ஆண் X பெண் 12 வித்யாசம் : 2

Posted on

கடந்த பதிவின் சுருக்கம்:
நிறம்,அழகு,கவர்ச்சியையும் – உடல்,உள்ள,குண நலனையும் காட்டறது ஒரே பாவம்தான். பெண்கள் மேற்படி பாவத்தோட பவர் மொத்தத்தையும் தங்களோட நிறம்,அழகு,கவர்ச்சியை டெவலப் பண்றதுக்கே செலவழிச்சுர்ராய்ங்க. இது வீண் வேலை, வெற்றி கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அது அசிங்கமான தோல்வியை விட அசிங்கமானது.

இதை விட்டுட்டு உடல்,உள்ள,குண நலனை டெவலப் பண்ணிக்கிட்டா அது நிரந்தரம். இந்த முயற்சியில தோல்வியே கண்டாலும் அது கின்னஸ் வெற்றியை விட சூப்பர் வெற்றி.

தாய்குலம் இன்னைக்கு பின்பற்றும் பல விஷயங்களில் அவிகளுக்கு ஓரளவாவது அனுகூலம் தர்ர மேட்டர்கள் சில இருக்கு

1. பொட்டை சின்னதா வச்சுக்கிறது , பாப்,பாய் கட் பண்ணிக்கிறதுனால : வைதவ்ய யோகம் இருந்தா அவாய்ட் ஆகும்.

2.லண்டன்லயே பிறந்து வளர்ந்தாப்ல கொடுக்கிற அலப்பறைகளால, வீக் எண்ட்ஸ்ல பீர் இத்யாதி எடுத்துக்கறதால ராகு கேதுக்களோட எஃபெக்ட் குறையும்.

3.லேட் மேரேஜ் பண்றதால (அபவ் 30) செவ் தோஷம் இருந்தா அதனோட இம்பேக்ட் குறையும். இவர் ரத்தத்துக்கு காரகர். தினம் தினம் பல லட்சக்கணக்கான செல் செத்து புதுசா உருவாகுது. இந்த ரேஞ்சுல 30 வயசுக்கு டோட்டல் ப்ளட் மாறிரும்.

4.இஸ்லாமிய பெண்கள் வீட்டில் அணியும் உடைகளை அணிந்து திரிவதால் கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் குறையும்.

5.காஸ்ட்யூம் மாதிரி காதலர்களை மாத்தறதால , பிரியறதால களத்ர தோஷம் இருந்தா குறையும்

இன்னாபா ட்ராக் மாறிப்பூட்டேனா? மேட்டருக்கு வரேன் வரேன்.

நிறம் – அழகு – கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தர்ரதால என்னென்னா பிரச்சினை வரும்னு இப்போ பார்ப்போம்.

ஒரு பெண் பை பர்த் மாநிறமா இருக்காய்ங்கனு வைங்க அவிக மேல சனியோட எஃபெக்ட் குறைவா இருக்கும். அவிகளுக்கு லாஞ்சிவிட்டி அதிகம். பொறுமை அதிகம். நெர்வஸ் செட் அப் எல்லாம் பெட்டராவே இருக்கும்.

அதற்கு மாறா அந்த பெண் குருவிகள் கழிவது மாதிரியான கண்ட கண்ட களிம்பையெல்லாம் முகத்துக்கு போட்டு சிவப்பா தெரிய ஆரம்பிச்சா மேற்படி ப்ளஸ் பாய்ண்ட் எல்லாம் ஃபணாலாயிரும்.

நாவல்ட்டீஸுக்கு அதிபதி சுக்கிரன். ஜாதகத்துல சுக்கிரன் நல்லாருந்தால் இயற்கை அழகே தூள் கிளப்பும். அது சரியில்லாததால தான் சுமாரா இருப்பாய்ங்க. ஆனா அவிக கண்ட கண்ட டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணினா , டன் கணக்கில் நாவல்ட்டீஸை உபயோகிச்சா அவிகளுக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். வீட்ல ரிலேஷன் பாதிக்கப்படலாம். சிறு விபத்துகள் கூட நடக்கலாம்.

நெக்ஸ்ட் ஒன் . இவிக ஜாதகத்துல சந்திரன் நல்ல இடத்துல இருந்தா ஆட்டோமெட்டிக்கா எவ்ள பெரிய கூட்டத்துலயும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துர முடியும். அது இல்லாதவுக ( சந்திர பலம்) செயற்கையா ஒர்க் அவுட் பண்ணி கவனம் கவர பார்த்தா மனம், நுரையீரல் ,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

மேற்படி குறுக்குவழிகளால தங்கள் தன்னம்பிக்கைய வளர்த்துக்க முடிஞ்சா பல்,தலை,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான வியாதிகள் வரலாம்.

