ஜெ கலைஞர் சந்திப்பு

Posted on

அண்ணே வணக்கம்ணே,

அம்மா செயிச்சாச்சு. சினிமா பாஷையில சொன்னா ரீ என்ட்ரி. இன்னம் டீப்பா சொன்னா 3 ஆவது டேக். எங்க ஊர்ல சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவை ஷூட் பண்ற டைரக்டர்ஸ் மொத டேக்கையே ஓகே பண்ணிருவாய்ங்களாம். இன்னாபா ரீசனுன்னா மொதல் டேக்ல என்ன பண்ணாரோ அதையே 60 டேக் வரை அப்படியே பண்ணுவாராம்.

அம்மா அப்படி இருக்கமாட்டாய்ங்கனு நம்பித்தேன் இந்த பதிவு. இன்னாபா ஏதோ அம்மா அரியணை ஏறுவாய்ங்கனு சோசியம் சொன்னே. அதேதோ பை மிஸ்டேக் மெட்டீரியலைஸ் ஆயிருச்சு. வேலைய பார்த்துக்கிட்டு போவயா சொம்மா நை நைன்னுக்கிட்டு சொதப்பறியேன்னு காண்டாயிராதிங்கண்ணா.

என்னைப்பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். திருடாம,பொய் பேசாம ,ஏமாத்தாம பணம் சம்பாதிக்க மஸ்தா வழி தெரியுங்கண்ணா. ஆனால் அல்லாம் ஃபணால். சோசியம் ஒன்னுதேன் சோறு போடுது. இது நமக்கு கில்ட்டிய கொடுக்குது.

தமிழ் நாட்டு சனங்க இதுவரை ஜோதிட ஆலோசனை கட்டணமா கொடுத்த காசை சொன்னா இன்கம் டாக்ஸ் காரவுக வந்துருவாய்ங்க.மாணாம். அதை என் அக்கவுண்ட்ல போட்டவுக என்னமோ ஜாதக பலன் கிடைச்சதும் கணக்கு நேராயிடுச்சுங்கறாய்ங்க.

ஆனால் என்னை பொருத்தவரை அந்த காசு பணம்லாம் கடன் மாதிரிதேன். பெத்த கடங்கறாய்ங்களே.அப்படி அந்த கடனை தீர்க்க புதுசா ஆள வர்ர அம்மாவுக்கு ஒரு சில சஜஷன்ஸ் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். சென்னை டு சித்தூர் டாக்சி வர எம்மா நேரமாகும்ணே?

இதுக்கும் சோசியத்துக்கும் இருக்கிற ஒரே தொடர்பு என்னன்னா இப்பம் நடக்கிற ராகு தசை -சந்திர புக்தியோட எஃபெக்டை குறைக்க முடியுங்கறதுதான். ( எஃபெக்ட் மீன்ஸ் ஆட்சிக்கு ஆப்பு)

இன்னைக்கு தமிழகம் உள்ள நிலையில – நிதி நிலையில ரொட்டீன் நிர்வாகத்தை கொண்டோ – இலவசங்களை கொடுத்தோ சனத்தை திருப்தி படுத்த முடியுங்கறதெல்லாம் சொம்மா பேச்சு. மக்களை ஒரு ட்ரான்ஸுக்கு கொண்டு போய் இதோ நான் இதெல்லாம் செய்யப்போறேன். இதுக்கு நீங்க ஒத்துழைச்சா நெஜமாலுமே நம்ம மானிலம் நெம்பர் ஒன்னாயிரும்னு ஒரு ப்ராஜக்டை ப்ரப்போஸ் பண்ணனும்.

அது நெஜமாலுமே அமலாயிருங்கற நம்பிக்கையை சனத்துல விதைக்கனும். நெஜமாலுமே அந்த ப்ராஜக்ட் நிறைவேற பதைக்கனும். அப்பத்தேன் சில்லறை பிரச்சினையெல்லாம் ப்ளர்ராயிரும். இல்லாட்டி டங்குவார் அறுந்துரும்.

