சோதிட புதிர் தொடர்..

Posted on

அண்ணன்களே..சபைக்கு … வணக்கம்…

முதற்கண்… தாமதத்திற்கு வருந்துகிறேன்…

ஞாயிரு திங்கள் ரெண்டு நாளும் காய்சல்..

பணிமற்றத்தால் கூடுதல் பணிச்சுமை..

அதனால நெட்டுக்கு வர முடியலை..

இந்த பதிவை 3நாளா டைப் பண்ணுகிறேன். பெரிய மனசு பண்ணி மன்னிச்சுகோங்க…

சாதகர் கிறிஸ்டோபர்.. என் சொந்தகாரர். இந்த படம் 2 வருடத்துக்கு முன் பாரத்மேட்ரிமோனியில் இவரின் பெயரை பதிவு செய்ய  எடுத்தது .. தோற்றத்தை பற்றி சொன்னிங்க அதனால் நான் இந்த படத்தை போடுகிறேன்.

பெயர் கிறிஸ்டோபர்.

தந்தை ஒரு கடையில் பணி, தாய் வீட்டில் இருக்கிறார். தங்கைக்கு திருமணமாகிவிட்டது.

டிரைவிங் ஸ்கூலில் வேலை செய்து அப்புறம் சொந்தமா ஆரம்பிக்க முயற்சி பண்ணினார் .

அரசு அனுமதி கிடைக்கவில்லை.. இப்போ சுருக்கமா சொன்னா இந்தியன் படத்தில் மகன் கமல் + கவுண்டமணி வேலை.

அப்புறம் டு வீலர் , போர் வீலர், இடம் புரோக்கர்.  கடந்த அக்டோபர் 10ல் திருமணம் நடந்தது.

மனைவி இப்போ 5 மாசம்னு நினைக்கறேன்.

நம்மாள் கிறிஸ்டோபர் ஒரு இன்டிரஸ்டிங்க் கேரக்டர்…

=========

அவர பற்றி சொல்லனுனா 3 சம்பவம் இருக்கு..

முந்தியேல்லாம் நான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போக இரவு  9.30 ஆகும். வழி

ஒரு நாள்  அப்படி போகும் போது வழியில் அவர பார்த்தேன் ..டீ சாப்பிட போலமான்னு கேட்டார்.

வழக்கமா போனா நான் தான் பணம் கொடுப்பேன்.. அன்னைக்குன்னு என்னிடம் பணம் இல்லை.

அதனால நான் சொன்னேன் .. போலாம் .. நீங்க வாங்கி கொடுங்கன்னு… …

உடனே… அவர்… நைட்டு சாப்பிட போறநேரத்துல எதுக்கு டீ ? ன்னுட்டர்.

===========

ஒரு காலத்தில் நான், அவர் , இன்னம் கொஞ்சம் நணபர்கள்

எல்லாம் தினமும் இரவு வேலை முடிச்சு வரும்போது  ஒரு இடத்தில் சந்தித்து கொஞ்சநேரம் பேசுவோம்.

அப்படி ஒரு நாள் … பேசும்போது இவர் வரலை. கொஞ்ச நேரத்தில் இவர்கிட்ட இருந்து மேசெஜ்..

அங்கிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடையில் இருந்தாரம்.

“இரவு சாப்படு சாப்பிட்டுகிட்டு இருக்கேன்…என்னை வந்து பிக்கப் பண்ணீகோங்கன்னு..”

கூட இருந்த நணபர் .

“எனக்கு ஒரு ஆம்லேட் ஆடர்ர் பண்ணிட்டு சொல்லுங்க நான் வர்ரேன்னு  பதில் போடுங்க”ன்னர்.

அப்படியே போட்டென்.. பதில் வரல…

அடுத்த  நாள் இவர பார்க்கும்போது .. என்ய்யா பதில் இல்லயேன்னு கேட்ட…

உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்ம்னு நான் நடந்து போய்டேன்ன்னர்.

==========================

இப்படி பட்டவர் ஒரு நாள் போன் பண்ணி எங்க இருக்கீங்கன்னு கேட்டர்.

வீட்டில்னு சொன்னேன். நான் வர்ரேன் இருங்க சொல்லிட்டு வந்தார்.

வெளிய போய்டு வரலாம் வாங்க .. கடைக்கு கூட்டி போய் … டிபன் .. டீ எல்லாம் ஆர்டர் பண்ணினார்.

