அய்யய்யோ ஆத்தா முறைச்சு பார்த்தா

Posted on

இந்த தொடரோட கடந்த அத்யாயத்துல ஆத்தா நடாத்தி காட்டின திகீர் சம்பவத்தை பத்தி சொல்றதா சொல்லியிருந்தேன். அதை சிம்பிளா கட் ஷாட்டா சொல்லிர்ரன். மாண்டேஜ்?

1994 ல அப்பா டிக்கெட் வாங்கின பிற்பாடு நம்ம நிலைமை டப்பா டான்ஸ் ஆடிட்டிருந்தது . ஆறு மாசம் வாடகையே தரமுடியாம ஆறாவது மாசம் மொத்தமா கொடுத்த சந்தர்ப்பமெல்லாம் உண்டு. ஆனால் பாருங்க 2001 ல நம்ம பின்னாடி ஒரு “சக்தி” இருக்கிறது தெரியாம அந்த சமயம் நாம குடியிருந்த ஹவுஸ் ஓனர் கவுறு கட்டிக்கினாரு.

அதுவும் ஒன்னாம் தேதியே காலங்கார்த்தால ஆறுமாச வாடகை பாக்கிக்கு பேசறாப்ல இன்னா மாதிரி லூஸ் டாக்குங்கறிங்க. நம்ம கான்செப்ட் எப்படி இருக்கும்? வாடகைன்னா ஒன்னாம் தேதியிலருந்து பீராய ஆரம்பிச்சுரனும். அஞ்சாம் தேதிக்குள்ள கொடுத்துரனும்னு தானே இருக்கும். நெஜமாலுமே நொந்து பூட்டன்.

எப்படியோ அங்கே இங்கே பீராஞ்சுக்கிட்டு காசோட வூடு திரும்பறச்ச நேரம் ராத்திரி எட்டு.ஓனர் போர்ஷன் பூட்டியிருக்கு. பொஞ்சாதி கிட்டே விஜாரிச்சேன்.” எங்கடி போனாய்ங்க?”

”புருசன் பொஞ்சாதி புள்ளை எல்லாருமா கார் பேசிக்கினு திருப்பதி போனாய்ங்க. நீ வாடகை கொண்டாந்தா போலீஸ் காரம்மா கிட்டே குடுத்துர சொன்னாய்ங்க.”

ஒடனே போய் எதிர் போர்ஷன்ல குடியிருக்கிற ஹெட் கான்ஸ்டபிள் சம்சாரம் கிட்டே வாடகைய கொடுத்துட்டு வந்து சாப்டேன். ஏய் சன்னலை திறந்து விடுன்னுட்டு ஆராமா ஒரு பீடிய எடுத்து பத்த வச்சேன்.

தாளி மொதமாசமே மொத தேதியிலயே ரவுசு பண்ணிட்டானே இந்த பிக்காலி கிட்டே எப்படி சமாளிக்கப்போறோம்? ஒடனே ஊடு மாத்திரலாம்னாலும் அதுக்கும் காசு வேணம்.என்னங்கடா இது இமிசையா பொச்சுன்னு ரோசிச்சிக்கிட்டு ஊதி முடிக்கிறேன்.

ஓனர் ஊட்டு ஃபோன் ரிங்காச்சு. எடுத்தேன். அந்த வூட்டோட ஜியாக்ரஃபி கொஞ்சமா சொன்னா சீன் நெல்லா புரியும். தெற்கு பார்த்த வாசல். சென்டரா பேசேஜ். ரைட் லெஃப்ட்ல போர்ஷன்ஸ். ஓனருதும் ஒரு போர்ஷன் தேன். சன்னலோரம் ஒரு லேண்ட் ஃபோன். மரப்பெட்டிக்குள்ள வச்சு பூட்டியிருப்பாய்ங்க. இன் கமிங் வந்தா ஓனர் வூடே பூட்டியிருந்தாலும் ரிசீவரை எடுத்து பேசலாம்.

