ஆண்xபெண்12 வித்யாசங்கள்:3

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜாதகத்துல 12 பாவங்கள். முதல் பாவத்தோட பலம் எல்லாம் தாய்குலத்தோட அழகு, நிறம்,கவர்ச்சி பராமரிப்புலயே செலவழிஞ்சுருது. இதை குறைச்சா உடல்,உள்ள,குண நலன் சிறப்பா இருக்கும்னு மொதல் அத்யாயத்துல சொல்லியிருந்தேன்.

ரெண்டாம் பாவத்தோட பலம் எல்லாம் பேச்சுலயே சீரழிஞ்சு போயிருது. இதை குறைச்சா வாக்பலிதம், குடும்ப ஒற்றுமை, நல்ல கண் பார்வை தொடரும்னும் சொல்லியிருந்தேன்.

இந்த அத்யாயத்துல 3 ஆம் பாவத்தை பார்ப்போம். இது காதை காட்டற இடம்.புருசன் பொஞ்சாதி தனிமையில இருக்கும் போது பொஞ்சாதி “ஏங்க பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே”ன்னு கிசுகிசுப்பான குரல்ல ஆரம்பிக்கறச்ச மேற்படி பத்மா பதின் வயதுக்காரியாவும், மேல் விவரத்தை செவிமடுக்கவேண்டிய கணவன் நாற்பதுகள்ளயும் இருந்தா பரவால்லை. வேண்டா வெறுப்பா கேட்கற மாதிரி “ஊம்” கொட்டுவான் புருசன்.

இதுவே மேற்படி பத்மா மெனோஃபஸ் கேஸாவோ அ பிந்து கோஷ் சைசாவோ அ கருப்பா பயங்கரமா அ பயங்கர கருப்பாவோ இருக்கிற பார்ட்டியா இருந்தாலோ – அல்லது நம்மாளு முப்பதுலயே இழந்த சக்தி வைத்தியரை அணுகின பார்ட்டியா இருந்தாலோ ..

“த .. பேசுனா உரக்க பேசு .. இல்லாட்டி வாய மூடிக்கினு இரு. சொம்மா கிசு கிசுன்னு பேசிக்கிட்டு எரிச்சலா இருக்கு”ம்பான். இதே தாய்க்குலம் க்ரூப்பா பேசினாலோ ஒன் டு ஒன் பேசினாலோ பாதி கான்வர்சேஷன் கிசுகிசுப்பாத்தான் இருக்கும். (இதனால்தான் பேன் மருந்து சேல்ஸ் மட்டும் குறையவே இல்லை)

3 ஆம் பாவத்தோட பலம் இவிகளோட கேட்கும் திறனுக்கே செரிச்சுப்போகுது. சரியான பாம்பு செவி. அடுத்த படியா இந்த 3 ஆம் பாவம் சகோதர சகோதிரிகளை காட்டுது.ராசிபலன் எழுதும்போது மிதுனராசிக்கு மட்டும் உங்களுது ராசி சக்கரத்துல 3 ஆவது ராசிங்கறதால உங்க வாழ்க்கையில இருந்து சகோத்ர சகோதிரிகளை பிரிக்கவே முடியாதுன்னு நான் சொல்றது வழக்கம்.

ஆனால் தாய்க்குலம் மட்டும் எந்த ராசியில பிறந்திருந்தாலும் இந்த சகோதரபாசம் மட்டும் உச்சத்துலயே இருக்கும்.ஏன்? ஏன்? ஏன்?னுட்டு தலையை ஊறுகாய் பாட்டில் மாதிரி உலுக்கி உலுக்கி ரோசிச்சதுல கிடைச்ச பாய்ண்ட் சரோஜாதேவி நாவல்தனமானது .

ஆண்களுக்கு ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்.- அதாவது தாய் மேலான உடலுறவு இச்சை- (இதுக்கு உதாரணம்: வினாயகர்) பெண்களுக்கு ? பெண்களுக்கும். இருக்குதாம்.எங்கனயோ படிச்சேன்.டெர்ம் ஞா வரமாட்டேங்குது. சகோதரன் யாரு? அப்பாவோட மறுபதிப்பு. கணக்கு டேலியாகுதா?

