ரஜினி யானையா குதிரையா? :தனி காட்டு ராஜா

Posted on

பதிவர் :தனி காட்டு ராஜா

தனிகாட்டு ராஜாவின் அரைவேக்காடு மெதேட்-டின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜாதகத்தை ஆராய்ந்து பார்போம். சூப்பர் ஸ்டார் குதிரையா இல்லை யானையா என்று!!

அரை வேக்காட்டு முறையில் 30 வயது வரை ராசி சக்கரத்துக்கு முக்கியதுவம்,அம்சத்துக்கு முக்காத துவம் கொடுக்கப்படும்.30 வயதுக்கு மேல் அம்சத்துக்கு முக்கியதுவம்,ராசி சக்கரத்துக்கு முக்காத துவம் கொடுக்கப்படும்.

ராசிப்படி படி பார்க்கும் போது 5-ம் இடத்தில புதன் சுக்கிரன்.சுக்கிரன் கேது சாரம்.
சுக்கிரன் கேது சாரம் பெற்றவர்கள் பொதுவாக ஆரம்ப காலத்தில் காம(மது ,மாது) இன்பத்தில் அதிக நாட்டம் உள்ளவராகவும் ,பின்னாளில் நாட்டம் குறைந்து மனம் ஆன்மிகத்தின் பால் திரும்பும் . அப்படியே அம்ச கட்டத்த பாருங்க .5 -லு கேது.

இவரோட ராசி கட்டத பாருங்க …டம்மி பீசு மாதிரி இருக்கும்.
ஆனா அம்ச கட்டத்த பாருங்க..

தலைவரு ராஜாதி ராஜா தான் 🙂

ல்கனாதிபதி புதன் உச்சம்.
இதன் பலன் -தான் இருக்கும் துறையில் உச்சம்.

குரு(4,7) ஆட்சி
இதன் பலன் -பிராமண மனைவி,வீடு வாகன வசதி.

சுக்கிரன்(2,9) ஆட்சி
சந்திரன்(11) உச்சம்
சுக்கிரன்,சந்திரன்-பாக்கியத்தில் -இதன் பலன் கலைத் துறையில் சூப்பர் ஸ்டார்.

பெரும்பாலும் சுக்கிரன்,சந்திரன் நல்லா இருந்தா ராகு நல்லா இருப்பாரு..ராகு 11 -ல்

5-ல் கேது..புத்தியில் ஆன்மிக சிந்தனை

3,8 குரியவன் 6 -இல் மறைவு .இதுவும் யோகமே… 6-ல் செவ்வாய்..இவர் படத்துக்கு வில்லனா நடிக்க கூட நெறைய ஆளுக பயப்படுவாங்க.

பாதகமான அம்சமுனு பார்த்தா

சூரியன் 12 அதிபதி 7-ல்
5 ,6 ன் அதிபதி 7-இல்
5 ,6,12 அதிபதிகள் 7-ல்
கொஞ்சம் முரண் பாடான பலனை இவருக்கு வழங்க கூடியது 7 ம் இடம் மட்டுமே..மற்றும் 8 ம் அதிபதி 6 ல் மறைந்தது.ஆனாலும் 8 ம் இடத்தை குரு பார்ப்பது சிறப்பு.

அதனால் தான் தலைவர் 7,8 க்கு காரத்துவம் வைக்கும் நுரையிரல்,வயிறு,கிட்னி போன்ற பிரச்சினை களால் படுக்கைக்கு (12ம் அதிபதி 7ல்)தள்ள பட்டார்.

ராசி படி பார்த்தால் தற்போது நடக்கும் சனிதிசை யோக பலனை தரக்கூடாது.
அம்ச படி பாருங்கள் ..சனி 5 ன் அதிபதியாக வந்து யோகத்தையும் தந்தார் …6 ன் அதிபதியாக வந்து 7 -ல் நின்று நோயையும் தந்தார்.

தற்சமயம் சனிதிசை -சந்திர புத்தி.கடக சிம்ம லக்கனத்துக்கு இந்த திசா புத்தி மரணத்தையோ,மரணத்துக்கு ஒப்பான கண்டத்தையோ தரும்.[இந்த திசா புத்தி-ல தான் நம்ம தல முருகேசன் 12 நாள் உண்ணா விரதம் இருந்தார்.இது மரணத்துக்கு சமம் தானே??]