” ஏம்பா சோளிங்கர்ல இருந்து பேசறோம்… பரமசிவம் இல்லே..- (ஹவுஸ் ஓனர் பேரு – பேரை மாத்தியிருக்கம்)

இன்னாது திருப்பதி போயிக்கிறானா – நீ ஆரு பேசறது – .. இன்னாது குடியிருக்கிறியா சரி இங்கே கட்டி குடுத்துக்கிறானே அவனோட மூத்த பொண்ணு அது கொளுத்திக்கினு செத்துப்போச்சுப்பா- ஞாபகமா பரமசிவத்துக்கு தகவல் கொடுத்துரு”

ஃபோன் அட்டெண்ட் பண்ணதும் மனசுக்குள்ள என்னென்னமோ ஓடுது. அடடா.. என்னடா லைஃப் இது. காலை 8 மணிக்கு என்னமோ இந்த ஓனர் பையன் அந்த அலட்டு அலட்டினான். ராத்திரி எட்டுமணிக்கெல்லாம் தாளி அவன் பொயப்பு கொலாப்ஸ் ஆயிருச்சே.இவ்ளதானா மன்சன் பொயப்பு. இந்த நாற பொயப்புக்கு ஈகோ,அலட்டல் எல்லாம் தேவையா?

திருப்பதில இருக்கிறவனுக்கு எப்படி இந்த மெசேஜை பாஸ் பண்றது . ஆரை பிடிக்கலாம். ( அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி செல்ஃபோன் எல்லாம் கிடையாதுங்கண்ணா) – இப்படியெல்லாம் ரோசிச்சிக்கினு இருக்கிறேன். படக்குனு மறுபடி ஃபோன் ரிங்காச்சு. எடுத்தேன்.

“இந்த பக்கம் பரமசிவம்.. அந்த பக்கம் யாரு?”

‘ முருகேசன் பேசறேங்க”

“இன்னா வாடகை இன்னாச்சு.”

“காசு கிடைச்சுருச்சுங்க.. நீங்க ஊர்ல இல்லேன்னு ”

“ஊர்ல இல்லின்னா .. மொதல்ல போலீஸ்காரம்மா கிட்ட காசை கொடுத்துட்டு அப்பாறம் வந்து பேசு லைன்ல இருக்கேன்”

” நீங்க ஊர்ல இல்லேன்னு நீங்க சொல்ட்டு போனமாதிரியே போலீஸ் காரம்மா கிட்டே பணத்தை கொடுத்துட்டேங்க”

” ஒன்னை எல்லாம் எவன் நம்பினான் . நான் லைன்ல இருக்கேன் போலீஸ் காரம்மாவை கூப்டு”

ஃபோனை பொட்டி மேல வச்சுட்டு போ.கா வை கூப்டு விட்டேன். பரமசிவம் பேச்சு ரிசீவரை தாண்டி கேட்குது.

“போலீஸ்காரம்மா .. இன்னா பணம் குடுத்தானா/ சரி சரி பத்திரமா வச்சுக்க. மறு நாளே பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லை .டாக்டர் கிட்டே போனம்.அம்பது குடு நூறு குடுன்னு கேட்டா கொடுத்துரப்போற. அந்த பணம் என் பணம். சரி சரி.. க்யூ காம்ப்ளெக்ஸுக்குள்ள நுழையப்போறோம். அதான் ஒரு தாட்டி ஃபோன் பண்ணேன். கேட்டு பூட்டியிருக்கா பாரு…சரி வச்சுரட்டா.. இன்னாது முருகேசன் பேசனுமா? கண்ட கண்ட நாயிகிட்டே எனக்கென்ன பேச்சு..இன்னாது முக்கியமான சமாசாரமா சரி கொடுத்து தொலை”

ரிசீவர் என் கைக்கு வந்தது. மேட்டரை சொன்னேன். அலறி அடிச்சுக்கிட்டு அவிக ஊரை வந்து சேர்ந்ததும். பதட்டத்துல அவிக ஊட்டு சாவி கிடைக்காம பூட்டை உடைச்சு திறந்ததும் – திருப்பதியிலருந்து வந்த கார்ல அப்படியே சோளிங்கருக்கு புறப்பட்டு போனதும் தனிக்கதை.

அன்னைக்கு ஆத்தாவுக்கு டிக்ளரேஷன் கொடுத்துட்டேன் ” ஆத்தா.. எந்த பன்னாடை பிக்காலி வேணம்னா என்னை அவமானப்படுத்திக்கிட்டு போவட்டும். அவன்லாம் என் கர்மத்தை வாங்கிக்கின்னு எனக்கு ரிலீஃப் குடுக்கறான்னு நினைச்சுக்க. இப்படியெல்லாம் தண்டிச்சுராதே ஆத்தா .

மேட்டர் இன்னாடான்னு நாம என்னதான் டிக்ளேர் பண்ணாலும் ஆத்தா நம்ம பேச்சை இந்த ஒரு மேட்டர்ல மட்டும் கேட்கவே மாட்டேங்கறாங்கண்ணா..

