தாய்க்கு நாலாவது இடம்

Posted on

சொர்கம் தாயின் காலடியில் இருக்குதுன்னாரு முகமது நபி (சல்). அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாய்ங்க.

ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலசம்பதாம் பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா..

தாளி எல்லாமே உன் பூர்வ கருமப்படிதான் அமையுதுன்னு சுலோகம் சொல்லுது. ஆனால் எங்கன ஆரம்பிக்குது பார்த்திங்களா ஜனனீ அதாவது அம்மா

இப்படி நிறைய இடத்துல அம்மாவுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தாலும் ஜோதிடத்துல மட்டும் நாலாவது இடத்தை தந்திருக்காய்ங்க.

அப்ப ஜோதிடவியலை உருவாக்கிய ரிஷிகள் மகரிஷிகள் இதயமே இல்லாதவர்களான்னு கேப்பிக. மேட்டர் அப்படி போகலை. ஜாதகத்துல நாலாவது இடம் இதயத்தையும் காட்டுது. மன்சனுக்கு இதயம் எவ்ளோ முக்கியமோ லைஃப்ல தாயும் அவ்ளோ முக்கியம் அவளை இதயத்துல வச்சுக்கங்கடானு சொல்லாம சொல்லியிருக்காய்ங்க.

அந்த நாலாவது இடம் தான் வீடு ,வாகனம்,கல்வி,பாசத்துக்குரியவுகளையும் காட்டுது. இதுக்கும் அம்மாவுக்கும் இன்னா சம்பந்தம்னா கீது நைனா.

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். ஒரு குடும்பம் நல்ல குடும்பமா இருக்கனும்னா அதுக்கு அம்மாங்கற கேணச்சி அவசியம். நான் பார்த்தவரைக்கும் நிறைய வீட்ல அம்மாங்கல்லாம் ட்ரான்ஸ்ஃபார்ம் மாதிரி, கன்வெர்ட்டர் மாதிரி, ஸ்டெபிலைசர் மாதிரி ஜங்ஷன் பாக்ஸ் மாதிரி இருக்காய்ங்க. இல்லேன்னா இந்த நாதாரிங்க வீட்டையே கொளுத்திரும்.

ஆக நல்ல அம்மா இருந்தா அது நல்ல குடும்பமா இருக்கும். நல்ல குடும்பம் பல்கலைகழகம் மாதிரி. அதுல கிடைக்காத கல்வியா இந்த பாடாவதி பல்கலைகழகங்கள்ள கிடைச்சுரும். சேலம் பெரியார் பல்கலை அடிக்கிற கூத்தெல்லாம் நம்ம காதுக்கு வந்து தொலைக்குது.

வருசத்துல ரெண்டு தபா எக்ஸாம் நடத்தற ஒரே யூனிவர்சிட்டி இது ஒன்னுதான் ஏப்ரல்ல ஒரு தபா மேல ஒரு தபா. ஒரு ஆயிரம் ரூபா “போட்டு”கொடுத்தா எந்த தேதில போனாலும் அட்மிஷன் அவெய்லபிள். மே 15 எக்ஸாம் ஆரம்பமாகுது. நீங்க மே 5 ஆம் தேதி கொண்டு போயிருந்தாலும் அட்மிஷன் ஓகே.

அப்சர்வர்ஸ்,டைரக்டர்ஸ் அடிக்கிற கூத்தை பார்த்து ஐ.டி கார்டு கொடுக்க கூட நூறு ரூபா வச்சாதான்னு ஊழியர்கள் (பெண்) அடம்பிடிக்கிறாய்ங்களாம்.

அட்மிஷன் ஓஞ்சு போவட்டும். . பரீட்சை நேரத்துல கேள்வித்தாள் எல்லாம் டோர் டெலிவரி தந்துர்ராய்ங்களாம். கேள்வித்தாள் கூட ஓஞ்சு போவட்டும் 500 முதல் 700 பேர் தேர்வு எழுதறாய்ங்கன்னா ஸ்பாட்ல வந்து எழுதற காஞ்சானுங்க 25 பேர் தானாம். மத்தவுகளுக்கு ஆன்சர் பேப்பர் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிர்ராய்ங்களாம்.

