"சேர்ந்து"வாழ்ந்தா தோஷம் ஃபணாலா?

Posted on

“உறவு வரும் -பிரிவு வரும் வாழ்க்கை ஒன்றுதான்” – இது ஒரு திரைப்படபாடல் வரி. எவனோட வாழ்க்கையிலயோ பிரிவு வந்தா இப்படி ஏதோ ஒரு பாட்டு வரியை எடுத்துவிட்டு ஆறுதல் சொல்ட்டு வந்துரலாம்.

நம்ம லைஃப்லயே பிரிவு வந்துட்டா? – அட் ச்சீ வாய மூடுய்யா! . அபசகுனம்! . எங்க ஊட்டுக்காரி பத்தி இன்னா தெரியும்? சொக்கத்தங்கம்யா. இந்த மாரி கனவுல கூட நடக்காதுய்யான்னு சீறி எழுந்துருவம்.

ஒருத்தருக்காவது ” என்னங்க நீங்க அந்த அளவுக்கு எல்லாம் நான் நடந்துக்கிட்டதே இல்லை.”ன்னு சொல்ற தில்லு கீதா?

இல்லே! இல்லே !! இல்லே !!! ( ரெண்டாவது 3 ஆவது இல்லேல்லாம் எக்கோப்பா – ஸ்டீரியோ எஃபெக்டு.)

பெண்ணும் மன்ச ஜன்மம் தானே இந்த படைப்புக்கு தன்னை மையப்புள்ளியா உருவகிச்சுக்கிறதுதான் ஈகோ. இந்த ஈகோ ஆணுக்கு மட்டுமில்லை பெண்ணுக்கும் நிச்சயமிருக்கு.

ஆணோடது கொஞ்சம் பெரிய உலகம். மெதுவா அடடே நான் இந்த உலகத்துக்கு மையப்புள்ளி இல்லையோங்கற சந்தேகம் வந்ததும் வீட்டை தன் உலகமா நினைக்க ஆரம்பிச்சு அதை ஆள வந்துர்ரான்.

பெண்ணோடது சின்ன உலகம். அந்த சி.உலகத்துக்கு கூட தான் மையப்புள்ளிங்கற நினைப்புல காலத்தை ஓட்டறா. வெளி உலகத்துல தோத்துப்போனதை ஏத்துக்கிட்ட கணவன் அவளோட சின்ன உலகத்தை ஆக்கிரமிக்க வந்தா ஃப்ரஸ்ட்ரேஷனுக்கு ஆளாயிர்ரா.

இதுக்கு என்ன சொல்யூஷன்? புருசங்காரனை என்கரேஜ் பண்ணனும். டிபபார்ட்மென்டல் எக்ஸாமோ /ஓப்பன் யூனிவர்சிட்டியோ ? ஏதோ ஒரு இழவு. மனப்பேய்க்கு வேலை கொடுத்துக்கிட்டே இருக்கனும். அவன் வெளியுலக வாழ்க்கையில ஜெயிக்க தூண்டனும், உதவனும். டிஸ்டர்ப் பண்ணாம இருக்கனும். இப்படி ஒர்க் அவுட் பண்ணா அவன் வெளியுலக வாழ்க்கையில ஜெயிக்கிறானோ இல்லையோ பெண்ணோட சின்ன உலகத்துக்குள்ள ஊடுருவ மாட்டான்.

அதே போல புருசங்காரன் பெண்ணை என்கரேஜ் பண்ணனும். அவள் ஹவுஸ் வைஃபா இருந்தாலும் சரி ஆஃபீஸ் கோயரா இருந்தாலும் சரி. . இவன் ஒரு திசையில அவள் ஒரு திசையில வேட்டையாடிக்கிட்டே இருக்கனும்.

அதை விட்டுட்டு தேங்கி போயிரக்கூடாது. கவுண்டர் பார்ட்டை தேங்க விடக்கூடாது. தேங்கிட்டா நாறிடும்.
அவளோட வேட்டையில சிக்கல் வந்தாலோ/ உதவி தேவைப்பட்டாலோ “ஒனக்கு தெரியாததா பார்த்து செய்யும்மா”ன்னிரனும். அப்படியும் அவள் துணை/உதவி கேட்டா ” தபாரு .. நான் இப்போ ஜஸ்ட் ட்ரைவர் / உன் அசிஸ்டெண்ட் நீ என்ன செய்ய சொல்றியோ செய்யறேன்”ன்னுட்டு கோ ஆப்பரேட் பண்ணனும்.அதைவிட்டுட்டு . ‘மாட்டினியா? ஒனக்கு ஒரு இழவும் தெரியாது. ஆனால் பெரிய நெனப்பு. இனிமேலாச்சும் நான் சொல்றாப்ல கேட்டு நடந்துக்கற வழிய பாருன்னுட்டு நாட்டாமை பண்ண இறங்கிரக்கூடாது.