அப்படியா கொத்த ப்ராஜக்ட் இன்னா ப்ராஜக்டுன்னு கேட்டா “தமிழக நதிகளின் இணைப்பு.” சேது சமுத்திர திட்டம் மாதிரி ஊறுகா போடாம படபடன்னு வேலைய ஆரம்பிக்கனும். இது இன்றைய நிதி நிலையில அசாத்தியம்ங்கறதால மத்திய அரசோட இணக்கமா நடந்துக்கிட்டாத்தான் இது சாத்தியம். ( அப்பப்போ டீ சாப்பிட கூப்டா போய் வந்துரனும்)

இந்த ப்ராஜக்ட்ல நீர் வழி போக்குவரத்தையும் சேர்த்துக்கிடனும்.முக்கியமா தமிழகத்தின் மேன் பவரை – மனித சக்தியை முழு மூச்சா டெப்ளாய் பண்ணனும்.சினிமாக்காரவுகளை கூப்டு பாசத்தலைவிக்கு பாராட்டு விழால்லாம் நடத்த சொல்லாம அவிகளோட ரசிகர்களை எல்லாம் இந்த ப்ராஜாக்ட்ல இண்டராக்ட் பண்ண சொல்லலாம்.தங்களோட சினிமாக்கள்ள இந்த திட்டத்தை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லலாம்.

இதனால என்னெல்லாம் லாபம்னு நான் சொல்ல ஆரம்பிச்சா நீங்க Alt+F4 அழுத்தி ஓடிப்போயிருவிங்க அதனால அம்பேல். இந்த மாதிரி ஹிஸ்டாரிக்கல் ப்ராஜக்டை ப்ரப்போஸ் பண்றதுக்கு மிந்தி அம்மா ஒரு சில வேலையெல்லாம் செய்து தன்னோட சின்சியாரிட்டியை – ஒரு மாற்றத்தை மக்களுக்கு காட்டியாகனும்.

உ.ம்:
1.உ.பி.ச அண்ட் கோவுடனான உறவை போயஸ் கார்டன்ல மட்டும் வச்சுக்கனும்.இன்னொரு மகாமகம்லாம் நடந்துரக்கூடாது.

2.தினசரி காலை ஒரு மணி நேரமாச்சும் பொதுமக்களை சந்திக்கனும். மனு வாங்கனும்.

3.தன்னோட விஜயங்களின் போது போக்குவரத்தை நிறுத்த கூடாது

4.கோடை காலம் தவிர கொடைக்கானல் விசிட் கூடவே கூடாது

5.தப்பு பண்ணலாம்.ஆனால் அது புதுசா இருக்கனும். பழைய தப்பை ரிப்பீட் பண்ண கூடாது

ப்ராஜக்டை அறிவிச்சு ஆவன செய்து 3 மாசத்துல வேலை துவங்கிரனும். இதனால என்னென்ன லாபம் -இதுக்கு எவ்ள செலவாகும். அதுக்கான நிதியாதாரங்களை எப்படி எல்லாம் ஏற்படுத்த வேண்டியிருக்குன்னு மக்களுக்கு விவரிக்கனும். இந்த மேட்டர்ல கலைஞரை அவிக வீட்டுக்கே போய் சந்திக்கனும். ஒத்துழைப்பு கொடுக்கச்சொல்லி கேட்கனும்.

அரசோட ஒட்டு மொத்த சக்தியும் ( அத்யாவசிய சேவைகள் தவிர) இந்தப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படனும். இதனால பொதுமக்கள் பாதிக்கப்படாம இருக்க முடிஞ்ச வரை அரசுத்துறைகள் எல்லாத்தயும் கணிணி மயமாக்கனும். எங்குள்ள பிரச்சினைகள் அங்கேயே தீர்வுகாணப்படனும்.

இதையெல்லாம் விரட்டி மிரட்டி செயல்படுத்த மாசாமாசம் மாவட்ட கலெக்டர்களோட வீடியோ கான்ஃப்ரன்ஸ் கூட நடத்தலாம். இன்னம் வேணம்னா மாசா மாசம் ஜெயா டிவிலயே டயல் யுவர் சி.எம் னு ஒரு ப்ரோக்ராம் கூட வைக்கலாம். முன்னறிவிப்பில்லாம அம்மா அரசு அலுவலகங்களை விசிட் செய்யலாம். (இதை எல்லாம் எங்க ஊர்ல சந்திரபாபு ஊரை ஏமாத்த செய்தாரு) நல்ல மேட்டர்தான். ஆனால் கெட்ட எண்ணத்தோட செய்தாரு.