இந்த பாதுகாப்போட ஒப்பிட்டா ஜெட் கேட்டகிரி பாதுகாப்பெல்லாம் ஜுஜுபி. முந்தி ஒரு பதிவுல ஆரு என்ன சாமிய கும்பிடனும் – எந்த பேர் கொண்டவுக எந்த பீஜத்தை ஜெபிக்கனும்னுல்லாம் சொன்னதா ஞா.

ஆனால் ஆத்தா விசயத்துல மட்டும் சாஸ்திரம்,சம்பிரதாயம், ஜாதகம்,கிரக பலம்னு எந்த இழவும் தேவையில்லிங்கண்ணா.

ஆத்தா மேட்டருல ஆரு வேணம்னா எப்பவேணம்னா – எந்த நிலையில வேணம்னா எப்படி வேணம்னா ஒர்க் வுட் பண்ணிக்கலாம்.

பி.கு:
தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய வெளிவந்துருச்சுன்னு நினைக்கிறேன். இன்னாபா ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சின்னு டிக்ளேர் பண்ணே. க்ளீன் ஸ்வீப்பா இருக்கேன்னு கேப்பிக. அம்மாவுக்கு நடக்கறது சந்திர தசை . இதன் படி ஜாதகர் வாழ்க்கையில ஒருவித நிலையற்ற தன்மை, திடீர் தன்மை இருக்கனுங்கறது ஜோதிட விதி.

கூட்டணி ஆட்சி ஏற்பட்டாதானே மேற்படி நிலையற்ற தன்மை, திடீர் தன்மை எல்லாம் மெட்டீரியலைஸ் ஆகும்னு கெஸ் பண்ணித்தேன் கூட்டணி ஆட்சின்னு சொல்லி வச்சேன்.

கெஸ்ஸிங் ஃபெய்ல் ஆகலாம். ஜோதிட விதி ஃபெயில் ஆகாது. மேற்படி நிலையற்ற தன்மை, திடீர் தன்மைல்லாம் வேறு எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

25 thoughts on “அய்யய்யோ ஆத்தா முறைச்சு பார்த்தா

  sugumarje said:
  May 13, 2011 at 6:08 am

  //அய்யய்யோ ஆத்தா முறைச்சு பார்த்தா//
  அம்மா ஜெயிச்சத மறைமுகமா சொல்லிடீங்களே !

  arul said:
  May 13, 2011 at 6:18 am

  murugesh anna, en mailku reply panninga na romba uthaviya irukkum .romba naal achunganna

  டவுசர் பாண்டி said:
  May 13, 2011 at 8:03 am

  நைனாவுக்கு என்னோட வாழ்த்துக்கள். செயலலிதா தாயீ தனி மெஜாரிட்டியோட ஞாயிச்சி கெளமா பதவி யேர்கப்போவுது. நைனாவுக்கு முந்திரிக்கொட்ட மாதிரி முந்திக்குனு என்னோட வாழ்த்துக்கள பதிஞ்சி வேச்சிக்கிடுறேன். எங்கூருல நம்ம கணிப்பு தொக்குற மாறி வந்து கடைசில நாலாவது ரவுண்டுலருந்து ஐயாயிரத்து சொச்சம் வாகுகள் டிப்பரன்டுல ரெட்டெல செயிச்சி இங்கன பட்டய கேளப்பிக்கினு கீராணுவ. நமக்கும் நம்மூருல கொஞ்சகாண்டு வெய்ட்டு ஏறிக்கினு கீது. ஆனா நம்ம நன்றி சொல்றது மொதல்ல ருத்ர காளியம்மாவுக்கும், நெக்ஸ்டு கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஐயாவுக்கும், நெக்ஸ்டு நம்ம நைனாவுக்குந்தேன். நமக்கு இன்னிக்கி வெய்ட்டா செயலலிதா கச்சிக்காரவுக பார்ட்டி அறேஞ் பன்னிருக்காங்கோ. டேங்சு நைனா.

