அவன் – அவள் -அது : 13

Posted on

01Amma_Choodaali

மொதல்ல மேற்படி லிங்கை க்ளிக்கி தெலுங்கு பாட்டை கேட்டுட்டா ஒரு மூட்க்கு வந்துருவிக. பதிவை பெட்டரா எஞ்ஜாய் பண்ணலாம்.

நாலு நாள் கேம்ப் போய்ட்டு வீட்டுக்கு வரிங்க. ஓட்டல்லயும்,மெஸ்லயும் தின்னு நாக்கே செத்துப்போன ஃபீலிங். அம்மாவை ” ஏம்மா எதுனா சூடா செய்யேன்..”ங்கறிங்க.

உடனே அம்மா கேஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணி கேஸ் புக் பண்ணி – ஸ்டவ் வாங்கி – மார்க்கெட் போய் வந்து சமைக்கிறாய்ங்களா?

இல்லே என்னா செய்யனுமோ அதெல்லாம் ஊட்லயே இருக்கும். கொஞ்சமா பொறுக்கறது,நறுக்கறது மாதிரி வேலைங்க இருக்கும். ஒரு அரைமணியில ப்ரிப்பேர் பண்ணிர்ராய்ங்க.

ஆத்தா மேட்டர்லயும் இதான் நடந்தது. மாயா பீஜ ஜபம் ஸ்டார்ட் பண்ணதென்னமோ 2000,டிசம்பர் 23 க்கு அப்புறம் தான்.

ஆனால் ஸ்ரீ பிரம்மங்காருவோட மூலமந்திரம் – (1984)முருகனோட மூலமந்திரம் இத்யாதியில மேற்படி மாயா பீஜம் வந்ததும் – அதுகளையும் ஜெபிச்சதும் உண்டு.முன்னொரு பதிவுல சொன்னாப்ல என் லைஃபுக்கான மெசேஜ் என் 5 வய்சுலயே 1972 லயே கிடைச்சாச்சு.(பாபம் பசிவாடு சினிமா)

ஆனால் அது எனக்கான மெசேஜுதான்னு எனக்கு உறைக்க 2011 வரை காத்திருக்கவேண்டியதாயிருச்சு. நிற்க. இந்த தொடர்ல விட்டலாச்சார்யா தனமான அற்புதங்களை எதிர்பார்க்கிறவுகளுக்காக ஒரு சின்ன சம்பவம்.

மாயா பீஜ ஜபம் ஆரம்பிச்ச பிற்பாடு சரஸ்வதி தேவியோட மூலமந்திரம் ஒன்னு கிடைச்சது. அதையும் ஜெபிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு தாட்டி தேஜா டிவிலனு நினைக்கிறேன். பார்பரான பாக்யராஜ் பிராமண பெண்ணை லவ் பண்ணுவாரே இன்னா படம்பா அது? அந்த படம் ஓடிக்கினு இருந்தது. கண் என்னமோ அதை பார்க்குது .மனசு என்னமோ மந்திரத்தை ஜெபிச்சுட்டே இருக்கு.

படத்துல ஏதோ பாட்டு போட்டி நடக்குது.ஸ்டேஜ்ல பின்னணியில சரஸ்வதியோட படம். அதை பார்த்ததும் மனசுல ஒரு குஜிலி. பரவால்ல நாம ஜெபிக்க ஆரம்பிச்சதும் ஆத்தா அட்லீஸ்ட் டிவிலயாவது காட்சி கொடுக்கிறாளேன்னுட்டு.

ஜெபத்தை உக்கிரமாக்கினேன். என்னாச்சுங்கறிங்க? சரஸ்வதி க்ளோஸப்ல வர்ர சமயம் பார்த்து வீடியோ ஸ்ட்ரக் ஆயிருச்சு. ஆத்தா க்ளோஸப்லயே நின்னுட்டா. பாட்டு முடிஞ்சது.வசனம் ஓடுது.விளம்பரம் வருது. ஆத்தா மட்டும் நிலையா நின்னுட்டா.

ஸ்ட்ரக் ஆன வீடியோவை அஜீஸ் பண்ண டிவிகாரவுக ட்ரை பண்ணாமயா இருந்திருப்பாய்ங்க. ஒரு ஸ்டேஜ்ல மந்திர ஜெபம் போதும்னு நினைச்சு எந்திரிச்சிட்டன். அடுத்த செகண்ட் வீடியோ ரன் ஆகி ஆடியோவோட கை கோர்த்துக்கிட்டுது.

