ஜோதிடம் ஒரு புதிர்

Posted on

நம்ம வினோத் சார் ஜோதிட புதிர்னு ஒன்னை ஆரம்பிச்சு சனத்தை சீண்டை பிச்சுக்க வைக்கிறது தெரிஞ்ச கதைதேன். நான் என் பங்குக்கு புதிர் போட்டு அலப்பறை பண்ண விரும்பலை.

என் அனுபவத்தை அடிப்படியா கொண்டு ஜோதிடமே ஒரு புதிர்னு சொல்ல விரும்பறேன். அனுபவம் என்னவோ நம்முது – ஃப்ரெஷ் – அவை எனக்கு நிகழ்ந்தப்போ கனவு கண்டு பயந்து நடு ராத்திரி எந்திரிச்சு அழற குழந்தை கணக்காத்தான் ஃபீல் ஆனேன்.

எனக்கு நிகழ்ந்தவற்றிலிருந்து பாடம் கற்று – எனக்கு நான் உபதேசிச்சுக்கிட்டதைத்தான் உங்களுக்கு இப்ப சொல்றேன். ஆனாஉங்களுக்கு விவரிக்கறச்ச அங்க இங்க படிச்சத கேட்டதை எல்லாம் இடையிடையில கோர்த்து ஆதாரமா அடுக்கி – உங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றேன்.

ஒரு காலத்துல சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமான்னோ இன்னைய தேதிக்கு சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமான்னோ பேச ஆரம்பிச்சா “போடாங்கொய்ய்யாலன்னிருவிங்க” ஏன்னா இது ரெண்டும் ஒன்னு இறந்த காலம் இன்னொன்னு நிகழ்காலம். அவெய்லபிள் ஃபார் யு.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? – ஒரு ஜோதிட ஆய்வுன்னு தொடர் எழுத ஆரம்பிச்சா படிக்க ஆளிருக்கும். ஏன்னா இது எதிர்காலம் நாட் அவெய்லபிள்.

எது தமக்கு அன் அவெய்லபிளாக இருக்கிறதோ அதற்காக தவிப்பது மனித மனதின் இயற்கை. எதிர்காலம் குறித்த அறிவும் அன் அவெய்லபிள். எனவே தான் மனிதர்களுக்கு ஜோதிடத்தின் மீது இத்தனை கவர்ச்சி.

எதிர்காலம் குறித்த அறிவு ஏதோ ஒரு காலத்தில் நமக்கு 100 சதவீதம் அவெய்லபிளாக இருந்துள்ளது. எப்படியோ அதை இழந்து விட்டோம் என்ற உள்ளார்ந்த உணர்வு நமக்குள் இருக்கிறது. அதை திரும்பபெற வேண்டும் என்ற வெறியும் இருக்கிறது .

( ஆம் தற்போதும் அது அவெய்லபிள்தான். ஆனால் நமது மூளையில் உள்ள ஆழமான பகுதிகளில் அது புதைந்துள்ளது. அகந்தை /ஈகோ என்ற திரைக்கு பின்னால்) . தியாகய்யர் மாதிரி ” தெர தீயகராதா”ன்னு உயிர் உருக பிரார்த்தனை செய்தால் அதுவாய் விலகலாம். விலகினால் எதிர்காலம் தரிசனமளிக்கலாம்.

யூனிவர்சல் மைண்ட் & இன்டிவீஜுவல் மைண்ட்:

குழந்தை பிறக்கிறது. அதற்கு தன்னையும், தன்னை சுற்றியுள்ள பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதன் மூளைக்குள் தான் என்ற எண்ணத்தை புகுத்துகிறோம். அதுவரை தான், தன்னை சுற்றி உள்ளவர்கள், தான் வாழும் இந்த பூமி, நவ கோள்க்ள், பால் வீதி இத்யாதிகளின் முக்காலத்தையும் உள்ளடக்கிய யூனிவர்சல் மைண்டுடன் இந்த பூமிக்கு வந்த குழந்தையின் மூளைக்குள் நாம் புகுத்தும் “தான்” என்ற எண்ணம் சென்று மூளையின் கோடானு கோடி யூரான்களில் முக்காலம் உணர்த்தும் நியூரான் களை தூக்க நிலையில் ஆழ்த்திவிடுகிறது.