ஆனால் அம்ச படி பார்த்தால் இது மிக பெரிய பாதிப்பை ஏதும் தராது.புத்தி நாதன் சந்திரன் உச்சம்.
சந்திரன் பாதகாதிபதி என்று எடுத்து கொண்டாலும் உச்சம் பெற்றதாலும்,சுக்கிரனோடு சேர்ந்து 9 ம் வீட்டில் இருப்பதாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
அடுத்து வரும் செவ்வாய் புத்திலும் ,செவ்வாய் 6-ல் சனி வீட்டில் உள்ளதால் நோயின் பாதிப்பு இருக்கலாம்.

நோய் ஏற்பட்டால் அதன் பாதிப்பு சில காலம் இருக்கதான் செய்யும். இது தான் காமென் சென்சும் கூட.
இன்னும் ஒரு வருடத்துக்கு சிறு சிறு பாதிப்புக்கள் இருக்கலாம்.

மற்ற படி,சூப்பர் ஸ்டார் சந்தேகமே இல்லாமல் குதிரை தான்..விரைவில் எழுந்து வருவார் 🙂

Advertisements

15 thoughts on “ரஜினி யானையா குதிரையா? :தனி காட்டு ராஜா

  maduraisaravanan said:
  May 20, 2011 at 2:53 pm

  குதிரை தான் … நிச்சயம் எழுந்து வருவார்…

  Mani said:
  May 20, 2011 at 3:46 pm

  ராசா எது எப்படியோ இருந்துட்டு போவுது. நம்ம தலைவரு மறுபடியும் சும்மா குதிரை மாதிரி திரும்பவும் எழுந்து வருவார்ன்னு சொன்னீங்க பாருங்க அதுதான் சூப்பரோ சூப்பர் . உங்க வாக்கு பலிக்கனும். உங்கள் வாய்க்கு கைநிறைய கற்கண்டு அள்ளி போடவேண்டும் போல இருக்கிறது. ரொம்ப நன்றிப்பா ராசா.

  தலைவர் இந்த ஒருமுறை கண்டம் தப்பிச்சார்ன்னா போதும்ன்னு நினைக்கிறேன் பா. ப்ளீஸ் அந்த ராகவேந்திரர் தான் அவரை காப்பாத்தனும்.

  என்னதான் சுயநலவாதி, சினிமா நடிகர், கன்னடர், அது இதுன்னு மக்களுக்கு அவர்மேல கொஞ்சம் கோபம் இருந்தது என்றாலும் மனசு கேக்க மாட்டேங்குதேப்பா. சின்ன வயசிலேர்ந்து அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை. ஒரு வேளை நானும் சிம்ம லக்னம், சிம்ம ராசி என்பதாலோ என்னவோ.

  R.Puratchimani said:
  May 20, 2011 at 7:33 pm

  //அரை வேக்காட்டு முறையில் 30 வயது வரை ராசி சக்கரத்துக்கு முக்கியதுவம்,அம்சத்துக்கு முக்காத துவம் கொடுக்கப்படும்.30 வயதுக்கு மேல் அம்சத்துக்கு முக்கியதுவம்,ராசி சக்கரத்துக்கு முக்காத துவம் கொடுக்கப்படும்.//

  சூப்பர் அலசல்….
  இதுவரை அம்சத்தை வைத்து மட்டும் யாரும் பலன் சொன்னதாக தெரியவில்லை, இனி அரை வேக்காட்டு முறை வரலாற்றில் நின்றாலும் ஆச்சர்யப்ப்டுவதிர்க்கில்லை. ஆமா இந்த முறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? அதாவது என்ன காரணம் என்ன சிந்தனை அப்படின்னு கேட்கிறேன்.

  arul said:
  May 21, 2011 at 4:05 am

  Murugesh anna,

  amsathai pathi neenga oru pathivu podunga. romba naala (11/2 years) kandama irukku .en mailku reply pannunga(arulmcc@gmail.com) please.punniyama irukkum.

   //இனி அரை வேக்காட்டு முறை வரலாற்றில் நின்றாலும் ஆச்சர்யப்ப்டுவதிர்க்கில்லை. //

   ஹி…ஹி ….கணிப்பு கீது பொய்யா போயி அடிய கிடிய போடமா விட்டாச்ச சரி 🙂
   எனக்கு வரலாறு ,புவியியல் எல்லாம் முக்கியம் இல்லை … பயாலஜி (என் உடம்பு) தான் முக்கியம் 🙂

   //ஆமா இந்த முறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? அதாவது என்ன காரணம் என்ன சிந்தனை அப்படின்னு கேட்கிறேன்.//

   பெரும் பாலும் ஒரு மனிதன் ஒரு சுற்று (கர்ம காரகன் சனி யின் 30 வருடம் ) -த்தில் பெரும் பாலும் முன் பிறவி வினைக்கான பலனை அனுபவித்து விடுவான்..