இந்த இழவெல்லாம் இல்லாத ஒரே பல்கலைகழகம் குடும்பம்தேன். மகளிர் தினம் , அன்னையர் தினம்னு தனித்தனியா அனுசரிக்கிறதை ஐ அப்ஜெக்ட் யுவரானர்.

கடா குட்டிங்க ஒரு குட்டி போட்ட பொறவுதேன் அப்பாவாகுதுங்க. ஆனால் இந்த பொட்ட குட்டிங்க பிறக்கறப்பயே தாயா பிறக்குதுங்கண்ணா. அதனால ஒவ்வொரு பெண்ணும் தாய் தாண்ணே.

பெண் இயற்கையின் பிரதி.- இயற்கை வழங்கிய நிதி – டோட்டலா அவள் இயற்கையின் . பிரதிநிதி. .(எப்டின்னுரோசிச்சு ஆருனா ஒரு பதிவு போட்டா நல்லாருக்கும்) தாயை புரிஞ்சிக்காதவன் பெண்ணை புரிஞ்சுக்க முடியாது.பெண்ணை புரிஞ்சிக்க முடியாதவன் இயற்கைய ரசிக்க முடியாது. அதை ரசிக்கலைன்னா மன்ச ஜன்மம் எப்படியா கொத்த அல்ப்பம்னு புரியாது. இது புரியலைன்னா லௌகீகமும் ஃபணால். ஆன்மீகமும் ஃபணால்.

குடும்பங்கற பல்கலை கழகத்தோட துணை வேந்தர் அம்மா. அங்கன கல்வி பெற முடியாத பிக்காலி எத்தீனி பட்டம் வாங்கினாலும் ஸ்க்ராப்தான்.

அதுசரி வாகனத்தை ஏன் இந்த இடத்தோட லிங்க் பண்ணாய்ங்க. இந்த பாவ பூமியில விழுந்த நமக்காக
தன்னையே வாகனமாக்கி கொண்டவள் அம்மா. அவிக கால் வலி,கை வலின்னு தவிக்கிறச்ச – அவிகளை கோவில் குளம்னு கூட்டிப்போக ஒரு வண்டியிருந்தா எவ்ள நல்லாருக்கும்னு எவன் நினைக்கிறானோ அவனுக்குத்தேன் வாகனயோகம். அம்மாவுக்காக தான் வாகன்ம்.கலர் பார்க்கிறதுக்கு இல்லை.

இதெல்லாம் அந்த நாலாவது இடம் நல்லதா அமைஞ்சாதானே சாத்தியம். ஜாதகத்துல பாசத்தை காட்டற இடமும் இதே தான்.ஒரே ஒருத்தராலயாச்சும் உண்மையா நேசிக்கப்பட்டவன் எவனையும்,எவளையும் வெறுக்க மாட்டான்.

இந்த உலகமய நாட்கள்ள கூட குழந்தைய உண்மையா நேசிக்கிற ஒரே முட்டாள் தாய்தான். அந்த தாயோட நேசிப்பு,பாசம் ஒரு குழந்தைக்கு கிடைச்சாத்தான் பாசத்துக்குரியவர்கள்னு ஒரு பட்டியலே ஆரம்பமாகும்.

சரிங்கண்ணா அன்னையர் தினத்தை ஒட்டிய சிறப்பு பதிவு ஓவர்.

முன்னொரு மகளிர் தினத்தை ஒட்டி எழுதிய பதிவை இங்கே லேசா அப்டேட் பண்ணி அப்படியே கட் பேஸ்ட் பண்ணியிருக்கேன். சொம்மா படிச்சுட்டு போயிராம ரோசிங்க. ரோசிக்கிறதோட நீங்க பின்பற்ற வேண்டிய பின்பற்றுங்க. அவிகளுக்கும் ஷேர் பண்ணுங்க.அவிகளும் பின்பற்றனும். அப்பத்தேன் இந்த பதிவுக்கு புண்ணியம்.

