போதிய எழுச்சி இல்லையா?

Posted on

ஆன்மீகர்கள் & தாய்குலம் ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா என்று நொந்துவிடாதீர்கள். நான் சொல்ல வந்தது ஆன்மீக முன்னேற்றத்தை காட்டும் கிராஃபிலான எழுச்சியை தான்.

ரஜினி கூட நான் குதிரை மாதிரி விழுந்தாலும் உடனே எந்திரிச்சிருவன்னு வசனம் விட்ட பார்ட்டிதான். ஆனால் ஏறக்குறைய புட்டபர்த்தி சாயிபாபா மேட்டர் போலவே இவர் மேட்டர்லயும் ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்காய்ங்க அது வேற விசயம்.

ஆன்மீக கிராஃபில் வீழ்ச்சி வந்தா உடனே எழுச்சி வந்துரும்னு சொல்லமுடியாது.மொதல்ல எழுச்சிங்கறதே ஒரு ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் இன்சிடென்ட்.

இதுல ப்ரிலிமினரி ஸ்டேஜை தாண்டறதே கஷ்டம். கடவுள் ஒரு ப்ளாக் ஹோல் மாதிரி அதுக்குள்ளாற போயிட்டா உங்க சர்வமும் உறிஞ்சப்பட்டுரும். சக்கை தேன் மிஞ்சும்.

நான் அந்த கோயிலுக்கு போனேன் ப்ரமோஷன் வந்துருச்சு. இந்த சாமியை கும்பிட்டேன் என் பொஞ்சாதி வயசுக்கு வந்துட்டாங்கற கேஸெல்லாம் ஜஸ்ட் ரெம்ப ரெம்ப தொலைவுல ஒரு வெளிவட்டத்துல நின்னு -சொம்மா பார்த்து -ரிட்டர்ன் ஆயிட்டதாத்தான் இருக்கும்.

இதெல்லாம் பேரிகேட்ல கும்பலா நின்னு பி.எம்முக்கு கையசைக்கறதை போன்ற மேட்டர். பி.எம் குஜிலியான மூட்ல இருந்தா படக்குனு வந்து நாலு பேருக்கிட்ட மனு வாங்கறதில்லையா அப்படி வேணம்னா வச்சுக்கலாம்.

விவேகானந்தர் சொல்றாரு ” உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது எங்கன இருந்தோ வரலை . உனக்குள்ளருந்தே கிடைச்சது” சைக்காலஜிப்படி சொன்னா ஆட்டோ சஜஷன் தனக்கு தானே சொல்லிக்கிறது ” நீ நேர்ந்துக்கிட்டது வீணா போகுமா? நிச்சயமா ஒர்க் அவுட் ஆயிரும்” மாதிரி

அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் எப்போ சொரியும்னா ..கடவுள் உங்களுக்கு கடன் பட்டுரனும். அப்ப கூட அந்தாளு கடனை எகிறடிக்கத்தான் பார்ப்பாரு.

ஏம்பா கிராமத்துல ரெண்டு ஏக்கர் நஞ்சை இருக்கு அதை வேணா வர்ர தை மாசம் ரிஜிஸ்டர் பண்ணித்தரட்டானு கடன் காரன் கேட்பானே அது மாதிரி.( உங்களுக்கா கேஷா வேணும் அதுவும் ஒடனே வேணம். பாட்டிக்கோ ,தாத்தாவுக்கோ கண்ணாலம் வச்சிருப்பிங்க)

இந்த கொடுக்கல் வாங்கல் ஒருபக்கம்னா கடவுளை நெருங்கவே ஒரு “இது”வேணம். ஐ மீன் அவரோட வில்லிங்னெஸ் இருக்கனும்.அது ஒன்னும் அசால்ட்டா கிடைச்சுராது. நெருக்கம் மீன்ஸ் மனரீதியான நெருக்கத்தை சொன்னேன்.

எண்ணம் தொடர்ரது கஷ்டம். அப்படியே தொடர்ந்தாலும் செயலாறது அதைவிட கஷ்டம்.தப்பித்தவறி செயல்ல இறங்கிட்டா தாளி ஒன்பது கிரகமும் ஒரே நாள்ள பந்தாட ஆரம்பிச்சுரும். துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி வந்துருவிங்க.

யத்பாவம் தத்பவதின்னா தெரியும்ல. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். கடவுளை நினைச்சா கடவுளா மாறனும். இதானே விதி.