   பெரும் பாலும் 28-32 இந்த வயது ஒரு மனிதனின் வாழ்வில் கர்மா குறைந்த நிலையில் ஒரு கால கட்டத்தை காட்டும்.
   இந்த வயதில் ஒரு மனிதன் எடுக்கும் முடிவு மீண்டும் ஒரு சுழற்சியை ஏற்படுத்தும்.
   இந்த வயதில் குடும்ப வாழ்கைக்யை தேர்ந்து எடுப்பவன் மீண்டும் ஒரு சுழற்சியை ஏற்படுத்தி கொண்டு சுழலுவான்..
   காமத்தை அனுபவித்தவன் இந்த வயதில் சன்னியாசத்தை தேர்ந்து எடுத்தால் ஞானோதயம் கூட பெறலாம்.புத்தர் இதற்கு சரியான உதாரணம்.

   நம் நாட்டில் பெரும்பாலும் சமுதாயத்தை ஒட்டி சிந்தனை செய்யும் மனிதர்கள் ….முன் வினையே தீராத பச்சத்தில் … கல்யாணம் குடும்பம் என்ற பெயரில் 25 வயதில் மீண்டும் ஒரு முடிச்சை (சுழற்சி ) யை போட்டு கொள்ளுவார்கள்…

   முதல் முடிச்சு ,இரண்டாம் முடிச்சு ஓரளவு கர்மா குறைந்த நிலையில் 58-62 வயது இருக்கும்…இந்த வயதில் உடலும் ,மனமும் தளர்ந்த நிலையில் இருக்கும்…. இந்த வயதிலாவது மனிதன் ஆன்ம வாழ்வு நோக்கி திரும்பலாம்.
   அதையும் செய்யாமல் முட்டாள் தனமாக 60 வயதிலும் ஆசையை விடாமல் அடுத்த பிறவிக்காக கர்மாவை
   சேர்கிரார்கள்…

   அதனால் தான் முதல் சுற்றில் பெரும் துன்பத்தை தரும் ஏழரை சனி …அடுத்த சுற்றில் அவ்வளவாக வேலை செய்வதில்லை…

   இப்போ நம்ம தலைவர் ரஜினி முன்றாம் சுற்றின் ஆரம்பத்தில் உள்ளார் ….என்ன நடக்கிறது என்பதை
   பொறுத்திருந்து பார்ப்போம்

  Thirumalaisamy said:
  May 21, 2011 at 5:07 am

  ராசி சக்கரத்துக்கு சமமா , நவாம்சத்தையும் வெச்சிருக்காங்க . அப்போ இது தான் காரணமா ? சரி எது எப்படியோ , பஞ்சர் ஆனா தான , போட முடியும் ( பஞ்சர தானுங்கோ ).!!!

   //ராசி சக்கரத்துக்கு சமமா , நவாம்சத்தையும் வெச்சிருக்காங்க . அப்போ இது தான் காரணமா ?//

   அரை வேக்காட்டு முறை படி ராசியும் நவாசம்மும் ஒரு திரை படத்தின் இடை வேளைக்கு முன்பு …இடை வேளைக்கு பின்பு மாதிரிங்க அண்ணா 🙂

  டவுசர் பாண்டி said:
  May 23, 2011 at 1:48 pm

  நவாம்சம் ஒரு முக்கியமான அம்சம்னு நெனைக்கிறேன். இத கண்ணாலத்துக்கு கோர்த்து விட்டாலும் கெரகங்க ளோட பாதசாரம், கூட பொறந்தவுக… இப்புடி பல மேட்டர குத்து மதிப்பா சொல்றதுக்கு யூசாகுமுனு நெனைக்கேன். ராசான்னே, அம்சத்த நல்லா அம்சமா ஆராச்சி பண்றீங்க. வாழ்த்துக்கள். கலக்குங்க.