இந்தியானின் ஏழ்மைக்கும்,மன்மோகன்,சிதம்பரம் ஆகியோரின் செயல்பாடுகளுக்கும் பின்னணி அவர்களின் மனைவியரே என்று கூறுவேன். ரஜினி கட்சி ஆரம்பிக்காதிருப்பதற்கும், விஜய் காந்த் ஆரம்பித்ததற்கும் – ஜெவோட கூட்டணி போட்டதுக்கும், சிரஞ்சீவி தன்னை நம்பி வந்தவுகளை நட்டாத்துல விட்டுட்டு காங்கிரசோட ஐக்கியமானதுக்கும் அவரவர் மனைவியர் ஓரளவாவது காரணமாக இருந்து தான் தீரனும்.
இதுதான் லாஜிக்/.

யதார்த்தம் இப்படியிருக்க பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவது கிரிமினல் குற்றம் மட்டுமல்ல தேச துரோகம். ஆண் என்பவன் ஆக்கிரமிக்க துடிப்பவன். பெண் ரிசீவர். ஆண்களை மாற்றுவதை விட பெண்களை மாற்றப்பார்ப்பது நல்லது. பல்வேறு காரணங்களால் ஆண்கள் ஆண்மை இழந்துவரும் இந்த காலகட்டத்தில் பெண்கள் ஆண்களின் பாத்திரத்தை ஏற்று வாழவேண்டிய கட்டாய‌ம் ஏற்பட்டுள்ளது. இது இன்னம் நிலைமைய மோசமாக்கிருச்சு. (கேண்டில் லட்டட் ஆன் டூ சைட்ஸ் மாதிரி)

பெண்கள் தங்களுக்கே உரிய பெண்மை ,தாய்மை உணர்வுகளையும் இழந்து -இப்படி ஆண்களின் உலகத்தில் சர்வைவ் ஆக ஆண்களாவே மாறிக்கிட்டு வர்ராய்ங்க.

ஒவ்வொரு ஆணிலும் பெண்மை,ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மை இருக்கிறது. பெண்ணில் உள்ள ஆண்மை விதையாகவே இருக்கிறது. முளைத்து கருகிவிட்ட ஆண்களின் ஆண்மையை நம்புவதை விட ,நாளிதுவரை விதையாகவே இருந்து விட்ட பெண்களின் ஆண்மையை நம்புவது மேல் என்று தோன்றிவிட்டது.

பெண் அன்புக்கு ஏங்குகிறாள். அன்பை தருவதாய் வாக்களிக்கும் ஆண்வர்கம் பின் நிஜசொரூபத்தை காட்டுகிறது. இதனால் பெண் பேயாகிறாள். பெண் உடல்ரீதியில் பலவீனமானவள். பாதுகாப்பற்று உணர்கிறாள்.

அவளுக்கு பாதுகாப்பு கொடுக்குமத்தனை ஆண்மை இன்று ஆண்களில் இல்லை.எனவே அவளே ஆணானாள். பெண்ணினத்தை நான் கைகூப்பி ,வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே..

உங்கள் உடல்,மனம் ஆரோக்கியமாக இருந்தால், புத்தி கூர்மையானதாய் இருந்தால்,ஆன்மா தூய‌தாய் இருந்தால் அதுவே போதும். வீடு,நாடு இர‌ண்டுமே சுவ்ர்க‌மாகிவிடும். உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ஆரோக்கிய‌ங்க‌ளுக்காக‌ ,புத்தி கூர்மையை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ “எது” வேண்டுமானாலும் செய்யுங்க‌ள்.

பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு என்ப‌தை போல் உங்க‌ள் தியாக‌ம் அபாத்திர‌ தான‌ம் ஆகிவிடாது எச்ச‌ரிக்கையாயிருங்க‌ள்.

எந்த‌ த‌க‌ப்ப‌னும்,எந்த‌ க‌ண‌வ‌னும்,எந்த‌ பிள்ளையும் சும்மா போடுவ‌தில்லை சோறு. அது உங்க‌ள் உரிமை. உல‌க‌ம் பெரிது ..குடும்ப‌ம் ஒரு பொடி ட‌ப்பா. பார்வையை ச‌ற்று விரிவு ப‌டுத்துங்க‌ள். விஸ்வ‌ ரூப‌ம் எடுங்க‌ள். வேண்டுமானால் அன்புக்கு க‌ட்டுப்ப‌ட்டு பொடி ட‌ப்பாவுக்குள் வாழ்ந்து காட்ட‌லாமே த‌விர‌.. சிறைப்ப‌ட்டிருக்க‌ கூடாது.