மேற்படி குறுக்குவழிகளால தங்கள் சர்க்கிள்ள நிலவக்கூடிய போட்டியில ஜெயிச்சுட்டா ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

ஆனால் மேற்படி நிறம்,அழகு,கவர்ச்சி மேல இருந்து தங்களோட கவனத்தை உடல்,உள்ள,குண நலன்கள் பக்கமா திருப்பிட்டாய்ங்கன்னு வைங்க…மேற்படி பிரச்சினைகள்ளருந்து விடுபடலாம்.

தற்காலிகமான நிறம்,அழகு,கவர்ச்சியை டெவலப் பண்ண்ணிர முடிஞ்சாலும் ஒரு காதலியா -மனைவியா தான் சக்ஸஸ் ஆகமுடியும். அதுவும் கொஞ்ச நாளைக்கு.

உடல்,உள்ள,குண நலன்களை டெவலப் பண்ண முயற்சி பண்ணா மகளா,அக்காவா,தங்கச்சியா,டீச்சரா,நர்சா,கான்ஸ்டபிளா எப்படி வேணம்னாலும் சக்ஸஸ் ஆகலாம்.அதுவும் நிரந்தரமா.

உண்மை கசக்கும், நிஜம் சுடும், சந்தேகிக்க சொல்லும். அது சகஜம் தேன். சொம்மா ஒரு மூலைல போட்டு வைங்க. முடிஞ்சதை உடனே ஃபாலோ பண்ணுங்க – அப்சர்வ் பண்ணுங்க -பலன் இருந்தா கன்டின்யூ பண்ணுங்க. இல்லாட்டி விட்டுருங்க.

பெண்களுக்கே இதுதான் என் அட்வைஸ்.ஆண்களுக்கு ? ரோசிங்க நைனா..

அடுத்து ரெண்டாவது இடத்தை பார்ப்போம். இது தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானம். தாய்குலத்துக்கு இந்த ரெண்டாவது பாவத்துல உள்ள பவர் எல்லாமே வீண் பேச்சுலயே செலவாயிருது. பேச்சுன்னா பேச்சு ஒங்க வீட்டு பேச்சு எங்க வீட்டு பேச்சு கிடையாது.

அதுலயும் இவிக உலகம் ரெம்ப சின்ன உலகமாச்சா ஒரு பத்து கேரக்டர், பத்து சப்ஜெக்டை விட்டா வேற பேச்சே கிடையாது. இவிக பேச்சு எதைப்பத்தி ஓடுதுன்னு சர்வேல தெரிஞ்சுக்கிட்டுத்தேன் டிவி காரவுக கொக்குக்கு ஒன்றே மதின்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்காய்ங்க.

நான் என்ன சொல்லவரேன்னா ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளயும் ஆறாத ரணம் இருக்கு. நம்ம பேச்சு பென்சிலின் ஆயின்ட்மென்ட் பூசப்பட்ட ஒரு மயில் தோகை மாதிரி இருக்கனும்.

லிமிட்டட் சர்க்கிள்ள, ஒரே பத்து மூஞ்சிங்கள பார்த்து ,ஒரே பத்து சப்ஜெக்டை பேசிக்கிட்டிருக்கும்போது போர் அடிச்சு போகுது. எதிராளியோட /அட்லீஸ்ட் அங்கன இல்லாத ஒரு கேரக்டரோட இதய ரணத்தை கீறும்போது ஒருவித சுவாரஸ்யம் பிறக்குது.

போலீஸ் டிப்பார்ட்மென்ட் இன்னைக்கு இப்படி இழவெடுக்க காரணம் என்ன? எஸ்.பி சி.ஐ களை டார்ச்சர் பண்ண, சி.ஐ எஸ்.ஐ ய டார்ச்சர் பண்ண,எஸ்.ஐ ஹெட்டை ,ஹெட்டு கான்ஸ்டபிளை,கான்ஸ்டபிள் ஊர்காவலரை டார்ச்சர் பண்ணுவாய்ங்க. ஊர்காவலர் நம்மை டார்ச்சர் பண்ணுவாரு.

அப்பன், ஆயி, புருசன் காரன், மாமனார்,மாமியாரு மச்சினனால டார்ச்சருக்குள்ளான பெண் ஆட்டோமெட்டிக்கா பிறரை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ரா. துக்கத்துல உள்ள மனசு துக்கப்படுத்தத்தான் பார்க்கும்.

