ஜெ அரியணை ஏறும் நேரம் ஏறுமுகம்தானா? : இராச.புரட்சிமணி

Posted on

முன்னுரை: (சித்தூர்.எஸ்.முருகேசன்)
நினைத்தேன் வந்தாய் நூறு வயதுன்னு ஒரு பாட்டிருக்கு.புரட்சிமணியோட பதிவை பார்த்ததுமே இந்த பாட்டுதேன் ஞா வந்தது. ஏன்னா இந்த மாதிரி ஒரு பதிவை நானே போடலாம்னு தான் இருந்தேன்.

ஆந்திராவுல எங்க சி.எம் ஒரு தூளான முகூர்த்தத்துல பதவியேற்க (கிண்டலுங்கோ) அதை கிழி கிழினு கிழிச்சு தெலுங்குல ஒரு பதிவு போட்டேன். சனம சிரிச்சாய்ங்க. இப்பம் அவரு பொழப்பு சிரிப்பா சிரிக்குது. ஆஜாத் வந்து ஆளை தூக்கப்போறாருன்னு பேச்சு வர்ர அளவுக்கு ஆயிருச்சு.

இப்போ இராச புரட்சிமணியோட பதிவுக்கு போயிரலாமா? (அடைப்பு குறிக்குள் என் கமெண்ட்ஸ் – சாரி மணி – இதுக்கெல்லாமும் பதிலுக்கு பதில் கொடுக்கிற கப்பாசிட்டி உங்களுக்கு இருக்கு. தூள் பண்ணுங்க)

ஜெ அவர்கள் பதினாறாம் தேதி பன்னிரண்டு மணிக்கு பதவி ஏற்கிறார் . இது நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜெ அவர்கள் சிம்ம லக்னத்தில் பதவி ஏற்கிறார், இந்த அரசும் அன்றே பதவி ஏற்பதாக கொள்ள வேண்டும்.
சிம்ம லக்கினம் அரசாங்கம் அதிகாரத்திற்கு பெயர் போனது. அந்த விதத்தில் இது அருமையான லக்னம்.
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் லக்னம் வலுப்பெற வேண்டும். அந்த விதத்தில் குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்திற்கு கிடைப்பது அருமையிலும் அருமை.

(லக்னத்துக்கு ரெண்டுல சனி கீறாரே – வாக்குறுதிகளோட கதி என்ன? )
அடுத்ததாக லக்னாதிபதி பத்தில் இருக்கின்றார். பத்து என்பது தொழில், பணிகளை குறிக்கும். இங்கே லக்னாதிபதி இருப்பதால் அரசாங்க பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று சொல்லலாம். கண்ணும் கருத்துமாக வேலைகள் நடக்கும் என்றும் சொல்லலாம்.

ஆறாம் அதிபதி சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் கஜானா காலி. கடன் வாங்கியே அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படலாம். வெளித்தொடர்புகளால் கடைசி நேரத்தில் நன்மை கிடைக்கலாம். வார்த்தைகளால் பலரை வருத்தெடுக்கலாம்.

செல்வுக்காரன் சந்திரன் மூன்றாம் வீட்டில், ஒன்னு சகோதரியால் இழப்பு ஏற்ப்படலாம் அல்லது சகோதரிக்கே இழப்பு ஏற்ப்படலாம். அரசின் தைரியமும் ஏற்ற இறக்கமுடன் காணப்படும். சுப கோள்களின் பார்வை ஒன்பதாம் வீட்டில் இருந்து கிடைப்பதால் சற்று ஆறுதல் தான்.

(இங்கே நான் முரண்படறேன் – 3 ல் விரயாதிபதி நின்றதால் சகோதிரியின் செல்வாக்கு செலவழிஞ்சு போயிரலாம்ல)

குருவும் நான்காம் அதிபதி சுக்கிரனும் அவர்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதால் வலிமையான தைரியம் பொருந்தியா அரசாக இருக்கும்.

