அம்மா உயிருக்கு ஆபத்து

Posted on

அம்மா உயிருக்கு ஆபத்தா?ன்னுட்டு பதைச்சு போயி இந்த பதிவை படிக்க ஆரம்பிச்ச உங்களை முட்டாளாக்கும் எண்ணம் எனக்கில்லை. அதே சமயம் என்ன ஆபத்து? எப்படி ஆபத்துங்கறதை இந்த பதிவோட கடைசியில தந்திருக்கேன்.

கடந்த காலத்தில் ஐ மீன் 2010 நவம்பர்லனு நினைக்கிறேன். விஜய்காந்த் கூட்டு சேருவாரு – ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்னு சொல்லிவச்ச முந்திரிக்கொட்டை நாமங்கறது தெரிஞ்ச விசயம்தேன்.

அப்பாறம் ஃபிப்ரவரி ,மார்ச் மாதங்கள்ள அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் டெக்னிக்கலா அப்டேட் பண்ணி மீள் பதிவு செய்தோம்.

தற்சமயம் அம்மாவுக்கு நடக்கிறது ராகு தசை சந்திரபுக்தி. (நேற்றைய பதிவுல சந்திர தசை நடக்கிறதா குறிப்பிட்டதை திருத்தின அன்பு உள்ளத்துக்கு நன்றி – சிம்மத்துக்கு வாக்குல சனி எப்படியெல்லாம் வேலை செய்யுது பாருங்க- டாக்டருக்கு ஜூரம் வர்ரதில்லியா அப்படித்தேன் ஜோசியருக்கும் சனி பிடிக்கும் -பீடிக்கும் )

அம்மாவுக்கு லஹரி முறைப்படி கணித்த ஜாதகப்படி 2012/8/3 வரை ராகு தசையில் சந்திரபுக்தி நடக்குது.சந்திரன்னாலே முட்டுசந்துல ஃபோர் வீலரை ரிவர்ஸ் எடுத்த கதைதேன். முன்னுக்கும் பின்னுக்குமா அலைபாஞ்சுக்கிட்டே இருக்கனும் இதை மனசுல வச்சுத்தேன் கூட்டணி ஆட்சின்னு வார்த்தைய விட்டேன்.சந்திரன்னாலே இன்ஸ்டெபிலிட்டிதேன்.

அதுசரிப்பா உன் ஜோதிடம் ஒர்க் அவுட் ஆயிருச்சு. கெஸ்ஸிங் ஃபெயில் ஆயிருச்சு சரி. சந்திரனுக்குரிய இன்ஸ்டெபிலிட்டி வேற எப்படியெல்லாம் ஒர்க் அவுட் ஆகலாம்/மெட்டீரியலைஸ் ஆகலாங்கற மேட்டர்ல உன் கெஸ்ஸிங்கை அவிழ்த்துவிடுன்னு கேப்பிக . சொல்றேன்.

தசா நாதன்: ராகு
இவரு அம்மா ஜாதகத்துல 11 ல உட்கார்ந்தார். இவருக்கு சமசப்தகத்துல கேது நின்னாரு. கணக்கு என்னன்னா கேது ஒரு அவமானத்தை கொடுத்தா ஒடனே ராகு ஒரு எதிர்பாரா லாபத்தை தருவாரு. உ.ம் வி.காந்தோட கூட்டே ஃபணாலுன்னு ஒரு நிலை ஏற்பட்டு அப்பாறம் தேன் ஒர்க் அவுட் ஆச்சு. ரிசல்ட் வர்ரது ஜஸ்ட் சில நாட்கள் முன்னே கூட கண்ட கண்ட சர்வே எல்லாம் டிவி சேனல்ஸ்ல போட்டு போட்டு கடுப்பேத்தினாய்ங்க.ஆனால் ரிசல்ட் என்னவோ தூளா வந்துருச்சு. இப்படி ஒரு அவமானம் – ஒரு வெற்றின்னுதேன் காலம் ஓடும்.