எல்லாத்த்க்கும் மேல் பில் வந்ததும்.. அவரே பணம் கொடுத்தர்..

எனக்கு அப்பவே லேசா டவுட்டு வந்தது..

அப்புரம் தான் கேட்டர்…

அதாகபட்டது.. எங்க சொந்ததில் ஒரு பொண்ணு இருக்கு வீட்டில் ஒரே பொண்ணு மட்டும் தான்.

அந்த பொண்ணு பார்க்க அழகாவும் இருக்கும்.

சும்மர் 40 வீடு கட்டி வாடகைக்கு  விட்டு இருக்கஙக.. காலி இடம் எல்லாம் இருக்கு.

அந்த பொண்ணை இவருக்கு கேட்டங்க..  கேட்டவர்களில் என் அப்பாவும் ஒருவர்.

அநத ரிசல்ட் என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க தான் டீ , டிபன் எல்லாம்…

அதாவது 3-4 கோடி சொத்துடன் அழக ஒரு பொண்ணு கிடைக்கனும்னா. அதிக பட்சம்

மாலை டீ, டிபன் 40-50 ரூபாய் செலவு பண்ணுவார்.

====================================================

அந்த பொண்ணு வீட்டில் பதில் வராமல  போகவே..  இவரும் 3 வருடம் பொண்ணு பார்த்தார்.

பொண்ணு நர்ஸ் வேலை கூட்டாது .

ஒரு டிகிரி படிச்சு இருக்கணும்

கருப்பா இருக்க கூடாது

பொண்ணு ஊர் 50-100 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கணும்.

பொண்ணு கூட பொறந்தவங்க ஒருத்தர் இருக்கலாம் அதிகம் இருக்க கூடாது

பொண்ணு வீட்டில் வசதியா இருக்கணும்..

அழகா இருக்கணும்

ஆனா ரொம்ப அழகா இருக்க கூடாது  ( கல்யாணத்துக்காப்புரம் மத்தவங்க அவர் மனைவ்யை பார்பாங்களாம்)

.

.

.

இன்னம் வில்லங்கமான கண்டிசன் எல்லாம் உண்டு…

இப்படி கண்டிசன் போட்டு 3 வருசம் பொண் பார்த்தர்.

என் மனைவ்யின் தஙகையை இவருக்கு பேசிமுடிக்க 6 மாசம் முயற்சி பண்ணினேன் ஒத்துகலை.

நானும் இவரும் கிறிஸ்துவர் தான் ஆன தீவிரமாக மத கொள்கைகள் வகுத்து அனுசரிக்கும் பெந்தேகோஸ்தேபிரிவில் இருக்கிறார்.  நாங்கள் வேறு பிரிவு.. அதனால் ஒப்புக்கொள்ளவில்லை.

================

நானும் பல நாள் பல முறை . இந்தமாதிரி கண்டிசன் போடாதிர்ன்னு சொல்லி பார்த்து…

தாமத திருமணத்தின் பின் விழைவுகள் சொல்லி பார்த்தும் ஒன்னும் நடக்கல..

போன வருடம் தான் திருமணத்தை முடிவு பண்ணீனார்..

அதுல ஒரு விஷயம் என்னன … அவர் சொன்ன முக்கியமான கண்டிசனில் 1 கூட பொருந்தாத பெண்

அமைந்திருக்கு…

====================================

புதிர் தொடர் ஆரம்பிக்க முக்கிய காரணமெ..

சோதிடத்தை இன்னும் நன்றாக கற்கதான்.

தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி…

பதிலுக்கு காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்.

இறைவன் நாடினால் ..அடுத்த பதிவில் விரைவாக பதில்லளிக்கிறேன்.

நன்றி…

 

 

Advertisements

27 thoughts on “சோதிட புதிர் தொடர்..

  yoghi said:
  May 5, 2011 at 9:29 am

  நம்ம சொன்ன எல்ல பலன் கலுமே ஃபெயிலியர் ஆயிடுச்சே/////

  இவர் சம்பாதிக்கலாம் ஆனா செலவு பன்னிக்க முடியாதுன்னு சொல்லிருக்கோம்
  இப்போ நம்ம 25% ஜோதிடர் ஆயிட்டோம்னு நெனைக்கிரென் இன்னும் நல்லா கத்துக்கனும்