விட்டலாச்சார்யா ஓவர். இப்ப பாபம் பசிவாடு சினிமாவுக்கு வந்துரலாம். அதுல பையன் அப்பா அம்மாவை பிரிஞ்சுர்ரான்.அவனை பாலைவனத்துல அலைய விட்டு தாய்குலத்தை தியேட்டருக்குள்ள நாய் கூட்டத்தையே கூப்பிடறாப்ல செய்திருப்பாரு டைரக்டரு ( அதாய்ங்க உச்சு கொட்டறது)

அப்படி அவன் தாயை பிரிஞ்சு அல்லாடறப்ப ஒரு பாட்டுபாடுதான். அந்த பாட்டோட வரிகளையும் அதுக்கான பொருளையும் தரேன்.

இங்கன அம்மான்னு வர்ர இடத்துல எல்லாம் ஆத்தாளை மெமரி பண்ணிக்கங்க. எப்படி பச்சக்குனு பொருந்துது பாருங்க.

//அம்மா நின்னு சூடாலி அம்மா நான்னனு சூடாலி
நான்னக்கு முத்து இவ்வாலி நீ ஒடிலோ நித்துர போவாலி//

அம்மா ஒன்னை பார்க்கனும் – அம்மா அப்பாவை பார்க்கனும் –
அப்பாக்கு முத்தம் கொடுக்கனும். உன் மடியில துங்கிப்போயிரனும்

இந்த வரிகளை எங்கே பாடறான் ? பாலைவனத்துல. இவன் வந்த ஃப்ளைட்டு ஃபணால். கூட வந்த மாமன் டமால். கழுதைப்புலி ஒரு பக்கம். இந்த நிலையில அந்த பையனோட மைண்ட்ல ஒரே கான்செப்ட்.

அம்மா ஒன்னை பார்க்கனும் – அம்மா அப்பாவை பார்க்கனும் –
அப்பாக்கு முத்தம் கொடுக்கனும். உன் மடியில துங்கிப்போயிரனும்

இந்த உலகமும் ஒரு பாலைவனம் தான். நாமும் ஆத்தாளை டெம்ப்ரரியா பிரிஞ்சுதான் வந்திருக்கம். அவளை பார்த்துட்டா -அவள் மடியில இடம் கிடைக்கும். -ஆராமா தூங்கிபோயிரலாம்.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இந்த லட்சியம் இருக்கு? ஏன் இல்லை ?

//நின்னு சேரே தாரே லேதம்மா
நின்னு சூசே ஆசே லேதம்மா
இல்லு சேரே தாரே லேதம்மா
நின்னு சூசே ஆசே லேதம்மா//

உன்னை வந்தடைய வழியே இல்லேம்மா.
உன்னை பார்ப்பேங்கற நம்பிக்கையே இல்லேம்மா

வீடு சேர வழியே இல்லேம்மா
உன்னை பார்ப்பேங்கற நம்பிக்கையே இல்லேம்மா

இப்படி அந்த பையன் நிர்வாண உண்மைகளை பேசறான். ஆனால் நாட்ல என்ன நடக்குது? மருவத்தூர்ல ஒரு வாத்யாரு நான் தான் ஆத்தாங்கறாரு. இன் கம் டாக்ஸ் ரெய்டு வந்துட்டா அல்லாடறாரு. ஒரே தாய் ஒரே குலம்ங்கறாரு. தன் ஒரே குடும்பத்தை ரெண்டே ரெண்டு வாரிசுகளை ஒரே பாட்டையில நடத்த முடியாம தவிக்கிறாரு.திருமலைக்கோடியில ஒரு யூத்து நான் ஜூனியர் ஆத்தாங்கறாரு.

நம்ம ஆட்களும் ஒன்னை குறைஞ்சவுக கிடையாது. விளக்கு போட்டேன், பாவாடை சார்த்தினேன்னு சிலர், ஒரு வேளை சாப்பாட்டை மட்டும் விட்டுட்டு விரதமிருக்கேன்னு சிலர். இவன் ரெண்டு தாட்டி மேலதிகாரியோட சண்டை போட்டு சஸ்பெண்ட் ஆகியிருப்பான் .ரெண்டு தாட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிட்டே சிக்கியிருப்பான்.