  செயலலிதா தாயீ ->ருத்ர காளியம்மா->வெள்ளி கிழமை ->13-ந்தேதி ->ராகு பெயர்ச்சி ->ஆத்தா முறைச்சு பார்த்தா

  எல்லாமே சக்தி மயமா இருக்கே 🙂

   டவுசர் பாண்டி said:
   May 13, 2011 at 1:53 pm

   ராசான்னே,

   நமக்கும் ருத்ர காளிக்கும் ஒரு சின்ன டீலிங் உண்டு. அதாவ்து நா இப்ப ஒங்கள்ட்ட என்னோட போட்டாய குடுத்து எனக்கு செய்வினை (பாபா படத்துல வர்றமாரி) வைங்கோன்னு சொல்றேன்னு (சும்மாங்காட்டி) வெச்சுக்குவோம். நீங்க ஒரு க்ரூப்பா அத்த பண்றீன்கொன்னு வெச்சுக்குவோம். அந்த நேரத்துல எனக்கு சூட்சுமமா ஒரு மெஸ்சேஜ் வரும். நீங்க அனுப்பிவிட்ட அந்த செய்வினை மேட்டர் இருக்குல்லா அது நம்மளோட இன்பாக்சுல வெயிட் பண்ணிட்டு இருக்கும். நான் அத்த அக்செப்ட் பன்னாத்தேன் அந்த செய்வென என்ன தாக்கும். நா ரிஜக்ட் பண்ணிட்டேன்னு வைங்கோ, அத்து சொவத்துல வேகமா ஒரு பந்த எரிஞ்சா எப்பிடி போன வேகத்துல ரிட்டன் வருதோ அத மாறி திரும்ப பவுன்சாகும். இது என்ட மட்டும் உள்ள சீமை ரகசியம் கடியாது.

   நீங்களும் முயற்சி ப்ளஸ் பயிற்சி செஞ்சாக்க நீங்களே உணரலாம். நமக்கு கிப்னாட்டிசமும் (கொஞ்சகாண்டு) கை வந்த கலைதேன். நம்ம கண்ணும் விசயகாந்து தம்பி மாறி (புல்லா ரெட்டு கடியாது) கருவிழிய சுத்தி பொடி நரம்பு ரெட்டிசா மின்னல் மாறி இருக்கும். வெறித்தனமா சின்ன வயசுலேயே பலகுனதாலே நரம்பு வெளிய வந்துட்டு.

   எந்த பொருளையும் கண்ண மூடாம வெரிச்சினு பாத்துக்கினு இருக்குற பவர் நமக்கு கொஞ்ச காண்டு உண்டு. இப்ப உதாரணத்துக்கு ஒரு பென்சில டேபிள் மேல வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்குவோம். அந்த பென்சில ஒங்க கண்ணு முன்னாடியே தொடாம லவட்டிருவோம்லா. இன்னாடா இது டவுசரு ஓவரா அள்ளி வுடுராநேன்னு பாக்கீங்களா. இதெல்லாம் ஒங்களுக்கும் வரும் அல்லாருக்கும் வரும். பயிற்சி ப்ளஸ் முயற்சி இருந்தா அம்புட்டு மேட்டரும் ஒங்க காலடிலதேன் கெடக்கும்.

   ஏம்ப்பா டவுசரு ரொம்ப பிலிம் காட்டிக்கினு கீறியே, எதாவது நிருபிச்சி காட்டு பாக்கலாம்னு நீங்க நம்ம கைல சண்டைக்கு வர்றீங்கன்னு வெச்சிக்குவோம். நா ஒங்க போட்டாய கேப்பேன். இன்னிக்கி நைட்டு பன்னெண்டு மணிக்கி மேல ஒங்க மைண்டுல ஒரு மேச்செசு பேக்சு மிசின்ல வர்ற மாறி மொள்ள மொள்ள இங்கம்மின்க்ள இருக்கும். மனுசனோட மூளைய பத்தி என்ன நெனச்சீங்க.

   நம்ம அல்லாரோட மூளையோட பவருக்கப்புரந்தேன் இந்த செல்லு, கம்பீட்டரு மத்த இத்தியாதி. வலது பக்க மூளைய அக்டிவேட் பண்ணுங்க அப்புறம் பாருங்க வெளாட்ட.

    Mohamed Ismail said:
    May 14, 2011 at 4:59 am

    பாண்டி அண்ணே என்னென்னமோ கதையெல்லாம் சொல்லறீங்க. இதை ஒரு கட்டுரையாக இந்த வலைதளத்திலேயே சொன்னால் நாங்களும் பழகி பயன்பெருவோமே. அல்லது பப்ளிக்கா சொல்ல முடியாட்டி ஒங்க ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளும் ஆர்வம் உள்ளவர்க்கு சொல்லலாமே.