  எஙக நம்ம ஜாதகதுலதான் புதன் சூரியனோட அஷ்தமனம் ஆயிட்டாரே )))))))))கடைசிவரை அரைகுரை ஜோசியனாவே ஆயிடுவோமோ

   S Murugesan said:
   May 5, 2011 at 9:32 am

   யோகி சார்,
   புத சூரிய சேர்க்கையால சூரியன் பலமிழப்பாரே தவிர புதனுக்கு பலம் கூடும். சூரியன்னா ஈகோ புதன்னா சோசியம். ஆமா உங்க லக்னத்துக்கு புதன் சுபர்தானா/ அதைபாருங்க மொதல்ல

   Mani said:
   May 5, 2011 at 3:09 pm

   திரு. யோகி சார் மனம் தளராதீர்கள். ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்று சொல்வார்கள். அப்பன்ன வைத்தியன் பேரை எடுக்கனும்னா சும்மா 2000 பேரையாவது கொல்லனும். இப்படி சின்ன சின்ன தவறுக்கெல்லாம் வருந்த வேண்டாம். தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள் உங்களால் முடியும். ஜோதிடத்தில் உங்களால் வெற்றிபெற முடியும். மனம் தளராதீர்கள்.

  ஹா ஹா ஹா 🙂

  டும் டும் டும் ……நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது

  சும்மா கட்டத்த வெச்சு மட்டும் 100% கரெக்டா சொல்ல முடியாதுங்கோ…..
  நெறைய factors லைப் -ல இருக்குதுங்கோ…

  மணி அண்ணோட பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது…..

  “அழுக்குத்தீர குளித்தவளும் இல்லை. ஆசைத்தீர ……..தவனும் இல்லை….”

  இதையும் கூட சேர்த்துக்க வேண்டியது தான்

  “கட்டத்த பார்த்து மட்டுமே கரெக்டா பலன் சொல்லுற சோசியகாரனும் இல்லே”

  டும் டும் டும் …நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது 🙂

   டவுசர் said:
   May 5, 2011 at 1:02 pm

   யார் முடியாதுன்னு சொன்னா. நீங்க வெருங் கட்டத்த குடுத்தாலும் ரவுண்டு கட்டி (ஒங்கள இல்லீங்கோ) அடிக்கிற ஆளுங்க நாங்க. ஜோதிடம் நகைப்புக்குரியதாகும் இடத்தில் அங்கே யான் அவதரிப்பேன். என்ன குற்றம் கண்டீர்? எந்த ஜாதகத்தை அலச வேண்டும். நீங்கள் டுபாக்கூர் ஜாதகத்தை கொடுத்தாலும் மூணு டிஜிட்டுக்குள்ள நம்பர வாங்கி ஒங்க வாய பொலந்துருவோம். (அதாவது ஆச்சர்யத்துல வாய தொரப்பாங்கல்லா அத சொன்னேன்) சவாலுக்கு நான் ரெடி. அப்ப நீங்க. ஹூம்………இப்டில்லாம் சவுடால் உடனும்னு ஆசதேன். ஆனா சரக்கு வோனும்லா.

    Mani said:
    May 5, 2011 at 2:55 pm

    பாண்டி! அதான பார்த்தேன். நீயாவது வாய தொறக்கறதாவது. எத்தன கேசுல உன்ன பார்த்திருக்கோம். ங்கொய்யால

  yoghi said:
  May 5, 2011 at 10:18 am

  விருச்சிக லக்னம் 8/11 க்கு அதிபதி 8ம் அதிபதியா பாவியாக‌வும் 11இல் லாபாதிபதியாவும் குலப்பம் பன்னிக்கிட்டு இருக்காரு(லக்னதுலயேதான் சூரியன்,புதன்,ஆட்ச்சிபெர்ர செவ்,உச்சம்பெர்ர ராகு எல்லரும் இருக்காங்க)

  நான்பாட்டுக்கு சிவனேன்னு என் குலத்தொல்ில பார்த்துக்கிட்டு இருந்தேன் இப்பொ ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு ((யோகி,கலியுக சித்தர்,மகான் முக்காலம் உனர்ந்தவர்)) எப்டிவேன சொல்லிக்கலாம்///

  என்னப்பார்த்து நீ பெரிய ஜோதிடரா வருவேன்னு சூட்ச்சுமம சொல்லிட்டாரு
  அதான் சும்ம இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி நானும் ஜோசியம் பாக்குரேன்ன கெலம்பிட்டேன்

  Mani said:
  May 5, 2011 at 10:49 am

  வாங்க வினோத் நீங்க கேட்ட ஜோதிட பலன்களில் என்னால் ஓரளவிற்கு தான் சொல்ல முடிந்தது. அதாவது ஒரு வட்டத்திற்குள் இப்படி இருக்க முடியும் என்றுதான் என்னால் பலன் சொல்ல முடிந்தது. மிகச்சரியாக சொல்ல முடியவில்லை வருந்துகிறேன்.

