அவன் -அவள்-அது: 11

Posted on

இங்கன என்னெல்லாம் பேர் இருக்குதோ அதெல்லாம் ஆத்தாளோட பேர் தேன். ஆனால் அனாமிகான்னும் ஒரு பேரை வச்சிருக்கா. பேர் இன்னா பேரு பேர்ல கீற அல்லா எழுத்துமே அவள் தான் ( பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா)

அல்லா பேரையும் ஜஸ்டிஃபை பண்ணிரலாம். அதென்னா உண்ணாமுலையம்மன். ஆனானப்பட்ட முருகனுக்கே தங்க கிண்ணத்துலதேன் ஏற்கெனவே கறந்த பாலை கொடுத்ததா கேள்வி. ஞான சம்பந்தருக்கும் இதே ஃபார்முலாதேன்.

நான் இன்னா நினைக்கிறேன்னா ஒவ்வொரு தாயும் சக்தி தேன். அவளோட முலையும் “அவளோட” முலை தேன். லேடீஸ் க்ளப் பாலிடிக்ஸ்ல ஆக்டிவ் பார்ட் ப்ளே பண்ற பாப் தலை ஆத்தா கூட மொதல் மொதலா சுரக்கிற சீம்பாலையாவது குழந்தைக்கு ஊட்டிர்ராளே.

அப்பாறம் அதெப்படி உண்ணாமுலையம்மன்னு சொல்றாய்ங்க. இங்கனதான் சூட்சுமம் இருக்கு. எந்த பன்னாடையும் தனக்கு பாலூட்டினதும் “ஆத்தா”தான்னு உணர்ரதில்லை.

இருட்ல போவம். ஏதோ பொட்டுனு போட்டாப்ல இருக்கும். உடனே நம்ம மைண்ட் அடடா பாம்புதான் கடிச்சுருச்சுன்னு காபரா ஆயிரும் ( கேபரே இல்லிங்கண்ணா – ஆனால் காபரா ஆனா பாடி கேபரே ஆடும் அது வேற கதை) மைண்டுக்கு இந்த செய்தி போனதுமே உண்மையிலயே பாம்பு கடிச்சா என்னென்ன ரியாக்ஷன் ஏற்படுமோ மொத்த ரியாக்ஷனும் ஏற்பட்டுரும்.

இதையே உல்ட்டால ரோசிங்க. பாம்புதான் கடிச்சுது. ஆனா நீங்க தத்தெறி.. என்னா கருமம் புடிச்ச பூச்சியோ கட்சிருச்சுப்பான்னு நினைக்கிறிங்கனு வைங்க. அந்த பாம்பு நெஜமாவே விஷமுள்ள பாம்பா இருந்து இதெல்லாம் ரெம்ப ரேர்.விஷம் ஏறி கதை முடியற வரை ரிலாக்ஸ்டாவே இருப்பிங்க.

இதேதான் நம்ம மேட்டர்லயும் நடக்குது. உண்ட முலை அந்த முண்டகக்கன்னியாத்தாவுதுதாங்கற ஃபீலிங்கே நமக்கு வர்ரதில்லையே.

காதல்லயும் -ஆன்மீகத்துலயும் ஒரு முக்கியமான மேட்டர் என்னன்னா நீங்க என்ன பண்றிங்கங்கறது முக்கியமே இல்லை. எந்த பாவத்தோட பண்றிங்கங்கறது தான் முக்கியம். இதனாலதான் ஆத்தாளுக்கு உண்ணாமுலைனு பேர் வச்சிருப்பாய்ங்கனு நினைக்கிறேன்.

இன்னாபா நீ ஏதோ உன் எக்ஸ்பிரியன்ஸை சொல்லுவே – அதை நாங்களும் எதுனா தேறுதா பார்க்கலாம்னு இருந்தா சொம்மா மொக்கை போடறியேன்னு நொந்துக்காதிங்க. மேட்டருக்கு வந்துர்ரன்.