பெரிய பெரிய லட்சியங்களோ, கணக்குகளோ , எதிர்கால கனவுகளோ இல்லாத ஆண் , பெண்களே இந்த விஷயத்துல பெட்டரா இருக்காய்ங்க. ஏன்னா இவிக வாழ்க்கையோட மையப்புள்ளி மெதுவாக தங்களோட கவுண்டர் பார்ட்டுக்கு டைவர்ட் ஆயிருது. கணவன் மனைவிக்கும் -மனைவி கணவனுக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க ( எய்தர் பாசிட்டிவ் நார் நெகட்டிவ்)

சண்டை சச்சரவு இருந்தாலும் – அது உச்சத்துக்கே போனாலும் இரு இரு பத்து நாள் நானு என் ஆத்தா ஊட்ல போய் குந்திக்கினாதான் என் அருமை தெரியும்னு பொஞ்சாதி நினைப்பா. (பத்து நாள் தேன்)

இதே மாதிரி புருசங்காரனும் “தாளி .. ஆஃபீஸ் விட்டதும் தேமேன்னு வீட்டுக்கு வந்துர்ரன் இல்லை. நீ எப்படி என்னை மதிப்பே.. அடுத்த மாசம் யூனியன் காரவுக போட்டிருக்கிற டூருக்கு பேரை கொடுத்துட்டு பத்து நாள் நிம்மதியா போயிர்ரன்.அப்பத்தெரியும் புருசங்காரன் அருமை”ன்னுட்டு கருவிக்கிட்டு கிடப்பான்.

பெரிய பெரிய லட்சியங்களோட, கணக்குகளோட , எதிர்கால கனவுகளோட இல்வாழ்க்கையை துவக்குற ஆண் , பெண்களோட விஷயத்துல சிக்கல் அதிகம். இதெல்லாம் நூத்துல பத்து கேஸ் தேன். அதுகளை அப்பாறம் பார்ப்போம்.

அட என்னங்க நீங்க சொம்மா லேகியம் வித்துக்கிட்டு சோசியம் சம்மந்தமா நாலு பாயிண்டை அவிழ்த்துவிடுவிங்களான்னு ஆரோ அலுத்துக்கறது கேட்குது . வரேன் பாய்ண்டுக்கே வரேன். மொதல்ல இன்னைக்கு எனக்கு வந்த மெயிலை பாருங்க.. இதை எழுதினது தாய்க்குலமில்லே.

ஆனால் திருமண தோஷங்களால பெரும்பாதிப்புக்குள்ளாறது பெண்கள் தான். ஆண்கள் என்னமோ கட்டினவனுக்கு ஒரு ( நீங்க நினைக்கிற விவரீதமான வார்த்தையெல்லாம் விடப்போறதில்லை ) வீட்டைத்தான் சொல்லலாம்னு ஆரம்பிச்சேன். மானாம் உடுங்க. அப்படி வாழ்ந்துர்ராய்ங்க. (அல்லாரும் இல்லை ராசா) பெண்கள் நிலைமைதேன் இருதலை கொள்ளி எரும்பா கிடக்கு.

கண்ணாலம் கட்டினாலே ஆயிரத்தெட்டு பிரச்சினை. கண்ணாலத்துலயே பிரச்சினைன்னா? சரி பீடிகை போதும் . மெயிலுக்கு போயிரலாமா?

