சூப்பர் ஸ்டாரின் பலம் பலவீனம் : தனிக்காட்டுராசா

Posted on

பதிவர் :தனி காட்டு ராஜா

ஜோதிடயியல் படி நம்ம சூப்பர் ஸ்டார் சூரியன் மேஷத்தில் உச்சம்((April14-May 14) ) பெறுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனா பாருங்க.. கத்திரி (கோல்) வெய்யில் (May4 -may29) அப்படின்னு விஞ்ஞானம் தெரிஞ்சவுக சொல்லுறாங்க.
அதுபடி பார்க்கும் போது…மேசத்துள்ள உச்சா மன்னிக்கவும் உச்சம் போன சூரியன் …மே 15 முதல் ரிஷபத்தில் வந்தவுடன் அவரின் பூமி மிது ஆன வெப்பதன்மை குறைந்து விட்டதா என்று யோசித்தால் ..இல்லை என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால்…. சூரியன் உச்ச பலம் பெற வில்லை… பூமியின் ஒரு குறிபிட்ட பகுதி …குறிபிட்ட பாகையில் சூரியனை சந்தித்து உச்ச கட்ட சூரிய கதிர்களை வாங்கி கொள்கிறது. அதே சமயம் இதே கால கட்டத்தில் பூமி முழுவதும் கோடை காலமாக இருப்பதில்லை.ஆசியாவில் கோடை காலம் என்றால் அமெரிக்காவில் கோடை காலம் கிடையாது.

சரி நம்ம அரை வேக்காட்டு அறிவுக்கு இந்தியாவ குறித்து மட்டும் இப்போ யோசிப்போம்.

மேஷத்தில் உச்ச பலம் பெரும் சூரியன் உடனே ரிசபத்தில் பலம் குறைந்து விடுகிறதா?
இல்லை ….மேஷத்தில் இருந்து படிப்படியாக சூரியனின் தாக்கம் பூமி(லக்னம்/இந்தியா/ஜாதகன்) மிது குறைந்து,
துலா ராசி கட்டத்தில் சூரியன் வலம் வரும் போது பூமி சூரியனிடம் இருந்து குறைந்த கதிர்களை பெறுகிறது .

அப்படி பார்க்கும் போது …ஜோதிட விதிபடி சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறுகிறது.
ஆனால் உண்மையில் பார்க்கும் போது ….சூரியன் சிம்ம ராசியில் உள்ள போது உள்ள பலத்தை விட …ரிசபத்தில் தான் அதிக பலத்தோடு உள்ளார்.

உண்மையில் சிம்மத்தில் சூரியன் இருக்க பிறந்த ஜாதகனை விட …ரிசப ,மிதுன ,கடக ராசியில் சூரியன் இருக்க பிறந்தவன் சூரிய பலம் மிக்கவன் என்று தான் சொல்ல வேண்டும்.
சரி சிம்மத்தை ஏன் ஆட்சி வீடு என்று சொல்ல வேண்டும்??

சூரியன் உச்சமாக உள்ளதால்..அதை நாம் நன்மை என்று சொல்லி விட முடியாது..மே மாசத்துல்ல அக்னி வெயில் அதிக பச்ச எரிச்சல் ,சூட்டை தான் கெளப்பும்.இது நன்மையா?

“ஆடிப் பட்டம் தேடி பாத்து விதைக்கணும் விஜயகாந்து” 🙂 அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு ஏன் ?
ஆடி மாதத்தில் விதைத்தால் ஆவணி மாசத்தில் விதை முளை விட்டு மேலே வரும் போது படும் சூரிய கதிர்கள் (அதாவது சிம்மத்தில் சூரியன் உள்ள போது)தாவர வளர்ச்சிக்கு நன்கு உதவுகின்றன.

அதாவது சூரியன் அதிக பலத்தோடு இருப்பதும் நல்லது அல்ல…குறைந்த பலத்தோடு இருப்பதும் நல்லது அல்ல….சிம்மத்தில் சூரியன் சரியான பலத்தோடு நன்மை செய்யும் விதத்தில் உள்ளது.அதனால் தான் சூரியனுக்கு சிம்மம் சிங்குள் பெட்ரூம் சொந்த வீடு என்று சொல்லி வைத்து உள்ளார்கள் போல.

சூரிய பலம் என்று பார்த்தால் சிம்மத்தை விட ரிஷப,மிதுன,கடகத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் சூரிய பலம் மிக்கவர்கள் என்று சொல்லாம் என்பது இந்த அரை வேக்காட்டின் கருத்து.
அனால் நன்மை என்று பார்த்தால் மேஷத்தில் சூரியன் உள்ளவனை விட …சிம்மத்தில் சூரியன் உள்ளவனுக்குதான் அதிகம் என்று சொல்லலாம்.

மேஷத்தில் சூரியன் உள்ள பார்டி …தலைமை பதவியில் இருந்தால் ஓவர் எரிச்சல் உள்ளவராக இருக்கலாம்.
சிம்மத்தில் சூரியன் உள்ள பார்டி…தலைமை பதவியில் இருந்தால் எரிச்சல் டென்ஷன் போன்றவை இல்லாதவராக இருக்கலாம்.
துலாத்தில் சூரியன் உள்ளவர் தலைமை பதவியில் இருந்தால்…கூலான பார்டியாக இருக்கலாம்.வெளி வட்டாரத்தில் இளிச்சவாயன் என்ற ஒரு பேரும் இருக்கலாம்.

