ஆண் X பெண் : 12 வித்யாசம்

Posted on

இயற்கை கொடுத்திருக்கிற வித்யாசம் உயிரின் முழுமுதல் ஆணைய நிறைவேற்ற இயற்கையா பார்த்து கொடுத்த சமாசாரம். இந்த பதிவு அதை பற்றியதல்ல.ஜோதிடத்தை பொருத்தவரை பாவங்கள், கிரகங்கள் வேலை செய்வதில் உள்ள வித்யாசத்தை சொன்னா என்னனு ஒரு ஸ்பார்க்.

1.லக்னம்:
இது உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி ஆகியவற்றை காட்டும் பாவம். நமக்கு தெரிஞ்சு தாய்குலம் தங்களோட உடல்,உள்ள ,குண நலன்கள் மேலே அக்கறை காட்டற மாதிரி தெரியலை. அவிக அக்கறையெல்லாம் தங்களோட அழகு , நிற‌ம்,கவர்ச்சி மேலதேன்.

அழகு,கவர்ச்சி ஆருக்கு தேவை ( வேணாங்கண்ணா வில்லங்கமாயிரும்) ஏதோ கண்ணாலத்துக்கு மிந்தின்னாலும் பரவால்லை அது சரி மார்க்கெட்டிங்குக்கு இது கூட இல்லைன்னா எப்படினு சமிச்சு விட்டுரலாம் (மன்னிச்சு)

ஆனால் கண்ணாலத்துக்கப்பாறமும் இதே இழவுதேன் வெளி உலகத்துல அழகு , நிற‌ம்,கவர்ச்சில்லாம் கொட்டி கிடக்கு, அட நம்ம தமிழ் சினிமாவ எடுத்துக்கங்க ஒவ்வொரு குட்டியும் நின்னு விளையாடறா. எத்தீனி புங்கனூரு சேர்ந்தா ஒரு பெங்களூரு?

உசர உசர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா? புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா? இயற்கை ஒவ்வொரு உசுருக்கும் ஒரு தனித்தன்மைய கொடுத்திருக்கு. அது என்னனு கண்டுபிடிக்கனும். அதை ப்ரொஜெக்ட் பண்ணனும்.

நான் போயி ரஜினிகிட்டே சிகரட் ஸ்டைல் காட்டினா என்னாகும்? பாலகுமாரன் ஒக்காபிலரில சொன்னா வழிச்சுண்டு சிரிப்போ. நாம 1989 லயே கங்கை காவிரி இணைப்புக்கு 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கிறதுதேன் வழின்னு டிசைட் பண்ணியாச்சு. 1993 ல ஜனசக்தி பத்திரிக்கையில பப்ளிஷும் ஆயிருச்சு. 1998 ஜூன்ல திட்டபிரதிகளை பார்லிமெண்ட் ஸ்பீக்கருக்கு அனுப்பிச்சு எம்பிக்களுக்கு வினியோகம் பண்ணிருங்கய்யான்னு அனுப்பிட்டோம்.

ரஜினி சாரு காவிரி பிரச்சினை தொடர்பான நெய்வேலி போராட்டத்துல இருந்து தப்பிக்க – கர்னாடக பாசத்தை விட்டுக்க முடியாம சோலோவா உண்ணாவிரதம் இருந்தப்போ கங்கை காவிரி இணைப்புக்கு ஒரு கோடி ரூபா டொனேஷன் தரேன்னு சொன்னாரு ( இன்னைய தேதிவரை கொடுக்கலை – ஆமாங்கண்ணா ரசிகர்களுக்கு கண்ணால விருந்து கதை இன்னா ஆச்சு )

10 கோடி பேர் கொண்ட சிறப்பு ராணுவத்துக்கு ஒரு நாள்/ஒரு வேளை/ சிங்கிள் டீ கொடுக்கனும்னாலும் ஒரு டீ ஒரு ரூபாய்க்கே தயாரிச்சாலும் பத்து கோடிரூபா வேணம். ரஜினி சார் கொடுக்கறேன்னது ஒரு கோடி. அதையும் தரல்லை.