குடும்ப‌மே பொடிட‌ப்பா என்றான‌ பிற‌கு காத‌ல்,க‌த்திரிக்காய்,முறை த‌வ‌றிய‌ ‌ காத‌ல் ,இத்யாதியெல்லாம் உயிருக்கு உலை வைக்கும் விஷ‌ய‌ங்க‌ள். கொஞ்ச‌ம் மாத்தி யோசிங்க‌..

அள‌வுக்கு மிஞ்சினால் அமுத‌மும் ந‌ஞ்சு. தியாக‌மும்தான்.

1. காலைக்கடனை கூட தள்ளிப்போட்டு வீட்டு வேலைகள்ள மூழ்கிராதிங்க.
2. ப்ரேக் ஃபாஸ்ட் இல்லாம வெறுமனே காப்பியை குடித்து வயிற்றை நிரப்பாதீர்கள்
3.வீணாகிறதே என்று சுண்டு கறி,சுண்டு குழம்பெல்லாம் போட்டு திணிக்காதீர்கள்
4.தலைக்கு குளித்துவிட்டு துடைக்க கூட நேரமின்றி பம்பரமாய் சுழலாதீர்கள்
5.அவர் சாப்பிடட்டும் என்று காத்திருந்து கண்ட நேரத்தில் சாப்பிடாதீர்கள்
6.இந்த‌ பாழாய் போன‌ டி.வி.யை பார்க்காதீர்க‌ள். அப்ப‌டியே பார்த்தாலும் ஒவ்வொருவரும் நீட்டி முழ‌க்கி பேசும் அர‌ட்டை அர‌ங்க‌ம் – பாடாவதி சீரியல்கள் இத்யாதியை பார்க்காதீர்க‌ள். (முக்கியமா ஆட்டோ வ‌ந்து நிற்ப‌தை அரை ம‌ணி நேர‌ம் காட்டும் சீரிய‌ல்க‌ளை)
7.அக்க‌ம் ப‌க்க‌த்து பெண்க‌ளிட‌ம் ரொம்ப‌ உர‌சாதீர்க‌ள். நீங்க‌ள் உர‌சுவ‌தே டேஞ்ஜ‌‌ர்.இதில் அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ண‌வ‌ருக்கு சொல்வ‌து அதைவிட‌ டேஞ்ச‌ர்.
8.பீட்ஸா,நூடுல்ஸ் இழ‌வெல்லாம் பிள்ளைக‌ள் தின்ன‌ட்டும். மீந்த‌தை தின்ப‌தாய் எண்ணி அவ‌ற்றை முக‌ர்ந்து கூட‌ பாராதீர்க‌ள்
9.இந்த‌ கால‌த்தில் புருஷ‌ன் என்ப‌வ‌ன் புருஷ‌ன் அல்ல‌. வேலை தான் புருஷ‌ன். அல்ல‌து சேமிப்பு தான் புருஷ‌ன்.
10.ப‌ண்ம் கெட்டுப்போனாலும் க‌ட‌ன் வாங்க‌லாம். ம‌ஞ்ச‌ள் நோட்டிஸ் கொடுக்க‌லாம். உட‌ம்பு கெட்டுப்போனால் நாஸ்திதான்.
11.உட‌ம்புக்கு ஏதும் வ‌ராம‌ (நோய்ங்க‌)பார்த்துக்க‌ங்க‌. உட‌ற்ப‌யிற்சி, க‌ல‌ப்புண‌வு(க‌ல‌ப்ப‌ட‌ உண‌வில்லிங்க‌/அர்சி,கோதுமை,கேழ்வ‌ர‌கு,க‌ம்பு, காய்க‌றி,கீரை க‌ல‌ந்து சாப்பிட‌ற‌து க‌ல‌ப்புண‌வு), யோகா எது வேண‌ம்னா செய்ங்க‌ உட‌ம்பு ப‌த்திர‌ம்
12. அந்த‌ 3 நாட்க‌ள்ள‌ வறுமை/சிக்கனம்லாம் பார்க்காம தாராள‌மா செல‌வு ப‌ண்ணி பாதுகாப்பா இருங்க‌. நோய் தொற்றுக்கு அந்த‌ விஷ‌ய‌த்தில் சிக்க‌ன‌ம் தான் முத‌ல் கார‌ண‌ம்.
13.குடும்ப‌ம் முக்கிய‌ம் தான். நீங்க‌ குடும்ப‌த்துக்கு அதை விட‌ முக்கிய‌ம். அதை விட‌ முக்கிய‌ம் நீங்க‌ உயிரோட‌,ஆரோக்ய‌த்தோட‌ இருக்கிற‌து.
14. ஒன்னு உட‌ம்புக்கு வேலை கொடுங்க‌. இல்லை த‌லைக்கு வேலை கொடுங்க‌. ரெண்டுத்துக்கும் கொடுத்திங்க‌ க‌தை க‌ந்த‌ல்தான். டென்ஷ‌ன் வேணாங்க‌..
15.உரிமைக்கு ப‌ங்க‌மா? குடும்ப‌ ந‌ல்வாழ்வுக்கு பிர‌ச்சினையா? தூசு விழும்போதே பொங்கி எழுந்துருங்க‌ ..இல்லாட்டி தூண் விழுந்துரும்.
16.ப‌ச‌ங்க‌ முக்கிய‌ம் தான். அதுக்காக‌ அவ‌ங்க‌ ப‌ண்ற‌ த‌ப்புக‌ளை க‌ண‌வ‌ர் கிட்டே ம‌றைக்காதிங்க‌.