  திருமண விஷயத்தில் சற்று சறுக்கிவிட்டேன். 7ல் உள்ள சனி ராகு சேர்க்கையைப் பார்த்து குரு தசை ராகு புக்தி காலத்தில் திருமணம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அக்டோபர் மாதம் திருமணம் நடந்துள்ளது. அதாவது குரு தசையில் செவ்வாய் புக்தியில் திருமணம் முடிந்துள்ளது. செவ்வாய் 4ல் அமர்ந்து 4ம் பார்வையால் 7ம் வீட்டை பார்த்ததால் தனது புக்தி காலத்திலேயே திருமணத்தை நடத்தியுள்ளார்.

  ////mani said …….எந்த வழியிலாவது யாருடைய பணமாவது இவருடைய கையில் இருந்துகொண்டே இருக்கும்.////

  அவர் புரோக்கர் தொழிலில் இருப்பதால் நான் மேலே சொன்ன பாயின்ட் ஓரளவு பொருந்தியுள்ளது என்று நினைக்கிறேன்.

  ////mani said……..விரயஸ்தானத்தை சுபர்கள் பார்வை இருப்பதால் செய்கின்ற செலவிற்கு எதாவது ஆதாயம் இருக்கும் வீண் செலவுகள் என்று கூற முடியாது.////

  இதுவும் நீங்கள் கூறியவற்றிலிருந்து ஓரளவு பொருந்துகிறது. அதாவது அவருக்கு பெண் பார்ப்பதற்காக உங்களுக்கு செலவு செய்ய முன்வந்திருக்கிறார். மற்றபடி ஆதாயம் இல்லாமல் செலவு செய்யமாட்டார்.

  ////mani said ……காதல் திருமணமாக வேறு சாதியில் அல்லது மதத்தில் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன////

  இவருக்கு திருமணம் காதல் திருமணமா அல்லது வேறு சாதி (அ) கிறிஸ்தவத்தில் வேறு பிரிவாக உள்ளவரை திருமணம் செய்து கொண்டாரா என்று கூறவும். ஏனெனில் எனது தவறை இனிமேல் திருத்திக்கொள்வதற்காக கேட்கிறேன்.

  ஜோதிடத்தில் நான் இன்னும் சரியான பலன்களை கூறும் அளவிற்கு தேரவில்லை. என்றாலும் ஆயிரம் பேரை கொன்றவன் அரைவைத்தியன் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்னும் பல ஜாதகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. பார்ப்போம்.

   வினோத் said:
   May 5, 2011 at 12:10 pm

   நன்றி திரு மணி அவர்களே..பெண் கிறிஸ்தவர் தான் ஆனால் வேறு பிரிவு தான்

  வினோத் said:
  May 5, 2011 at 12:10 pm

  முருகேசன் அன்னே.. எனக்கு சோதிடம் வருமா…?

   S Murugesan said:
   May 5, 2011 at 12:18 pm

   வினோத் ஜீ,
   நிச்சயமா வரும். புதன் பாக்யாதிபத்யம் பெற்று 4 (வித்யா) 11 (லாபம்) அதிபதிகளோட சேர்ந்து 11 ல இருக்காரே. வரும். ஆனால் வேறு சில பாதிப்புகளும் வரும். அதெல்லாம் மெயில்ல சொல்றேன்.

   நீங்க கேட்டது ஜாதக பலனை பத்தின்னா ஞாயிறன்று கிடைக்கும். சாரி ஃபார் தி டிலே

  டவுசர் said:
  May 5, 2011 at 1:07 pm

  விநோத்தன்னே பதில குடுத்ததுக்கு டேங்சுநே.

  டவுசர் said:
  May 5, 2011 at 1:14 pm

  ஏன் சாதகப்பலன் தவறுது?

  நேக்கு தெரிஞ்சத சொல்றேன். நானு செய்ற மாறியே சொல்றேன். ஒங்களுக்கு சொல்ற அளவுக்கு நம்ம ஹார்ட் டிச்குல மசாலா நை.