    டவுசர் பாண்டி said:
    May 14, 2011 at 9:13 am

    இஸ்மாயிலன்னே,
    ஒங்க ஆர்வத்துக்கு நன்றினே. ஒங்களுக்கு கண்ணுல பவரு இருக்கானு ஒரு சின்ன டெஸ்ட். இது தப்பான மேட்டருதேன். இருந்தாலும் நல்ல சோலிக்கு மட்டும் பயன்படுத்திநீங்கன்னா புன்னியமாப்போவும். இல்லாங்காட்டி நமக்கும் கொஞ்சகாண்டு பங்கு வந்து சேரும். அப்பால நானும் ஷேர் ஹோல்டரா அனுபவிக்க வேண்டிருக்கும். பொட்ட புள்ளைங்கள மயக்கி(ர) சோளி பாத்துராதீங்கோ. சரி. இப்ப ரோட்டுல ஒரு வயசுப்புள்ள போய்க்கினு இருக்குன்னு வெச்சிக்குவோம். அந்த புள்ளையோட காதுக்கு கீழே கழுத்துல உள்ள செயினுக்கு மேல (அதாவது பெடதி) ஒங்களோட பார்வைய கொண்டு போயி ஜூம் பண்ணி “திரும்பு” அப்டின்னு கண்ண மூடாம அதாவது வச்ச கண்ணு வாங்காம மனசுக்குள்ளார சொல்லிக்கிநேருங்கோ. (அதிகபட்ச டைம் ரெண்டு நிமிசந்தேன்). ரிசல்ட்டு பாசுன்னா நீங்க டைரக்டா நம்ம பேட்டைக்கு டைரக்டா வந்துரலாம். ரிசல்டு பெயிளுன்னா என்ட்ரன்ஸ் எக்ஸாம் எளிதிக்கினு வரணும். இத பப்ளிக்கா சொல்ல ஒருமாரியாத்தேன் கீது. தாய்க்குலங்கள் வேற தரிசனம் குடுக்குறதால நாக்கு வேற கூசுது. நல்ல சோலிக்கு பயன்படுத்தி நல்லாருப்போம்.

    டவுசர் பாண்டி said:
    May 14, 2011 at 9:39 am

    அடி கிடி கிப்டா கெடச்சிசினா நா அம்பேல். இல்லாங்காட்டி இத செஞ்சி பாருங்கோ. ரூம இருட்டாக்கிக்கினு ஒரு மெழுவர்த்திய கொளுத்தி அத ஒரு நிமிஷம் இல்லாங்காட்டி அஞ்சி நிமிசமோ ஒரு நாலடி டிச்டன்சுல பாத்துக்கினே இருங்கோ. (கண்ணீரு பெருக்கெடுத்து ஓடுதா? எப்டின்னு சொல்லுங்கோ) பொறவு கண்ண மூடி ஒரு அஞ்சி நிமிசமா அந்த மெழுவர்த்தி வெளிச்சத்த ஒங்களோட புருவ மத்தில பாத்துக்குநேருங்கோ. சேனல் க்ளியரா தெரிதா? எப்டின்னு சொல்லுங்கோ. இதுக்கப்புரந்தேன் மெய்ன் மேட்டர் கீது. . ஒபெநிங்லையே பஸ்ட் கியருலையே பாஸ்ட்டா போயிராதீங்கோ. அப்பால தலவலி, மயக்கம் வந்துரும்.

    Mohamed Ismail said:
    May 14, 2011 at 10:34 am

    அண்ணே நீங்க சொல்லி இருக்கும் இரண்டாவது அந்த மெழுகுவர்த்தி பயிற்சி ஏற்கனவே வேதாத்ரி மகரிஷி அவர்களின் அகத்தாய்வு பயிற்சியில் தீப பயிற்சி என்னும் முறையில் அகல் விளக்கை கொண்டு சொல்லி தந்துள்ளார்கள். அதனை அடிக்கடி செய்து வருகிறேன். மேலும் மகாவதர் பாபாஜி க்ரியா யோகா முறையிலும் இதனை போன்றே ஒரு பயிற்சி தீபம் ஏற்றமலே வெறும் கைகளை முகத்திற்கு முன்னர் வைத்து தீபத்தை தரிசிக்கும் முறை சொல்லி தந்துள்ளார்கள்.

    S Murugesan said:
    May 14, 2011 at 12:44 pm

    இஸ்மாயில் & டவுசர் பாண்டி,
    குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும். மெழுகவர்த்தியை விட சிறு நெய் தீபம் பெட்டர். இதைவிட கருவிழிகள சற்றே மேலேற்றி ( ஃப்ரீயா – லேசா) புருவங்களுக்கிடையில் நினைவு வைத்து சுடர் ஒன்றை கற்பனை செய்வது பெஸ்ட்.