  //இத கண்ணாலத்துக்கு கோர்த்து விட்டாலும் //

  டவுசுரு, கண்ணாலமுனா சும்மாவா என்ன 🙂
  பொண்டாட்டி வந்த வுடனே மனுஷன் குழந்தை குட்டி நு கடைசி காலம் வரை அதை காப்பாத்த தானே பாடு படுகிறான் …அவன் வாழ்க்கையே அதை ஒட்டியே அமைந்து விடுகிறது ….
  நீங்களும் உங்கள் அனுபவத்தில் அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது என்று கூறுங்களேன்…

   Mani said:
   May 24, 2011 at 1:56 pm

   த.கா. ராசா 30 வயசுக்கு மேல் அம்சம் பலன்களை தரும் என்ற கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை. அம்சம் என்பது அதற்காக அமைக்கப்பட்டதாக நான் கருதவில்லை. அம்சம் என்பது ராசியின் சூட்சுமபிரிவு. அதாவது ராசியில் உள்ள 30 பாகைகளை 9 பாகங்களாக பிரித்துள்ளனர். எனவே தான் நவ அம்சம் நவாம்சம் என்றானது.

   ராசியில் 30 பாகைகள் அல்லது ராசியில் உள்ள நட்சத்திர பாதங்கள் 9 உள்ளன. அவற்றுள் எந்த நட்சத்திர பாதத்தின் மீது கிரகங்கள் உள்ளன. அப்படி இருந்தால் அதன் நிலை (அ) வலிமை என்ன போன்ற விஷயங்களை நமக்கு தெரிந்துகொள்ள அம்சம் உதவுகிறது.

   நம்ப தலை சித்தூர் முருகேசன் அவர்களது ஜாதகத்தில் ராசியில் குரு லக்னத்தில் உச்சம் என்று அடிக்கடி கூறுவார். குரு உச்சம் பெற்றதால் அவரிடம் கிலோ கணக்கில் தங்கம் இருக்க வேண்டுமாம் நடைமுறையில் அப்படி இல்லையாம் ஏதோ வருவதும் போவதும் உண்டு என்று கூறுவார் அல்லவா?. உண்மையான காரணம் என்னவென்றால் அவரது ஜாதகத்தில் அம்சத்தில் குரு நீசம் பெற்று விட்டார் என்பதை கவனித்தீர்களா? நம்ம தலை அம்சம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்று அவரே கூறியிருக்கிறார்.

   என்னதான் யோகாதிபதி, லக்னாதிபதி கிரகங்கள் ராசியில் வலிமையாக இருந்தாலும் உண்மையில் அம்சத்தில் வலிமை இழந்தால் அதன் பலன்களை சரிவர செய்வதில்லை, அவ்வாறே பகை கிரகங்கள் மற்றும் 6,8,12 க்குடையவரின் சாரம் பெற்ற கிரகங்களும் நன்மையான பலன்களை நடைமுறையில் தருவதில்லை.என்பதை அனுபவத்தில் பலமுறை கண்டிருக்கிறேன்.

   நவாம்சம் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது. மனைவியைப்பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மேலும் லக்னாதிபதி அம்சத்தில் சுப கிரகங்களின் வீட்டில் இருந்தால் அல்லது பார்வை, சேர்க்கையுடன் இருந்தால் அவர் நல்ல குணவானாக இருப்பார். மேலும் ஜீவனாதிபதி அம்சத்தில் தாம் பெற்ற வீட்டிற்கேற்ப தொழில்களை தருவார்.

   இதுபோன்ற எண்ணற்ற சூட்சுமங்களை அம்சத்தில் அடைத்துள்ளனர் நமது முனிவர்கள். அவற்றை நம் நுண்ணறிவால் ஆராய்ந்து அறிந்து நடைமுறையில் நடைபெறும் பலன்களோடு ஒப்பிட்டு பார்த்து நாம் உண்மைநிலையை அறிந்து கொள்ளவேண்டும்.

   மற்றபடி 30 வயதுக்கு மேல் அம்சம் வேலை செய்யும் என்பது உங்களது யூகமாக இருக்குமோ? ஏதேனும் ஜோதிட ஆதாரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

    //அம்சம் என்பது ராசியின் சூட்சுமபிரிவு.//

    நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலையும் சொல்லி புட்டிங்களே அண்ணே..
    அம்சம் ராசியின் சூட்சம பிரிவு என்றால் ….ராசியை விட அம்சத்திற்கு தானே முக்கியதுவம் கொடுக்கணும்…..