  மொதல்ல அந்த சாதகத்துல உள்ள மேட்டரு கரீட்டானு பாப்பேன். பொறவு செக்ஸ் டீட்டைல பாப்பேன். பொறவு ஆயுசு. சரி சுருக்கா நறுக்குன்னு சொல்றேன். சாதகம் கரீட்டா எளிதிருக்கான்னு பாப்பேன். அப்பாலதேன் லக்கு லக்னாதிபதி, மற்ற இத்யாதி. அப்பால த்ரீ டிஜிட்டுக்குள்ள ஒரு நம்பரு. அப்பால கோச்சார். அம்புட்டுதேன்.

   டவுசர் said:
   May 5, 2011 at 1:20 pm

   எதுக்கு இத்த சொல்றேன்னா, செலவுக்க செத்தவுக சாதகத்த தூக்கிக்கினு வந்து சொசியக்காரவுகள டெஸ்ட் பண்ணுவாக. அதனால உசார். இல்லாங்காட்டி பொயப்பு சிரிப்பா பூடும். நம்ம தொழில் சோசியம் இல்லேன்க்ரதால ஒப்பெனா சொல்றேன். ஒரு சாதகத்துக்கு பலன் சொல்லனும்னா நம்ம கான்செப்ட் படி ஒரு ஒருமண்நேரமாவது தேவைங்கோ. இன்னாத்துக்கு ஒரு மன்நேரம்? ஆமா! கணக்கெல்லாம் போட்டு பாக்கணும்லா! இன்னா கணக்கு.? அதாம்பா மொதல்ல சாதகத்தோட நெல? அப்பால சாதரோட நெல? நானு சொல்றது கரீட்டா இல்லாங்காட்டி தப்பா?

    S Murugesan said:
    May 5, 2011 at 2:32 pm

    டவுசரு,
    நூத்துல ஒரு வார்த்தை ஆனால் சனம் கொடுக்க மாட்டேங்கறாய்ங்களே (டைம்)

  //திருமண விஷயத்தில் சற்று சறுக்கிவிட்டேன்//

  ஹை ஹை…நான் திருமண விசயத்தில் மட்டும் சரியா சொல்லிவிட்டேன்….ஹை ஹை 🙂

  ஹை ஹை…மற்ற எல்லாவற்றிலும் சரக்க உள்ள விட்ட மாதிரி சறுக்கி விட்டேன் 🙂

  ஜெய் பறவை முனியம்மா…தப்பு தப்பு …ஜெய் ஜெக்கம்மா

  🙂 🙂 🙂

   Mani said:
   May 5, 2011 at 3:02 pm

   த.கா. ராசா இத நான் ஒத்துக்க மாட்டேன்பா!. ஹை! நீபாட்டுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கும்ன்னு சொல்லிட்டு போயிட்டா நாங்க விட்டுறுவமா. எங்க எந்த தசா புக்தியில், எந்த காலகட்டத்துல எந்த கிரக சேர்க்கை, பார்வைன்னு சரியாக சொல்லனும் அப்பு. இந்த பொததாம் பொதுவா எடுத்து வுடறதுக்கெல்லாம் நாங்க வாய பொளக்கறதுக்கு எங்களை என்ன ஜோசியம் தெரியாத கிராமத்து மக்கள்ன்னு நினைச்சியா. ஜோதிடர்கள் புரியுதா. ஹை! நல்ல கதையா இருக்கப்பு.

  டவுசர் said:
  May 5, 2011 at 1:26 pm

  சோசியத்துல நமக்கு தெரிஞ்சி ஒம்போது பேட்டைன்னு நெனைக்கிறேன். இன்னாதுன்னா, மருத்துவ, வானிலை, ஜெகத், ஜென்ம ஜாதக, பிரசன்ன, முகூர்த்த, கேரள, நாடி, சகுனம். நீமேராலாஜிய கடைசில கன்பார்ம் பண்றதுக்கு (ஊறுகா) யூஸ் பண்ணலாம். மத்த படி நீமேராளிஜிதான் மெய்நுன்னு சொல்லமாட்டேன். இதுல சனங்க எந்த பேட்டைல இருந்து சோசியம் சொல்றாங்கன்னு புரியலியே.