17.இந்த‌ கால‌த்துல‌ யாரையும்(க‌ண‌வ‌ன்/க‌ண‌வ‌னின் ந‌ண்ப‌ன்/இஸ்திரிகார‌ன் எந்த‌ ம‌..ரானாலும் ச‌ரி ந‌ம்பின‌ மாதிரி ந‌டிக்க‌னுமே த‌விர‌ குருட்டுத்த‌ன‌மா ந‌ம்பிராதிங்க‌

குறிப்பு:
இதையெல்லாம் தெரிஞ்சுக்க‌ என் அம்மாவ‌ ப‌றிகொடுக்க‌ வேண்டிய‌தாயிருச்சுங்க‌.. பட்டறிவு நல்லதுதான். அதுக்காக எல்லாருமே பட்டுத்தான் தெரிஞ்சுக்குவம்னு வீம்பா இருந்தா வாழ்க்கையே பட்டுப்போயிருங்க.

23 thoughts on “தாய்க்கு நாலாவது இடம்

  suseela said:
  May 8, 2011 at 9:26 am

  usefull tips anithu pengalum padithu payan peravendiya vi
  aalosanakku nanri

   S Murugesan said:
   May 8, 2011 at 11:48 am

   எங்க அம்மா பேரும் உங்க பேரே தான் (சுசீலா தேவி) எங்கம்மாவே வந்து கமெண்ட் போட்டாப்ல இருக்கு.

   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

  sangeetha said:
  May 8, 2011 at 9:35 am

  pengalukku thevaiyaana thagavalgal,ippovaavathu pennai uyarthi oru pathivu pottingale

   S Murugesan said:
   May 8, 2011 at 2:54 pm

   சங்கீதா அவர்களே,
   நாத்திகம் -ஆத்திகத்துக்கிடையிலேயே வித்யாசம் பார்க்காதவன் நான்.ஆண் பெண்ணுக்கிடையில் வித்யாசம் பார்ப்பேனா? இதுல உயர்வு தாழ்ச்சி கிடையவே கிடையாது. என் பாலிசி மொதல்ல என் வீட்டை திருத்தறதுதேன்.