    //என்னதான் யோகாதிபதி, லக்னாதிபதி கிரகங்கள் ராசியில் வலிமையாக இருந்தாலும் உண்மையில் அம்சத்தில் வலிமை இழந்தால் அதன் பலன்களை சரிவர செய்வதில்லை,//

    அண்ணே….அப்போ அம்சத்த நேரா பார்த்துட்டு போக வேண்டியது தானே… ஏன் சுத்தி வலைச்சு ராசிய பார்த்து அப்புறம் அம்சத்த
    பார்க்குறீங்க…

    //நவாம்சம் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது. மனைவியைப்பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மேலும் லக்னாதிபதி அம்சத்தில் சுப கிரகங்களின் வீட்டில் இருந்தால் அல்லது பார்வை, சேர்க்கையுடன் இருந்தால் அவர் நல்ல குணவானாக இருப்பார். மேலும் ஜீவனாதிபதி அம்சத்தில் தாம் பெற்ற வீட்டிற்கேற்ப தொழில்களை தருவார்.//

    அண்ணே….தொழில்,குடும்பம் ,லக்கனம் எல்லாத்துக்கும் அம்சத்த பார்ப்பேன்…அம்சத்த பார்ப்பேன் அப்படின்னு சொல்லுறீங்க….அப்போ ராசில பார்க்க மீதி என்ன தான் இருக்கு 🙂

    அண்ணே ….மற்ற ஜாதகத்துக்கு எப்படி பலன் என்று எனக்கு அனுபவத்தில் தெரியவில்லை …ஆனால் கால சர்ப்ப தோஷ /யோக ஜாதகத்துக்கு 30 வயதுக்கு மேல் அம்சத்தை பார்த்து தான் பலன் சொல்ல வேண்டும் என்பதை நமிதா மிது சத்தியம் செய்து சொல்ல கூட தயார் 🙂

    அண்ணே ..புதுசா ஒரு விசயத்த சொன்னா ஏத்துகரதுக்கு கஷ்டமா தான் இருக்கும்….கலிலியோ முதல் பூமி உருண்டை நு சொன்னதும் அடிக்க வந்தாகலாம்…..நமக்கு எதுக்கடா வம்பு என்று கால போக்கில் …பூமி தப்பட்டை என்று சொல்ல ஆரம்பித்து விட்டாராம் 🙂

    இப்போ நான் சொன்ன கருத்தையே யாரவது பருத்திகொட்டை சித்தர் சொன்னார் என்று அள்ளி விட்டு இருந்தேனா நீங்க நம்பி இருப்பீங்க 🙂

    பூமி உருண்டை என்பது உண்மை என்று நிருபணம் ஆனது போல்….என்னைக்காவது ஒரு நாள் எனது கருத்து உண்மை என்பது நிருபணமாகும்…அன்னிக்கு இந்த தனி காட்டு ராஜா ங்கர கேனையன ஒரு முறை நெனச்சு பார்த்துக்குங்க 🙂 🙂

    Mani said:
    May 25, 2011 at 2:54 pm

    த.கா. ராசா நான் அப்படி என்ன சொல்லிபுட்டேன்னு இப்படி பொங்கி எழுந்துட்டீங்க. நான் உங்களிடம் கேள்வி கேட்டு அதுக்கு பதிலை சொல்லைப்பா. அம்சம் பற்றிய எனது கருத்துகளை சொன்னேன்.

    அப்புறம், அது என்ன 30 வயசுக்கப்புறம் தான் அம்சத்தை பார்ப்பீங்களா. அப்ப அதுக்கு முன்னாடி பார்க்க மாட்டீங்களோ! கால சர்ப்ப தோஷ ஜாதகம்ன்னு இல்லை அனைத்து ஜாதங்களுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை அம்சத்தை பார்த்தபின்பு பலன் சொல்வதுதான் சரிவரும். இல்லாட்டி ஏமாந்துட வேண்டியது தான்.

    ///அண்ணே….அப்போ அம்சத்த நேரா பார்த்துட்டு போக வேண்டியது தானே… ஏன் சுத்தி வலைச்சு ராசிய பார்த்து அப்புறம் அம்சத்த
    பார்க்குறீங்க…///

    ஐயோ இந்த சின்ன புள்ளைங்களே இப்படி தான் எடக்கு மடக்கா எதாச்சும் கேட்டு எங்களை திக்கு முக்காட வைக்கிறது. எப்படி சொல்லி புரியவைக்கிறது.

    த.கா. ராசா! ராசிங்கறது வெளித்தோற்றம் மாதிரி. அதை அப்படியே நம்பி ஏத்துக்க கூடாது சமயத்துல கவுத்துடும்.