நாம இந்த மேட்டர்ல 1998 ல இருந்து சொந்த காசை செலவிச்சுட்டிருக்கோம். 2004 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் ஜெயிச்சு ஜலயக்னம் கொண்டு வந்தப்பறம் டைல்யூட் ஆயிட்டோம்னு வச்சிக்கிட்டாலும் ஆறு வருசம்
2,190 நாள் ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் ரூ.25 செலவழிச்சிருந்தாலும் 54 ஆயிரத்து எழு நூற்றம்பது ரூபா செலவழிச்சாச்சு,

தரேன்னுட்டு தராத ஒரு கோடி ரூபாயை விட 54 ஆயிரத்து எழு நூற்றம்பது ரூபா பெட்டர் இல்லியா. இந்த பேட்டையில ஆரு சூப்பரு? நாமதானே.

தாய்குலம் உலக அழகிகளையும் பீட் பண்ணமுடியும். எப்படி அவிகளை இம்மிட்டேட் செய்தா? அவிகள மாதிரி டயட்டிங் செய்தா? அவிகளை மாதிரி ஆடை அணிந்தா? அவிகளை மாதிரி மேக் அப் செய்துக்கிட்டா இல்லே.

ரஜினி ஒரு கோடின்னு அறிவிச்சதும் – ஏதோ படத்துல பார்த்திபன் மாதிரி ஒரு கோடியே ஒரு பைசாங்கற கப்பாசிட்டி நமக்கில்லிங்கண்ணா. ஆனால் நம்ம சின்சியாரிட்டிய வச்சு சூப்பரையே சூப்பற ஸ்டார் ஆக்கிட்டம் .

தாய்குலத்துக்கு நான் கொடுக்கிற க்ளூ இதான். உங்க ஜாதகத்துல உள்ள லக்னபாவம் தரக்கூடிய நற்பலனையெல்லாம் அழகு , நிற‌ம்,கவர்ச்சின்னுட்டு வீணாக்கிராதிங்க. லக்ன பாவத்தோட பொட்டன்ஷியாலிட்டியை உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன்களுக்கு பைபாஸ் பண்ணுங்க.

நிஜத்தை நிழல் தொடர்ந்து வர்ராப்ல உங்க உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌னை தொடர்ந்து அழகு , நிற‌ம்,கவர்ச்சி எல்லாமே வந்துரும். உங்க ஜாதகத்துல லக்னாதிபதி நீசமா இருக்கட்டும், அஸ்தங்கதமாகியிருக்கட்டும், அட அவரோட ராகு கேதுவே சேர்ந்திருக்கட்டும்,இன்னபிற பாப கிரகங்கள் இணையட்டும். என்னவேணா இழவெடுத்து போகட்டும்.

நீங்க மட்டும் அழகு , நிற‌ம்,கவர்ச்சிமேல இருந்து உங்க பார்வைய திருப்பிட்டா லக்னாதிபதி உச்சமானா என்ன பலனோ அது நிச்சயமா கிடைக்கும்.

வேதனை:
இதே அட்வைஸை தந்தை குலத்துக்கும் கொடுக்கவேண்டிய நிலைமை இன்னைக்கிருக்குங்கண்ணா. ஆண்களும் ஃபேர் அண்ட் லவ்லி போடறாய்ங்க., கடைகடையா ஏறி ஜீன்ஸ் வாங்கறாய்ங்க, ஃபேஷியல் பண்றாய்ங்க, அட சீரியல் கூட பார்க்கிறாய்ங்கண்ணா.

ஆணோ பெண்ணோ அழகு , நிற‌ம்,கவர்ச்சிமேல உள்ள வெறிய விடுங்க. ஃப்ரீயா உடுங்க.. ஜாதகத்துக்கே கடைக்கால் போன்ற / 12 பாவங்களின் கேப்ஸ்யூல் வடிவமான லக்ன பாவம் – லக்னாதிபதி தரக்கூடிய நற்பலனை அள்ளுங்க.

ஹார்டி பாடி -விண்டி மைண்ட் ஹோலி சோல் இதான் நம்ம ஸ்லோகன்… நம்ம எழுத்துக்களோட சாரமே இதான். இந்த தொடரோட உத்தேசமும் இதான்

(மறுபடியும் தொடரா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ)

உடு ஜூட்..

