அவள் ஒரு ' நவ ' ரச நாடகம்

Posted on

கண்ணதாசன் எழுத்து மழைக்காலத்து மலையருவி. அதும்பாட்டுக்கு கொட்டி தீர்த்துரும். ஆனால் வாலி செயற்கை ஃபவுண்டன் மாதிரி. இவரோட சேகரிப்புகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு -அதில் புழு விழுந்திருக்கலாம் – நாற்றமெடுத்திருக்கலாம் – பாட்டு எழுதும்போதான வேக்குவத்தில் அந்த தண்ணீர் மேனோக்கி பீச்சியடிக்கப்படும்.

அவர் கடைசி காலத்துல பத்திரிக்கைகள்ள – முக்கியமா ஆனந்த விகடன்ல எழுதின /எழுதிக்கிட்டிருக்கிறதெல்லாம் கவிதையில சேர்த்தியே இல்லே. ஆனால் அவர் உ.சு.வாலிபன் படத்துக்கு எழுதின வரியைத்தான் இந்த பதிப்போட தலைப்பா உபயோகிச்சிருக்கேன். ஆனால் அவர் எழுதின அர்த்தத்துல இல்லே.வேற அர்த்தத்துல அது என்ன அர்த்தம்னு கடேசில சொல்றேன்.

சக்திவழிபாடுங்கறதே மன வளர்ச்சியிலான குறைப்பாட்டின் பரிணாமம்.ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸுக்கு ஆளாகாத ஆண்குழந்தையே கிடையாது.ஆனால் இந்த காம்ப்ளெக்ஸ்லருந்து எவ்ள சீக்கிரம் வெளியவந்துட்டா அவ்ளோ நல்லது.

இந்த கவிஞர் பசங்க எல்லாம் அடிப்படையில சாக்தேயர்கள் தான் ( என்னையும் கவிஞன்னு ஏத்துக்கிட்டா நான் உட்பட) . ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸால பீடிக்கப்பட்டவுகதான்.

அதுலயும் பெண்ணோட மாரை பத்தி எழுதாத கவிஞனே கிடையாது. நம்ம கலைஞர் தாத்தா கூட ” இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்”னு எழுதியிருக்காரு.

“மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்”

“அது காயா ..இது பழமா கொஞ்சம் தொட்டுப்பார்க்கட்டுமா”

“சோளி கே பீச்சே க்யாஹை”

அடங்கொய்யால கெட்டகாரியம் தான் இவிக நோக்கம்னு இவிக கான்சன்ட் ரேட் பண்ணவேண்டியது வேற சமாசாரத்துலதானே. அப்பாறம் எதுக்கு இந்த நுனிப்புல் மேய்தல்? இவ்வளவு ஏன் பலான மேட்டர்ல ஆணோட கண் /கை எல்லாமே தாவறது இந்த பார்ட்டுக்குத்தேன்.

மேட்டர் இன்னாடான்னா அஜால் குஜால் வேலையெல்லாம் சாக்கு. இவனுக்குள்ள இருக்கிறது ஒரு தாயோட பிம்பம். அந்த பிம்பத்துல இவனுக்கு நெருக்கமா இருந்தது அந்த சமாசாரம் தான். இவன் தேடறது பெண்ணை இல்லை.தாயை.அல்குலை இல்லை.. இந்த சமாசாரத்தை தேன்.

ஒரு பெண் காதலனை நோக்கி வர்ரதை வருணிச்சு எழுதப்பட்ட பாடல்களை விட இவனை விட்டு விலகறதை வருணிச்சு, பிரியறதை வருணிச்சு, பிரிவை வருணிச்சு எழுதப்பட்ட பாடல்களே அதிகம். இவன் வளர வளர இவனோட தாய் இவனை விட்டு விலகிப்போறதை இவன் அடிமனசு மறக்கறதே இல்லை.

மனைவி கிட்டே ஒரு முழு தாயை தரிசிக்கற வாய்ப்பு ரெம்ப குறைவு – செக்ஸ் ஒரு பெருந்தடையாவோ – குற்ற உணர்ச்சியை தர்ர விஷயமாவோ இருக்கு. அடுத்து இருக்கவே இருக்கு பெண்ணோட இன் செக்யூர்ட் ஃபீலிங்ஸ் – அது தரும் சதி எண்ணங்கள் -மோகாவேசத்தில் இவன் பலியான தருணங்கள்..