    இந்து கோவில் கர்பகிரகங்கள் இருட்டாய்/வெளிச்சக்குறைவாய் இருப்பதும், அங்கு நெய் தீபம் எரிவதும் /கற்பூர ஜோதி காட்டறதும் (இப்பம் வர்ரதெல்லாம் ஜஸ்ட் கேம்ஃபர் – சைனஸ் பிரச்சினைதேன் வரும்) நமக்குள் உள்ள சுடரை நினைவுப்படுத்தத்தான்.

    மேற்படி மெழுகுவர்த்தி, நான் சொன்ன நெய்தீபத்தின் நோக்கமும் இதுதான். மேட்டர் விளக்குல இல்லை. நீங்க அதை உற்றுப்பார்க்கிறதுல இல்லை. அது உங்களுக்குள்ளே இருக்கிற சுடரை நினைவுப்படுத்தினா அதுதான் மேட்டர்

    S Murugesan said:
    May 14, 2011 at 12:48 pm

    பாண்டி,
    இதுக்கு பெண்குட்டியோட பின்னந்தலையையே பார்க்கனும்னு அவசியமில்லையே. மேலும் இது ஒர்க் அவுட் ஆவதற்கான காரணம் நெற்றிக்கண்ணின் /ஆக்னாவின் தொடர்ச்சி அங்கன இருக்கிறதுதேன்.

    முன்னே போற பார்ட்டி திரும்பாம போக நம்ம சக்தி குறைவு மட்டும் காரணம் இல்லே. அந்த பார்ட்டி உணர்ச்சி கெட்ட சன்மமாவும் இருக்கலாமில்லையா/

    டவுசர் பாண்டி said:
    May 14, 2011 at 1:40 pm

    ஸ்ஸ்ஸ்ஸ்…. அப்பாடி ஒரு வழியா நைனாவோட மவுன வெரதத்த கலச்சாச்சி.

    டவுசர் பாண்டி said:
    May 14, 2011 at 2:22 pm

    இஸ்மாயிலன்னே,
    வேதாத்திரி சொன்னத நல்லா பலகிட்டீங்களா? படிச்சிருக்கீங்களா? ஓஷோ என்ன சொல்றாருணா, ஒரே ஒரு நிமிஷம் உண்மையா மனக்குருக்கீடு ஏதும் இல்லாம தியான செய்றது ரொம்ப கஷ்டமான காரியம். ஆனா முடியாததல்ல. கடியாரத்துல உள்ள வினாடி முல்லா ஒன்னுலருந்து அறுவது வினாடிக்கு நவளுரத சார்ப்பா கவனிங்கோ. அத வெறுமனே சாட்சியா கவனிங்கோ. அதிக பட்சம் அந்த வினாடி முள்ளு பத்த தாடுரதுக்குல்லாற ஒங்க கண்சென்றேசன் கொரங்கு மாறி வேற மேட்டருக்கு தாவிரும். இத கவனிச்சி மறுபடியும் ஒங்க கவனத்த அந்த முள்ளு மேல வக்கிரத்துக்கு மேலும் செல நொடி காலி. இப்பிடி டெயிலி பயிற்சி செஞ்சாக்க இந்த நிமிஷ தியானத்த நீங்க கேப்பில்லாம கவனம் சேதராம அழகா அம்சமா செய்ய முடியும்.