ஆனா நாலு நாள் பக்திக்கே எனக்கு ப்ர்மோஷன் மட்டும் வரலேன்னு வை ஒன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிருவேங்கறான்.

ஆனால் அந்த பையன் -பையன்னு கூட சொல்லமுடியாது குழந்தை எவ்ள ஜென்யூனா, ஹானஸ்டா சொல்றான் பாருங்க

ஞானங்கறதே மறுபடி குழந்தையா மாறுவதுதான். குழந்தைக்குத்தான் உண்மை நமீதா தொப்புள் மாதிரி சடக்குனு ஃபோக்கஸ் ஆகும். நம்மை பார்வை தொப்புள்ள மாட்டின லோலாக்கு, ஜிகினா மேல சுத்தியடிச்சிக்கிட்டிருக்கும். ஆனா குழந்தை அய்யய்யே இந்த ஆன்டி பாரேன் ஷேம் ஷேமுங்கும்.

//நடவாலன்டே ஓப்பிக்க லேது
ஆகலி வேஸ்துந்தி//

நடக்கனும்னா சக்தி இல்லே. பசியெடுக்குது.

நெத்தியடி பாருங்க.. நானே கடவுள்னு சொல்லிக்கிட்ட சத்ய சாய்பாபா கூட சொன்னதில்லை.

நம்மையே எடுத்துக்கங்க. ஆத்தாளை நோக்கி நடக்கனும். ஆனால் இந்த பசி ஒன்னு வந்து டிஸ்டர்ப் பண்ணுது, பசின்னா உடல் பசி,வயிற்று பசி, புகழ் பசி ,பணப்பசி.ஏதோ ஒரு இழவு பசி .

அடுத்த வரிகளை பாருங்க..

//பலிகேந்துக்கு மனிஷே லேடு
நிலிசேந்துக்கு நீடே லேது
பாதக உந்தி பயமேஸ்துந்தி ப்ராணம் லாகேஸ்துந்தி//

பேச்சுக்கொடுக்க மன்சனே இல்லே
நிற்க நிழலே இல்லே
வலி எடுக்குது பயமா இருக்கு (வலியும் பயமும்) உயிரை சுண்டி இழுக்குது

இன்னைக்கு ஏதோ ஒரு இழவு லாட்டரியில ஒரு அம்பதாயிரம் மாட்டிக்கிச்சுன்னு வைங்க. யாருக்கு சொல்லலாம்னு ரோசிச்சா ஒவ்வொரு பேரா டெலிட் ஆயிட்டே வந்துரும்.

அவனா? வேணாம்பா இன்கம் டேக்ஸுக்கு மொட்டை கடுதாசி போட்டாலும் போட்டுருவான். இவனா ஊஹூம் பார்ட்டி கேட்பான். சரி அவன்/ ஊஹூம் ஆயிரம் ரெண்டாயிரம் கடன் கேட்டுருவான்.

மன்சங்க மஸ்தா கீறாய்ங்க. ஆனால் நம்பி பேச ஆருமில்லை. இந்த மாதிரி ஒரு நிலைய நாம எப்ப உணர்வோமோ? எப்போ ஆத்தாளை ரீச் ஆறதுதான் அல்ட்டிமேட் சொல்யுஷன்னு டிசைட் ஆகறமோ அப்பத்தேன் ஒர்க் அவுட்டு.

அதை விட்டுட்டு என்னை சுத்தி இருக்கிறவன்லாம் என் ஆளு – இந்த உலகமே என்னுதுன்னு இருந்துட்டா
மரணம்னு ஒன்னு வந்து கதவை தட்டறப்போ “வீட்ல யாருமில்லைப்பா”ன்னு ஏமாத்தமுடியாது.

மரணம்னா என்ன ? உடலை விட்டு உயிர் பிரியறது. இந்த மேட்டர்ல ஷார்ட் எக்ஸ்பீரியன்ஸாவது இருந்தா ஆராமா சாகலாம்.