இவனுக்குள்ள அடுத்த சான்ஸு மகள். இதுக்கும் ஒரு டெட் லைன் இருக்கு. அவள் குழந்தையா இருக்கிறவரை ஓகே. அவள் வளர வளர இவனை விட்டு விலகிப்போறாள். இந்த ஏமாற்றங்கள் தான் ஆணை மலருக்கு மலர் தாவும் வண்டாவோ – கவிஞனாவோ – சாக்தேயனாவோ மாற்றுது.

சக்திவழிபாடுங்கறதே மன வளர்ச்சியிலான குறைப்பாட்டின் பரிணாமம்னு ஆரம்பத்துல சொன்னேன்.சக்தி வழிபாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் நூத்துக்கு நூறு மனவளர்ச்சியிலான குறைபாடுதான். ஆனால் ஆன்மீக கோணத்துல பார்க்கும்போது அவள் தாயாக இவன் சேயாகிறான்.அகந்தை அதலபாதாளத்துக்கு போயிருது.ஞானம்ங்கறதே மீண்டும் குழந்தையா மாறுவது தான். ( நான் தான் கடவுள்னு சொல்றது குழந்தைத்தனம் – ரெண்டையும் குழப்பிக்காதிங்க )

ம்னவளர்ச்சின்னு சமுதாயம் சொல்றது என்னன்னா ஒரு ஆண்குழந்தை தன் தாயை விட்டு மானசிகமா விலகி அப்பனுக்கு டூப்ளிக்கேட்டா ஜெராக்ஸ் காப்பியா மாறுவதைத்தான். இந்த வளர்ச்சிதான் மனவளர்ச்சின்னா அந்த வளர்ச்சி எதுக்கு? இந்த வளர்ச்சி தாளி அவனை ஒரு ஹோமாவா கூட மாத்திரலாம். தேவையா இந்த வளர்ச்சி.

இப்ப வாலியோட பாட்டுவரிக்கு வந்துருவம் அவள் ஒரு நவரச நாடகம்ங்கற வரியில” நவ” என்ற வார்த்தைக்கு 9 என்ற பொருளை மனசுல வச்சு வாலி எழுதிட்டாரு. ஆண் பெண்ணுக்கிடையில எப்போ பலானது பலானது குறுக்க வந்துருதோ அப்ப அந்த உறவே ஒரு நாடகமாத்தான் மாறிப்போயிருது.
( புருசன் பொஞ்சாதியாவே இருந்தாலும்) அந்த நாடகத்துல இவனோட ஆண்மை -அவளோட பெண்மையின் வீச்சு,வீரியத்தை பொருத்து நவரசங்களும் மாறி மாறி வரும். இந்த கோணத்துல பார்த்தா வாலி சார் எழுதினது கரீட்.

ஆனால் “நவ” என்ற வார்த்தைக்கு :”புதிய” ங்கற பொருளும் உண்டுங்கண்ணா. நான் புதியங்கற அர்த்தத்துலதான் வாலியோட வரிய உபயோகிச்சிருக்கேன். இங்கே ‘அவள்’னா ஆத்தா . ஆத்தா இப்பம் செலாவணியில இருக்கக்கூடிய நவரசங்கள் அல்லாது ஒரு புதிய ரசத்தை தரும் நாடகம்.

அந்த என்ன ரசம்னு கேட்டா சமரசம். ஆத்தாளோட சலங்கையொலிய – தியானத்துலயே இல்லிங்கண்ணா அட கனவுல – பகல் கனவுல கேட்டிருந்தாலும் போதும் அவனுக்குள்ள சமரசம் ஊற ஆரம்பிச்சுரும்.

ந்வரசங்கள் எல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தேன் சுவாரஸ்யமா இருக்கும். ஒடனே அதுக்கு நேர் எதிரிடையான அடுத்த ரசத்தை மனசு எதிர்பார்க்க ஆரம்பிச்சுரும். ஆனால் சமரசம் அப்படியில்லை.

ஆத்தாங்கற ‘நவ’ ரச நாடகத்தை காணும் எவனும் இந்த ஜகன்னாடகத்திலான சமரசத்தை கண்டுக்குவான். அப்பாறம் நீ இல்லை நான் இல்லே. எல்லாம் அவள் தான்ங்கற உண்மை உறைக்கும்.

9 thoughts on “அவள் ஒரு ' நவ ' ரச நாடகம்

    vinoth said:
    May 18, 2011 at 4:00 am

    சக்தி வழிபாட்டுல மனைவியை தான் முதலில் வழிபடணும்னு பாலா புத்தகத்தில் படிச்ச ஞாபகம் இருக்கு தல..

