சோரத்திலகங்கள் -அரசியல் சாக்கடைகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
கடந்த ஒரு வாரத்துல என்னென்னமோ மாற்றங்கள். தேர்தல் முடிவுகள் துவங்கி என்னென்னவோ நிகழ்வுகள். எல்லாமே எனக்கு பிடிச்ச திருப்பங்கள் தான். நான் பிரதிவினை செய்தே ஆகவேண்டிய மேட்டருங்கதான். ஆனால் மனசுல ஓடறத பிடிச்சு எழுத்துல வடிக்க முடியலை. ஒன்னு உட்கார முடியலை ( மூலம் -பவுத்திரம்லாம் இல்லிங்கண்ணா) உட்கார்ந்தா தொடர முடியலை.

என்னன்னு தெரியல. எனக்கொன்னும் நடக்கலை. ஆனா என்னை சுத்தி என்னமோ நடக்குது. மூக்குல வேர்க்குது. அது என்னான்னு சொல்லத்தெரியலை. இந்த சில்மிஷங்களுக்கெல்லாம் ஆரு காரணமோ அவிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்ல விரும்பறேன்.( கவுளி சொல்லுது -அதுவும் ஈசான்யத்துல) . இந்த மாதிரி
இடைவெளிகளை ஆயிரக்கணக்குல பார்த்தவந்தேன். ஆனால் இன்னம் உசுரா -உயிர்ப்போட இருக்கேன்.

ஆனா இந்த இடைவெளிகள்ள தங்களோட சக்தி வேலை செய்யறதா – நான் ஏதோ ஆயிட்டதா நினைச்ச கிராக்கிங்க எல்லாம் பல்லாயிரக்கணக்குல காணாம போயிருச்சு.

படக்குன்னு சக்கரம் திரும்பும். தாளி மறு நாள்ளருந்து கை போய்,கால் போய்,பொஞ்சாதி போய், அறுந்து விழுந்துன்னு பார்ட்டிங்க தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்கும். நானே அரண்டு போயிருவன்.

ஆஞ்சனேயரு, ராமரு, ஏழுமலையான்,பிரம்மங்காரு, ஷிர்டி பாபா , ஆத்தா இப்படி பலப்பல பேரு நமக்கு ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல செக்யூரிட்டி கொடுத்துக்கிட்டிருக்காய்ங்க. அவிக பொசிஷன் மாத்திக்கிற கேப்லயோ, ஷிஃப்ட் மாத்திக்கிற டைம்லயோ சந்து முனையில சிந்து பாடிட்டமுன்னு அலட்டிக்க வேணா. இதெல்லாம் மறுகணமே மாறிப்போயிரும்.ஆனால் ஒங்க பொழப்பு வருசக்கணக்குல நாறிப்போயிரும்.

அது சரி எங்கன ஆரம்பிச்சேன்? ஆங் .. இடையில என்னென்னமோ நடந்து போச்சு ஆனால் நம்ம சைட்ல இருந்து பெரிசா எதிர்வினை இல்லை. பின்லேடன் கொலை -மம்தா பேனர்ஜி வெற்றி – கடப்பாவுல ஜகன் வெற்றி – ஜெ வெற்றியில சீமான் அண்ட் கோவோட பங்கு – ஈழத்தமிழர் விஷயத்துல ஜெவோட நிலையில மாற்றம்- ரஜினியின் உடல் நிலை -சம்பந்தா சம்பந்தமில்லாம புட்டபர்த்தியாரோட நினைவுகள் குறுக்கிடறது -முதல் கனி மொழி அம்மா அரெஸ்ட் வரை பகிர்ந்துக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. குறிப்பா கேது தசை , ஈகோ பற்றி எல்லாம் எழுதியே ஆகனும். (விரும்பிக்கேட்டவை)

ரெம்ப முக்கியமா தனிக்காட்டு ராசாவோட நவாம்ச பிசினஸ். முப்பது வயசு ஆயிட்டா நவாம்சம்தேனு அடிச்சு சொல்றாரு.அவர் கருத்தை கொள்கை ரீதியில ஏத்துக்கிட்டாலும் அல்லாருக்கும் முப்பதுங்கறதை நான் ஒத்துக்கிடமாட்டேன். ஏன் எதுக்குங்கற மேட்டரையெல்லாம் , வரும் நாட்களில் நிச்சயம் ஷேர் பண்ணிக்கிறேன்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவம்ல.

