நமீதாவின் கவர்ச்சி VS பிறவிச்சக்கர சுழற்சி

Posted on

பதிவர் :

தனி காட்டு ராஜா

பூமி உள்பட அனைத்து கிரகங்களும் நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் ஜோதிட கட்டத்தை பார்த்தால் செவ்வக வடிவில் எதோ வான மண்டலத்துக்கு தொடர்பு இல்லாதது போல இருக்கும்.

ஜோதிடத்தில் சாதாரண ஆட்களுக்கு(என்னை போன்ற) முதல் குழப்பம் இங்கேயே ஆரம்பித்து விடுகிறது.
தட்டையான ஜோதிட கட்டம் அனைவரிடமும் தட்டையான சிந்தனையைதான் வளர்க்கும்.
நாம் எப்போதுமே 360 டிகிரி நீள் வட்ட பாதையை கற்பனை செய்வோம்.[அல்லது கூகிள்லில் சூரிய குடும்பத்தை(solar-system) எடுத்து வைத்து கொள்ளுங்கள்.]

முதலில் சோலார் சிஸ்டம்யை வலையில் பாருங்கள். அப்போது தான் தெரியும் பூமி என்ற உலகம் சோலார் சிஸ்டத்தில் எவ்வளவு சின்னது(டம்மி பீசு ) என்பது புரியும்.
வெறும் சூரிய மண்டலத்தை பார்த்து நாம் எளிதாக புரிந்து கொள்ள கூடிய வானவியல் (ஜோதிட) விஷயங்கள்….
அண்டத்தில் உள்ளது எப்படி பிண்டத்தில் வேலை செய்கிறது என ஆராய்வோம்.

சூரியன் எவ்வளவு பெரியது. ஆத்மாதானுக அது.சுயமாக ஒளிர கூடியது.ஆத்மா இல்லை எனில் எதுவும் இல்லை. சூரியன் இல்லை எனில் பூமி(உலகம்) இல்லை.

அதற்கு மிக அருகில்.புதன் புத்தியை குறிக்க கூடிய கிரகம்.நுண் அறிவை காட்ட கூடிய கிரகம். ரொம்ப சின்னது. நம்ம மூளையே நமது உடம்பில் சின்னது. நுண்ணுணர்வு என்பது ரொம்பவும் சின்னது.
அதனால் தான் மிக சிலருக்கு இது வேலை செய்கிறது.

பூமிக்கு அருகில் சுக்கிரன்.வாழ்வின் மீது கவர்ச்சியை ஊட்டி கொண்டே இருக்கும் கிரகம்.(fantasy)
அது ஏன் பூமிக்கு அருகில் இருக்க வேண்டும். கடைசி வரை பொருள், பெண்ணை தேடி கொண்டே இருக்க….பூமியில் உள்ள உயிர்களை தூண்டும் கிரகம். மயக்கத்தை(மாயை) தரும் கிரகம்.

பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம். சந்திரன்-மனம்.
சுய ஒளி கிடையாது. மனதுக்கு சுயம் கிடையாது.மனம் எதோ ஒன்றை சார்ந்தே வாழ்கிறது.
எண்ணங்களை உற்பத்தி செய்கிறது.எண்ணம் ஆசையை தூண்டுகிறது.

சந்திரன்,சுக்கிரன் வெளி வாழ்க்கையை கவர்ச்சிகரமாக்கி கடைசி வரை மனிதனை மயக்கி வைக்க முயல்கிறது.

சந்திரன்,சுக்கிரன் பூமிக்கு மிக அருகில் உள்ளது. பெரும்பாலான மனிதர்கள் கடைசிவரை ஆசைக்கு அடிமையாகவே வாழ்ந்து மறைகிறார்கள்.
[இது இந்த பதிவை எழுதும் நமிதாவின் கவர்ச்சிக்கு அடிமையாக வாழும் அரை வேக்காட்டு தனி காட்டு ராஜாவுக்கும் பொருந்தும் ]

பூமி எனபது நாம்.அல்லது தனி மனிதன். பூமிக்கு அடுத்த சுற்று வட்ட பாதையில் உள்ள கிரகம் செவ்வாய்.