//அய்யா இது பொதுவான சந்தேகம் ஜாதகத்தில் வாழ்க்கை துணைக்கு (கணவன்/மனைவி) ஆயுள் பங்கம் அல்லது தோஷம் என்று தெரியும் போது அது ஏன் பொருத்ததில் கண்டு பிடிக்க முடியாதா?.//

ரெண்டு பேருக்கும் ஜாதகமிருந்தா…தாராளமா முடியும். ஆனால் டூ க்ளாக்ஸ் நெவர் அக்ரிங்கற மாதிரி இந்த தோஷ நிர்ணயத்துல ஆளுக்கொரு முறைய வச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிறாய்ங்க. நம்ம முறை என்னன்னா.. எட்டுல செவ் இருந்துட்டா போதாது அங்கன செவ் நின்றதற்குண்டான பலன்ல பாதியாச்சும் ஏற்கெனவே நடந்திருக்கனும் (கண்ணாலத்துக்கு முந்தியே) அந்த செவ்வாயோட குரு சேர்ந்திருந்தா ஒடனே பரிகாரம்னு டிக்ளேர் பண்றதில்லை. அந்த குரு என்னத்தை கிழிச்சாரு?

விபத்துக்கு பதிலா ஆப்பரேஷனை கொடுத்தாரா? ஆப்பரேஷன் செலவுக்கு ஆருன்னா அரசியல் வாதி சகாயம் பண்ணாரா – இத்யாதி ஆங்கிள்ள ரோசிச்சுத்தேன் டிசைட் பண்றோம். இப்படியாக அனுபவ அடிப்படையில் – ஜோதிட விதிகள் மற்றும் ஜாதகரின் அனுபவங்களை மேட்ச் பண்ணி பார்த்தா கட்டாயம் கண்டுபிடிக்கமுடியும்.

//அப்படி களத்திர தோஷம் கடுமையாக உள்ள ஜாதகன் திருமணமே செய்யாமல் இருந்து விடவேண்டியதுதானா.//

இல்லிங்கண்ணா. காசுக்கேத்த தோசை – ஜாடிக்கேத்த மூடின்னு கட்டாயம் கிடைக்குங்கண்ணா. சொத்தை ஜாதகத்துல பொறந்து தொலைச்சு சொத்தை காட்டி 24 லட்சணமும் உள்ள கணவனை அ மனைவியை கை பிடிக்கிறப்பதேன் கிரகங்களுக்கு கோவம் வந்து பின்னி பெடலெடுக்குதுங்கண்ணா.

உதாரணமா சனியால ஏற்பட்ட தோஷம் இருந்தா தலித்தை /தன் வயதினும் மிக மூத்தவரை – குறைஞ்ச பட்சம் 8 வயசு மணக்கலாம், ஊனமுற்றவரை ஐயய்யோ சாரி மாற்றுத்திறனாளிய மணக்கலாம் ( கால் தொடர்பான ஊனமிருந்தா சூப்பர் )

செவ்வாயால ஏற்பட்ட தோஷமா இருந்தா சத்திரியரை தன்னைவிட இளையவரை போலீஸ் (ஆயுத) மிலிட்டரிக்காரரை மணக்கலாம். தீக்காயம் அ சாலை விபத்தில் சிக்கி மானாவாரியா தையல் விழுந்தவரை/ மேஜர் ஆப்பரேஷனுக்காளானவரை மணக்கலாம்.

இப்படி நிறைய ஆல்ட்டர்னேட்டிவ்ஸ் இருக்கு. இந்த ஜூரிஸ்டிக்சனை விட்டு வெளிய போனா இம்சை . வனப்பகுதியை விட்டு ரயில்வே ட்ராக்குக்கு வந்த யானைக்கூட்ட கதியாயிரும். மத்தவங்களுக்கும் இம்சை அதுகளுக்கும் இம்சை.

//களத்திர தோஷம் என்பது முதல் திருமணத்திற்கு மட்டுமா அல்லது வாழ்க்கை துணை என்று யார் வந்தாலும் பொருந்துமா.//

அஸ்கு புஸ்கு. இதென்ன கிரிக்கெட்டா ஒரு ஆட்டத்துல ஒரு தாட்டி அவுட் ஆனவுக மறுபடி அவுட் ஆகாம இருக்க. ஆனால் ஒரு மேட்டர் ஆறுதலுங்கண்ணா விதவையாறதோ /விவாகரத்தாயிர்ரதோ பெருசில்லிங்கண்ணா அந்த சம்பவத்துக்குண்டான வடு அவிக மனசுல நிரந்தரமா தங்கிரனும். ஒரு உதறல் /மவுன கதறல் ஸ்திரமாயிரனும். அப்பவேணம்னா செகண்ட் இன்னிங்ஸ்ல ஓரளவு பெயர் சொல்லலாம்.