கடவுளுக்கு பேர் இல்லை. உங்க பேரும் காலி. கடவுளுக்கு மம்மி டாடி கிடையாது. உங்க அப்பா அம்மா இவன் எதுக்கு புள்ளைனு பிறந்து இருக்கானோ தெரியலை. இவன் செத்தா சத்தியமா நான் வருத்தமே படமாட்டேங்கனும். இதெல்லாம் நீங்க உண்மையா கடவுளை நெருங்க ஆரம்பிச்சிருக்கிங்கங்கறதுக்கு சிம்ப்டம்ஸ்.

மேற்சொன்ன ரூட்ல நீங்க ஏறக்குறைய கடவுளா மாறிர்ரதுக்கும் – சனம் உங்களை மன்சனாவே மதிக்காம போயிர்ரதுக்கும் உங்க ஆன்மீக முன்னேற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.

சனம் விரட்ட விரட்ட சனார்தனனை நோக்கி மனசு பி.டி.உஷா கணக்கா ஓடும். ஓடனும். உலகமே தினசரி ஆன்லைன்ல க்ரூப் சாட் பண்ணி ஸ்கெட்ச் போட்டு உங்களை நோகடிக்கனும். இதெல்லாம் ஆன்மீக கிராஃபில் ஏற்படும் எழுச்சிக்கு அடையாளம்.

படை கடந்ததும் கடந்து வந்த பாலத்தை எரிச்ச தளபதி கணக்கா திரும்பிப்போகவே வாய்ப்பில்லாத நிலைக்கு வந்துரனும். கப்பல் காகம் மாதிரி ஆயிரனும்.

கடவுளை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா பக்த சன கோடிகள் கணக்கா கோரிக்கை பட்டியலை நீட்ட உங்களுக்கே மனசு வராது. அவரோட பரிதாப நிலைய பார்த்து உச்சு கொட்டுவிங்க. “மே ஐ ஹெல்ப் யூ”ன்னு கேப்பிக.

இந்த ஸ்டேஜுக்கு போறதுக்குள்ள ஆன்மீக கிராஃப் பல நூறு தடவை ஜீரோ லெவலுக்கு வந்துரும். நான் வந்திருக்கேன். நாத்திக வாதியா மாறலியே தவிர அந்த நிலைக்கும் வந்திருக்கேன்.

ஒவ்வொரு மாதவிலக்குக்கு பிறகும் ஒரு இளம்பெண்ணின் உடல் எப்படி ரெஃப்ரெஷ் ஆகுதோ அப்படி இது மாதிரியான வீழ்ச்சிகள் இடைவெளிகளுக்கு பிறகு கிராஃப் எக்கச்சக்கத்துக்கு எகிறும்.

இந்த நிலையை பலமுறை நான் அனுபவிச்சிருக்கேன். இந்த பதிவை இன்னைக்கு போட காரணம்? அது மாதிரி ஒரு இடைவெளி இப்ப ஏற்பட்டிருக்கு.

Advertisements

11 thoughts on “போதிய எழுச்சி இல்லையா?

  //இந்த சாமியை கும்பிட்டேன் என் பொஞ்சாதி வயசுக்கு வந்துட்டாங்கற //

  🙂 🙂

  //இந்த ஸ்டேஜுக்கு போறதுக்குள்ள ஆன்மீக கிராஃப் பல நூறு தடவை ஜீரோ லெவலுக்கு வந்துரும். நான் வந்திருக்கேன். நாத்திக வாதியா மாறலியே தவிர அந்த நிலைக்கும் வந்திருக்கேன்.//

  நானும் தேன்…

  இந்த கடவுள் பிக்காளி மொள்ளமாரி பயல கண்டபடி திட்டியும் இருக்கேன்….இந்த பிரபஞ்சத்த இதுக்கு மேல அழகா படைக்க முடியாதுன்னு எண்ணி வியந்தும் இருக்கேன்..It’s all in the Game 🙂

  வினோத் said:
  May 20, 2011 at 8:09 am

  இன்டிரஸ்டிங்க்…

  Thirumalaisamy said:
  May 20, 2011 at 9:31 am

  அப்படி போடு ….
  அண்ணே 500 பக்கங்கள் கொண்ட நாவல் புத்தகத்த ஒரு மாசமா படுச்சு 475 பக்கம் முடுஞ்ச அப்புறம் புக் காணாம போன மாதிரி ஒரு பீல் ….நாவல்னா தொலையட்டும் நு உட்ட்றலாம் !!!!
  கொஞ்சம் மறக்காம சொல்லுங்க நே ..ஆத்தா என்ன பண்ணுச்சு ???