   மொதல்ல சமுதாயத்தை, மானிலத்தை ,நாட்டை,உலகத்தை வழி நடத்தக்கூடிய நிலையில இருக்கிற ஆண்களை கூண்டுல ஏத்தாம – ஓரளவுக்காச்சும் ட்யூன் பண்ணாம – அம்மா ! நீங்க அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும்னு சொல்றது நியாயமா இருக்காதுன்னு இப்ப ஆரம்பிச்ச்சேன். தட்ஸ் ஆல்

  sugumarje said:
  May 8, 2011 at 11:36 am

  அருமை… தாயின் அருமை இழந்தபின்தான் எல்லாமே தெரிய வருகிறது, எனக்கும் கூட 😦

   S Murugesan said:
   May 8, 2011 at 11:43 am

   சுகுமார்ஜீ,
   தமிழ் படத்துல அம்மா சென்டிமென்ட் (அக்ளியா இருந்தாலும்) ஏன் சக்ஸஸ் ஆகுதுன்னா அதுக்கும் காரணம் இதுதான்.

   வீட்ல இருக்கிற அம்மாவுக்கு செய்ய வேண்டியதை செய்யாமயே அவள் செத்துப்போயிருப்பா. இல்லேன்னா இவன் பொஞ்சாதி பின்னாடி வந்திட்டிருப்பான்.

   ப்ராக்டிக்கலா செய்ய முடியாத போனதை திரைல பார்த்து மனச ஆத்திக்கறான்.அந்த நேரம் அம்மா அலைவா இருந்தாலும் அந்த மெல்லிய உணர்வுகளை அம்மா முன்னாடி ஃபோக்கஸ் பண்ண தயங்கறான் (அது அபத்தமா தோணும் போல) சில கேஸ்ல அம்மாங்களே “போடா … போடா மொதல்ல படிக்கிற வேலைய பாருன்னிர்ராய்ங்க” ( ஆனா உள்ளூற விரும்புவாய்ங்க போல)

    sugumarje said:
    May 9, 2011 at 12:15 pm

    ஆகா. முதன்மையான பின்னூட்டம் அம்மாக்களுடையது…
    //ippovaavathu pennai uyarthi oru pathivu pottingale//
    இதுக்குமொதோ எந்த பதிவையும் இவங்க படிக்கவே இல்லையோ? 😦
    எந்த பதிவிலே பெண்ணை இறக்கி பதிவுபோட்டீங்கன்னு ஞாபகமில்லையே…

    S Murugesan said:
    May 9, 2011 at 4:09 pm

    வாங்க சுகுமார்ஜீ,
    பார்ப்போம் .. அவிக கண்ல படாத பதிவுகளை புதை பொருள் ஆராய்ச்சி பண்ணி தொடுப்புகளையாவது கொடுக்க ட்ரை பண்றேன்

  yoghi said:
  May 8, 2011 at 7:46 pm

  தலைவா சைட்ல ஆர்ச்சிவ் எல்லாம் கானொம் கொஞசம் பாருங்க் ப்லீஸ்

  டவுசர் பாண்டி said:
  May 9, 2011 at 2:13 am

  அம்மாவ பத்தி அம்சமா சொல்லிருக்கே நைனா. குருபெயர்ச்சி பத்தி எதுனாச்சி எளிதிருப்பேன்னு பாத்தேன். சரி பரவால்ல. வர்ற வெள்ளிக் கெளம் எலக்சன் ரிசல்ட்டு. இப்பவே எங்கூருல எங்க பாத்தாலும் வெள்ளையும் சொல்லையுமாத்தேன் தெரிது. இருந்தாலும் நீ சுதேசில எழுதுன மேட்டர வச்சிக்கினு கொஞ்ச காண்டு அளப்பறைய குடுப்போம் (அடி வாங்காத அளவுக்கு)

  நைனா அதன் காலபுருசா தத்துவப்படி கடகராசிய தாய்க்கு குடுத்துருக்காங்கலா.

  டவுசர் பாண்டி said:
  May 9, 2011 at 2:16 am

  நைனா, சைடுல பாத்தியா? அம்புட்டையும் வள்ளுசா காணோம். அதாம்பா ரீசென்ட் கமென்ட்ச சொல்றேன்.