இழந்ததை பெறவே துடிப்பு:

நாம் ஒவ்வொருவரும் முக்காலம் உணர்த்தும் யூனிவர்சல் மைண்டுடன் இம்மண்ணுக்கு வந்தவர்கள்தான்.பாழாய் போன ஈகோ நம் மூளைக்குள் நுழைந்து (பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நுழைக்கப்பட்டு) அது இண்டிவியூஜுவல் மைண்ட் ஆக்கிவிட்டது.

இந்த முக்கால ஞானம் குறித்த ஈர்ப்பு சாதாரணர்க்கே அதிகம் என்றால் புத்திசாலிகள், பற்றி வேறே சொல்வதற்கென்ன இருக்கிறது. இதனால் தான் தமது துறையில் புலிகளாக விளங்கும் அறிவு ஜீவிகள்கூட ஜோதிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,ஜோதிடர்களால் ஏமாற்றப்படுகின்றனர்.

சைக்காலஜிப்படி பார்த்தா யாருக்கெல்லாம் கடந்த காலமும் – நிகழ்காலமும் நீர்த்துகிடக்கோ அவிக எதிர்காலத்து மேல ஆர்வம் காட்டுவாய்ங்க.

எவனெல்லாம் தகுதிக்கு மீறின அங்கீகாரத்தோட வளைய வர்ரானோ அவனெல்லாம் இது நிலைக்குமான்னு தெரிஞ்சுக்க எதிர்காலத்து மேல ஆர்வம் காட்டுவான்.

ஆர்வம் சரி. எதிர்காலம் ஆருக்கு தரிசனம் தரும்? மன்சனுக்கு உடல் ,மனம்.புத்தினு இருக்கு. மன்சனுக்கு எதாச்சும் பெரிய பிரச்சினை வந்துரனும். அவன் உடல் பலம்,மனோபலம்,புத்தி பலத்தை கொண்டு அந்தபிரச்சினையை தீர்க்க ட்ரை பண்ணனும். ட்ரெமென்டஸ் ஃபெய்லியர் எதிர்படனும்.

அப்போ அவனோட சப்த நாடியும் ஒடுங்கிரும். மூச்சு காத்து இடகலை,பிங்கலைய விட்டு சூக்ஷ்மணால நடை போட ஆரம்பிக்கும். அப்ப எதிர்காலம் தரிசனம் தரும்.இது ஒரு பாசிபிலிட்டி.

அடுத்தது மன்சன் தன் உடல்,மனம்,புத்திங்கற 3 உருப்படியையும் உருப்படியா மெயின்டெய்ன் பண்ணி இந்த 3 உருப்படியும் உச்ச பட்ச பர்ஃபெக்ஷனோட செயல்படற நிலைக்கு வந்துரனும். இது ஒரு பாசிபிலிட்டி.

அடுத்தது இயற்கைய கவனிக்கனும். இயற்கையில உள்ள சின்ன மேட்டர்லயும் எந்தளவுக்கு பர்ஃபெக்சன் இருக்கு. அதனோட உண்மையான நோக்கம் என்ன? இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்க்கையில் தான் இன்னா மாதிரி அல்ப்பம்ங்கற விஷயங்களையெல்லாம் வாட்ச் பண்ணனும். மத்த கிரகங்கள் கண்ணுக்கு தெரியறதில்லை. சூரிய சந்திரர்கள் கண்ணுக்கு தெரியறாய்ங்க இல்லே.

மக்கள் சித்திரை மாசத்துல எப்படி பிஹேவ் பண்றாய்ங்க ( மேஷத்துல உச்சம்) புரட்டாசியில எப்படி பிஹேவ் பண்றாய்ங்க (துலாத்துல நீசம்)

சந்திரன் வளரும்போது எப்படி பிஹேவ் பண்றாய்ங்க தேயும்போது எப்படி பிஹேவ் பண்றாய்ங்கன்னெல்லாம் அப்சர்வ் பண்ணுங்க.