உடல்,மனம்,கவர்ச்சி இதெல்லாம் சேர்ந்தால் என்ன செய்யும்? உணர்ச்சி வரும். ரத்தம் சூடாகும். செயல் ஆரம்பமாகும். செவ்வாய் இதை தூண்டுகிறது.

ஆசையின் காரணத்தால் மனிதன் சாகும் வரை செயல் சார்ந்து சுற்றி கொண்டே உள்ளான்.

சரி வாழ்கையில் இது போன்று அனைத்திலும் சுழல்பவன் ,அனுபவம் பெற்றவன் ,அடிபட்டவன்….கடைசியாக மெய் ஞானத்தின் மேல் நாட்டம் கொள்ள ஆரம்பிக்கிறான்.அடுத்து உள்ள கிரகம் குரு அவனை தூண்டுறார்.

நல்லதோ கெட்டதோ என்ன செய்தாலும் கர்ம பதிவு நடை பெற ஆரம்பித்து விடுகிறது. சனி இந்த வேலையை சரியா செய்கிறது.

ஆத்மாவில் கர்மா சேர்ந்தவுடன்….பிறவி சுழற்சி ஆரம்பித்து விடுகிறது. மனிதன் செத்து செத்து விளையாடுகிறான் 🙂

சில ராசி கட்ட உண்மைகள்:

மேஷம் – சூரியன்(ஆத்மா) உச்சம் பெறும்போது கர்மா சனி நீசம் பெறுகிறது.

ரிசபம் -சுக்கிரன் (fantasy ) வீடு ,இங்கே சந்திரன்(மனம்) உச்சம் பெறுகிறது.

மிதுனம் – அறிவு புதன் ஆட்சி பெரும் இடத்தில …அறிவு சமமாக வேலை செய்வதால் …எந்த கிரகமும் உச்சமும் இல்லை …நீச்சமும் இல்லை.

கடகம்- சந்திரன் மனம் ஆட்சி பெறுகிறது…. குரு( புத்தக(பிராமண) ஞானம் ) உச்சம் அடைகிறது.

சிம்மம்-ஆத்மா ஆட்சி பெரும் இடத்தில..எந்த கிரகமும் உச்சமும் இல்லை …நீச்சமும் இல்லை.

கன்னி -புதன் (அறிவு) உச்சம் பெறுவதால் சுக்கிரன் (fantasy ) நீச்சம் பெறுகிறது.

துலாம்-கர்மா சனி உச்சம் பெரும் இடத்தில,சூரியன்(ஆத்மா) நீசம் பெறுகிறது.

விருச்சிகம் – குண்டலினி சக்தி உரையும் இடம்…குண்டலினி சக்தியை குறிக்கும் கிரகம் கேது-ராகு உச்சம். சக்தி உச்சம் பெற்றால் மனம்(நமிதாவின் மிது உள்ள ஆசை உட்பட அனைத்தும்) நீர்த்து போகிறது.சந்திரன் நீசம்.

ராகு -கீழ் நோக்கிய பிராண(குண்டலினி)சக்தி-காமம் ,பணம் புகழ் தேட தூண்டுகிறது (அதனால் தான் பாம்பு(குண்டலினியின் குறியீடு) உடம்பு ராகுவுக்கு)
கேது -மேல் நோக்கிய பிராண சக்தி-அன்பு ,இசை,ஞானம் தேட தூண்டுகிறது (அதனால் தான் பாம்பு தலை கேதுவுக்கு)
சக்தி -மறைமுகமானது -அதனால் தான் நிழல் கிரகம் என்கிறோம் ராகு கேதுவை.

கால சர்ப்ப தோசத்தின் வலிமை இப்போது புரிகிறதா… சக்தியின் கட்டுபாட்டில் அனைத்து கிரகமும் கட்டுபட்டால் அது கால சர்ப்ப தோஷம்..அல்லது யோகம் ..
சக்தி நன்றாக இருப்பின் யோகம் …இல்லை என்றால் தோஷம்.
சக்திக்கு மிஞ்சியது எது ? அதானால் தான் ராகுவை போல கொடுப்பவர் இல்லை என்கிரார்கள்.