இல்லேன்னா சாவை நினைச்சு – கண்ட கண்ட இழவையும் சாவோன்னு மதி மயங்கி பணத்தையும்,செக்ஸையும்,அதிகாரத்தையும் துரத்திக்கிட்டே கிடக்கவேண்டியதுதான். இந்த மாதிரியான வாழ்க்கை மரணத்தை விட கேவலமானது.

மரணத்தை உன்னிப்பா கவனிச்சு அப்பப்போ ஹலோ சொல்லிக்கினு இருந்தோம்னா அடடா இவன் மறுபடி மொக்கை போட கூப்பிடறான்யானுட்டு மரணம் ஜகா வாங்கிக்கினு போகும். அதைவிட்டுட்டு மரணத்தையே நினைக்காம வாழ்ந்துக்கிட்டிருந்தா மரணம் கனவுல வந்து ஹலோ சொன்னாலும் ஏ.சியை மீறி படுக்கை நனைஞ்சுரும். தைரிய சாலிகளுக்கு வியர்வையால பயந்தாங்கொள்ளிகளுக்கு உச்சாவால.

கோழை வாழ்வதே இல்லை – வீரன் சாவதே இல்லை. ( இதை சொன்னது கலைஞருங்கறது சோகம்) உண்மையான வீரம் மரணத்தை சந்திக்க ப்ரிப்பேர்டா இருக்கிறதுதான்.

நாம நம்ம ஈகோவை உசுரா நினைச்சு வாழறோம்.( ஓஷோ) ஈகோவை ரிப்ளேஸ் பண்ண முடிஞ்சா போதும் தேர்தல் அறிவிப்புக்கப்பாறம் தேர்தல் கமிஷன் மாதிரி ஆன்மா வேலைய துவக்கிரும். அது ஆக்டிவேட் ஆனப்பாறம் தான் அதுக்கு மரணமே இல்லேங்கற சின்ன உண்மை நமக்கு அனுபவமாகும்.

Advertisements

13 thoughts on “அவன் – அவள் -அது : 13

  vinoth said:
  May 17, 2011 at 4:18 am

  நன்றி தல…

  Thirumalaisamy said:
  May 17, 2011 at 4:18 am

  /// அவனா? வேணாம்பா இன்கம் டேக்ஸுக்கு மொட்டை கடுதாசி போட்டாலும் போட்டுருவான். இவனா ஊஹூம் பார்ட்டி கேட்பான். சரி அவன்/ ஊஹூம் ஆயிரம் ரெண்டாயிரம் கடன் கேட்டுருவான். ///

  அருமையான உதாரணம், சிரமம் பாக்காம இந்த ஈகோ க்கு ஒரு 10 உதாரனங்கள (பொதுவான செயல்கள் ) சொல்லி , அதற்க்கு மாற்று வழியும் சொன்னா உங்க வார்த்தைகள பின்பற்றும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் …
  எல்லாத்தையும் பாத்துக்குற ஆத்தாவ உள்ள வெச்சுகிட்டு இருக்கறதே தெரியாம , இருக்கற எல்லா மக்களுக்கும் ஆத்தா யாருன்னு புரிய வைக்க உங்களுடன் எங்களால் முடிந்ததை செய்ய எப்போதும் தயார் ( அதான் நெறையா சரக்கு வெச்சிருகீங்க ல …)!!!

   S Murugesan said:
   May 17, 2011 at 4:31 am

   திருமலை சாமி !
   பத்து உதாரணம் தானே ! ஓவர் கம் ஆக ரோசனை அம்புட்டுதானே.. ஒகே

    Thirumalaisamy said:
    May 17, 2011 at 5:35 am

    ஆவலுடன் காத்திருக்கிறோம் ….நன்றி !!!

  //விட்டலாச்சார்யா ஓவர்//

  என்ன இருந்தாலும் உங்களால “அம்மா பகவான்” மாதிரி வர முடியுமா தல….
  எங்க ஊருள்ள “சின்னம்மா” பகவான்,”பெரியம்மா” பகவான் அப்படின்னு நெறைய லோக்கல் பார்டிங்க நெறைய
  இருக்காங்க…..