தசா நாதன் நின்ற பாவாதிபதி: செவ்

இவர் 3 ல் நின்றார் அதுவும் சந்திரனோட நின்னார்.செவ் மட்டும் நின்னா தகிரியம் வரும். கூடவே சந்திரனும் நின்னாரு. இதனால அச்சமும் பிறக்கும். அச்சமூட்டக்கூடிய சூழலும் வரும். இன்னைக்குள்ள அரசியலே நித்ய கண்டம் பூர்ணாயுசு மாதிரி தேன் இருக்கு. இதுல விவரம் புரியாம பூந்துட்டு திடீர்னு பேக் அடிச்சுட்டா பயங்கர மொக்கையாயிரும்.

புக்தி நாதன்: சந்திரன்
முக்கிய எதிர்கட்சியே சந்திரன் தேன். அம்மா அன்னைக்கு வாஜ்பாயி தாத்தாவை எப்படியெல்லாம் கலாய்ச்சாங்களோ அதுக்கு ட்புளா சந்திரன் கலாய்ச்சு விட்டுருவாரு. இவரா வாக்ஸ்தானாதிபதி. அங்கன ஏற்கெனவே சனி வேற உட்கார்ந்திருக்காரு( ஜாதகத்துல) கோசாரத்தை பார்த்தா இங்கயும் வாக் ஸ்தானத்துல சனி தேன் இருக்காரு.

சனிக்கு அட்டமாதிபத்யமும் உள்ளதை மறக்கக்கூடாது. ஏற்கெனவே கஜானா காலி அம்மா ஜாதகத்துல வாக்குல சனி/கோசாரத்துலயும் இதே நிலை. நடக்கிறது வாக் ஸ்தானாதிபதியோட (சந்திர) புக்தி.

1.கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாம போகலாம் ( உசாரா ஒன்னரை வருசம் வாய்தா வாங்கிக்கினு கீறாய்ங்க. இருந்தாலும் ..சின்ன சின்ன மேட்டர்ல எல்லாம் வாக்கு தவறினா ஊதி பெருசாக்க தாத்தா கீறாரே.

2.கர்ம காரகனான சனி வாக்குல நின்னதால ஒரு சில கடின முடிவுகள் எல்லாம் எடுக்கவேண்டி வரலாம். உ.ம் பயனாளிகள் பட்டியல் சரிபார்ப்பு , தகுதியற்றோர் நீக்கம். அதிகாரிகளை அவிழ்த்துவிட்டுட்டா அவிக க்ளை பிடுங்கறாய்ங்களோ – பயிரை பிடுங்கறாய்ங்களோ ஆருக்கு தெரியும்

3.வாக்கு சனி நின்னதால அவர் கர்மகாரகன்ங்கறதால – நீண்ட நாளைக்கு அப்பாறம் வேலைன்னு ஏற்பட்டதால அம்மா பிழிஞ்சு எடுக்கலாம். அம்மா வேகத்துக்கு அவிக ஈடு கொடுக்க முடியாம தவிக்கலாம்.

4.சந்திரன் குடும்பாதிபதி. கழகமே ஒரு குடும்பம். ரெண்டாம் பாவத்துக்கு சந்திரன் ஆதிபத்யம் பெற்றால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கூடவும் -குறையவுமா கண்ணாமூச்சி காட்டலாம். இதுக்கு மேற்சொன்ன 3 ஆவது பாய்ண்ட் மட்டுமில்லாம – வாக்காளர்களை விலைக்கு வாங்கமுடியாத எதிரிகள் -தேர்தல்கமிஷன் தொந்தரவுகள் இல்லாததால் – எம்.எல்.ஏக்களையே விலை பேசிவிட்டால்?

5.அட சட்டம் ஒழுங்குங்கற பேர்ல ஜுவாலையா கிளம்பக்கூடிய அம்மாவோட தீட்சண்யத்தை குறைக்கவாச்சும் உதவுமே – ன்னுட்டு அழகிரி அண்ட் கோ பிராண்ட் வேலை நடந்துரலாம்.

6.கர்னாடக கோர்ட்ல நடக்கிற வழக்குல அம்மாவுக்கு எதுனா பின்னடைவு ஏற்படலாம்..