பகல்ல எப்படி பிஹேவ் பண்றாய்ங்க / சூரியன் மறைஞ்ச பிற்பாடு எப்படி பிஹேவ் பண்றாய்ங்க கவனிக்கனும். நீங்க பிறரை கவனிக்கனும்னா உங்களுக்குள்ள டிஸ்டர்பன்ஸ் இருக்கக்கூடாது. இதை சமாளிக்கனும்னா மொதல்ல மேற்சொன்ன சந்தர்ப்பத்துல எல்லாம் உங்க எண்ணங்கள்,செயல் எல்லாம் எப்படி இருந்ததுன்னு அப்சர்வ் பண்ணனும்.

உங்களை நீங்க மொதல்ல அப்சர்வ் பண்ணிட்டா – உங்க மைண்ட் ஸ்டேட் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிட்டா உங்க ஜட்ஜிங் கரீட்டா இருக்கும் தலை.

மனித உடல், மனம்,புத்தி இதையெல்லாம் இயற்கை எப்படி பாதிக்குதுனு அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சிடிங்கனா அப்பாறம் சச்சின் பத்தி , ரஜினி,விஜய்,விக்ரம் பத்தியெல்லாம் பேசவே மாட்டிங்க.ஏன்னா இயற்கையோட மர்மங்களோட ஒப்பிட்டா இவிகல்லாம் ஜுஜுபி.

அப்பாறம் படிக்க ஆரம்பிக்கனும். (,முக்கியமா நம்மள மாதிரி பன்முக திறன்/ஏரியல் வ்யூன்னு ஜல்லியடிக்கிற பார்ட்டிங்களோட ப்ளாக்/சைட்ஸை இல்லை.

சுப்பையா வாத்தியார் மாதிரி ஆதியோடந்தமா – அ முதல் ஔ வரைன்னு நூல் பிடிச்சாப்ல போற புஸ்தவங்க,ப்ளாக்ஸ்,சைட்ஸை படிக்கனும்.

இதுல கிரகங்களோட காரகத்வம், பாவங்களோட காரகத்வம் வெரி இம்பார்டன்ட். வெறுமனே படிச்சுர்ரத்ல்லை

ஏன் இதை பலான கிரகத்தோட காரகத்வத்துல வச்சாய்ங்கனு ரோசிக்கனும். உ.ம் சினிமா சினிமாவை ராகு காரகத்துல வச்சாய்ங்க.ஏன்? ராகுங்கறது நிழல்/ இருட்டு .சினிமாவை இருட்டில ப்ரொஜெக்ட் பண்றாய்ங்க

அதே போல பாவங்கள் தனம்,வாக்கு,குடும்பம் மூணையும் ரெண்டாம் பாவத்துக்குரியதா வச்சாய்ங்க.ஏன்? என்னதான் “பணம் என்ன பணம்?”னு ரஜினி வசனம் விட்டாலும் -பணமா பாசமான்னு நம்மாளுங்க படம் எடுத்தாலும் ஃபைனாஸ் பொசிஷன் பேட் ஆச்சுன்னா ஆட்டோ மேட்டிக்கா வாக்கு மாறும்,தவறும்,குடும்பத்துல ஒற்றுமை கூட பாதிச்சுரும்.

இன் தி சேம் வே நீங்க என்னதான் லட்சக்கணக்குல சம்பாதிச்சாலும் குடும்பம் கோ ஆப்பரேட் பண்ணாதான் அந்த பணம் ஒழுங்கா பீரோவுல இருக்கும். இல்லின்னா டாஸ்மாக், பலான வீடுன்னு வேலி தாண்ட ஆரம்பிச்சிரும். இப்படி ஒவ்வொரு பாவத்துக்குரிய மேட்டரும் எப்படி இன்டர்லிங்க் ஆகியிருக்குன்னு முக்கி முக்கி ரோசிக்கனும்.