    உதாரணமா நீங்க இலந்தைப்பழம் சாப்பிட்டிருக்கிங்களா வெளியில் பார்ப்பதற்கு அழகாக சாப்பிடனும் போல தோன்றும் அதுக்குன்னு அதை அப்படியே வாயில போட்டு மெல்லக்கூடாது. அதை பிதுக்கிபார்த்து அதில் புழு இருந்தால் தூக்கிப்போட்டுவிட்டு வேற பழத்தை சாப்பிட வேண்டும்.

    (இது புரியலைன்னா இப்போது இருக்கிற நடிகைங்கள பார்த்துக்குங்க வெளித்தோற்றம் வேற, ஒரிஜினல் வேற இப்ப புரியுமே! நீங்க தான் நமிதா ரசிகராச்சே!! அதான் உங்க பாணியிலேயே சொன்னேன்.)

    அதுமாதிரி ராசியை பார்ப்பதற்கு பெரிய ராஜயோக ஜாதகம் மாதிரி தெரியும். நுணுக்கமா அம்சத்தை பார்த்தா தான் அதில் உள்ள ஓட்டை உடைச்சல்கள் எல்லாம் சரியாக தெரியும். அதை தான் நான் அப்படி சொன்னேன்.

    அதுக்காக ராசியே வேணாம்ன்னு சொன்னா எப்பூடி. சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும். நீங்க என்னாடான்னா சட்டியே தேவையில்லைன்னு சொன்னா நான் என்ன பன்னுவேன்.

    ////அண்ணே….தொழில்,குடும்பம் ,லக்கனம் எல்லாத்துக்கும் அம்சத்த பார்ப்பேன்…அம்சத்த பார்ப்பேன் அப்படின்னு சொல்லுறீங்க….அப்போ ராசில பார்க்க மீதி என்ன தான் இருக்கு////

    ராசியில் பார்த்ததை உறுதிப்படுத்திக்கறதுக்கு தான் அம்சத்தை பார்க்கனும்ன்னு சொன்னேன். பலபேர் ராசியை மட்டும் பார்த்துவிட்டு பலன்களை சொல்லிவிடுகிறார்கள். அவர்களது நல்ல நேரம் சரியாக போய்விடும். சில ஜாதங்களில் சரியாக வராது. அதனால் தான் சொல்கிறேன் அம்சத்தையும் பார்க்கலாமே என்று.

    ////இப்போ நான் சொன்ன கருத்தையே யாரவது பருத்திகொட்டை சித்தர் சொன்னார் என்று அள்ளி விட்டு இருந்தேனா நீங்க நம்பி இருப்பீங்க :)///

    நீங்க சொல்லக்கூடாதுன்னு சொல்லலை த.கா. ராசா. தாராளமாக சொல்லுங்கள். சற்று விளக்கமாக, ஏதாவது ஜோதிட நூல்கள் அல்லது வேறு எதாவது ஜோதிட மேதைகள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். நடைமுறையில் அப்படிதான் பலன்கள் நடந்து வருகிறது என்று சொன்னால் எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா

    இல்ல இது நீங்கள் கண்டுபிடித்த வழிமுறை என்றால் பல உதாரண ஜாதகங்களோடு ஒப்பிட்டு சொன்னா நாங்களும் நீங்கள் கண்டுபிடித்த வழியிலே வந்து உங்கள் புகழை பரப்பிடுவம்லா.

    ஹலோ முருகேசன் அண்ணே! அம்சத்தை பத்தி பதிவு போடறேன்னு சொல்லிட்டு எங்கண்ணே! போயிட்டீங்க இங்க வாங்க. எங்க பிரச்சனைக்கு ஒரு முடிவு சொல்லுங்க. இங்க நாங்க வேற ஒன்னும் தெரியாம மாத்தி மாத்தி புலம்பிகிட்டு இருக்குறோம்.

    அண்ணே! உங்களுக்கு அம்சம் பார்க்க தெரியாதுன்னுட்டு எங்க பார்த்தாலும் சில பேரு உங்களை வெளியில கிழிக்கிறாங்க. இனிமேலும் பொறுமையா இருக்க கூடாதுன்ணே. அம்சத்தை பத்தி எல்லாருக்கும் புரியிற மாதிரி சீக்கிரம் பதிவு போடுங்கண்ணே!!

  //(இது புரியலைன்னா இப்போது இருக்கிற நடிகைங்கள பார்த்துக்குங்க வெளித்தோற்றம் வேற, ஒரிஜினல் வேற இப்ப புரியுமே! நீங்க தான் நமிதா ரசிகராச்சே!! அதான் உங்க பாணியிலேயே சொன்னேன்.)//

  இப்போ நல்லா புரிஞ்சுது அண்ணே 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s