7.முக்கியமா ஸ்பெக்ட்ரம் ஜி மேட்டர் இத்தாலி வரைக்கும் போகுது. அம்மா ஒரு குன்ஸா போனா பரவால்லை. காட்டடி அடிச்சிட்டே இருந்து அதுல ஒரு அடி சோனியா அம்மா மேல பட்டுத்தொலைச்சா என்னாகும்னு ரோசிங்க ( வாக்குல சனி இருக்கிறச்ச பேசினா ஒவ்வொரு பேச்சும் ராட் அடி மாதிரி இருக்கும்)

8.அதைவிட முக்கியமான விஷயம் அம்மாவின் ஈழத்தமிழர் மீதான புதிய பாசம் – ராஜ பக்சே மீதான வீராவேசம் இலங்கை அரசுக்கும் – இந்திய அரசுக்கும் உள்ள உறவு கர்பம் வரைக்கும் வந்தாச்சு. குழந்தை வெளிய வந்தா மேட்டர் புரிஞ்சுரும்.இலங்கைக்கு உதவ இலங்கை இத்தாலிக்கு என்ன உதவுச்சுன்னும் வெளிய வந்துரலாம்.

எது எப்படியோங்க சந்திர புக்தி முடியறவரைக்கும் இன்ஸ்டெபிலிட்டி இருக்கும். வண்டி முன்னுக்கும் பின்னுக்குமா அலையும். இந்த அலைபாயலுக்கு அம்மா சைக்கலாஜிக்கலா தயாரா இல்லை. அல்ட்டிமேட் மெஜாரிட்டிங்கற நிலையில ஆருமே ப்ரிப்பேர்டா இருக்க முடியாதுதான்.

அதனால வாய் விட்டோ,வார்த்தைய விட்டோ, வார்த்தைய நிக்க வச்சுக்க முடியாமயோ பயங்கர மொக்கையாகி தன்னோட ஆட்சிக்கு தானே ஆப்பு வச்சுக்கப்போறாய்ங்க அம்மா.

இதுல இலவச இணைப்பா தானும் கெட்டு ஊரையும் கெடுக்கிற விஜய்காந்த் வேற அசெம்ப்ளில இருக்கப்போறாரு. என்னெல்லாம் ந்டக்கப்போவுதோ அது ஆத்தாளுக்கே வெளிச்சம்.

பி.கு: உங்க கணிப்பு நிஜமாயிருச்சுன்னு ஃபோன்ல,கமெண்ட்ல ,மெயில்ல பாராட்டற நண்பர்களுக்கு கணிப்பு நிஜமாகலை பொய்யாகாம போயிருச்சு அம்புட்டுதேன். கிரிக்கெட் பாஷையில சொன்னா மேட்ச் ட்ரா ஆயிருச்சு. அதனால விரயமா பாராட்டாதிங்க நைனா.

இப்பமும் சொல்றேன்.ஜோதிடம் ஓகே. நம்ம கஸ்ஸிங்தேன் நாட் ஓகே. இந்த பதிவுக்கான முன்னுரை ஏதோ ஒரு காரணத்தால 2012/8/3 வரை அம்மா ஆட்சிக்கு எந்த நிமிசம் வேணம்னா ஆப்பு வரலாம்.

அம்மா உயிருக்கு ஆபத்து:

ஆந்திராவுல கோதாவரி கடற்கரையில எரிவாயு கிடைச்சது. அதுக்கு நாட்டாமை ரிலையன்ஸ் ப்ரதர்ஸ். அவிகளுக்குள்ள ஏதோ சண்டை. மீடியா காரவுக வாயு கிடைச்சிருக்கு. கிடைச்சது ஆந்திராவுல எங்க ஸ்டேட்டுக்கு எவ்ள கொடுப்பிங்கன்னு கேட்டா அதை எங்க அம்மா முடிவு பண்ணனும்னு சொன்னாய்ங்க.