(குரு சுக்கிர சேர்க்கை செமை வில்லங்கமுங்கோ – இதையும் பார்க்கனும்லா)

கூடவே அவர்களுக்கு தேவையானதை தந்திரத்தனமாக அடைய வைக்கலாம். இது மக்களுக்கு நல்லதா அல்லது அரசாங்கத்துக்கு மட்டுமே நல்லாதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சரி மக்கள் எப்படி இருப்பாங்கனு கேட்பது தெரியுது.

ஐந்தில் ராகு இருப்பது கொஞ்சம் சரியில்லை என்று சொன்னாலும் , அவர் லாப வீட்டில் இருக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் நன்மையே .

(அஞ்சுங்கறது பேர் புகழை காட்டற இடம் – இங்கன ராகு உள்ளதால திடீர் அவமானம் – கர்னாடக கோர்ட் கேஸு?- அவப்பேர் – கூட வந்து சேரலாம்)

மேலும் அதிபதியான குரு பாக்கிய வீட்டில் இருப்பதால் சகல பாக்கியங்களும் வந்து சேரும் .( அப்புறம் எவ்வளவு இலவசம் வரப்போகுது மிக்சி, மின் ஆட்டுக்கல், மின் விசிறி, மடிக்கணினி இத்யாதி இத்யாதி.)

குருவின் பார்வை ஐந்தாம் வீட்டில் படுவதால் மக்களுக்கு கூடுதல் நன்மையே.
எந்த ஜாதி எந்த மதத்துக்கு நன்மை தீமைனு சொல்ல முடியுமான்னு நீங்க கேட்பது தெரியுது.

ஐந்து மற்றும் பதினொன்றில் ராகு கேது இருப்பதால் இஸ்லாம் மற்றும் கிருஸ்த்துவ மதத்தினருக்கு லாபம் நிறைய கிடைக்கலாம்.

(குரு இந்துமதத்தை காட்டும் கிரகம் – அதனால இந்துத்வா வாதிகளுக்கே அனுகூலம் நடக்கும் -ஆனா குருவுக்கு அஷ்டமாதிபத்யமும் உள்ளதால – தொலை தூர தொடர்பு – ஐ மீன் தில்லி -பாதிக்கப்படலாம்- இப்பமே டீ பார்ட்டிக்கு நை ன்னுட்டாய்ங்களாமே – அய்யர் மாருங்க கோவில் பிரசாதத்தோட க்யூ கட்டியாச்சு -இவிகல்லாம் கடந்த 5 வருசம் எங்கன இருந்தாய்ங்கன்னு அம்மா ரோசிச்சு பார்க்க மாட்டாய்ங்க – அஞ்சுல ராகு கீறாரே -மறதி தேன் . ராகு சரியில்லாத காரணத்தால பிற மதத்தினரின் வெறுப்புக்காளாகலாம்- ஆளான பிற்பாடு கேது 11லருந்து ஞானத்தை கொடுப்பாரு)

தலித் இனத்தவருக்கு நிறைய குடும்ப உபயோக பொருட்கள் கிடைக்கும் .(இரண்டில் சனி அதான்.)

மற்ற இனத்தவருக்கு கல்வி, புதிய வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க ஊக்கம் இவற்றின் மூலம் நன்மை கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கும் இது சற்று அனுகூல அரசாகவே அமையும்.

(ஆன்மீக வாதின்னு ஏன் மடிக்கிறிங்க – இந்து/பிராமண வர்கங்களுக்குனு சொல்லலாமே- அட 11ல உள்ள கேதுவை வச்சு சொல்றிங்களா அது சரி -)

அப்படி இப்படி சில சமாச்சாரங்கள் இருந்தாலும் இவ்வாட்சி நல்லாட்சியாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. அப்புறம் எல்லாம் இறைவன் செயல்.

(செமர்த்தியா ஜகா வாங்கறிங்க – இதுவும் தேவைதேன் -இல்லாட்டி நம்மை மாதிரி மொக்கையாக வேண்டி வந்துரும்)

Advertisements

22 thoughts on “ஜெ அரியணை ஏறும் நேரம் ஏறுமுகம்தானா? : இராச.புரட்சிமணி

  R.Puratchimani said:
  May 15, 2011 at 7:24 pm

  சார் தங்களுக்கான பதில்…அனைத்திற்கும் உங்களுடைய பதிலும் தேவை…..