புருசன் ஒரு ஃபேக்டரியில ஃபோர்மேனா இருப்பான். இவளோட சகோதரன் அதே ஃபேக்டரியில ஒர்க்கராயிருந்து சஸ்பெண்டாகி ஊர்ல் இல்லாத தில்லாலங்கடி வேலையெல்லாம் காட்டிக்கிட்டிருப்பான். ஆனால் பொஞ்சாதி மனசு மட்டும் தம்பியை நினைச்சுத்தேன் அடிச்சுக்கும்.

இந்த தம்பிகள் மீதான பிரமை – புருசன் செத்து – இவள் தாலியறுத்து – தம்பிகளாலயே திவாலானாலும் தீராம இருக்க இதான் காரணமா இருக்கனும்.வேற எதுவா இருந்தாலும் சீக்கிரமே தெளிஞ்சுரனுமே. வீக்கர் செக்ஸுங்கறதால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ்,சந்தேக புத்தி, ஆபத்தை ஸ்மெல் பண்ணும் டேலன்ட் எல்லாம் இருந்தும் தம்பிங்க ,மேட்டர்ல மட்டும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இவள் என்னமோ என் தம்பி என் தம்பின்னு ஜொள்ளு விட்டுக்கிட்டிருப்பாள். ஆனால் இவள் தம்பியோ தன் பொஞ்சாதி கிட்டே “த என் அக்கா இருக்காளே..சரியான பைத்தியம் ..இன்னிக்கு எங்கப்பனுக்கு திவசம். திவச சோறு சாப்பிட அவள் வீட்டுக்கு போகலைன்னு வை .அடுத்த திவசம் வரை சொல்லிக்காட்டுவா”என்று சொல்லியபடி சட்டைய மாட்டிக் கொண்டு கிளம்புவான்.

அடுத்து இந்த 3 ஆவது இடம் பிரயாணங்களை காட்டுது.எங்கனயாச்சும் வெளிய கிளம்பனும்னா முடிஞ்ச வரை தவிர்க்க பார்ப்பாய்ங்க. அதுவும் போகப்போறது கண்ணாலத்துக்குன்னா போச்சு. அவவள் காதுல,கழுத்துல,மூக்குல,இடுப்புலன்னு பளபளப்பாளுக. நான் வெறும் கவுறோட வந்து அவமானப்படனுமாக்கும்னு ஒரு சாக்கு சொல்வாய்ங்க.சரி எப்படியோ பத்து வட்டிக்கு கடன் வாங்கி நகை நட்டெல்லாம் மூட்டுக்கொடுத்து கிளம்பச்சொன்னாலும் வீட்டையே பெயர்த்து எடுத்துக்கிட்டுத்தான் கிளம்புவாய்ங்க.அப்படியும் பின் கதவை தாழ் போட்டேனா இல்லியா? பீரோவை பூட்டினேனா இல்லியா.. இன்னேரம் பால்கார பையன் வந்திருப்பான். அந்த பக்கத்துவீட்டு பத்மா நாம ஊருக்கு போனதை சொன்னாளோ இல்லியோ.. …………….இப்படி வீட்டை பத்தியே புலம்பிக்கிட்டு வருவாய்ங்க.

பிரயாணம்ங்கறது மாற்றம். மாற்றத்துக்கான செயல். வீக்கர் செக்ஸ் எப்பயும் மாற்றத்தை எதிர்க்கும்
( நிறம்,அழகு கவர்ச்சியில எதிர்க்கறது இல்லை தான் -அது வேற டிப்பார்ட்மென்ட் -சர்வைவல்)

இந்த 3 ஆம் பாவம் தகிரியத்தையும் காட்டுது. மாற்றத்துக்கு தயாராயிர்ரதுதான் தைரியம். ஆனால் உடல் ரீதியிலான பலகீனம் மாற்றத்தை எதிர்க்குது. ஒரு கோணம். ஆனால் சில பொம்பளைங்க ஆத்தா ஊட்டுக்கு போய்ட்டு, அப்படியே அங்கருந்து பத்து ரூவா சார்ஜி தான் எங்க சித்தாத்தாள பார்த்துட்டு, அப்படியே ஒரு இருபது கிலோமீட்டர் எங்க பெரியப்பா பையன், அவன் பொஞ்சாதிய பார்த்துட்டுன்னு ஷெட்யூல் போடுவாய்ங்க.