தனுசு-குரு ஆட்சி (வேதாந்த புத்தக அறிவு ஆட்சி)

மகரம்-செயல் வீடு- செவ்வாய் (செயல்) உச்சம்… கர்மா(சனி) ஆட்சி

கும்பம்-லாப வீடு -கர்மா(சனி) ஆட்சி..

மீனம் -படுக்கை வீடு -சுக்கிரன் (fantasy) உச்சம் ,புதன் (அறிவு ) நீச்சம்

கேது நமது மேல் நோக்கிய பிராண சக்தியை குறிக்கிறது . விடுதலையை தருகிறது .விளையாட்டுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறது .

Advertisements

12 thoughts on “நமீதாவின் கவர்ச்சி VS பிறவிச்சக்கர சுழற்சி

  yoghi said:
  May 10, 2011 at 4:20 pm

  நல்ல துவக்கம் கிரகங்கலைப்பற்றி வீடுகலைப்பற்றி அருமையான் புதுமையான விளக்கம்

  வினோத் said:
  May 11, 2011 at 4:46 am

  ஏதோ சும்மா விளையாட்ட படிக்க ஆரப்பிச்சேன்…
  ஆனா.. ராசா.. உண்மையில்லேயே நீங்க ராசா தான்..
  2ஜி யில் இல்லை …
  அறிவில்..

  சோதிடத்தின் அரிச்சுவடி தெரியாதவங்களுக்கு இந்த பதிவு கொஞ்சம் கஷ்ட்டம இருக்கும்.
  ஆனா தெரிஞ்வங்களுக்கு நினைச்சு நினைச்சு வியாக்கிறமாதிரி எழுதீட்டீங்க…

  தலை டீமில் .. எல்லாரும் வியக்கிற மாதிரி தான் இருக்கங்கப்பூ…

  மறுமொழிக்கு நன்றி yoghi மற்றும் வினோத் அண்ணே 🙂

  Mani said:
  May 11, 2011 at 6:38 am

  ராஜா! உங்களது புரிதல் மிகவும் அருமையாக உள்ளது. கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி.

  sugumarje said:
  May 11, 2011 at 7:22 am

  //அரை வேக்காடு// 🙂
  Great Analysis of Home and Planets 🙂 So Why you wear like அரை வேக்காடு?
  You Are FULLY boiled 🙂
  Greets

   //You Are FULLY boiled//

   ஹா ஹா ஹா 🙂 🙂

   அப்ப முழு வேக்காடு -நு போட்டுக்கவா ஜி 🙂

   உங்களுக்காக என் சைடுல் இருந்து ஒரு சின்ன விளக்கம்

   இந்த சூரிய மண்டலத்தோடு ஒப்பிடும் போது பூமியே ஒரு டம்மி பிஸு மாதிரி தெரியுது….
   நம்ம Galaxy யோடு ஓப்பிடா சூரிய மண்டலமே ஒரு டம்மி பிஸு மாதிரி தெரியுது….
   இப்படி எண்ண முடியாத அளவு Galaxy இருக்காமே வான மண்டலத்துல

   இப்படி இருக்கரச்சே…..நாம எப்படி முழு வேக்காடு ஆக முடியும் ஜி

   எவ்வளவு தெரிஞ்சாலும் புரிஞ்சாலும் அரைவேக்காடு தான் ஜி 🙂

  டவுசர் பாண்டி said:
  May 12, 2011 at 2:36 am

  தனிக்காட்டு ராசானே, இம்புட்டு விசியத்த மனசுக்குள்ளார பூட்டி வெச்சிக்கினு எங்களுக்கு தன்னிகாட்டிட்டீங்கலேன்னே. பரவால்ல நைனாவோட கேங்குல அல்லாருமே ஒருத்தருக்கொருத்தரு சலச்சவுகல்லேன்னு நிரூபிக்ராங்கோ. அல்லாருமே தெரமசாளிங்கதேன். சூப்பர் ராசானே. தொடர்ந்து பதிவ பதிஞ்சி விடுங்கோ.