ஆனால் என்னன்னே தெரியலை எல்லாமே கலாய்க்குது. நல்லவேளை 2007 க்கு முந்தின்னா வார பட்டினியெல்லாம் கிராஸ் ஆகியிருக்கும். அதுக்கெல்லாம் நான் பயந்ததே கிடையாது. இப்பம் காசு பணத்துக்கு குறையில்லாம வேற இருக்கமா? முற்றுக்கையிட்ட தீய சக்திகளுக்கு என்ன பண்றதுன்னே புரியாம ரெம்ப சின்ன சின்ன மேட்டர்ல எல்லாம் கலாய்க்குது.

நம்ம ரேஞ்சுக்கு பெரிய பெரிய மேட்டருன்னா மூளை சுறு சுறுன்னு ஆகி சொல்யூஷனை அள்ளிவிட ஆரம்பிக்கும். தாளி தெலுங்குல சொல்லுவான் ” கண்ல தூசு -செருப்புல கல்லு – காதுல பூச்சின்னு” அந்த மாதிரி லொள்ளுங்கண்ணா.

என் கணக்கு ,கெஸ்ஸிங் கரெக்டா இருந்தா நாளையிலருந்து மேற்சொன்ன தரிசனங்கள் ஆரம்பமாயிரனும்.
எதுக்குனா நல்லதுன்னு செகண்ட் அண்ட் தேர்ட் புல்லட் ப்ரூஃப் மாதிரி புள்ளையாரையும் ஆத்தாளையும் தாஜா பண்ணி கவிதை எழுதியிருக்கேன்.

மாருக்கு தலையணைய கொடுத்து ஜீரோ வாட்ஸ் பல்புல ( வீட்டுக்காரவுக லொள்ளு) எழுதின கவிதைகள் தான் நாட்டு சரக்கு மாதிரி சுள்ளுன்னு தூக்கும். சூர்யா பல்பு வெளிச்சத்துல கம்ப்யூட்டர்ல தட்டச்சின இந்த கவிதைகள் என் ஒக்காபிலரியில வெள்ளை சாம்பாருதேன்.கீழே உள்ள தலைப்புகள் மேல க்ளிக்கி ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா. நம்ம தமிழை நக்கலடிக்கிற பண்டித வர்கமெல்லாம் பேண்டுலயே பேண்டுக்கற ரேஞ்சுல இருக்கும்.

சோரத்திலகங்கள்

சரித்திர சாக்கடைக்கெல்லாம்

Advertisements

9 thoughts on “சோரத்திலகங்கள் -அரசியல் சாக்கடைகள்

  samurai said:
  May 21, 2011 at 2:41 am

  அருமை நகைச்சுவை உங்களுக்கு இயல்பாகவே வருகிறது.கலக்கல் பதிவு.

  Mohamed Ismail said:
  May 21, 2011 at 4:54 am

  அண்ணே உங்களுக்கு என்ன ஆச்சு?
  இப்படி எல்லாம் புலம்பி நான் கேள்விப்பட்டதே இல்லையே. தப்புன்னு ஊரே சொன்னாலும் கம்பீரமாக நீங்கள் சொன்னதை உறுதிபடுத்தும் தாங்களா?.
  உங்களை தடுக்கும் சக்தி எது யார் என்று தெரியலையா. இந்த மாதிரி ஆன்மீக விசயத்தில் இருப்பவர்க்கு பெரும் பிரச்சினைகள் வருவதும், அதனை இறை சக்தி கொண்டு வெல்வதுமே ஆன்மீக முன்னேற்றம்.
  தாக்கு பிடிக்க இயலாதவனே ஆண்மீகபதையை விடு ஓடி விடுவான்.
  தங்களின் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர இறை அருளும் குருவருளும் துணை புரிய வேண்டிகொள்கிறேன்
  தங்களுக்கு அருள்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதுமாகவும் அமையட்டுமாக.
  வாழ்க வளமுடன்

  Thirumalaisamy said:
  May 21, 2011 at 5:15 am

  சூபெர் நே !! எதுகை மோனை எல்லாம் போடறீங்க ( இது போதும் பூந்து விளையாடலாம் தமிழ் ல )….
  சுத்தி சுத்தி அடிக்க , ஏகப்பட்ட விஷயம் கைல வெச்சிருகீங்க, நாங்களும் waiting .
  நீங்களே சொல்லீடீங்க நெலம சாக்கட மாதிரி போய் அப்புறம் சிறுவாணி ஆகும் நு …அப்புறம் எதுக்கு இதுக்கெல்லாம் பீலிங் அ வேஸ்ட் பண்றீங்க !!! டோன்ட் வொரி ! பீ ஹாப்பி !!!