நம்ம மனசு ஆஞ்சனேயர் – ஸ்ரீராகவேந்திரர் – பிரம்மங்காரு – ராமர் – ஏழுமலையான் – ஷீர்டி பாபான்னு கச்சாமுச்சானு அலைபாய்ஞ்சாலும் நம்ம ஆன்மீக கிராஃப் மட்டும் ஸ்லோ அண்ட் ஸ்டெடியா மேனோக்கி போயிட்டே இருந்தது.

ஆனால் ஆத்தாளை அடுக்கறதுக்கு முந்தியெல்லாம் அற்புதம் நடக்கும். ஆனால் அது ஒரு இன்ப அதிர்ச்சியாவோ, பரிசாவோ,ஆறுதலாவோ, நமக்கு ரோலே இல்லாம நடக்கும். நம்ம விருப்பு,வெறுப்போட கனெக்சன் இல்லாம நடக்கும். தானா நடக்கும்.

நான் இன்னா ஜட்ஜ் பண்றேன்னா அதுவரை குண்டலி மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம்,மணி பூரகத்தை தாண்டி அனாஹதத்துல வந்து ஸ்ட்ரக் ஆகியிருக்கும் போல. அப்பப்போ உ.வ படறச்ச அது விசுத்திக்கு தாவும். வாக்பலிதம் -ஆசுகவி எல்லாம் அமர்க்களப்படும். அப்பாறம் தலைவர்/தலைவியின் எலக்சன் கேம்பெயினுக்கு பிறகான கூட்டு ரோடு மாதிரி ஆயிரும்.

ஆத்தாளை அடுத்தப்பாறம் அது ஜல்சாவா குதியாட்டம் போட்டு விசுத்தியில ஏறி ஒரு தம் கட்டி ஆக்னாவுக்கு ஜம்ப் பண்ணிருச்சு போல.

வாத்யாரு பாடுவாரே ” நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”னு அப்படி ஒரு நிலைமை வந்துருச்சு. இது ஆரம்பத்துல நமக்கு தெரியாது. உறைக்கவும் இல்லை. அது உறைச்சப்போ நடு நடுங்கி போயிட்டன்.

(அந்த சம்பவம் அடுத்த பதிவில் ) அது நடந்ததும் .. பேதியாகி தோ பாரு ஆத்தா ! நம்முதே கடக லக்னம் . ரெண்டேகால் நாளைக்கு ஒரு தாட்டி மைண்ட் செட்டே கம்ப்ளீட்டா மாறிப்பூடும். இந்த ஆணையிடற வேலையெல்லாம் நமக்கு தகாது. நீ இவ்ளோ பொசசிவா இருந்தா எப்டி?

நான் ஆஃப்டர் ஆல் ஒரு மன்சன். எனக்கும் ஆசாபாசம் ( ஆபாசமில்லிங்கண்ணா) கோபதாபம்லாம் உண்டு. நான் சகட்டு மேனிக்கு கண்டதையும் நினைப்பேன். நீ இதையெல்லாம் நடாத்தி கொடுத்துக்கிட்டிருந்தா கதை கந்தலாயிரும்.

கர்மத்தை தொலைக்கத்தான் இத்தனை பாடு பட்டுக்கிட்டிருக்கேன். எவனுக்குனா கேடுகாலம் வந்துருச்சுன்னா நீ வேற எவனையாச்சும் வச்சு வேலை முடிச்சுக்க. எவனுக்குனா நல்ல காலம் ஆரம்பமாச்சா அவனை டெவலப் பண்ணனும்னு நினைக்கிறியா இப்படி தள்ளிவிடு என்னால முடிஞ்சதை நான் செய்றேன்னு கண்டிசனா சொல்ட்டேன்.

ஆனா பாருங்கண்ணா இன்னைய தேதிக்கு கூட -வாஸ்தவமா பார்த்தா இன்னைக்கு தியானமில்லே – சாதனையில்லே – மந்திர ஜபமில்லை – கோவில் -குளம் – பூசை புனஸ்காரம் (இது எப்பவுமே இருந்ததில்லை) – ஏதாச்சும் அநியாயம் நம்ம கண்ல பட்டாலோ -காதுக்கு வந்தாலோ உடனே ஆப்புதேன்.