    Mohamed Ismail said:
    May 15, 2011 at 6:30 am

    Please பாண்டி அண்ணே உங்க மெயில் அட்ரஸ் கொடுங்களேன்.
    ismaa@sify.com

    டவுசர் பாண்டி said:
    May 15, 2011 at 9:33 am

    இஸ்மாயிலன்னே,
    ரொம்ப நன்றினே. மெயில் ஐடி எல்லாம் கேக்கிறீங்க. ரொம்ப சந்தோசமாருக்கு. ஆனா நீங்க கேக்கப்போற அந்த மேட்டருக்கான சரக்கு நம்மல்ல்ட்ட ஸ்டாக் இருக்கானு தெரிலனே. தப்பா எடுத்துக்காதீந்கனே. நமக்கு கொஞ்சம் வாய் வேற சாஸ்தியா அதால நேரிய மேட்டரு நாஸ்தியாட்டுனே. செயலலிதா தாயி மாதிரி நெறிய வாக்குறுதி குடுத்துட்டேன்னு நெனைக்கிறேன். எதப் பத்தி கேக்கப்போறீன்களோன்னு நெனைக்கச்ச பிகிலாகீதுனே. எந்த மேட்டரப்பத்தினாலும் டவுட்ட கிளியர் பண்ண நைனா இருக்கும் போது நமக்கென்ன கவலை. நானு எலரத்தம் கொஞ்சம் மொரட்டுத்தனமான சைட் எபக்ட் வர்ற மாறி என்னத்தயாவது ஒளரிருவேன். சோசிய மேட்டர செக் பண்ணச்சில நம்ம லேப்ல நாம மவுஸா இருந்து நம்ம மவுஸ ஏத்திருக்கலாம். ஆனா ஆயிசு மேட்டருல நம்ம மவுஸா இருந்தா நம்ம மவுசு எறங்கிரும்னே.

    Mohamed Ismail said:
    May 16, 2011 at 4:53 am

    அண்ணே என்னான்னே இப்படி ஜகா வாங்குறீங்க. பேசாம ஒரு பதிவு போடுங்களேன். நம்ப முருகேஷ் அண்ணன் ஒன்னும் கோச்சுக்க மாட்டார்
    பூடகமகவாவது ஒங்க மேட்டர போடலாம். புரிச்சவங்க சமர்துன்னு விட்டிடலமே

  டவுசர் பாண்டி said:
  May 13, 2011 at 1:28 pm

  நைனா சைடுல பழைய பதிவுகள மந்த்வைஸ் டேட் வைஸ் படிக்கிரமாரி வஸ்தி பண்ணிக்குடுப்பா. செயலலிதா தாயி மேட்டர தேடுரதுக்குல்லாற அந்த தாயி பதவி யேத்துடும்போல கீது. அந்த எடத்த வாடைக்கு உடப்போரியா?

  அங்கன ஒரு நடிகரு ஒலகமேடைல நடிச்சிக்கினு இருந்தாரு. அவரையும் காணோம். ரீசன்ட் கமெண்ட்ஸ் இருந்தது ரொம்ப வஸ்தியாருந்தது. சமீபத்திய கமென்ட் இருக்கச்சில எங்க சவுண்டு நாலு சனங்களுக்கு கேக்குற மாறி வெளிய கேட்டது. இப்ப இன்னாடான்னா கக்கூசுல மொனந்குற மாறி கீது நைனா.

  ஆரு ஆரு கமெண்டு போட்டுக்கினு போயிருக்காங்கன்னு கண்டுபுடிக்கிரதுக்கு ஓயாம பிரசன்னம் போட்டுப்பாக்க வேண்டியதாகீது மாமு.

   Mani said:
   May 13, 2011 at 2:55 pm

   கொஞ்சம் பொறு பாண்டி அண்ணன் வேற வேலை பண்ணிகிட்டு இருக்காரு. அது முடிஞ்சதுக்கப்றம் இதவிட இன்னும் சூப்பர் வசதியெல்லாம் (புது டெம்ப்ளேட்) வச்சி தருவாரு. சர்ப்ரைஸ்-ஆக இருக்கட்டுமேன்னு சைலன்டா இருக்கறாரு.

   என்ன நான் சொல்றது சரிதான முருகேஸ் அண்ணே!. அண்ணே! நீங்க பன்றது பன்றீங்க எதுக்குன்னே இப்ப தேர்தல் முடிவுகள் வர நேரத்துல பாதி சாமான தூக்கிட்டு போயிட்டீங்க. எதாச்சும் சிக்கலா ஆயிபுடுச்சோ என்னவோ. சீக்கிரம் புது வீட்டுக்கு பால் காய்ச்சி எங்கள கூப்பிட்டு போங்கண்ணே!.

  R.Puratchimani said:
  May 13, 2011 at 1:37 pm

  வாழ்த்துக்கள் ஐயா, தங்களுடைய கணிப்பு மெய்யாகியுள்ளது.

  Shakthi said:
  May 13, 2011 at 1:55 pm

  தலைவா கலக்கிட்டிங்க,
  கூட்டணியோ ,தனிப்பெரும்பான்மையோ யாரு ஆட்சியில் உட்க்காருவாங்கன்னு சொல்ல தனி தில்லு வேணும், ஜோதிடம் தங்களால் பெருமை அடைகிறது .தங்களால் எங்களுக்கு பெருமை ,தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  நன்றி ….