அடுத்து ஜோதிட விதிகள். பாவி யாரு? சுபன் யாரு ? யோக காரகன் யாருன்னு இவிக எங்கெல்லாம் இருந்தா நல்லதுன்னு மனப்பாடம் பண்றது பெருசில்லை.

ஏன் அப்படி சொன்னாய்ங்கனு பார்க்கனும். உ.ம் 4,7,10 கேந்திர ஸ்தானம் இங்கன பாவி இருந்தாலும் பரவால்லைங்கறாய்ங்க.

இதனோட உள்ளர்த்தம் என்னனு நோண்டி நுங்கெடுக்கனும். பாவி இருந்தா அந்த இடத்துக்குரியவர்கள் பாதிக்கப்படுவாய்ங்கதானே .அப்பாறம் தாயை காட்டற 4 ஆமிடத்துல, மனைவியை காட்டற 7 ஆமிடத்துல பாவி இருந்தா நல்லதா? ஏன்? எப்படி?

அம்மா குண்டு கல்லா இருந்தா காபி குடிச்ச க்ளாஸை கொண்டு போய் ஜிங்க்ல கூட போடமாட்டோம். பொறுப்பில்லாம வளர்ந்துருவம். சப்போஸ் அம்மா பேஷண்டுனு வைங்க. ஸ்டெப் பை ஸ்டெப் காஃபில ஆரம்பிச்சு சமையல் பண்றதுவரை கத்துக்கிடுவம்ல. அதனால நல்லது.

பொஞ்சாதி தேக்கா இருந்தாலும் இந்த கதிதான். சீக்கா இருந்தா உருப்படுவம். இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பாருங்க. ஜோதிஷம் ஃபார்ம் ஆகிற சமயம் நம்ம சொசைட்டியே மே சேவனிஸ்ட் சொசைட்டி.

அம்மா சீக்காயிட்டா அப்பனுக்கு இன்ன்னொரு பொஞ்சாதி , பொஞ்சாதி சீக்காயிட்டா தனக்கே இன்னொரு பொஞ்சாதிங்கற எண்ணமும் இருந்திருக்கலாம்.

இப்படி படிச்சு – ரோசிச்சு – அனலைஸ் பண்ணி – மைண்ட்ல ஸ்டோர் பண்ணிக்கிட்டு ஒடனே புதுசா துப்பாக்கி தூக்கின தீவிரவாதி மாதிரி அப்பாவிக,குழந்தைகளை எல்லாம் சுட ஆரம்பிச்சுரக்கூடாது.

மொதல்ல ஏற்கெனவே வாழ்ந்து முடிச்ச மகான், கேடி, பிஸ்தா ,பிக்காலி ஜாதகங்களையெல்லாம் பக்கத்துல வச்சுக்கிட்டு நீங்க படிச்ச ரூல்ஸ் எல்லாம் எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னு பார்க்கனும்.

இதெல்லாம் மனுஷயத்னத்துல ஜோதிஷத்தை கத்துக்க என்னெல்லாம் செய்யமுடியும்ங்கறதுக்கான சஜஷன்ஸ்.

ஆனால் பீலா விடறேன்னு நினைச்சாலும் நம்ம ஜோசியம் மட்டும் மனுஷயத்னத்துல வந்தது கிடையாதுன்னு சொல்லிர்ரன்.

நம்ம ஜோதிட அனுபவங்களை 3 கட்டமா பிரிக்கலாம்.

ஒன்னு:
தன்மானத்தையே சீண்டிப்பார்க்கிற ரேஞ்சுக்கு வந்துட்ட செக்ஸ் டார்ச்சர்லருந்து தப்ப ஆஞ்சனேயரை கவர் பண்ண – ராம நாமத்தை ஜெபிச்சிக்கிட்டிருந்த காலம்

ரெண்டு:
காவி கட்டிய.பெரியார் ஸ்ரீ பிரம்மங்காருவுடன் http://kavithai07.blogspot.com/2010/04/blog-post_10.html இணக்கமாக இருந்த கால கட்டம்

மூன்று:
அவன் அவள் அது தொடர்ல எழுதிக்கிட்டிருக்கிற மேட்டர் எல்லாம் நடந்துக்கிட்டிருந்த கால கட்டம்.