  //(லக்னத்துக்கு ரெண்டுல சனி கீறாரே – வாக்குறுதிகளோட கதி என்ன? )//
  சார் இந்த வரியிலிருந்து இரண்டாவது பத்திய பாருங்க…..நீங்க வேற ஏதாவது நினச்சா சாரி எனக்கு தெரியல நீங்களே சொல்லிடுங்க.

  //(இங்கே நான் முரண்படறேன் – 3 ல் விரயாதிபதி நின்றதால் சகோதிரியின் செல்வாக்கு செலவழிஞ்சு போயிரலாம்ல)//
  சார் இதைதான் நான் ” சகோதரிக்கே இழப்பு ஏற்ப்படலாம்” அப்படின்னு சொல்லி இருக்கேன் சரியா?

  //(குரு சுக்கிர சேர்க்கை செமை வில்லங்கமுங்கோ – இதையும் பார்க்கனும்லா)
  மேலோட்ட பார்வை தான் சார் அதிகமா ஆராய்ச்சி செய்யல…பிராமணர்களுக்கோ அல்லது மக்களுக்கோ வேலை சம்பந்தமா ஏதுனும் “பயங்கர” உத்தரவு பிறப்பிக்கப்படலாம்னு நினைக்கிறேன். நீங்களும் ஒரு பதிவு போடுங்க சார்….பயனுள்ளதா இருக்கும்.

  //(அஞ்சுங்கறது பேர் புகழை காட்டற இடம் – இங்கன ராகு உள்ளதால திடீர் அவமானம் – கர்னாடக கோர்ட் கேஸு?- அவப்பேர் – கூட வந்து சேரலாம்)//
  வரலாம்… வந்தாலும் மக்கள் அத சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்…(மேல் மட்டத்தில் இருக்கும் “அவாள்” அத தடுத்து கூட நிறுத்தலாம்)

  //(குரு இந்துமதத்தை காட்டும் கிரகம் – அதனால இந்துத்வா வாதிகளுக்கே அனுகூலம் நடக்கும் -ஆனா குருவுக்கு அஷ்டமாதிபத்யமும் உள்ளதால – தொலை தூர தொடர்பு – ஐ மீன் தில்லி -பாதிக்கப்படலாம்- இப்பமே டீ பார்ட்டிக்கு நை ன்னுட்டாய்ங்களாமே – அய்யர் மாருங்க கோவில் பிரசாதத்தோட க்யூ கட்டியாச்சு -இவிகல்லாம் கடந்த 5 வருசம் எங்கன இருந்தாய்ங்கன்னு அம்மா ரோசிச்சு பார்க்க மாட்டாய்ங்க – அஞ்சுல ராகு கீறாரே -மறதி தேன் . ராகு சரியில்லாத காரணத்தால பிற மதத்தினரின் வெறுப்புக்காளாகலாம்- ஆளான பிற்பாடு கேது 11லருந்து ஞானத்தை கொடுப்பாரு)//

  இந்த தடவ இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருப்பாங்கனு நினைக்கிறேன் …பூர்வ ஜென்ம சாரி கடந்த ஆட்சி கொஞ்சம் அறிவா கொடுக்கலாம்…அல்லது நீங்கள் சொன்னதும் நடக்கலாம்.

  //(ஆன்மீக வாதின்னு ஏன் மடிக்கிறிங்க – இந்து/பிராமண வர்கங்களுக்குனு சொல்லலாமே- அட 11ல உள்ள கேதுவை வச்சு சொல்றிங்களா அது சரி -)//
  சார் நம்ம ஜாதிய விட்டு கொடுத்துட முடியுங்களா…ஆன்மீகவாதி ஜாதின்னு சொல்றேன்.