வாய் -ஆசனம் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவு. வாயில் ஏற்படும் அதிர்வுகள் நுட்பமான முறையில் ஆசனத்தையும் -அதையொட்டி அமைந்துள்ள இன உறுப்பையும் பாதிக்கின்றன. இதனால் பேச்சில் இனம் புரியாத ஒரு சுகம் ஏற்படுகிறது.

டெக்னிக்கலான உடலுறவுக்கோ -உடலுறவில் உச்சத்துக்கோ வாய்ப்பில்லாத நிலையில இப்படி ஒரு சுத்துவழிய உடலும் -மனசும் ஏற்படுத்திக்குது.

ஆக்சுவலி ஒவ்வொரு குழந்தையும் ஆசனப்பருவத்தை தாண்டித்தேன் வருது. (சைக்காலஜி) ஆனால் அதனோட கவனம் இன உறுப்பின் பக்கம் நகரும்போது குடும்பம் /சமூகம் ஒட்டு மொத்தமா “ஸ்டாப்”னுட்டு பெரிய்ய எழுத்துல அலறுது.

இதனால வேற விதியில்லாம அந்த குழந்தை ( ஐ மீன் டீன் ஏஜர்) ஆசனப்பருவத்துக்கு திரும்ப வேண்டிய அவசியம் ஏற்படுது. ஒரு சில குழந்தைகள் இன்ன பிற வடிகால்கள் மூலம் ஆசனப்பருவத்துக்கு திரும்பாம சமாளிச்சுராய்ங்க.

ஜோதிஷ ரீதியா பார்க்கும்போது ரெண்டுக்கு சம சப்தகத்துல உள்ள இடம் 8 . இது இன உறுப்பை காட்டுமிடம். அங்கன உள்ள கிரகம் ஏழாம் பார்வையா இங்கன பார்க்கும். இங்கன உள்ள கிரகம் ஏழாம் பார்வையா அங்கன பார்க்கும். எட்டில் உள்ள கிரகம் ரெண்டை பார்த்தா பேச்சு பேச்சு பேச்சுத்தேன்.

தன் ஆயுளை குறைக்கும் பேச்சு. எதிராளியை கொல்லும் பேச்சு. தற்கொலைக்கு தூண்டும் பேச்சு. பேச்சு பேச்சு பேச்சுதேன். வெறும் பேச்சு – பொங்கறது -திங்கறதுன்னு இருக்கிற எல்லா பார்ட்டியோட நிலமையும் இதான்.

தாய்குலத்துக்கு என் சஜஷன். பேச்சை குறைங்க. பேச்சை குறைங்க. அப்படியே பேசனும்னா ஒரு அஜெண்டா போட்டுக்கிட்டு பேசுங்க. உங்க உலகம் சின்னதுதான். அந்த உலகத்தோட ட்ரெண்ட் தெரிஞ்சாகனும்ந்தான். இல்லேங்கலை.அந்த உலகத்துக்கு அப்பால ஒரு உலகம் இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமில்லியா?

பின்லேடன் யாரு? அவரை உருவாக்கினது எது? வளர்த்துவிட்டது எது ? அவரை போட்டு தள்ளிட்டாய்ங்க. இதனோட விளைவுகள் என்னவா இருக்கும் ?

பாக்கிஸ்தான் ஏன் தன் ராணுவத்தை இந்திய எல்லை நோக்கி நகர்த்துது. இந்தியா ஏன் இன்னமும் பட்டியல் தயாரிச்சு பாக் அரசுக்கு அனுப்பிக்கிட்டிருக்கு.? அமெரிக்கா மட்டும் எப்படி பின்லேடனை அடிச்சு தூக்கிருச்சு?

நம்ம முருகேசன் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு ஒரு பதிவே போட்டிருக்காராமே? அதுக்கான ஜோதிட காரணங்கள் என்ன? அது மெட்டீரியலைஸ் ஆக உள்ள /தற்சமயம் ஏற்பட்டுள்ள டெவலப்மென்ட்ஸ் என்ன?

அட .. இன் டீட்டெய்ல்டா இல்லாட்டாலும் – ஒரு அவுட் லைனையாவது தெரிஞ்ச்சுக்க வேணாமா? க்ளோபலைசேஷன் -ப்ரைவைட்டைசேஷன் – இதெல்லாம் எங்கனயோ சிக்ஸ் ட்ராக் ரோட்ல போயிட்டிருக்குனு நினைச்சுராதிங்க தாயீ..

உங்க காலனிக்குள்ளயும் நுழையும் – அப்பார்ட்மென்ட் படியும் ஏறும் -உங்க வீட்டு கதைவையும் தட்டும்.