நான்கு:
பெருசா சாதனைன்னு இல்லாம – ஆளை விடுங்கப்பா-ன்னுட்டு அவுத்துவிட்ட மாடு கணக்கா இருக்கிற கால கட்டம். என்னைக்கோ படிச்ச எம்.பி.பி.எஸ்ஸை வச்சுக்கிட்டு இன்னைக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுக்கிற டாக்டர் மாதிரி என்னைக்கோ சேகரிச்சு வச்ச அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்தை பரிமாறும் பரிசாரகனாத்தான் என்னை இப்போ நான் உணர்ரேன்.

மேற்படி 3 காலகட்டத்திலான நம்ம ஜோதிஷ அனுபவங்களையும் ஒரு தொடராவே போட்டுரலாம்.
( இன்னொரு தொடரான்னு பெரிய எழுத்துல ஆருப்பா அலர்ரது )

அவன் அவள் அது – தொடர்பதிவுதானே .. நாளைக்கு பார்ப்போம்.

ஜோதிடம் கற்க விரும்புவோர் கீழ்காணும் தளங்களையும் பாருங்கப்பு

ஈகரை
வகுப்பறை

Advertisements

20 thoughts on “ஜோதிடம் ஒரு புதிர்

  yoghi said:
  May 3, 2011 at 9:09 pm

  /////மன்சனுக்கு எதாச்சும் பெரிய பிரச்சினை வந்துரனும். அவன் உடல் பலம்,மனோபலம்,புத்தி பலத்தை கொண்டு அந்தபிரச்சினையை தீர்க்க ட்ரை பண்ணனும். ட்ரெமென்டஸ் ஃபெய்லியர் எதிர்படனும்.

  அப்போ அவனோட சப்த நாடியும் ஒடுங்கிரும். மூச்சு காத்து இடகலை,பிங்கலைய விட்டு சூக்ஷ்மணால நடை போட ஆரம்பிக்கும். அப்ப எதிர்காலம் தரிசனம் தரும்.இது ஒரு பாசிபிலிட்டி/////

  சூப்பர் தல ரொம்ப சரி

  ஒவ்வொரு சாதகத்துலயும் கேது குரு அமர்ந்த இடத்த பொருத்து வெவ்வேருவிதமான் அனுபவஙகள் அடிபாடுகள் ஏர்ப்பட்டு ஞான மார்க்கத்துக்கு திரும்புரான்னு நெனைக்கிரேன்

   S Murugesan said:
   May 4, 2011 at 4:48 am

   யோகி,
   ரெம்ப நேரோவா திங்க் பண்ணாதிங்க. சர்ப்பதோஷம் இல்லேன்னா கேது , லக்னத்துக்கு சுபனா இருந்தா குரு ஓகே. மற்றபடி 1 -5 -9 பாவங்கள் / இந்த பாவாதிபதிகள் தான் முக்கியம். ஜெயேந்திர சரஸ்வதி, நித்யானந்தா ஜாதகங்களை பாருங்க. ஒரு ஐடியா வரும்

  kandhan said:
  May 4, 2011 at 5:06 am

  தல, அது யாரு சுப்பையா? அவர் புஸ்தகம் யாரு ப்ரசுரிகிராங்க?

   S Murugesan said:
   May 4, 2011 at 5:41 am

   பாஸ்,
   பதிவோட கடைசியில அவரோட ப்ளாகோட லிங்க் இருக்கு பாருங்க.

   க்ளிக்கி உள்ளாற போனா விவரம் தெரியும். புஸ்தவம் ரிலீஸான நமக்கும் இன்ஃபார்ம் பண்ணுங்க.

   வாங்கிப்போடுவம்.