ஒடனே எங்க சி.எம் ( ஒய்.எஸ்.ஆர்) ங்கொய்யால ” இதை முடிவு பண்ண வேண்டியது உங்க அம்மா இல்லைடா ..எங்க அம்மா – சோனியாம்மா”ன்னுட்டாரு. இதன் எதிரொலியாத்தான் ஒய்.எஸ்.ஆருக்கு ஸ்பாட் வச்சுட்டாய்ங்கனு ஒரு பேச்சிருக்கு.

பைலட் கணக்குல ஒரு வாரம் முன்னாடி பல லட்சங்கள் வந்திருக்கு. ஊட்ல புறப்பட்டா பத்து நிமிசத்துல பேகம்பெட் ஏர்போர்ட்டுக்கு வந்து சேர வேண்டிய கிராக்கி முக்கா மணி நேரம் கழிச்சு வர்ராரு.”சம்பவத்துக்கு பிறகு” அந்த பைலட்டோட குடும்பத்துக்கு மட்டும் அஃபிஷியலாவே – பப்ளிக்காவே சில லட்சங்கள் செக்கா தரப்பட்டிருக்கு.

அண்ணன் தம்பிங்க ஒருத்தர் ஹெலிகாப்டர்ல இன்னொருத்தர் சர்க்கரை இத்யாதி போடவச்சு விளையாடறது வழக்கம்.

இந்த ஸ்பெக்ட்ரம் ஜி மேட்டர் மேற்படி எரிவாயு மேட்டரை விட ஆபத்தான இஷ்யூ. கம்பெனி சி.இ.ஓ எல்லாம் ஜெயில்ல இருக்கான். இன்னம் என்னெல்லாம் வெளியவருமோ தெரியாத நிலைமை. இது ஒரு பக்கம்.

ஜெயா மாதிரி க்ளீன் ஸ்வீப் செய்த ஒரு மானில முதல்வர் கிழிகிழின்னு கிழிச்சா பல ஆயிரம் லட்சங்கள் லஞ்சமா கொட்டிக்கொடுத்து வாங்கின அலைக்கற்றை ஒதுக்கீட்டை பண்ணவேண்டிய நிலையும் வரலாம். இதை மேற்படி கார்ப்போரேட் கம்பெனிக்கள் சுலபமா ஏத்துக்குமா?

ஒய்.எஸ்.ஆர் கணக்கா அம்மாவுக்கும் ஸ்பாட் வைக்க எம்மாத்தம் நேரம் பிடிக்கும். ஒரு கோணம். அடுத்தது இலங்கை பிரச்சினை.

வை.கோ, நெடுமாறன், சீமான் இவிக பேசறது சகஜம். அம்மா பேசினா அது அசகஜம். இன்டர் நேஷ்னல் மீடியால்லாம் செவி சாய்க்கக்கூடியது அம்மாவோட ராஜபக்சே எதிர்ப்பு பேச்சு. இலங்கையில புலிகள் இல்லை. ஆனால் புலி அமைப்பிலிருந்து விலகி ராஜபக்சேவின் கட்கம் முகரும் கருணா அண்ட் கோ உள்ளனர்.

எல்லை தாண்டி வந்து மீனவர்களை சுட்டும் நம்மை கேட்பாரில்லைங்கற மயக்கத்துல உள்ள ராஜபக்சே விபரீத திட்டம் எதற்கும் வித்தூன்றி விடவும் வாய்ப்பிருக்கிறது..

நாம சொல்றதெல்லாம் ஒன்னுதான். அம்மா நியாயம் பண்ணுவாய்ங்கனு நெனச்சு சனம் ஓட்டுப்போட்டிருக்கு. அவிக நியாயம் பண்ணாட்டாலும் பரவால்லை. அநியாயம் பண்ணாம இருக்கனும் –
அநியாயம் நடக்காம பார்த்துக்கனும். அதுக்கு அஞ்சு வருசம் முழுக்க இருக்கனுமே.. அதனாலதேன் இந்த பதிவு.