இந்தியாவை பணக்கார நாடாக்கவே தீட்டப்பட்ட நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 திட்டத்தை அறியாதவுக ஆரும் கிடையாதுனு நினைக்கிறேன். இந்த்பேட்டை பக்கம் புதுசா ஒதுங்கினவுக கடேசில கொடுத்திருக்கிற தொடுப்பை க்ளிக் பண்ணி விவரம் தெரிஞ்சுக்கலாம். மேற்படி திட்டத்தை அமல் செய்ய தேவையான பைசாவை புரட்ட எக்கானமி பேக்கேஜ்னுட்டு ஒரு சில யோசனைகளை எப்பயோ தயாரிச்சேன்.அம்மா மேற்சொன்ன விதமா தன் மன மாற்றத்தை எக்சிபிட் பண்ணி -மக்களிடையே நம்பிக்கைய விதைச்சு சின்சியரா நதிகள் இணைப்பை மேற்கொள்வதாயிருந்தா மட்டும் இந்த யோசனைகளை ஃபாலோ பண்ணிக்கலாம். சொம்மா எடுத்தேன் கவுத்தேன்னுட்டு கவுருமென்டு செலவுக்குன்னு ஃபாலோ பண்ணா நாறிடும்.சனம் ரெபல் ஆயிருவாய்ங்க.

1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். உடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும். நமது மானிலத்தில் கிளைகள் இல்லாத வேற்று மானிலத்து தனியார் மருத்துவ மனைகளிலேயே நடக்கவேண்டும். புத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும். மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி. தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில் டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா!) பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை நிரப்ப வேண்டும். பி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.

2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல) அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை போய் சேர பிடிக்கும் நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும். இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.

3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45 நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.

4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை வைத்து எவன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.

5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும் மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.

6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள் தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.

7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)

9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம் தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.

10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

11. சாதா தந்தி,அவசர தந்தி போல 1 மணி முதல் 24 மணி நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா

12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா?)

13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.

14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)

15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.

16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.

17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை பிரிச்சு (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.

18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)

19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில் நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)

20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை. ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும். லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.

21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும். பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.

22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் கூடுதல் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு எதுவானாலும் இதான் ரூலு.

23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. கூடுதல் டாக்ஸ் கட்டு.

24.ஒரு படம் 100 நாள் ஓடினா அடிஷ்னல் டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)

25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள். 26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு

27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு நடத்தினா டாக்ஸு.

28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)

29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு. (அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)

30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை?) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)

31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் மேதாவிஸ் ,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.

32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.

33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.

34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.

35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.

36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்

37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.

38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.

39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.

40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.

41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.

42. வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.

43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, வன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .

44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும். ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே. டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.

45.துட்டு போனா …ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.

46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.

47. அம்மாதான் தில்லு துரைசானியாச்சே – கற்புபத்தி கருத்து சொன்ன குஷ்பூவுக்கே அடைக்கலம் கொடுத்தவுக ஆச்சே பாலியல் தொழிலாளிகளுக்கு போதுமான கவுன்சிலிங் கொடுத்து (எய்ட்ஸ் – பால்வினை நோய்கள் குறித்த) ஒர்க் ப்ர்மிட் தரலாம்.

48.முக்கியமான மேட்டரை உட்டுட்டன். டாஸ்மாக் மூலமா வர்ர வருமானத்துல “குடி” மகன்களுக்கு மனம், சிறு நீரகம்,கல்லீரல் தொடர்பான வியாதிகள் வந்தா ரிஸ்க் கவர் ஆகிற மாதிரி இன்ஷ்யூர் பண்ணலாம்.

எச்சரிக்கை:
இந்த யோசனைகளை அந்த காலத்துல எங்க சந்திர பாபுவுக்கு அனுப்ப அவர் பலதும் சுட்டுட்டாரு. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நான் எழுதி அனுப்பின பல யோசனைகள் இன்னைக்கு அமல்ல இருக்கு. இதெல்லாம் ந்டக்கிற விசயமான்னு மலைச்சுப்போயிராதிங்க.மனமிருந்தால் மார்கமுண்டு.

ஆரம்பத்தில் சொன்ன ஆ.இ.2000 திட்டம் குறித்த முழு விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க

26 thoughts on “ஜெ கலைஞர் சந்திப்பு

    swami said:
    May 16, 2011 at 1:58 am

    யோசனை நல்லா தான் இருக்கு. நடைமுறை படுத்த நீங்களே முதலமைச்சர் ஆனா தான் உண்டு!.

      கோதண்டராமன் said:
      May 16, 2011 at 2:18 am

      இந்த அபிஷ்டு அந்த நினைப்புலதான் மனநிலை சரியில்லாம அலைஞ்சிண்டு இருக்காள்.