  வணக்கம் சார்,

  நாங்க கேட்டது என்னாச்சு ?

   S Murugesan said:
   May 4, 2011 at 5:39 am

   க்ளூ கொடுங்க பாஸ்! அகில இந்திய அளவுல கட்சி ஆரம்பிச்சு இந்தியாவை பணக்கார நாடாக்கப்போற அரசியல் தலைவரு

   கண்ட மேனிக்கு எங்கெல்லாம் எதுக்கெல்லாம் வாக்குறுதி கொடுத்து தொலைச்சாரோ?

  Thirumalaisamy said:
  May 4, 2011 at 5:40 am

  அண்ணனுக்கு வணக்கம் …
  இந்த A B C D கூட ஒழுங்கா படிக்காம ( சோதிடத்த ) இங்கலிஷ் டீச்சரா இருக்கிற பய புள்ளைகளுக்கு உங்கள டீச்சரா போட்டு (மாநாடே நடுதுனாலும் தப்பு இல்லிங்கோ ) ஒரு மாசம் கிளாஸ் எடுத்தா , அவிகளும் தெளிவு ஆயிருவாங்க மக்களுக்கும் நல்லது நடக்கும்.

  Operation 2000 ???????????????

  Thirumalaisamy said:
  May 4, 2011 at 5:43 am

  அண்ணனுக்கு வணக்கம் …
  ஜாதக கட்டம் கிடச்சதா நே ? chittoor.s.murugesan@gmail.com Id க்கு ரெண்டு முறை அனுப்பிடனே ??? இன்னும் கிடைக்கலையா ?

   S Murugesan said:
   May 4, 2011 at 6:06 am

   பாஸ்,
   சாரி ஃபார் தி டிலே. ஜஸ்ட் நௌ ஐ ஹேட் சென்ட். செக் யுவர் மெயில் பாக்ஸ்

    Thirumalaisamy said:
    May 5, 2011 at 6:25 am

    அண்ணே ! மிக்க நன்றி ..
    மெயில் பார்த்தேன் …
    பட் புல் டீடைல் ரெடி பண்ண மறந்துராதீங்க !!!

  தனி காட்டு ராஜா said:
  May 4, 2011 at 5:55 am

  //மேற்படி 3 காலகட்டத்திலான நம்ம ஜோதிஷ அனுபவங்களையும் ஒரு தொடராவே போட்டுரலாம்.//

  நம்ம நாயகன் கமல் மாதிரி “ஜோதிட நாயகன் ” தல முருகேசனுக்கு ஒரு ஓ போடு 🙂

  அப்புறம் தல ….ஞானோதயம் பெற்றோர் ஜாதகம் ராம கிருஷ்ணர் ,விவேகானந்தர்,ஓஷோ ,ரமண மகரிஷி,சிரடி சாய் பாபா போன்றோர் ஜாதகத்தையும் …..

  அரை குறை களான சத்திய சாய் பாபா,அரவிந்தர் போன்றோர் ஜாதகத்தையும்….

  அரைகுறையா ,உண்மையா என்று தெரியாத மாக பெரியவா காஞ்சி பெரியவர் ஜாதகத்தையும்

  பிராடுகளான நித்தியானாந்தர், பிரேமானந்தா, தனி காட்டு ராஜா 🙂 போன்றோர் ஜாதகத்தையும் அலசலாமே ….

  ஆன்மிக முன்னேற்றதுக்கு கொஞ்சம் உதவுமே ….. ஒரு தொடர் அரம்பிங்களே …… அவன் அவள் அது தொடரை முடித்து விட்டு 🙂

   S Murugesan said:
   May 4, 2011 at 6:54 am

   ராசா சொல்லியும் அலசாம இருப்பமா?

  R V Ramanan said:
  May 4, 2011 at 9:40 am

  Dear Sir,

  I dont know how to put this in words. Ungalukku mudinjaa maathiriyum irukku aanaa etho thokki nikaraa maathiri irukku. Engeyo oru idathula kaarunyathula (compassion) semmaiya poi sikki kondeergal ena thondrugirathu. Itha sollrathukku enakku enna arugatha irukkunnu enakku theriyalai. Anyway, may u merge!