  நெரிய பாய்ண்ட்டு சொல்லிகிரீங்கோ. நோட் பண்ணி வெச்சிக்கிறேன். தொடர்ந்து அசத்துங்கனே. நமீதா தாயின்னா ஒங்களுக்கு அம்புட்டு உசுரா.

  ராசான்னே, ஆராச்சும் கே.பி முறைல கட்டங்கட்ட மாட்டுக்கீன்களே. இன்னாத்துக்கு நூல் வுடுறேன்னா அந்த மெத்தடு எந்தளவுக்கு சனந்கல்ட்ட ரீச்சாயிருக்குன்னு தெரிஞ்சிக்கத்தேன். வேற வலில்லேன்னா நம்மள்ட்ட உள்ள கொஞ்சகாண்டு சரக்கெ தண்ணிய மிக்ஸ் பண்ணி பட்டைய கெளப்பிர வேண்டியதுதேன். வேண்டியதுதேன்.

  டவுசர் பாண்டி said:
  May 12, 2011 at 2:44 am

  ராசான்னே, நாம மேல போகணும்னா (அந்த “மேலே” இல்லேண்ணே) செமென மேல அனுப்பனும்னே. மேலே ஏத்தி உட்டோம்னு வெச்சிக்கோங்க, அப்பால முக்குனாலும் மொனங்குனாலும் கனவுலகூட செயின அத்துக்கினு ஓடாதுனே. பொட்டிப்பாம்பா அடங்கிப்பூடும். அப்பால செர்ப்பண்டு சார்ப்பாயிரும். இதெல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்சதுதேன். தப்புன்னு தெரிஞ்செதானே அம்புட்டு தப்பும் பண்றோம்.

   அனுபவஸ்தன் said:
   May 12, 2011 at 6:48 pm

   யோவ் டவுசரு சும்மாயிருய்யா! அந்த புள்ள ராசா பச்ச மண்ணு இன்னும் எவ்வளவோ அனுபவிக்க வேண்டிருக்கு அதுக்குள்ள அத மேல ஏத்துன்னு அது இதுன்னு கௌப்பிவிட்டுட்டு இருக்கிற. இந்த வயசிலல்லாம் அத மேல ஏத்த கூடாதுய்யா. மனுசனுக்கு உண்மையிலேயே ஆன்மீகம் வேணும்னா அவன் எதையும் அடக்க கூடாதுய்யா! அடக்க அடக்க அழுத்தம் அதிகமாயி வெடிச்சுரும்யா! அப்புறம் நித்தி மாதிரி பூடும். முழுசா ஞானம் வேனும்ணா முழுசா நல்லா வாழ்ந்து அனுபவிச்சதுக்கப்றம் தான் வரணும். மிச்சம் மீதி ஏதும் இருக்கப்படாது. அப்பதான அது நிலைக்கும். இல்லாட்டி திரும்பவும் பழைய ஞா வந்துடும் பாண்டி. அப்புறம் கதை கந்தல்தேன். அதவிட கொடுமை என்னான்னா எதையெல்லாம் இதுவரை அடக்குனானோ அதையெல்லாம் இன்னும் இன்னும் அதிகமா அனுபவிக்க தோனும். அப்புறம் எல்லாம் நாஸ்திதேன்.

    Name said:
    May 13, 2011 at 9:12 am

    unmaiya sonninga boss ( rendupherumethaan) padikkum bothu sirippu adakka midiyala boss athan neenga sollitingale vaay vittu siruchutan .

    romba nalla erukku pathuvum .comments -kalum.

  //நமீதா தாயின்னா ஒங்களுக்கு அம்புட்டு உசுரா. //

  உசுருக்கு மேல 🙂 🙂

  //அந்த புள்ள ராசா பச்ச மண்ணு இன்னும் எவ்வளவோ அனுபவிக்க வேண்டிருக்கு அதுக்குள்ள அத மேல ஏத்துன்னு அது இதுன்னு கௌப்பிவிட்டுட்டு இருக்கிற //

  அனுபவஸ்தன் அண்ணன் சரியான டைம்ல “மணியான” கருத்த சொல்லுராரே 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s