இதையெல்லாம் நான் இங்கன சொல்றதுக்கு காரணம் என்னன்னா… இந்த சனம்லாம் ரோபோ மாதிரி ஏற்கெனவே .ப்ரோக்ராம் பண்ணியிருக்கு. கமாண்ட் எங்கருந்தோ வருது. அதை சனம் கேள்வி கேட்காம செய்யுது.

இந்த அடிமைத்தனத்தை கேள்வி கேட்க ஆரம்பிச்சா போதும். அதான் உண்மையான வேள்வி.

16 thoughts on “அவன் -அவள்-அது: 11

  தனி காட்டு ராஜா said:
  May 5, 2011 at 5:32 am

  //(அந்த சம்பவம் அடுத்த பதிவில் ) //

  சும்மா ராஜேஷ் குமார் நாவல் கணக்கா சஸ்பென்ஸ் வைக்குறீங்களே தல 🙂

  //அப்பாறம் அதெப்படி உண்ணாமுலையம்மன்னு சொல்றாய்ங்க. இங்கனதான் சூட்சுமம் இருக்கு. எந்த பன்னாடையும் தனக்கு பாலூட்டினதும் “ஆத்தா”தான்னு உணர்ரதில்லை.//

  தங்களது சிந்தனையை வரவேற்கிறேன்..

  kandhan said:
  May 5, 2011 at 5:53 am

  “காதல்லயும் -ஆன்மீகத்துலயும் ஒரு முக்கியமான மேட்டர் என்னன்னா நீங்க என்ன பண்றிங்கங்கறது முக்கியமே இல்லை. எந்த பாவத்தோட பண்றிங்கங்கறது தான் முக்கியம்.” -சரி.

  “இதனாலதான் ஆத்தாளுக்கு உண்ணாமுலைனு பேர் வச்சிருப்பாய்ங்கனு நினைக்கிறேன்.”- இங்கனதான் நம்ம டியுப்லைட் அனைஞ்ஜு பொச்சு. கொஞ்ஜம் டமில்ல சொல்லுங்க, தல‌. 🙂

   S Murugesan said:
   May 5, 2011 at 7:14 am

   கந்தன்,
   ஒவ்வொரு தாயும் ஆத்தாதான். அவளேதான் பாலூட்டறா. ஆனால் நாமதேன் இதை உணர மறுக்கறோம். “அவள்”
   முலைப்பாலை உண்டு உயிர் தரித்தும் – அதை நாம உணர்ரதில்லை. உணர்ந்தாதானே அது உண்மை.

   உணரப்படாதது எப்படி உண்மையாகும். அது உண்டமுலையாகும். நாம உணராம இருக்கிறதாலதான் அவளை உண்ணாமுலைங்கறாய்ங்கனு சொல்லியிருக்கேன்.

  sugumarje said:
  May 5, 2011 at 6:33 am

  //இந்த அடிமைத்தனத்தை கேள்வி கேட்க ஆரம்பிச்சா போதும். அதான் உண்மையான வேள்வி. //
  இது தனக்குத்தானே, தனக்குள் இருக்க கூடிய அடிமைத்தனம் என்பதை உங்க பாணில சொல்லிட்டீங்க,

  அய்யா, மக்கள் மாத்தி யோசிக்க போறாங்க 🙂 அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

   S Murugesan said:
   May 5, 2011 at 7:11 am

   வாங்க சுகுமார்ஜீ,
   ஜோசியர் சொன்னது நடந்தா அது ஜோசியரோட அறிவுகூர்மை இல்லே. நாம எவ்வித கேள்வியும் இல்லாம நவகிரகங்களோட காலடியில பந்தா விழுந்து கிடக்கோம்னு அருத்தம். இதை சனம் புரிஞ்சிக்கிட மாட்டேங்கிறாய்ங்க. அதான் எனக்கு வருத்தம்.