  இப்ப பார்த்தீங்கன சின்ன வயசுல நமக்கு சொல்லி கொடுத்த வாத்தியார் பயலுக இருப்பாக…..நாம அப்படியே பய பக்தியோட இருப்போம்…..[இல்லனா சில லூசுக அடி பின்னி போடுமுல]
  அப்படியே ஒழுக்கம் ,கடமை ,கன்னியம் அப்படின்னு போதிப்பாங்க…..நாமலும் நமக்கு போதிக்கர வாத்தியார் பயல பெரிய ஹீரோ நு நெனச்சிட்டு இருப்போம்….

  காலம் கடந்து போகும்…
  ஒரு நா பார்த்தா பய புள்ள நமக்கு முன்னாடி ரோவுல ஷகிலா படம் பார்த்துட்டு உக்கார்ந்து இருக்கும்…
  அப்படி இல்லனா ….டாஸ்க்மாகுல…நமக்கு முன்னாடி சிக்கென் பிசுயோட கட்டிங் போட்டுட்டு உக்கார்ந்து இருக்கும்…

  ஹீரோ எல்லாம் ஜீரோ ஆகியே ஆகணும்

  ஜீரோ வாவே நம்மள காட்டிகிட்டா…..மறுபடியும் நம்மள யாரும் ஜீரோ ஆக்கா முடியாது …எவன் ஜீரோவோ அவன் தான் ஹீரோ…நம்ம தனி காட்டு ராஜா -ங்கர நல்லவரு மாதிரி 🙂

  இனி விசயத்துக்கு வரேன்…
  நானும் சின்ன வயசுல நாத்திகனாதான் இருந்தேன்…
  அப்புறம் கொஞ்சம் கொஞ்சாம ஆத்தா மேல பக்தி வர ஆரம்பிச்சுது…
  நான் அத்தாவ கும்பிட்டாலும்..சின்ன சின்ன நல்ல விஷயங்கள் நடந்தது…

  ஆனாலும் சமிப காலமா ஆத்தா டம்மி பீசு மாதிரி தான் எனக்கு தோணுது
  எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா அவன் தலயில் ஏறி கும்மி வெளையாடி …அவன் தலை விதியவே மாத்துவது போல ஆத்தா சொல்லும்..

  ஆத்தா வோட சக்தி எல்லாம் ஆநாகத சக்கரத்துக்கு கீழ தான் வேல செய்யும்..
  அதனால தான் மனுஷன் பணம் புகழ்-நு பேயா அலைய கீழ் நிலை சக்திய பயன் படுத்துறான்…
  ஜாதகத்துள்ள ஆத்தாவை குறிக்கர ராகு ரொம்ப நல்ல நெலையல இருந்தா அள்ளி கொடுக்கார….

  சில படத்துல பார்த்தாஆத்தா சிவன் நெஞ்சு மேல கால வச்சு மிதிச்சுட்டு ஆக்கரோசம இருக்கராபுள்ள இருக்கும்…
  உண்மையை ஈகோ இல்லமா பார்த்தா ஒரு விஷயம் புரிது…
  சிவன மாபெரும் சக்தியா உருவக படுதுனா …..ஆநாகத சக்கரத்துக்கு (நெஞ்சு) கீழ உள்ள சக்தி மிக்க ஆக்ரோசமாக (ஆத்தா) இருக்கும்…அதை தான் ஆத்தாவாக உருவகம் செய்து உள்ளனர்….
  சிவா ஆநாகத சக்கரத்துக்கு மேல உள்ள சக்தி….ஆத்தா ஆநாகத சக்கரத்துக்கு கீழ உள்ள சக்தி….

  ஆத்தா என்பது அலப்பர சக்தி …சிவா என்பது நிர்சலன சக்தி

  அதனால தான் சிவா நிர்சலனமா தியான நிலையில் படித்து கிடகுரார்…ஆத்தா சிவன் நெஞ்சு மேல (அநாகதா) நின்னு பிலிம் காட்டுரா….
  இது புரியாத சில அசடுக …சத்தி பெர்சு …சிவன் சிறுசுன்னு உளறதுக

  சில அசடுக …..சிவன் பாதி சக்தி பாதி என்றால் ….சிவன் சக்தி இரண்டும் பாதி பாதி உள்ளது போல படம் போடுகிறார்கள்..

