும் லேசுல விட்டு கொடுக்கமாட்டீங்களே) நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.

    நான் என்ன நினைக்கறேன்னா, இந்த தன்னடக்கமெல்லாம் நல்லது தான் ஆனா அதுக்காக நம்மை ரொம்ப தாழ்த்திக்க வேண்டியதில்லை. ரொம்பவும் பீத்திக்கவும் வேண்டியதில்லை. நாம் நாமாக இருப்போமே என்ன நான் சொல்றது சரிதானே.

    நீங்க சொல்லுறது சரி தாங்க மணி அண்ணா….
    ஆனா என்னோட mind நெறைய அடவாதம் பிடித்தது …..நான் எவ்வளவு சொன்னாலும் என் mind கேக்க மாட்டேங்ககுது…

    “ஒம் நமசிவாய நமக ” அப்படின்னு நாலு தடவை சொன்னா…அதுக்குள்ள mind ஏழு தடவை “நமிதா நமக” அப்படின்னு சைடு வாங்குது ..
    அதனால் என் mind ய தட்டி வைக்க நானே அரை வேக்காடு நு சொல்லுறேன்…….அப்படி நான் என் mind தட்டி வைக்கலனா ….சமுதாயம் தட்டி வைக்க பார்க்கும் …ஹி..ஹி 🙂

    பின் குறிப்பு :அண்ணே இது நீங்க சொன்ன என் ஜாதக பலன் ..

    ” நான் அறிந்த வரையில் மேஷ லக்னத்தார் யாரையும் பெரிய மனிதராக, தங்களை விட
    பிறரை அதிக விஷயம் தெரிந்தவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம்
    யாரையும் சற்று உதாசீனப் படுத்தும் குணம் இருக்கும். அதாவது சற்றே கர்வம்
    உடையவர்கள் என்று கூறலாம்.”

    என் mind டோட கர்வத்த நானே அடக்க பார்க்கிறேன்……..[உஷ் …சப்பா….. இப்பவே கண்ண கட்டுதே ..அப்படின்னு உங்க mind voice சொல்லணுமே … 🙂 ]

  டவுசர் பாண்டி said:
  May 23, 2011 at 1:07 pm

  ஆருப்பா அது நம்ம பேட்டைல உள்ள சிங்கக்குட்டிகள கத்துக்குட்டின்னு சொன்ன மவராசன். அவரு நம்மக்கிட்டருந்து நாலு மேட்டர கத்துக்கிட்டு போறதால நம்மள கத்துக்குட்டின்னு சொல்றாரா.

  நாங்களும் கமென்ட் போடுவோம்லா.

   வினோத் said:
   May 23, 2011 at 1:56 pm

   டவுசரு.. உங்களை தான் எதிர்பார்த்தேன்…ரஜினியின் ஆயுள் பாவம் பார்த்து சொல்லுங்கப்பூ

    டவுசர் பாண்டி said:
    May 23, 2011 at 3:56 pm

    விநோத்தன்னே, ரொம்ப நன்றினே ஒங்க ஆர்வத்துக்கு. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஆயுளை கணிக்க உத்தேசிக்கிறேன். மத்தபடி நடிகர் ரஜினி காந்த் அவர்களின் மீது எனக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தவித காழ்ப்புனர்ச்சியுமோ கிடையாது என்பதை உறுதியாக ஒரு மொழியாக கூறுகிறேன். ரசிகர்களை பீதியடைய செய்வது என்னுடைய நோக்கமல்ல என்பதனையும் முன்கூட்டியே தெரிவித்துக்கொண்டு உங்களிடமிருந்து 249க்குள் ஒரு நம்பரை கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றாக தீர்க்கமாக மறுப்புக்கு இடமின்றி ஒரு நம்பரை சொல்லுங்கள். காளிதேவி அம்மாவுக்கு இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டவுசர் பாண்டி said:
    May 23, 2011 at 4:01 pm

    மின்னஞ்சல் மூலமும் (நான் தப்பிக்க) தெரிந்து கொள்ளலாம். இவர் ஒரு பிரபலமானவர் என்பதால் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அதனால் என்னோட பிரசன்னத்தை மெயில் மூலம் தாங்களும் மற்றும் உணர்ச்சி வசப்படாத ஆட்களுக்கும் அனுப்பலாம்.

    வினோத் said:
    May 24, 2011 at 9:19 am

    147 .. en emali glomoinc@gmail.com, tavusar sir, rajini ayur paavam parthu sollunga..

    Ismail said:
    May 24, 2011 at 10:15 am

    எங்க நாகளும் தெருஞ்சிக்கிறோம்
    எங்களுக்கு அனுப்புங்க
    ismaa@sify.com

    212……………………………
    அப்படியே விவரத்தை gopalakrishnan.ep@gmail.com அனுப்புங்க டவுசர்

    Mani said:
    May 24, 2011 at 2:29 pm

    அப்பாடா இப்பவாச்சும் டவுசருக்கு கொஞ்சம் விஷயத்தை எழுதனும்னு மூடு வந்துருச்சுப்பா. ரொம்ச சந்தோஷம். ஆமா சாமியார்? (எ) டவுசர் பாண்டி ஏன்யா இப்படி பயந்து சாவுற? வீரன் ஒருமுறைதான சாவான். தைரியமா நம்ம தலை வெப்சைட்லேயே எழுதுப்பா. அவரு பார்த்துப்பாரு. அவரு சீண்டாத ஆளுங்களா.

    உன்னோட இமெயில் ஐ.டி யை எழுதறதுக்கு கூட பயந்து சாவுற. சரியோ தப்போ தைரியமா எழுதுப்பா. நானும் நீங்க சாயிபாபா கதையை சொன்னதிலிருந்து எதாச்சும் விபரமா எழுதுவீங்களான்னு உசுப்பி விட்டு பார்க்கிறேன் ஒன்னும் நடக்கல. சில youtube லிங்க் கிடைச்சது தான் மிச்சம். கழுவுற மீனுல நழுவுற மீனாவே இருக்கிறீங்களே. உங்க ஜாதகத்தில் செவ்வாய் ரொம்ப வீக்கோ.

  டவுசர் பாண்டி said:
  May 23, 2011 at 4:04 pm

  ……..//……” நம்மில் ரெண்டு பேர் எதை நினைச்சாலும் ஆத்தா உடனே நிறைவேற்றி வச்சுருவா.” …….//

  நானும் நைனாவும் டீலிங் வெச்சிக்கினுருந்தா நிச்சயம் ஒரு ரவுண்டு வெய்ட்டிங்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s