  Thirumalaisamy said:
  May 20, 2011 at 9:34 am

  அதே கையோட மறக்காம —– பத்து உதாரனகளும் விளக்கமும் நு ஒரு பதிவ போடுங்க !!!!—–அதான் நே அந்த பாலாபோன EGO கு ……

  viji said:
  May 20, 2011 at 10:23 am

  ///இடைவெளி இப்ப ஏற்பட்டிருக்கு.///summa vaanatha pathukittu okkarathinga thalla.yangallukaka extra yalluthunga

  PERUMALSIVAN.s said:
  May 20, 2011 at 12:26 pm

  “சனம் விரட்ட விரட்ட சனார்தனனை நோக்கி மனசு பி.டி.உஷா கணக்கா ஓடும்
  எண்ணம் தொடர்ரது கஷ்டம். அப்படியே தொடர்ந்தாலும் செயலாறது அதைவிட கஷ்டம்.தப்பித்தவறி செயல்ல இறங்கிட்டா தாளி ஒன்பது கிரகமும் ஒரே நாள்ள பந்தாட ஆரம்பிச்சுரும். துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி வந்துருவிங்க.”
  antha portion-i naan kooda thoora erunthu lighta eatti paarthirukken .anga erunthu keezhe vizhunthu eppa naarikkidakkiran. naan paarthen endra keeral mattum en manathil eappothum undu .

  “இந்த நிலையை பலமுறை நான் அனுபவிச்சிருக்கேன். இந்த பதிவை இன்னைக்கு போட காரணம்? அது மாதிரி ஒரு இடைவெளி இப்ப ஏற்பட்டிருக்கு.” VAAZHTHTHUKKAL ANNE !

  P.A.Kumar said:
  May 20, 2011 at 2:33 pm

  தல, நான் சும்மாதானே இருக்கேன். ஏன் என்ன எல்லாரும் வெறிக்கிறாங்கன்னு பாத்தா இப்படியும் ஒரு காரணம் இருக்கோ. திமிர்தான் போங்க.

  Mani said:
  May 20, 2011 at 2:33 pm

  என்ன அண்ணே தலைப்பை இப்படி வச்சிபுட்டிங்க. நானே கொஞ்சம் பயந்துட்டேன் நாம வந்தது அனுபவஜோதிடம் வெப்சைட்டா இல்லாட்டி எதாவது சித்த வைத்திய சாலை விளம்பரமான்னு. நானும் கொஞ்ச நாளா படிச்சிக்கிட்டு தான் வரேன் உங்க தலைப்புலையும், மேட்டர்லயும் எங்கோயோ எதோ கொஞ்சம் தினுசா தெரியிற மாதிரி இருக்கே. எங்கேயோ டச் ஆகிற மாதிரி இருக்குதே. அண்ணே! வேணாம்ணே! உட்ருங்கண்ணே!

  Mani said:
  May 20, 2011 at 2:38 pm

  //////இந்த சாமியை கும்பிட்டேன் என் பொஞ்சாதி வயசுக்கு வந்துட்டாங்கற கேஸெல்லாம் ///////////

  இன்னாது இனிமே தான் பொஞ்சாதி வயசுக்கு வர்றதா. அப்ப இம்மா நாளா இருந்ததெல்லாம் சும்மாவா! அய்யோ! அய்யோ! கவுத்திட்டிங்களே அண்ணாச்சி

  Mani said:
  May 20, 2011 at 2:48 pm

  //////////இந்த பதிவை இன்னைக்கு போட காரணம்? அது மாதிரி ஒரு இடைவெளி இப்ப ஏற்பட்டிருக்கு.///////////

  ஓகோ அப்படியா சங்கதி!. அப்படி போடுங்க அருவாளை, அதான் கொஞ்ச நாளா தலைப்பு மேட்டர்லாம் கொஞ்சம் விவரமாகீதா. இப்ப கிராஃப் ஜீரோ லெவல்ல இருக்கீதா. அதான் சரி உடுங்கண்ணே! கொஞ்சம் முக்கினா (அ) ஏத்தினா மறுபடியும் மேல வந்துர போவுது. இதுக்கு போயி பீல் பன்றீங்களேன்ணே! விடுங்கண்ணே!

  P.A.Kumar said:
  May 21, 2011 at 11:53 pm

  தல, எல்லாம் கடந்து போகும்னு உங்களுக்குத் தெரியும், இருந்தாலும் என்ககிட்டையும் பகிர்ந்திருக்கிருகிங்க. எங்களுடைய பிரார்த்தனைகள் என்றும் உங்கள் விழிப்பு நிலைக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s