        S Murugesan said:
        May 16, 2011 at 4:56 am

        அட இன்னொரு மன நல வைத்தியரா? வாங்க வாங்க.. டிரைவிங் லைசென்ஸுக்கு சைக்கியாட்ரிஸ்டு ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் அவசியம்னு கூட பாய்ண்ட் இருக்கு.

        கை நிறைய வேலை.. சா ஆஆஆஆஆஆஆஅப்புடுங்க..

      S Murugesan said:
      May 16, 2011 at 4:52 am

      ஸ்வாமி !
      மன்னிக்கனும். நேரிடை ஜன நாயகம் அமலாகி ஒரு தேசீய கட்சி (அதும் நமக்கு பிடிச்சிருக்கனும் – குறைஞ்ச பட்சம் அவிக வேறு வழியில்லாமயாச்சும் நம்மை சப்போர்ட் செய்யனும்) சார்பில் ஜனாதிபதி பதவி தவிர வேறு எதுக்கும் போட்டியிடற மாதிரி இல்லிங்க.

      அம்மாவுக்கே சொல்லிப்பாருங்க

        கோதண்டராமன் said:
        May 16, 2011 at 2:01 pm

        ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். ஊர்லதான் உன்னோட அட்டூழியம் தாங்கமுடியல்லன்னா இங்கயும் வந்து ஒபத்தரவம் பண்ணிண்டு இருக்கேழ். தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா. இதப்படிக்கிறவா எல்லாம் இந்த அச்சுபிச்சுவ தட்டிக்கேட்க்க மாட்டேளா? பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன். இந்த அபிஷ்டு வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா யாராவது ஒத்தாசை பண்ணுவேளா?

        S Murugesan said:
        May 16, 2011 at 4:33 pm

        கோதண்ட ராமண்ணே,
        திட்டறதாச்சும் சொந்தமா திட்டக்கூடாதா? ஸ்ரீனிவாச அய்யங்கார் ப்ளாக்லருந்து அப்படியே சுட்டு கட் பேஸ்ட் பண்ணியிருக்கிங்களே. ஹலோ ஸ்ரீனிவாச அய்யங்காரா? என்ன நீங்களே பதில் சொல்றிங்களா? வேணாங்க. நான் பார்த்துக்கிடறேன்

    Thirumurugan said:
    May 16, 2011 at 5:52 am

    ஸ்பெஷல் பவர் கனெக்சன் ஏற்கனவே இருக்கு , நம்ம விட்டுக்கு பக்கத்ல ஹோட்டல் சரவணபவன் இருக்கு, அவங்களுக்கு ஸ்பெஷல் கனெக்சன் கரண்டு கட் அகத்து, அவங்க ஐஸ்கிரீம் கம்பெனியில் கூட ஸ்பெஷல் கனெக்சன், அப்பறம் கூடவே வடபழனி முருகன் அந்த ஸ்பெஷல் பவர் கனெக்சன் அனுவபவிகிறார்

      S Murugesan said:
      May 16, 2011 at 7:04 am

      திருமுருகன் !
      அது ஆத்தரைஸ்டா? அன் ஆத்தரைஸ்டா? நாம ரெக்கமெண்ட் பண்றது ஆத்தரைஸ்ட் கனெக்சன்.அரசுக்கு வருவாய் அதிகரிக்க – மானிய பாரம் குறைக்க

    தலைவா ..

    எனக்கு தலை சுத்துது.. ஆமா இந்த மேட்டரையெல்லாம் எத்தனை நாளா எழுதி சேகரிச்சீங்க..

    நீங்க மக்கள் மீதும் நாட்டின் மீதும் வைத்துள்ள அன்பும் ஆர்வமும் இதனால் வெளிப்படுகிறது…

    ஆனால் இத்தனை விசயங்களையும் ஒரே டோசா கொடுத்தா தாங்காதுப்பா..
    ரோசிச்சு.. ரோசிச்சு சொல்லுப்பா..

    நன்றி..