  Mani said:
  May 21, 2011 at 5:48 am

  அண்ணே! ஏதோ கொஞ்சம் கொழப்பத்தில இருக்கிற மாதிரி இருக்கு. என்ன பிரச்சனை அண்ணே!. இப்படி மறைமுகமா எழுதினா ஒன்னுமே புரியமாட்டுங்குதே. உங்களுக்கு எதையுமே உடைச்சி சொல்லிதானே பழக்கம். வெளிப்படையா எழுதுங்கண்ணே! நாங்க இருக்கோம்.

  எனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு இது நம்ம டவுசர் பாண்டி வேலையா இருக்குமோ அவரு இருந்த இடத்திலேர்ந்து உங்களை எதாச்சும் டிஸ்டர்ப் பன்றாரா. இல்ல அந்த அய்யங்கார் வேலையா? என்னாச்சு நம்ம தலைக்கு.

  ராஜா said:
  May 21, 2011 at 6:15 am

  எங்களுக்கு தைரியமும் ஆன்மீகத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டும் தாங்கள் இப்படி புலம்பவது மாதிரி பேசலாமா?

  தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முப்பொழுதும் காத்து நிற்கும்.

  இதுவும் கடந்து போகும்

  வணக்கம் தோழரே,

  இது எல்லோருக்கும் ஏற்படக் கூடியது தான்..

  ஒரே வேலையை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சோர்வு என்று கூட சொல்லலாம்.. இன்னொன்று பருவ நிலை மாற்றம்.. இப்படி நிறைய சொல்லலாம்..

  ஒண்ணும் தப்பில்லே .. ஒரு 2-3 நாள் ரிலாக்ஸ்டா உங்க ஏரியாவை விட்டு தொலைவில் இருக்கிற எதாவது ஒரு திருக்கோயிலுக்கோ அல்லது ஓய்வு தலத்திற்கு சென்று வாருங்கள்..

  எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்..

  கல்யாண் said:
  May 22, 2011 at 6:42 am

  முருகேசன் அய்யா அவர்களே,

  உங்களுடைய பதிவுகளை பார்த்துதான் எனக்கெல்லாம் ஜாதகத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்தது. உங்களோட எழுத்துக்கு நானெல்லாம் பரம ரசிகன். ரசிப்பதோட மட்டுமில்லாமல், நீங்க சொல்லும் விஷயங்களை கடைபிடிக்கணும் என்று நினைப்பவன். நீங்களே கொஞ்சம் டல் ஆகிற மாதிரி எழுதும்போது மனது வலிக்கிறது, கண்டிப்பாக நீங்க பழைய வேகத்தை விட அதிக வேகத்தில் வருவீர்கள் அதற்கு ஆண்டவன் துணை நிச்சயமா உண்டு. இது ஒரு சின்ன “Speed breaker ” மாதிரி. உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்லபோவதில்லை, இந்த சின்ன வேகத்தடையை கடந்த பிறகு, டாப் கியரில் நீங்க வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும். வாழ்த்துக்களுடன் காத்திருக்கிறோம்.

  //ரெம்ப முக்கியமா தனிக்காட்டு ராசாவோட நவாம்ச பிசினஸ். முப்பது வயசு ஆயிட்டா நவாம்சம்தேனு அடிச்சு சொல்றாரு//

  ஹி …ஹி 🙂

  டவுசர் பாண்டி said:
  May 23, 2011 at 1:17 pm

  நைனா, ஒடம்ப பாத்துக்கோ நைனா. மொதல்ல ஹெல்த்துதேன் வெல்த்து. நமக்கும் மிந்தி கம்பீட்டருல ரொம்ப நேரம் வேல பாத்ததால மறுநாள் புல்லா ரவுண்டு ரவுண்டா ஸ்டாரேல்லாம் தெரிஞ்சிச்சி. டாக்டர்ட்ட போனாக்க பித்த்தம்னு சொல்லி வந்த மகராசன வெறுங்கையோட அனுப்ப கூடாதுன்னு அம்பது ரூவாக்கி மாத்தர எளிதிக்குடுத்து அனிப்பி வெச்சாரு. கம்பீட்டர் மின்னாடி ரொம்ப நேரம் குந்திக்கினு இருக்காத நைனா. இருந்தாலும் பதிவுகளையும் பதில்களையும் பதிஞ்சிட்டு போயிருப்பா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s