  டவுசர் பாண்டி said:
  May 9, 2011 at 3:36 am

  மிந்தி நமக்கு நைட்டு தூக்கம் வராம இருக்கச்சே ராசிக்கட்டத்துல உள்ள ஒவ்வொரு வூட்டுக்குல்லாரையும் போயி சுத்தி பாக்குற மாறி கனவு கண்டுக்கிட்டு இருக்குற பழக்கம் உண்டு. அப்பப்ப எதாச்சி டிஸ்ப்ளே ஆகும். அத படார்னு நோட்ட்சு எடுத்து வெச்சுக்குவம். மேஷத் தலைலருந்து படிப்படிய கடகம் இதயத்த குறிக்கி. இது ஆடி மாச்த்தைய குரிக்ரதால நல்லது பொள்ளதுகள தள்ளி வெச்சாலும் இந்த வூட்டுக்கும் கொஞ்சகாண்டு சக்திகீது. முன்னோருகள நதிக்கரைல (கடகம் ஜலத்த குரிக்கும்னு ஒங்களுக்கு ஏற்கனவே தெரியும்) வெச்சி தருப்பணம் செஞ்சாக்க நல்லாருக்கும். இந்த ஊட்டுக்குல்லாற பூசம்னு ஒரு அருமையான நச்சத்திரம்கீது. சனி பகவானுக்கு சொந்தமான அந்த நட்சத்திரத்துக்கு எய்த்தாப்புல சனியோட சொந்த ஊடும் (மகரம்) கீது. இங்கயும் (கடகம்) சந்திரன் அங்கயும் (திருவோணம்) சந்திரன். அதே மாறி தெசைகள் மேட்டரும் இதுக்குள்ளார லிங்க் ஆகுது. ஆனா ஒரு சோகம். இன்னான்னா செவ்வாவோட பப்பு இங்க வேகளே(நீசம்). இன்னாத்துக்கு? செவ்வா நெருப்புள்ளா? தன்னிக்குல்லார (ஜல ராசி) நெருப்பு எங்கன வேகும். சரிப்பா கரண்டு சிக்னல் குடுக்கு?

   sugumarje said:
   May 9, 2011 at 12:06 pm

   //இன்னான்னா செவ்வாவோட பப்பு இங்க வேகளே(நீசம்). இன்னாத்துக்கு? செவ்வா நெருப்புள்ளா? தன்னிக்குல்லார (ஜல ராசி) நெருப்பு எங்கன வேகும். சரிப்பா கரண்டு சிக்னல் குடுக்கு?//
   டவுசர் பாண்டி… ஆகா, டவுசருக்குள்ளேயும் விசயமிருக்குப்பா…
   சரி டவுசரு… இதுமாதிரியே அப்பப்ப அவுத்துவுடு, நம்ம சனங்க புரிஞ்சிகிட்டும்…
   வாழ்த்துகள்…
   ஆமா, அதென்ன டவுசர் பாண்டி… இடுப்புல டவுசர் நிக்காத பிடிச்சிட்டே இருக்கிறனாலயா?

    டவுசர் பாண்டி said:
    May 10, 2011 at 1:35 am

    சுகுமாரனே, ரொம்ப டேங்சுநே. நானு ரெண்டு வருசமாத்தேன் நீச்சல் அடிச்சிக்கினுகீறேன். முங்கு நீச்சல்லாம் நமக்கு தெரியும்லா. காலணா டவுசர் மாட்டிக்கினுகீரதால வஸ்தியா கீது. ரொம்ப ஆழமா உள்ளார போன மண்டைக்குள்ள ஒரு லிகிடு வரும் போல. அந்த லிக்கிடு வந்தாக்க மேல வர தோனாதாம். அதனால அந்த லிக்கிடு தர்ற சந்தோசத்துல உள்ளாரே மூழ்கி உசுர வுட்ருவாங்கலாம். நானெல்லாம் டம்மி பீசு. பாராட்டுக்கள் நைனாவுக்கே சமர்ப்பணம். நைனா கத்துக்குடுத்தத்தேன் நானு ஒளரிக்கினுகீறேன். அம்புட்டுதேன்.