      S Murugesan said:
      May 16, 2011 at 7:47 am

      ஜானகி ராமன்!
      இதெல்லாம் இன்னைக்கு ரோசிச்சதில்லை. 1997 நவம்பர்ல சந்திரபாபுவுக்கு ஆ.இ.2000 அனுப்பும்போதே திட்ட செலவுக்கு சில்ல்றை தேத்தறதுக்காக கொடுத்த பேக்கேஜ் இது. ஆனா எங்காளு திட்டத்தை விட்டுட்டு பேக்கேஜ்ல மட்டும் பல அம்சங்களை சுட ஆரம்பிச்சுட்டாரு

    Thirumalaisamy said:
    May 16, 2011 at 8:59 am

    அண்ணனுக்கு வணக்கம் …
    நல்ல யோசனைகள் , தெளிவான சிந்தனைகள். இந்த எண்ணங்கள் நிறைவு பெற நிச்சயம் ஆத்தா துணை இருப்பாள் ..

    //ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.//
    நீங்க குடிக்கிற பீடி கூட இந்த category-ல தானே வரும் தல 🙂

    அப்புறம்
    உங்க யோசனை எல்லாம் அப்படியே இன்னும் ஒரு 5 வருசத்துக்கு அட்டாளி( கொங்கு தமிழ் ,அந்த காலத்து Shelf )
    மேல போட்டு வையுங்க..
    ஆட்சிக்கு வந்து இருக்கறது ஆணவம் ….ஆணவம் நாம சொல்லி எப்பவுமே கேக்காது.[“அவா” சொன்னா கீது ஒருவேளை கேக்கும்]
    ஆணவம் நம்ம அடக்க பார்க்கும் ….ஆணவத்த அந்த ஆண்டவன் தான் அடக்குவான் 🙂
    ஆணவத்துக்கு அடுத்து நம்ம கருப்பு எம்.ஜி.ஆர் கீது வருவாரானு அலசி பாருங்க….
    அப்படியே உங்க ஜாதகத்துக்கும் அவரு ஜாதகத்துக்கும் பொருந்துமானு பாருங்க….
    எனக்கு தெரிஞ்சு அவரு கீது உங்க யோசனையை கேட்டு ..”ரமணா” படம் கணக்கா ஏதாவது பண்ண பார்ப்பாரு 🙂 🙂

      S Murugesan said:
      May 16, 2011 at 12:45 pm

      ராசா,
      ஸ்மோக்கிங் கூட நிப்பிள் காம்ப்ளெக்ஸாலதான் வருது. இல்லேங்கலை. நீங்க வேணா பாருங்க. நம்ம ஐடியாவுல நாலஞ்சாச்சும் அமலாகத்தான் போகுது. ஆனால் பிரதான ப்ராஜக்டை விட்டுட்டு ( நதிகள் இணைப்பு) மத்தது அமல் செய்தா ஒரு மண்ணும் உபயோகமில்லை.

      விசயகாந்த் தில்லில பார்ட்டி ஆஃபீஸ் ஓப்பன் பண்ண புதுசுல இதையெல்லாம் விவரமா அனுப்பினேன்.(தில்லி முகவரிக்கு) ‘அட்ரசீ நாட் ஃபவுண்டுன்னுட்டு ரிட்டர்ன் ஆயிருச்சு.

      விசயகாந்தை விட ஜெ வே பெட்டர். ( சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுது) வி.கா எதையும் செய்யமாட்டாரு. ஓட்டை சொல்லிக்கினு காலத்தை ஓட்டிக்கினு இருப்பாரு.

      தோழமை கட்சியா இல்லே எதிர்கட்சியா இருப்போம்னு வாய விட்டப்பயே அம்மா மிதியடி வரை தள்ளி வச்சுட்டிருப்பாய்ங்க.

      ஆடற மாட்டை ஆடி -பாடற மாட்டை பாடி கறக்கனும்.அதைவிட்டுட்டு……(வேணா கெட்ட வார்த்தை வருது)

    இல்லைனா குஜராத் மோடி -க்கு கீது அப்படியே இங்கிலீஷ் -ல translate பண்ணி அனுப்பி பாருங்க…
    நம்ம நாட்டுலேயே கொஞ்சம் புத்திசாலி முதல் மந்திரியா அவரு தான் தெரியுராரு…
    நமக்கு(இந்தியாவுக்கு) அதிர்ஷ்டம் இருந்தா ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்கு…
    ஆத்தா இதுக்கு எல்லாம் உதவ மாட்டாளா 🙂

      S Murugesan said:
      May 16, 2011 at 4:35 pm

      ராசா!
      மோடி அப்படி ஒரு மாயை க்ரியேட் பண்ணிவச்சிருக்காரு ( நாடு முழுக்க) தாளி ! குஜராத் மக்களோட வரிப்பணத்தை கொண்டு கல்கி வார இதழ் ஒன்னை அப்படியே ஸ்பான்சர் பண்ண கதை தெரியுமா?