    மனைவிக்கும் நமக்கும் ஏகப்ப கிளாஷ் இருக்குங்கிறிஙக அப்புரம் எப்படி இது சாத்தியம் ?

    கணவன் மனைவி / தாய் மகன் உறவு சரியில்லைனா சக்தி வழிபாடு சாத்தியமா?

      TK said:
      May 18, 2011 at 5:06 am

      In my life experience, I found that for a male, if he don’t have the real husband/wife relationship and he didn’t care/maintain mother/son relationship then 100% true that that male cant get the sakthi vazhipadu atmosphere. Or I can put it in different word that the sakthi (any amman temple) didnt bring him to her circle etc.,

      பெரும்பாலும் பெண்கள் வழி நன்மை பெறுபவர்களுக்கு தான் சக்தி வழிபாடு சூட் ஆகும்னு நெனைக்கிறேன் வினோத் அண்ணே…

      பொண்டாட்டிய முதுகுல குனிய வச்சு குத்தி புட்டு….அப்புறம் அம்மா தாயே நு கோவில் வாசலுல போய் நின்னா..அது சரி பட்டு வராது அண்ணே 🙂

      கடக ராசி ஆளுகளுக்கு அம்மா மேல பாசம் அதிகமா இருக்கும் அண்ணே …இவுகளுக்கு சக்தி வழிபாடு நன்மையை தரும்..
      ரிசப ,துலா ராசி பயலுக பொண்டாட்டி தாசனா இருப்பாங்க…இவுகளுக்கு சக்தி வழிபாடு நன்மையை தரும்.
      அப்புறம் ராகு சாதகத்துல நல்லா இருந்தா சக்தி வழிபாடு நன்மையை தரும்…
      இது எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்…சும்மா நான் அடிச்சு விட்டேன் 🙂

    TK said:
    May 18, 2011 at 5:09 am

    without proper husband/wife relationship and mother/son relationship that male cant enter into SAKTHI VAZIPADU circle or atmosphere.

    Thirumalaisamy said:
    May 18, 2011 at 5:15 am

    அண்ணே ரோசிக்க வேண்டிய பதிவு …மிக ஆழமான அர்த்தங்கள் இருக்குறதா தோணுது !!! அணு தினமும் யோசிக்க வைக்கும் உங்கள் சேவை நிச்சயம் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை தரும் !!!
    //
    அண்ணன் வினோத் அவர்களுக்கு வணக்கம் …

    ///////// சக்தி வழிபாட்டுல மனைவியை தான் முதலில் வழிபடணும்னு பாலா புத்தகத்தில் படிச்ச ஞாபகம் இருக்கு தல..

    மனைவிக்கும் நமக்கும் ஏகப்ப கிளாஷ் இருக்குங்கிறிஙக அப்புரம் எப்படி இது சாத்தியம் ?

    கணவன் மனைவி / தாய் மகன் உறவு சரியில்லைனா சக்தி வழிபாடு சாத்தியமா? ///////////

    இங்க தான் தல சொல்ற ஈகோ காபரே ஆடுதுன்னு தோணுது !!! சமூகம் , மதம் , சாஸ்திரம் , சம்பிரதாயம் …..அப்படிங்கற பேருல !!!

    கரீட்டா தல ???

    TK said:
    May 18, 2011 at 5:23 am

    I am trying 10 times to add my comment..not coming?? will this get added?

      S Murugesan said:
      May 18, 2011 at 6:52 am

      Mr.T.K,
      I think many friends are trying at the same movement. May the Band width exceeded. Please try after some time. Sorry for the inconvenience.

        sugumarje said:
        May 18, 2011 at 4:04 pm

        //Please try after some time. Sorry for the inconvenience.//
        மொபைல் புரோவைடர் மாதிரியே சொல்லிட்டீங்க :))

        உங்க பாணியிலான விளக்கம் Simply Super… ஆனா எல்லாரும் இரண்டு தடவை படிக்கவேண்டிவரும் 🙂

        S Murugesan said:
        May 18, 2011 at 4:30 pm

        வாங்க சுகுமார்ஜீ,
        பதிவு எழுதவேண்டிய பார்ட்டி கமெண்ட் போட்டு கழண்டுக்கறிங்களே.. இது நியாயமா?

Leave a reply to TK Cancel reply