ஒரு ஜோக்கு:

டவுசரும், தனிக்காட்டு ராசாவும் உலகத்துலயே தலைசிறந்த பதிவிரதை ஆருன்னு தெரிஞ்சுக்க நீண்ட நெடும்பயணம் போனாய்ங்க. ஒன்னும் பேரலை.

கடேசில பேர் தெரியாத நாட்டுக்கு போனப்ப அங்கன ஒருத்தி தன் கணவனோட புத்தம் புதிய சமாதிக்கு
விசிறிவிட்டுக்கிட்டிருந்தா.

டவுசருக்கு ஒரே குஷி. டவுசர் பட்டிய பூணூலை உருவிவிடற சைஸ்ல சூடு பறக்க இழுத்து விட்டுக்கிட்டே ராசாண்ணே ராசாண்ணே இவிக தாண்ணே நாம தேடிவந்த பதிவிரதைன்னு குதியா குதிச்சாரு.

ராசா மெல்ல அந்த பெண்ணை விஜாரிச்சாரு .அதுக்கு அவள் சொன்னாள் “எங்க நாட்ல கணவனோட சமாதி காஞ்ச பிறவுதான் மறுமணம் செய்துக்கமுடியும்ங்க அதனாலதான் இந்த பாடு”

இந்த மாதிரி கேரக்டர் டஜன் கணக்குல தாலியறுத்து, டஜன் கணக்குல விவாகரத்து வாங்கினாலும் தோஷம் தவுசண்ட்வாலா மாதிரி வெடிச்சுக்கிட்டே தான் இருக்கும்.

//எப்படி பொருத்தம் பார்த்தாலும் கடுமையான களத்திர தோஷம் இருப்பின் மணவாழ்வு எப்படி நீடிக்க முடியும்.//

அந்த கிரகம் நமக்கு செய்ய நினைக்கும் கேட்டை நாமே முன் வந்து வாலண்டியரா நடத்தி முடிச்சுக்க முடிஞ்சா சர்வ நிச்சயமா தொடரும்.

உ.ம்: விபத்து உறுதின்னு தெரிஞ்சா ரத்த தானம் கொடுங்க.

//பின் கண்ட கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும். நீண்ட நாளைய சந்தேகம். ஒரு அகாடமிக் ஆர்வத்தில் கேட்கிறேன். உள்ளூர் ஜோதிடர்களிடம் கேட்டதில் திட்டு வாங்கினதுதான் மிச்சம்.(இதனை ப்ராக்டிகலாக அணுகி பதில் தர உங்களை தவிர யாரும் இல்லை.)
ஒரு வேளை கடுமையான களத்திர தோஷம் உள்ள ஜாதகன் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தினால் (going steady type )அந்த தோஷம் வேலை செய்யுமா. ஜாதகன்/கி உயிர் தப்ப வாய்ப்பு உண்டா.//

எங்க ஊர்ல ஒரு சோசியர்க்கிட்டே. .. பொருத்தம் பார்க்க ஒரு பெண்ணோட ஜாதகத்தை கொண்டுவ்ந்தாய்ங்க. அவரு கேட்ட மொதல் கேள்வி “இந்த ஜாதகத்தை ஒனக்கு ஆரு கொடுத்தா?”
வந்தவர் பதில் சொன்னாரு. சோசியர் ” ஒடனே இதை கொண்டு போய் கொடுத்தவன் கிட்டே கொடுத்துரு” ன்னாரு

ஜாதகம்னா என்ன? ஒரு பேப்பர். அதுல தோஷமிருந்தா அதை பாக்கெட்ல வச்சுக்கிட்டாலே இம்சைங்க. இதுல லிவிங் டு கெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் கதைய கந்தலாக்கிரும்.

இது ஆரோ சோசியர் சொன்னது மட்டுமில்லை. நம்ம அனுபவமும் அதைத்தேன் சொல்லுது. என்ன அவிக ஜாதகத்துல உள்ள தோஷங்களின் கடுமைய பொருத்து ..

1.நம்முது சுமாரான ஆயுஷ் கொண்ட ஜாதகமாயிருந்தா டிக்கெட் வாங்கிருவம் – குறைஞ்ச பட்சம் ஆக்சிடென்ட் கியாரண்டி

2. தீர்காயுஷ் ஜாதகமா இருந்தா மரணத்துக்கொப்பான அவமானங்கள்,கஷ்ட நஷ்டங்கள் ,ஏழ்மைய அனுபவிப்போம்.