  //(செமர்த்தியா ஜகா வாங்கறிங்க – இதுவும் தேவைதேன் -இல்லாட்டி நம்மை மாதிரி மொக்கையாக வேண்டி வந்துரும்)//

  ஹா ஹா ஹா

  Sudharsan said:
  May 15, 2011 at 7:49 pm

  What is the fate of D.M.K in coming days?

   vinoth said:
   May 16, 2011 at 5:30 am

   தல சொன்னார் கேது தசைன்னு..
   கேது ன்னா போலிஸ் ஸ்டசன் கோர்ட்டு செயில் ஆசுப்பத்திரி…
   இது தான் திமுக வின் விதியா இருக்கும்னு நினைக்கறேன்.

  வணக்கம் சார், இப்பதிவை புரட்சிமணியாரின் பிளாகரிலேயே வாசித்தோம்..
  இங்கு அதை மேலும் மெருகேற்றியிருக்கிறீர்கள்.. அதான் தலைங்கிறது ?

  எப்படியோ நாடும் நாமும் நலமடைந்தால் சரி..

  vinoth said:
  May 16, 2011 at 10:57 am

  பார்க்க…
  http://classroom2007.blogspot.com/2011/05/astrology_16.html

  15.11.2011 அன்று அம்மாவைப் பிடித்திருந்த ஏழரைச் சனியும் பூரணமாக விலகுகிறது.

  24.11.2011 ஆம் தேதியன்று ராகு திசை முடிந்து, அவருக்கு குரு திசை ஆரம்பம். மிதுன லக்கினக்காரரான அவருடைய ஜாதகத்திற்கு 7, மற்றும் 10ம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான், 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார். இந்த அமைப்பு மிகவும் விசேசமானது. தன்னுடைய தசையில் அவர் அம்மாவிற்கு செல்வாக்கு, புகழ், இன்னும் பெரிய பதவிகளைப் பெற்றுத்தரவுள்ளார். பொறுத்திருந்து பாருங்கள்

  குழப்பமா இருக்கு ஜீ .. பாருங்க…

   S Murugesan said:
   May 16, 2011 at 1:01 pm

   வினோத் ஜீ,
   இது அவரோட வெர்சன். நம்ம வெர்சன் என்னன்னா குரு மிதுன லக்னத்துக்கு பாவி. இவர் பலமிழந்தா யோகம். இவரா ஆட்சி பெற்றிருக்கிறார். இவர் மட்டும் ஃப்ரூட் ஃபுல்லா இருந்திருந்தா அருமையான மணவாழ்க்கை அமைஞ்சிருக்கனுமே. உ.பி.ச வால பெரும் புகழும் கிடைச்சிருக்கனுமே.ஆக குரு டப்பாஸுதேன்.

   இதன் படி பார்த்தா குரு தசை முழுக்க கெடுக்கனுங்கறதால -சுய புக்தியான குரு புக்தி தேன் ஒர்க் அவுட் ஆகும். சனி புக்தி முதல் பாதிலயே டங்குவார் அறுந்துரும்.

   ராகு தசை முடியுது -ஏழரை சனி முடியுது எல்லாம் ஓகேதான். அது முடியறவரை தாக்கு பிடிக்கனும்லா?

   அங்கட்லோ அன்னி உந்தி அல்லுடி நோட்லோ சனி உந்தி – கடையில எல்லாம் இருக்கு. (கடையில உட்கார்ந்திருக்கிற) மாப்பிள்ளை வாய்ல சனி உட்கார்ந்திருக்காரு(அப்பாறம் வியாபாரம் எப்படி நல்லா நடக்கும்)ங்கற நிலைமைதான் அம்மாவுது.

   அடக்கி வாசிச்சு சுய நலம் -காழ்ப்பு -ஈகோ விடுத்து மானில நலனுக்காக அல்லாரோடயும் கை கோர்த்துக்கிட்டு மனித சங்கிலி கணக்கா ஒர்க் அவுட் பண்ணா அல்லாரோட கிரக பலமும் வேலை செய்யும்.

   நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு போனா ஆப்புதேன்

  vinoth said:
  May 16, 2011 at 10:57 am

  அம்மாவின் சக்கரம்
  http://tinyurl.com/5s75ken

  Mani said:
  May 16, 2011 at 11:44 am

  வினோத்ஜீ ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். தனிநபர்களுடைய ஜாதகங்களை வைத்து மாநிலத்திற்கு யார் முதலமைச்சர் என்று கணிப்பது எப்படி சரியாக வரும். உங்களைப் போல் என்னைப்போல் தனிநபர்களுக்கு தான் ஜாதகத்தை வைத்து பலன்கள் சொல்லலாம். அப்படியே ஜெயலலிதா ஜாதகத்தை வைத்து அவருக்கு நடக்கும், நடக்க போகும் பலன்களை சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆவார் என்று எப்படி சொல்ல முடியும்.

  ஒரு வாதத்திற்கு என்றே வைத்துக் கொள்வோம். கலைஞர் ஜாதகத்தில் எந்த ஒரு மாற்றமும் அதாவது தசா புக்தி படி மாற்றம் வரவில்லை. மேலும் அவருக்கு யோகத்தை தந்த தந்து கொண்டிருக்கின்ற சுக்கிரன் தசா சந்திரன் புக்தி தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் பதவியிழக்கிறார் ஜெயா பதவியேற்கிறார் என்றால் என்ன பொருள். கலைஞரை விட ஜெயாவிற்கு யோகம் என்றா?. அப்படியானால் ஜெயாவிற்கு இவ்வளவு நாட்களாக இந்த யோகம் ஏன் வேலை செய்யவில்லை?. கிரகங்கள் பலன்களை செய்வதென்றால் தனது தசா புக்தி காலம் தொடங்கியவுடனே செய்ய வேண்டியது தானே. ஏன் செய்யவில்லை? தேர்தல் வரவில்லை என்பதாலா? கிரகங்கள் தேர்தல் வரை பார்த்து தான் பலன்களை செய்யுமா? இப்படியெல்லாம் பலன்களை எழுத ஆரம்பித்தால் ஜெயலலிதா ஜாதகத்தை விட தமிழ்நாட்டில் எவ்வளவு யோகமான ஜாதகங்கள் இருக்கும். அவர்கள் ஏன் முதலமைச்சர் ஆக முடியவில்லை? அத்தனை பேர்களுடைய ஜாதங்களை நம்மால் அலசி இவர்தான் யோக ஜாதகம், இவர்தான் முதலமைச்சர் என்று தேர்தல் போல் அலச வேண்டியது தான். குறைந்த பட்சம் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களின் ஜாதகங்களையும் அலச வேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார்வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் அல்லவா?

  சரி நீங்கள் என்ன தான் கூற வருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

  பொதுவாக மாநிலத்திற்கு, நாட்டிற்கு தனிப்பட்டவர்களது ஜாதகத்தை வைத்து பலன்கள் கூறுவது என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. அதற்கென ஜோதிடத்தில் Mundane Astrology என்ற பிரிவு உள்ளது. அதன்படி கணக்கிட வேண்டும் என்பது எனது அபிப்ராயம். தல என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

   S Murugesan said:
   May 16, 2011 at 12:52 pm

   மணி சார்,
   உங்க கருத்தை நான் ஏற்கலை.தேர்தல் வரலைன்னு கிரகம் வேலைய துவங்காம இருக்குமா? 2004 ல சந்திர பாபு ஏன் ஒரு வருஷம் முன் கூட்டி தேர்தலுக்கு போகனும்?

   புக்திக்குள்ளயே அந்தரங்கள் உண்டு. அதுல தாத்தா பல்பு வாங்கியிருப்பாரு. சுக்கிரன் பாதகாதிபதி -சந்திரன் பாதகஸ்தானத்துல உட்கார்ந்தாரு.

   தாத்தா என்ன மயிலாசனத்துலயா உட்கார்ந்த்ருந்தாரு? பாவம்.. சுக்கிரன்னா பெண்கள். அவருதா கடகலக்னம். உமன் தான் எமன்.

   யோக ஜாதகத்துல பிறந்தவுக மஸ்தா பேரு இருப்பாய்ங்க கரெக்டு.( நம்ம கணக்குப்படி ஜெ அமைப்போட இன்னம் 479 பேர் இருப்பாய்ங்க) ஆனால் அவிக ஜெ சந்திச்ச சவால்களை சந்திக்காம சகா வாங்கி போயிருப்பாய்ங்க.