அப்படியே சந்திரனை ஆராய்ந்து பார்த்தால்,சந்திரன் ரிசபத்தில் உச்சம்.
கடகத்தில் ஆட்சி.
இடைப்பட்ட மிதுனத்தில் சந்திர பலம் என்ன?
உச்ச பலத்தை விட குறைவு…ஆட்சி பலத்தை விட அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியே சுக்கிரனை ஆராய்ந்து பார்த்தால்
மீனத்தில் உச்சம்.
ரிஷபத்தில் ஆட்சி.
அப்போ மேஷத்தில் உச்சாட்சியா??
சுக்கிரனுக்கு டபுள் பெட்ரூம்(ரிசபம்,துலாம்) வீடு வேறு.
மேஷத்தில் உள்ள சுக்கிரன் ரிசப,துலா சுக்கிரனை விட பலம் அதிகம்…ஆனால் நன்மை வேணுமானால் குறையலாம், கூடலாம்.

மற்ற கிரக ஆராய்ச்சி, நன்மை தீமை பற்றிய ஆராச்சியை உங்கள் தரப்புக்கே விட்டு விடுகிறேன் 🙂

10 thoughts on “சூப்பர் ஸ்டாரின் பலம் பலவீனம் : தனிக்காட்டுராசா

  டவுசர் பாண்டி said:
  May 17, 2011 at 3:29 pm

  தனிக்காட்டு ராசான்னே, நல்லா ஆராச்சி பண்றீன்கனே. பதிவு சூப்பர்.

  டவுசர் பாண்டி said:
  May 17, 2011 at 3:33 pm

  ராசான்னே, சன்ன பத்தி சன்பாத்தோட வெளக்கிருக்கீங்க. சூப்பர்னே.

  vinoth said:
  May 18, 2011 at 3:53 am

  தனிக்காட்டு ராசா…
  உங்க ஆராயிச்சி .. ரொம்ப நல்லா இருக்கு…
  எல்லா கிரகத்தை பற்றியும் ஆராயிச்சி பண்ணி போடுங்க…
  ஆராயிச்சின்ன அத நீஙக் பண்ணினா தான் நல்லா இருக்கு..

  vinoth said:
  May 18, 2011 at 4:12 am

  ///..சூப்பர் ஸ்டாரின் பலம் பலவீனம் : தனிக்காட்டுராசா…//
  இது எங்கண்ணே சொல்லி இருக்கீங்க ?
  ஒருவேளை சூரியனை தான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றீஙகளோ?

  //ராசான்னே, சன்ன பத்தி சன்பாத்தோட வெளக்கிருக்கீங்க. சூப்பர்னே.//
  மறு மொழிக்கு நன்றிங்க டவுசர் …
  இந்த கே பி கே பி நு சொல்லுராங்களே….அதுல பலன் துல்லியமா தெரிஞ்சு புடுமாமே …கொஞ்சம் விளக்குங்களே…இல்லினா புத்தகம் ,நெட் லிங்க் ஏதாவது இருந்தா சொல்லுங்க …

  //ஒருவேளை சூரியனை தான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றீஙகளோ?//
  ஆமானே …சூரியன் தான் நாயகன் ( சூப்பர் ஸ்டார்) 🙂
  சந்திரன் தான் நாயகி
  செவ்வாய் தான் தளபதி
  குரு தான் குண சித்திர கேரக்டர்
  சுக்கிரன் தான் கிளு கிளுப்பு தருகிற ITEM நாயகி
  புதன் தான் தந்திர காரன்.
  சனி தான் வில்லன்
  ராகு -கேது தான் டைரக்டர் 🙂

   vinoth said:
   May 18, 2011 at 6:56 am

   மகர , கும்ப லனத்துக்கு இந்த லிஸ்ட் அப்படியே மாறுமா ?
   சனி அங்க வில்லன் ஆக முடியாதே…

  //மகர , கும்ப லனத்துக்கு இந்த லிஸ்ட் அப்படியே மாறுமா ?
  சனி அங்க வில்லன் ஆக முடியாதே…//

  பொதுவாச் சொன்னேன் ..ஹி..ஹி 🙂

  sugumarje said:
  May 18, 2011 at 3:56 pm

  //தனி காட்டு ராஜா ஜோதிடயியல் படி//
  இப்படி அரைவேக்காட்டு பதிவு காமிச்சுச்சா, பயந்து போயிட்டேன்பா… ஓகே. நல்லத்தான் அலசல் இருக்கு.
  யாருகண்டா, கே பி மெத்தட்ஸ் மாதிரி அரைவேக்காட்டு மெத்தட்ஸ் கூட வந்தாலும் வரலாம் :))

  //யாருகண்டா,கே பி மெத்தட்ஸ் மாதிரி அரைவேக்காட்டு மெத்தட்ஸ் கூட வந்தாலும் வரலாம்//
  வரும்……. ஆனா வராது….
  ஹா ஹா 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s