  டவுசர் said:
  May 5, 2011 at 1:38 pm

  மணியண்ணே நல்லா சோசியம் சொல்றாரு. கேக்காமயே அம்புட்டு மேட்டரையும் நல்லா சொல்றார். ப்ரொபசனல் அச்ற்றாலஜர்னு நெனைக்கிறேன். கேள்விய விதைத்தால் பதிலை கவிதையா அறுவடை பன்னிர்றார்.

   Mani said:
   May 5, 2011 at 3:05 pm

   பாண்டி! இன்னுமா நம்பள இந்த ஊரு நம்புது. என்னைய வச்சு சும்மா காமெடி கீமெடி பண்ணலயே! நான் அழுதுறுவேன் சரியா!. அவ்வ்வ்வ்வ்வ்………

  டவுசர் said:
  May 5, 2011 at 1:41 pm

  ரொம்ப பேசுறதால பெரிய டிக்கட்டுன்னு நெனச்சிராதீங்க.

  நம்ம ரேஞ்சு தர டிக்கட்டுதேன். உப நட்சத்திர தியரிய பத்தி வெய்ட்டா ஒரு கமென்ட் போடுறேன். வெய்ட் அண்ட் ஸீ

   S Murugesan said:
   May 5, 2011 at 2:29 pm

   டவுசரு,
   நீங்க தர டிக்கெட் இல்லை. நம்மைப்போலவே வஞ்சனையில்லாம சப்ஜெக்டை அள்ளி தர்ர டிக்கெட். வாழ்துக்கள்

    kandhan said:
    May 5, 2011 at 3:52 pm

    youtube லிங்கையா? 🙂 🙂 🙂

    மதுரை பஸ்ஸ்டான்டுல அஞ்ஜு ரூவாய்க்கு அல்வா குடுபாங்க. தொண்டைய மத்தும் தடவும். அம்புடுத்தென். அப்டிதான் இருக்கு நம்ம டவுசர் அண்ணெ சொல்ர விஷயம். ஹெ ஹெ.

    Mani said:
    May 5, 2011 at 4:00 pm

    என்னது அச்சு ரூபாய்க்கு அல்வாவா வாவாவா…. நாம்பவே முடியல… கந்தன் உங்களால எனக்கு வயித்துவலி வந்தது தான் மிச்சம். சிரிப்பை அடக்க முடியல ஹா! ஹா!. யாரு மறந்தாலும் நீங்க அந்த youtube லிங்கை மறக்க மாட்டீங்க போலருக்கே. ஹா! ஹா!.

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 5:51 am

  //////த.கா. ராசா இத நான் ஒத்துக்க மாட்டேன்பா!. ஹை! நீபாட்டுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கும்ன்னு சொல்லிட்டு போயிட்டா நாங்க விட்டுறுவமா. எங்க எந்த தசா புக்தியில், எந்த காலகட்டத்துல எந்த கிரக சேர்க்கை, பார்வைன்னு சரியாக சொல்லனும் அப்பு.//////

  //கொஞ்ச காலத்துக்கு முன் திருமணம் நடந்து இருக்கனும்…//

  அண்ணே …நவம்சத்த வச்சு இதன் பலன சொன்னேன்…
  வியாழ திசை …செவ்வாய் புத்தி (வியாழன் 1-இல்,செவ்வாய் 7-ல் )
  ராசி படி பார்த்தல் 7 குரிய சந்திர புத்தியின் இறுதியில் திருமணம் நடந்து உள்ளது

  //பூர்வ புண்ணிய பலனால் மனைவி வழி சிறந்த யோகம்..//

  நவம்சத்தில் 5 கூடியவர் 7 -ல் …அதனால் இப்படி சொன்னேன்….

  தற்போது நான் தெரிந்து கொண்டது ….

  பத்துக்குரிய செவ்வாய் சுக்கிரன் வீட்டில் …..வாகன வழி தொழில் போல…

  2,11 அதிபதி 6 -இல் ….குடும்ப லாபத்திற்காக ஆதாயத்துடன் செலவு செய்வார் போல…
  7-ல் சனி ராகு ….எதிர்பார்ப்புக்கு பொருந்தாத மனைவி போல

  நவம்சத்தில் 1 ,7 சேர்க்கை …கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும் என நெனைக்கிறேன்….

  குரு உச்சம் ,அதே சமயம் ஆட்சி நவாம்சத்தில் …எனவே நல்லவராக இருக்கலாம்…..