      குஜராத் பிடுங்கறதை தமிழ் தெலுங்கு நாளிதழ்ல விளம்பரமா கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?

      மோடிக்கு நான் அனுப்ப மாட்டேன். நம்ம ம.சாட்சி ஒத்துக்காது. ஆருனா அனுப்பறதா இருந்தா நமக்கு நோ அப்ஜெக்சன்.

    கிருமி said:
    May 16, 2011 at 2:38 pm

    அண்ணே எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா வேலைக்கு ஆவாது. அம்மா அடுத்து பண்ணப் போறது என்னன்னா, கள் இறக்க அனுமதி. பல விவசாயிகளுக்கு நல்லதாகும். தூய கள் கிடைச்சா நிறைய மருத்துவ செலவுகள் குறையும்.

    யோசனையெல்லாம் திருட்டு போகுதுன்னு நினைச்சா, இதயெல்லாம் நீங்க செல்ஃப் ரெஜிஸ்ட்ரேசன் பண்ணிக்கலாமே. உங்களுக்கு நீங்களே ரிஜிஸ்டர் தபால்ல அனுப்பி, வந்ததும் பிரிக்காம வச்சிக்கோங்க. அனுப்புறப்போ கடுதாசில குறிப்பிட்டுடுங்க, ஏதாவது யோசனை ஏற்கப்பட்டா யோசனைக் கட்டணம் ஒரு கோடி ரூபாய்னு. எவனாவது யோசனையை திருடினா, வழக்கு போடுங்க. (எனக்கு நேரம் சரியில்லையோ?)

      S Murugesan said:
      May 16, 2011 at 4:31 pm

      கிருமி!
      இந்த யோசனைகளை அமல்படுத்தறதுக்கு முந்தி நதிகளின் இணைப்பை துவக்கிர்ர மாதிரியிருந்தா நமக்கு நோ அப்ஜெக்சன். அட அப்படியே சுட்டுட்டா சுட்டுரட்டுமே.

      ஏதோ ஒரு அம்சத்தால சனத்துக்கு நல்லது நடந்தா நம்ம புண்ணியக்கணக்குல சேருமே. “எவ்ரி டாக் ஹேஸ் இட்ஸ் ஓன் டே “அதுமாதிரி இந்த நாய்க்கு ஒரு நேரம் வரும். அப்பம் நாம சொல்றதுதேன் வேதம்.அன்னைக்கு எவனெவன் எதை எதை சுட்டான்னு சொல்லிருவம்ல

    அனுபவஸ்தன் said:
    May 16, 2011 at 4:14 pm

    அண்ணே! நம்ம நாட்ல திட்டங்களுக்கா பஞ்சம். எம்மாம் பெரிய IAS ஆபீசர்களுக்கெல்லாம் தெரியாத திட்டங்களா, வழிமுறைகளா. உண்மையில் நமது IAS. IPS அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடிந்தாலே நம்நாடு எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும்.

    எல்லாம் இந்த பாழாய் போன அரசியல் அரசியல். எழவு வீட்டில் கூட அரசியல் ஆதாயம் தேடும் ஜென்மங்கள் இருக்கும் இந்த நாட்டில் நமக்கு தேவைப்படுவதெல்லாம் நல்ல உள்ளம் கொண்ட தலைவர்கள் அல்லவா!. அது இல்லாமல் வெறும் அரசியல் ஆதாயம் தேடும் இந்த ஜென்மங்கள் இருக்கும் வரை இந்த நாடு எப்படி முன்னேறும். (கருப்பு பணம் )

    காமராஜர் கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும், மதிய உணவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய போது நீங்கள் சொல்வதை எல்லாம் செயல்படுத்த கஜானாவில் நிதி இல்லை, அது இல்லை இது இல்லை என்று இழுத்தார்களாம் அதிகாரிகள். விட்டாரா பெருந்தலைவர் நான் சொல்றதை செய்யுங்கண்ணேன், மக்களுக்குதான் கவர்மெண்ட்டுண்ணேன், அவங்களுக்கு ஒரு நல்லதை செய்ய முடியலைன்னா எதுக்கு கவர்மெண்ட்டுன்ணேன் என்று வரிசையாக பிடி பிடி என்று பிடித்தார். அப்புறம் பாருங்கள் நடந்ததை இந்த நாடு அறியும்.