Advertisements

15 thoughts on “ஆண் X பெண் : 12 வித்யாசம்

  sangeetha said:
  May 10, 2011 at 10:21 am

  ;;அழகு,கவர்ச்சி ஆருக்கு தேவை ( வேணாங்கண்ணா வில்லங்கமாயிரும்) ஏதோ கண்ணாலத்துக்கு மிந்தின்னாலும் பரவால்லை அது சரி மார்க்கெட்டிங்குக்கு இது கூட இல்லைன்னா எப்படினு சமிச்சு விட்டுரலாம் (மன்னிச்சு);;;

  pennai uyarthi ezuthurtha sollittu innoru pakkam kindal panreengale

   S Murugesan said:
   May 10, 2011 at 11:49 am

   சங்கீதா,
   சொம்மனாங்கட்டியும் உயர்த்தி எழுதறது ஜல்லிங்க. நெஜமாலுமே உசர இது ஒரு ப்ளூ ப்ரிண்டுங்கோ.வெய்ட் அண்ட் சீ.

   நிறம்,அழகு,கவர்ச்சியால பெறும் கவனம் அதை விட பெட்டரான நிறம்,அழகு,கவர்ச்சி எதிர்ப்பட்டா சிதறும்.

   உடல்,உள்ள,குண நலனால் பெறப்படும் கவனம் இந்தியாவுல ஊழல் மாதிரி ஸ்திரமான இடம் பெறும்ங்கறது நம்ம உத்தேசம்

  திருமணவாழ்வில் சிக்கலா?
  ஒரு தாரம் ! 2 தாரம் ! 3 தாரம்

  intha thodargalin thodarchiyai ethirpaarthu kaathirukkirom

   S Murugesan said:
   May 10, 2011 at 11:47 am

   சுசீலா அவர்களே ..
   தொடர்னாலே தொடரும்னு தானே அர்த்தம். ( மைசூர் போண்டால மைசூர் எங்கருக்குனு ஆருப்பா வாரி விடறது) தொடரும்.. ஆனா தொடராது

   தொடராதுனு அல்லாரும் ஒரு முடிவுக்கு வந்தப்பாறம் தொடரும்.

  Thirumalaisamy said:
  May 10, 2011 at 10:59 am

  என்ன என்னமோ சொல்றீங்க !!!
  ஆனா பைனலா மேட்டர் சூபெர் !
  அப்போ செய்றதா தான் சொல்லுவோம் , சொல்றதா தான் செய்வோம் நு சொல்றது உண்மையாலுமே பஞ்ச மட்டும் தானா ?? ( மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் )

  டவுசர் பாண்டி said:
  May 10, 2011 at 11:30 am

  சூப்பர் நைனா. பதிவு டக்காராகீது. கோ-எசுகேசனாக்கிட் ட்டாயங்கலா? எல்லாம் நல்லதுக்காத்தேன் இருக்கும். இனியாச்சும் அடக்கி எழுதவேண்டியதுதேன். பாயிஸ் ஒன்லின்னா மீனிங் டபுலாகுது. தாய்க்குலங்களும் அட்டெண்டன்ஸ் போடுறாங்க. லெச்சிமியும், சரஸ்வதியும் (வாடகைக்கா) குடியேற ஆரம்பிச்சிட்டாங்க. சந்தோசந்தேன்.

  வணக்கம். காணாமல் போனது பற்றிய அறிவிப்புகள். வாசிப்பவர் (வேறயாரு) நீங்கதேன்.

  கடந்த ரெண்டு நாளுக்கு மின்னதாக அ.ஜோ. என்ற இணையதளத்தில் வெயில் நிறைய அடித்ததால் அத்தளத்தின் உரிமையாளர் சீனா மூனா அவர்கள் “சுட்டா மாட்டிக்குவீங்க” என்று பெயரிட்ட விளம்பரப்பலகையை மெனக்கிட்டு பெயின்ட் அடித்து காத்தாட வெயிலில் காய வைத்திருந்தார். ஈரங்காயிருதுக்குல்லாற அந்த போர்டையே சுட்டுக்கினு போய்ட்டாங்கோ. ஆராச்சி அந்த போர்ட கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா அவிகளுக்கு ஒரு கோடி எல்லாம் குடுக்க முடியாது. வேணம்னா பிறீயா சாதகம் கணிச்சித்தரப்படும். ஆனா கண்டுபிடிச்சி தராதவுகளுக்கு நூதனமுறையில் தண்டனை அதாவது பிரபல சோதிடர் ஏ.பி.நித்யாகரன் சொல்ற பலான ராசி பலன நூருதாட்டி கேக்கணும். இதான் தண்டன.