   இங்கே தனி நபர்களை வச்சு கணிக்க காரணம் நம்ம நாட்ல உள்ளது தனி நபர் வழிபாடுதேன். ஜஸ்ட் சரிஸ்மா. ( கரிஷ்மா) அப்ப தனி நபர் ஜாதகம் தானே ஒர்க் அவுட் ஆகும்.

   கிருமி said:
   May 16, 2011 at 2:49 pm

   //பொதுவாக மாநிலத்திற்கு, நாட்டிற்கு தனிப்பட்டவர்களது ஜாதகத்தை வைத்து பலன்கள் கூறுவது என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. //

   எனக்கும் அப்படியே.

  //சரி நீங்கள் என்ன தான் கூற வருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?//

  டும் டும் டும் …நல்ல காலம் பொறக்குது …நல்ல காலம் பொறக்குது
  ஜெக்கம்மா குறி சொல்ல வர்றா….ஜெக்கம்மா குறி சொல்ல வர்றா….

  ஜப்பான்-ல சுனாமி வந்து 1 லச்சம் பேரு செத்து போனாங்களே….அப்போ எல்லோரும் சாவனுமுனு அவுங்க அவுங்க ஜாதகத்துல நவகிரகங்கள் சொல்லுச்சா..?

  அமெரிக்கவுல பிளைட் உட்டு மோத விட்ட அப்ப யோக திசை நடந்தவன் எல்லாம் பொழைச்சு கிட்டனா?

  ராசி மண்டலதுள்ள பூமி ஒரு சின்ன பந்து மாதிரி தானே ….சிவன் மாதிரி யோக சக்தி மிக்கவன் எட்டி ஒரு ஒதை குடுத்தா சூரிய மண்டலத்த விட்டு விலகி போய் தொலைஞ்சி போய் புடும் 🙂

  எல்லாத்துக்கும் கட்டுன புது பொண்டாட்டி கணக்கா ஜாதகத்தையே கட்டிகிட்டு அலுவாதிங்க அப்பு…
  அப்புறம் ஜெக்கம்மா நான் எதுக்கு இருக்கறேன்??

  ஓம் நமீதாய நமக…ஒசாமா…ஒபாமா சுலாக
  ஓம் நமீதாய நமக…ஒசாமா…ஒபாமா சுலாக

  ஜெய் ஜெக்கம்மா ஜெய் ஜெக்கம்மா 🙂 🙂

   Mani said:
   May 16, 2011 at 4:54 pm

   ஆகா வந்துட்டான்யா வந்துட்டான். அடி ஆத்தீ, வாப்பா மவ(ராசா), அவனா நீயி. அந்த தாயீ நமீமீமீமீ…….தா உங்க பேட்டைல சவுக்கியமா. பாவம் பா அத உட்ருபா!

  கிருமி said:
  May 16, 2011 at 2:59 pm

  இது யார் ஜாதகத்தை வச்சி அலசினது. ஜெ.ஜாதகமா? இல்ல பதவியேற்ற நேர ஜாதகமா? பதவி ஏற்ற நேர ஜாதகம்னா சகோதரி என்ன கணக்கு? ஜெ.வோட சொந்த சகோதரி பத்தி சொல்றீங்களா இல்ல சசிகலா பத்தி சொல்றீங்களா? சசிகலா பத்தி சொல்லணும்னா ஏன் சகோதர ஸ்தானத்த பாக்கறீங்க? கூட்டாளி ஸ்தானத்தை இல்ல பாக்கணும்?
  எந்த ஜாதகத்தை அலசினாலும் அத தயவு செய்து ஒரு jpg கோப்பா உள்ள சொருகி விட்டா புண்ணியமா போகும், இல்லன்னா குழப்பம் தான் மிஞ்சும்.

   Mani said:
   May 16, 2011 at 3:21 pm

   கிருமி அண்ணே! இது பதவியேற்ற ஜாதகத்திற்கு பலன்களாம். யப்பா எத்தனை எத்தனை ஜாதங்கள், பலன்கள் ஸ்ஸ்….. அப்பப்பா தலையை சுத்துடா சாமியோவ். எல்லாம் ஒரு குன்ஸ்தான். எதுக்கும் உதவும் படித்து வையுங்கள்.