  Warmest regards,
  RAMANAN

   S Murugesan said:
   May 4, 2011 at 1:06 pm

   ஆர்.வி.ரமணன்,
   “துலா” கோல் மாதிரி கரீட்டா எடை போட்டுட்டிங்க. “இது இப்படித்தான். மாத்தமுடியாது”னுட்டு புரியுது. ஒதுங்கி போக மனசு வரலை “காருண்யம்”னா இதான் போல.

   பார்ப்போம்.

  superrsyed said:
  May 4, 2011 at 10:37 am

  இன்னாடா இது மத துவேசத்த பத்தி ஒரு பதிவு போட்ட உடனே

  முரட்டு ஜோதிடர்கள் முப்பது கோடிப்பேர் முன்டா தட்டிகினு கோரசா கெலம்பி பின்னூட்டம் போட்டாங்கோ

  தல ஒரு அருமையான மேட்டர சொல்லிருக்காரு யாருமே வாயே தொரக்கலியே
  ஒரு வேல தல இன்னா சொல்ராருன்னு புரிஞ்சுக்குர அள‌வுக்கு யாருக்குமே
  மென்டல் பவர் இல்லியோ?

  பி.கு தனுசு ராசி சரியா வேலை செய்யுதான்னு பாக்கலாம்

  Mani said:
  May 4, 2011 at 11:05 am

  தலைவரே இப்பதான் நீங்கள் அசல் முருகேசன் அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். ஜோதிடத்தை அலசும் உங்கள் ஸ்டைலே தனி. ஆகா படிக்க படிக்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அண்ணே நீங்க உங்கள் ஜோதிட அனுபவங்களைப் பற்றிய தொடரில் இதே எழுத்து நடையில் (சென்னை தமிழ் கலப்பின்றி) எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். அப்புறம் ஞானிகள், சன்நியாசிகள் மற்றும் பிரபலங்களின் ஜாதகங்களை இங்கு கொடுத்து சின்ன சின்ன டெஸ்ட் வையுங்க. நாங்க எந்த அளவுக்கு தேறியிருக்கோம்னு ரிசல்ட் போடுங்க. கலாய்ங்க தலைவா.

  தனி காட்டு ராஜா said:
  May 4, 2011 at 12:15 pm

  //சின்ன சின்ன டெஸ்ட் வையுங்க. நாங்க எந்த அளவுக்கு தேறியிருக்கோம்னு ரிசல்ட் போடுங்க //

  டெஸ்ட் வச்சாவே பழக்க தோசத்துள்ள பிட் அடிக்க தோணுமே மணி அண்ணே…ஹி…ஹி 🙂
  நாம எல்லாம் கடைசி பென்ச் student ஆச்சே

   Mani said:
   May 4, 2011 at 3:53 pm

   ஓகோ வா ராசா! அவனா நீயி. இனிமே நாங்க உசாராய்ட வேண்டிதான். தல இனிமே டெஸ்ட் வச்சா பதிலை மின்னஞ்சலுக்கு அனுப்ப சொல்லிடுங்க. எல்லாரும் அனுப்பிச்ச பிறவு அவங்க சொன்ன பலன்களை வச்சு ஒரு தனி பதிவா போட்டு எல்லாருக்கும் மார்க் போடுங்க. அப்ப யாரும் காப்பியடிக்க முடியாதுல்ல.

   ராசா! இப்ப என்ன பன்னுவ! இப்ப என்ன பன்னுவ!! ஹி! ஹி!!

  R V RAMANAN said:
  May 4, 2011 at 2:02 pm

  Anbare

  Maathamudiyumannu enakku theriyale. Aana aathaa kitta nee engirundhu vanthennu kettu parthu oru velai athu sevi saachidchinna pulli theiryumo ennamo. Anyway I wish you all the best sir.

  Warm Regards
  Ramanan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s