இவிக சைக்காலஜி வேற . அதாவது இவிக ஃபிசிக்கலாவோ சைக்கலாஜிக்கலாவோ ஸ்ட் ராங்கா இருப்பாய்ங்க. இதுக்கு காரணம் புருசங்காரனோட பலகீனமா இருக்கலாம். அல்லது வீடுங்கறது இவிகளை பொருத்தவரை சிறையா இருக்கனும்.

இப்ப நம்ம அட்வைஸ்:

இந்த பதிவை ஆன்லைன்ல படிக்கனும்னா மானிட்டருக்கும் உங்களுக்கும் இடையில இடைவெளி இருக்கனும்.அப்பத்தேன் சவுகரியமா படிக்கமுடியும். அதே மாதிரி அண்ணா,தம்பி உறவுல கூட ஒரு இடைவெளி மெயின்டெய்ன் பண்ணனும்.

பேசறதை விட கேட்கறது பெட்டர்தான்.அதுக்காக கண்டதையும் கேட்டுக்கிட்டிருந்தா எப்படி?

ஒரு சீரியல். ஹீரோ (?) வேற ஒரு பொம்பளையோட சகஜமா பழகறதுல இவனுக்கும் இவன் காதலிக்கும் லிட்டிகேஷன். ஒரு கட்டத்துல காதலி கேட்கிறாள் ”

நீ அந்த பொண்ணை ஜஸ்ட் ஃப்ரெண்டா மட்டும் நினைச்சு பழகினது நெஜமா இருந்தா இப்பமே என் கிட்டே புருசனா நடந்துக்கோ”

நம்ம வீட்ல கம்ப்யூட்டருக்கும் டிவிக்கும் சரிசமமான இருக்கை உண்டு. நாம நம்ம வேலையை செய்யும் போது எங்கனாச்சு இழை அறுந்து போச்சுன்னா இந்த மாதிரி இழவெல்லாம் காதுல விழும்.

இந்த மாதிரி இழவு எல்லாம் நேரடியா மைண்டுக்கு போயிராம காதுல ஒரு ஜல்லடைய பொருத்துங்க. உங்க வாழ்க்கைக்கு உபயோகமில்லாத மேட்டர் எல்லாம் மேலோட நிக்கனும். அதை பத்து நிமிசத்துக்கொருதரம் எம்ப்டி பண்ணனும்.

அடுத்தது சகோதரர்கள் மேட்டர்:

அவிக மேல உங்களுக்கு கண்டெய்னர் அளவு பாசம் இருக்கலாம். ஆனால் அவிகளுக்கும் அதே அளவு பாசம் இருக்கும்னு என்ன கியாரண்டி? அதுவும் அவிக சவுண்ட் பார்ட்டிங்களா இருந்தா இன்னம் கொஞ்சம் எட்டியே இருக்கிறது நல்லது. அண்ணியோ தம்பி பொஞ்சாதியோ கலர் டிவி வாங்கி வச்சுருந்தா அது அவளுக்கு பெருமை – அவள் புருசனுக்கு பெருமை. அவ தூக்கி பரணையில போட்டு வச்சிருக்கிற ப்ளாக் அண்ட் வைட் டிவியை கேட்டு வாங்கிவந்தா அது உங்களுக்கு சிறுமை.உங்க ஆத்துக்காரருக்கு சிறுமை.

நீங்க மட்டும் சுய சார்போட சிந்திச்சு – ஆத்துக்காரரோட சம்பாத்தியத்துல சேமிச்சோ அ நீங்க சம்பாதிச்சோ மேற்படி கலர் டிவியை வாங்கினா அது உங்களுக்கும் பெருமை. ஆத்துக்காரருக்கும் பெருமை.

அடுத்தது பிரயாணம்:

ஒரு மன்சன் தான் இருக்கிற இடத்தை விட்டு நகராம வாழ்ந்தா ஓடாத தண்ணில புழு உற்பத்தி ஆயிர்ராப்ல அவன் மனசு நாஸ்தி ஆயிரும்.