Advertisements

10 thoughts on “அம்மா உயிருக்கு ஆபத்து

  டவுசர் பாண்டி said:
  May 14, 2011 at 1:43 am

  இன்னா நைனா, கோச்சிக்கினுகிரியா? சனங்களுக்கு தேவை ஆரு அரியணையில குத்த வைப்பா? அதான் கேள்வி. நீதான் நெத்தில அச்சா மாறி கரீட்டா சொல்லிட்டீல்லா. எங்களுக்குத்தேவ தாத்தாவா இல்லாங்காட்டி பாட்டியா? அம்புட்டுதேன். எங்களுக்கு பாட்டி கூட ஆரு கூட இருப்பா அதெல்லாம் மேட்டரே கடியாது. துணிஞ்சி தில்லா அடிச்ச பாரு அதன் எங்களுக்கு தேவை. தலைமுர தலைமுறய ரெண்டுவேத்துக்கும் மாறி மாறி சோசியம் சொல்லிக்கினுகீரே. ஒனக்கு தெரியாத மேட்டரா. கெஸ்ஸிங்கெல்லாம் மிஸ்ஸிங் தேன். நோ ப்ராப்லம். மத்தபடி கணிப்பு பட்டய கெளப்பிட்டுள்ளா. இன்னொரு மேட்டர் காத கிட்டக்க கொண்டு வந்தாத்தேன் சொல்லுவேன். நீ சுதேசில எழுதின “அரியணை” மேட்டர வெச்சி எங்கூருல உள்ள அதிமுக காரவுகள சுருசுருப்பா வேல செஞ்சது பாதி நம்மதேன். அஞ்சி வருசமா செயிளுக்குள்ள இருந்தா மாறி இருந்த நம்ம மாவட்ட் தலிவருக்கு பூச்ட்டு குடுக்கு ஒன்னோட கட்டுரை நமக்கு ரொம்ப யூசாச்சி. லூசுப்பயளுங்க, நா கரி மீனு சேக்க மாட்டேன்னு (கடந்த மூணு வருசமாத்தேன் திடீர்னு) தெரியாம கரி விருந்து ரெடி பண்ணி இன்சல்ட் பண்ணிட்டானுவ. பொறவுதேன் நானு தர டிக்கெட்டுன்னு தெரிஞ்சி சைவத்துக்கு ஆர்டர் குடுத்து சின்ன பார்ட்டி குடுத்தானுங்கோ. ஸ்ரீரங்கம் யூ டீப் தாத்தாவ நெனச்சா மனசுக்கு கச்டமாத்தேன் இருக்கு. மனுஷன் சோசியம் சொல்லும்போது சரக்கடிச்சிக்கினு சொல்லக்கூடாதுன்னு தெரியாம சொல்லிட்டாரு. சரி போட்டும். மணியன்னனும் நல்லா பலன் சொல்றாரு. அவருக்கும் என்னோட வாழ்த்துக்கள தெரிவிச்சிக்கிறேன்.

   S Murugesan said:
   May 14, 2011 at 7:36 am

   டவுசர் பாண்டி,
   உங்கள் அன்புக்கு நன்றி.

    டவுசர் பாண்டி said:
    May 14, 2011 at 8:15 am

    இன்னா நைனா, தொண்டைல ஆப்பரேசன் பன்னவன்கனக்கா ஸார்ட்டா டேங்சு மட்டும் சொல்லிக்கிர. டேங்சு கார்டு கெடச்சா நமக்கும் கொஞ்சகாண்டு காட்டுபா

    S Murugesan said:
    May 14, 2011 at 12:51 pm

    பாண்டி,
    அன்புக்கு நன்றின்னு சொன்னா நீங்க சொன்னதெல்லாம் அன்பின் வெளிப்பாடுதேன். யதார்த்தமில்லேன்னு அர்த்தம். டாங்க்ஸு கார்டு? வரட்டும் பார்க்கலாம். சபையில வைக்காம விட்டுருவமா?

  வினோத் said:
  May 14, 2011 at 4:26 am

  தல … நீங்க ஒரு பொருப்பான எதிர் கட்சி மாதிரி கருத்து சொல்றீங்க….
  உங்களை ஆஸ்தான சோதிடராக்கின நல்லா இருக்கும்னு நினைக்கறேன்.