  Thirumalaisamy said:
  May 9, 2011 at 5:34 am

  நல்ல தகவல் பரிமாற்றம் .
  அணைத்து தகவல்களும் தாய்மார்களுக்கு/பெண்களுக்கு பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை .
  அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் !!!
  ———–உங்கள் இன்பாக்ஸ் ல் ———–

  Name said:
  May 9, 2011 at 7:22 am

  murugesanna mikka nandrigal !

  தனி காட்டு ராஜா said:
  May 9, 2011 at 7:33 am

  அம்மா என்றழைக்காத உயிரில்லையே 🙂

  Sudharsan said:
  May 9, 2011 at 5:27 pm

  sir,I have kethu in 9th house.My rasi and lagnam both are kadagam.I have moon and mars lagnam.What is the effect?

   S Murugesan said:
   May 9, 2011 at 7:26 pm

   Sir,
   Please mail your complete horoscope . Sorry for disappointing you.

  டவுசர் பாண்டி said:
  May 10, 2011 at 3:00 am

  பர்வால்ல, நானு கக்கூசுல கிருக்குனா மாறி எழுதுனாலும் வாசிசிர்றாய்ங்க. இதுக்கு மொதல்ல நன்றி சொல்லியாகனும். ரொம்ப நன்றிங்கோ. எளவு மேட்டர கண்டுபிடிக்குரதுக்கு இந்த பார்முலா கொஞ்ச காண்டு கைகுடுக்கும். எந்த வூட்டுக்குள்ளார எந்த கெரகம் எந்த நட்சத்தில பீசாகும், எங்கன ப்ரைட்டாகும், பக்கத்து ஊட்டுல இல்லாங்காட்டி பக்கத்து காம்பவுண்டுலருந்து ஆராச்சும் அவிகல போக்கஸ் பன்றாகளா, இல்லாங்காட்டி மொரச்சிக்கினுகீராகளா இப்புடி மிந்தி இதபத்தி ஆராச்சி பண்றதுக்கே ஒரு வாரம் காலி. இன்னாத்துக்குன்னா நம்ம லேட் பிக்கப்பு.

  ஆயுல கண்டு புடிக்கனும்னா ஒவ்வொரு கெரகத்தயும் டிஜிட்டல் தராசுல வச்சி துல்லியமா நிறுத்து பாத்துட்டுதேன் மத்தத ஆரம்பிக்கணும். நானு சொல்றது காரீட்டா இல்லாங்காட்டி தப்பா?


  இந்த லிங்க்குக்கும் நமக்கும் எந்த லிங்க்கும் இல்லீங்க்ணா.
  இந்த லிங்க்க நம்மளோட லிங்க் பண்ணி புதுசா லிங்க் ஆயிராதீன்கப்பு.

  டவுசர் பாண்டி said:
  May 10, 2011 at 3:45 am

  இன்னாங்கடா இது தாய்க்கு நாலாமிடத்த குடுத்துக்கினு நைனா எங்க போனார்னு தெரிலயே. நைனாக்கு எங்க இதயத்துல (நாலாமிடம் இல்லீங்க) எப்பயும் இடம் உண்டு. சீக்கிரம் அடுத்த பதிவ போடு நைனா.

  ஆகமக்கடல் said:
  May 14, 2011 at 3:05 pm

  ரிசல்ட்டுக்கு முன்னாடியே அம்மா புகழ் பாடிட்டேள்.நீர் பிழைக்க தெரிந்த மனிதர்.
  அம்மா நாமம் வாழ்க! புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க

   S Murugesan said:
   May 14, 2011 at 5:11 pm

   ஆகமக்கடல்!
   அடி முடி தேடிய வரலாறு தெரியும்ல.. மூவுலகம் சுற்றி வந்த கதை தெரியும்ல.. நம்ம ப்ளாக்,சைட்டை ஒரு தாட்டி மேலே கீழே ஒரு சுத்தி சுத்தி வந்தா தெரியும்.. புகழ் பாடினோமாங்கற மேட்டர்

   நம்ம டார்கெட் சென்ட்ரல் லெவல்ல ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சு நேரிடை ஜன நாயகம் கொண்டு வந்து ஜனாதிபதியா போட்டியிடறதுதேன்.

   இது தவிர மத்த சமாசாரம்லாம் நமக்கு ஜுஜுபி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s