  Thirumalaisamy said:
  May 5, 2011 at 6:44 am

  அண்ணே ! வணக்கம் !
  படிக்க படிக்க பொறாமையா இருக்கு நே …நல்ல வேளை நீங்க தூரமா இருக்கீங்க ,,!!!!
  நிறைய விசியத்த வெளிபடையா சொல்றீங்க ! சூபெர்.
  ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா மக்களுக்கு நிச்சயம் உபயோகமா இருக்கும் தானே !!! பொதுவாவே அறிவாளிங்க (உங்களமாதிரி ) பேசினா எல்லார்க்கும் புரியாது …சரிதானே ? முட்டாளுக்கும் புரியறமாதிரி சொல்லிருங்க !!!

   S Murugesan said:
   May 5, 2011 at 7:09 am

   திருமலை சாமி,
   என்னை வச்சு காமெட்டி கீமெட்டி பண்ணலையே..

    Thirumalaisamy said:
    May 5, 2011 at 8:51 am

    அண்ணே சத்தியமா இல்ல நே ….
    உங்க பாணில சொன்னதால அப்படி இருக்கு நு நினைக்கறேன் ..
    தப்பா இருந்தா மாத்திக்குவோம் நே …மன்னுசிருங்க .

  Mani said:
  May 5, 2011 at 7:25 am

  ///////////// இதையெல்லாம் நான் இங்கன சொல்றதுக்கு காரணம் என்னன்னா… இந்த சனம்லாம் ரோபோ மாதிரி ஏற்கெனவே .ப்ரோக்ராம் பண்ணியிருக்கு. கமாண்ட் எங்கருந்தோ வருது. அதை சனம் கேள்வி கேட்காம செய்யுது.

  இந்த அடிமைத்தனத்தை கேள்வி கேட்க ஆரம்பிச்சா போதும். அதான் உண்மையான வேள்வி. ///////////

  ///// நம்முதே கடக லக்னம் . ரெண்டேகால் நாளைக்கு ஒரு தாட்டி மைண்ட் செட்டே கம்ப்ளீட்டா மாறிப்பூடும். இந்த ஆணையிடற வேலையெல்லாம் நமக்கு தகாது. நீ இவ்ளோ பொசசிவா இருந்தா எப்டி? /////////

  அதுதான் எங்க பிரச்சனையே. அவன்-அவள்-அது அப்படின்னு ஒரு தொடரை எழுதிக்கிட்டு வருவீங்க. அப்புறம் என்னாகுமோ தெரியாது பாதில வேற டாபிக் மாறிடுவீங்க. எங்களுக்கு எங்க படிச்சோம் எங்க விட்டோம்ன்னு தெரியாமா புரியாம முழிக்கற நிலைமை.

  தல எதை எழுதறீங்களோ இல்லையோ ஆனா அதுல ஜோதிடம் தொடர்பான சின்ன சின்ன டச்சிங்கோட எழுதினீங்கன்னா எங்களுக்கும் டிப்ஸ் கொடுத்த மாதிரி உங்க ஆன்மீக அனுபவத்தை படித்த திருப்தியும் இருக்கும். செய்வீங்களா தல.

  மனித வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் உள்ள வரிகள் இவை.

   Thirumalaisamy said:
   May 5, 2011 at 8:57 am

   மணி சார் வணக்கம் … ( கம்பெனி கொடுத்தமைக்கு நன்றி )
   நானும் நீங்க சொன்னத தான் சொன்னேன் ….(எங்க படுச்சோம் எங்க விட்டோம் , எது எதோட தொடர்பு , எதுக்கு இந்த மேட்டர் இங்க வருது நு பல எண்ணங்கள் – செரி அவரே சொல்றாரு 2 1/2 மணிக்கு ஒரு முறை மாற்றம் நு ) தல தப்பா நினைக்காம இருந்தா செரி.

  superrsyed said:
  May 5, 2011 at 10:45 am

  இறைதரிசனம் பெற்றோர் முடிவில் ஆற்றலுடைமை என்கிற எட்டாவது பண்பைப் பெற்று, அதன் மூலம் அசுர சக்தியை அழிப்பது கடவுள் செயல் மட்டுமல்ல, அடியார் கடனும் அதுவே!………….