  அது மட்டும் இல்லாமல் சும்மா பொழுது போக்குக்காக ஜோதிடத்தை ஆராய்கிறேன் ….
  நச்சதிர சாரம்,அசடவர்க்க பரல் போன்ற எதையும் நான் பார்பதில்லை அண்ணே 🙂

   Mani said:
   May 6, 2011 at 9:05 am

   ///அண்ணே …நவம்சத்த வச்சு இதன் பலன சொன்னேன்…
   வியாழ திசை …செவ்வாய் புத்தி (வியாழன் 1-இல்,செவ்வாய் 7-ல் )
   ராசி படி பார்த்தல் 7 குரிய சந்திர புத்தியின் இறுதியில் திருமணம் நடந்து உள்ளது.///

   ஆகா ராஜா! நீ உண்மையிலேயே பெரிய ஆளுதான். நவாம்சத்தின் படி நீங்கள் சொன்னது சரியாக தான் உள்ளது. நான் தசா புக்தி காலங்களை வருடத்திற்கு 360 நாட்கள் அடிப்படையிலேயே கணக்கிடுவேன். அதன்படி பார்த்தால் அவருக்கு திருமணம் நடைபெற்ற காலம் குரு தசை செவ்வாய் புக்தியில் வருகிறது. உங்களுடைய கணிப்பின் படியும் சரிதான். நீங்கள் 365 நாட்கள் முறைப்படி கணக்கிடுவதால் சந்திர புக்தி இறுதியில் நடைபெற்றது என்று கூறியுள்ளீர்கள்.

   ////ராசி படி பார்த்தல் 7 குரிய சந்திர புத்தியின் இறுதியில் திருமணம் நடந்து உள்ளது/////

   ராஜா! இங்கு கும்ப லக்னம், கும்ப ராசிதானே. சந்திரன் 6க்குடையவராக தானே வருவார்.

   ///பத்துக்குரிய செவ்வாய் சுக்கிரன் வீட்டில் …..வாகன வழி தொழில் போல…///

   செவ்வாய் பத்துக்குடையவராகி 4மிடமான வாகனஸ்தானம் பெற்று தனது வீடான 10மிடத்தையே பார்க்கிறார். மேலும் வாகன காரகன் மற்றும் 4க்குரிய சுக்கிரன் சூரியனுடன் இணைவு பெற்று 11மிடமான லாபஸ்தானத்தை பார்ப்பதும் வாகன வழியில் சுலபமான வருமானம் பெற வழியுண்டு.

   சரி! நவாம்சத்தின் அடிப்படையில் பலன் சொல்லும் வழிமுறைகள் சரியாக வருகிறதா. தசா புக்தி பலன்கள் ராசிப்படி தான் பலன் தரும். நவாம்சத்தின் படி தசா புக்தி பலன்கள் பலன் தருமா. உங்களுடைய வழிமுறை புதியதாக உள்ளது. விளக்க முடியுமா. நான் நவாம்சத்தில் கிரகங்களின் வலிமையை கணக்கிட மட்டுமே பயன்படுத்துகிறேன்.

  தனி காட்டு ராஜா said:
  May 9, 2011 at 8:12 am

  //ராஜா! இங்கு கும்ப லக்னம், கும்ப ராசிதானே. சந்திரன் 6க்குடையவராக தானே வருவார்.//

  விடுங்க அண்ணே …சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு 🙂

  //சரி! நவாம்சத்தின் அடிப்படையில் பலன் சொல்லும் வழிமுறைகள் சரியாக வருகிறதா. தசா புக்தி பலன்கள் ராசிப்படி தான் பலன் தரும். நவாம்சத்தின் படி தசா புக்தி பலன்கள் பலன் தருமா. உங்களுடைய வழிமுறை புதியதாக உள்ளது. விளக்க முடியுமா. //

  கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்களே …” எல்லாம் ஒரு அம்சம் (அமைப்பு ) வேணும் ” ..
  ராசியும் நவாம்சமும் நாணயத்தின் இரு பக்கம் போல என நான் நெனைக்கிறேன்….
  பெரும் பாலும் ராசியில் தொடர்பில் உள்ள கிரகங்கள் நவாம்சத்திலும் தொடர்பில் வருகின்றன….

  எனக்கு அவ்வளவாக ஜோதிட அனுபவம் கிடையாது ….நீங்கள் தான் பல ஜாதக கட்டங்கள் பார்ப்பவர் ….நீங்கள் தான் அனுபவத்தில் தெளிவு படுத்த வேண்டும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s