எச்சரிக்கை:
மேலுக்கு இது ஏதோ பெண்களுக்கு மட்டும் எழுதப்பட்ட பதிவா தோனும். நெஜம் என்னன்னா நூத்துக்கு 60 பேர் ஆம்பளைங்க கூட இதே ரேஞ்சுலதேன் இருக்காய்ங்க.

முழிச்சுகங்கப்பு. அட நாளைய அழிவை தடுத்து நிறுத்தாட்டி போவுது? போராட்டாட்டி போவுது? குறைஞ்ச பட்சம் அழிவு நிச்சயம்னாச்சும் தெரிஞ்சுக்கங்கப்பு.

டெட்லைன் இருந்தாதேன் வாழ்க்கை இனிக்கும். கேயாஸ் தியரி தெரியும்ல? சபரி மலையில வண்டிய ரிவர்ஸ் எடுத்தவன் எவனோ? செத்தவுக யாரு பெத்த புள்ளைகளோ?

பேசுங்க ராசா வேணாங்கலை. அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கனும். டைம் லிமிட் இருக்கனும்.

பேச்சுன்னு வரும்போதே அங்கன கவுண்டர் பார்ட் ஒருத்தரு இருப்பாய்ங்க. ஒடனே ஹிப்பாக்ரசி துவங்கிரும். (எழுத்து கூட ஒரு பேச்சு தேன் – அதனாலதான் எழுத்துக்கள்ள 99.9 சதவீதம் பொய் .பொய் .பொய்.

பேச்சை விட சிந்தனை பெட்டர். அதுவும் குருட்டு யோசனையா இருக்கக்கூடாது. அதுக்கும் ஒரு அஜெண்டா இருக்கனும். டைம் மிமிட் இருக்கனும்.

ஜஸ்ட் ஒன்பது நாள் பேச்சை குறைங்க. உங்களுக்கு/உங்க ஆத்துக்காரருக்கு ஃபைனான்ஸ் ஃப்ளோ அதிகரிச்சே தீரும். உங்க பேச்சுக்கு மதிப்பு கூடும்.வாக்பலிதம் கூட ஏற்படலாம். பேச்சில் இனிமை கூடும்.

ஓகே உடுங்க ஜூட்

Advertisements

10 thoughts on “ஆண் X பெண் 12 வித்யாசம் : 2

  kalyan said:
  May 11, 2011 at 9:52 pm

  ஐயா முருகேசன் அவர்களே, ரொம்ப நல்லா சொன்னீங்க. உண்மையிலேயே பேச்சை குறைச்சா நல்லதுதான் (ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி). பேச்சை குறைச்சி சிந்திங்கன்னு சொல்றீங்க…அதுவும் ஆக்கபூர்வம சிந்திங்கன்னு சொல்றீங்க. நிச்சயம் நல்ல விஷயம். அதுமட்டுமில்லாம பேச்சில் கிடைக்கும் இன்பம், அந்த இன்பத்தை வேண்டி (நம்மை அறியாமலேயே) மீண்டும் மீண்டும் பேசுவது… நிறைய விஷயங்களை சொல்லி இருக்கீங்க. அதிகமா பேசறவங்களை பார்த்ததும் அதோ ஓட்டை வாய் வராண்டான்னு எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க. பேசி பேசி சக்தியை வீணாக்குவதை மட்டுமிலாமல் மரியாதையும் கெடுத்துக்கொள்வதை விட, பேச்சை குறைச்சி தேவைக்கு பேசினால் நல்லதுன்னு சொல்றீங்க.. மிக நல்ல பதிவு.

   S Murugesan said:
   May 11, 2011 at 11:47 pm

   வாங்க கல்யாண்,
   பாராட்டுக்கு நன்றி. சாஸ்தி பேசி – மொக்கையான பார்ட்டிதான் நானும்.ஆனால் கடவுள் புண்ணியத்துல 1994 ல அப்பா போன பிறவு சனம் நம்மை ஒதுக்கி வச்சு ரோசிக்க வச்சுட்டாய்ங்க. ரோசிச்சதுல பேச்சோட பொருளற்ற தன்மை உறைச்சது.