   ////எந்த ஜாதகத்தை அலசினாலும் அத தயவு செய்து ஒரு jpg கோப்பா உள்ள சொருகி விட்டா புண்ணியமா போகும், இல்லன்னா குழப்பம் தான் மிஞ்சும்.////

   இது இருந்தா நம்ப ஜோதிடர்கள் ஒரு அலசு அலசிடலாம்லே.

    S Murugesan said:
    May 16, 2011 at 4:27 pm

    மணி !
    இது நல்ல யோசனை இனி அனைவரும் இதை பின்பற்றுவோம்

   டவுசர் பாண்டி said:
   May 17, 2011 at 3:14 pm

   இதுக்குத்தேன் கே.பி மெத்தடுல வெட இருக்கே. உடனுக்குடன் சூடாகவும் சுவையாகவும் பதில் கிடைக்கும். ஒங்க வேல கேள்விய கேட்டுப்புட்டு 249 குள்ள ஒரு நம்பர சொல்லிக்கினு போய்ரவேண்டியதுதேன். இன்ஸ்டன்ட் பதில். கேபி மொற பத்தி நீங்கல்லாம் படிச்சிருப்பீங்க அப்டிதானே? படிக்காதவுக கைய தூக்குங்க?

  கிருமி said:
  May 16, 2011 at 3:35 pm

  // கிருமி அண்ணே! இது பதவியேற்ற ஜாதகத்திற்கு பலன்களாம். //
  அப்டியா விவகாரம், சரி தான். அப்போ சகோதர ஸ்தானத்துக்கு சொன்ன பலன் பக்கத்து மானில ஆட்சிய குறிக்குமா? அப்போ எந்த மானிலம்?

  (பேரண்ட் ஜாதகம் எது மன்மோகன் சிங் பதவி ஏற்ற ஜாதகமா? அப்போ பாண்டிச்சேரி, சண்டிகார் மாதிரி யூனியன் பிரதேசம் எல்லாம் தத்து பிள்ளை கணக்கா, இல்ல சவலைப்பிள்ளை கணக்கா?)

   டவுசர் பாண்டி said:
   May 17, 2011 at 3:18 pm

   நம்ம கான்செப்ட்படி ரபேல்’ஸ் ஒலக சோசியம், கே.பி சிஸ்டம் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி தொட்டுக்க நம்ம தலமொர சொசியத்தையும் எடுத்தீங்கன்னா துல்லியமா பதில் கெடைக்கும்.

  R.Puratchimani said:
  May 16, 2011 at 7:21 pm

  //இது யார் ஜாதகத்தை வச்சி அலசினது. ஜெ.ஜாதகமா? இல்ல பதவியேற்ற நேர ஜாதகமா? பதவி ஏற்ற நேர ஜாதகம்னா சகோதரி என்ன கணக்கு? ஜெ.வோட சொந்த சகோதரி பத்தி சொல்றீங்களா இல்ல சசிகலா பத்தி சொல்றீங்களா? சசிகலா பத்தி சொல்லணும்னா ஏன் சகோதர ஸ்தானத்த பாக்கறீங்க? கூட்டாளி ஸ்தானத்தை இல்ல பாக்கணும்//

  கிருமி பாய்ண்ட கப்புன்னு புடிசிடீங்க…..பதிவிட்டதுக்கு அப்புறம் தான் நான் இதபத்தி அதிகமா யோசிச்சேன்…
  உண்மைய சொல்லனும்னா ஒவ்வொரு விஷயத்துக்கும் ஜாதகம் பார்ப்பது எந்த அளவுக்கு சரியா வரும்கிறது தெரியல …நம்ம பாசு எப்படியும் இத பத்தி ஒரு பதிவ போடுவாரு (கனிமொழி டெல்லி போனதுக்கே பதிவு போட்டாரு) அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் வில்யாடலாம்னு தான் இந்த விபரீத விளையாட்டு…. …