  அப்புறம் ஆத்தா வழி விட்டா..சீக்கரமே சிவா வை பார்த்து புடலாம்…
  ஆத்தா நல்லா ஜாதகதுள்ள இருந்தா….நல்ல வீடு,வாகன வசதி ,நமிதா மாதிரி நல்ல பிகருங்க சீக்கிரம் மடியும்….வாழ்க்கை ஜக சோதியா இருக்கும்..அதனால ஈஸ்வர ஜோதிய அடைவது எளிது…

  அத்தா வழி விடலனா …செக்கு மாடு கணக்கா நமிதாவையே நெனைச்சு ஏங்க வேண்டியது தான் 🙂 🙂

   S Murugesan said:
   May 17, 2011 at 6:36 am

   தத்துவ தாண்டவராயன் !
   மத்த சாமிக்கெல்லாம் நீங்க சொல்ற தியரி ஒர்க் அவுட் ஆகுமோ என்னமோ? ஆனா ஆத்தாவை பொருத்தவரை கெரகம்,வாஸ்து எல்லாம் நை. ஆத்தாளுக்கு நல்ல புள்ளை,கெட்ட புள்ளைங்கற விதயசம்லாம் கிடையாது.

   இன்னம் சொல்லப்போனா கெட்டப்புள்ளைக்கு தேன் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ். டிக்கெட் இருக்கிறவன் -இல்லாதவன்லாம் கூட பால்கனில,பாக்ஸ்ல படம் பார்க்கத்தேன் விரும்பறான். ஆனா ஆத்தா தன்னோட புள்ளை/பக்தன் டிக்கெட் இல்லாம பாக்ஸ்ல படம் பார்த்து டிக்கெட் செக்கர் வரச்ச அவமானத்துக்குள்ளாக கூடாதுன்னுட்டு தன் சுருக்கு பையில இருக்கிற அஞ்சு பைசா பத்து பைசாவை எல்லாம் திரட்டி தரை டிக்கெட்டுக்காவது வழி பண்றாள்.

   என்னதான் ஆத்தா ஏற்படுத்தின விதின்னாலும் அவளும் அந்த விதிக்கு கட்டுப்பட்டு தான் நடக்கவேண்டியிருக்கு. ( பாக்யராஜ் தான் டைரக்டருன்னாலும் கேரக்டரைசேஷனை தன் ஒரிஜினாலிட்டிக்கு ஏத்தாப்ல பண்ணிக்கிட்டிருந்தவரை அவரோட படங்கள் சூப்பரா ஹிட்டடிச்சுக்கிட்டிருந்தது.

   அவரு தான் ஏற்படுத்திக்கிட்ட தன் விதியை மீறினப்ப என்னாச்சுன்னு நினைச்சுப்பாருங்க.

  R.Puratchimani said:
  May 17, 2011 at 9:28 am

  ஏம்பா சிவனுக்கும் சக்திக்கும் சண்டை மூட்டி விடறீங்க….ப்ரீயா விடுங்க..

  டவுசர் பாண்டி said:
  May 17, 2011 at 2:51 pm

  ரொம்ப டேங்சு நைனா. இன்னாத்துக்கு? சைட்டுல இம்புட்டுநாலா காணாமல் போன ஜாமாங்கள கண்டுபுடிச்சி சோகேசுல வெச்சதுக்கு. இன்னாங்கடா இது அதிசியமாகீது. நைனாவுக்கும் நமக்கும் லைப்புல நெரிய மேட்டரு டச்சிங்கு ஆகுது.

   S Murugesan said:
   May 17, 2011 at 3:00 pm

   பாண்டி!
   ஒரே லாலா கடையில அல்வா வாங்கி தின்னா ஒரே மாதிரி தானே பேதி புடுங்கிக்கும்

  viji said:
  May 17, 2011 at 3:33 pm

  uijila devi mathiri web site pakka sollathinga muttalkal ullagam fulla iruganga, pls, do not waste our time,

   S Murugesan said:
   May 17, 2011 at 5:18 pm

   விஜி அவர்களே,
   உங்கள் கருத்தும் தான் என் கருத்தும். அவரு பாவம் சனத்தை இர்ரிட்டேட் பண்ணியாச்சும் கவனம் கவர நினைக்கிறார். அவரோட “ஸ்கெட்ச்”தெரியாம நானும் ரெண்டு தபா ஸ்பான்டேனியஸா ரெஸ்பாண்ட் ஆகி அப்பாறம் நாக்கை கடிச்சுக்கிட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s