    எனவே உங்கள் திட்டங்களைப் போல பலமடங்கு திட்டங்களை வைத்துள்ள அதிகாரிகள் உள்ளனர். எதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்ல மிகத்திறமையாக செயல்படுத்த எவ்வளவோ திறமைபடைத்த அதிகாரிகள் இந்த நாட்டில் உள்ளனர்.

    நானும் அலுவலகத்தில் பல அதிகாரிகளைப் பார்த்தவன் அவர்களது திறமைகளை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உண்மையில் அதிகாரிகள் தான் அரசாங்கம். அவர்கள் மனது வைத்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும். என்ன செய்வது அரசியல்வியாதிகளை மீற அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகாரிகள் சொல்வதை கேட்கும் பொறுமையோ, பக்குவமோ இந்த அரசியல்வியாதிகளுக்கு இல்லை.

    யோவ்! எதுல எனக்கு எவ்வளவு தேறும்ன்னு சொல்லு அதவிட்டுட்டு மக்களுக்கு திட்டம் என்று கொடுத்துவிட்டால் நாங்கள் செலவு செய்ததை எப்படி சம்பாதிக்கறது. அடுத்த எலக்சனுக்கு எப்படி செலவு பன்றது. நூறு தலைமுறைக்கு எப்படி சொத்து சேக்கறதுன்னு கேக்கிற பட்டிக்காட்டான் அரசியல்வியாதிகள் இருக்கும் இந்த நாட்டில் அதிகாரிகள் முடிந்தவரை அரசியல்வியாதிகள் சம்பாதிப்பதற்கும் மீந்ததை அவர்கள் பொறுக்கித்தின்பதற்கும் தான் தங்களது மூளையை பயன்படுத்துகிறார்கள்.

    இந்த அம்மா அமைச்சர்கள் என்று அறிவித்திருக்கிறார்களே அவர்கள் தகுதியெல்லாம் என்ன? அவர்களது ஒரே அஸைன்மெண்ட் என்னவென்றால் தவறாமல் தோட்டத்திற்கு கப்பம் கட்டிவிட வேண்டும் என்பதே. புது ஆட்கள் என்றால் ஒரு வித பயபக்தியுடன் சரியாக கட்டிவிடுவார்கள் என்பதால் தான். இதில் எதாவது குறை ஏற்பட்டால் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். இப்போது தானே வந்திருக்கிறார். போகப் போகப் பாருங்கள் ஒவ்வொன்றாக வரும். எல்லாம் நம் தலையெழுத்து. நமக்கு இங்க வேற வாய்ப்பு இல்லையேப்பா என்ன பன்றது.

    நம் நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்களுக்காக தன்னலமற்று உழைக்கும் தலைவர்கள் வேண்டும். குறைந்தபட்சம் மக்களைப்பற்றியாவது கவலைப்பட வேண்டும். ம்ம்ம்….. இதெல்லாம் எந்த ஜென்மத்தில் நடக்குமோ. அதுவரை மற்ற நாடுகளைப் பார்த்து நாமும் ஏக்கப்பெறுமூச்சு விட வேண்டியது தான்.

      S Murugesan said:
      May 16, 2011 at 4:25 pm

      அனுபவஸ்தரே !
      நீங்க அதிகாரிகள் பொஞ்சாதி மாதிரி – அரசியல் வாதி புருசன் மாதிரி. பொஞ்சாதி சொல்றத புருசன் கேட்டாதானேங்கறாப்ல இருக்கு.

      என்.டி.ஆருக்கு இந்த அதிகாரிங்க ஆப்படிச்சதுக்கு முதல் காரணம் என்ன தெரியுமா?

      செக்ரட்ரியேட்ல அதிகாரிங்க தாங்கள் வந்த நேரத்தை குறிப்பிட்டு கை.எ போட ஏற்பாடு பண்ணதுதான்.

      இந்த பிக்காலிங்களுக்கு என்னா தைரியம்னா இந்த அரசியல்வாதில்லாம் 5 வருசத்துல ஊட்டுக்கு பூடுவான்ங்கறதுதான்.

      இவனை வச்சு நாலு காசு பார்த்துருவம் – மாட்டினா அவன் மாட்டுவான்னுட்டு கை வரியை காட்டிர்ராய்ங்க.

      உண்மையில அரசியல்வாதிகளோட நிலைமை பரிதாபம். தேர்தல் முறையில சேஞ்ச் கொண்டுவரனும்.

      தேர்தல் செலவை அரசே ஏற்கனும். அப்பாறம் பாருங்க.