இந்த மாதிரி தோஷ ஜாதகர்களுக்கு இதே ரேஞ்சுல தோஷம் உள்ள ஜாதகர்களை கட்டி வச்சு நம்மளோட நவீன பரிகாரங்களை வாழ் நாள் முழுக்க செய்துக்கிட்டிருந்தா வெற்றி நிச்சயம். ஒரு வேளை தோல்வி வந்தாலும் – அவிகளுக்கு விதிக்கப்படாத தண்டனை எதையும் அவிக அனுபவிக்கப்போறதில்லை.

ஒரு வேளை இதுமாதிரி தோஷ ஜாதகர்கள் – சுத்த ஜாதகர்களை மணந்திருந்தா அட எதுக்குங்க சொம்மா திகிலை கிளப்பிக்கிட்டு. நமக்கு வேற வாக்குஸ்தானத்துல சனி .ஆளை விடுங்க..

Advertisements

19 thoughts on “"சேர்ந்து"வாழ்ந்தா தோஷம் ஃபணாலா?

  Sudharsan said:
  May 10, 2011 at 8:10 pm

  I’am eagerly expecting an article about moon and mars combination.Many astrologers consider this as most dangerous combination.

   S Murugesan said:
   May 10, 2011 at 8:23 pm

   சுதர்சன்,
   ஆபத்தானதுங்கறாய்ங்களா? பரவால்லையே. எனக்கு தெரிஞ்சு சந்திரமங்கள் யொகம்னு அளந்து விட்டுக்கிட்டிருந்தாய்ங்க.

   பார்ப்போம். ப்ரே ஃபார் மை ஹெல்த் அண்ட் லெட் மீ டூ மை பெஸ்ட்.

    P.A.Kumar said:
    May 11, 2011 at 2:19 am

    தல, கொஞ்ச நல மின்னாடி ஒரு மெயில் ராகு-கேது பற்றி அனுப்பிருந்தேன். கொஞ்சம் பாருங்க. அப்படியே எட்டுல மற்ற கிரகங்கள், முக்கியமா ராகு-கேது பற்றி சொல்லுங்க.

  superrsyed said:
  May 10, 2011 at 8:44 pm

  படித்து பயன் அடையும் வகையில் நெரைய டிப்ஸ் குடுத்தமைக்கு நன்றி

  வினோத் said:
  May 11, 2011 at 4:36 am

  தல கேது தசை பற்றி பதிவு போடுங்க..

   S Murugesan said:
   May 11, 2011 at 6:27 am

   வினோத் ஜீ,
   கேது தசை? நம்ம லக்னத்துக்கு அஞ்சுல வராரு. போட்டுட்டா போச்சு.. வெய்ட்

  Mohamed Ismail said:
  May 11, 2011 at 5:41 am

  ///அஸ்கு புஸ்கு. இதென்ன கிரிக்கெட்டா ஒரு ஆட்டத்துல ஒரு தாட்டி அவுட் ஆனவுக மறுபடி அவுட் ஆகாம இருக்க. ஆனால் ஒரு மேட்டர் ஆறுதலுங்கண்ணா விதவையாறதோ /விவாகரத்தாயிர்ரதோ பெருசில்லிங்கண்ணா அந்த சம்பவத்துக்குண்டான வடு அவிக மனசுல நிரந்தரமா தங்கிரனும். ஒரு உதறல் /மவுன கதறல் ஸ்திரமாயிரனும். அப்பவேணம்னா செகண்ட் இன்னிங்ஸ்ல ஓரளவு பெயர் சொல்லலாம்.////

  நன்றி அய்யா.
  அப்புறம் எதற்கு வலை மரத்திற்கு தாலி கட்ட வைத்து பின் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார்கள்

   Mohamed Ismail said:
   May 11, 2011 at 5:50 am

   மேலும் சேர்ந்து வாழும் முறையில் கணவன் மனைவி என்னும் உறவே இல்லையே. அப்புறம் எப்படி தோஷம் வரும். அப்படி பார்த்தால் தோஷம் உள்ள நண்பனுடன் நெருங்கிய நட்பு கொண்டலோ அல்லது ரூம் மேட்டாக இருந்தாலோ தோஷம் கூட இருப்பவனையும் தொற்றிகொள்ளுமே

    S Murugesan said:
    May 11, 2011 at 6:24 am

    இஸ்மாயில்,
    அம்மாவையும் – சின்னம்மாவையும் ஒரு தாட்டி நினைச்சுப்பாருங்க.இதைத்தேன் சகவாச தோஷம்ங்கறது.