   சனம் விலகினா சனார்தனன் சரசமாட வந்துர்ராரு. பேச்சை குறைச்சா சனம் விலகும். இதான் நம்ம அனுபவம்

  டவுசர் பாண்டி said:
  May 12, 2011 at 2:00 am

  ஆண் பெண் வேருபாட வேறுபாடில்லாம காட்டிட்ட நைனா. நாளிக்கி எலக்சன் ரிசல்ட்டு இங்கன அம்புட்டு கச்சிக்காரவுகளும் பேதியாகிப்போயி கெடக்ராணுவ. ரெண்டு பார்ட்டிக்கார பார்ட்டிகளும் நம்மலுக்கு கொஞ்ச காண்டு பழக்கங்கிரதால ரெண்டு வேர்ட்டையும் இன்னாத்த சொல்றதுன்னே புரியலே. போன மாசம் வரிக்கி ரெண்டு வேர்ட்டையும் ஒங்க கட்சிதான்னே செயிக்கும். இப்பிடி அவிகளே என்கரேஜ் பண்ணி பண்ணி நம்ம நெலம டிஸ்கரேஜ் ஆயிட்டு. பாத்தேன் இது சரிப்பட்டு வராதுன்னு. ரெண்டு கலர் உள்ள (அதாவ்து சனி+செவ்) பார்ட்டிக்காரவுகலட்ட நக்கீரனும், மூணு கலர் உள்ள (அதாவ்து சனி+செவ்+சந்) பார்ட்டிக்காரவுகல்ட்ட சுதேசியவும் காட்டி நாலு வார்த்த பேசிட்டு வந்த்துர்றது. நேத்துதேன் நெனச்சேன். முருகா, அந்த முருகன் (எஸ் எம்) கணிச்ச மாறி செயலலிதாதாயிய செயிக்க வச்சிரு முருகான்னு உருக்கமா நேத்து தேன் திருசெந்தூர் முருகன் கோயில்ல வேண்டிக்கினு என்னைய நானே ஒரு சுத்து சுத்திட்டு கண்ண தொறந்தா பின்னாடி கச்சிக்கார பார்ட்டிங்க சட்டையில்லாம வருசியா (முருகன பாக்கனும்னா எப்பேர்பட்ட சிங்கமாருந்தாலும் டாப்புல ஒன்னும் இல்லாமத்தேன் போகணும் அந்த கோயில் ரூல்சு) வந்துச்சுங்க. திடீர்னு அம்புகச்சிக்காரவுகளுக்கும் பக்தி முத்திக்கினு.

  நாங்க இங்கன ரெண்டு பார்ட்டிக்கும் உள்ள வித்தியாசத்த படம் வரைஞ்சி பாகம் குரிச்சிக்கினு (கிழிச்சிக்கினு) இருந்தோம். நைனா சைட்டுக்கு வந்து பாத்தா ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தே கிளியர் பண்ணிருக்காரு. அது சரி ரெண்டு பார்ட்டிளையும் ஒன்னு ஆணு இன்னொண்ணுல பெண்ணு தானே.

  டவுசர் பாண்டி said:
  May 12, 2011 at 2:10 am

  நைனா இந்த சைட்டுல பழைய மேட்டர அதாவ்து, இப்ப “இந்திய நகரம் இருட்டுக்குள்ள” அப்டின்ற பதிவ படிக்க தேடுனா அந்த மேட்டரு வெளிச்சத்துக்கு வர மாட்டுக்குபா. நெக்ஸ்டு நேச்டுன்னு குடுத்து தேடுரத்துக்குள்ள டவுசர் கழண்டுருது. ப்ளாகுகல்லா உள்ள மாறி மந்து வைசு டேட்டு வைசு பாக்க எதுனாச்சு ஒதவு நைனா. பழைய பதிவ தூசியில்லாம புதுசா படிக்க ஏதாவது ஐடியா பண்ணு நைனா.

  என்ன தல ,
  follower option காணோம் , பழைய பதிவை படிக்கும் option காணோம்….
  திருப்பதி மொட்டை கணக்கா வலைதளம் இருந்தா எப்படி ?

   S Murugesan said:
   May 12, 2011 at 10:26 am

   ராசா,
   எல்லாமே இருக்கு. இன் ஆக்டிவ் விட்ஜெட்ஸ்ல இருக்கு. மறுபடி வச்சிருவம்ல. ப்ளீஸ் வெய்ட் !

  arul said:
  May 12, 2011 at 3:59 pm

  hi

  In this article between the diffrences between a male and a female you had started from lagna but had not told the remedy for males.oru post iruntha nallathu . engalukkum uthaviya irukkum.appuram en mailku reply ya oru post undunnu sonnengalae athu ithu thana ?

  வாழ்த்துக்கள் சார்,

  உங்க கணிப்பு பலிச்சிருக்கு .

  தொடரட்டும் .. தங்கள் பணி சிறக்கட்டும்

  swami said:
  May 13, 2011 at 5:42 am

  அண்ணா வாழ்த்துக்கள். உங்க ஜோதிடம் ஜெயித்தது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அம்மா திரும்பி வரது பயம்மா இருக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s