  மேலும் இந்த திருட்டை பற்றி இணையதலத்திலுள்ள பிரபல டீச்சர் எஸ்.பி.ஏ. ஆர். ஆப்பையா கூறுகையில், “இதாவது பரவால்லைங்க போர்டோட போய்ச்சு. செல நாதாரிங்க நான் போடுற பதிவையே சுட்டுக்கினு போயடுராணுக, அவனுக மட்டும் என் கைல கெடச்சாணுக…” என்று அவர் கூறியது நெஞ்சை புழிஞ்சி எடுப்பது போல் இருந்தது. காண்போர் நெஞ்சை கலங்க செய்தது.

  மேலும் இந்த பேட்டி நிகழ்கையில் மக்கள் கூட்டத்தினிடையே திடீரென்று “ப்ரீயா உடு மாமே, இதுல்லன்னா வேறே” என்று ஒரு அசரீரி ஒலி எழுந்தது.

   Rasu said:
   May 10, 2011 at 11:52 am

   ரொம்ப கரெக்டா சொன்னிங்க டவுசரு சாரு…..அதெப்படி உங்களால மட்டும் இவ்ளோ ஒபேனா அல்லாரையும் கலாய்க்க முடியுது ..நீங்க கலாய்க்குரப்ப கூட டவுசர் போட்டுக்கிட்டு கலாயபிங்களா ..இல்ல ப்ரீய வுடு ப்ரீய வுடு மாம்மு தானா

  தல,
  சும்மா நான் ஒரு பதிவு அடிச்சு விட்டு இருக்கேன்…swamy7867@gmail.com -க்கு அனுப்பி உள்ளேன்
  படிச்சு பார்த்துட்டு அனுபவ ஜோதிடத்துள்ள ஏத்தி விடுங்க….

   S Murugesan said:
   May 10, 2011 at 1:52 pm

   ராசா,
   ஒரே நிமிசம். கவுண்ட் டவுன் ஸ்டார்ட்

  vinoth said:
  May 10, 2011 at 1:44 pm

  தல அவன் அவள் அது …

   S Murugesan said:
   May 10, 2011 at 1:50 pm

   வினோத் ஜீ,
   பதிவு எதுவானாலும் அண்டர் கரண்டா இருக்கிறது ஒரே சப்ஜெக்ட் தான். இருந்தாலும் அவன் அவள் அதுவும் தொடரும்

  vinoth said:
  May 10, 2011 at 1:44 pm

  பெண்கள் சரியில்லைனு ஒரு பதிவு போடலாமானு பார்க்கரேன்.

   S Murugesan said:
   May 10, 2011 at 1:48 pm

   வினோத் ஜீ,
   உ.வ படாதிங்க. அப்பாறம் பதிவுலகத்துல மாறுவேசம் போட்டுக்கிட்டுத்தேன் எழுதனுங்கற நிலைமை வ்ந்துரப்போவுது

    P.A.Kumar said:
    May 11, 2011 at 2:41 am

    தல,
    ஆன்மா ஆண், பெண் வேறுபாடு இல்லாதது. ஜாதகம் மட்டும் ஏன் வேறுபடனும். இதுவும் பழைய (நூல் கேசுங்க) வேலை தானா.

    S Murugesan said:
    May 11, 2011 at 6:00 am

    குமார்,
    ரிஷிகள் மகரிஷிகள் சித்தர்கள் எல்லாம் விஞ்ஞானிகள் மாதிரி.

    நீங்க சொல்ற பார்ட்டிங்க எம்.பி.பி.எஸ் மாதிரி.அவிக ஒரு பென்சிலினை கண்டுபிடிக்க உயிரையே பணயம் வச்சா
    இந்த டுபாகூர் பார்ட்டிங்க டெஸ்ட் டோஸ் கூட போடாம டைரக்டா போட்டு டிக்கெட் கொடுத்துர்ரதில்லையா அந்த மாதிரி தான்.

    ஆண் பெண்ணுக்கு சில சூட்சுமமான வித்யாசங்கள் இருக்கு. அதனால இந்த வித்யாசம் ஜோதிடம்/கிரக பலன்லயும் வருது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s