        அனுபவஸ்தன் said:
        May 16, 2011 at 4:38 pm

        அண்ணே! என்னதான் புருஷன் பொஞ்சாதி உறவா இருந்தாலும் புருஷன்காரன் (ஆரசியல்வியாதி) கிட்டதான பவரு இருக்கு. புருஷன்காரனுங்க நல்லது செய்ய மனசு வச்சு விரட்டி வேலை வாங்கினா (பொஞ்சாதி) இவனுங்க பெண்டை நிமித்திரலாம். இருக்கிற 5 வருசத்தில மக்களுக்கு எதாச்சும் செய்ய முயற்சிக்கிறானுங்களா! அட்லீட் மக்களை (புள்ளைங்களை) நினைச்சாவது பாக்கிறானுங்களா. அப்படி நினைச்சு பாக்கிறவனை இந்த மக்கள் என்றுமே வீட்டுக்கு அனுப்பினது இல்லை. (உ.தா. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், தற்போது மோடி, நிதிஷ்குமார்)

        S Murugesan said:
        May 16, 2011 at 6:42 pm

        அனுபவஸ்தன் !
        அதிகாரிகள் X அரசியல்வாதிகள்ங்கற தலைப்புல தனிப்பதிவே போடனும்போல. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், மோடி, நிதிஷ்குமார் எல்லாம் வெவ்வேறு கேரக்டர்ஸ். அல்லாரையும் ஒரே கொட்டில்ல அடைச்சுட்டிங்க. முக்கியமா ஒய்.எஸ்.ஆரை லிஸ்ட்ல சேர்க்கலை.

        S Murugesan said:
        May 18, 2011 at 9:57 am

        நாம //தன்னோட விஜயங்களின் போது போக்குவரத்தை நிறுத்த கூடாது//ன்னு குறிப்பிட்டிருக்கோம். அம்மா இப்ப இதையே உத்தரவா பிறப்பிச்சிருக்காய்ங்க. இதுக்கு நிச்சயம் போலீஸ் அதிகாரிகள் “அஸ்து” சொல்லியிருப்பாய்ங்க. அதையும் மீறித்தான் இந்த முடிவு.

        விவரங்களுக்கு: http://karurkirukkan.blogspot.com/2011/05/blog-post_8250.html

      superrsyed said:
      May 16, 2011 at 6:59 pm

      ;;;;எனவே உங்கள் திட்டங்களைப் போல பலமடங்கு திட்டங்களை வைத்துள்ள அதிகாரிகள் உள்ளனர். எதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்ல மிகத்திறமையாக செயல்படுத்த எவ்வளவோ திறமைபடைத்த அதிகாரிகள் இந்த நாட்டில் உள்ளனர்.;;;;

      சரியா சொன்னீங்க நானும் அனுபவததி கன்டு இதை உனர்ந்திற்ுக்கிரேன்

      நல்ல தலைவர்கள் தான் இப்போது தேவை

    R.Puratchimani said:
    May 16, 2011 at 7:33 pm

    கட்டுரை ரொம்ப நீஈஈஈஈஇலமா இருந்ததால கொஞ்சம் தான் படிச்சேன்…திரும்பவும் இத படிக்கணும்…

    //நல்ல தலைவர்கள் தான் இப்போது தேவை//

    .நல்ல தலைவன் வருவேன் சாரி வருவான் காத்திருங்கள்….

    டவுசர் பாண்டி said:
    May 17, 2011 at 3:03 pm

    நைனா, பலான மேட்டரா சொல்லிகிரியே, இதெல்லாம் சினிமாக்காரங்க சுட்டுற மாட்டாய்ங்களா? குறிப்பா இயக்குனர் சொங்கர். ஒன்னோட ஆப்பரேசன காவாசி டுமீல் பார்ட்டிங்க ஆப்பரேட் பண்ணிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

    Name said:
    May 18, 2011 at 7:01 am

    //அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்//
    வன்மையாக கண்டிக்கிறேன். இது ப்ரோடிக்க்டிவே ……….
    //ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம்//
    இது எப்படி சாத்தியம்னு சொல்ல முடியுமா?. தொழில் நிறுவனங்களுக்கு சரி வரலாம், ஆனா வீட்டு உபயோகத்திற்கு எப்படின்னு விளக்கமா சொல்லுங்களேன். transmission மூலம் ஏற்படும் மின் இழப்பு இந்தியாவில் மிக அதிகம். இதற்கு வழி செய்தலும் தகும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s