  //ஜெ அவர்கள் சிம்ம லக்னத்தில் பதவி ஏற்கிறார், இந்த அரசும் அன்றே பதவி ஏற்பதாக கொள்ள வேண்டும்.// அதாவது அதே லக்னம்…இதை இரண்டு விதமாக அணுகலாம்.
  ஒன்று..இதை வைத்து ஜெ அவர்களின் தனிப்பட்ட செயல் பாடு எப்படி இருக்கும்….(சகோதரின்னு சொன்னது இவிங்கள மின்ட்ல வச்சிக்கிட்டுதான்…
  இரண்டாவது….அரசின் செயல் பாடு எப்படி இருக்கும்

  ////இது யார் ஜாதகத்தை வச்சி அலசினது. ஜெ.ஜாதகமா? இல்ல பதவியேற்ற நேர ஜாதகமா? //
  ஜெ பதவியேற்ற நேர ஜாதகம்….

  // ஜெ.வோட சொந்த சகோதரி பத்தி சொல்றீங்களா இல்ல சசிகலா பத்தி சொல்றீங்களா? சசிகலா பத்தி சொல்லணும்னா ஏன் சகோதர ஸ்தானத்த பாக்கறீங்க? கூட்டாளி ஸ்தானத்தை இல்ல பாக்கணும்?

  யாருடைய சாதகமா இருந்தாலும்..எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும்….ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ள காரகத்துவம் மாறுவதில்லை……மாறக்கூடாது…..மாறாது என்றே நினைக்கின்றேன்.(அப்படி இப்படி கொஞ்சம் ட்விஸ்ட் பண்ணிக்கணும் அவ்வளவுதான்)

  மனசார நீங்க ஒருத்தர சகோதிரியா ஏத்துக்கிட்டா அது மூன்றாம் வீடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கணும்….அதேபோல் தான் எல்லா உறவுகளும்….தத்து பிள்ளைக்கு ஐந்தாம் வீடு தானே பாபிங்க?….ஏதோ எனக்கு தோன்றியது…நீங்கள் விமர்சித்து நான் கற்றுக்கொள்வதே நோக்கம்…நீங்கள் ஏதேனும் விளக்கம் தந்தாள் கற்றுக்கொள்வேன்.

  கிருமி said:
  May 17, 2011 at 4:51 am

  //யாருடைய சாதகமா இருந்தாலும்..எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும்….ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ள காரகத்துவம் மாறுவதில்லை //

  ஓ.கே.

  //மனசார நீங்க ஒருத்தர சகோதிரியா ஏத்துக்கிட்டா அது மூன்றாம் வீடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கணும் //

  முதல்ல சொன்னது ஓ.கே.னா இது இடிக்குதே. சகோதர ஸ்தானம் மூணு, பதினொண்ணுன்னா, முதல்ல சொன்ன பாயிண்ட் படி இங்கன இடிக்குமே. கூடப் பொறந்தா தான் சகோதரன் சகோதரி. இல்ல அவங்க அப்பா அம்மா மூலமா சகோதரன் கிடைச்சிருக்கணும் (சுவீகாரம் மூலமா). இது சேத்துக்கிட்டது, இல்ல ஒட்டிக்கிட்டது, அப்போ கூட்டாளி தானே?
  உடன் பிறவா சகோதரி டயலாக்கெல்லாம் சோசியத்துல எடுபடாது. நாமளா பாத்து அதையும் இதையும் சம்பந்தப்படுத்தி சொருகுறது தான் இதெல்லாம்.

  இதுக்கு மேல இது பத்தி நான் விவாதிக்கல, ஆள விடுங்க.

   R.Puratchimani said:
   May 17, 2011 at 9:24 am

   இந்த மேட்டர ப்ரீயா விட்டுடுவோம்……கிருமி…..நானும் புல்லி கான்பிடேன்ட் இல்ல…இதற்கான உண்மையான விடை சீக்கிரம் கிடைக்கும்

  டவுசர் பாண்டி said:
  May 17, 2011 at 3:06 pm

  புரட்சி மணியண்ணே,
  பதிவு சூப்பருனே. தொடர்ந்து இந்தமாரி பதிவ போட்டு அசத்துங்கனே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s