  உஜிலாதேவி,மத்திய அரசு,மானில அரசு,ரஜினி இவஙகளை எதிர்ப்பதுஇந்த லைன்லதானோ??

   S Murugesan said:
   May 5, 2011 at 12:22 pm

   சூப்பர் சையத் அவர்களே,
   எதிர்ப்பும் ஒரு வித பற்று தான். ஒருத்தர் ” சரக்கே” இல்லாம இருக்கார்னு வைங்க தூக்கிப்போட்டுட்டு போயிருவம்.

   சரக்கு இருந்து அது எங்கன இருந்து வந்தது ? ஏன் தரப்பட்டது? அதை வச்சு என்னெல்லாம் செய்யலாம்? என்னெல்லாம் செய்யக்கூடாதுனு தெரிஞ்சுக்காம மிஸ் யூஸ் பண்றவுகளை தான் எதிர்ப்போம்.

   நம்ம எதிர்பார்ப்பு அவிக மாறனும் அவிகளால இந்த சனத்துக்கு நடக்கவேண்டிய நாலு நல்ல விஷயம் நடந்துரனும்ங்கறதுதான்.

  டவுசர் said:
  May 5, 2011 at 1:03 pm

  ஆரம்பிச்சிட்டாங்கையா? அப்டின்னு சொல்லுவேன்னு நெனச்சீங்களா.

  சூப்பர். விறுவிறுப்பாக உள்ளது.

  Rasu said:
  May 6, 2011 at 10:33 am

  அனைத்துமே சக்தியின் அடையாளங்கள் தான்…நல்ல சக்தி ….நல்லவை நடக்க தேவைபடுவது..கேட்ட சக்தி …கெடுதலுக்காக….நமது உடல் (இயந்திரம்) தூய நிலையிலும் மற்றும் நமது மனம் தூய நிலையிலும் இருந்தால் மட்டுமே அன்னை நல்ல சக்தி வடிவில் நமக்குள் ஆட்சி செய்வாள் என்று ஒருவர் சொல்ல கேட்டு கொண்டேன்…இல்லை என்றால் அன்னையின் இன்னொரு முகம் தான் நம்மை ஆட்சி செய்வாள் என்றும் சொன்னார் ..

  சைவ தேகம் முக்கியமானது …அப்படி சைவ தேகம் கடை பிடிக்க முடிய வில்லை(ஜீவ கர்ருன்ய ஒழுக்கம் – மட்டன் ,சிக்கன் கூடாது) என்றால் குண்டலினி ஏற்ற முற்சிக்க வேண்டாம் என்றும் சொன்னார் ….அசைவ தேகம் சக்தியின் இன்னொரு நிலையை தான் நமக்குள் உருவாக்கும் ..கடைசியில் நம்மை அப்பனிடம் அழைத்து செல்லாமல் அடுத்த பிறவி எடுப்பதற்கு உதவி செய்யும் என்றும் சொன்னார்

  இதை பற்றி உங்க கருத்து என்ன ..

   S Murugesan said:
   May 6, 2011 at 1:22 pm

   ராசு,
   காரணம் காரியம்னா தெரியும்ல. உ.ம் கோபம் – காரணம் / காச் மூச்னு கத்தறது காரியம். அப்படியாக குண்டலியில் சைதன்யம் காரணம் , ஜீவகாருண்யம் காரியம்.

   குண்டலியில சைதன்யம் வர்ரதால வர்ர ஜீவகாருண்யம் தான் ஒரிஜினல் ஏன்னா இது எதிர்பார்ப்பில்லாத காரியம்.

   குண்டலியில் சைதன்யம் வந்துரும்ங்கற எதிர்பார்ப்புல கடைபிடிக்கிற ஜீவகாருண்யம் டுபுக்கு. ஏன்னா இது எதிர்பார்ப்புடன் கூடிய காரியம். எதிர்பார்ப்பு மாறும்போது கடைபிடிப்புலயும் மாற்றம் வரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s