   S Murugesan said:
   May 14, 2011 at 7:34 am

   வினோத் ஜீ,
   நான் எதோ ஆத்தா,ஆத்தாவோட பிள்ளைகள் தயவுல சுதந்திரமா இருக்கேன். வாழ்க்கையில எதை இழந்தாவது காப்பாத்திகவேண்டிய ஐட்டம் சுதந்திரங்கறது நம்ம பாலிசி. அதுக்கே ஆப்பு வச்சிட்டா எப்படி/

   நான் அந்தம்மா ஜாதகத்தை அலச ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டேன். அந்த நேரத்துக்கான மினிமம் லேபர் 25000 பைசா. அதை வேணா செட்டில் பண்ண சொல்லுங்க.மத்தபடி ஆளை விடுங்க.

  Mohamed Ismail said:
  May 14, 2011 at 5:10 am

  முருகேஷ் அண்ணே உங்களின் ஜோதிடம் கணிப்பு உண்மையானது(உங்க பாஷையில் பொய்யகல) எங்களுக்கு ரொம்ப சந்தோசம். எனக்கு என்னோமோ உங்க கணிப்பு பின்னர் வந்த திருத்தும் இவற்றை பார்த்தவுடனே மனதில் தோன்றியது ஜெ. ஆட்சின் தன்மை இந்த முறை எப்படி இருக்கும் என்றுதான்.
  அதற்காக தேர்தல் முடிவு வந்தவுடனே பொறுப்பாக அவர்களின் ஆட்சி சந்திக்க இருக்கும் பிரச்சினை பற்றி தெரிவித்து விட்டீர்கள். கூடவே உயிர்க்கு ஆபத்து என்றும் சொல்லிவிட்டீர்கள். அது அனுமானமா அல்லது ஜோதிட ரீதியாகவா.
  இப்பவாச்சும் வெளிப்படையாக சொல்லுங்க தாத்தா உடல்நிலை பற்றி.
  உங்கள் பழைய நண்பர்? ரஜினி உடல்நிலை பற்றி வதந்தி டெய்லி பரவுதே.

  ramalingam said:
  May 14, 2011 at 6:06 am

  //டாக்டருக்கு ஜூரம் வர்ரதில்லியா அப்படித்தேன் ஜோசியருக்கும் சனி பிடிக்கும் // டா.வுக்கும் சளி பிடிக்கும். ஜோ.வுக்கும் சனி பிடிக்கும்.

  Name said:
  May 16, 2011 at 7:38 am

  அண்ணனுக்கு வணக்கம் …
  சொர்கத்துக்கு அட்ரெஸ் , வண்டி , பெட்ரோல் , செலவுக்கு கட்டு எல்லாம் கொடுத்துட்டு ….ஒரு ரோடு ஒன்பதா பிரியும் அதுல ஒன்னு தான் சொர்கத்துக்கு வழி …அத பொருத்து நிதானமா யோசுச்சு பாத்தா போய் சேரலாம் நு சொல்றீங்க ..உங்கள் எண்ணப்படி அரங்கநாயகி நடந்துகொண்டால் நாடே நல்லா இருக்கும் .

  ஆனா ஒரு சந்தேகம் , என்ன பண்ணாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும் அப்டீங்கற விசியத்த எப்படி மாத்த முடியும் ( வாக்குல சனி , பேசினா ப்ரோப்ளம் ,பேசாம இருக்கணும் சொல்றோம் , ஆனா சனி பேச வைப்பாறு ???? ஒரே கன்புசன் அண்ணே )

   S Murugesan said:
   May 16, 2011 at 7:49 am

   Name !
   மன்சனுக்குள்ள உடல்,மனம்,புத்தியையெல்லாம் கடந்து இன்னொரு சமாசாரம் இருக்கு. அதுக்கும் கடவுளுக்கும் வித்யாசமே இல்லை. அது லேசா கொட்டாவி விட்டா போதும். இதெல்லாம் ஜுஜுபி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s