  Mani said:
  May 13, 2011 at 2:39 pm

  அண்ணே உங்க கணிப்பு சரிதான் அண்ணே!.

  உங்க பின்குறிப்புல அம்மாவுக்கு தற்போது சந்திர தசா நடக்குறதா எழுதியிருக்கீங்க

  உங்க முந்தைய கணிப்பு பதிவில் உள்ளது.
  ////ஜெயலலிதா: இப்ப ராகு தசை இவர் 11ல இருக்காரு.///

  ஒருவேளை ராகு தசாவில் சந்திரன் புக்தி நடக்கறதை சந்திர தசான்னு டைப் பண்ணிட்டீங்களோன்னு நினைக்கிறேன்.

  ஜெயா அம்மாவுக்கு ராகுதசை நடக்கறதா தானே தெரியுது. ராகு தசையில் செவ்வாய் புக்தி (360 நாள் விம்சோத்திரி தசா முறைப்படி) ஆகஸ்ட் 2010 முதல் தற்போது ஆகஸ்ட் 2011 வரை நடக்கும். பின்பு குருதசா ஆரம்பமாகும். குருவும் நன்மையைதான் செய்வார். 7, 10க்குடையவராச்சே.

  நீங்க சந்திரன் புக்தி காலம் நடக்கறதனால நிலையற்ற தன்மை என கணித்து கூட்டணி ஆட்சி வரும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த இடத்தில் ராகு தசாவில் செவ்வாய் புக்தி என வருவதால் (360 நாட்கள் விம்சோத்திரி தசா முறையில்) தனி மெஜாரிட்டியோட வந்துட்டாங்களோன்னு நினைக்கிறேன்.

  ஆனாலும் உங்க துணிச்சல் எங்களுக்கு பிடிச்சிருக்கு. (தில்லு துர)

  ஆமா ஒரு சந்தேகம் திமுக ஆளுங்ககிட்டேந்து தப்பிக்க தானே இப்போ பழைய ஆத்தா கதைய சொல்றீங்க. அதாவது உங்களை யாராச்சும் திட்டினா ஆத்தா கண்ணை குத்திடுவான்னு பயமுறுத்திறீங்களோ-ன்னு நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க எங்க ஏரியாவே பந்த் மாதிரி வெறிசோடி கிடக்கு.

  arulmani said:
  May 14, 2011 at 5:43 am

  Dear Mr.S.M can you explain ஆத்தாவுக்கு எந்த பீஜத்தை ஜெபிக்கனும்னு

   S Murugesan said:
   May 14, 2011 at 12:59 pm

   அருள்மணி,
   சமஸ்கிருதத்துல அம்பது எழுத்து இருக்காம். அதுகளோட “ம்” சேர்ந்தா அம்பது எழுத்துமே பீஜம் தேன். அவளுக்கு பஞ்ச தசாக்ஷர்யை நமஹன்னு ஒரு ஸ்துதி இருக்கு – அதாவது அம்பது எழுத்தாவும் இருக்கிறவளேனு அர்த்தம்.

   நம்ம அனுபவத்தை பொருத்தவரை ரெம்ப நொந்து கிடந்தா :ஓம் கல்வி- ஞானம் பிரகாசிக்க; ஐம்
   மாயை விலக : ஹ்ரீம் அச்சம் விலக: க்லீம் செல்வம் பெருக : ஸ்ரீம்

    arulmani said:
    May 14, 2011 at 2:36 pm

    அண்ணே,
    நமக்கு இந்த அல்ஜீப்ரா கணக்கு எல்லாம் வராதண்ணே,
    நம்ம இஷ்ட தெய்வம் பத்ர காளியும்,
    கிருஷ்னணரும் ரொம்ப புடிக்குமண்ணே
    இவங்ககிட்ட பேசுகிறம மாதிரி ஏதாவது பீஜம் சொன்னீங்கண்ணா
    கண்ணை மூடிகிட்டு ஒரு லட்சம் தடவை சொல்லி பார்க்கலாம்ணா

    S Murugesan said:
    May 14, 2011 at 5:14 pm

    அருள்மணி ,
    கொடுத்து வச்ச பார்ட்டி நீங்க க்லீம் என்பது டூ இன் ஒன்.காளிக்கும் அதுவே கிருஷ்ணருக்கும் அதுவே பீஜம் தேன்.

    “ஓம் க்லீம் நமஹா” அவ்ளதேன் பிடி பிடின்னு பிடிங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s