பிரயாணத்துல எதிர்படற அல்லல்,அலைச்சல், வசதி குறைவு எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி நாலு ஊரு சுத்தி பார்த்துட்டு சொந்த ஊருக்கு வந்தாதான் நம்ம ஊரு எவ்வளவோ பெட்டருப்பான்னு தோணும். வீட்டோட அருமை தெரியும்.

மன்சனை ரெம்ப இம்சைக்குள்ளாக்குற ஈகோ டைல்யூட் ஆயிரும் தெரியுமோ? சொந்த ஊர்ல டீக்கடை பெஞ்ச்ல உட்கார்ந்து டீ சாப்பிடாதவன் கூட வெளியூர்ல பிளாட்பாரத்துல படுத்து தூங்க தயாராயிருவான்.

வாழ்க்கையில மாறாதது மாற்றம் ஒன்னுதேன். பிரயாணத்துக்கு தயாராயிட்டிங்கன்னாலே நீங்க மாற்றத்தை ஏத்துக்கற ஆளுனு அர்த்தம். ஏத்துக்க தயாராயிட்டா எந்த மாற்றமும் பெரிசா பாதிக்காது. மாற்றத்துக்கு தயாராகாத பார்ட்டிக்கு மாற்றம் மரணத்துக்கு சமம்.

சாவுன்னா என்ன ? ஒரு ஊரை விட்டு அடுத்த ஊரு போறாப்லதானே. அப்பப்போ ஊர் ஊரா சுத்திட்டு வந்தம்னு வைங்க சொந்த ஊரு மேல அட்டாச்மெண்ட் குறையும். சாவூருக்கு கிளம்பற நேரம் ஏதோ இன்னொரு பிரயாணம் போறமாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

குறிப்பு:
வழக்கம்போல சின்ன எச்சரிக்கை. இது ஏதோ பெண்களுக்கு மட்டும் உரியது இல்லிங்கண்ணா. நம்மாளுங்கள்ளயும் பாதிபேரு இந்த குறைகளோடதான் வாழ்ந்து கிட்டிருக்கோம். ரோசிச்சு பாருங்கண்ணா.

தகிரியம் வளரனும்னா எங்க ப்ரதருக்கு ஒரு ஃபோன் போட்டா போதும்னு பீத்தறதை விடுங்க. சட்டுனு ப்ரிப்பேர் ஆகி நாலு இடம் போய் வாங்க. கண்ட பிக்காலி காதை கடிச்சிக்கிட்டிருந்தா அதுக்கெல்லாம் இம்பார்ட்டென்ஸ் தராதிங்க.

உலகத்துல 99.9% பேர் பிறர் என்ன பண்றாய்ங்கன்னு விமர்சிக்கிறதுலயே வாழ்க்கைய முடிச்சுர்ராய்ங்க. 00.01% தேன் எதையாவது பண்றாய்ங்க.

எதையாவது சொந்தமா செய்தாதேன் நம்ம மேல நமக்கே நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையிலருந்துதேன் தகிரியம் வரும். துணிஞ்சவனுக்கு துக்கமில்லை. துணிவே துணை.தைர்யே சாஹசே லக்ஷ்மீ.

Advertisements

17 thoughts on “ஆண்xபெண்12 வித்யாசங்கள்:3

  arul said:
  May 19, 2011 at 2:14 am

  murugesh anna,

  vinayagarukku enna sampantham ithil?

   S Murugesan said:
   May 19, 2011 at 4:39 am

   வாங்க அருள்!
   வினாயகர் அம்மாவுக்கு ரெம்ப “pet” கண்ணாலம் பண்ணிக்கிட்டா அம்மாவை பிரியனும்/பிரிச்சுருவாய்ங்கன்னுட்டு அம்மா மாதிரி பெண் கிடைச்சாத்தான் கண்ணாலம் பண்ணிகுவேன்னு ஆத்தங்கரை ஓரத்திலே -அரச மரத்தடியிலே உட்கார்ந்து தண்ணி எடுக்க வர்ர குட்டிங்களை லுக் விட்டுக்கினு இருக்காரு.