    ஓரினத்துப்பறவைகள் ஒரே கூட்டுக்கு சேரும்ங்கறதுதான் ஒரே ஆறுதல். ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா சேரக்கூடாதவுகளோட சேரும்போது தான் பிரச்சினை. (அதுக்கும் அட்லீஸ்ட் கோசாரத்துலயாவது காரணம் இருக்கும் – காரணம் தீர்ந்ததும் காரியம் நின்னுரும்.

    Mohamed Ismail said:
    May 11, 2011 at 7:25 am

    Doubts Cleared – Thank you GURU

    S Murugesan said:
    May 11, 2011 at 8:05 am

    மு.இஸ்மாயில்!
    ஸ்.. அப்பாடா. நான் என் அனுபவத்தை சொன்னேன். உங்க அனுபவம் என்ன சொல்லுதுன்னு பாருங்க

   S Murugesan said:
   May 11, 2011 at 6:26 am

   இஸ்மாயில்,
   வாழை மரம் பிசினஸை தானே கேட்கறிங்க. அது உங்க புறக்கடையில இருந்து அதை நீங்க மாமன் பொண்ணாவோ,அத்தை மகளாவோ பாவிச்சு – பிரேமிச்சு – ஒரு பிணைப்போட இருந்து வெட்டினா ஒரு வேளை ஒர்க் அவுட் ஆனாலும் ஆகலாம்.

   தாளி நாலு காசை வீசி வெட்டி கொண்டுவந்து கட்டி -வெட்டிட்டா தோஷத்தை காக்கா கொண்டுபோயிருமா?

   யாவாரத்துல இதெல்லாம் சகஜமப்பா..( ஜோதிஷத்துல கிடையாது)

  //டவுசரும், தனிக்காட்டு ராசாவும் உலகத்துலயே தலைசிறந்த பதிவிரதை ஆருன்னு தெரிஞ்சுக்க நீண்ட நெடும்பயணம் போனாய்ங்க.//

  ஹா ஹா 🙂 🙂 எங்களுக்குள எப்பவுமே ஒரு தேடல் உண்டு தல

  யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைந்த பதிவு இது

   S Murugesan said:
   May 11, 2011 at 6:21 am

   ராசா,
   தேடல் தொடரனுமே..

  Sudharsan said:
  May 11, 2011 at 3:51 pm

  Sir,I have sent a mail regarding my personal issue for your yahooID.But I’am yet to get response from you.

  டவுசர் பாண்டி said:
  May 12, 2011 at 2:22 am

  ஆஹா நம்ம பேர மேல குனிய வச்சிக் கும்மியடிச்சிருக்காயங்க. நைனாவுக்க்க்கும் வாக்குச்தானத்துல சேட்டர்ணா. நமக்கும் அதே அதே. பகல்ல ப்ரீயா இருக்கும்போது காகத்வஜாய வித்மகே கவசத்த மைண்டுல ப்ரீயா ஓட விட்ருவேன்.

  S Murugesan said:
  May 12, 2011 at 10:25 am

  மறவன்!
  ராகு காரகத்வம் கொண்ட பெண்ணை மணக்கலாம். மினுமினுப்பான கரிய நிறம்/ ஒல்லி பீச்சான் மாதிரி உடல் /அல்லது ஊளைச்சதை ,ஓரப்பார்வை /பூனைக்கண் இருக்கும்.

  அவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.

  அவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
  கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம். ஒரு யோகியோட சமாதியை கடந்து போகவேண்டியிருக்கலாம் ( தர்கா?)

   Mohamed Ismail said:
   May 12, 2011 at 11:20 am

   கேள்வியே இல்லாம பதில் சொல்லி இருக்கீங்க போல இருக்குதே

    S Murugesan said:
    May 12, 2011 at 3:35 pm

    மெயில்ல வந்த கேள்விக்கான பதில் தான் இந்த பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s