   பாவம் இப்பம் ஆறே இல்லை. ஆறு இருந்தாலும் அதுல தண்ணியில்ல. தண்ணி இருந்தாலும் அது குடிக்கிற மாதிரி இல்லேங்க்ற மேட்டர் தெரியலை போல

  Surya said:
  May 19, 2011 at 3:16 am

  அதன் பெயர் “ELECTRA complex”

  vinoth said:
  May 19, 2011 at 4:28 am

  சுரியா சொல்றார் அது “ELECTRA complex” ஆமா …
  சென்னை ஸ்பென்சர் பிளாசா மாதிரி காம்பிளக்ஸ் இருந்தாலாவாது பொழப்புக்கு ஆகும் .. இத வச்சு என்ன செய்ய..?

  வணக்கம் முருகேசன் சார்,

  //ஆண்களுக்கு ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்.- அதாவது தாய் மேலான உடலுறவு இச்சை- ( இதுக்கு உதாரணம்: வினாயகர் ) //

  இதுக்கு என்ன பொருள் ?
  நான் கேள்விப்பட்ட மாதிரி இல்லையே ?

  தயவு செய்து பதில் தரவும்..இங்கு வேண்டாம் எனது மெயிலுக்கு..
  மெயில் முகவரி – sivaayasivaa@gmail.com – நன்றி

  //பிரயாணத்துல எதிர்படற அல்லல்,அலைச்சல், வசதி குறைவு எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி நாலு ஊரு சுத்தி பார்த்துட்டு சொந்த ஊருக்கு வந்தாதான் நம்ம ஊரு எவ்வளவோ பெட்டருப்பான்னு தோணும்.//

  //மாற்றத்துக்கு தயாராகாத பார்ட்டிக்கு மாற்றம் மரணத்துக்கு சமம்.//

  //சாவூருக்கு கிளம்பற நேரம் ஏதோ இன்னொரு பிரயாணம் போறமாதிரி ஒரு ஃபீலிங் வரும்//

  SUPER 🙂

  Thirumalaisamy said:
  May 19, 2011 at 6:19 am

  இந்த ஜடத்துக்கு ஒன்னும் விளங்க மாட்டிங்குது (மூணு தடவ படுச்சாலும் ) ….செரி விடுங்க , போகப்போக ரெடி ஆய்டும் .

   S Murugesan said:
   May 19, 2011 at 7:17 am

   திருமலை சாமி,
   என்ன புரியலைனு சொன்னா பதவுரை- கருத்துரை-விளக்க உரைல்லாம் தருவோம்ல

  Sudharsan said:
  May 19, 2011 at 7:24 am

  Murugesan sir, Is third house best position for Rahu ?

   S Murugesan said:
   May 19, 2011 at 12:05 pm

   Sudharsan,
   Yes.

    R.Puratchimani said:
    May 19, 2011 at 7:40 pm

    சார்…மூணுல கேது இருந்தா?

  ஜெகன் said:
  May 19, 2011 at 2:59 pm

  திரு. முருகேசன் ஐயா அவர்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன்.

  http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html

  கிருமி said:
  May 19, 2011 at 6:19 pm

  அண்ணே,
  ஒரு தடவை எந்தெந்த கிரகத்துக்கு என்னென்ன எண் அப்டின்னு ஒரு குறிப்பு மறுமொழில சொன்னீங்க். அத சொல்லுங்க. அவசரமா தேவை.
  நன்றி.

   R.Puratchimani said:
   May 19, 2011 at 7:38 pm

   hi Its me….

   R.Puratchimani said:
   May 19, 2011 at 7:39 pm

   சூ – ஒன்னு
   சந்தி -இரண்டு
   குரு- மூணு
   ராகு- நாலு
   புதன் – ஐந்து
   சுக்கிரன்- ஆறு
   கேது- ஏழு
   சனி- எட்டு
   செவ்வாய்- ஒன்பது
   இது சரின்னுதான் நினைக்கிறேன்
   தப்ப இருந்தா யாராச்சும் திருந்துங்கப்பா

   Ram Pop said:
   May 20, 2011 at 1:11 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s